Loading

சமுத்திரா – 30:

அந்த இருண்ட கடலில் மிதந்த வண்ணம் இருந்தது நண்பர்கள் அனைவரும் இருந்த பாய்கள் அற்ற பாய்மரக்கப்பல். மலைப்பாம்பை போன்ற கொடிகள் அந்த கப்பலை கடலின் உள்ளிருந்தபடியே படர்ந்து இறுக்கமாக பிடித்திருந்தன.

அதனை அனைத்தையும் தன் கையில் இருந்த தொலைநோக்கு கருவியால் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆரலி. “அந்த கொடூர கொடிகள் அனைத்தும் அவர்களின் கப்பலில் படர்ந்திருக்கின்றன. நாம் இப்பொழுது அங்கு செல்வது உசிதம் இல்லை. நம் கப்பலை சற்று நேரம் இங்கேயே நிறுத்தி வையுங்கள். நான் மீண்டும் சொல்லும் பொழுது அவர்களை முற்றுகையிட்டால் போதும்.” என அந்த மாலுமிகளுக்கு கட்டளை இட்டாள் கொள்ளைக்காரி. ஆரலியின் கட்டளைக்கு இணங்க, அந்த கடல் கொள்ளைக்காரர்களும் அவர்களின் கப்பலை சற்று தள்ளி நிறுத்தி வைத்திருந்தனர்.

இங்கு நம் கப்பலில், சமுத்திர விளையாட்டை சுற்றி அமர்ந்திருந்தனர் அனைவரும்.

சிறிது என்று எள்ளல் கொள்ளாதே! 

சமயம் கிடைத்தால் சாய்த்து விடுவான்!

என அந்த குமிழில் ஷிவன்யாவிற்கு வந்த குறிப்பை வாசித்து முடித்த அனைவரும் மற்றவரின் முகத்தை பார்த்துக் கொண்டனர்.

“அப்படினா என்ன? ஒண்ணுமே புரிலையே!” என முதலாவதாக ப்ரதீப் கேட்டான்.

“ஏன் டா. உன்னோட வாய் கொஞ்சநேரம் சும்மா இருக்காதா டா.” என பொறுக்க முடியாமல் ராங்க கேட்டேவிட்டான்.

“நீங்களாம் எதுனாலும் மத்தவங்க முகத்தை பார்த்தே தெரிஞ்சிக்குறீங்க டா. நான் குரல் கொடுத்தா தான நான் ஒருத்தன் இங்க இருக்கேன்னு உங்களுக்கு தெரியும்.” என்ற ப்ரதீப் சொல்ல,

“சரி டா. எப்படியாவது ஆறு போட்டு உன்னை வர வைக்கிறோம். இப்ப இந்த க்ளூக்கு என்ன வரும்னு தெரியலையே..” என்ற அமரன் சுற்றி பார்த்தான்.

“ஏதோ சின்னதா இருக்கும் போல. ஆனா அதை சாதாரணமா எடுத்துக்க கூடாதுன்னு தான் அந்த க்ளூல இருந்து மீனிங் வருது.” என ஷிவன்யா விளக்கமாக சொன்னாள்.

“சின்னதாவா?”

“குட்டியா என்ன வரும்?”

என்ற கேள்விகள் அவர்கள் அறுவருக்குள்ளே எழும்பியது. அந்நேரம் கடலில் இருந்து சில நண்டுகள் கப்பலின் மேல் படர்ந்திருந்த கொடியில் ஏறியபடி கப்பலிற்குள் வந்தன. அதனை அனைவரும் குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் பார்த்தனர்.

‘இது தான் அந்த சிறிதா?’ என்ற சந்தேகம் எழுந்தாலும் அனைவரும் அமைதியாக நண்டுகளை தான் கவனித்தப்படி இருந்தனர்.

“முதல்ல இந்த கொடி வந்து கப்பலுக்கும் கடலுக்கும் பாலம் போட்டுச்சு. இப்ப அது வழியா அப்படியே இந்த நண்டுங்க எல்லாமே லைனா மேல ஏறி கப்பளுக்குள்ளேயே வருது. நல்ல பார்ட்னர்ஷிப் தான்.” என ப்ரதீப் மீண்டும் அவனின் இருப்பை உணர்த்தினான்.

