Loading

நவி, நிவேவிடம் தனது காதலைப் பற்றி சொல்லி இருக்க .

“டேய் எனக்கு இதுல என்னடா கோபம் . அவ நல்ல பொண்ணு தான் ,சின்ன பொண்ணு சரியா.
அன்னைக்கு நம்ம இருந்ததை பார்த்துட்டு அந்த மாதிரி சொன்னா அவ்வளவுதான் .”

“திரும்பத் திரும்ப அதே சொல்லாத டி எனக்கு கோவம் வருது “என்றான்.

“அப்போ அவ்ளோ  கோவபட்டவன் தான்  ..இப்ப அவகிட்டே விழுந்துட்ட!” என்று கேலியாக சிரித்தாள்.

“லூசு எனக்கே இது புரியல ..
அவளே இப்போ வரை என் கிட்ட கேட்டுட்டு இருக்கா .”

“அப்ப ரொம்ப நாளா லவ் ட்ராக் போகுதா ?”என்றாள்.

அவன் அமைதியாக இருக்க.

“ஆனா, உண்மையா எப்படி டா இப்படி..”

“எனக்கே புரியல டி” என்றான் அவஸ்தையாக…”உண்மையா இப்ப நினைச்சா கூட மொத மொதல்ல நான் அவ கிட்ட சண்டைக்கு நின்னது தான் என் கண்ணு முன்னாடி வருது.
அப்போ நம்ம 12த் படிச்சிட்டு இருந்தோம். அவ டென்த் படிச்சிட்டு இருந்தா .

பப்ளிக் எக்ஸாம் முன்னாடி  நியூ இயர் டைம்ல 10th,12 th ஸ்டுடென்ட்ஸ ஆதம் ஸ்கூலுக்கு வர சொல்லி இருந்தாங்க . அங்க 1 வீக் நமக்கு  கோச்சிங் மாதிரி போயிட்டு இருந்தது. அந்த கோச்சிங்க்கு போயிருந்த அப்போ தான் ஒரு டைம் நீ பீரியட் டைம்ல ரொம்ப பெயினா இருக்கன்னு என் தோள்ல படுத்திருந்த..

சரின்னு கொஞ்ச நேரம் எழுந்து உட்கார வச்சிட்டு உனக்கு சமோசா வாங்கிட்டு வர போனேன். அந்த  கேப்ல அவ அவளோட ஃப்ரெண்ட்ஸ் கிட்ட வெக்கமே இல்லாம இத்தனை பேர் இருக்குற இடத்துல என்னதான் லவ்வர்ஸா இருந்தா கூட இப்படித்தான் தோளில் சாஞ்சி இருப்பாங்களா? அப்படின்னு கேட்டது இப்ப கூட என் காதுக்குள்ள கேக்குது .

அதைக்கூட நீ என்கிட்ட சொல்லாம மறைச்சுட்ட .நான் வந்ததுக்கு அப்புறம்  நீ ஒரு மாதிரி இருக்கன்னு கேட்டதுக்கு நீ எதுவுமே சொல்லல .. பிரேம் தான் என்கிட்ட சொன்னான் .இந்த மாதிரி அந்த பொண்ணு சொல்லுது டா .அவ நம்ப டியூஷன் தான்டா அப்படின்னு சொல்லி சொன்னான்.

அவ என் டியூஷன் தான் படிச்சா அப்படின்றது கூட எனக்கு தெரியாது .அதுக்கு அப்புறம் தான் அவ என் டியூஷன் என்பது கூட எனக்கு தெரியும். நான் அவ கிட்ட கேட்கிறேன் சொன்னதுக்கு கூட நீ வேண்டாம் விடுடானு சொல்லிட்ட..

சரின்னு நான் நாளைக்கு டியூஷன் போய்ட்டு  கேக்குறேன் சொன்னதுக்கு.. நீ தான் வேண்டாம் டா ஒரு பையனும் ஒரு பொண்ணும் பேசிக்கிட்டா பார்கிறவங்க எல்லாருடைய கண்ணோட்டமும் தப்பா தான் தோணும்.

