Loading

சமுத்திரா – 35:

வருணனை பற்றி அவளுக்கு தெரிந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள் கடற்கன்னியான சௌந்தர்யம்.

“டேய் அமர் உன்னோட ஆளு பெரிய பெரிய வேலையெல்லாம் பாத்திருக்கா பாரு டா..” என ப்ரதீப் கொள்ளைக்காரியான ஆரலியை குறிப்பிட்டான்.

அமர், “அவளை என்னோட ஆளுன்னு சொன்ன? உன்னை கொன்னுருவேன்.” என ப்ரதீப்பின் கையை முறுக்கினான்.

“அந்த ஆரலியையே இவன் ஜொள்ளு வேற விட்டான் அமர். அதுக்கும் சேர்த்து அவனை குத்து.” என ரங்கா அமரனுக்கு எடுத்துக் கொடுத்தான்.

அவர்களை கடற்கனியை நோக்கி திசை திருப்பினாள் விலோ.

கடற்கன்னியான சௌந்தர்யம், அவளின் கிரீடத்தை கையில் எடுத்தாள். பின் அதில் இருக்கும் நீலநிற கல்லை வெளியெடுத்தவள், சக்தியையும் ஷிவன்யாவையும் அவளின் அருகே அழைத்தாள்.

“என்ன பண்ணுறா?” என அனைவரும் அவளிடம் நெருங்கி வந்தனர்.

சக்தி, ஷிவன்யா இருவரின் விரலையும் மெல்ல கீறி அந்த கல்லை அவர்கள் இருவரின் இரத்தத்தால் குளிப்பாட்டினாள். பின் அதனை அப்படியே அந்த கருநாகத்தினிடம் நீட்டினாள்.

அந்த நாகம் வந்து அதில் உள்ள உதிரத்தை மெல்ல ரூசிப்பார்க்க அங்கிருந்த இருளை கிழித்துக்கொண்டு வெளிச்சம் ஒன்று அந்த கல்லில் இருந்து தோன்றியது.

அதை பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் கண்களும் கூசியது.

“வருணனே! நீ செய்யவிருந்த குற்றத்திற்கான தண்டனையின் காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்றில் இருந்து நீ உன்னுடைய உருவம் கிடைத்து சாதாரண வாழ்வை வாழுவாய்!” என கணீரென்று வந்தன அங்கிருந்த வானத்தில் இருந்து அசரீரியின் வார்த்தைகள்.

அதனை கேட்டு முடித்தவுடன் மேல் பாதி ஆண் மனிதனின் உருவமாகவும், கீழ் பாதி செதில்கள் நிறைந்த மீனின் உருவாகவும் மீண்டும் வந்துவிட்டான் வருணன்.

அவனை பார்த்த மகிழ்ச்சியில் சௌந்திர்யம் ஆனந்த கண்ணீர் சிந்தினாள். வருணனுக்குமே அவளை பார்த்து மகிழ்ச்சியில் திளைத்தான்.

“எதோ போருக்கு போய்ட்டு வந்த மாதிரி பண்ணுறாளே..” என ஷிவன்யா சொன்னாள்.

மெல்ல சௌத்ர்யத்தை நெருங்கிய வருணன் அவளை இடையோடு வளைத்து இறுக்கி பிடித்து அவளின் இதழில் அவனின் இதழை  அழுத்தமாக பொறுத்தினான். அவர்களையே வெறித்து பார்த்த அனைவரும் முகத்தை திருப்பிக் கொண்டனர்.

“டேய். டேய் என்னடா பண்ணுற? இங்க என்னை மாதிரி மொராட்டு சிங்கள்ஸ் இருக்கோம் டா..” என ப்ரதீப் அலறினான். அதில் மற்றவர்கள் சிரித்துவிட்டனர்.

“நீ எதுக்கு டா அவங்களை பார்க்குற..” என்ற அமரன் அவனின் கண்ணை மூடிவிட்டான்.

சில வினாடிகளில் பிரிந்த இரு கடற்கன்னிகளும் நண்பர்களின் கூட்டத்தை நோக்கி வந்தனர். வருணன், ஷிவன்யா மற்றும் சக்தியின் கரத்தை பிடித்து நன்றி கூறினான்.