“நண்டு ரசம், நண்டு சூப்னு எவ்ளோ சாப்ட்ருக்கோம். இந்த நண்டு நம்மள என்ன பண்ணிடும்?” என ரங்கா சற்று அசைட்டையாக கேட்டான்.

“எல்லா நண்டையும் நாம சப்புடுறது கிடையாதே ரங்கா. சில நண்டுகளை தொடவே கூடாது. அதோட உடம்புலயே அவ்ளோ விஷம் இருக்கும்.” என ரங்காவின் கேள்விக்கு பதிலளித்தான் அமரன்.

கப்பலில் இருக்கும் இண்டு இடுக்குகளின் வழியாகவும் இப்பொழுது நண்டுகள் வர துவங்கின. அதனை பார்த்த சக்தி, “அப்படினா இந்த நண்டு எல்லாமே நம்ம க்ளூக்காக வந்தது தானா அமர்?”

“இருக்கலாம்..” என அமர் சொல்லி முடிக்க, அந்த நண்டுகளுடன் இப்பொழுது சில நத்தைகளும் கடலில் இருந்து காப்பலிற்குள் வந்தன. அந்த நத்தைகளில் சில நத்தைகள் கூம்பு (cone shape) வடிவத்திலும் இருந்தன.

“நண்டு, நத்தைனு ஒன்னு ஒன்னா நமக்குனே கிளம்பி வருதுங்க போல. விலோ நீ தான் அடுத்து போடணும் சீக்கிரமா போடு.” என ப்ரதீப் விலோவை அவசர படுத்தினான்.

“இரு விலோ.” என அவளை தடுத்தான் அமரன்.

“இந்த கோன் ஷேப்ல இருக்க நத்தை ரொம்ப ஆபத்தானது. யாரும் தெரியாம கூட அதை தொடாதீங்க. அதோட விஷம் நம்ம நரம்பு மண்டலத்தை ரொம்ப பாதிக்கும். அந்த நத்தையால நமக்கு டெத் கூட ஆக வாய்ப்பிற்கு.. சோ அது கிட்ட கூட யாரும் போய்டாதீங்க. கவனமா இருங்க.” என அமரன் அனைவரையும் பயங்கரமாக எச்சரித்தான்.

அவன் எதை பற்றி சொல்லி கொண்டிருந்தானோ அந்த வகை நத்தைகள் மெதுவாக கப்பலில் அங்கும் இங்கும் ஊர்ந்தபடியே இருந்தன.

“என்ன டா. அந்த க்ளூல வந்ததை விட நீ சொல்லுறது ரொம்ப பயமாவும் பயங்கரமாவும் இருக்கு..” என்ற ப்ரதீப், “அதான் அவன் சொல்லி முடிச்சிட்டானே! நீ இப்ப போடு விலோ.” என அவளை ஊக்கினான்.

விலோ அமரனை பார்த்தாள். “போடு விலோ. நா உங்க எல்லாரையும் அலர்ட் தான் பண்ண.” என்றான் அமரன். அந்த கூம்பு வகை நத்தை மிகவுமே ஆபத்தானது என அமரனுக்கு புரிந்து தான் இருந்தது. இதற்குமேல் சொல்லி யாரையும் ரொம்ப பயமுறுத்த வேண்டாம் என அமைதியாகிவிட்டான்.

“நீயாவது மறக்காம ஆறு போடு விலோ.” என சொன்னது ப்ரதீப் இல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்.

“இப்ப விலோ ஆறு போடலனா என்னாகும்? நம்மால கேமை முடிக்க முடியாதா?” என ஷிவன்யா சந்தேகமாக கேட்டாள்.

“ஒன்னும் ஆகாது. நாம இங்கயே இந்த உலகத்துலயே இருக்க வேண்டியது தான். கொஞ்ச நேரம் கழிச்சு அந்த கொள்ளைக்காரி வந்து நம்மள அடிச்சி போட்டாவது அமரனை தூக்கிட்டு போய்டுவா..” என ப்ரதீப் சொன்னதும் சிரித்து விட்டனர்.

