
தந்தை இறந்தவுடன் முதலாவதாக தனது நண்பன் பிரேமுக்கு அழைத்து இருந்தான் .
அவனிடம் விவரத்தை சொல்லிவிட்டு, தனது சொந்த பந்தங்களுக்கும் விஷயத்தை சொல்லி இருந்தான்.
இரண்டு வீடு தள்ளி இருக்கும் அவனது அண்ணனுக்கு விஷயத்தை தெரியப்படுத்த ,அவனது அண்ணனும் ,அண்ணியும் வீட்டிற்கு வந்தவர்கள்.. ஒரு மூலையில் அமைதியாக நின்று கொண்டார்கள்.
அதன் பிறகு , ஒவ்வொன்றாக நடந்தேற ..இறுதி சடங்குக்கு செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலைகளையும் நவிலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து செய்தான் .
அவனுக்கு பணமும் அவர்களது நண்பர்களும், நண்பர்கள் மூலமாக வெளியிலும் வாங்கி இருந்தான் .
காலை 6:00 மணி போல் தான் விஷயம் வனிதாவுக்கு தெரிய வந்தது.
வனிதாவிற்கு நெஞ்சம் எல்லாம் பதறியது .அப்பா இருந்தும் இல்லாத உதவாக்கரை தான் .இருந்தாலும், அப்பா இல்லை என்று எண்ணும் பொழுது அவனது மனநிலை எப்படி இருக்கும் .
அதுவும் அவனுடைய அம்மாவை பார்க்க ..அவனது நெஞ்சம் எந்த அளவிற்கு பதறும் என்பதை யோசித்தவள் தன் தாயைப் பார்த்தாள் .
“தெருவுல ஒரு ஆளாக நான் போவேன் . கெட்டது நடந்திருக்கு என்றதால துக்கம் விசாரிக்க ,மத்தபடி உன்ன அங்க போக விடுவேன் என்று மட்டும் கனவுல கூட காணாத மரியாதையா குளிச்சிட்டு காலேஜ் கிளம்புற வழியைப் பாரு “என்றவர்.
தனது மருமகளிடம் ,”இவளை பார்த்துக்கோ “என்று விட்டு கிளம்பி இருந்தார் .
வனிதாவிற்கு ஒன்றும் புரியவில்லை .ஆனால், அங்கு போய் நின்று இப்பொழுது பிரச்சனையை இழுத்து விடவும் அவள் விரும்பவில்லை.
ஆனால், ஒரு முறையாவது நவிலனை பார்த்து விடமாட்டோமா ?என்று ஏங்கினாள் .
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை என்ன செய்வது என்று புரியாமல் யோசனை உடனே குளித்துவிட்டு காலேஜ் கிளம்பி கொண்டு இருந்தவள் .
தான் போட்டு இருந்த துணியை துவைத்து மொட்டை மாடியில் காய வைத்துக் கொண்டிருந்தாள்.
தூரத்தில் இருந்தாவது அவனைப் பார்த்து விடாட்டமோ என்று எண்ணி..இல்லையென்றால் அவள் அண்ணி இப்போது மாடிக்கு கூட எதற்கு போற என்று கேள்வி கேட்பாலே..
அப்பொழுதுதான் பிரேம் வீட்டிற்கு நவிலன் வந்தவன்.. வெளியே நின்று கொண்டு பிரேம் இடம் கத்திக்கொண்டு இருந்தான்.
அவனது குரலை கேட்டவள்.. வேகமாக படிகளில் கீழே இறங்கி வந்து வெளியே நின்று பார்த்தாள் . வனிதாவை திரும்பியும் பார்க்கவில்லை அவன்.
ஆனால் ,வனிதா கண்ணெடுக்காமல் அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
பிரேம் தான் ஒரு நிமிடம் நின்று அவளை பார்த்து “வீட்டுக்குள்ள போ வனிதா காலேஜ் கிளம்பு” என்றான்.
“இல்ல அண்ணா அ..அது ..” என்று தடுமாறினாள்..
“சொன்னத செய் “என்றவுடன் வனிதா அமைதியாக உள்ளே சென்று விட்டாள்.
பிரேமை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு வேலைகளாக செய்ய அலைந்து கொண்டு இருந்தான்.
வனிதா கண்ணீரை துடைத்து விட்டு காலேஜ் கிளம்பி சென்று இருந்தாள்.
