Loading

சீனிவாசன் அவ்வளவு பேசவும் அவனிடம் அமைதியே நிலவியது..

“என்ன டா அமைதியா வர..”என்றார் ஆதங்கமாக..

“அப்பா உங்களுக்கு ஒன்னும் இல்ல ..நீங்க வாங்க ..”என்று அமைதியாக அழைத்துக்கொண்டு வந்தவன்..

அவரை வெளியே கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, தன் வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து இருந்தான் ..

தன் தாய் ,அண்ணன் ,அண்ணன் மனைவி என கூப்பிட்டவன். மருத்துவர் சொன்ன செய்தியை சொல்ல..

” என்ன டா சொல்ற? கால் மட்டும் தானே ஆப்ரேஷன் பண்ணனும்னு சொன்னாங்க ? இப்ப என்ன இப்படி சொல்லி இருக்காங்க ?”என்று ரஞ்சித்துக்குமே கூட குரல் உடைந்து அழுகை வந்துவிட்டது ..

கோபத்தில் பேசுகிறான் தான் .. அதற்காக தந்தை மீது பாசம் இல்லாதவன் இல்லையே! மனைவி மாற்றி விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.. அதன் பிறகு ,வசந்தாவும் தன் கணவனுக்கு என்ன தேவையோ அனைத்தையும் பார்த்தார்..

“என்ன டி சீக்கிரம் போய் சேர்ந்துடுவேன்னு..  கடைசி காலத்திலயாவது செய்யலாம்னு செய்றியா?”  என்று தன் மனைவியிடம் கேட்டார்.

ஆனால் வசந்தா எதுவும் பேசவில்லை அமைதியாகவே செய்தார் ..

“தன் மனைவியிடம் சொல்லலாமா வேண்டாமா ?”என்று யோசித்தான்..வசந்த் தந்தையின் உடல்நிலை பற்றி, மாசமாக இருக்கிறாள் என்று யோசித்து வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லும் பொழுது அவளிடம் சொல்லவில்லை…

இரவு வேளையில் அவளிடம் கூற.. அவளோ பதறி விட்டாள்..” என்னங்க சொல்றீங்க?” என்று,

“ஆமாம் ..”என்ற பிறகு, அவளுக்கு அதன் பிறகு  தூக்கமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் ..

இரவு வேளையில் அதன் பிறகு தினமும்  அடிக்கடி எழுந்து வந்து அவரை எட்டி பார்த்தபடி இருந்தாள்.  உடல் சுகவீனம் இல்லாமல் இருக்கும் ஆண்கள் அமாவாசை நெருங்கும் வேளையில் இறப்பதை அவளை சுற்றியுள்ளவர்கள் கூறி கேட்டிருக்கிறாள். ஆகையால்,  தினமும் இரவு வேளையில் அடிக்கடி தூக்கத்தை இழந்து எட்டிப் பார்த்தபடி இருந்தாள்.

இவனுக்குத்தான் இவளிடம் சொல்லாமல் இருந்திருக்கலாமோ என்று தோன்றியது..

” நீங்க வேணா போயி மாமா கூடவே படுத்துக்கோங்க

”  என்றாள் பதட்டத்துடன்.

“இல்லடி ஒன்னும் பிரச்சனை இல்ல … பார்த்துக்கலாம்”என்று கூறியிருந்தான் .

அவ்வப்போது ,அவனுமே எழுந்து சென்று பார்த்தபடி தான் இருந்தான்.. ஒரு வாரங்களுக்கு மேல் கடந்திருக்கும், அப்பொழுது ஆடி மாதம் தாய் ஊரில் கூழ் ஊத்துகிறார்கள் என்று கூறி அவளை அவளுடைய அம்மா கூப்பிட..

இங்க இருந்தா அவளுக்கு தூக்கமும்… உடம்பும் கெடுவதை உணர்ந்து, அவள் அங்கு சென்று இரண்டு நாட்கள் இருந்து விட்டு வருவது நல்லது.. அவளது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சரி, அவளது உடல் நலத்திற்கும் சரி என்று முடிவு செய்தான்.

