Loading

“அக்கா இப்படி பால் கீழே பீசி விடுறீங்களே பாப்பாவுக்கு பால் கிடைக்குதா? ஒன்னும் பிரச்சனை இல்லையே? அப்படி செய்யலாமா ?”..

 

“பிரச்சனை இல்ல, அம்மா தான் இந்த மாதிரி செய்ய சொன்னாங்க ,இல்லனா பால் கட்டிட்டு எனக்கும் வலிக்கும், பாப்பாவுக்கும் பால் கிடைக்காம போயிடும்னு சொல்லி இருக்காங்க..

 

சரி அதை விடு.. நீ சொல்லு என்னாச்சு, என்ன விஷயம்.?”என அவளது முகத்தை உற்று நோக்கினாள்.

 

 

“ஒன்னும் இல்ல க்கா சும்மாதான்..” என்று அவளது கையில் சாக்லேட் கொடுத்தாள்.

 

அந்த சாக்லேட்டை அமைதியாக வாங்கிக் கொண்டவள் ,”அவன் கொடுத்தானா ?”என்று கேட்டாள் .

 

“இல்லக்கா நான் அவர் கிட்ட பேசி மூணு மாசம் ஆகுது”… என்றாள் அமைதியாக

 

“நீ அதுக்கு அப்புறம் அவன்  கிட்ட பேசவே இல்லையா ?”லேசான கோபத்துடனே  வார்த்தைகள் வெளிவந்தன..

 

குரல் கம்ம. தொண்டை அடைக்க.. நா வறண்டு விழிகளில் நீர் கசிய  “பேசினேன், பேசினதால தான் …பேசினதுக்கு அப்புறம் தான் ..” என்று மேற்கொண்டு பேச முயன்றவளின் நெஞ்சம் தாங்காமல் விம்பியது.

 

 

 

“எனக்கு புரியல வனிதா..”

 

விழிகளில் நீர் கசிய, நடந்த சம்பவங்களை ஒன்றாக ஒன்றாக வனிதா கூறி முடித்தாள்.

 

“என்ன பண்ணி வச்சிருக்கீங்க , உங்க வீட்டுக்கு பக்கத்து வீடு தான பிரேம் வீடு, சுத்தி யாராச்சும் உனக்கு தெரிஞ்சவங்க பார்ப்பாங்கன்ற எண்ணம் கூடவா ரெண்டு பேத்துக்குமே கிடையாது…

 

ஒன்னு கீழே உட்கார்ந்து பேசி இருக்கணும், அதுவும் உங்க அண்ணி கண்ணில் படுற மாதிரி பேசி இருக்கீங்க”. என்று கோபத்துடன் சீறினாள்..

 

“அது முடிஞ்சு போச்சு கா.இப்போ ஒன்னும் பிரச்சனை இல்ல …”

 

“இப்போ அவன் கிட்ட நீ பேசுறியா இல்லையா?”..

 

“என்கிட்ட ஃபோனே இல்லை அக்கா”.

 

“என்கிட்ட சொல்லணும்னு உங்க ரெண்டு பேத்துக்குமே தோணல இல்லையா?..

 

ஏன் ?உன்னால என்ன வேற எப்படியுமே காண்டாக்ட் பண்ண முடியாதா ?”..

 

“அம்மா போன்ல இருந்து பேசலாம். என்கிட்ட உங்க நம்பர் இல்ல ,இல்லன்னா நான் உங்கள காண்டாக்ட் பண்ணி இன்பார்ம் பண்ணி இருப்பேன்.. எனக்கு உங்க நம்பர் தெரியாது மனப்பாடமா.. போன்ல மட்டும்தான் சேவ்ல இருக்கு.

 

நான் சரண்யா அக்கா கிட்ட கேட்டதுக்கு அவரு உங்ககிட்ட சொல்ல வேணாம்னு சொன்னதா சொல்லிருந்தாங்க. அதனாலதான் நான் அமைதியா விட்டுட்டேன்..”

 

“என்கிட்ட காலேஜ் வந்ததுக்கு அப்புறமும் யாருமே சொல்லலையே. நான் தான் நேத்து சொல்ல வேணாம்னு சொல்லியிருந்தேன்..”

 

“உனக்கு அவன் மேல  நம்பிக்கை இல்லையா ?”

