Loading

நிவேதா  சுந்தரியிடம் பேசி விட்டு சரண்யாவுடன் அவளது வீட்டிற்கு செல்ல ..

வெளியே நவியின் பைக் நின்றது.. “போச்சு இங்க வந்துட்டான்!” என்று பிரேமும் , சரண்யாவும்  கூற…

இருவரையும் ஒரு முறை திரும்பி பார்த்தவள் .எதுவும் பேசாமல் சரண்யா வீட்டிற்குள் சென்றாள்..

இவர்கள் உள்ளே போகும் போது, அமைதியாக உட்கார்ந்து இருந்தவன்.. இவளை பார்த்தவுடன் எழுந்து வந்து,” ஒரு வார்த்தை சொன்னியா ? யாரை கேட்டு வீட்டுக்கு வந்த?” என்று ஏகத்துக்கும் எகிறினான்..

” இப்போ வீட்டுக்கு வந்தது பிரச்சனையா? இல்ல, பேசினது பிரச்சனையா ?”என்றாள் புருவம் ஏற்றி அவனை நேராக பார்த்து,

“உன்ன!” என்றவனுக்கு  கோபம் மட்டு படாமல்  வேகமாக வேறு புறம் திரும்பிக் கொண்டான்..

” உன் இடத்தில் இருந்து மட்டும் தான் யோசிப்பியோ ?” என்றாள்.

வேகமாக அவளின் புறம் திரும்பியவன்..”லூசு மாதிரி பேசாதடி! என் இடத்திலிருந்து மட்டும் நான்  யோசிக்கல.. ஆன, அதுக்காக அம்மா கிட்ட பேசாம இல்ல.. அம்மா ஒத்துக்கணும் தான் சரியா. அம்மாவோட சம்மதம் வேணும் தான். ஆனா, அவங்க எனக்காக ஒத்துக்கணும்னு நான் நினைச்சிருந்தேனா எப்பயோ இதை பண்ணி இருப்பேன். மூணு மாசமா சொல்லிட்டு தான இருக்க?

மூணு மாசமா அம்மாவை என்னால கன்வின்ஸ் பண்ண முடியாதா?  அவங்களும் மனசு வந்து ஒத்துக்கணும் .. கல்யாணத்துக்கு அப்புறம் அவ என் கூட இருக்க போற நேரத்தை விட, அம்மா கூட இருக்கப் போற நேரம் தான் அதிகமாக இருக்கும். எனக்காக அம்மா சம்மதிக்க செஞ்சாங்கனா அது இன்னைக்கு இல்ல ஆயசுக்கும் அவளுக்கு மட்டும் இல்லை, எனக்கும் உறுத்தும்..

அம்மாவுக்கும் கஷ்டமா போயிடும். மூணு பேருக்குமே கஷ்டத்தை கொடுக்கிற ஒரு விஷயத்தை செய்ய விரும்பல..”

” சரி டா.. அம்மா அவ கிட்ட நிறைய பேசி இருக்காங்களோ ? இல்ல இனி பேசி பழகப் போறாங்களா ?”

“உனக்கு நான் சொல்றது புரியுதா ?இல்லையா?”

” புரியாமல் கிடையாது .சொன்னாலும் சொல்லாட்டியும் அவ அம்மா கூட இருக்கிற நேரம் அதிகம் தான். அம்மா கிட்ட எப்படி பேசணுமோ ,நீ தான் பேசணும் சரியா? அம்மா முக்கியம் என்ற அதே அளவுக்கு தான் அவளும் முக்கியம் . நேரம் தாழ்த்தாமல் என்ன செய்யலாம்னு யோசி..அவ்ளோ தான்..!”

“இப்போ சொல்றது ஒன்னே ஒன்னு தான் .அம்மா அவளுக்காக அவளை ஒத்துக்கணும் .எனக்காக கிடையாது ..பார்த்திருக்காங்க , பேசியிருக்காங்க தான் இதுக்கு முன்ன ரெண்டு பேரும்..நான் விரும்புறேனு ஒரே காரணத்துக்காக சரின்னு சொல்லிட்டா .