எல்லாருக்குமே அவங்க லவ்வர்ஸா தான் தோணும் . இருக்க எல்லாருக்குமே அவங்க பிரண்டு அப்படி எல்லாம் தோனிடாது .

விடு அப்படின்னு நீ சொன்னது இப்போ கூட எனக்கு மைண்ட்ல வந்து போகுதுடி!” என்று மென்னகைப் புரிந்தான் .

நிவேதாவும் பழைய நினைவுகளில் மலராய் சிரித்தாள் .

“அது மட்டுமா!” என்று இருவரும் பழைய நினைவுகளில் அசைபோட்டு சிறிது நேரம் பேசிவிட்டு ,” சரி டி நீ பாரு நேரம் ஆகுது” என்று விட்டு நவி போன் வைத்து விட்டான்.

தனது வேலைகளில் கவனத்தை செலுத்திக் கொண்டே நிவி  தனது நண்பனின் காதலை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.

அவளது நினைவுகள் கிட்டத்தட்ட மூன்று ,மூன்றரை வருடங்களுக்கு முன்பு பின்னோக்கி சென்றது.

தனக்கு நவிலன்  எப்படி நண்பன் ஆனான் என்று ஆரம்பத்தில் இருந்து யோசிக்க ஆரம்பித்தாள்.

நவி, நிவி இருவரும் 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்கள் .

நிவேதா  எந்த டியூஷனும் செலவில்லை. ஆனால், நவிலன் டியூஷன் சென்று கொண்டிருக்கிறான்.

சரண்யா படிக்கும் டியுஷனில் தான்  நவிலனும் படிக்கிறான். சரண்யா நிவேதாவின் பள்ளி தோழி.. நவிலனின் டியூஷன் தோழி.. இருவரின் நட்பின் தொடக்கமும் சரண்யாவின் மூலம் ஏற்பட்டது..

நவிலன் ,சரண்யா இருவரும் ஒன்பதாம் வகுப்பில் இருந்து டியூஷன் சென்று கொண்டிருக்க .

நவிலன்,நிவேதா இருவருக்கும் அறிமுகம்  சரண்யாவின் மூலம் தான் .

சரண்யா மூலமாக தான்  நிவியின் நட்பு நவிக்கு கிடைத்தது. சரண்யாவின் தோழி தான் நிவேதா .

சரண்யா வீட்டில் கொஞ்சம் ஃப்ரீயாக இருக்க. சரண்யா வீட்டிற்கு நிவி வந்து செல்வாள் ,அவ்வப்போது நவியும் வந்து செல்வான் .

அப்பொழுதுதான் தனது டியூஷன் நண்பர்களை சரண்யா நிவேதாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்திருந்தாள்.

ஆரம்பத்தில், அவ்வப்போது பார்க்கும்போது பேசிக்கொள்வார்கள். பெரிதாக எதுவும் இல்லை .

அப்படி இருந்த நேரத்தில் தான் நவிலன் பிறந்தநாள் வந்திருக்க .

அப்பொழுது சரண்யா இது மாதிரி “நவிலனுக்கு பிறந்தநாள் வருது என்ன செய்யலாம்? என்று கேட்டிருந்தாள்.

நிவி  ஒரு சில நொடி சிந்தனையில் ஆழ்ந்தவள் . “ஷர்ட், வாட்ச் வாங்கலாம் ,வேற நம்மளால பெருசா என்ன செய்ய முடியும்?” என்று கேட்டாள் .

அவளை அதிர்ந்து திரும்பி பார்த்த சரண்யா. “நீயா டி சொல்ற?” என்று கேள்வி எழுப்பினாள்

“ஏன் அப்படி கேக்குற சரா?” என நிவி கேட்க.

“இல்ல… டி   நான்  பிரேம் ,நவிலன் ரெண்டு பேர் கிட்டயும் நட்பா பேச சொல்லி அறிமுகப்படுத்தியதிற்கு கூட  எங்க அம்மா திட்டுவாங்க நான் பசங்க கிட்ட எல்லாம் பேச மாட்டேன்னு சொன்ன இல்லையா? அதான் அதிர்ச்சி தகவல் லைட்டா ஹார்ட் அட்டாக் வர போல இருக்கு “என்று சிரிக்க..

