Loading

நிவேதாவும்  அவனது கனவு கலைந்தாலும் ,அவன் தன் தாய் மீது வைத்திருக்கும் பாசம் தெரிய வர அமைதியாக விட்டுவிட்டாள்.

இதை பற்றி வனிதா விடம் சொல்லலாமா ?வேண்டாமா? என்று நிவேதாவிற்கு யோசனை இருந்தது.

ஆனால், இப்பொழுது நவி அவளிடம் பேசாத  நேரத்தில் இதை பற்றி நான் சொல்லலாமா ?வேண்டாமா ? என்று யோசித்து கொண்டு இருந்தவள். இரண்டு நாட்களுக்கு பிறகு, வனிதாவிடம் அனைத்தையும் சொல்லி இருந்தாள்.

“ஒன்னும் பிரச்சனை இல்ல அண்ணி.. அவங்க அம்மாவை விடாமல் பாத்துக்கிட்டா போதும் , அவர் ஐ பிஎஸ் ஆகணும் அப்படின்னு நான் எந்த எதிர்பார்ப்பும் வச்சுக்கல .” என்று சிரித்த முகமாக சொன்னாள்.

“அவன் ஐபிஎஸ் படிக்க மாட்டான் என்றாதுக்காக நீ பீல் பண்ணுவேன்னு நினைச்சு நான் சொல்லல வனிதா..  நீ அவனுக்காக டாக்டர் படிப்பு வேணாம்னு நினைச்ச ,இப்போ அவங்க குடும்ப சூழ்நிலைக்காக அவனுடைய கனவை விட போறான் ..அவன் எடுத்த முடிவை..அதும் வாழ்க்கையோட முக்கியமான முடிவை உன்கிட்ட சொல்லனும்னு சொன்னேன் அவ்ளோ தான்..!” என்றாள்.

“நான் அவருக்காக விட்டு கொடுத்ததா உங்களுக்கு யார் சொன்னது ?”

“அவன் சொல்லல. ஆனா ,என்னால புரிஞ்சுக்க முடியும் “என்று சிரித்தாள்..

  “அவர் இங்க வந்து வேலை செஞ்சாலும் எனக்கு சந்தோஷம் தான் .என் கண்ணு முன்னாடி இருப்பாரு இல்ல..” என்று குதுகளித்தாள்..

“உன் கண்ணு முன்னாடி இருப்பான்.. ஆனா உன்னை பார்ப்பான் அப்படின்னு சொல்ல முடியாது”

“நான் அவரை பார்த்துட்டு இருப்பேன் அண்ணி.. எனக்கு அதுவே சந்தோஷம் தான்! தினமும் நம்ம பஸ்ல போகும்போது அவரை பார்க்க முடியுமே…”என கூச்சலிட்டாள்..

“நீ பார்க்க முடியும்.. நான் இல்ல.  எனக்கு இன்னும் ரெண்டு மாசத்தோட காலேஜ் முடிய போது ,அது ஞாபகத்துல இருக்கா ?” என்று கேட்டாள் புன் சிரிப்புடன்.

“ஆமாம் … நீங்க மேற்கொண்டு என்ன பண்ணுவீங்க ?”

“இப்போதைக்கு பாப்பா பெருசாகணும் வனிதா.. இப்போதைக்கு எனக்கு எந்த ஐடியாவும் இல்லை..இந்த டிகிரி முடிச்சிட்டா.. வீட்ல தான் இருப்பேன் .”

“ஓ! சரி  அண்ணி..”என்று அமைதியாகி விட்டாள்.

நாட்கள் மாதங்களாக உருண்டோடி இறுதி பரிட்சையும் முடித்து இருந்தார்கள்.

வனிதா முதலாம் ஆண்டு நிறைவு செய்து இருந்தாள் .

நிவியும், நவியும்  மூன்றாம் ஆண்டு முடித்து இருந்தார்கள்.

தனது கல்லூரி படிப்பு முடித்தவுடன் நிவேதா  தனது புகுந்த வீட்டிற்கு தனது மகளை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு கணவனுடன் ஒன்றாக இருக்க. கணவன், மகள் என்று  சந்தோஷமாக அவளது வாழ்க்கை சென்றது.

வசந்த் தான் “என்னடி உங்க அம்மா வீட்டில் இருந்து வந்த உடனே ஒரே பொறுப்பா இருக்க போல ,என் நினைப்பு கூட இல்ல “என்றான் கிறக்கமாக.