அதுக்கு பின்னாடி நிறைய பிரச்சனைகள் வரும். அதனால நிறைய உறுத்தல்கள் வரும் .எங்களுக்குள்ள மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வரவே சான்ஸ் இருக்கு. அவ தான் வேணும்னு நான் பிடிவாதமா அம்மா முன்னாடி நிக்கிறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது.. அதுக்கு அம்மாவும் சரின்னு சொல்றதுக்கோ ரொம்ப நேரம் ஆயிடாது.. ஆன, அவங்க மனசு வந்து அவளை  தன்னோட மருமகளா  ஏத்துக்கணும்..

என் கல்யாணத்துல எனக்காக அவங்க சம்மதம் சொல்லி இருப்பாங்களே தவிர, விருப்பப்பட்டு கல்யாண வேலை எதையும் செஞ்சிட  மாட்டாங்க .. அப்படி அம்மா செய்யனும்னு நாங்க விருப்பப்படலடி அவ்ளோதான்!”

“சரி இப்ப எல்லாம் முடிஞ்சிடுச்சா? எதையோ பண்ணிக்கோ ..”என்று வேறு பக்கம் திரும்பி நின்றாள் .

“தம்பி எப்படி இருக்கான் ?”.

“இப்போ கொஞ்சம் பரவாயில்லை”

“சரியான தூக்கம் இல்லையோ ?கண்ணு உள்ள போய் டொங்கு விழுந்து கிடக்க ?” என்றான் ..

அமைதியாக அவன் கண்ணை தான் உற்று நோக்கினாள்.

” என்ன?”  என்றான்..

” இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை .அடுத்தவங்கள பத்தி யோசிக்கிற அளவுக்கு, தன்ன பத்தியும் யோசிக்கணும்.. தன்னோட வாழ்க்கைக்காகவும் யோசிக்கணும்!”

எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்..

“சரி நேரமாவது நான் கிளம்புறேன்..  பசங்கள வீட்ல விட்டுட்டு வந்து இருக்கேன்.”

மீண்டும்,”உன்னை யாரு இப்ப வர சொன்ன?” என்றான்.

” டேய் திரும்பத் திரும்ப வா?” என்றான் பிரேம் …

“உன்னை கொல்லனும்  முதல்ல.. அவ சொன்னா உனக்கு எங்கடா போச்சு புத்தி?”

“நான்தான் கூட்டிட்டு போக சொன்னேன்..அவன் கிட்ட சத்தம் போடாதே!”

“சரி நீ கிளம்பு நேரம் ஆகுது பாரு! நேரம் கிடைக்கும் போது தூங்கு..” என்றவன் “இரு..” என்று தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து டைரி மில்க் சாக்லேட் ,கிட்கேட் சாக்லேட் எடுத்து நீட்டினான்…

“இம்புட்டு அவசரத்திலும் வாங்கிட்டு வந்தாயாடா?” என்று பிரேம் அவன் காலை வார..

” இல்ல இப்ப வரும் போது வாங்கிட்டு வந்தேன்..”என்று முத்துப்பற்கள் தெரிய புன்னகைத்தான்.

“ஒன்னுக்கு ரெண்டு பிள்ளை பெத்து வச்சிருக்கா எருமை மாடு கனக்கா ..இன்னும் இவளுக்கு சாக்லேட்டா?” என்று சரண்யா முனக .

மற்ற  மூவரும் சிரித்து விட்டார்கள்.

” உனக்கு குடுக்கலன்னு பீல் பண்றியோ ? வேணா ஒன்னு எடுத்துக்கோ..”

“எனக்கு ஒன்னும் வேணாம். எனக்கு வேணும்னா கேட்டு வாங்கிக்க எனக்கு தெரியும்!” என்று முகத்தைத் திருப்பிக் கொள்ள ..

சிரித்தப்படியே மூவரிடமும்  சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள் நிவேதா.

