Loading

 

நவிலனுக்குமே  புரிந்தது. அவள் சொல்வது உண்மைதானே இத்தனை நாட்களில் அவள் தன்னை சந்தேகிக்கவில்லையே .அதுவும் அவள் தன்னை இரண்டு வருடங்களாக விரும்புகிறாள் என்பதை அவனும் அறிவான் .

தானாக சென்று அவளிடம் தன்னுடைய விருப்பத்தை சொன்ன பிறகு, வேண்டும் ஆனால் அவள் தன்னிடம் தானும் விரும்புவதாக சொல்லி இருக்கலாம்.

 

ஆனால் ,அதற்கு முன்பாகவே இரண்டு வருடங்களாக அவள்  தன்னை நேசித்துக் கொண்டுதான் இருக்கிறாள் என்பது அவனுக்கு தெரியும். அதுவும் அன்று ஆதம் ஸ்கூலில் அவள் என்னை நேசிக்க செய்ததால்தான் அந்த பொசசிவ்வில் கோபத்தில் தான் அன்று அவள் நிவேதா தன் தோளில் சாய்ந்திருந்தது கூட ஒருவேளை இவர்கள் விரும்புகிறார்களோ ?என்று எண்ணி பயத்தில் தான் அன்று வார்த்தையும் விட்டிருந்தாள்.

 

அதை எண்ணி கண்கள் கலங்கியவன் .இவளிடம் எப்படியாவது பேச வேண்டும் என்று எண்ணி இருந்தான்.ஆனால் இப்பொழுது பேசுவதற்கான நேரமில்லை. ஏனென்றால் அவனுக்கும் இன்னும் மீதம் எக்ஸாம் இருக்கிறது. வனிதாவிற்கு எக்ஸாம் தொடங்குவதால் வந்து பார்த்துவிட்டு செல்வதற்காக வந்திருந்தான்.

 

அவளுக்கு ஒரு மெசேஜ் மட்டும் தட்டி விட்டிருந்தான். “நாளைக்கு காலையிலேயே கிளம்பிடுவேன் டி.. எனக்கு நாளைக்கு மதியம் எக்ஸாம் இருக்கு “என்று மெசேஜ் செய்திருக்க .

 

“எனக்கு தெரியும் நீ ஒழுங்கா எக்ஸாம் அட்டென்ட் பண்ணு. என்கிட்ட எப்பவும் போல பேச மட்டும் செய் “என்று மட்டும் அனுப்பி விட்டு அமைதி ஆகிவிட்டாள்.

 

நாட்கள் வேகமாக அழகாகச் சென்று இருந்தது .இங்கு நிவேதாவும் ,வனிதாவும் அவர்களது  எக்ஸாம் முடித்திருக்க. அங்கு நவிலன் அவனுடைய இறுதி ஆண்டு முதல் செமஸ்டர் முடித்து இருந்தான் .அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருந்தது.

 

அதன் பிறகு ,இருவரும் நார்மலாக பேசிக் கொண்டார்கள் .தினமும் பேசிக்கொண்டார்கள். எக்ஸாம் முடிந்து ஒரு வாரம் தன் சொந்த ஊரில் இருப்பதாக முடிவு செய்து நவிலன் ஊருக்கு வந்திருந்தான் .அப்பொழுது வனிதாவை பார்த்து ரொம்ப நாள் ஆவதால் நேரில் பார்க்க வேண்டும் என்று எண்ணியவன், பிரேம் வீட்டிற்கு வர சொல்லி இருந்தான்.

 

அவளுமே சரி என்று ஒப்புக்கொண்டு வந்தாள். பிரேம் வீட்டு மொட்டை மாடியில் இருவரும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது பக்கத்து வீட்டில் இருந்த வனிதாவின் அண்ணி இருவரும் பேசிக் கொண்டதைப் பார்த்து விட்டார்.

 

தனது கணவனின் தங்கை வீட்டுக்கு வரட்டும், வீட்டுக்கு வந்த பிறகு அவளை பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதியாகி விட்டாள்.

 

இங்கு வனிதா நவிலனிடம் கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேல் பேசிக்கொண்டிருந்தாள். நவிலனும் அவளது கையை தன் கைக்குள் வைத்துக் கொண்டு  பேசி கொண்டு இருந்தான்.

 

” சாரி டா.. நான்  தான் கோவப்பட்டு உன் கிட்ட பேசாம விட்டுடேன். ஆனா இப்பவும் சொல்றேன் “என்று அவள் ஆரம்பிக்கும் போதே..

