
சமுத்திரா – 24:
சுற்றிலும் நீர் சூழ்ந்திருக்க அதனின் நடுவில் இருந்த ஒரு மரமேசையின் மேல் அமர்ந்திருந்தாள் விலோச்சனா. அவளின்
முகமுழுக்க பயத்தின் ரேகைகளை படர்ந்திருந்தன. கண்களோ கண்ணீரை உள்ளிழுத்தப்படியே சுற்றியும் அவதனித்தது.
இரு கைகளாலும் கால்களை கட்டியபடி அமர்ந்திருந்த விலோ, அவளிருந்த அறையில் விட்டுவிட்டு எரிந்துக் கொண்டிருந்த விளக்கையே இலக்கில்லாமல் பார்த்தபடி இருந்தாள்.
‘தேவையில்லாத வேலையை பார்த்திருக்கேன்! நான் அந்த கேம் போர்டை எடுக்காமலே இருந்திருக்கலாம். எல்லாமே என்னால தான்.’ என்ற எண்ணம் எண்ணிக்கையில்லாமல் அவளது மனதில் தோன்றி மேலும் மேலும் அவளின் குற்றவுணர்ச்சியை அதிகரித்தது.
விலோவின் தலை முதல் பாதம் வரை நனைந்திருந்தது. ஏதோ நீருக்குள் மூழ்கி எழுந்து வந்திருக்கிறாள் என அவளின் நிலையே உணர்த்தியது. குளிரினால் அவளின் உடலில் நடுக்கமும் நன்றாகவே வெளிப்பட்டது.
“தலைக்கு குளிச்சா தலையை ஒழுங்கா துவட்டுன்னு உனக்கு எத்தனை வாட்டி விலோ சொல்லுறது? பாரு தலை எப்படி ஈரமா இருக்குனு..” என்று அவளை திட்டியபடி துவட்டும் அவளின் அன்னையின் ஞாபகம் அழையாமலே வந்து அவளது மனதை கலங்க செய்தது. ‘நான் உங்கள எப்ப பார்ப்பேன் மாம். முதல்ல உங்களை திரும்பி பார்ப்பேனா?’ என அவளுக்குள்ளே கேள்விக் கேட்டவளின் உடல் வலி உயிரை உரிஞ்சுவது போல் இருக்க, அந்த மேசையில் அப்படியே சுருண்டு படுத்துவிட்டாள்.
அப்படி படுத்தவளுக்கு அவளுடன் ஆவலாக பயணத்தில் கலந்துக் கொண்ட ஷிவன்யாவின் நினைவு வர, கண்ணில் நீர் கோர்த்தது. “சாரி ஷிவ்! நீ ட்ரிப் வரமாட்டன்னு தான் சொன்ன. நான் தான உன்னை வற்புறுத்தி கூட்டிட்டு வந்தேன். எல்லாமே என்னால தான..” என அவளுக்குள்ளே சொல்லிக்கொண்டவளுக்கு சற்று நேரம் முன் நிகழ்ந்தது கண்முன்னே விரிந்தது.
சற்று நேரம் முன்பு,
ரங்கா, அமர், மார்ட்டின் மற்றும் விக்டர் என அவர்கள் நால்வரும் மீட்பு படகில் கடற்கொள்ளையர்களால் இவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சமுத்திரா விளையாட்டை தேடிச் சென்றனர்.
இங்கு, விலோ, ஷிவன்யா, சக்தி மற்றும் ரிச்சார்ட் என இவர்கள் நால்வரும் நீச்சல் குளத்தின் அருகே அமர்ந்திருந்தனர்.
அவர்களை பார்த்த அங்கிருந்த கடற்நாய் நீச்சல் குளத்திற்குள் குதித்தது. “இது எதுக்கு நம்மள பார்த்து பயப்படுது? இதுவும் அந்த கடற்கன்னி மாதிரியே புரியாத புதிரா இருக்கும் போல.” – விலோ.
“நீ தான் உடம்பெல்லாம் வலிக்குதுன்னு சொன்னியே? அதுலயும் இப்படி பேசனுமா? அமைதியா உட்காரு விலோ.” என்ற ஷிவன்யா விலோவை அதட்டி நன்றாக காலை நீட்டி அமர வைத்தாள்.