பஸ்ஸில் ஏறியவுடன் அவளின் கண்கள் நிவேதாவையே தேட.. நிவேதாவின் அருகில் சென்று உட்கார்ந்து கொண்டு ,அவளின் கையை பிடித்துக் கொண்டு “அண்ணி அவரோட அ…அப்பா ..” என்றாள் திணறலுடன்
நிவேதா வனிதாவின் கண்ணை துடைத்து விட்டவள், “தெரியும் பிரேம் காலையிலேயே போன் பண்ணி சொல்லிட்டான் “
“நீங்க போகலையா அப்போ?” என்றாள்.
“இல்லை “என்று சொல்லவும்…
” நான் அவரை காலையில பார்த்தேன் அண்ணி ..”என்றாள்.
“எப்படி அங்கு போனியா நீ ?உன்னை யார் போக சொன்னா ?”என்று கோபமாக கேட்டாள் நிவேதா.
“நான் அங்க போகல அண்ணி.. பிரேம் அண்ணா வீட்டுக்கு ஏதோ திங்ஸ் வாங்க வந்திருந்தார் ,அப்போ தான் பார்த்தேன்” என்றாள்.
“சரி” என்று விட்டு அமைதியாகி விட்டாள் நிவேதா.
நவிலன் தனது தந்தையின் இறுதி சடங்கை நல்ல முறையில் முடித்துவிட்டு ஒரு வாரம் தன் தாயுடன் தங்கி விட்டு பதினோராம் நாள் காரியத்தையும் முடித்துக் கொண்டு காலேஜ் கிளம்பி இருந்தான்.
தன் அம்மாவிடம் ,”இன்னும் ஒரு மூணு மாசம் மட்டும் இங்க தனியா இருக்க முடியுமா ? இல்லனா மும்பைக்கு போற மாறி இருந்தா கூட போ.
அதுக்கு அப்புறம் நான் இங்க வந்து உன் கூட தான் இருப்பேன். உன்னால இங்க இருக்க முடியும்னா மட்டும் இரும்மா.. என்னால உன்ன என் கூடவே கூப்பிட்டு போக முடியாது. நான் இருக்கறதே ஹாஸ்டல்ல ” என்றான் தன் கையாகாகாத தனத்தை நினைத்து வருத்தம் தோய்ந்த குரலில்.
அவருமே ,”நான் இனி மும்பைக்கு போகலடா .. முடிந்த அளவுக்கு உன் அண்ணனையும் , அண்ணியையும் அட்ஜஸ்ட் பண்ணி இருந்துக்கிறேன் “என்றார் அழுகுரலில்.
வேகமாக தன் தாயிடம் சத்தம் போட ஆரம்பித்து விட்டான்.
“எத்தனை முறை சொல்றது .. அவங்க தனியாவே இருந்துக்கட்டும், நீ தனியா இரு..
அவங்க கூட போக வேணாம்.
உன்னால சமைச்சு சாப்பிட்டு இருக்க முடியும்னா இருந்துக்கோ.. நான் பக்கத்து வீட்டு ஆயா கிட்ட சொல்லிட்டு போறேன்.. உன் கூட துணைக்கு படுத்துக்க சொல்லி அவ்வளவு தான் சொல்லுவேன் !.
இனி அவங்க கையை எதிர்பார்த்து நிக்காதே .என் உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் உன்னை உட்கார வச்சு சோறு போடுறேன்..” என்றான் கொஞ்சமும் தணியாத கோப குரலில் ஆதங்கத்துடன்.
கண்கள் கலங்க தனது மகனை கட்டி அணைத்த சுந்தரி..” சரிடா நான் இங்கவே இருந்துக்கிறேன். அங்க போகல” என்றார் உதடு துடிக்க..
“அவ்வளவுதான்!” என்று விட்டு காலேஜ் கிளம்பி இருந்தான் .காலேஜுக்கு சென்று விட்டு நிவேதாவிற்கு மெசேஜ் செய்திருந்தான் .
“பேச முடியுமா ?”என்று கேட்டு ..
அவளுமே இரண்டு நாட்களுக்குப் பிறகு ,அவனுக்கு அழைத்திருந்தாள் .
அப்பொழுது தான் அவளுக்கு பேசக்கூடிய சூழ்நிலை இருந்தது. போன் எடுத்த எடுப்பிலேயே,” நிவே பாப்பா எப்படி இருக்கா ?”என்று கேட்டான்.
“அடிச்சேன்னு வச்சுக்கோ.. பல் எல்லாம் விழுந்துடும் ..சார்க்கு என்கிட்ட எதுவும் சொல்ல கூட கஷ்டமா இருக்கு இல்ல .