 

“உன்ன பத்தி எனக்கு தெரியும் டி .

அவளை பத்தியும் எனக்கு தெரியும். நான் உன்னை புரிஞ்சுக்கிட்டதை விட அவள் உன்னை நல்லா புரிஞ்சுகிட்டா. அவ பல நாள் சொல்ற விஷயமே என்ன பத்தி அவ கிட்ட பேசாத . அவளும் நல்ல எந்த பொண்ணு தான்.ஆன  தன்னுடைய லவ்வர் வேறொரு பொண்ண பத்தி , பிரண்டாவே கூட  இருக்கட்டும் .அம்மா ,அக்கா ,தங்கச்சி இந்த மாதிரி எதுவா இருந்தாலும் அவங்கள பத்தி பேசிட்டே இருந்தா கோவம் வரத்தான் செய்யும் அப்படின்னு சொல்லி இருக்கா.

 

அப்படி கோபம் வந்து பொசசிவ்ல பேச செஞ்சா தான் அது உண்மையான உறவு .அது உனக்கான உறவு ,உன் மேல உயிரையே வச்சிருக்க உறவுனு சொல்லி இருக்கா.

ஆனா அதை இப்ப கண்கூட என்னோட வாழ்க்கையில  பாக்கும்போது எனக்கு சந்தோஷமா இருக்கு டி .ஆனா ஒரு சில நேரம் நீ கோவத்துல பேசும்போது அது எனக்கு கோபத்தை உண்டு பண்ணிடுது” என்று முத்து பற்கள் தெரிய மலராய் சிரித்தான் .

 

“இப்பயும் பிரண்டு தான்!” என்று அவனது தோளில் இரண்டு மூன்று அடிகளை பரிசாக வழங்கினாள் .

 

“சும்மா டி..” என்று அவளை தன்னருகில்  இழுத்தான்…

 

“மொட்டை மாடியில் நின்னுட்டு என்ன பண்ணிட்டு இருக்க நவி நீ?” என்றாள் கேள்வியாக சிறிது அச்சத்துடன் யாராவது பார்த்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

 

“இல்லனா மட்டும்.. மேடம் அப்படியே கிட்ட வந்துட்டு தான் மறுவேலை பாப்பீங்க பாரு..” என்று அவளை வம்பு இழுத்தபடி பூவாய் மலர்ந்தான்..

 

 

 

“பார்க்கலாம்… பார்க்கலாம் .. அதுக்குள்ள இப்ப என்ன அவசரம் அதுக்கு?” என்று அவளும் மென் புன்னகை ஒன்றை வீசினாள்.

 

சிறிது நேரம் அவளிடம் பேசிவிட்டு “பாப்பாவ பாத்தியா எப்படி இருக்கா ? நான் பொறந்த நாலு நாள் கழிச்சு அன்னைக்கு ஒரே ஒரு நாள்  பார்த்தது டி .. கண்ணுக்குள்ளே நிக்குது..!” என்றான் கண்கள் மின்ன ஆர்வமாக…

 

“ஏன் மெசேஜ் பண்ணி பேச வேண்டியதுதானே ?” என்று கேட்டுவிட்டு பூவாய் சிரித்தாள்.

 

“என்னால ரெண்டு வார்த்தை நீ நல்லா இருக்கியா ?பாப்பா நல்லா இருக்கான்னு கேட்டுட்டு வைக்க முடியாது டி. .. ஒரு அரை மணி நேரம் ஆச்சு நான் அவ கிட்ட பேசணும். இத்தனை நாள் நான் அவகிட்ட  பேசாத வரைக்கும் என்ன நடந்துச்சுனு  தெரிஞ்சுக்கணும். என்னோட விஷயத்தையும் ஒரு சிலதை நான்  அவ கிட்ட சொல்லணும்.

 

உண்மையா நம்மளோட பர்சனல் அவ கிட்ட சொல்ல மாட்டேன். அந்த லூசு சொல்றத கேட்பேன் தான்.ஆன , எல்லா விஷயத்துலையும்  அவ சொல்றத கேட்கவும் மாட்டேன். என் லைஃப்ல நடக்குற எல்லாத்தையும் அவ கிட்ட சொல்லிட்டும் இருக்க மாட்டேன் “என்றான்…

 

வனிதா அவனைப் பார்த்து  புன்முறுவல் பூத்தாள்.

 

“நான் சொல்றத நம்பாம  சிரிக்கிறியா  டி?..” என்றான் விழிகளை சுருக்கி கேள்வியாக..