அன்று இரவு சாப்பிடும் வேளையில் சுந்தரி நவியிடம் பேசினார். “நம்ப அவங்க வீட்டுக்கு போய் பேசலாம் நவிலா.. நாளைக்கு நாள் நல்லா தான் இருக்கு. நானும் பாத்துட்டேன்..”

அமைதியாக தன் தாயைப் பார்த்தான்.

” உனக்காகனு ஒரு பக்கம் இருந்தாலும், எனக்கும் சம்மதம் தாண்டா..நீ இம்புட்டு நாளா காத்துட்டு இருந்தது என்னோட முழு சம்மதத்துக்காக தானு எனக்கும் தெரியும். அதக் கூட புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு உன் அம்மா இல்ல.. ஆனா, என்ன இவ்வளவு நாளா நிறைய யோசிச்சேன். பின்னாடி எந்த இடத்திலும் அது உனக்கு மனசு வருத்தத்தை கொடுத்திடக் கூடாது. அந்த வீட்டுக்கு போக வர இருக்கனும் ,பொண்ணு எடுக்கறோம் என்ற பட்சத்தில்.. ஏதாவது பேசிட்டாங்கன்னா கஷ்டமாகிடும்.

எனக்கும் கஷ்டம், உனக்கும் கஷ்டம் .என்ன பேசிட்டா உன்னால தாங்க முடியாது ,உன்ன பேசிட்டா என்னால தாங்க முடியாது என்று யோசித்தேன். அந்த புள்ள வந்து அவ்ளோ பேசிய பிறகு, நானும் நிறைய யோசிச்சேன்..”

“அம்மா உனக்கு வனிதாவை..”  என்றவன் அமைதியாக ..

” எனக்கு அந்த புள்ளையை என் மருமகளா கொண்டுட்டு வர விருப்பப்பட்டதுக்கு அப்புறம் தான் டா இப்போ உன் கிட்ட பேசுறேன். நிவேதா பேசிட்டு போனதுக்கு அப்புறம் மதியத்தில் இருந்து யோசிச்சுட்டு தான் இருக்கேன். நவி நம்ப அவங்க வீட்டுல பொய் பேசலாம் ..”என்றார்.

அவரும் பலவாறு மதியத்தில் இருந்து யோசிக்க தான் செய்தார். தன் மகனுக்காக என்று சம்மதம் கூறிவிட்டால், ஒரு வேலை அவள் ஆடம்பரத்தையோ இல்லை, ஏதோ ஒரு சண்டையில் எதுவும் சொல்லி விடக்கூடாது அல்லவா? வார்த்தையை விட்டால் தவறாகிவிடும் ..வார்த்தையை கொட்டி விட்டால் அல்ல முடியாது என்று யோசித்தார். இவனை விரும்புவதற்கு முன்பில் இருந்தே அவளை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் .அவங்க அம்மாவும் நன்றாக பேசக்கூடியவர் தான் .என்ன பணம் வசதி வாய்ப்பை பார்க்கக் கூடியவர். மற்றபடி பிள்ளைகளாகட்டும் அந்த அண்ணனாகட்டும் (சங்கர் ஆகட்டும்) அனைவரிடமும் நல்ல முறையில் பேசக்கூடியவர்கள்தான் ..

பழகக் கூடியவர்கள் தான். பணம் காசு பற்றி யோசிப்பவர்கள் அல்ல..  கோமதியும் பேசுவதற்கு எதையும் பார்க்க மாட்டார்.. ஆனால், மற்ற விடயங்களுக்கு வசதி வாய்ப்பைப் பார்க்கக் கூடியவர் .மற்றப்படி அவரும் நல்லவர்தான். அது மட்டும் இல்லாமல், வனிதா விடம் பெரிதாக பேசி பழக்கம் இல்லை என்றாலும், அவ்வப்போது ஒரு சில வார்த்தைகள் பேசி இருக்கிறார்.

எங்காவது பார்க்கும்போது, அதை வைத்து  யோசித்துப் பார்த்தால் நல்லவள் தான்..அதைத் தாண்டி தனிப்பட்ட முறையில் அவளை அங்கும் இங்கும் பார்க்கும்போது மற்றவர்களிடம் பேசும் பொழுது அனைத்தையும் வைத்து யோசித்தவர். தன் மகனுக்கும் சரியாக தான் வருவாள். தன் வீட்டிற்கும் சரியாக தான் வருவாள்.. என்று யோசித்து தான் தன் மகனிடம் இப்பொழுது சம்மதம் கூறினார்..