“ஆமா,சாருக்கு மட்டும் என் நினைப்பு தான்” என்று வாயை கோணித்து காண்பித்தாள்.

“என் பொண்டாட்டி நினைப்பு இல்லாமலா ?ரொம்ப ஏங்கி போய் இருக்கேன் டி நீ இல்லமா” என்று கிறக்கமாக பேசி பூவாய் மலர்ந்து சிரித்தான் .

அவனது சிரிப்பில் மயங்கியவள் .அவனது தோளில் அடித்துவிட்டு “என்ன என்ன பேச்சு பேசுறீங்க?” என்று சிணுங்கினாள்.

“பின்ன எப்படி பேச சொல்ற ?,ஏழு மாசம் ஆகுதுடி”.

” நான் இங்க வரட்டா என்று கேட்டேன் தான  , நீங்கதானே வேணான்னு சொன்னீங்க?” என்று லேசாக கண்கள் கலங்க சொன்னாள்.

” லூசு அதுக்கு ஏன் டி இப்போ கண்ண கசுக்குற , நான் என்னோட ஏக்கத்தை சொன்னேன். ஆனா நீ இங்க வந்தா யார் உன்னையும்,பாப்பாவையும்  பார்த்துக்கிறது ,எப்படி காலேஜ் போவ வீட்டிலேயே உட்கார ஐடியாவா டி. உன்னை படிக்க வைக்கிறேன்னு சொல்லி இருக்கேன் டி” .

“ஏன்.நீங்க எங்க ரெண்டு பேத்தையும்  பார்த்துக்க மாட்டீங்களா? என்ன மேற்கொண்டு படிக்க வைப்பீங்களா ?”என்று கேட்டாள்.

அவளது கண்ணை பார்த்தவன். “உண்மையா கேட்கிறாயா ?நீ “என்று கேட்டான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், அமைதியாக இருக்க.

” இப்போதைக்கு நீ மேற்கொண்டு படிக்க வேணாம். பாப்பா கொஞ்சம் பெருசா ஆகட்டும் . இவ்ளோ நாளா முழுக்க முழுக்க பாப்பா உங்க அம்மா கிட்ட இருந்துச்சு. அது இல்லாம பாப்பா என் கூடவும் இருக்கணும். இனிமேல் நீ மேற்கொண்டு படிக்கணும்னாலும் பாப்பாவ விட்டு என்னால இருக்க முடியாது இல்ல” என்றான்.

அவனை இறுக்கி அணைத்தவள்.” நான் இப்பவே மேற்படிப்பு படிக்கணும்னு சொல்லல..” என்றாள்.

“மேற்கொண்டு கரஸ்ல போடலாம் இல்ல” என்று கேட்டான்.

“உன்ன படிக்க வைக்கிறேன்.. ஆனா , பாப்பா கொஞ்சம் பெருசாகட்டும் “என்றான்.

சொன்னாலும் ,சொல்லாட்டியும் அவன் சொல்வது உண்மை.. என்பதால் அமைதியாக அதை ஏற்றுக் கொண்டாள்.

அன்று  தங்களுக்கான நாளாக அமைத்துக் கொண்டார்கள். குழந்தை சன்விகா பேச ஆரம்பித்து இருந்தாள்.

புகுந்த வீட்டிற்கு வந்தவுடன் “குழந்தையை வச்சுக்கிட்டு எப்படி தனியா சமாளிப்ப  என் கூட இருந்துக்கோ “என்று அவளுடைய மாமியார் வசந்தா சொல்ல .

தனது கணவனை அமைதியாக பார்த்தாள். “சரி “என்பது போல் தலையாட்ட. அவளும் அமைதியாக ஏற்றுக் கொண்டாள்.

முதல் இரண்டு மாதம் வசந்தா என்னவோ நன்றாக தான் நடத்தினார் .குழந்தையையும் அவள் சாப்பிடும் வேலையில் பார்த்துக் கொண்டார் .அதன் பிறகு ,வசந்தாவின் மூத்த மருமகள் இளவரசி ஏதோ சொல்ல.தனது இளைய மருமகளிடம் அவ்வப்போது ஏதாவது அதை செய்யவில்லை, இதை செய்யவில்லை என்று சொல்லிக் காட்டிக் கொண்டு இருந்தார்.