சக்தி அதனை அமைதியாகவே ஏற்றுக் கொண்டான். “இருந்தாலும் நீங்க பண்ணது தப்பு தான்.” என ஷிவன்யா அவளின் அதிருப்தியை வெளிப்படுத்தினாள்.

அதில் லேசாக சிரித்த வருணன். “நான் அதனை செய்யவில்லை என்றால் என் குலத்தில் வேறு யாரையாவது பயன்படுத்தி அதனை செய்ய வைத்திருப்பாள் ஆரலி. ஆகையால் தான், நானே அந்த தீய காரியத்தை செய்து எனக்கான தண்டையாக அந்த நவரத்தின கற்களாலான லிங்கத்தை பாதுகாக்கும் நாகமாக உருமாறினேன்.” என்றான் விளக்கமாக.

“இதென்ன டா. புது ட்விஸ்ட்டு. அப்ப எல்லாத்தையும் தெரிஞ்சே தான் நீங்க பண்ணீங்களா?” – ரங்கா.

“ஆம்..” என்ற வருணன் சௌந்தர்யத்தின் கையை பிடித்து, “எனக்காக சௌந்தர்யமும் பழியை சுமந்து என்னை மீட்டெடுக்க முயல்வாள் என்பதை நானே எதிர்பார்க்கவில்லை.” என காதலுடன் சௌந்தர்யத்தை நோக்கினான்.

“இப்பவும் ஆரலி அந்த நவ இரத்தின லிங்கத்தை எடுக்க முயற்சி பண்ணிக்கிட்டே இருப்பா தான? அப்ப என்ன பண்ணுவீங்க..” என ப்ரதீப் அதிமேதவியாக கேட்டான்.

“எனக்கு கிடைத்த தண்டனையை பார்த்தே என் குலத்தில் யாரும் இனி அந்த தவறை செய்ய முன் வர மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என்ற வருணன் ஷிவன்யாவை பார்த்து,

“நிச்சயம் இவள் என்னுடைய பதி விரதை சாவித்ரி தான்.” என சொல்லிவிட்டு சௌந்தர்யத்தை இடையோடு இறுக்கிக் கொண்டான்.

“ஆன்னா ஊன்னா அவளை பிடிச்சு பிடிச்சு வெச்சிக்குறான் டா.” என ப்ரதீவ் மெதுவாக சொல்ல, “அவனுக்கு ஆள் இருக்கு பிடிக்குறான் டா..” என அமர் அவனை நக்கலடித்தான்.

“எல்லாம் சரி. எதுக்கு இதுல என்னையும் இவரையும் உள்ள இழுத்தீங்க? நாங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும் சண்டை தான் போட்டிருக்கோமே..” என்ற கேள்வி ஷிவன்யாவிடம் இருந்து வந்தது. அதே கேள்வி தான் நண்பர்கள் அனைவரின் மனதையும் அரித்தது.

“சில கேள்விகளுக்கு பதில் என்றுமே கிடைக்காது பெண்ணே! அதனை காலத்தால் மட்டுமே உங்களால் உணர முடியும். என் மீது இருக்கும் ஆத்மார்த்த காதலால் எனக்கான சாபத்திற்கு விமோச்சனம் கேட்டாள் என் சௌந்தர்யம். அதற்காகவே உங்கள் இருவரின் பெயர்களும் தேர்தெடுக்க பட்டுருக்கலாம்” என வருணன் குறிப்பாக சொன்னான்.

“அப்படினா எதிர்காலத்துல ஷிவ்வும் சக்தியும் ஆத்மார்த்த காதலர்களா?” என ப்ரதீப் சிரிப்புடன் கேட்க, ‘கொஞ்சம் கூட அடுத்தவங்களை மதிக்க தெரியாதவன் கூடவா?’ என ஷிவன்யாவும், ‘என்ன எதுன்னு தெரியாம கத்தி கூப்பாடு போடுற அவளா?’ என சக்தியும் மனதில் ஒரு நொடி நினைத்தாலும், அதனை வெளியே காண்பிக்காமல் ப்ரதீப்பை முறைத்து வைத்தனர்.

