
வசந்த் தாயுடனே படுக்க ஆரம்பித்து இருந்தான் அதன் பிறகு ..இங்கே நிவேதா முதல் நாள் தாய் இருந்ததால் சமாளித்துக் கொண்டாள்…
அடுத்தடுத்த நாட்களிலும் அதுவே தொடர ..அவளுக்கு சிறிது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் கணவனை இழந்து நிற்பவருக்கு துணையாக தன் கணவன் இருப்பதை எண்ணி அமைதியாகி விட்டாள்.
காரியம் முடியும் வரை மாமியார் வீட்டில் ஒன்றாக சமையல் செய்து மாமனாருக்கு படையல் போட வேண்டிய சூழ்நிலை.
காரியம் முடிவதற்குள் இளவரசி செய்த கூத்தை சொல்லி மாளாது. “இந்த வீட்டுக்கு நான் மட்டும் தான் மருமகளா? நான் மட்டும்தான் அனைத்து வேலையையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்ய வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி இருந்தாள்.
காரியம் முடியும் வரை அனைவரும் வசந்தா இருக்கும் வீட்டிலேயே சமைச்சு சாப்பிடும் படியாக சுற்றியுள்ளவர்கள் கூறியிருந்தார்கள் .. வசந்தா துடைப்பம் எடுக்கக் கூடாது, எந்த வேலையும் செய்யக்கூடாது, அருவாள் மனை தொடக்கூடாது என்று கூறியிருந்தார்கள்..
ஆகையால் சமையல் வீட்டு வேலைகள் என அனைத்தையும் இரு மகள்களும் செய்யும்படியாக இருந்தது ..
உங்க சின்ன மருமகளுக்கு ஒழுங்கா சமைக்க தெரியுமோ தெரியாதோ.. அதெல்லாம் என் புருஷனுக்கு சாப்பிட பிடிக்காது.. என்று கூறி , காய்கறி மட்டும் நறுக்கி தர சொல்லுங்க நானே சமைச்சுக்கிறேன் என்று கூறியிருந்தாள்.
தன் கணவனுக்காகவும் , இறந்த வீட்டில் பிரச்சனை வேண்டாம் என்று எண்ணியும் அமைதியாக இருந்தாள் ..ஏற்கனவே அவள் இரண்டாவது குழந்தை கருவற்றிலிருந்து தண்ணீர் தன் வீட்டிலேயே எடுக்காமல் இருக்க..
தண்ணி குடம் கூட எடுத்து வைக்க மாட்டீங்களா மேடம்? எல்லா வேலையும் நானே தான் செய்யணுமா? என்று சத்தம் போட்டு இருந்தாள்..
வீடு ,வாசல் தினமும் ஒருவர் பெருக்க வேண்டும் என்று பிரித்து வைத்திருந்தார்கள். ஏற்கனவே மாசமாக இருந்ததிலேயே உடம்பு வீக்காகத்தான் இருந்தாள். இப்பொழுது மாமனார் இறப்புக்கு பின் உடல் ரொம்ப சோர்வாக தான் இருந்தாள்.
அவளால் தண்ணீர் குடம் தூக்க முடியாது என்பதால் அவளுக்கு பதில் வசந்த் தண்ணீர் எடுத்து வைத்தான் ..
அதற்கும் ஆம்பள எடுத்து வைப்பானா ? என்று குத்தம் சாடி இருந்தார்கள். அனைத்தையும் கண்டு காணாமல் சென்றாள்..
காரியம் முடிந்தும் கூட தன் கணவன் அங்கேயே தூங்க.. இவளுக்கு தான் கஷ்டமாகியது. முழுவதாக ஒரு மாத காலம் தன் தாயுடன் தான் தாங்கிக் கொண்டான் . இரவு வேளையில், அதன் பிறகு, இவளுடன் தூங்க ஆரம்பித்துப் பிறகு, கூட தூங்குவதற்கு மட்டுமே வீட்டிற்கு வந்தான்..
மற்ற நேரங்களில் தன் தாயுடன் உட்கார்ந்து பேச ஆரம்பித்து விட்டான்.. கேட்டால் அவருக்கு தனிமையை கொடுக்காமல் இருப்பதற்காக என்று காரணத்தை அடுக்கினான்.
ஒரு நாள் இரவு வேளையில் தனிமையில் இவளிடம் தனிமையை தேடி நெருங்கும் போது கத்தி விட்டாள்..