அந்நேரம் நீச்சல் குளத்தில் சலசலப்பு சத்தம் கேட்டது. ‘கடற்கன்னியா இல்லை அந்த குட்டி கடற்நாயா?’ என அசட்டையாக திரும்பி பார்த்தாள் ஷிவன்யா. அவள் என்னவென உணரும் முன்னே நீச்சல் குளத்தின் உள்ளிருந்து பாய்ந்து வந்த முதலை ஒன்று ஷிவன்யாவின் கணுக்காலை கவ்வி பிடித்தது.
“ஆ.. அம்மா..” என உயிர் போகும் வலியில் பதறி துடித்த ஷிவன்யா அந்த முதலையிடமிருந்து காலினை உருவ முயன்றாள்.
சக்தி, விலோ மற்றும் ரிச்சார்ட் என்ன செய்வதென்று தெரியாமல் ஷிவன்யாவை நெருங்கினர்.
ஷிவன்யாவின் காலில் இருந்து இரத்தம் வழிய துவங்க, கண்கள் முழுவதும் கண்ணீர் குளம் கட்ட காலை முதலையின் வாயிலிருந்து இழுக்க முயன்றாள். ஆனால், அந்த முதலை அவளை வாயாலே கவ்வியபடி நீச்சல் குளம் நோக்கி ஊர்ந்து சென்றது.
அங்கு அருகில் கீழே இருந்த கொள்ளைக்காரனின் வாளை எடுத்தான் சக்தி. வாளினை எடுத்துவிட்டு நொடியும் யோசிக்காமல் ஷிவன்யாவை நெருங்கி அந்த வாளினாலே முதலையின் தலையை வெட்டி விட்டான். ஷிவன்யாவின் இரத்ததோடு அந்த முதலையின் இரத்தமும் அங்கு குளம் கட்ட துவங்கியது.
கழுத்தறுப்பட்டு இறந்த முதலையின் வாய் ஷிவன்யாவின் பிடியை மெல்ல தளர்த்தியது. உடனே அவளருகில் அமர்ந்த விலோ ஷிவன்யாவை தாங்கிக் கொண்டாள். ஷிவன்யாவின் காலில் நிற்காமல் குருதி வழிந்தது.
மேலும் அந்த நீச்சல் குளத்திற்குள்ளிருந்து முதலைகள் வர துவங்கின. இம்முறை ஒன்று இரண்டு என ஒற்றை இலக்கு இல்லாமல் கூட்டமாக முதலைகள் வந்தன.
“சீக்கிரம். நாம இங்க இருந்து போய்டலாம்..” என சக்தி அனைவரையும் துரிதப்படுத்தினான்.
ஷிவன்யாவால் நிற்க கூட முடியாமல் தள்ளாடினாள்.
இடது தோள்பட்டையில் காயம் இருந்தாலும் ஷிவன்யாவை இருகைகளாலும் தூக்கிக்கொண்டான் சக்தி. இதனை ஷிவன்யாவே எதிர்பார்க்கவில்லை என அவளின் அதிர்ந்த முகமே சொல்ல, அவளின் கண்ணை தீர்க்கமாக ஒரு முறை பார்த்த சக்தி, “என்னோட பின்னாடியே வாங்க..” என விலோவிடமும் ரிச்சார்டிடமும் சொன்னான்.
அதன்படி அவர்கள் இருவரும் சக்தியின் பின்னே செல்ல, அவர்களை நோக்கி வேகமாக ஊர்ந்து வந்தன முதலைகள். வேகமாக ஓடிய சக்தி அங்கிருந்த படிகளில் ஏறியவன் திரும்பி பார்த்து, “வா விலோ..” என அழைத்தான்.
ஆனால், விலோவையும் ரிச்சார்டையும் துரத்தியபடியே நாலைந்து முதலைகள் மறுபக்கமிருந்து வேகமாக ஊர்ந்து வந்தன. சக்தியிடம் செல்லவும் அவர்களுக்கு வாய்ப்பில்லாமல் போக, ரிச்சார்டும் விலோவும் உயிர் பயத்தில் கப்பலிற்குள்ளேயே சென்று விட்டனர்.
ஷிவன்யாவை சுமந்தப்படி அங்கிருந்த படிகளின் மேலேறி வந்தான் சக்தி. அவனின் கரங்களில் இருந்து அவளை கீழிறக்கிவிட்டு நிமிர முயன்றவனால் நிமிர முடியவில்லை. அவனால் முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது. என்னவென்று பார்க்க, அவன் கழுத்தில் அணிந்திருந்த வேல் டாலருடன் ஷிவன்யாவின் முடி சிக்கிக்கொண்டு இருந்தன.