“அதற்கான விடை காலம் தான் சொல்லும்.” என்ற வருணன்,

“உங்கள் அனைவரிடமும் இருந்து நான் விடை பெறுகிறேன்.” என கைகூப்பினான்.

“என்ன நீங்க மட்டும் போறீங்க? இவங்கள யாரு கூட்டிட்டு போவா.” என ரங்கா கடற்கன்னியை கை காண்பித்தான்.

“சௌந்தர்யம் செய்ய வேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது. அது முடியாமல் அவளால் என்னுடன் வர இயலாது.” என சொன்னான் வருணன்.

“வந்ததுல இருந்து இவங்க இதையே தான் சொல்லிட்டு இருக்காங்க. அப்படி யார் தான் உங்களுக்கு கட்டளை போடுவாங்க..” என தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் அமரன் கேட்டான்.

“இந்த சமுத்திரா உலகத்தில் வாழும் எங்களுக்கு சில ஆற்றல்கள் உள்ளன. அதன் மூலம் இந்த சமுத்திரா விளையாட்டை விளையாடும் நபர்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.” என அப்பொழுது தான் பேச ஆரம்பித்தாள் சௌந்தர்யம்.

“நீங்கள் எங்கள் சமுத்திரா உலகிற்கு வந்தவுடன் ஆமையார், முதலையார், கைசிறகியார் (வௌவால்), ஆரலி, நான் என ஒவ்வொருவராக வர காரணமும் அந்த ஆற்றல் தான். அது தான் எங்களை வழி நடத்தும். எந்த நேரம் யார் செல்ல வேண்டும்; என்ன செய்ய வேண்டும்; என்ன செய்ய கூடாது; யார் எதுவரை இந்த விளையாட்டை விளையாடுபவருடன் தொடர்பில் இருக்க வேண்டும் என அனைத்தையும் அதுவே எங்களுக்கு உணர்த்தும். இதில் ஆரலி போன்றவர்கள் சுயநலமாகவும் இருப்பார்கள்.” என சௌந்தர்யம் முடித்தாள்.

“நீங்க கூட தான் என்னையும் விலோவையும் காப்பாத்தல.. எங்களை காப்பாத்த கூடாதுன்னும் உங்களுக்கு உத்தரவு வந்ததா?” என ஷிவன்யா கைகளை கட்டியபடி கேட்டாள்.

“உங்களால் என் வருணனின் சாபம் விலகும். எனவே உங்களுக்கு உதவி செய்வது நான் சுயநலமாக இருப்பதை போல் உணர்ந்தேன். இப்பொழுதும் கூறுகிறேன் உங்களின் தோழி செய்தது தவறு தான். ஆகையால் தான் நான் அவர்களுக்கு உதவி புரியவில்லை.” என பொறுமையாக விலகமாளித்தாள் சௌந்தர்யம்.

‘இந்த வருணன் அவங்க குலத்துக்காக பண்ணது மட்டும் சரி! விலோ எங்களுக்காக பண்ணது தவறாம்..’ என யோசித்த ஷிவன்யா எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துக் கொண்டாள்.

“அது எல்லாம் ஓகே. நடுவுல உருட்டிவிட்ட உருளை கிழங்கு மாதிரி ஒன்னு வந்துச்சே.. ஹான். கடற்நாய். அது எதுக்கு வந்துச்சு?” என ப்ரதீப் கேட்க,

சௌந்தர்யமும் வருணனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். “அது என்னுடைய தோழி. என்னை சந்திக்க வந்தாள்..” என்றாள் சௌந்தர்யம்.

“இப்ப எவ்ளோ நல்லா பேசுறீங்க.. ஆனா வந்ததுல இருந்து எதுக்கு முறைச்சுக்கிட்டே இருந்தீங்க..” என ப்ரதீப் அசடு வழிய,

“டேய் அவளோட ஆளு பக்கத்துல தான் இருக்கான். பார்க்க வேற கொஞ்சம் பல்கா இருக்கான். பார்த்து டா சாவடி அடிக்க போறான்..” என ரங்கா அவனை எச்சரித்தான்.

