Loading

சமுத்திரா – 32:

ப்ரதீப் ஆக்டொபஸின் ஆக்ரோஷ கரத்தில் சிக்கியிருக்க, இங்கு கப்பலில் அனைவரும் பகடையை தேடிக் கொண்டிருந்தனர்.

மழைக்கு சுருட்டி வைத்த பாய்களை எடுத்து பார்த்த அமரனிற்கு அங்கும் பகடை இருப்பதற்கான அறிகுறி தெரியவில்லை. எனவே அதனை அப்படியே விட்டுவிட்டான்.

அந்நேரம் நடுக்கடலில் இருந்து ஒருவித ஒளி வெள்ளம் உருவாகியது. அதனின் தாக்கத்தினால் கப்பலிலும் நன்கு வெளிச்சம் வர அனைவரும் அந்த திசையில் பார்வையை செலுத்தினர்.

“இப்ப எது இங்க வர போகுதுன்னு தெரியலையே! இது நம்ம லிஸ்ட்ல இருக்கானு கூட தெரியலயே!” என்ற ரங்கா கப்பலின் ஓரத்தில் சென்று நின்று பார்த்தான்.

கடலில் தோன்றிய பெருத்த உருவம் ஒருவித கர்ஜனையான குரலில் சீரியப்படியே ஆக்டொப்ஸின் ஆளுமையில் சிக்கிக் கொண்டிருந்த அவர்களின் கப்பலை நோக்கி தான் கடலிலே நீந்தியபடி வந்தது.

அவர்களிடம் நெருங்கிய உருவத்தை பார்த்தவர்களுக்கு அது டிராகன் என மெதுவாக புரிந்தது. ஆனாலும் அது எதுக்கு வருகிறது என புரியாமல் அனைவரும் ஒன்றாக நின்றுக் கொண்டனர்.

கடல்வழியே அவர்களை நெருங்கிய டிராகன் அதனிடம் இருக்கும் இறக்கையாய் உபயோகித்து ஒருவிதமான கர்ஜனையில் பறக்க துவங்கியது.

“ஐயோ! இது எதுக்கு இங்க வந்து கத்திக்கிட்டே பறக்குதுன்னு புரியல.. டேய் எல்லாரும் கீழ என்னடா பண்ணுறீங்க..?” என ப்ரதீப் மீண்டும் கத்தினான்.

கப்பலின் மேலே பறந்தப்படி இருந்த டிராகனோ கர்ஜித்துக்கொண்டே அதனின் வாய் வழியே அவர்களின் கப்பலை நோக்கி நெருப்பை கக்க துவங்கியது.

அதனின் செய்யலை தான் அனைவரும் சற்று கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நெருப்பு பிழம்பாய் நெருப்பை கக்கி கொண்டிருந்த டிராகனை பார்த்த சக்தி, “தீயவன் தீயவன்னு நமக்கு ஒரு க்ளு வந்துச்சே உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அது இது தான் போல.” என்றான் யோசனையுடன்.

“ஆமால. அது கூட வெயிட் பண்ணும்னு போட்டிருந்துச்சே..” என அமரன் எடுத்துக் கொடுத்தான்.

“எஸ். அதுல வந்த தீயவன்னா கெட்டவன் இல்லை. நெருப்பை கக்குற இந்த டிராகன் தான். ஆனா, இது எதுக்கு சம்பந்தமே இல்லாம இப்ப வந்திருக்கு..?” என சந்தேகத்துடன் ஷிவன்யா நிறுத்தினாள்.

“அந்த க்ளூ முழுசா ஞாபகம் இருக்கா?” – ரங்கா.

“‘தீயவன் தீயவனல்ல. கருக வைக்க காத்திருக்கும் காலனாவான்’ இது தான் அந்த க்ளூ” என ஷிவன்யா சொல்லி முடித்தாள்.

“தீயவன்னா டிராகன். தீயவனல்லனா கேட்டவன் இல்லை. அப்படினா டிராகன் கேட்டவனில்லை! அது கருக வைக்கும் காலன் (எமன்). இந்த ஆக்டொபஸ் வந்தப்ப தான் இதுவும் வந்திருக்கு. சோ, ஆக்டொபஸுக்கு தான் இது காலன்.” என முழுதாக சொல்லி முடித்தான் அமரன்.