” நாளைக்கு போய் பேசலாம் “என்று ..

மீண்டும் ஒருமுறை தன் தாயிடம் உறுதி செய்து கொண்டு,” சரி மா” என்றான்..

“நிவேதாவுக்கு போன் போட்டு தாடா!” என்றார்.

” மணி என்ன இந்த நேரத்துல ?”என்றான் .

“இருக்கட்டும்..”

” வேணாம் விடு .இப்ப என்ன அவசரம் .நாளைக்கு கூட சொல்லிப்ப..”

” இல்லடா உனக்காக தான் இவ்வளவு தூரம் வந்து பேசுச்சு..”

“இல்லம்மா இப்போ வேணாம்.. “

“சரி நீ நம்பர் கொடு என் போன்ல இருந்து பேசுறேன்.”

அவரது ஃபோனில் இருந்து அழைத்தார். மணி இரவு 8:30 தொட்டிருந்தது.. போன் அடிக்கவும் எடுத்து ,”சொல்லுங்கம்மா?”  என்றாள்.

“நான் சுந்தரி பேசுறேன் நிவேதா” என்று கூற ..

சிரித்தபடி ,”உங்க நம்பர் என்கிட்ட இருக்குமா. சொல்லுங்க”

” நாளைக்கு போயிட்டு பேசலாம்னு இருக்கேன் ..”என்றார்.

“உங்க முழு சம்மத்தோடு தானே..” என்று கேட்டாள் சந்தோஷமாக மனமகிழ்ச்சியுடன்..

“ஆமாம் ..”என்கவும்..

“சரிமா போயிட்டு பேசிட்டு வாங்க”

“சரி மா நீ பாரு..பிள்ளைகளை பாரு.. சாப்டியா ?”என்று கேட்டவர் ஒரு இரு வார்த்தைகள் பேசிவிட்டு வைத்து விட்டார் .

அவளும் நவியைப்  பற்றி கேட்கவில்லை.. இவரும் கூறவில்லை..

சுந்தரி போன் செய்வதற்கு முன்பாகவே ,மாலை 6 மணிக்கு மேல் பிரேமுக்கு அழைத்து இருந்தாள் நிவேதா.

“சொல்லு நிவேதா?” என்று கேட்க.

” நாளைக்கு காலையில எப்படியும் நவியும் ,அம்மாவும் வனிதா வீட்டுக்கு போவாங்கன்னு நினைக்கிறேன்.. அதனால நீ வனிதாவோட அண்ணன் கிட்ட மட்டும் கொஞ்சம் பேசுறியா ?”

” என்ன நிவே சொல்ற ? இன்னும் அத்தை(சுந்தரி)  பதில் சொல்லலையே..”

“அவங்க ஒத்துப்பாங்க பிரேம். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.”

” அவங்க சம்மதம் சொல்லாம.. எப்படி நீ முடிவு பண்ற?”

“ஒத்துப்பாங்க  டா..வேணும்னா உனக்கு நைட் குள்ள நான் கன்ஃபார்ம் பண்ணி கூட சொல்றேன்..ஆன வனி அண்ணன் கிட்ட மட்டும் பேசு ,அவங்க வரும்போது வனிதா அப்பாவும், அண்ணனும் வீட்ல இருக்க போல.. ஏன்னா அவங்க அண்ணி ஏதாவது பேசுவாங்க .அவங்க அம்மாவும் ஏதாவது பேசிட கூடாது இல்லையா? மற்றபடி ஓரளவுக்கு அதை அவனே பார்த்துப்பான்.. ஆனா அம்மாவை ஏதாவது சொல்லிட்டா .கொஞ்சம் கஷ்டம்.  நீயும் கூட போ ஏதாவது பேசிட போறாங்க பாத்துக்கோ..  அதே மாதிரி அவ அப்பாவும் , அண்ணனும் வீட்ல இருக்க மாதிரி ஏதாவது பண்ணு.. அவர்கிட்ட பேசு”

” லூசு மாதிரி பேசுறியே.. அதுக்கு முதல்ல அந்த அண்ணன் ஒத்துக்கணும்ல?”