“நக்கலு! “என மென்னகை புரிந்த நிவேதா.. மேற்கொண்டு பேசாமல் அமைதியாக இருந்தாள் .

நிவேதா சொன்னது சரியாக இருக்க.. தங்களுக்கு இருக்கும் வ பட்ஜெட்க்கும் வசதியாக  இருக்கும் என்பதால் சரி என்று அமைதியானார்கள்..

அடுத்த மூணு நாட்களில் நவிலன் பிறந்த நாள் வந்தது.

நிவேதா சொல்லியது போல் தங்களால் முடிந்த சிறிய தொகையை போட்டு நவிலனுக்கு ஒரு ஷர்ட் வாட்ச்,  கேக் ,பலூன் அனைத்தும் வாங்கி இருந்தார்கள்.

அன்று சரண்யா நிவேதாவின் அம்மாவிற்கு ஃபோன் செய்து அம்மா எனக்கு பிறந்தநாள் என்று பொய் சொல்லி  நிவேதாவை தன் வீட்டிற்கு வரவைத்து இருந்தாள்.

இவை அனைத்தையும் பிரேம்   சொல்லி சரண்யா செய்திருக்க .

சரண்யா நிவேதாவிற்கு மெசேஜில் ,”நீ வர அம்மாகிட்ட நான் பர்மிஷன் வாங்கிட்டேன் .
வரமாட்டேன்னு எந்த காரணமும் சொல்லிட்டு திரியாத!”

“லூசு நான் எப்படி டி அங்க என்னலா முடியாது ..”என்றாள்.

“ஏன் காசு மட்டும் கொடுக்க தெரியுது இல்ல, அவனுக்கு ஷர்ட் ,வாட்ச், கேக்  பலூன் வாங்கணும்னு சொல்ல தெரியுது இல்ல, மரியாதையா வர ..”என  வைத்து விட்டாள்.

நிவேதா  தனது அம்மாவிற்கு சரண்யா பிறந்த நாள் இல்லை என்று தெரிந்தால் , என்னாகும் என்ற பயத்துடனே நவிலன் பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்தாள் .

பிறந்த நாள் விழாவிற்கு தேவையான அனைத்தும் சரண்யா வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .

டீ ,பப்ஸ் என்று அனைத்தும், பப்ஸ் கடையிலும் ,பால் வங்கி டீ வீட்டிலும் போட்டு இருந்தார்கள் .

சிறிது நேரத்திற்கு பிறகு நவிலன் , பிரேம் இருவரும் வருகை தந்தார்கள்.. நவிலனின் நண்பன் பிரேம் . இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள் பிரேம் ,சரண்யா படிக்கும் டியூஷனில் படிக்கிறான்.

இருவரையும் பார்த்த நிவேதாவிற்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது .

அவளுக்கு ஆண் நட்பு புதிது .எங்கு நட்பாக ஆரம்பிப்பது ,பிறகு அது காதலாக முடிந்து விடுமோ? என்ற அச்சம்.

தனக்கும் ,தனது குடும்பத்திற்கும் இது சரி அல்ல.. என்று பலவாறு குழம்பி இருக்கிறாள்..

அதை இப்பொழுதும் யோசித்து இருவரிடம் இருந்தும் ஒதுங்கி சரண்யா மற்றும் தனது பெண் தோழிகளுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.

சரண்யா கூட,” ஏன் டி இவ்வளவையும் பிளான் பண்ணிட்டு ஒதுங்கியே நிற்கிற  .
அவங்க கிட்ட பேச வேண்டியது தானே ? நாங்கலாம் டியூஷன்ல டெய்லியுமே பாத்துக்குறோம்.
எங்களுக்கு ஒன்னும் பேசிகிறதுல பிரச்சினை இல்லை . நீ இன்னைக்கு தானே வர அவங்களை எப்பையோ ஒரு டைம்  தான பார்க்கிற பேசு !”என்றாள்.