“கரெக்ட். இப்ப என்ன நடக்க போகுதோ..” என அனைவரும் அந்த ட்ராகனை தான் பார்த்தனர்.

அதுவோ கர்ஜித்துக் கொண்டே ஆக்ரோஷமாக நெருப்பினை அந்த ஆக்டொப்ஸின் மீது கக்கிக் கொண்டிருந்தது. அதனின் உஷ்ணம் தாங்காமல் சுருங்க துவங்கிய பெருத்த உடலை கொண்ட ஆக்டொபஸ் ப்ரதீப்பை சுற்றி வளைத்த கரத்தில் சற்று இலக்கம் காட்டியது. அதனால் அதனிடம் இருந்து விடுதலை பெற்ற ப்ரதீப் பொத்தென்று கப்பலில் விழுந்தான்.

“ப்ரதீப்!” என அனைவரும் கத்தியபடியே அவனிடம் சென்றனர். அதிக நேரம் அந்த ஆக்டொப்ஸின் இறுக்கத்தில் இருந்ததால் ப்ரதீப் மயக்கம் அடைந்திருந்தான்.

“ப்ரதீப்! ப்ரதீப்!” என அவனை உலுக்கி எழுப்பினர். ஆனால் அவனிடம் சற்றும் அசைவில்லை. எனவே, அங்கிருந்த நீச்சல் குளத்திலிருந்து நீரினை எடுத்து வந்து அவனின் முகத்தில் தெளித்தனர். அதில், “காப்பாத்துங்க டா..” என அலரியபடியே மெல்ல கண்ணை திறக்க முயன்றான் ப்ரதீப்.

“டேய் உன்னை காபாத்தியாச்சு கண்ணை நல்லா திறந்து பாரு..” என அவனின் கன்னத்திலே அமரன் பட் பட்டென்று அடித்தான்.

“டேய். அவனே பாவம். விடு டா..” என சக்தி அமரனின் கையை பிடித்தான்.

“நல்லா கேளு டா. ஆக்டொபஸ் கிட்ட இருந்து காப்பாத்தி இவனே என்னை அடிச்சு கொன்னுடுவான் போல..” என இரும்பியப்படியே எழுந்து அமர்ந்தான்.

“அதான் பேச முடியல தான. கொஞ்சம் அமைதியா இரேன் டா.” – ரங்கா.

“அதெப்படி டா அமைதியா இருக்குறது. இதே ஷிவ் கடல்ல இருந்து வந்தப்ப அவளை எவ்ளோ கேர் பண்ணி பார்த்துக்குட்டான் இந்த அமர். ஆனா என்னை போட்டு அந்த அடி அடிக்குறான்..” என அவன் குறையாக சொல்ல,

“ப்ச். தேவையில்லாததை பேசாதீங்க. உங்கள நாங்க காப்பாத்தல. அதோ அந்த டிராகன் தான் காப்பாத்துச்சு. இப்ப அதுவும் ஆக்டொப்ஸும் ஒண்டிக்கு ஒண்டி சண்டை போடுதுங்க..” என ஷிவன்யா அவர்களின் கவனத்தை அங்கு திருப்பினாள்.

இங்கு, டிராகன் தொடர்ந்து ஆக்டொபஸின் மீது நெருப்பினால் தாக்குதல் நடத்தியது. அந்த பெரிய ஆக்டொபஸும் டிராகனிற்கு சலைத்தவனில்லை என்பதை நிரூபிப்பதை போல், அதனின் கரங்களை உபயோகித்து டிராகனை தாக்கியபடி இருந்தது.

அந்த இரு பெரிய உருவங்களின் சண்டையை தான் அனைவரும் பார்த்தபடி நின்றனர்.

அந்த டிராகனின் தாக்குதலுக்கு ஆக்டொபஸ் மட்டுமில்லாமல் அவர்களின் கப்பலும் இரையாக துவங்கியது. அந்த நெருப்பினால் அவர்கள் இருந்த கப்பலின் ஒரு பகுதி எரிய துவங்கியது.

*****

இங்கு நடப்பது அனைத்தையும் கொள்ளைக்காரர்கள் அவர்களின் கப்பலின் வழியே பார்த்துக் கொண்டிருந்தனர். “இனி நாம் எதுவும் செய்ய வேண்டாம். அவர்களுக்கு தானாகவே முடிவு கிடைத்துவிடும். அவர்களால் நமக்கு இந்த மது மட்டும் தான் இலாபம்.” என்ற ஆரலி மது குடுவையை வாயில் சரித்தாள்.

