Loading

இன்னும் இரவின் இருட்டு மிச்சம் இருக்கும் அதிகாலை நான்கு மணிக்கு நடைபாதையில் ஒரு பத்தொன்பது வயது இளமங்கை ஓடிக்கொண்டிருந்தாள்அவள்தான் நம் கதையின் நாயகி அவளை பற்றிச் சொல்லவேண்டும் என்றால்  சேலத்தில் ஒரு பிரபலமான கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம்(சி.ஏ) இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். ஐந்து அடி உயரம்… மழலை குணம் கொண்டவள்… கிளி போல் கீச் கீச் குரல் உடையவள்… டெடி போல உடம்பைக் கொண்டவள்…

மொத்தமாக வளர்ந்த குழந்தை அவள்.. ஆனால் அந்த குழந்தை மனம் கொண்டவளைக் வெறுக்க முடியுமா??..  முடியுமே பெற்ற தாய் தந்தை.. உடன் பிறந்த தங்கையே வெறுக்கிறார்களே !!!

 ஒரு மணிநேரம் ஓடிவிட்டு ஐந்து மணிக்குத் தன் வீட்டிற்க்கு வருகிறாள். அவள் வீட்டிற்குள் அடி எடுத்து வைக்கும் போதே அவள் அம்மா சாந்தா நம் நாயகியை திட்ட ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கே கசந்து விட்டது… வீட்டிற்கு செல்வதே அவளுக்கு கசப்பான விஷயம்… ஆனால் அவள் செல்ல தானே வேண்டும்…

“வந்துட்டா குண்டச்சி இவளும்   இத்தன வருஷமா என்னமோ பண்றா ஆனா ஓடம்பு குறைய மாட்டிங்குது… அப்டியே பூசணிக்காய் மாதிரி உடம்பு வெச்சிட்டு எப்படி தான் இருக்காளோ..இந்த குண்டு பூசணிக்காய யாரு  கட்டிப்பாங்களோ…

இவளுக்குனு நெறைய சீரு செஞ்சா தான் கட்டிப்பாங்கன்னு சொன்னா இந்த வீட்டுலையே இருந்துக்க வேணும் அவளோ தான்… எதோ சொன்னா மட்டும் கண்ணுல தண்ணிய தொறந்து விட்டுறது போ போயி வாசல் கூட்டி தண்ணி தெளிச்சிக் கோலம் போடு போ, அப்பறம் வீடுக் கூட்டிட்டு..  எனக்கு காபி போட்டு பிளாஸ்க்ல வெச்சிட்டு.. உன் அப்பாக்கும் கஞ்சி வெச்சிடு …

காலையில சாப்பிட இட்லி தக்காளி சாம்பார் சட்னி பூரிக் கிழங்கு பண்ணிடு மதியம் சாதம் வடிச்சி மோர்க்குழம்பு, கேரட் பொரியல், ரசம் பண்ணிடு…

அப்பறம் நிஹா குட்டிக்கு ஹார்லிக்ஸ் கலக்கி வெச்சுட்டு அவ புது துணிலாம் தனியா துவச்சிட்டு அப்றம் என் துணி  உன் அப்பா துணி எல்லாம் தனியா துவை கைல தான் துவைக்கணும்.. மெஷின்ல துவைச்ச அவளோ தான்” ..என அடுக்கு அடுக்காக வேலைக்குடுத்து விட்டு அவள் போய் திரும்பியும் தூங்கி  விட்டாள்.

அவள் தாய் சொன்ன அனைத்து வேலையும் ஏழரை மணிக்குள் முடித்துவிட்டு அவசரம் அவசரமாக குளித்து விட்டுக் கல்லூரிக்குத் தயாராகிச் சாப்பிட வரும்போது அவள் அம்மா வந்து அவளிடம் “நீயி இருக்குற குண்டுக்கு நீ இத சாப்பிடலாமா போயி நீராகரத்த குடி..  நடத்து போ காலேஜுக்கு பிரியா  கூட வண்டில போனது தெரிஞ்சது நைட்டுக்குச் சோறு போட மாட்டேன் தெரிஞ்சிகோ.. போ கிளம்பு”  என சொல்லிவிட்டு சாப்பிட சென்றுவிட்டார்… இவளும் மூன்று கிமீ தொலைவில் உள்ள கல்லூரிக்கு  தன் தோழி வந்து அழைத்தும் நடந்ததே சென்று விட்டாள் இந்த  பாவை..

