Loading

நிவேதா ,மீண்டும் இப்படியே இருந்தால் ஆபத்து என்று எண்ணியவள் ..தண்ணீர் ஊறுவதற்கு என்னென்ன செய்யணும் என்று மருத்துவரிடமே கேட்டாள் .

ஜூஸ் வகைகள் ,தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். பீட்ரூட் ,கேரட் ,நெல்லிக்காய் ஜூஸ் குடிக்குமாறு கூறினார் ..

காலை, மாலை என இருவேளையும் இரண்டு  நாட்கள் குடித்தவள்..அதன் பிறகு  மதிய நேரத்திலும் போட்டு குடிக்க ஆரம்பித்தாள்.. இப்பொழுது தனக்கு இருக்கும் ஒரே துணை தன் குழந்தை தான் என்று எண்ணி, குழந்தைக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் பார்க்க ஆரம்பித்து இருந்தாள்..

எட்டாவது மாதம் தொடங்கிய உடனே முதல் குழந்தை சன்விகாவை கவிதா தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்று விட்டார் .. வசந்த் தன் மனைவியை  டாக்டர் கொடுத்த தேதிக்கு பத்து நாட்களுக்கு முன்பு அனுப்பி வைப்பதாக  கூறி விட்டான்.

நிவேதாவுக்கும் கணவனை விட்டுவிட்டு தாய் வீட்டுக்கு செல்ல விருப்பமில்லை.. ஆகையால் சன்விகாவை  மட்டும் தாயுடன் அனுப்பி வைத்துவிட்டு, அவள் இங்கவே இருந்து கொண்டாள்.

குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே அவளுக்கு பனிக்குடம் உடைந்து நீர் வெளியேறிய வாரு இருக்க… வேகமாக மருத்துமனைக்கு கிளம்பினாள்..

மூன்று மணி அளவில் பனிக்குடம் உடைந்திருக்க. பனிக்குடம் உடைவது எப்படி என்று யாரும் கூறாததால் ,நிற்காமல் பாத்ரூம் வந்து கொண்டே இருக்கிறது என்று எண்ணியவள் ..என்ன செய்வது தூங்குப்பவரை எழுப்ப வேண்டுமா?  இதற்காக என்று அமைதியாக இருந்து விட்டாள்..

காலை 3 மணி அளவில் ரத்த குறிப்படவே மருத்துவமனை சென்றார்கள்..

அங்கு சென்று காலை 7 மணி போல ஆண் மகவை பெற்றெடுத்தாள்.

அன்று வசந்தா கூறினார் என்று வசந்த் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யவில்லையா ? என்று நிவேதா விடம் வாதம் செய்ய.. மருத்துவரோ அவளுக்கு இருமல் அதிகமாக இருப்பதால், ஆபரேஷன் செய்ய முடியாது. தையல் பிரிந்து விடும் என்று கூறிவிட்டார்..

மனைவியிடம் தான் கோபம் கொண்டவன் முகத்தை திருப்பினான்..

குழந்தை பிறந்தது பத்தி சந்தோஷப்படல பெருசா.. ஆப்பரேஷன் பண்ணலன்றது தான் கண்ணுக்கு தெரியுது என்று மனதிற்குள் நினைத்து வருந்தியவள். அதை வெளியே தன் தாய் இருக்கும்பொழுது அவனிடம் கேட்டிட முடியாமல் எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டாள் ..

ஆனால், கவிதா தான் பொரிந்து தள்ளினார். குழந்தை பிறந்த பச்சை உடம்புக்காரியை பற்றி கேட்கவில்லை. குழந்தையை பற்றி கேட்கவில்லை. ஆனால் ஆபரேஷன் செய்யவில்லை என்பதுதான் பெரிதாக கண்ணுக்கு தெரிகிறதா ?என்று எண்ணியவர் அவரும் ஓரிரு வார்த்தை புலம்பியவர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் பேரபிள்ளையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார் .

குழந்தை பிறந்த மறுநாளில் சுகப்பிரசவம் என்பதால் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள் ..

தினமும் வந்து பார்த்து சென்றான் வசந்த்.. இப்படி இருக்கும் பொழுது குழந்தை பிறந்த ஆறாவது நாளில் இரவு மருந்து போட்டு இருக்க.. அப்பொழுது பால் குடித்த சிறிது நேரத்திலே குழந்தை பச்சை கலரில் வாந்தி எடுக்க ஆரம்பித்தது..