அவன் அதை வேகமாக இழுக்க, “ஸ்ஸ்ஸ்..” என ஷிவன்யா தலையில் கைவைத்து தேய்த்தப்படி அவனை முறைத்தாள். பின் அவளின் முடிகளிலிருந்து அவனின் வேல் டாலரை மெல்ல விலக்கிக் கொண்டான் சக்தி.
இருவரும் திரும்பி கப்பலிற்குள் செல்லும் வாயிலை பார்த்தனர். அந்த வாயிலின் வழியே தான் ரிச்சார்டும், விலோவும் கப்பலிற்குள்ளே சென்றனர். அவர்களுக்கு என்னாகுமோ என இருவரும் பயந்தபடியே இருந்தனர்.
கால் வலி உயிர் நோக இருந்தாலும், வலியை பொறுத்தப்படி அமர்ந்திருந்தாள் ஷிவன்யா.
கணுக்காலில் உள்ள காயத்தால் ஷிவன்யாவின் இடது கால் முழுக்க ரத்தமாக காட்சியளித்தது. மேலும் மேலும் இரத்தம் கசிந்தபடி இருந்தது. வலியும் மேலும் மேலும் அதிகரிக்க உதடு துடிக்க கண்களை இறுக்கி மூடியேபடி அமர்ந்திருந்தாள்.
அவளின் நிலையை பார்த்த சக்திக்கும் கஷ்டமாக இருந்தது. சில நிமிடங்கள் கடந்து, “நான் உனக்கு ஃபர்ஸ்ட் எயிட் பண்ணட்டுமா?” என்றான் அவளின் விழிகளை சந்தித்து.
வலியிலும், “ஆனா இங்க எந்த மெடிசினும் இல்லையே?” என ஷிவன்யா கூற,
“பிளட் ரொம்ப போகுது. அதையாவது நிறுத்தலாம்..” என்றவன் அவளின் காலை எடுத்து அவனின் மடியில் வைத்தான்.
அதில் அவள் சங்கோஜபட, “இது மனிதாபிமான ஹெல்ப் தான்.” என்றவன் மெல்ல அவளின் காலை ஆராய்ந்தான்.
இறுக்கமாக இருந்த லைஃப் ஜாக்கெட்டை கழட்டி வைத்தாள் ஷிவன்யா. ஷிவன்யாவின் காலை இறுக்கி பிடித்தபடி இருந்த ஜீன்ஸை மெல்ல முழங்கால் வரை கிழித்தெடுத்தான் சக்தி.
பின் அந்த முதலை ஏற்படுத்திய காயத்தில் இருந்து கசிந்த இரத்தத்தை பார்த்தவனுக்கு பகீரென்று இருந்தது. பளிங்கு போல் இருந்த அவளின் கணுக்காலை கோரப்பார்களால் கொடூரமாக குதறி வைத்திருந்தது முதலை.
‘இரத்தத்தை எப்படி நிறுத்துறது?’ என யோசித்தவன் அவனின் வெண்ணிற சட்டையை கழட்டி அவளின் காலை சுற்றி இறுக்கமாக கட்டிவிட்டான்.
ஷிவன்யாவிற்கு வலியினால் மயக்கம் வர, கண்ணை மூட துவங்கினாள். அவளையே பார்த்த சக்தி, “ரொம்ப வலிக்குதா?” என்றான்.
“ம்ம்ம்..” என மூடியிருந்த ஷிவன்யா விழிகளில் இருந்து நிற்காமல் கண்ணீர் இறங்கியது.
*****
இங்கு படகில் மார்ட்டினும், விக்டரும் அந்த மீட்பு படகில் துடுப்பு போட்டபடி சென்றனர். அவர்கள் அருகில் ரங்காவும் அமரனும் அமர்ந்திருந்தனர். கடலின் அலைகளின் ஓசையையும் மீறி ப்ரதீப்பின் குரல் காற்றிலே சலசலத்தப்படி வந்தது.
“டேய் எனக்கு ஒரு டவுட் டா” என மீண்டும் தொடங்கினான் ப்ரதீப். “ஷிவ் சொன்ன மாதிரி உன்னோட வாயையும் அடைச்சிருக்கலாம்.” என ரங்கா அலுத்துக் கொண்டான்.
அதனை பெரியாத எடுத்துக்கொள்ளாத ப்ரதீப், “நமக்கு மட்டும் எதுக்கு டா இப்படியெல்லாம் நடக்கணும். ஒருவேளை நம்ம மூலமா இந்த உலகத்துக்கு ஏதோ நல்லது சொல்ல வர்றாங்க போல..” என.