ஆகையாலே அவளை ஊருக்கு போக கூறினான்.. ஆனால், அவளோ,நான் போக மாட்டேன்னு என்று   பிடிவாதமாக நின்றாள்..

ஆனால்,அவனோ, “இங்க இருந்தா நீ சரியா தூங்கவே மாட்டே… அங்கே போயிட்டு ரெண்டு நாள் இருந்துட்டு வா. இன்னைக்கு காலைல போனா, சனிக்கிழமை காலைலையோ சாயங்காலத்திலையோ நான் வந்துட்டு கூட்டிட்டு வரேன். வெள்ளிக்கிழமை எப்படியும் உங்க வீட்டுல இருந்து அனுப்ப மாட்டாங்க. நீ கொஞ்சம் ஓய்வு எடுத்துட்டு வா…”என்று  அவன் மெதுவா சமாதானம் செய்தான் குழந்தையை காரணம் காட்டி.

அவளுக்கும் உடல் அசதியை கொடுத்து விட .. தூக்கம் இல்லாமல் பொலி விழுந்து காணப்பட்டாள் .வயிற்றில் இருக்கும் குழந்தையை எண்ணி, தன் உடல் நலத்தையும் கணக்கில் கொண்டு, அவனும் நீ போயே அக வேண்டும் என்றதால் இதற்கு மேலும் அவளால் மறுக்க முடியாமல்… விருப்பம் இல்லை என்றாலும், “சரி…”என்று கிளம்பி இருந்தாள்.

அவளுக்குமே பல நாளாக சரியா தூக்கம் இல்ல…வயிற்றில் ஒரு குழந்தையையும் ,இன்னொரு குழந்தையை   கையிலும் வைத்துக்கொண்டு, மாமனாருக்கு தேவையானதை பார்ப்பதும், இரவு வேலையில் அவருக்கு ஏதாவது ஆகி விடுமோ ?என்று அஞ்சி தூக்கத்தை இழப்பது மாக இருப்பது  ரொம்பவே சிரமமா இருந்தது. ஆகையால் கிளம்பி விட்டாள்.

கிளம்புறதுக்கு முன்னாடி, இரண்டு மூணு தடவை தன் மாமனாரிடம் சொல்லிவிட்டு தான் சென்றிருந்தாள்… மனம் கனத்தபடியே.

அவரும்,” நீ உன் உடம்பை பார்த்துக்கோ..உன் புருஷனை விட்டு புடாதே எம்புட்டு கோவமா இருந்தாலும், இந்த குடும்பத்தில் இருக்கும் பணத்தாசை புடிச்ச பிசாசுங்க உன் புருஷன் கிட்ட இருந்து உழைப்பையும் , பணத்தையும் மட்டும் தான் தேடுவாங்க.. அவனுக்கு கிடைச்ச பொக்கிஷமே தான் நீ…உனக்கு கிடைச்ச பொக்கிஷம் தான் அவன் ..” என்று கூறி வழி அனுப்பி இருந்தார்..

சரி என்ற தலையசைத்து அழுதபடியே தன் பிறந்தகத்திற்கு சென்றிருந்தாள்..

காலை போல சென்றிருந்தாள்.. மாலை கூட அவளது  மாமனார் நம்பருக்கு அழைத்து பேசியிருந்தாள்.. மறுநாள் விடிந்தால் வெள்ளிக்கிழமை அவள் தாய் ஊரில் ஆடி மாதம் கூழ் ஊத்தும் விழா..

இரவு இரண்டு மணி போல் அவளது போன் அலறியது.. போன் சத்தம் கேட்டவுடனே தூக்கத்தில் இருந்தவள் அடித்து பிடித்து எழுந்து போனை எடுக்க..

அவளின் கணவனிடம் இருந்து போன்…ஒரு சில நொடி ஒன்றும் புரியவில்லை.. மகளின் மாமனார் உடல் நிலையை அறிந்த கவிதாவும் ஒரு முறை வந்து தனது சம்மதியை பார்த்துவிட்டு சென்றிருந்தார்..

