Loading

சரண்யா அவசரத்துடன், “அவகிட்ட அப்புறமா பேசிக்கலாம். இப்போ நேரம் ஆயிடுச்சு, சீக்கிரம் வா,” என்று சொன்னாள்.

அதன் பிறகு நிவேதா வனிதாவை திரும்பிப் பார்த்து கடுமையாக முறைத்துவிட்டு, எதுவும் பேசாமல் அமைதியாக எக்ஸாம் எழுத கிளம்பி சென்றாள்.

அன்று இரவே நிவேதா வனிதாவை மெசேஜில் அணுகி,
“இப்போ நீ என்ன முடிவு பண்ணி இருக்க, வனிதா?” என்று கேட்டிருந்தாள்.

“அவர்கிட்ட பேச வேண்டாம்னு எனக்கு எந்த முடிவும் இல்ல கா. நீங்க இவ்வளவு சொல்லியதுக்கப்புறம் கூட எனக்குள்ள கோபம் இல்ல. அவருக்கு எக்ஸாம் இருக்குன்னு தெரியாம நான் இத்தனை விஷயங்களை பண்ணிட்டேன்,” என்று குற்ற உணர்ச்சியுடன் சொன்னாள்.

“ஆனா, நீங்க அவருக்கு ஃபர்ஸ்ட் எக்ஸாம் முடிஞ்சிடுச்சுனு சொன்னதும் தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு. நான் வீட்டுக்கு வந்த உடனே அவருக்கு போன் பண்ணிப் பார்த்தேன்… மெசேஜும் அனுப்பிப் பார்த்தேன். ஆனா அவர் எடுக்கல,” என்றாள் கவலையாக..

“உடனே எடுத்துருவானு எதிர்பார்த்தியோ?”என்றாள் சினம் பொங்க..

“இல்ல கா, நான் அப்படி நினைக்கல. ஆனா இப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு,” என்றாள்.

“சரி நான் அவனோட ரூம் மெட் ஒரு பையனுடைய நம்பர் தரேன். அவன் நம்பருக்கு கூப்பிட்டு பாக்குறியா ?உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே.. எனக்கு அவன் நம்பர் எப்படி கிடைச்சது என்று நினைக்கிறியா?”..

“நான் அதெல்லாம் எதுவும் கேட்கல அக்கா. குடுங்க பாத்துக்குறேன்” என்றாள்.

சரி என்று விட்டு நவிலன்  ரூம் மெட் நம்பர் நிவேதா வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்தாள் .

வனிதா அந்த நம்பருக்கு இரவு 9 மணி போல் போன் செய்திருந்தாள்.

அவன் அப்பொழுதுதான் வேலை முடித்துக் கொண்டு வந்திருப்பான் என்பதால்,” ஹலோ!” என்று அந்தப் பக்கம் இருந்து நவிலன் ரூம் மெட் மகேஷ்  சொல்ல.

“நான் வனிதா பேசுறேன்! நவிலனோட “என்றவள் அமைதியாக இருக்க.

” எனக்கு தெரியும் சிஸ்டர் உங்கள பத்தி சொல்லி இருக்கான். சொல்லுங்க ,சிஸ்டர் என்னோட நம்பருக்கு கூப்பிட்டு இருக்கீங்க என்ன விஷயம் ?” என்றான்.

“இல்ல அவரோட நம்பருக்கு கூப்பிட்டேன். போன் ரீச் ஆகல வேலையில் இருந்து வந்துட்டாரா ?பேச முடியல இன்னிக்கு  அதான்” என்றாள் சிறு தயக்கத்துடன்..

மகேஷ் புன்னகையுடன், “அவன் இன்னும் வேலை முடிச்சிட்டு வரல சிஸ்டர்.. வந்த உடனே கொடுக்கிறேன்..

இல்லனா உங்க கிட்ட பேச சொல்றேன்.. நெட்வொர்க் கிடைக்காமல் இருந்திருக்கலாம்” என்று கூறிக் கொண்டிருந்த நேரத்தில் தான் நவிலன் அறைக்குள் அடியெடுத்து வைத்தான்.