“என்ன பார்த்த உங்களுக்கு எப்படி தெரியுது? உங்க அப்பா செத்து ஒரு மாசத்துக்கு மேல ஆகுது.. ஒரு மாசமா உங்க வீட்டுல தூங்குனீங்க. அது கூட உங்க அம்மாவுக்காக அப்படின்னு பொறுத்துக்கலாம். இப்ப வந்தாலும் தூங்குறதுக்கு மட்டும் தான் வரீங்க ?மற்ற நேரத்தில் நான் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டேன்ல.. இப்ப நான் யாரோ ஆயிட்டேன்ல உங்களுக்கு? உங்க அப்பா செத்தவுடன் முழுசா மாறிட்டீங்க..” என்று அழுது கண்ணீர் வடித்தாள்.
“அப்படி இல்லடி “என்றபடி மீண்டும் அவளிடம் நெருங்கினான்.. அவனுக்கு அலைச்சல், மன உளைச்சல் அனைத்தும் சேர்ந்து தன் மனைவியின் அருகாமைக்கு ஏங்கி தவித்தான்..இப்போது அவள் தேவைப்பட்டால் என்பது தான் நிதர்சனமான உண்மை..
ஆனால் இவளுக்கு மாசமாக இருப்பது டிப்ரஷன் ஒரு பக்கம் என்றால், மாமனாரின் இறப்பு, வீட்டினரின் பேச்சுவார்த்தை, கணவனின் ஒதுக்கம்(அருகாமையை தேடி கிடைக்காமல் போன விரக்தி) அனைத்தும் சேர்ந்து சதி செய்ய கோபத்தில் கத்தி விட்டாள்..
அவன் மீண்டும் நெருங்கியதில் வெகுண்டு எழுந்தாள்.
“அப்போ இந்த உடம்பு தான் உங்களுக்கு தேவை இல்லையா? நான் தேவையில்லை..” என்று வார்த்தையை விட்டிருந்தாள்.
அவளை அமைதியாக பார்த்தவன் ஒதுங்கி படுத்தி விட்டான் ..இரண்டு மூன்று நாட்கள் இப்படியே சென்றது. அதன் பிறகு, முழுவதாக வசந்த் தாய் வசந்தாவின் பிடியில் விழுந்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும் ..
மருமகளை குத்தம் சொன்னால் தானே மகனுக்கு கோபம் வரும்.. மருமகளை குத்தம் சொல்லாமல் அதே சமயம் மகனை தன் கை வளைவுக்குள் கொண்டு வர வேண்டும் என்று எண்ணி பல சூழ்ச்சிகள் செய்து தன் மகனை மருமகளிடம் விடாமல் இரவு வேலை தூங்குவதற்கு மட்டுமே அங்கே விட்டார்..
மற்ற நேரங்களில் ஏதாவது பேசி தன்னுடனே இருக்க வைத்துக் கொண்டார். ஆனால், அதை எதையும் உணரும் அளவிற்கு வசந்த் இல்லை..
கணவனாக தன் மனைவிக்கு என்ன தேவையோ பார்த்தான்..அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, மருந்து மாத்திரை வாங்கி தருவது, இன்னும் இதர பொருட்கள் தேவையான அனைத்தையும் பார்த்தான் ..
இருந்தாலும், அவளுக்கான நேரங்களை ஒதுக்காமல் விட்டுவிட்டான் ..வசந்த் செய்த தவறு அங்கு தான்.. ஏற்கனவே குழந்தையை சுமந்து கொண்டு டிப்ரஷனில் இருந்தவளுக்கு தன் கணவனின் செயல் கோபத்தை தூண்டும் படியாக இருந்தது..
இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவளுக்கு பிபி ஏகத்துக்கும் எகிறி இருந்தது..
அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருந்தான்.. பிபி நார்மல் ஆவதற்கு மாத்திரை கொடுத்திருக்கிறேன் நான்கு நாட்கள் பார்ப்போம். அப்பொழுதும் சரியாகவில்லை என்றால், தொடர்ந்து பிபி டேப்லெட் எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்று மருத்துவர் ஒரே வார்த்தையாக கூறிவிட்டார்..