இப்பொழுது இரவு நேரத்தில் போன் வரவும் ..கவிதாவுமே பதற்றத்துடன், “நான்  பேசுறேன் கொடு” என்றார் அவள் மாசமாக இருப்பதால்,

” இல்லமா நானே பேசுறேன்..” என்று கைகள் நடுங்க போனை எடுத்தாள்..

அந்த பக்கம் இருந்து வசந்தின் அழு குரல் தான் கேட்டது. “அப்பா நம்மள விட்டு போயிட்டாங்க டி…வேதா ..”என..

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.. திக் பிரமை பிடித்தது போல் இருந்தது..

ஒரு சில நொடிக்குப் பிறகு, அவள் அமைதியாக இருக்கவும், கவிதா தான் வாங்கி போன் பேச ..

கவிதாவிடம் விசியத்தை கூறியவன் வைத்து விட்டான் ..

மகளின் மாமனார் ஆயிற்றே.. மாசமாக இருக்கும் பெண்ணாக இருந்தாலும், அருகில்தான் மாமனார் வீடும் இருக்கு..என்பதை எண்ணி அந்த நேரத்திலேயே தனக்கு தெரிந்த ஒரு ஆட்டோவிற்கு ஃபோன் செய்திருந்தார் ..

கவிதாவும் தன் மகளையும் , பேத்தியையும் அழைத்துக் கொண்டு கிளம்பி இருந்தார்..

  அந்நேரத்திற்கு போன் செய்து இருந்தமையால் முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு ஆட்டோ டிரைவரும் வந்து நின்றார் ..

அவள் ஆட்டோவில் ஏறும் போது அவளது போன் மீண்டும் அலறியது ..

அவள் எடுத்து ,” நாங்க கிளம்பிட்டோம் ங்க ..அம்மா ஆட்டோ வர வச்சு இருக்காங்க” என்றாள்.

“இல்ல வேணாம் நான் கார் எடுத்துட்டு வரேன்.. நீங்க வெயிட் பண்ணுங்க ஆட்டோ வேணாம் ” என்றான்.

“என்ன காரா எதுக்கு..? ஆட்டோ வந்துடுச்சு இதுலையே  வரோம்..”

“இல்ல வேதா. அப்பாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறதுக்கு கார் வர வச்சிருந்தோம் டி ..  கார் வரதுக்கு முன்னாடியே ..”என்று வார்த்தையை நிறுத்தியவன். தொண்டையை செருமிக் கொண்டு ,”அந்த கார் இப்போ தான் வந்துச்சு நீ கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு தோ வந்துட்டே இருக்கேன்.. “

“இந்த நேரத்துல எதுக்குங்க நீங்க அலைய வேண்டாம் ..”

“நான் பாதி தூரம் வந்துட்டேன்..” என்றவன் வைத்து விட்டான்..

சரி என்று ஆட்டோ டிரைவரிடமும்  விஷயத்தை சொல்லி தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டாள்..அவரை தூக்கத்தில் எழுப்பி வர வைத்திருந்தமையால்  மன்னிப்பையும் வேண்டி இருந்தாள்.

” சரி மா. ஒன்னும் இல்ல..நீ  பாத்து பயப்படாம போ.. மாசமா வேற இருக்க “என்று தெரிந்த டிரைவர் என்பதால் கூறிவிட்டு கிளம்பிவிட்டார் ..

சிறிது நேரத்திலே வசந்தும் வந்துவிட..

  தனது மகளை வாங்கி முன்னாடி உட்கார வைத்துக் கொண்டான். அவனது கண்கள் கலங்கி இருந்தது ..இறுகி போயிருந்தான். பின்னாடி கவிதாவும் நிவேதாவும் உட்கார்ந்து கொண்டார்கள். சிறிது நேரத்தில் வீட்டிற்கு சென்று இறங்கினார்கள்..