அவளுடன் இருந்த கொள்ளைக்கூட்டமும் அங்கு மது அருந்திக் கொண்டிருந்தனர். “இப்பொழுது நாம் திரும்பிவிடலாமா மகளே?” என அவளின் அருகே வந்து அவளுடைய தந்தை கேட்டார்.

“ஏன் இந்த அவசரம் தந்தையே! அவர்களின் அழிவை மொத்தமாக கண்டுகளித்து செல்லலாம் தானே!” என்ற ஆரலி மீண்டும் அந்த தொலை நோக்கி கருவியிடம் சென்றாள்.

*****

“ஓ! நோ! கப்பல்லயும் நெருப்பு வருது. நாம சீக்கிரமா கேமை முடிக்கணும்.” – ரங்கா.

“அதுக்கு டைஸ் வேணுமே..” என்றாள் ஷிவன்யா.

“தேடுவோம். இங்க தான் எங்கயாவது இருக்கும்.” என்றான் அமரன் நம்பிக்கையுடன்.

அதன் படி அனைவரும் எல்லா இடமும் சோதனை செய்தனர். “எங்க உருண்டு போயிருக்குன்னு தெரியலையே..” என புலம்பிக் கொண்டான் ப்ரதீப்.

நெருப்பின் கரங்கள் மெல்ல கப்பலின் உள்ளேயும் படர துவங்கின. அதனால் உள்ளிருந்த வௌவால்களின் கூட்டம் பறந்து வெளியே வந்தன. “இதுங்களுமா?” என அனைவரும் நினைத்துக் கொண்டனர்.

அங்கே ஒரு மூலையில் உள்ள ஒரு பாய் மரத்தின் கீழே விழுந்து கிடந்தது சிவப்பு பகடையை கண்டுபிடித்தான்.

“இதோ இங்க இருக்கு..” என அதனை எடுத்து வந்தான்.

“அப்பாடா. ஒருவழியா பகடையை கண்டுபிடிச்சிட்டோம்.” – ரங்கா.

“எனக்கு அடுத்து அமர் தான போடணும். அமர் எதுல இருக்கான். அவன் இன்னும் எத்தனை போட்டா நம்ம கேம் முடியும்?” என ப்ரதீப் பரபரப்பானான்.

“அவன் மூணுல தான் டா இருக்கான். அவன் ஆறு போட்டாலும் நம்மால இப்ப கேம்மை முடிக்க முடியாது..” என்ற சக்தி அந்த சமுத்திரா கேம் போர்டை விரித்து வைத்த்துவிட்டு பகடையை அமரனின் கையில் கொடுத்தான்.

அவர்களின் அருகில் வந்து கடற்கன்னியும் அமர்ந்துக் கொண்டாள். அவளை விலோ மற்றும் ஷிவன்யா இருவருமே முறைத்து பார்த்தனர். “நீ எதுக்கு இப்ப எங்ககிட்ட வந்த? எங்களை விட்டு தள்ளி போ..” என அவளை துரத்தினாள் ஷிவன்யா.

“உங்களுக்கு உதவவோ? உங்களிடம் நட்பு பாராட்டவோ நான் இங்கு வரவில்லை. எனக்கு சில பொறுப்புகள் உள்ளன. அதனை நிறைவேற்றும் பொருட்டே நான் இங்கு வந்திருக்கிறேன். ஆகையால், நான் என்ன செய்ய வேண்டும். என்ன செய்ய வேண்டாம். என்பதை நீங்கள் கூற வேண்டாம்.” என்றவள் அமரனை பார்த்தாள்.

அவளின் பதில் ஷிவன்யாவிற்கு பிடிக்கவில்லை என்றாலும், சண்டை போடாமல் அமைதியாக இருந்துக் கொண்டாள். “அவ நம்ம பக்கத்துல தான உட்கார்ந்திருக்கா? இந்த பொண்ணுங்களுக்கு பொஸஸிவ் ரொம்ப வரும் போல..” என ப்ரதீப் நக்கல் குரலில் சொன்னான்.