தொடர்ந்து ஒரு வாரங்களாக மதிய வேலை அவளுக்கு சாப்பாடு இல்லாத படியாக நடத்தினார். சாப்பாடு தீர்ந்துவிட்டது. இப்போ வேண்டுமானால் அரிசி போட்டு வடித்துக்கொள். இல்லன்னா தோசை ஊத்தி சாப்பிட்டுக்கோ.. வேற ஏதாச்சு பண்ணிக்கோ.. என்று விட்டு அமைதியாகி விடுவார்..  .

அரிசி தண்ணியில் போடுவது அவர் தான் …கம்மியாக போட்டு சாதம் வடிப்பார்..இப்படியே 1 வாரம் சென்றது.

‘தன் கணவனிடம் இதை சொன்னால் தவறாகி விடுமோ ?’என்று எண்ணியவள். அமைதியாக சாப்பிடாமல் விட்டு விட்டாள்.

ஒரு நாள் மதியம் இரண்டு மணி போல் சாப்பிட உட்கார்ந்த வசந்த் தன்னுடனே அவளை சாப்பிட உட்கார வைத்துக்கொண்டான்..

“இல்லை நான்  அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்” என்றாள் அவஸ்தையாக..

“சாப்பிடு பாப்பா தூங்கிட்டு தான இருக்கா ,.. அப்புறம் எழுந்திருக்கிற நேரம் பார்த்து சாப்பிடுவியா  ?”என்று கேட்டுவிட்டு சாப்பிட உட்கார வைத்தான்.

வசந்தா எதுவும் சொல்லாமல் இருவருக்கும் பரிமாறினார்.

வசந்தாவிற்கு அன்று சாப்பாடு இல்லாமல் இருந்தது. “என்ன மா சாப்பாடு இல்லை .நீ சாப்டியா ?”.

“இனிமே தான் டா சாப்பிடணும்” .

“அப்புறம் சாப்பாடு இல்லை .இவ்வளவுதான் வடிச்சியா ?இல்ல சாப்பாடு பத்தலையா ?”.

அவர் அவனை முறைத்து விட்டு அமைதி ஆக இருந்தார்..

“உன்ன தான கேக்றேன் ?”.

” உன் பொண்டாட்டி தான் டா வடிச்சா ..”என்றார் ஒரே வார்த்தையாக.

“நீ தான மா தண்ணியில ஊற வச்ச?”  என்று வசந்த் கேள்வி எழுப்ப..

அமைதியாக இருந்தார்…,

எதுவும் பேசாமல் சாப்பிட்டு எழுந்தவன் ..கையோடு அவளை அழைத்துக் கொண்டு வந்து,” தினமும் அரிசி கம்மியா தான் போடுறாங்களா ?” என்று தன் மனைவியிடம் கேட்டான் .

“இல்ல ,இன்னைக்கு தான் பத்தல ஒன்னும் இல்ல” என்று விட்டு அடுத்த வேலையை பார்க்க கிளம்பினாள்..அவனிடமிருந்து தப்பித்தாள் போதும் என..

“உண்மைய சொல்லுடி ?” என்று பற்களை கடித்தான்…

ஒரு சில நொடி அமைதியாக இருந்தவள் .அனைத்தையும் சொல்லிவிட.. எதுவும் பேசாமல் தன் அம்மாவிடம் போய் நின்றான் கோபத்தோடு..

“ஏன் மா இந்த மாதிரி பண்ற ? அதுக்கு நாங்க மட்டும் தனியாவே சமச்சி சாப்பிட்டு இருப்போம்..  எங்களை கூப்பிட்டு வச்சு ,நான் சாப்பாடு போடுறேன்னு சொல்ல வேண்டியது, இதுல  என்கிட்டவே அவ  எந்த வேலையும் செய்யறது இல்லனு சொல்லிட்டு இருக்க… உன் பெரிய மவனும்,மருமகளும்  சொல்லி கொடுத்து தான் இதுலாம் சொல்லி கிட்டு  இருக்க… இல்லைன்னு மட்டும் சொல்லிடாத, கண்டும் காணாமல் அமைதியா போயிட்டு இருக்கேன்…

எதுக்கு பிரச்சனைன்னு, நான் உன்கிட்ட வந்து எனக்கு சாப்பாடு போடு, என் பொண்டாட்டிக்கு சாப்பாடு போடுனு கேட்கல. .ம என் பொண்டாட்டி குழந்தை பெத்துக்க அவங்க அம்மா வீட்டுக்கு போன அப்போ  ,காட்டுல வேலை செய்றவன் நீயே தனியாவா சமச்சி  சாப்பிட்டுட்டு இருப்பேன்னு சொல்லி என்ன இங்க சாப்பிட கூப்ட.