மருந்து கொடுத்தது ஒத்துக்கொள்ளாமல் அப்படியே வருகிறது என்று எண்ணியவள் அமைதியாகி விட்டாள் ..

மறுநாள் காலையும் அதேபோல் பச்சை கலரில் வாந்தி எடுக்க.. அவளுக்கு பயம் வந்துவிட்டது. ஒன்றும் புரியவில்லை. உடனே வசந்திற்கு அழைத்து விவரத்தை கூற..

சரி என்று அவன் குழந்தை மருத்துவரிடம் செல்லலாம் என்று எண்ணி குழந்தை மருத்துவரிடம் சென்றார்கள்.. உடன் கவிதாவும்..

அங்கு சென்று பால் கொடுத்த சிறிது நேரத்தில் குழந்தை அதே போல மீண்டும் பச்சை கலரில் வாந்தி எடுக்க.. குழந்தையை பரிசோதித்தவர் குழந்தைக்கு ஆபரேஷன் செய்யணும் என்றார்…
இருவருக்கும் அப்படி ஒரு அதிர்ச்சி ஒன்றும் புரியவில்லை.. ஏன் என்று எதுவும் விளங்கவில்லை..

” என்ன ஆச்சு குழந்தைக்கு ?எதனால்  ஆப்ரேஷன் செய்யணும்” என்று கவிதா தான் விளக்கம் கேட்க ..

குழந்தைக்கு மால் ரொட்டேஷன் ஆப்ரேஷன் செய்ய வேண்டும்… குடல் சரியான சிரான ஓட்டத்தை பெறாததால் ,சரியான இடத்தில் அமையாததால் இப்படி உணவு உட்கொள்வது உள்ளே செல்லாமல் வெளியே வாந்தியாக அப்படியே வந்து கொண்டிருக்கிறது .. செரிமானம் ஆகாது.. குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுதே இப்பிரச்சினை ஏற்பட்டு இருக்கும். பிறந்த குழந்தையிலே ஆரம்பத்திலே தெரிவது நல்லதும் கூட என்றார்..

(மால்ட் ரொட்டேஷன் (Malrotation) என்பது குழந்தை கருவில் வளரும்போது குடல் சரியான முறையில் சுழன்று தன் இயல்பான இடத்தில் நிலைபெறாமல் இருப்பது.

சாதாரணமாக, கருவில் இருக்கும் போது குடல் ஒரு குறிப்பிட்ட முறையில் சுழன்று வயிற்றுக்குள் சரியான இடத்தில் அமைவது தான் இயல்பு. ஆனால் மால்ட் ரொட்டேஷன் இருந்தால் அந்த சுழற்சி முழுமையாக நடக்காது அல்லது தவறாக நடக்கும்.

இதனால் உடல் ரீதியாக பெரிய பிரச்சனை என்னவென்றால் குடல் சிக்கி போகும் வாய்ப்பு அதிகமாகும். குறிப்பாக குடல் தானே தன்னை சுற்றி சுருண்டு இரத்த ஓட்டத்தை நிறுத்திவிடும் நிலை ஏற்படலாம். இதை மருத்துவத்தில் மிகவும் அவசரமான நிலையாக கருதுவார்கள்.

இதனால் குழந்தைக்கு திடீரென பச்சை நிற வாந்தி, வயிற்று வீக்கம், கடுமையான அழுகை, உணவு எடுக்க முடியாமை போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
இந்த நிலை சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் குடலுக்கு இரத்த ஓட்டம் நிற்கும் அபாயம் இருக்கும்.

அதனால் உடனடி அறுவை சிகிச்சை செய்து குடலை சரியான நிலையில் வைத்து உயிருக்கு ஆபத்து வராமல் பாதுகாப்பார்கள். அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெரும்பாலும் குழந்தைகள் நல்ல முறையில் மீண்டு சாதாரண வாழ்க்கை நடத்த முடியும்.) என்று விரிவாக புரியும் படியாக கூறினார்..

செரிமான குடல் மாற்றி செட்டாகி இருப்பது .. குடலின் சுழற்சித்தன்மை நிற்பது.. ஆகையால் அதை சீக்கிரம் சரி செய்ய வேண்டும் ..ஆகையால் தான் இப்படி  பச்சை கலரில் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறது குழந்தை..