“சிஸ்டர் வந்துட்டான் .. கொடுக்கிறேன் இருங்க..” என்றான் மகேஷ்.

“யாருடா மச்சான் ?”என்று நவிலன் கேள்வியாக கேட்க .

அதை போனின் இந்தப் பக்கம் கேட்டுக் கொண்டிருந்தாள் வனிதா.

“தங்கச்சிதாண்டா மச்சான்” என்றான்.

“உன் தங்கச்சியா? உன் தங்கச்சி ஏன்டா என்கிட்ட பேசணும்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

“லூசு பயலே… உன்னோட ஆளுடா!” என்று சொல்லிக் கொண்டே, அவன் கையில் போனை திணித்து விட்டு மகேஷ் விலகி நின்றான்.

ஒரு நிமிடம் கண்ணை மூடி திறந்த நவிலன் ,போனை காதில் வைத்து  “ஹலோ!” என்றான்.

“நவி!” என்று சொல்லும் போதே, அவளது குரலில் சிறிய தடுமாற்றம் தெரிந்தது.

“ஒருத்தருக்கு போன் பண்ணி எடுக்கலன்னா, அவரை டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு கூட தெரியாதா? அதுமட்டுமில்லாம இன்னொருத்தவங்க போன்க்கு கால் பண்ணுற? இவன் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சது? இனிமேல் இப்படிக் கூப்பிட மாட்டன்னு நினைக்கிறேன்.” என்று கடுமையாகச் சொல்லிவிட்டு, அவன் போனை துண்டித்தான்.

“டேய், என்னடா மச்சான்… இவ்வளவு சீக்கிரம் வச்சிட்ட?”
என்று சிரித்தபடியே, போனை அவன் கையில் கொடுக்கும்போது மகேஷ் வினவினான்.

“இல்லடா என் போன்ல இருந்து பேசிக்கிறேன்.. எனக்கு நெட்வொர்க் கிடைக்கலைன்னு உன்ன கூப்பிட்டு இருப்பா” என்று அவன் சாதாரணமாக சொன்னான்.

சிரித்துக் கொண்டே இருந்தாலும், “உன் ஆள் பரவால்ல மச்சான்.. நீ ஒரு நாள் பேசுலன்னு எனக்கு கூப்பிட்டு இருக்கு பாரேன்..!”   என்று பூவாய் சிரித்தான் மகேஷ்..

இங்கு நவிலனுக்கு தான்  உள்ளுக்குள் எரிமலை கொந்தளித்துக் கொண்டிருந்தது.
‘ஒரு நாளா? ஒரு மாசமே ஆகுது. இப்போ வரைக்கும் என்கிட்ட பேசணும்னு அவளுக்கு தோணல… இருக்கட்டும்!’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டு, வெளியில் எதையும் காட்டாமல் அமைதியாகிவிட்டான்.

அவனுடைய போன்லிருந்தாவது தன்னை திட்டுவதற்காகவாது நவிலன் போன் செய்ய மாட்டானா ? என்று பதினோரு மணி வரை காத்துக் கொண்டிருந்தாள் வனிதா..

ஆனால் ,அவன் போன் செய்வதாக இல்லை. இவளுக்கு தான் இங்கு பயமாக இருந்தது .மெசேஜ் செய்து கொண்டே இருந்தாள். போன் செய்து பார்த்தாள்  எடுக்கவில்லை. ஒரு வாரத்திற்கு பிறகு  இன்னும் இரண்டு தினங்களில் வனிதாவிற்கு எக்ஸாம் என்று இருக்கும் பொழுது ஊருக்கு வந்திருந்தான் நவிலன்.