சிறு வயதில் இருந்தே பாசத்தை பெற்றவர்கள் மூலமாக அனுபவிக்காத இந்த தேவதையைக் காக்க தேவதூதன் வருவானா???வந்து காதல் செய்வானா இல்லை அவனும் துன்பம் மட்டுமே தருவானா???

.

.

இதே நேரம்… காலை எட்டு மணிக்கு…

மதுரையில் ஒரு வீட்டில் “போற இடத்துல கவனமா இருக்கனும் தம்பி.. நம்ப ஊரு இல்ல சாமி அங்க போயி எதுக்கு எடுத்தாலும் சண்டைய போடாத தம்பி… பாத்துபோயிட்டு வா சரியா.. போயிட்டு ஐயாக்கு  கூப்ட்டு சொலிட்டு எனக்கு வீடியோ கால் பண்ணு தம்பி…”

“சரி ம்மா …  நான் மேலூர் போயி அக்கா மாமா கிட்ட சொல்லிட்டு  ஆபீஸ்ல போய் முடிக்க வேண்டிய வேலைய முடிச்சுட்டு அப்டியே நான் சேலம் கிளம்பறேன் ம்மா….. அப்பத்தா அப்புச்சி அப்பா தம்பி எல்லார்கிட்டயும் சொல்லிடு…”

இப்படி சொல்லிட்டு கெத்தா ஆறடி உயரத்துல  ராயல் என்ஃபீல்ட்ல போறதுதா நம்ம ஹீரோ.. பக்கா மதுரைக்காரன்… பயங்கர கோபக்காரன்… ஆனா பாசம் வெச்சிட்டா உசுர கூட தருவான் இந்த பாசக்காரன்

நம்ம  ஹீரோ பேரு அதிவீரபாண்டியன்.. பேரே கெத்தா இருக்குல பேருக்கேத்த மாதிரி தா நம்ம தலைவரு தொழிலும்

அதிவீரபாண்டியன் IPS…. சொந்த ஊருலயே மூன்று வருஷ  போஸ்டிங் ஆனா இப்ப சேலத்துக்கு ட்ரான்ஸபெர் பண்ணி இருகாங்க.. அதுவும் டிஎஸ்பிய ஏஎஸ்பியா ப்ரோமோஷன் குடுத்து அனுப்புறாங்க.. இனிமே நாம தலைவர் அலப்பறைய சேலத்துல பாக்கலாம்….

இப்ப நம்ம தலைவர் குடும்பத்த பாக்கலாம் பாண்டியர்கள் ஆண்ட மதுரையில தான் நம்ம தலைவர் வீடு இருக்கு.. அது ஒரு குட்டி அரண்மனை சொல்லாம்… மருது பாண்டியன் – அம்மணி அம்மாள் தான் அந்த வீட்டு மூத்த தலைமுறை அவங்களுக்கு சுந்தர பாண்டியன் தான் ஒரே பையன் .அவரோட மனைவி பெயர் சிவகாமி….

சுந்தர பாண்டியன் ஒரு டிகிரி முடிச்சிட்டு இப்ப  அவங்க பரம்பரை தொழில் நகை கடைய பாத்துகுறாரு… சுந்தரபாண்டியன் சிவகாமி அம்மாவுக்கு ஒரு பொண்ணு ஒரு பையன் பொண்ணு பேரு தங்க மீனாட்சி  பையன் தான் நம்ம தலைவர் அதிவீரபாண்டியன்…

 தங்க மீனாட்சிக்கு கல்யாணம் ஆகி 3 வருஷம் ஆகுது அவங்க கணவன் பெயர் மாறவர்மன் இவங்க கல்யாணம் காதல் கல்யாணம்ங்க… மீனாட்சி பி.எஸ்சி(சிடிஎப்)  முடிச்சி இருகாங்க… இவங்க காலேஜ் படிக்குற அப்ப பி.காம் படிக்குற சீனியர்தாங்க மாறவர்மன்… மாறனுக்கு மீனாட்சிய பிடிச்சி அவங்க படிச்சி முடிக்குற வர  காத்துயிருந்து அதுக்கு அப்பறம் காதல சொல்லி இரண்டு வருஷம் நாயா அலைஞ்சி மீனாட்சிய கரக்ட் பண்ணி … அவங்க வீட்டுல புரிய வெச்சி அரேஞ்சு மேரேஜ் மாதிரி பண்ணிடாங்க..