“இப்பவாது சொல்லுங்க. நாங்க இந்த வ்விளையாட்டை முடிப்போமா? நிறைய பேர் இத முடிக்காம மாண்டு போய்ட்டாங்கனு சொன்னிங்களே..” என அமரன் தயங்கிக் கொண்டே கேட்டான்.

“ஆரம்பித்து வைக்க தெரிந்த பிரபஞ்சத்திற்கு முடித்து வைக்கவும் தெரியும். நாம், நம் வழியில் எத்தனை இடர்கள் இழப்புகள் வந்தாலும் இலக்கை நோக்கிய பயணத்தை நிறுத்தாமல் சென்று கொண்டே இருக்க வேண்டும். அதன் மூலம் இந்த பிரபஞ்சமே நமக்கு இலக்கை அடைய உதவும்.” என தெளிவாக சொன்ன வருணன் அவர்களிடம் இருந்து விடைபெற்றான்.

*****

அங்கு நடப்பது அனைத்தையும் தொலைநோக்கு கருவியின் மூலம் உடனுக்குடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆரலி.

“வருணன் திரும்பிவிட்டான். இனி அந்த சௌந்தர்யத்துடன் சேர்ந்து விடுவான். ஆனால், அந்த நவ இரத்தினத்தை அடைய முயன்ற என்னுடைய எண்ணம் ஈடேறவில்லை!” என ஆதிரத்தில் பொங்கிய ஆரலி, “நம் கப்பலை அவர்களை நோக்கி செலுத்துங்கள். அங்கிருக்கும் யாரையும் நான் உயிருடன் விட போவதில்லை.” என ஆரலி பயங்கர ஆத்திரத்தில் இருந்தாள்.

“இப்பொழுது நாம் அங்கு செல்வது உசிதம் இல்லை மகளே! அவர்கள் கப்பலின் நிலையை பார்த்தாய் தானே? ஒருபக்கம் முழுக்க அந்த அக்கினிக்கு இரையாகி கொண்டிருக்கிறது. அங்கு சென்று நாம் மாட்டிக்கொண்டாள் என்ன செய்வது?” என மகளிடம் நிதானமாக கூறினார்.

“என்னால் அது இயலாது தந்தையே! என்ன நடந்தாலும் அவர்களை நான் பழி வாங்கியே தீருவேன்.” என கொள்ளைக்கூட்டத்திற்கு கட்டளை இட்டு அவர்களின் கப்பலை நண்பர்களை நோக்கி செலுத்தினாள் ஆரலி.

*****

வருணன் சென்ற பின், சௌந்தர்யம் எப்பொழுதும் போல் நீச்சல் குளத்தின் அருகே அமர்ந்துக் கொண்டாள்.

“நம்ம கப்பல் வேற பாதிக்கு மேல எரிஞ்சிடுச்சு. சீக்கிரமா கேமை முடிக்கணும்.” என சக்தி வலியுறுத்தினான்.

“அடுத்து ரங்கா நீங்க தான் போடணும். நீங்க ஆறு போட்டாலும் உங்களுக்கு கேம் இப்ப முடியாது..” என சொல்லியபடியே பகடையை ரங்காவின் கரத்தில் வைத்தாள் ஷிவன்யா.

அதை அசைட்டையாக உருட்டுவிட்டான் ரங்கா. அந்த பகடையில் மூன்று என விழுந்தது. அப்படியே எட்டில் இருந்த ரங்காவின் மஞ்சள் நிற கப்பலும் மூன்று கடன்களை கடந்து பதினொன்றில் சென்று நின்றது.

நல்லவை தீயவையாகும்!

பாதுகாத்தவன் பகைவனாவான்!

விழிப்புடன் இருந்தாலும் விழ்ந்துவிடுவாய்!

என குமிழில் தோன்றிய குறிப்பை வாசித்தனர்.

“நம்ம கூட்டதுல யாருமே நல்லவங்க இல்லையே! இது யாரை சொல்லுது..” என ப்ரதீப் சொல்லி முடிக்க அவர்களின் கப்பலை இடித்தப்படி மீண்டும் கடலுக்கடியில் நகர்ந்து சென்றது அசூர சுறா.

– சமுத்திரா வருவாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்