 

“இல்லை “என்று தலையாட்டியவள்… ” இதையே தான் உன் பிரண்டும் சொல்லுச்சு அன்னைக்கு..” என்றாள்..

 

“என்ன  டி சொன்னா …?”

 

“குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் எக்ஸாம் எழுதுறதுக்காக காலேஜ் வந்திருந்த அன்னைக்கு  உன்னுடைய பிரண்டு கிட்ட.. அவங்க உன் கிட்ட பேசினாங்களான்னு கேட்டேன் .

 

அப்போ உன் பிரண்ட் நீ சொன்னதையே தான்  ஒரு வரி விடாம அதுவும்   சொல்லுச்சு …அதையே இப்போ நீ சொல்ற ..ரெண்டு பேருக்கும் இருக்க ஒத்துமையை நினைச்சு சிரிப்பு வந்துச்சு…

 

ஆனாலும் , உன் பிரண்டை பத்தி என்கிட்ட பேசாத டா . எனக்கு பொறாமையாவும் ,கோவமாவும் இருக்கு…

 

நீயும் நிறைய பொண்ணுங்க கிட்ட பேசுற .எனக்கு அதெல்லாம் பெருசாவே தெரியல …சரண்யா அக்கா கிட்ட டெய்லி கூட ஃபோன்ல பேசுற. ..மெசேஜ்ல பேசற ..எனக்கு அது பெருசாவே தெரியல .ஆனா, நீ வாரத்துக்கு ஒரு நாள் இவ கிட்ட மட்டும் பேசினா எனக்கு காண்டு ஆகுது…

 

அவ ரெண்டு வார்த்தை உன்கிட்ட பேசினா.. நீ என்கிட்ட பல ஆயிர வார்த்தை அவளை பத்தி பேசுற.. .

 

என் பக்கத்துல மட்டும் அவ இருந்தா அவளோட  கழுத்தை நெறிச்சிடுவேன் போல ..அவ்ளோ காண்டாகுது ” என்று முத்துப்பற்கள் தெரிய கலகலவென்று சிரித்தாள் .

 

“அவ கிட்ட பேசும் போது மட்டும் மரியாதையா பேசுற ..? என்கிட்ட பேசும்போது மட்டும் ஏண்டி அவளை அவ  இவனு  பேசுற.. .?”

 

“அது ஏனோ தெரியல..” என்றாள்.

 

“சாதாரணமா உன் ஃப்ரண்ட்டை ஒரு பொண்ணா பார்க்கும்போது நல்லாதான் இருக்கு. ஆனா, உன்னோட பிரண்டா பாக்கும்போது தான் எனக்கு கோபம் தலைக்கு மேலே ஏறி உக்காந்து இருக்கு.. நான் மட்டும் என்ன பண்றது ?”.

 

“சரி” என்று சிறிது நேரம் பேசிவிட்டு வனிதா வீட்டிற்கு சென்று இருந்தாள்.

 

வனிதா வீட்டிற்கு சென்றவுடன், வனிதாவுடைய அம்மா,” எங்கடி போயிட்டு வர ?”என்றார்.

 

“இங்க சும்மா பக்கத்துல தான்  ஃப்ரெண்ட் வீட்டுக்கு “என்றாள்.

 

“எந்த ஃப்ரெண்ட் வீட்டுக்கு?” என்று கேட்டார் கோபத்தை அடக்கியபடி,

 

“இன்னைக்கு என்ன மா  புதுசா கேள்வி கேட்டுட்டு இருக்க ?” என்றாள் புரியாமல்,

 

அவள் அவ்வாறு கேட்ட அடுத்த நொடி அவளுடைய  அண்ணன் வனிதாவை ஓங்கி அறைந்து இருந்தான். அவனது ஐவிரல்களும் அவள்  கன்னத்தில்  பதிந்து சிவந்து தீப்பற்றியது போல் எரிந்தது..

 

அடித்ததுடன் விடாமல், சினம் பொங்க ,சீற்றத்துடன், உள்ளுக்குள் கொதிநிலை வெடிக்க.. “உண்மையாவே .. உன்னை இப்படி கேள்வி கேட்காம விட்டது ரொம்ப தப்பா போச்சு வனிதா .. சின்ன புள்ள ஜாலியா இருக்கட்டும் அப்படின்னு உன் மேல நம்பிக்கை வச்சு உன்ன வெளிய விட்டதுக்கு நல்ல தண்டனை கொடுத்து இருக்க எங்களுக்கு…” என்றான் அண்ணன் காரன்..