வனிதா பஸ் ஏறப் போகும்போது அவள் பஸ் ஏறுவதற்கு முன்பு அந்த இடத்திற்கு வந்து நின்றான் .அவனை எதிர்பார்க்கவே இல்லை .வரேன் என்று தன்னிடம் சொல்ல கூட இல்லையே .. என்று கோபம் இருந்தாலும், அவனைப் பார்த்தவுடன் கண்கள் கரித்துக் கொண்டு வர லேசாக கண்கள் கலங்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு சிறிது இடைவெளி விட்டு பிரேமுடன் வந்து நின்றவன்..” மச்சான்  இன்னும் ரெண்டு நாளைக்கு  அப்புறம் எக்ஸாம் வேற ஸ்டார்ட் ஆகப்போகுது.. ஃபர்ஸ்ட் எக்ஸாம் வேற காலேஜ் வந்ததுக்கு அப்புறம் ஒழுங்கா பண்ணுவ என்று நினைக்கிறேன்.. ஏதாவது யோசிச்சு கோட்டை விட்டுற மாதிரி இருந்தா மேற்கொண்டு பேசறதுக்கு ஒன்னும் இல்ல ” என்றான் வேறு எங்கோ பார்வையைப் பதித்த படி .

தனக்கு எக்ஸாம் என்றவுடன் தான் சொல்லாமலே  தனக்காகவே வந்து நிற்கிறான் .ஆனால், இவனுக்கு எக்ஸாம் என்பதையே கோபத்தில் நாம் மறந்து விட்டோமே !என்று  தன் செயலை எண்ணி தன் மீதே கோபம் கொண்டாள்..

வனிதா பஸ் வரும் வரை அவனையே பார்த்துக் கொண்டு இருக்க. “சரி மச்சான் கிளம்பலாம். இதுக்கு மேல இங்க இருந்தா சரி வராது நல்லதும் இல்லை..” என்றான்.

சுற்றி ஆட்கள் இருக்க.. எதுவும் பேசவும் முடியாமல் அழுகையுடனே அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் .

நவிலன் சரண்யாவிடம் கண்காட்டி விட்டு செல்ல.

“லூசு நாம நிக்கிறது பஸ் ஸ்டாப்.. சுத்தி ஆளுங்க எல்லாம் இருக்காங்க அது உன் ஞாபகத்துல இருக்கா ?”என்றாள் சரண்யா சற்றே குரலை உயர்த்தி கோபமாக .

“சாரிக்கா..” என்று விட்டு தனது கண்களைத் துடைத்துக் கொண்டாள் .

அன்று மாலை காலேஜ் முடிந்து வந்த வனிதா அவனுக்கு போன் செய்ய..

முதல் முறை போன் செய்த போது அவன் எடுக்கவில்லை. இரண்டாவது முறை போன் செய்ய கடைசி ரிங்கில் எடுத்திருந்தான்.

“சொல்லுங்க மேடம்!”
என்றான் பட்டும் படாமல் ..

அவள் அமைதியாகவே இருக்க.

“பேசுறதுக்கு தானே போன் போட்டு இருக்கீங்க, பேச வேண்டியதை பேசிட்டு வச்சா நல்லா இருக்கும் .

எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. வெளியே வேற போக வேண்டி இருக்கு” என்றான் ஒட்டாத தன்மையுடன் யாரிடமோ பேசுவது போல.

அவளுக்கு உள்ளுக்குள் சங்கடம் கொந்தளித்தாலும், தன் மீது தவறு இருக்கிறது என்பதால்,
அவனின் வார்த்தைகள் மனதை குத்திக் கிழிக்க, கண்களின் விளிம்பில் எட்டி பார்த்த கண்ணீரை சுண்டி இழுத்து விட்டு,
“எக்ஸாம்… எப்படி எழுதின நவி?” என்று கேட்டாள்.

இவ்வளவு நேரம் கோபத்தை அடக்கிக்கொண்டு சாதாரணமாகப் பேசியவன்,
அவள் “எக்ஸாம் எப்படி எழுதின?” என்று கேட்டவுடனே, “நான் எப்படி எழுதினா உனக்கு என்னடி வந்துச்சு? எவனோ சாவுறான், நமக்கு என்ன வந்துச்சுன்னு இருந்தவள் தானே நீ? இவ்வளவு நாளா அப்படித்தானே இருந்த? இப்பவும் அப்படியே இரு… ஒண்ணும் பிரச்சனை இல்ல,”
என்று கசப்புடன் சொன்னான்.