அதன் பிறகு தன் குழந்தைக்காகவே பிபி நார்மல் கொண்டு வர வேண்டும் என்று அமைதி காத்தாள். அதன் பிறகு தன் கணவனின் அருகாமையை தேடுவதை நிறுத்திவிட்டாள். அவரைப் பற்றிய யோசிப்பதால் தானே பேபி ஏகத்துக்கும் எகிர்கிறது…
அவர் வரும்பொழுது வரட்டும் போகும்போது போகட்டும் என்று அமைதியாகி விட்டாள்..இதற்கு இடையில் தன் மாமனார் இறந்த செய்தியையும் ,அதன் பிறகு நடந்த ஒரு சில விஷயங்களை மட்டும் நவிலனுக்கு போன் செய்து கூறியிருந்தாள் ..
அவளாக கூப்பிடாமல் நவிலன் அவளுக்கு அழைப்பதை நிறுத்தி இருந்தான் சூழ்நிலையின் காரணமாக..
அதன் பிறகு அவளுக்கு பிபி அதிகமாகி ரொம்ப டிப்ரசனில் இருக்கும் பொழுது அவனுக்கு அழைத்து இருந்தாள்..
“இப்போ உடம்பு எப்படி இருக்கு?” என்று கேட்டவன்.. வீட்டில் எதுவும் பிரச்சனை இல்லையே?” என்று கேட்க ..
அவளோ மடைத்திருந்த வெள்ளமாக மாதக்கணக்காக மனதில் தேக்கி வைத்திருந்த அனைத்தையும் கொட்ட ஆரம்பித்து இருந்தாள்.
” சரி விடு .. நீ இதையே ரொம்ப யோசிக்காதே.. இப்போதைக்கு வயித்துல இருக்க பாப்பாவை பாரு ..அதான் இப்போ ரொம்ப முக்கியம் “என்று அவளை தேற்றினான்.
“அப்ப அவர் எனக்கு வேணாமாடா.. அப்படியே விட்டுட சொல்றியா ?” என்று கேட்டிருந்தாள் ஆதாங்கமாக.
“அப்படி சொல்லல டி. ஆனா, அவருக்கு அவங்க அம்மாவும் முக்கியம் தானே . ரெண்டு பக்கமும் நிக்கணும் . இரண்டு பேரையும் பாக்கணும் இல்லையா?”
” நான் அவங்க அம்மாவ பாக்க வேணாம்னு சொல்லவே இல்லையே நவி.. அவங்க அம்மாவ பாக்கட்டும் .ஆனா, எனக்கான நேரத்தை அவர் கொடுக்கிறதே கிடையாது டா.. உனக்கு நான் எப்படி சொல்றதுன்னு தெரியல. என்னால சொல்ல முடியல ..” என்றவள் அமைதியாக,
” நீ சொல்ல வர்றது எனக்கு புரியுது. ஆனா..” என்றவன் பேசும்போதே..
” அவங்க.. என்னோட மாமனாரும் மாமியாரும் அவ்வளவு க்ளோஸ் எல்லாம் கிடையாதுடா. சண்டை போட்டு தனித்தனியா தான்டா இருந்தாங்க.. மாமனார் எங்க வீட்லயும் பெரிய மகன் வீட்லையும் தான்டா மாத்தி மாத்தி சாப்பிட்டுட்டு இருந்தாரு இவ்வளவு நாளா..”என்றாள் அழுகையாக..
” இருக்கட்டும். ஆனால் இவ்வளவு நாள் தனக்குன்னு ஒரு துணை இருந்துச்சு என்று ஒரு நம்பிக்கையில உங்க மாமியார் வாழ்ந்தாங்க.. சண்டை போட்டுட்டு இருந்தாலும் . இங்கு எந்த புருஷன் பொண்டாட்டி நடுவுல சண்டை சச்சரவு இல்லாம இருக்கு.
ஒரு சிலது ரூமுக்குள்ள இருக்கும். ஒரு சிலது வீட்டுக்குள்ள இருக்கும். ஒரு சில பேருக்கு வீட்டுக்கு வெளியே வர வரும்.. அவ்வளவுதான் வித்தியாசம்.. ஆனா இப்ப அந்த துணையே இல்ல.இனி வரப் போவதும் இல்ல.. மொத்தமா இந்த உலகத்தை விட்டு போயிட்டாரு..