மாறனுக்கு யாரும் இல்லை சின்ன வயசா இருக்க அப்பயே அம்மா அப்பா ஒரு விபத்துல இறந்துட்டாங்க… இவங்களுக்கு மேலூர் தான் பூர்விகம்  அங்க பெரிய வீடு.. ஐம்பது ஏக்கர் விவசாய நிலம் இருக்கு..  அப்பறம் சுந்தர பாண்டியனோட துணிக்கடைய  பாத்துக்குறாரு..

இவர பாத்துக்க அப்பா ஓட அம்மா மட்டும் தான்… ஆனா அவங்களும் போன வருஷம் இறந்துட்டாங்க… இவங்களுக்கு ஒரு குட்டி பாப்பா இருக்கு பேரு தாரகை நாச்சியார் எல்லாரும் தாரானு கூப்டுவாங்க… தாராக்கு ஒன்றரை வயசு ஆகுது….

நம்ம தலைவர் சின்னவயசுல இருந்தே IPS ஆகனும்னு ஆசை.. பனிரெண்டாவது முடிச்ச உடனே அதுக்கு டிரைனிங் எடுக்க ஆரம்பிச்சிடாரு..கலை மற்றும் அறிவியல் கல்லூரியில பி.காம் முடிச்ச உடனே ஐபிஎஸ் எக்ஸாம் எழுதி முதல் அட்டெம்ப்ட்லேயே பாஸ் பண்ணி வடஇந்தியால ரெண்டு வருஷம் ட்ரைனிங் எடுத்து… அங்கேயே போஸ்டிங்ல இருந்து.. மதுரைக்கு வந்தாரு… இப்ப சேலத்துக்கு டிரான்ஸ்வர் பண்ணி இருக்காங்க….

அப்புறம் மருது பாண்டியனோட தம்பி பேரு அழகு பாண்டியன் இவரோட மனைவி பேரு அழகம்மாள்… இவருக்கும் ஒரே பையன் மாணிக்க பாண்டியன் இவரோட மனைவி பேரு பத்மினி (பத்மினி சிவகாமியோட உடன் பிறந்த தங்கை ).. இவங்களுக்கு ஒரு பையன் அஜய் பாண்டியன்..

அஜய் பாண்டியன்க்கு பத்து வயசா இருக்கும் போது இராமேஸ்வரம் போய்ட்டு வர அப்ப நடந்த எதிர்பாராத விபத்துல அழகம்மா  அஜய் தவிர எல்லாரும் அங்கேயே இறந்து போய்டுறாங்க.. இத தெரிஞ்சி மருது பாண்டியன் குடும்பம் போறப்பா பாட்டியோட உசுரும் கடைசி கட்டத்துல இருந்திச்சி… இவங்க கிட்ட பேசனும்னு சொல்லி உள்ள கூப்டுறாங்க… மருது பாண்டியன் தாத்தா கிட்ட… “மச்சான் எல்லாரும் அஜய விட்டுட்டு போய்ட்டாங்க நானும் இப்ப போக போறேன்.. நான் சொல்லானாலும் நீங்க அஜய பாத்துப்பிங்க.. இருந்தாலும் சொல்றேன் அஜய உங்க வாரிசா வளத்துக்கோங்க மச்சான்… எல்லாரும் சந்தோசமா இருங்க” என்று கடைசியாக வாழ்த்தி விட்டு தன் கடைசி மூச்சை நிறுத்தி விட்டார்..