 

இதழ்களில் புன்னகையை தவழ விட்டபடி.. “எனக்கு அவர் மேல நம்பிக்கை இருக்கு ,ஏன் நம்பிக்கை இல்லாம? ..

 

பாப்பாவ பாக்க அவர் வந்தப்போ என்கிட்ட சொல்லிட்டு வரல, வந்ததையும் என்கிட்ட சொல்லல என்ற கோபம் தான். அதை தாண்டி வேற எந்த கோபமும் கிடையாது க்கா.

 

அண்ணனை விட்டுட்டு எப்படி இருக்கீங்க, அம்மா வீட்ல இருந்து நீங்க காலேஜ் வரதா சரண்யா அக்கா சொன்னாங்க .அண்ணன் வந்து உங்கள பாத்துட்டு போவாரா , இல்ல நீங்க அங்க போயிட்டு வருவீங்களா?”என்று பேச்சை மாத்தினாள் ..அதையே பேசிக் கொண்டிருக்க அவளுக்கு விருப்பமில்லை.. ஆனால் , விஷயத்தை இவளிடம் சொல்ல வேண்டும் ..அதுவும் தானாக சொல்ல வேண்டும் என்று எண்ணியதால் அவளைப் பார்க்க வந்தாள்..

 

“என்ன அக்கான்னு கூப்பிடுற? ,என் வீட்டுகாரரா அண்ணன்னு கூப்பிடுற என்ன உறவு முறை இது?” என்று பூவாய் மலர்ந்து சிரித்தாள் நிவே..

 

“அவரு எப்படி கூப்பிடுவாரு கா அண்ணனை..?” என்றாள் கேள்வியாக..

 

“மாமா !”என்று கூப்பிடுவான்.

 

” அப்போ உங்கள” என்று புருவம் உயர்த்தி சிரித்தாள்.

 

இவளும் புன் சிரிப்புடன்..”நான் அவனுக்கு தங்கச்சி எல்லாம் இல்லம்மா..” என்று ஜகா வாங்கினாள்..

 

” என்ன தங்கச்சியா ?”என்று கலகலவென்று சிரித்தாள்..

 

” வனிதா இப்பதான் சிரிக்கிறியா ?”

 

அவள் என்று சிரித்துக் கொண்டே ,”அப்படியும் வச்சுக்கலாம்..”

 

“என்னை சிரிக்க வைக்கணும்னு நினைக்கிறியா வனிதா?..

அவன் என்ன விட மூணு வருஷம் பெரியவன்.. அது உனக்கு தெரியும் இல்ல, உன்ன விட அஞ்சு வருஷம் பெரியவன் .அவன் ஒன்னும் எங்க செட்டு கிடையாது ..”

 

“தெரியும் ..தெரியும்!..  ஏன் தெரியாம ” என்று சிரித்தவள். ஆனாலும் ,”நீங்க அவரை வாடா போடானு தானே பேசுறீங்க ..?”

 

நிவேதாவும் சிரித்துவிட்டு.. “நீயுமே அவன வாடா போடான்னு தானே சொல்ற ,அப்புறம் என்ன ?”

 

“ஏன் சொல்லாமா ? நான்  சொல்ல தான் செய்வேன் …”என்றாள் உரிமையாக..

 

“அது சரி” என்று சிரித்துவிட்டு ,”வனிதா நீ ஃபர்ஸ்ட் பில்டிங் வேற  கிளம்பு எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் உனக்கு அவன் மேல நம்பிக்கை இருந்தா அதுவே போதும்.

 

ஒழுங்கா படிச்சு முடி மேற்கொண்டு பார்த்துக்கலாம். அவனுக்கு நிறைய கனவு இருக்கு, உனக்கு தெரியும் நினைக்கிறேன். நான் சொல்ல வரது..”

 

“புரியும் கா. அதனால் தான் அமைதியா இருக்கேன். ..சரி நான் வரேன்..” என்று விட்டு வேகமாக மூச்சிரைக்க கீழே ஓடி இருந்தாள் .

 

அவள் கீழே செல்லும் வரை பார்த்துக் கொண்டு நின்றாள் நிவே.