ரொம்ப தூரம் போயிட்ட மாதிரி இருக்கு டா..இன்னும் எவ்வளவு தூரம் போறேன்னு நானும் பாக்கறேன் ஒரு விஷயம் ,ரெண்டு விஷயம் இல்ல நிறைய ஒன்னு ஒன்னா மறைச்சிட்டு இருக்க?”என்று ஆதங்கப்பட்டாள்.
“உன் கிட்ட சொல்லக்கூடாதுன்னு இல்ல டி..”
“இன்னும் நீ எந்த அளவுக்கு மறைக்க முடியுமோ ?அந்த அளவுக்கு போ..” என்று லேசான கோபத்தோடு கத்தினாள்.
“லூசு மாதிரி பேசாத, நீ அங்க உங்க வீட்டுக்கு போயிட்டேனா நான் பேசி இருப்பேன் டி “.
“எதையோ பண்ணு.. நான் எதுவும் சொல்றதுக்கு இல்ல” என்று அமைதியாக இருந்தாள்.
“சரி டி பாப்பா என்ன பண்ற?” .
“விளையாடுறா .. நல்லா தான் இருக்கா .ஒன்னும் பிரச்சனை இல்ல. இப்போதைக்கு அம்மா சாப்பாடு கொடுக்க ஸ்டார்ட் பண்ணிட்டாங்க “என்றாள்.
“சரி” என்று விட்டு ஒரு சில நொடி அமைதியாக இருந்தான்.
“செலவுக்கு என்னடா பண்ண?” என்று கேட்டாள்.
“கடன் தான் வாங்கி இருக்கேன்”..
“மேற்கொண்டு என்ன பண்ணனும்னு இருக்கு?”.
“அத பத்தி பேசுறதுக்காக தாண்டி போன் பண்ணேன்”..
“சொல்லு டா ?”என்று விட்டு,” நான் அவர் கிட்ட பணம் கேட்டு வாங்கி தரட்டா?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம் லூசு .. நான் உனக்கு அதுக்கு ஒன்னும் போன் பண்ணல, நான் வெளியே அரேஞ்ச் பண்ணிட்டேன். அது பிரச்சனை இல்லை இப்போ “
“சரி சொல்லு என்ன பண்ணலாம்னு இருக்க ?அம்மா..” என்று நிறுத்தினாள்..
“அம்மாவை மும்பை போறியா என்று கேட்டதுக்கு இல்ல இங்கே இருக்குன்னு சொல்லிட்டாங்க.. பக்கத்து வீட்டு ஆயா கிட்ட சொல்லிட்டு வந்து இருக்கேன்,அம்மா கூட படுத்துக்க சொல்லி “
“வீடு எப்ப டா கட்டறது… இப்போதைக்கு இல்ல டி .. பொறுமையா கட்டுவோம்.”
“ஏன் ? அண்ணன் கூட போய் இருக்க சொல்லி இருக்க வேண்டியதுதானே?”
” அவன பத்தி தெரிஞ்சு இருந்தே இப்படி பேசுற நீ ?” என்று சீறினான்..
“இருக்கட்டும் டா.. அவங்களுக்கும் அம்மா தான? உனக்கு மட்டும் அம்மா இல்லையே ?”என்றாள்…
“அப்போ என்னால முடியாதுன்னு அவங்க கிட்ட அம்மாவை கை கழுவி விட சொல்றியா ?”என்று அடிகுரலில் கத்தினான் .
“லூசு மாதிரி கோபப்படாத நவி, இப்போ அம்மா தனியா இருப்பாங்களே அதுக்காக சொன்னேன் .உன்ன உன்னோட பொறுப்பில் இருந்து கீழே இறங்கி அம்மாவ அங்க விட சொல்லி சொல்லல சரியா ?”என்றாள்.
“இல்ல எந்த ஒரு சூழ்நிலையிலும் இனி அம்மாவ அவன் கிட்ட கையேந்த விடமாட்டேன். இப்போதைக்கு செலவுக்கு அம்மாகிட்டயும் காசு கொடுத்துட்டு வந்து இருக்கேன் .பிரேம் கிட்டயும் கொடுத்துட்டு வந்து இருக்கேன். ஏதாவது கேட்டா வாங்கி தர சொல்லியோ இல்ல, எதுனாலும் பார்த்துக்க சொல்லி ,பிரேம் அம்மாகிட்டயும் சொல்லிட்டு வந்து இருக்கேன்.