“இல்ல வேணாம்..”  என்றாள் நிவேதா சிறு பதட்டத்துடன். இதுவரை ஆண் நட்பு இல்லாதவள்.. ஆண்களிடம் பெரிதாக பழகாதவள்.. அதுவும் தந்தை இல்லாமல் தாயின் வளர்ப்பில் ,தாயின் கண்டிப்புடன் வளர்ப்பவள் ..ஆகையாலே  பயந்தாள்..

அப்போது நவிலனாகவே வந்து நிவேதாவிடம்  ,”என்ன மேடம் என்கிட்ட  எல்லாம் பேச மாட்டீங்களா? “என்று  கேட்டான் .

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ..”என்று நிவேதா லேசாக  நகர்ந்து நின்று அவனிடம் பேச .

“உன்ன ஒன்னும் கடிச்சு சாப்பிட்டுட மாட்டோம் மா ..இத்தனை பேர் கிட்ட பேசுறோம் . அதுவும் சரண்யா வீட்ல தானே வந்து உட்கார்ந்து பேசிட்டு இருக்கோம்..அப்புறம் என்ன?” என்றான்.

“அவங்க வீட்ல இருக்கிறவங்க நம்ப மேல வச்சு இருக்கிற நம்பிக்கையை  கெடுத்திடக் கூடாது இல்ல!” என்றாள்.

அவளது கண்ணை உற்றுப் பார்த்தவன் . “எங்களை எல்லாம் பார்த்தா எப்படி தெரியுது .நாங்க இவ வீட்டுக்கு ரெண்டு மூணு வருஷமா வந்துட்டு இருக்கோம்.
நைன்த் படிக்கும்போது இருந்து எனக்கு சரண்யாவை தெரியும் “என்றான்.

“அ..அது” என தடுமாறினாள்..

அப்பொழுது சரண்யா தான்,” விடு டா! அவ இப்பதான் பசங்க கிட்ட ஒரு அளவுக்கு கிளோஸா பேசுறா டா . நான் தான் சொல்லி இருக்கேன் இல்ல, அவளை பத்தி ,நீ ஏன் அவளையே சீண்டிகிட்டு இருக்க?” என்று அவனது தோளில் தட்டினாள்.

“அது சரி !”என்று அவன் நிவேதாவை திரும்பிப் பார்த்துவிட்டு அமைதியாகி விட்டான் .

அதன் பிறகு ,கேக் வெட்டி   பிறந்த நாளை குதூகலமாக மகிழ்ச்சியுடன் கொண்டாட .

அனைவரும் சேர்ந்து ஒரு வாட்ச்சும் வாங்கி இருந்தார்கள் .
அதையும் அவனிடம் கொடுக்க.

“இதுக்கெல்லாம் இவ்வளவு காசு எங்கிருந்து வந்துச்சு உங்களுக்கு.? ஷர்ட் ,வாட்ச் ,கேக் இவ்ளோ டெக்கரேஷன் ?”என்று கேட்டான்.

அப்பொழுது சிரித்த பிரேம்,” காசு எல்லாரும் சேர்ந்து தான்டா போட்டோம் .ஆனா,ஐடியா கொடுத்தது முழுக்க முழுக்க நிவேதா தான்!” என்றான் .

நிவேதாவை திரும்பிப் பார்த்து மெல்லிய சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு, எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டான் .

“இவ்வளவு ஐடியா கொடுத்தான்னு சொல்றீங்க . ஆன,மேடம் ஒரு விஷ் கூட பண்ணல நான்  வந்ததுல இருந்து ?”என்று நாக்கை உள் கன்னத்தில் வைத்து சுழற்றி புருவம் உயர்த்தினான்  ..

மீண்டும்..”எனக்கு தான் பர்த்டே ,இந்த நிமிஷம் வரைக்கும் ஒரு விஷ் பண்ண கூட தோனல மேடமுக்கு “..

சரண்யா” விஷ் பண்ணு டி “என்றாள்.