அப்பொழுது கடற்கன்னியும் நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்து அமர்ந்தாள். ‘ஐயோ இவ இப்படி வந்தாலே எதாவது நடக்குமே?’ என அவளை முறைத்து பார்த்தாள் ஷிவன்யா.

விலோவினால் பகடையை கையில் எடுக்கவே முடியவில்லை. அவளின் விரல்கள் அனைத்தும் சேர்ந்தபடி இருக்க, அவளால் பகடையை பிடிக்க கூட முடியவில்லை. அதில் கலங்கியவள் ரங்காவை பார்த்தாள்.

ரங்கா, விலோவின் கையை பிடித்து அதன் மேல் பகடையை வைத்தான். பின் அவளின் கையாலே பகடையை சற்று மேலே தூக்கி போட்டான். பகடையும் மேலே சென்ற வேகத்தில் கீழே விழுந்து நீண்ட தூரம் உருண்டு சென்றது. அதன் பின்னே ரங்கா, அமரன், சக்தி என மூவரும் சென்றனர். அவர்களோடு உருவமில்லாமல் காற்றில் இருந்த ப்ரதீப்பும் சென்றான்.

‘காற்றில் அரூபமாக இருக்கும் ப்ரதீப்பிற்கு எப்படியாவது உருவம் கிடைக்க வேண்டும்!’ என்பதே அவர்கள் அனைவரின் ஒரே வேண்டுதலாக அந்நேரம் இருந்தது. அவன் வந்து மூன்று போட்டுவிட்டால் அனைத்திலிருந்தும் அவர்களுக்கு விடுதலை கிடைத்துவிடும் என பலமாக நம்பினர்.

அவர்கள் அனைவரின் வேண்டுதலுக்கு பலனாக அந்த பகடையில் ஆறு என வந்தது.

“ஹே! ஆறு! ப்ரதீப் வந்துடுவான்.” என சக்தி, அமரன் ரங்கா மூவரும் குதித்தனர்.

சமுத்திரா கேம் போர்டில் எட்டில் இருந்த விலோவின் சிவப்பு நிற குட்டி கப்பல் ஆறு கட்டங்களை கடந்து, பதிமூன்றில் முதலாவதாக இருந்த ஷிவன்யாவின் நீலநிற கப்பலையும் கடந்து பதிநான்கில் சென்று முன்னிலை பெற்றது.

“விலோ. நீ ஒன்னு போட்டா கூட கேம் முடிஞ்சிடும்.” என ஷிவன்யா சொல்ல,

“அதுக்கு அவசியமே இல்லை. ப்ரதீப்பே இப்ப வந்து மூணு போட்ருவான்.” என்ற சக்தி, “இந்நேரம் ப்ரதீப் வந்திருக்கணுமே அவனை இன்னும் காணோம்.” என்றான்.

“ஆமால. மறையுறப்ப டக்குனு மறைஞ்சான். இப்ப இன்னும் ஆளை காணோம்.” – ரங்கா.

“டேய் இவ்ளோ நேரம் பேசி பேசி டார்ச்சர் பண்ண. இப்ப எதாவது சொல்லேன் டா..” என்ற அமரன் சுற்றியும் பார்த்தான். ஆனால் அங்கு கனத்த அமைதி தான் நிலவியது.

“என்ன க்ளூ வந்திருக்குன்னு பாரு ஷிவ். இவனை வேறு இன்னும் காணோமே..” என்றான் அமரன்.

“சரி.” என்ற ஷிவன்யா விலோவிற்கு வந்த குறிப்பை வாசிக்க துவங்கினாள்.

அந்நேரம், “நான் வந்துட்டேன்..” என கப்பலின் உள்ளிருந்து குதித்து அவர்களிடம் ஓடி வந்தான் ப்ரதீப்.

“டேய் ப்ரதீப். நீ திரும்பி வந்துட்ட டா..” என அவனிடம் சென்ற அமரன் அவனை ஆர தழுவினான். அவர்களிடம் சென்ற சக்தியும் அமரனும் கூட அவனை அணைத்து கொண்டனர்.