பக்கத்து வீட்டு ஆயா கிட்டயும் சொல்லிட்டு தான் வந்து இருக்கேன்.. ஒன்னும் பிரச்சனை இல்ல .இன்னும் மூணு மாசம் தானே..” என்றான் ..
“மூணு மாசம் தாண்டா.. சரி அதை விடு..,அதுக்கப்புறம் நீ என்ன பண்ணலாம்னு இருக்க ?”
“அதுக்கப்புறம் நான் அங்க வந்துருவேண்டி ..”
“இங்க வந்து …என்ன பண்ண போற?”
“அங்க வந்து நான் குடும்ப தொழில் பாக்கலாம்னு இருக்கேன்..”
“விளையாடுறியா ?நவி உன்னோட கனவு உன்னுடைய லட்சியம் அதெல்லாம் என்ன பண்ணலாம்னு இருக்க ? ஐபிஎஸ் ஆகணும்னு நினைச்சிட்டு இருந்த?” ..
“இப்போ இருக்க சூழ்நிலைக்கு நான் அதை பத்தி எல்லாம் யோசிக்க முடியாது. ..”
“இதுக்கு முன்னாடி இருந்த சூழ்நிலைக்கும் ,இப்போ இருக்க சூழ்நிலைக்கும் உனக்கு என்னடா வித்தியாசம் ?”
“அப்படி இல்லடி.. இதுக்கு முன்னாடி அம்மா மும்பையில் இருந்தாங்க ..எனக்கு பிரச்சனை இல்ல , இப்ப இங்க இருக்காங்க மும்பை போற ஐடியா இல்ல .. அங்க போனா கூட சரி வேலைக்கு போயிடுவாங்க அப்படின்னு நான் யோசிக்கலாம் .
காசுக்காக அவங்க வேலைக்கு போகணும்னு நினைக்கல.. டி .அவங்க எதையும் யோசிக்காம அவங்க மாட்டும் வேலையில கவனத்தை வச்சிட்டு இருப்பாங்க. ஆனா, இப்போ இங்கே இருக்கேன்னு சொல்லிட்டாங்க..
அவங்க பொழுதனைக்கு எதையாவது யோசிப்பாங்க , எதையாவது பேசி கிட்டே இருப்பாங்க ..அது சரி வராது . அண்ணனும் அமைதியா இருக்க மாட்டான் .. அவன் பொண்டாட்டியும் அமைதியா இருக்க மாட்டாங்க .அவங்க பேசும்போது இவங்களும் ஏதாவது பேசுவாங்க.”
“சரிடா.. இப்ப என்னதான் முடிவு பண்ணி இருக்க ?”
“அது தாண்டி சொல்றேன். நான் அங்க வந்து ஆசாரி வேலை செய்யலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்”
“நவி!” என்றாள் அமைதியாக..
“ஏண்டி? அது என்ன கேவலமான வேலையா? “என்றான் கோபமாக..
“நான் எப்படா அப்படி சொன்னேன் .. கேவலமான வேலைன்னு சொல்லல. உனக்கு அந்த வேலை தெரியுமான்னு கேட்டேன் அவ்வளவுதான்!”
“தெரியாது என்று இல்ல .., கொஞ்சம் கொஞ்சம் தெரியும் ,முழுசா கொஞ்சம் கொஞ்சமா கத்துக்க வேண்டியதுதான் ஒன்னும் பிரச்சனை இல்ல..
கவி அண்ணன் கிட்ட சொல்லி வச்சிருக்கேன் ,மூணு மாசம் கழிச்சு வந்து வேலை பாக்குறேன்னு.. அவரும் சரின்னு சொல்லிட்டாரு .
அதுக்கப்புறம் கத்துக்க ஆரம்பிச்சுக்க வேண்டியது தான் .இப்போதைக்கு பொறுமையா கொஞ்ச கொஞ்சமா சின்ன சின்ன வேலையா செய்ய வேண்டியது தான்”..
“சரிடா உனக்கு அதுல விருப்பம் இருந்தா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா, எந்த வேலை செய்யற மாதிரி இருந்தாலும் முழு ஈடுபாடோட செய் அவ்வளவு தான் சொல்லுவேன்!”
“விருப்பம் இல்லாம எந்த ஒரு விஷயத்திலும் நான் இறங்க மாட்டேன் டி உனக்கு தெரியாதா ?” என்று சிறிது நேரம் பேசிவிட்டு தான் மேற்கொண்டு தன் வாழ்க்கையில் என்னென்ன செய்ய போகிறேன் என்பதை நிவியிடம் பேசி விட்ட சந்தோஷத்தில் போன் வைத்திருந்தான்.