 

சரண்யா தான் அவளது அருகில் வந்து தோளில்  கை வைக்க…

 

“ஏண்டி என்கிட்ட யாருமே சொல்லல .. ?  ”

 

“நவி உன்கிட்ட இப்போதைக்கு சொல்ல வேணாம்னு சொல்லி இருந்தான் .

 

நேத்து வனிதாவுமே சொல்ல வேணாம்னு தலையாட்டி இருந்தா அதான்.  எப்படியும் எங்களுக்கு எல்லா விஷயமும் முழுசா தெரியாது, அவ சொல்ற மாதிரி வராது இல்லையா ?அதனால கூட யோசிச்சி இருக்கலாம்..”

 

“அப்படி மட்டும் கிடையாது, விசியத்தை சொன்னவ என்ன சிரிக்க வச்சுட்டு போயிருக்கா..” என்று  பூவாய் மலர்ந்து சிரித்தாள்.

 

“கஷ்டமா இல்லையா ?.. உண்மையா  இரண்டு பேரும் பேசிக்கவே இல்லடி ,அவன் இந்த மூணு மாசத்துல இங்க வரவே இல்ல. பிரேம்  சொன்னான் இங்க வந்தாலும் அவளை பார்க்கிறது இல்லைனு.

 

எனக்கே ஒரு மாதிரி  கஷ்டமா இருக்கு, எவ்வளவு நாள் நான் எவ்வளோ திட்டி இருக்கேன் இவளை..

 

ஒரு நாள் அவன் கிட்ட  பேசுறியா நாங்க பேச வைக்கிறோம்னு கேட்டதுக்கு கூட தப்பா எடுத்துக்காதீங்க நீங்க மட்டும் நவி கிட்ட பேசுங்க  நான் இப்போ பேசலனு சொன்னா..

 

இவ்வளவு பிரச்சனைக்கு நடுவுல அவன் இங்கிருந்து உடனே கிளம்பி இருந்திருக்கான், இவகிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம, அப்படி இருந்தும் கூட நான் அவரை நம்புறேன் அக்கா ,என்ன விட மாட்டான் என்று எனக்கு தெரியும் அப்படின்னு என்கிட்ட சண்டைக்கு வந்தா டி “என்றாள் சரண்யா …

 

சிரித்தவள், “அவனை புரிஞ்சுகிட்ட வரைக்கும் போதும் விடு ..”

 

“நீ நவி கிட்ட பேசலையா ?நிவே”.

 

“பேசுவோம்.  இதுவரைக்கும் சார் என்கிட்ட எதையும் சொல்லல ..”

 

“உனக்கு பாப்பா பொறந்திருக்கு என்றதால மட்டும்தான்   சொல்லல..”

 

“ஓ! அப்படியா சரி சரி” என்று விட்டு நிவேதா அமைதியாகி விட்டாள்.

 

நிவேதா குழந்தை பிறப்பிற்கு பிறகு காலேஜ் வந்திருக்கும் விஷயம் சரண்யா மூலமாக நவிலனுக்கு வந்து சேர.

 

அந்த வார இறுதியில் ஊருக்கு வந்திருந்தவன் ,திங்கட்கிழமை காலை அவளைப் பார்ப்பதற்காக சரண்யாவின் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தான்.

 

பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கும் பொழுது வனிதா கூட பலமுறை திரும்பி பார்த்து விட்டாள்.ஆனால் நவிலன் பார்வை ஒரு முறை கூட வனிதாவின் பக்கம் திரும்பவில்லை.

 

” என்னடி அண்ணன்  உண்மையாவே உண்ண மறந்துட்டாரா “என்று வனிதாவின் தோழிகள் கேட்ட போது  கூட..

 

” இப்போ என்ன பார்த்தும் பார்க்காத மாதிரி இருக்கிறது கூட எனக்காக தான்டி ” என்றாள் கர்வமாக..

 

சொன்னாலும் சொல்ல விட்டாலும் அதுதான் உண்மையும் கூட பஸ் வந்தவுடன்  சரண்யாவை ஏற சொல்லி நவி சொல்ல ..

 

வேகமாக பஸ்ஸில் முதல் ஆளாக ஏறி இருந்தாள் வனிதா.

 

ஏறியவள் ..வேகமாக நிவேதாவின் அருகில் சென்று ,”அக்கா நவி ” என்றாள் மெதுவாக ,

 

“என்ன ?”என்று அவள் கேட்கும் போதே..