உணவு செரிமானமாகாமல் பால் குடிப்பது சேராமல் என்று கூறியிருந்தார் ..அவர்கள் கூறியதை முழுமையாக நம்ப முடியாமல், அவர்கள் ஊரிலே இருக்கும் இன்னும் மூன்று ,நான்கு குழந்தை மருத்துவர்களை அணுகி விவரம் கேட்க ..

அவர்களும் அவ்வாறே கூறினார்கள்.. ஒன்றும் புரியாமல் நின்று கொண்டு இருந்தார்கள். அப்போது நிவேதா தான்  ,”சரி டாக்டர் ஆப்ரேஷன் பண்ணலாம்
.” என்று கூறினாள்.

“இங்கே எல்லாம் அதற்கு வசதி இல்லை.. சேலம் தான் செல்ல வேண்டும்..அங்கு தான்  பிறந்த குழந்தைக்கு ஆபரேஷன் செய்வார்கள். அதற்கென்று தனிப்பட்ட மருத்துவர்கள் இருக்கிறார்கள்.. பிறந்து ஒரு வருட குழந்தைகளுக்கு மருத்துவம் பார்ப்பவர்கள்..  அவர்களிடம்  தான் சென்று ஆபரேஷன் செய்ய வேண்டும்.. நான் என்ன டீடெயில் என்று சொல்றேன்.. அங்க போயிட்டு போன் பண்ணுங்க ..நான் அவர்கிட்டயும் பேசுகிறேன்.. அவருக்கு ஒரு லெட்டரும் எழுதி தருகிறேன்.. மருத்துவமனை பெயர் ,விலாசம் தருகிறேன் என்று கூறி, விலாசம் அனைத்தையும் எழுதிக் கொடுத்துவிட்டு , இங்கிருந்து அந்த மருத்துவரிடம் போன் செய்து விஷயத்தையும் கூறியிருந்தார்.. சீக்கிரம் அவர்களை கிளம்பி வர சொல்லுங்கள் என்று எதிரில் இருந்த மருத்துவர் கூறினார்..

  கையில் கொஞ்சம் பணமும் எடுத்துக்கொண்டு…. கார் வரவைத்து  வேகமாக சேலம் சென்றார்கள். அங்கு சென்று மருத்துவரிடம் பேச…

குழந்தைக்கு மால் ரொட்டேஷன் ஆகையால் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும்.. சீக்கிரம் செய்து விடுவது நல்லது ஆரம்பத்திலே தெரிந்தவரை நல்லதும் கூட.. அப்பொழுதுதான் குடல் சீராக இருக்கும்.. செரிமானம் சீக்கிரமாக ஆகும். பின்னாடி பெரிதாக பிரச்சனையாகாமல் இருக்கும்.. இது அதிகமாக வயிற்றில் இருக்கும் போதே ஏற்படும் பிரச்சனைகள்.. பிறந்த குழந்தைகளுக்கு தான் அதிகமாக இருக்கும் என்று கூறினார்.

  எது  சாப்பிட கொடுத்தாலும், உள்ளே சென்ற உடனே வாந்தி வந்து கொண்டே இருக்கும்  சரியான இடத்தில் குடலை  செட் செய்து சிகிச்சை செய்து விட்டாள் சீக்கிரமே குணமாகிவிடும்..  என்று கூறினார் சேலம் மருத்துவர்..

வசந்த் ஒன்றும் புரியாமல் அழுகையில் கரைந்தான். தன் கண்ணீரை துடைத்த நிவேதா தான் திடமாக மருத்துவரிடம் இன்னும் விவரங்கள் சில கேட்டு தெரிந்து கொண்டு செய்து விடலாம் என்று கூறி விட..

அதன் பிறகு, அன்று இரவே குழந்தைக்கு ஆபரேஷன் செய்யும்படியாக ஆகியது. குழந்தை பிறந்து ஆறு நாட்கள் தான் ஆகிறது. நீண்ட நேரம் பயணம் ,அலைச்சல் குழந்தையின் உடல்நிலை என்று சோர்வாக காணப்பட்டாள் நிவேதா..

ஆபரேஷன் முடிந்து குழந்தை தொப்புள் கொடி நீக்கப்பட்டது..