 

“யாருடி அவன் கிட்ட உனக்கு என்னடி பேச்சு வார்த்தை வேண்டி கிடக்கு அதுவும் மணிக்கணக்கா, அடுத்தவங்க வீட்டு மாடியில் நின்னு சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்க பக்கத்துல நின்னு?” என்று கேட்டான் கோபம் குறையாமல்.

 

தன் காதல் விவகாரம் தன் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்து விட்டது என்பதை உணர்ந்தவள் …

 

தன்னைத்திடப் படித்திக் கொண்டு தைரியமாகவே என்றாக இருந்தாலும் ஒருநாள் வெளியே வரப் போகிறது அதற்கு இப்பொழுது தானே தன் வாயால் அனைத்து உண்மையும் சொல்வது நல்லது என்று எண்ணி..

“எனக்கு அவரை புடிச்சிருக்கு.. அவரை லவ் பண்றேன். இப்போ என்ன அதுக்கு?” என்று வனிதா  தன் அண்ணனிடம் சண்டைக்கு சென்றாள்…

 

அப்பொழுது வனிதாவின் அம்மா கோமதி தான்.. “இப்போ அதுக்கு என்ன வா ? அவன் உன் கூட பொறந்தவன் டி ..உன்னோட வயசுல பெரியவன்.. உன்னோட அண்ணன் இப்படித்தான் மட்டும் மரியாதை இல்லாம வாய் நீளுமோ ..? அவன் கிட்ட..

 

நம்ம வசதி என்ன.. ?அவனோட வசதி என்ன?”  என்றார் ..

 

“வசதி தான் உனக்கு ரொம்ப முக்கியமா மா..? அப்போ என் சந்தோஷம் முக்கியம் இல்லையோ.. ?… என்னோட விருப்பம் முக்கியம் இல்லையா?” என்றாள் வனிதா தனது அம்மாவிடம் ..

 

“ஒத்த பொண்ணுன்னு செல்லம் கொடுத்து வளர்த்ததுக்கு  பெத்தவங்களையே எதிர்த்து பேசுறியா ?” என்று வனிதாவின் அம்மா கோமதியும் அவள் முதுகில் இரண்டு போட்டார்..

 

 

 

“அப்படி சொல்லல மா.. எனக்கு அவரை புடிச்சிருக்கு மா .. “என்றாள் மீண்டும் மீண்டும் அதே வாசகத்தை விடாமல்..

 

 

“அடிச்சேன்னு வை ..கன்னம் பழுத்துக்கும்… அவன் எங்க இருந்து வந்தவன் டி. … அவன் என் பொண்ணுக்கு மாப்பிள்ளையா? எனக்கு மருமகனா? ” என்றார் முகத்தை சுளித்தபடி  கொஞ்சம் கூட கோபமும், ஆதங்கமும் மட்டுப்படாமல்..

 

“அவனும் நம்ப ஜாதி தான் மா..”

 

“நான் உன்னை அதையே கேட்கலையே ..? நம்ம ஜாதியா இருந்தா உன்ன கட்டி வச்சுருவேன் என்று கனவு கோட்டை கட்டிக்கிட்டு  இருக்கியா ?..

நான் இப்போ  அதை பத்தியே பேசல சரியா .. அவன் அப்பன் ஒரு குடிகாரன், ஊதாரி .. ஒண்ணுத்துக்கும் உதவாத உதவாக்கரை.. வெட்டியா தினமும் குடிச்சுக்கிட்டு தெரு தெருவா சுத்தி சுத்தி வரான் .

 

அவன் அண்ணன்  ஒரு  பொண்டாட்டி தாசன்.. அவ முந்தானையே புடிச்சிகிட்டு பின்னாடியே அவ என்ன சொன்னாலும் வால் புடிச்சிட்டு போறான்.. அப்பன் ,ஆத்தா எப்படி போனா எனக்கு என்ன வந்துச்சு. எனக்கு என் வாழ்க்கை தான் முக்கியம் என்று சுயநலமா அவன் வாழ்க்கையை பார்த்துட்டு தனியா போயிட்டான் .

 

அவங்களுக்கு என்று குந்த குடிசை கூட இல்ல.. இருக்க வீட்டையும் அவன் அண்ணன்  எடுத்துட்டு போயிட்டான் .கடக்கால் போட்டு வெறும் இடமா

கிடக்குது ஒரே ஒரு வீடு அவன் பேர்ல அவன் பின்னாடி சுத்திட்டு திரியிறியா நீ?” என்றார் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க.

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்