 

“வெளியே பாருங்க ..”

 

வேகமாக வெளியே பார்க்க..

 

முதலில் வனிதாவை பார்த்த நவிலனின் கண்கள் கலங்க , நிவேதாவைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

 

நிவேதா ஒரு சில நொடி நவிலனை பார்த்துவிட்டு , வனிதாவையும் தன்னுடன் சேர்ந்து அவனை பார்க்க வைத்தாள்.

 

வனிதா வேறு பக்கம் திரும்ப “லூசு அவனை பாரு , இவ்வளவு நேரம் உன்ன பார்த்திருக்க மாட்டான்” என்றாள்.

 

“அவர் உங்களை பார்க்க தான் வந்தாரு” என்று சொல்லும் போதே..

 

“உஷ்!”  என்று அவளது வாயில் கையை வைத்து, தன்னோடு சேர்ந்து அவனைப் பார்க்க வைத்தாள் நிவேதா .

 

தனது காதலியையும் ,தனது தோழியையும் ஒரு சேர பார்த்துக் கொண்டு கண்கள் கலங்க நின்று கொண்டிருந்தவன், வேறு பக்கம் திரும்பி தனது கண்ணீரை துடைத்துக் கொண்டான்.

 

அவர்கள் பார்த்துக் கொண்டது என்னவோ ஒரு சில நிமிடம்  தான் சரண்யா தான் இருவரது  தோளிலும் தட்டியவள் “பஸ்ல இருக்கோம், பஸ்ல இருக்குற எல்லாரும் என்ன நினைப்பாங்கன்னு இல்லாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க, நம்ம ஸ்டாப்ல இருக்கவங்களும் உங்களை தப்பா பேசுவாங்க ,உனக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு , அவங்க வீட்டுல விஷயம் தெரிஞ்சு பிரச்சனையா இருக்கு கம்முனு இருக்க மாட்டீங்களா” என்று  இருவரையும் திட்டி விட்டு உட்கார்ந்தாள்.

 

வனிதா வேகமாக நிவேதாவின் தோளில் சாய்ந்து கொண்டு அழுதாள்.

 

வனிதா தேம்பிக்கொண்டே “உண்மையா என்னை பார்த்து மூணு மாசம் ஆகுது கா..” என்றாள்.

 

சரண்யா இருவரையும் முறைத்துக் கொண்டே ” அடி வாங்க போற வனிதா… சுற்றி இருக்கிறவங்க எல்லாம் பார்த்தா என்ன நினைப்பாங்க முதல்ல கண்ணைத் தொட” .

 

“ரெண்டு பேரும் ரொம்ப எமோஷனலாகுறீங்க இது உங்க ரெண்டு பேரோட ஃபியூச்சருக்குமே நல்லது இல்ல “என்றாள் அதட்டலாக.

 

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சரண்யா சொல்வது உண்மை என்பதால் இருவருமே வேகமாக கண்ணீரை துடைத்தார்கள்.

 

காலேஜ் சென்று சேரும் வரை வனிதா நிவேதாவின் தோளில் தான் சாய்ந்திருந்தாள். இறங்குவதற்கு முன்பாக வனிதா சாக்லேட் எடுத்து நீட்டினாள் நிவேதாவிற்கு.

 

“லூசு அவன் பண்ற வேலைய இப்ப நீ பண்ணிட்டு இருக்க “என்றாள் புன்னகை முகமாக..

 

” தெரியல ஏனோ கொடுக்கணும் போல தோணுச்சு.. அவ்ளோ தான்.. !” என்று ஒரு தலை அசைப்போடு கீழே இறங்கி விட்டாள்.

 

“என்னடி இது அவன் பேசாத டைம்ல உன்கிட்ட சண்டை போடுவாளோனு நினைச்சா, இப்ப தான்  உன்கிட்ட ரொம்ப ஒட்டிட்டு இருக்கா “என்று சரண்யா கேக்க..

 

“அவனோட இடத்தை என்கிட்ட கூட எதிர்பார்க்கலாம். விடு இதை பெருசா இனி யோசிக்காதீங்க  .. பேசாதீங்க..”என்று விட்டு நகர்ந்து விட்டாள்.

 

” போடி லூசு” என்று சரண்யா அமைதியாகி விட்டடாள்.

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்