“இன்னும் எவ்வளவு நேரம் அந்த பகடையை கையில் வைத்தபடி இருக்க போகிறீர்கள்? சீக்கிரமாக அதனை உருட்டுங்கள்..” என அமரனுக்கு கட்டளை இட்டாள் கடற்கன்னி.

“ஏய்! என்ன நீ எங்ககிட்டயே அதிகாரமா பேசுற?” என்ற ப்ரதீப், கடற்கன்னியின் நீலவிழியிலிருந்து வந்த தீப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் வாயை மூடிக் கொண்டான்.

‘இவ எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்கா? அமரை போட சொல்லி எதுக்கு இவ்வளவு டார்ச்சர் பண்ணுறா?’ என அனைவரும் அவளையே குழப்பத்துடன் பார்த்தனர்.

“ஹ்ம்ம்..” என அமரனிடம் மீண்டும் பகடையை ஜாடைகாட்டினாள் கடற்கன்னி.

“நீங்க போடாதீங்க அமர். இவ நம்மள எதுலயோ மாட்டிவிட பார்க்குறா?” – ஷிவன்யா.

“அவன் போடாம இருந்தா எல்லாமே சரியாகிடும்னா சொல்லு. அவனை போட வேணாம்னு தடுக்கலாம்.” என்ற சக்தி ஷிவன்யாவிடம் சொன்னான்.

“இவங்க எப்ப பேசிக்க ஸ்டார்ட் பண்ணாங்க விலோ?” என ப்ரதீப் மெல்லிய குரலில் விலோவிடம் கேட்க, அவளோ தோளை குலுக்கிக்கொண்டாள்.

“என்ன ஆனாலும் நாம கேமை விளையாடனும் தான ஷிவ்? லேட் மீ பிலே..” என்ற அமரன் கையில் இருந்த பகடையை உருட்டிவிட்டான்.

இம்முறை அமரனுக்கு ஆறு என பகடையில் விழுந்தது. மூன்றில் இருந்த அமரனின் ஊதா நிற குட்டி கப்பல் ஆறு கட்டங்களை கடந்து ஒன்பதில் சென்று நின்றது.

“என்ன வந்திருக்குன்னு படிங்க டா..” என்றான் ரங்கா. ஆனால் அவர்களுக்கு முன்னாகவே அதில் என்ன வர போகிறது என அறிந்து வைத்திருந்த கடற்கன்னியான சௌந்தர்யத்தின் கண்கள் பளபளத்தது. அவளின் வதனமும் மலர துவங்க எதிர்பார்ப்புடன் கடலை பார்த்தாள்.

*****

இவர்கள் அனைவரையும் தொலைநோக்கு கருவியில் பார்த்த ஆரலியின் முகம் நொடி பொழுதில் மாறியது. “அங்கு யார் இருக்கிறாள் என்று பார்த்தீர்களா தந்தையே?” என ஒரு வித எரிச்சல் அவளின் குரலில் வெளிபட்டது.

“யாரென்று நீயே சொல் மகளே!”

“வேறு யார்? அன்று நம் திட்டம் அனைத்தையும் நாசம் செய்த அந்த சதிகாரி சௌந்தர்யம் தான் அவர்களுடன் இருக்கிறாள்.” என கடற்கன்னியை முறைத்து பார்த்தாள் ஆரலி.

“அவள் மட்டும் அன்று குறுக்கே வராமல் இருந்திருந்தால், இன்று நாம் தான் இந்த சமுத்திர சாம்ராஜ்யத்தையே ஆண்டு கொண்டிருப்போம்..” என்ற ஆரலியின் குரலில் ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது.

“அவள் எதற்கு இப்பொழுது அவர்களுடன் இருக்கிறாள் மகளே! உன்னால் எதையாவது ஊகிகிக்க முடிகிறதா?”

“அந்த சமுத்திரா விளையாட்டிற்குள் நாமே வந்துவிட்டோம். அவள் எப்படி வராமல் இருப்பாள்?” என ஒற்றை புருவத்தை உயர்த்தி வினவியவள், “அவள் மட்டும் நல்லவளா என்ன? அவள், அவர்களை என்ன செய்ய போகிறாள் என்பதை நாம் இங்கிருந்தே பார்ப்போம்.” என சுவாரசியமாக சொன்னாள் ஆரலி.

– சமுத்திரா வருவாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்