அவனது அருகில் வந்து “ஹாப்பி பர்த்டே !”என்றாள் கடமையாக.

“இதுக்கு பேரு தான் விஷ் பன்றாதா ?”என்று கேட்டான் .

நிவி அவனது கையை குலுக்கி “ஹாப்பி பர்த்டே !”என்று சொல்ல.

“தேங்க்ஸ்!” என்றவன் அமைதியாகி விட்டான்.

பிறகு பிரேம் கேமரா வைத்திருக்க அதில் ஒரு சில  போட்டோக்கள்  எடுத்துக் கொண்டார்கள் .

அப்படியே நேரம் செல்ல. கிட்டத்தட்ட இரவு 7 மணி ஆகியது .

“நிவேதா கிளம்பு நேரம் ஆகுது உனக்கு .அம்மா வேற போன் போட்டுட்டே இருக்காங்க .பஸ் டைம் சொன்னாங்க” என்று சரண்யா சொன்னாள்.

அப்பொழுது பஸ் ஸ்டாண்டில் கொண்டு வந்து விடுவதற்கு சரண்யா உடன் வருவதாக சொன்னாள்.

“நான் வேணா கொண்டு போய் விடட்டா ?”என்று நவிலன் கேட்க .

நவிலனை அதிர்ச்சியாக பார்த்த நிவேதா..” இ..இல்ல இல்ல நான் தனியாவே போய்டுவேன் . ஒன்னும் பிரச்சனை இல்ல ” வேகமாக முந்திக்கொண்டு ,

“நீ பதறாத மா நான் என்ன உன்னை கடிச்சா தின்னுடுவேன்.
எப்போ பாத்தாலும் பயந்துகிட்டு பதறிக்கிட்டு முன்ன பின்ன பசங்க கிட்ட பேசினதே இல்லையா ?நீ ..
எல்லாருமே லவ் என்று சொல்லி தான் வந்து நிற்பானுங்களா? “என்று எரிந்து விழுந்தான் அவளது செயல் எரிச்சல் மூட்டியதால் ,

நிவேதா அதிர்ச்சியாக அவனைப் பார்த்தவள் .”சரி சரா(சரண்யா) தப்பா எடுத்துக்காத சாரி நான் வரேன் . நான் தனியாவே போய்டுவேன் “என்றாள்.

நவிலன் தான்,” நில்லுமா நான் உன்னை விட வரல . நேரம் ஆச்சு நீ இந்த தெருவுல தனியா போக வேண்டாம். சரண்யா உன்ன கொண்டு வந்து விடுவா” என்றான்.

நிவி எதுவும் பேசாமல் சரண்யாவுடன் பஸ் ஸ்டாண்ட்க்கு சென்று தங்கள் ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டாள் .

நிவி அவளுடைய ஊருக்கு செல்ல கூடிய பேருந்தில் ஏறி உட்கார்ந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க.

பஸ் எடுப்பதற்கு இன்னும் நேரம் இருந்தது. கீழே நவிலன் ,பிரேமம் இருவரும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள் .

இருவரையும் அங்கு பஸ் ஸ்டாண்டில் அதுவும் தன் பஸ்சுக்கு அருகில் பார்த்தவுடன் அவளுக்கு இன்னும் உதறல் எடுக்க ஆரம்பித்தது .

நண்பன் என்று தானே சொன்னான், என்று எதையோ எதையோ அவளது மனது கண்டமேனிக்கு யோசிக்க ஆரம்பித்தது..

தன் தலையில் தட்டிக்கொண்டு கிளம்பும்போது கூட ,இறுதியாக முன்ன பின்ன பசங்க கூட பேசினதே இல்லையா ?என்று அவன் கேட்டதை நினைவில் வைத்தவள்.

எதுவும் யோசிக்காமல் தலையை கீழே குனிந்து கொண்டு அவனைப் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தாள்.

நாம் போகும் போக்கு சரியா ?என்று மனதிற்குள் ஆயிரம் சஞ்சலங்களுடன் பேருந்தில் பயணம் செய்தாள் நிவேதா.

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்