“ஆனாலும் நாம அவ்ளோ நல்லவங்க இல்லையே டா. நம்ம மூலமா என்ன நல்ல நடக்க போகுது..” என அமரனும் சொன்னான்.
“அந்த ஆரலிக்கும் இந்த கேமை பத்தி தெரிஞ்சிருக்கு போல டா. அதான் அதை எடுத்துட்டு போனதும் இல்லாம உன்கிட்ட ‘நீயே என்னை தேடிவருவன்னு’ சவால் வேற விட்டுட்டு போயிருக்கா அமர்.”
“ஆமா ரங்கா. இந்த உலகத்துல இருக்க எல்லாருக்கும் இந்த கேம் பத்தி தெரியும் போல. அந்த ஏஞ்சல், கள்ளிராணிக்குலாம் தெரிஞ்சிருக்கு..” என ப்ரதீப்பும் ரங்காவை ஆமோதிப்பது போல சொன்னான்.
“எல்லாம் முடிஞ்சத்துக்கு அப்புறம், இப்ப வந்து எல்லாத்தையும் சொல்லுங்க டா..” என அமரன் குறைப்பட்டுக்கொள்ள,
“இப்ப நாம எங்க டா போறோம். ரொம்ப நேரமா மார்ட்டினும் விக்டரும் துடுப்பு போடுறாங்களே..” – ரங்கா
மார்ட்டினிடம் விசாரித்தான் அமரன். “அதோ அங்க விளக்கு வெளிச்சம் தெரியுதுல அங்க தான் போகணும்..” என்றார் அவரும்.
கையாலே துடுப்பு போட்டபடி அங்கு செல்ல இன்னும் நேரமேடுக்கும் என அவர்களுக்கு புரிந்தது.
சிறிது நேரம் கழித்து, படகில் அமரனும் ரங்காவும் துடுப்பு போட்டனர். கடலோடியான அமரன் லாவகமாக படகில் துடுப்பு போடா, பழக்கம் இல்லாததால் ரங்கா அலையில் அலைமோதியபடியே துடுப்பு போட்டான்.
“போலீஸ் ட்ரைனிங்ல என்ன தான் பண்ணியோ? ஒரு துடுப்பு கூட உனக்கு போட தெரியல..” என ப்ரதீப் அவனை வாரினான்.
“உனக்கென்ன டா. நீ சும்மா தான வர்ற. நாங்க தான் கைவலிக்க துடுப்பு போடுறோம்..” என ரங்கா சொல்ல.
“அவங்க கப்பலை நாம நெருங்கிட்டோம். கொஞ்சம் அமைதியா வாங்க..” என மார்ட்டின் வலியுறுத்த அனைவரும் அமைதியாக இருந்துக் கொண்டனர்.
மெல்ல அவர்களின் கப்பலை ஒட்டியப்படியும் அவர்களின் கண்ணுக்கு சிக்காதபடியும் துடுப்பு போடுவதை நிறுத்தக் கொண்டனர்.
“இப்ப எப்படி அந்த கப்பளுக்குள்ள போறது? வழி ஏதாவது இருக்குமா?” என ரங்கா யோசித்தான்.
“அதான் நம்ம கிட்ட ஒரு இன்விசிப்பில் பவர் இருக்கே டா. அதை யூஸ் பண்ணிக்க வேண்டியது தான்.” என சிரித்த அமரன், “ப்ரதீதீதீதீப்ப்ப்ப்ப்..” என இழுத்தான்.
“நீ என்ன சொல்ல வர்றேன்னு நல்லா புரியுது டா. எல்லாத்துக்கும் என்னைய வெச்சே டெஸ்ட் பண்ணுங்க..” என்றான் ப்ரதீப்பின் காற்றினிலே.
“ரொம்ப பண்ணமா அங்க போய் அந்த கேம் எங்க இருக்கு. அந்த ஆரலி என்ன பண்ணுறா. யார் யார் இருக்காங்கன்னு பார்த்துட்டு வா டா..” என்றான் அமரன்.
“போறேன் டா. நீங்களும் அவங்க கண்ணுல படாம கேர்ஃபுல்லா மறைஞ்சு இருங்க..” என அவர்களிடம் சொன்ன ப்ரதீப் காற்றோடு காற்றாக அந்த கொள்ளைக்கார கப்பலுக்குள் நோட்டம் விடச் சென்றான்.
– சமுத்திரா வருவாள்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1