கோபம் கொஞ்சமும் தணியாமல்  தொடர்ந்தான்.. “நான் எப்படி எழுதினா என்ன? ஒழுங்கா எழுதினேனா, இல்ல ஒழுங்கா எழுதலையான்னு கவலை உனக்கு எதுக்கு மா? நீ சந்தோஷமா இருந்தா சரிதானே, மேடம். இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்… உனக்கு அந்த கோபம்தான் பெருசா தெரிஞ்சிருக்கு. அப்ப நான் முக்கியமா உனக்கு படல. நான் உன் கண்ணுக்கே தெரியல,அப்படி தானே ” என்றான் வலியுடன்..

“நவி… அது…” என்று சொல்ல முயன்றவள், திக்கி திணறி வார்த்தைகள் தொண்டையில் சிக்க, தடுமாறினாள்.

“போனை வைக்கிறியா? இல்லன்னா ஏதாவது பேசிடப் போறேன். அப்புறம் உனக்கும் கஷ்டம், எனக்கும் கஷ்டம். உண்மையாவே சொல்றேன்… நான் இப்போ வெளியேதான் இருக்கேன். வை போனை!”என்று கத்திவிட்டு, உடனே அவன் போனைத் துண்டித்தான்.

இரவு 9:30 போல் நவிலனாகவே வனிதாவிற்கு போன் செய்திருந்தான் .

அவள் எடுத்தவுடன்  “சாரி டா .. உண்மையாவே உனக்கு எக்ஸாம் இருக்கிறத மறந்துட்டேன். உன் பிரண்ட் சொல்லித்தான் தெரியும் ..” என்று அன்று நிவேதா குழந்தை பிறந்த பிறகு முதல் நாள் எக்ஸாமிற்கு வந்திருந்த அன்று நடந்த அனைத்தையும் சொல்ல.

“அப்ப அவ சொல்லித்தான் உனக்கு எனக்கு எக்ஸாம் இருக்குன்னு தெரிஞ்சிருக்கு , இப்ப மட்டும் மேடம் எப்படி அவ கிட்ட போய் பேசினீங்க .? உங்களுக்கு தான் அவளை பார்த்தாலே கண்டாலே ஆகாதே.. ?”

“லூசு மாதிரி பேசாத நவி !.எனக்கு உன் பிரண்டா பிடிக்காது தான் .அதுக்காக பாத்தா மூஞ்ச தூக்கி வச்சிட்டு திருப்பிக்கிட்டு போற அளவுக்கு ஒன்னும் கிடையாது. பிடிக்காதுன்றதுக்கு காரணமும் நீ மட்டும் தான். உன்ன பிடிச்சிருக்க போய் தான் எனக்கு உன் பிரண்டை பிடிக்காம இருக்கு, திரும்பத் திரும்ப அதை நான் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது. நான் குழந்தையை பார்க்க போனேன். “

“குழந்தையை பார்க்க மட்டும் தான் போனியா? இல்ல…”

“அன்னைக்கும் இப்படித்தான் நவி சொன்ன..உண்மையாவே நான் உன் பிரண்ட்ஷிப்பை இந்த நிமிஷம் வரைக்கும் சந்தேகபடல எனக்கு உண்மையாவே பயமா இருக்கு. எங்க உன் பிரண்டாலையே நீயும் நானும் பிரிஞ்சிடுவோம்னு..

அதுக்காக உன் பிரண்டு தான் காரணம் என்று நான் சொல்லல. நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு வலிக்குது .இதெல்லாம் உனக்கு நான்  ப்ரூவ் பண்ணனுமானு நீ ஒவ்வொரு டைமும் கேட்டுட்டு இருக்க .

நீ சொல்ற மாறி தான் எங்களோட ஃப்ரெண்ட்ஷிப்பை உன்கிட்ட ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியம் இல்லைன்னு சொல்லிட்டு இருக்க இல்ல.. இப்போ எனக்கு பயமா இருக்கு. என் லவ் உண்மைதான் நான் உன்னை சந்தேகப்படல அப்படின்னு நான் உனக்கு ப்ரூப் பண்ணும் போல” என்று  அழுகையுடன் கூறி விட்டு வனிதா போன் வைத்திருந்தாள் .

Click on a star to rate it!

Rating 3.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்