குழந்தையை ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே கொண்டு வரும் பொழுது , வெளியில் குழந்தையை காண நின்றுக் கொண்டிருக்கும் போது, குழந்தையைப் பார்த்தவள் தொப்புள்கொடி இல்லாமல் இருக்கவும் செவிலியிடம் கேட்டாள்…

அவரோ,ஆபரேஷன் செய்யும்போது நீக்கிவிட்டார்கள் என்று கூறினார்..

எங்கு எடுத்து வைத்திருக்கிறீர்களா ?என்று கேட்டதற்கு, குப்பையில் (டெஸ்பினில் )போட்டு விட்டதாக கூறிவிட ..

அவளுக்கு இன்னும் வலி உண்டாகியது..

“போனா போகட்டும் போடி.
என் புள்ள உசுரோட கிடைச்சதே  எனக்கு போதும்!” என்று அழுதான்..

அதன் பிறகு அவர்களிடம் குழந்தையை காண்பிக்கவில்லை.. இன்ஃபெக்சன் ஆகிவிடும் என்று கூறிவிட்டார்கள்.. பாலும் இப்போதைக்கு கொடுக்கக் கூடாது என்று கூறி.. பச்சிளம் குழந்தை என்பதால் Neonatal Intensive Care Unit  (NICU ) வில் வைத்திருந்தார்கள்..

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு சிறப்பு தீவிர சிகிச்சை அளிக்கும் பிரிவு. (NICU)

மால்ட் ரொட்டேஷன் அறுவை சிகிச்சைக்கு பிறகு, குழந்தை சில நாட்கள் மருத்துவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் குழந்தைக்கு வாய் மூலம் உணவு கொடுக்காமல், உடலுக்கு தேவையான திரவங்கள் மட்டும் வழங்கினர். குடல் செயல்பாடு மெதுவாக சீராக ஆரம்பித்த பிறகு, சிறிய அளவில் தாயமுது கொடுத்து பார்த்தார்கள்.

குழந்தை அதை ஏற்றுக்கொண்டு வாந்தி எதுவும் இல்லாமல் அமைதியாக இருந்தது.. அதற்குப் பிறகு ,தாயிடம் பாலை பீசி எடுத்து கொடுக்கச் சொல்லினர். குழந்தை நன்றாக செரித்துக் கொண்டதை உறுதி செய்த பின், மெதுவாக தாயமுது அளவு அதிகரிக்கப்பட்டது.

மூன்று நாட்கள் குழந்தைக்கு தாயின் தாயமுது கொடுக்காமல் ஆரம்பத்தில் பஞ்சில் என் எஸ் (NS) பஞ்சின் மூலம் நார்மல் சாலைன் (NS) தொட்டு ஈரப்பதம் மற்றும் அடிப்படை திரவ ஆதரவு வழங்கப்பட்டது. குழந்தை அழுகை அதிகரித்த சமயங்களில் மாற்று உணவாக பவுடர் பால் வழங்கப்பட்டது.

பின்னர் தாய்ப்பாலை சிறிய அளவில் வழங்கி குழந்தையின் உடல் ஏற்றுக்கொள்ளும் தன்மை பரிசோதிக்கப்பட்டது. வாந்தி அல்லது செரிமான பிரச்சனை இல்லாததை உறுதி செய்யப்பட்ட பின், தாயிடம் பாலை பீசி (breast milk expression) எடுத்து குழந்தைக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து குழந்தையின் செரிமானம் மற்றும் உடல் நிலை கண்காணிக்கப்பட்டது.

ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் குழந்தைக்கு இவள் நேரடியாக பால் கொடுக்கும் படியாக செய்தார்கள்.. அதன் பிறகும் குழந்தைக்கு வாந்தி வரமால், செரிமானம் சரியாக இருக்கிறதா என்று கண்கானித்தார்கள்..

பால் குடிக்கும் பொழுது குழந்தை மூச்சு திணறவில்லை என்று உறுதி செய்த பிறகு (NICU )வில் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டது ..

மேலும் இரண்டு நாட்கள் அங்கு இருந்து அனைத்தையும் சரி செய்து கொண்டு , ஒரு மாத காலத்திற்குப் பிறகு ஒரு முறை வந்து குழந்தையின் உடல் நலத்தை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்  என்று கூறி மருத்துவர்  வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்