இளைய மகன் சென்னையில் பணி புரிவதால் அவனுக்கு அப்போதே செய்தி அறிவிக்கப்பட்டு ,மறுநாள் காலையில் தான் வந்து சேர முடியும் என கூறியிருந்தான்..

நிவேதா வந்தவள் தன் மாமனாரின் பூத உடலை பார்த்து கண்ணீர் வடித்தாள்..

போகும் போது கூட சொல்லிட்டு போனீங்களே ? அது தான் நான்  உங்கள லாஸ்ட்டா பார்த்தது.. எனக்கு உங்களை பார்க்க கொடுத்து வைக்கலையே மாமா ..” என்று அழுதாள்.

“நானே பார்க்கலடி!” என்று அவனும் அழுதான் ..

என்றும் இல்லாத திருநாளா இன்று தான் அவனுக்குமே தூக்கம் கண்ணை கட்ட.. இத்தனை நாட்களாக தினமும் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை சென்று தன் தந்தையை பார்த்தபடி இருந்தவன் அன்றுதான் அசந்து தூங்கி இருந்தான் . இவ்வளவு நாட்களாக அவருக்கு தேவையான ஒவ்வொன்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தவன் அவரின் கடைசி இறுதி மூச்சை பார்க்கும் படியாக இல்லை…

கடைசி நேரம் அவரை பார்க்கும் படியாக அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை.. மருமகளுக்கும் கொடுத்து வைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அவர் எவ்வளவோ வசந்த் வசந்த் என்று கத்தி தான் இருந்தார்.. உயிர் துறக்கும் தருவாயில், ஆனால் அவன் காதுக்குத்தான் அது எட்டவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், அடித்து பிடித்து எழுந்து ரஞ்சித் தான் வந்து என்னவென்று கேட்டிருந்தான் ..

அவர் வாய்க்குழற ஏதேதோ பேசியபடி இருக்க.. வேகமாக சென்று ,தன் தாய் மனைவியை அழைத்துக்கொண்டு வந்தான்.. தன் தம்பி வீட்டு கதவையும் தட்டினான்.

கதவை ரொம்ப நேரமாக தட்டியும்  அவன் அசந்து தூங்கியதில் எழுந்து கொள்ளாமல் இருக்க ..கடைசியாக போன் அடித்துப் பார்த்தான் ..கிட்டத்தட்ட நாலு ஐந்து முறை போன் செய்த பிறகு தான் எடுத்தான்..

“வெளிய வாடா அப்பா பேசறது ஒன்னும் புரியல .. வாய் குழறது சீக்கிரம் வா..” என தம்பியிடம் சொல்லிவிட்டு தெரிந்த கார் டிரைவருக்கும் போன் செய்து விஷயத்தை கூறியிருந்தான்  ரஞ்சித்.

வசந்த் எழுந்து வெளியே வருவதற்கு முன்பாகவே சீனிவாசனின் உயிர் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்று இருந்தது..

தூக்கத்தில் இருந்து அடித்து பிடித்து எழுந்து வந்த வசந்த் அவரின் பூத உடலை தான் பார்க்க நேரிட்டது.

வசந்த் அதன் பிறகு தான் தன் மனைவிக்கு அழைத்து விஷயத்தை கூறியிருந்தான்..

அக்கம் பக்கம் இருப்பவர்கள், பங்காளிகள் ,நெருங்கிய உறவினர்கள் என அனைவரும் வந்த பிறகு காலை 5:00 மணி போல இளைய மகன் மட்டும் வராமல் இருக்க அவன் வருவதற்கு நேரம் ஆகும் என்று கூறியதால் ஒரு சில உறவுக்காரர்களும் வந்து கொண்டு இருக்க.. தேங்கா உடைச்சிடனும் என்று கூறிவிட ..சரி என்று பங்காளிகள் வந்த பிறகு தேங்காய் உடைக்கப்பட்டது..

அப்பொழுது மாசமாக இருப்பதால் நிவேதா பார்க்க கூடாது என்று கூறி ஒருவர் வீட்டுக்குள் செல்ல சொல்ல அழுதபடியே வீட்டிற்குள் சென்றாள்.