எனக்கு மட்டும் போட்ட அப்போ ஒழுங்கா தான போட்ட?  உன் புள்ளைன்னா ஒன்னும் இல்ல,அதுவே  வீட்டுக்கு வாழ வந்தவனா வேற ஒரு அர்த்தமா ?இளக்காரமா போச்சு இல்ல உங்க எல்லாருக்கும்.. ..? அவள தினமும் திட்டிக்கிட்டு  தான  இருக்க? நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். நீ என்ன என்ன பேசுறன்னு …அமைதியா தான் போயிட்டு இருக்கேன்.

இதுவரைக்கும் அவ என்கிட்ட எதையும் சொல்லல.   ஆனா , அவள திட்ட மட்டும் தான் செய்ற நினைச்சேன்.சாப்பாடு போடலை என்ற விஷயம் எனக்கு இன்னைக்கு தான் தெரிஞ்சிருக்கு ” என்று கசந்த முறுவல் ஒன்றை தந்தான்…

“உன்கிட்ட போட்டு குடுத்துட்டாளா?  உன் பொண்டாட்டி “என்று வசந்தா கோபத்துடன் கேட்க.

“ஆமாம் வேற வேலை என்ன அவளுக்கு சொல்லு ? இங்க இருக்கிறத அங்கையும் ,அங்க இருக்கிறத இங்கையும் சொல்றது தான வேலை” என்றவன் வேறு எதுவும் பேசாமல்  நகர்ந்து விட்டான்.

இரவு வேளையில், “அத்த என்ன சாப்பாடு செய்ய ?”என்று நிவேதா வந்து நிற்க.

“நீங்களே வடிச்சி கொட்டிக்கோங்க  .எனக்கு யாருக்கும்  வடிச்சி  கொட்டனும்னு அவசியம் இல்ல, உட்கார வச்சி சோறு போடணும்ன்ற தலை எழுத்து இல்ல “என்று இரவு 7 மணி போல் வசந்தா சத்தம் போட்டார் .

வசந்த் கோபத்தோடு சண்டை போட  எழ. ..”வேண்டாம் “என்பது போல் அவனின் கையைப் பிடித்து நிற்க வைத்தாள்.

” அதுக்கு முன்னாடியே சொல்லி இருக்க வேண்டியது தான.. 7:00 மணிக்கு வந்து சொல்றாங்க ?”என்று கேட்டான் கோபம் கொஞ்சமும் குறையாமல்,.

“இருக்கட்டும் விடுங்க! “என்று விட்டு அமைதியாகி விட்டாள் .

அந்த நேரத்தில் அரிசி ஊற வச்சு, சதம் வடித்து ரசம் மட்டும் வைத்துக் கொண்டு சாப்பிட்டார்கள் ..

இதுவரை, அவள்  காலேஜ் சென்று கொண்டிருந்த போது, அவளுடைய அம்மா கவிதா மாவு ஆட்டி கொடுத்திருந்தார்..

  இனி ,யார் கையையும் எதிர்பார்த்து இருக்க வேண்டாம் என்பதுபோல் அவளுக்கு தோன்றியது . ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொருவரையும் எதிர்பார்த்து இருப்பதால்தான் ஒவ்வொரு நேரமும் சொல்லிக் காட்டுகிறார்கள் என்று எண்ணி விட்டு தன் அம்மாவிடமே எப்படி அரிசி ஆட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு முதல் ஒரு வாரம் மட்டும் அதுவும் தன் குழந்தைக்காக என்று எண்ணி தன் அம்மாவிடம் மாவு வாங்கிக் கொண்டாள்.

அடுத்த வாரத்தில் இருந்து அவளே ஆட்ட பழகிக் கொண்டாள். அதன் பிறகு ,அவர்கள் வாழ்க்கை அழகாக சென்றது .. இதை நிவே நவிலனிடம் சொல்லவில்லை.

தன் புகுந்து வீட்டிற்கு வந்த பிறகு , நவிலனிடம் பேச செய்து இருந்தாள். தினமும் பேச இயலாது என்றாலும், வாரத்தில் ஒரு முறையாவது பேசும் அளவிற்கு இருந்தது.

நவிலன் மூன்றாம் ஆண்டு படிப்பு முடிந்தவுடன் தன் சொந்த ஊருக்கு வந்து தன் குடும்ப தொழிலான மர ஆசாரி வேலையை செய்ய ஆரம்பித்திருந்தான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்