“என்ன டா உள்ள இருந்து வர?” என கேட்ட அமரன் வழக்கம் போல் அவனின் கழுத்தை வளைத்து பிடித்தான்.

“விலோ இந்த கேமை எங்க இருந்து எடுத்தாளோ, அங்க தான் டா நாம் உருவம் இல்லாம இருந்தப்பவும் இருந்தேன். இப்ப உருவம் வந்தப்பவும் அங்க தான் இருந்தேன். அதான் உங்கள் பார்க்க மேல ஓடி வந்துட்டேன்..” என்ற ப்ரதீப்பின் குரல் சற்று கலங்கி தான் வந்தது.

“அழுவுறியா என்ன?” என்ற ரங்கா அவனின் வயிற்றிலே குத்தினான்.

“ச்ச என்னோட கண்ணு தான் வேர்குது..” என்ற ப்ரதீப்பின் கண்கள் உண்மையிலே கலங்கிவிட்டது.

“நீங்க படுற கஷ்டத்தை பக்கத்தில இருந்து பார்த்துருக்கேன் டா. அதான் உங்கள எல்லாரையும் இப்படி மறுபடி பார்க்க முடியாதோணு கொஞ்சம் பயந்துட்டேன்..” என்றவன் சக்தியினிடம் தஞ்சம் புகுந்தான்.

அவனை அணைத்த சக்தி அவனின் முதுகில் நான்கு அடி அடித்து அவனை விடுவித்தான்.

அவர்கள் நால்வரையும் விலோவும் ஷிவன்யாவும் முகத்தில் உறைந்த புன்னகையுடன் பார்த்தபடியே அமர்ந்திருந்தனர்.

“விலோ.. மை டார்லிங். ஆறு போட்டு எனக்கு உருவம் கொடுத்த தவளையே!” என அவளிடம் சென்றான். அதில் அவள் ப்ரதீப்பை முறைக்க, “சில் கேர்ள்.” என அவளின் தோளில் தட்டினான் ப்ரதீப். அவளும் கண்களாலே அவனிடம் நலம் விசாரித்தாள்.

பின், தொண்டையை செருமி தனிருப்பை ஷிவன்யாவிற்கு உணர்த்தினான் ப்ரதீப். “நீங்க திரும்பி வந்தது ரொம்ப சந்தோசம் ப்ரதீப். அந்த கடல்ல நான் தத்தளிச்சிட்டு இருக்கப்ப நீங்க தான் வந்து எனக்கு ஹெல்ப் பண்ணீங்க. உங்களுக்கு உருவம் இல்லாதது கூட நமக்கு நிறைய இடத்துல யூஸ் ஆகிருக்கு. எல்லாமே ஏதோ ஒரு புள்ளில கானெக்ட் ஆக தான் செய்யுதுல..” என்றாள் ஷிவன்யா.

“இருக்கலாம் ஷிவ்.” என்ற ப்ரதீப், “விலோவுக்கு என்ன வந்துச்சுன்னு படிச்சிங்களா? நான் அடுத்து போடவா?” என பகடையை கையில் எடுத்தான் ப்ரதீப்.

“இல்லை இன்னும் படிக்கல..” என்ற ஷிவன்யா குமிழுக்குள் தோன்றிய எழுத்துக்களை வாசிக்க துவங்கினாள்.

எண்ணற்ற கரங்களால் அணைக்க வருகிறான்!

அகப்பட்டால்  அழிந்துவிடுவாய்!

என்ற குறிப்பை அவள் வாசித்து முடித்தவுடன் கடலில் இருந்து எதோ உருமும் சத்தம் பலமாக அவர்களின் செவியை எட்டியது.

“என்னமோ வர போகுது.”

“திருப்பு அந்த சுறா வருமோ..”

என ஆளாளுக்கு கேட்க,

“எதோ ஒன்னு வரட்டும். இப்ப ப்ரதீப் மூணு போட்டா கேம் முடிஞ்சிடும். சீக்கிரமா போடு ப்ரதீப்.” என்ற ரங்கா அவனிடம் பகடையை கொடுத்தான்.

– சமுத்திரா வருவாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்