தேங்காய் உடைத்த பிறகு என்னென்ன வேண்டுமோ அனைத்தையும் செய்ய ஆரம்பித்தாள்..

ஊதுபத்தி, கற்பூரம் ,விளக்கு என்று அனைத்துமே அவள் வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டு வந்து வெளியே வைக்கப்பட்டது.. ஒரு சிலர் கூட அந்த புள்ள மாசமா இருக்கே என்று கேட்க ..

அவள் எதையுமே காதில் வாங்கவில்லை ..அதை கேட்கும்  மனநிலையிலும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

வசந்த் இறுதி காரியத்திற்கு என்னென்ன தேவையோ அதற்கு அலைந்து கொண்டிருந்தான். அப்பொழுது கொஞ்ச நேரம் அழுதவன் தான் ..அதன் பிறகு அடுத்தடுத்து காரியத்திற்கு தேவையான அனைத்தையும் ஓடியாடி பார்க்கவே நேரம் சரியாக இருந்தது..

உடன் வசந்தின் அண்ணன் ரஞ்சித்தும் பார்க்க செய்தான். பணம் வசந்த் போட்டாலும் அங்குமிங்கும் செல்ல வேண்டிய அனைத்திற்கும் ரஞ்சித்தும் அலைந்து கொண்டு இருந்தான்.

அன்று மாலை 4 மணி  அளவில் சீனிவாசனின் உடல் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரை இறுதி ஊர்வல வண்டியில் தூக்கி வைக்கும் போது ஊரையே கூட்டிவிட்டாள் நிவேதா.. இளவரசியும் கூட கத்தினாள்…

இரு மருமகள்களும் மாமனாரின் இறுதி ஊர்வலத்தில் அனைவரின் மனதையும் உலுக்கச் செய்யும் அளவிற்கு தான் அவர்களது அழுகுரல் அவ்விடத்தையே ஆக்கிரமிப்பு செய்தது..

இளவரசி என்னத்தான் வாய்க்கு வாய் வாதாடினாலும், அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகுவதற்கு  முன்பு வரை சீனிவாசனை நன்றாகத்தான் பார்த்துக்கொண்டாள்..

அவரிடம் மல்லுக்கு நின்றாலும் அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து கொண்டு தான் இருந்தாள் ..அவ்வப்பொழுது ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுத்துக்கொண்டு ,சாப்பாடும் போட்டபடி இப்படித்தான் இருந்தாள்.. இருவருமே கத்தி அழுது விட்டார்கள்..

சாவுக்கு வந்தவர்கள் கூட இரு மருமகள்களின் கண்ணீரை பார்த்து கண்ணீர் உகந்தார்கள்.

சீனிவாசனின் உடலை இடுக்காட்டிற்கு எடுத்துச் சென்ற பின்பு, வீட்டை கழுவி சுத்தம் செய்ய ஏற்கனவே ஆட்களுக்கு சொல்லி இருந்தமையால், மூன்று பெண்கள் வந்து அனைத்தையும் கழுவி சுத்தம் செய்து கொடுத்துவிட்டு சென்றார்கள்.

அன்று இரவு கவிதா அங்கே தங்கி கொண்டார். தன் தாயுடன் யாராவது படுக்க வேண்டும் தந்தை இறந்த இடத்தில் படுக்க சொல்லி இருக்கிறார்கள். தாயை தனிமையில் விட முடியாது என்று வசந்த் தன் தாயுடன் படுத்துக்கொண்டான்.

அங்கு தான் நிவேதாவின் வாழ்க்கையில் பலத்த அடி வீச ஆரம்பித்தது என்று சொல்ல வேண்டும்..

இரண்டாவது குழந்தை கருவுற்றதிலிருந்து அவளுக்கு கிடைத்த அனைத்து சந்தோஷமும் அன்றோடு முடிவடைய போவதை அப்போது அவள் அறிந்திருக்கவில்லை..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்