“அய்யோ அழகி எல்லோரும் விட்டுட்டு போய்ட்டிங்களே…”

“உஷ் ஆத்தா அமைதியா இரு.. சிவா நீ மீனாவ கூட்டிட்டு அஜய் இருக்குற அறைக்கு போ… அதி போய் டாக்டர அழைச்சிட்டு வா.. ஐயா ஆத்தா ரெண்டு பேரும் வெளிய வாங்க…. ” என்று தன்னுடைய துக்கத்தை அடக்கி அந்த நேரத்தில் விரைவாக செய்ய வேண்டியதை செய்து ஊருக்கு தகவல் சொல்லி மருத்துவமனையில் செய்ய வேண்டியவற்றை செய்து விட்டு நால்வருடைய பிரேதத்தை வாங்கிக்கொண்டு அஜயை டிஸ்சார்ஜ் செய்து மதுரைக்குச் சென்றனர்

மதுரையில் மருது பாண்டியன் வீட்டில் அவருடைய சொந்தங்கள் எல்லாம் செய்ய வேண்டியதை செய்து இவர்கள் வரவுக்காக காத்துக்கொண்டு இருந்தனர்… இவர்கள் வீட்டு வாசலுக்குக் கார் வந்ததும் பெண்கள் அனைவரும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர்… ஆண்கள் அனைவரும் வேலைகளை ஆரம்பித்தனர்… அன்று மாலையே… அவர்கள் நால்வருக்கும் இறுதி காரியம் செய்து முடித்தனர்..

அனைவரும் ஒரே வீட்டினில் இருந்ததுனாலோ என்னமோ ஒரு மாதம் ஆகியும் யாராலும் அவர்கள் இழப்பில் மீள முடியவில்லை… அஜய் தான் ரொம்ப தவித்து போய் விட்டான்… அவன் அந்த இழப்பில் இருந்து மீளவே மூன்று மாதம் மேல் ஆகிவிட்டது…அவனை தேற்ற மீனாட்சிக்கும் அதிக்கும் தான் அதிக பங்கு உண்டு…

தற்போது அஜய்  பத்தாம் வகுப்பு தேர்வு முடித்து முடிவுகள்காகக் காத்துக்கொண்டு இருக்கிறான்… வீட்டின் கடைக்குட்டி.. அனைவர்க்கும் செல்லம்… செம வாலு பையன்..படிப்பில்  கெட்டி…

சுந்தரபாண்டியன் சிவகாமியின் கடைசி மகனாகவே வளர்கிறான்… மீனாட்சியின் முதல் குழந்தை… அதிவீரனின் குட்டி தம்பி…. மாறனுக்கு சேட்டை புடிச்ச பையன்… அப்புச்சியின் கிரைம் பார்ட்னர் … அப்பத்தாவிற்கு இம்சை.. அப்பாவிற்கு அடங்காதவன்… அம்மாவிற்கு செல்ல பையன்…. என்று அனைவர்க்கும் முதன்மையானவன்….ஆனால் எந்த வம்புக்கும் போக மாட்டான்..

மாநில அளவில் நீச்சல் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றவன்… தற்பொழுது தேசிய அளவில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவதற்காக பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறான்

அதன்பிறகு அவர்கள் வீட்டில் கருடன் என்ற காளை உள்ளது… ஜல்லிக்கட்டு காளை.. கருடன் பங்கு பெற்ற அனைத்து ஜல்லிக்கட்டு போட்டியிலும் வெற்றி தான்… அந்த வீட்டின் பெறாத பிள்ளை இவன்….

அடுத்து சிம்பா .. சிப்பிப்பாறை நாய் இனம் ஆகும்… பார்க்க பயமாக இருக்கும்.. ஆனால் பழகிவிட்டால் குழந்தை ஆகும்… வீட்டினருக்கு குழந்தை ஆக இருக்கும் சிம்பா.. அவர்களுக்கு ஒன்று என்றால் எதிரியை கொல்ல கூட தயங்காது….

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. சென்னை ஹீரோ ஆன்டிஹீரோலாம் பார்த்து போர் அடிச்சிடுச்சு … இந்த தடவை எங்க மதுரை ஹீரோவா வராங்களே … சூப்பரு … குடும்ப பாசமே கிடைக்காத தேவதைக்கு பெரிய குடும்பமே கிடைக்க போகுது போல …

    1. Author

      கண்டிப்பா கிடைக்கும் சிஸ்… ✨