“எனக்கு தெரிஞ்ச அந்த அண்ணன் ஒத்துப் பாருன்ற நம்பிக்கை இருக்கு. அவளுக்காக  ஒத்துப்பாரு. அவரோட தங்கச்சிக்காக ,அடுத்தபடி நவி மேல  அவருக்கு நம்பிக்கை வந்து இருக்கும். அதனால ஒத்துப்பாங்கன்னு எனக்கு தோணுது.. நீ பேசி பாரு என்ன சொல்றாருன்னு..”

” ஃபர்ஸ்ட் இங்க அத்தை ஒத்துப்பாங்களா  ?”

“ஒத்துப்பாங்க நீ பேசு!” என்று கூறியிருந்தாள்.

இரவு சுந்தரி வைத்த பிறகு அவனுக்கு ஒரு வாய்ஸ் நோட் மட்டும் போட்டு இருந்தாள்.

“அம்மா நாளைக்கு காலையில போறேன்னு சொல்லி இருக்காங்க. காலையில ஏழு மணிக்கு மேல கிளம்புறாங்களாம்.. நீயும் அவங்க கூட போ.. இப்ப இன்பார்ம் பண்ணிடு வனிதா அண்ணனுக்கு..”என்று ,

“சரி வருமா?”

” அதெல்லாம் வரும்.. நீ குறுக்கால எதுவும் குட்டையை குழப்பாமல் இருடா ..”என்று பொரிந்தாள்..

சரி என்று பிரேம் அவள் கூறியது போலே சுந்தருக்கு அழைத்திருந்தான்..

சுந்தர் போன் எடுத்தவுடன் “அண்ணா வீட்லயா இருக்கீங்க?”

” இல்லடா இனிமேதான் கிளம்ப போறேன். சொல்லு ?”என்று கேட்க.

அவனும் மேலோட்டமாக ,”நாளைக்கு நவியும் ,அத்தையும் வீட்டுக்கு வர்றதா சொல்லி இருக்காங்க “என்றான்..

  சுந்தரிடம்  அமைதி…

“அண்ணா லைன்ல  இருக்கீங்களா?”

“இருக்கேன் சொல்லுடா..”

” இ..இல்ல அவங்க வந்து பேசுற நேரத்துல நீங்களும், அப்பாவும்  வீட்டுல இருக்கீங்களா?” என்றான் தயக்கமாக..

“வர சொல்லுடா பாத்துக்கலாம் ..”என்றான் சுந்தர் மொட்டையாக…

அவனுக்கும் தன் தங்கையை நவிலனனுக்கு கட்டி வைப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால், வந்து பேசிய பிறகுதான் எதையும் செய்ய முடியும் என்பதால், வர சொல்லு என்று மட்டும் கூறினான்..

” அண்ணா உங்களுக்கு சம்மதமா?” என்று பிரேம் கேட்டதற்கு கூட…

” இப்போதைக்கு என்னால எதும் சொல்ல முடியாது பிரேம். வீட்டுக்கு வரட்டும் ,பேசட்டும்.. அதுக்கப்புறம் முடிவு பண்ணலாம் .ஆனா, அவங்க வீட்டுக்கு வரும்போது நானும் , அப்பாவும் வீட்டில் இருப்போம்… நீ வர சொல்லு பேசிக்கலாம்..”என்றவன் வைத்து விட்டான்..

இங்கே பிரேமுக்கு தான் கை கால் உதறியது ..வீட்டிற்கு சென்றால் ஏதாவது பேசி விடுவார்களோ ?என்று அஞ்சினான். அதுவும் சுகந்தியையும், கோமதியையும் நினைத்து  ரொம்பவே பயந்தான்.. நாளை என்ன நடக்குமோ என்று..

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்