அப்படின்ற பட்சத்துல மூணு மகன் இருந்தாலும்.. அவங்களுக்குன்னு தனிப்பட்ட வாழ்க்கை என வரும்போது எல்லாருமே அவங்க அவங்க வாழ்க்கையை தான் பார்ப்பாங்க . பெத்தவங்கள பாக்க மாட்டாங்க.. அதுவும் அந்த அளவுக்கு..இளைய மகன் எங்கோ கண்காண தூரத்தில் இருக்காரு.. பெரிய மகன் பக்கத்துல இருந்தாலும் பெருசா கண்டுக்க மாட்டார் பொண்டாட்டி பேச்சை கேட்டு.
அது அவங்களுக்கே தெரியும் அப்படி இருக்கப்ப தனக்குன்னு இருக்க துணையோ இல்ல தன்னை பார்த்து கொள்வதற்கு இருக்கிற ஒரே மகன் மாமா தான் என்ற பட்சத்துல அவங்க மாமாவை ஒரு பிடிப்பா பிடிச்சிட்டு நிக்கிறாங்க.. அதை நம்ம தப்புன்னு சொல்ல முடியாது..”
“அப்போ என் வாழ்க்கையை தூக்கி குடுக்க சொல்றியா ?”.. என்றாள் விரக்தியாக..
” நீ இருக்க டென்ஷன்ல ரொம்ப மனச போட்டு குழப்பிக்கிற.. தப்பு தப்பா யோசிக்கிற டி…கொஞ்ச நாள் அமைதியா இரு..எல்லாம் சீக்கிரம் சரி ஆகும்..”
“ஓ! நான் தப்பா யோசிக்கிறேன் .. அப்ப இங்க இருக்கவங்க எல்லாம் சரியா இருக்காங்க..” என்று குமைந்தாள் ..
” இது வாதாடுவதற்கான நேரம் கிடையாது.. மாமா எங்கடி போய்ட போறாரு .உனக்கு தேவையான எல்லாம் செய்றாரு தான?”
” ஓ! பணம் காசு கொடுத்துட்டா போதுமா? எனக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கி கொடுத்துட்டா போதுமா? மத்த தேவை எல்லாம் எதுவும் இல்லையா? இந்த அன்பு, பாசம் எல்லாம் சொல்றாங்களே அதெல்லாம் தேவையில்லை ..அப்படியா?” என்றவள் அடுத்து அவன் பேசுவதற்கு முன்பாக எதையும் காதில் வாங்காமல் வைத்து விட்டாள்..
அவளுக்கு தன் கணவனை அடுத்தவர்களிடம் விட்டுக் கொடுக்கிறோமோ? என்று தோன்றியது.. நண்பனாகவே இருந்தாலும், அவனிடம் அவரை பற்றி குறை கூற வேண்டுமா? என்ற எண்ணம் வேறு…
அதைத் தாண்டி அதையே யோசிப்பதனால் தனக்குத்தான் உடல் ரீதியாக பிரச்சனைகள் வருகிறது என்று எண்ணி அமைதியாகிவிட்டாள்.. அவனும் கொஞ்ச நாட்கள் போனால் , அவளாக சரியாகி விடுவாள்.. தான் திரும்பத் திரும்ப பேசினால் அவள் உடல் நிலையை தான் பாதிக்கும்.. அப்படி ஒன்றும் கைவிடமாட்டார் மாமா என்ற நம்பிக்கையில் அவனும் அமைதியானான்.
ஒன்பதாவது மாத தொடக்கத்தில் இருக்கும்பொழுது ஸ்கேன் செய்ய போயிருந்த போது, பனிக்குடம் நீர் கம்மியாக இருக்கு இன்னும் ஒரு வாரம் கழிச்சு ஸ்கேன் பண்ணலாம். இப்படியே தண்ணி குறைவாக இருந்தால் ஆப்ரேஷன் பண்ணி தான் குழந்தையை வெளிய எடுக்க வேண்டி வரும் என்று கூறியிருந்தார்..
தண்ணீர் ஊறுவதற்கு என்று பாக்கெட் பவுடர் கொடுத்திருந்தார் மருத்துவர்.. அதை குடித்து விட்டு, தண்ணீரும் அதிகமாக குடித்து விட்டு ,அடுத்த இரண்டு நாட்களில் ஸ்கேன் செய்ய சென்றாள்.. அப்போதும் இன்னும் தண்ணீர் ஊற வில்லை என்று கூறி விட்டார் மருத்துவர்.

