காமெடி நடிகரின் டிரெஸ் கோடு – சிறுகதை

Loading

கல்லூரி அரங்கம்

அன்றைக்கு வழக்கத்தை விட அதிக

சலசலப்புடன் இருந்தது.

“இன்று தருண் சார் வர்றாராம்!”

என்ற அறிவிப்பு, notice board-ஐ

தாண்டி, மாணவர்களின் WhatsApp

status-களிலும் சுற்றிக் கொண்டிருந்தது.

“டா… அந்த ‘காட்டேரி நரி’ தான்டா இவன்!”

“ஆமாம் டா…  இப்போ motivational

speaker ஆயிட்டாரே!”

“இவங்க speechல comedy bonus

கிடைக்கும் போல!”

மாணவர்களுக்கு அவர் யார் என்பது

ஏற்கனவே தெரிந்த விஷயமே.

ஆனால், நேரில் பார்க்கும் ஆர்வம்

தான் அதிகம்.

அந்த guest

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை

சிரிப்பால் குலுக்கியவர்.

ஒரு படத்தில் “காட்டேரி நரி”யாக

நடித்ததற்காகவே, ரசிகர்கள் அவரை

அந்தப் பெயரிலேயே அழைக்கத்

தொடங்கினர்.

ஆனால் இப்போது அவர் ஒரு நடிகர்

மட்டும் இல்லை.

இந்திய அளவில் உயர்ந்த பதவி

வகித்த ஒருவரின் வழிகாட்டுதலில்,

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்

விழிப்புணர்வு பயிற்சிகள் அளிக்கும்

trainer.

அவரின் பெயர்  தருண்.

மாணவர்கள் எதிர்பார்த்தது

ஒரு suit, tie, அல்லது

குறைந்தபட்சம் formal shirt.

ஆனால் மேடையில் வந்தவர்

பெரிய பெரிய கோடுகளுடன் கூடிய

ஒரு T-shirt, ஜீன்ஸ்…

முழுக்க casual look.

ஒரு நொடி அரங்கம் அமைதியாகியது.

“டா… posterல formalஆ இருந்தாரே…

இது என்ன real version?”

மாணவர்கள் சிலர் சிரித்தார்கள்.

சிலர் “cool” என்று பார்த்தார்கள்.

சிலர் குழம்பினார்கள்.

அரங்கத்தின் ஓரத்தில் நின்று

பார்த்துக்கொண்டிருந்தார் கல்லூரி

தாளாளர் கணபதி.

அவர் முகத்தில் ஒரு சிறிய

சுருக்கம்.

பேச்சு முடிந்ததும், அவர் நேராக

தருணை அழைத்தார்.

“ஒரு இரண்டு நிமிஷம் பேசலாமா?”

“நீங்க நல்லா பேசுறீங்க.

மாணவர்களுக்கு inspire

பண்ணுறீங்க.

ஆனா… இப்படி T-shirt

போட்டுக்கிட்டு வந்தா,

உங்களைப் பற்றி மாணவர்கள்

என்ன நினைப்பாங்க?”

தருண் சிரித்தார்.

“சார்… இது என் brand.”

“Brand வேணாம். நீங்கள் ஆயிரம்

பேருக்கு முன்னாடி பேசுறீங்க.

நீங்க எப்படி வர்றீங்கன்னு

பார்த்து தான் அவங்க கத்துக்குவாங்க.

உடை என்பது respect-ஐ

குறைக்கக் கூடாது.”

அது கண்டிப்பு இல்லை.

அது பொறுப்புணர்ச்சி.

தருண் ஒரு நொடி அமைதியாக

நின்றார்.

பின்னர் மெதுவாக,

“சரி சார்…” என்றார்.

சில மாதங்கள் கழித்து,

அதே கல்லூரி.

அதே மண்டபம்.

 

மீண்டும் ஒரு விழிப்புணர்வு

கூட்டம்.

இந்த முறை மேடையில் வந்தவர்

அதே தருண்.

ஆனால்…

முழுக்கை சட்டை.

சுத்தமான formal look.

மாறியது உடை மட்டும் இல்லை

பார்வையும்.

மண்டபம் முழுக்க மெதுவான

கிசுகிசு பரவியது.

“மச்சி… அந்த ‘காட்டேரி நரி’யா இது?”

“ஆம்டா…  இப்போ ‘ஒழுக்க நரி’

ஆயிட்டாரே!”

தருண் அதைக் கேட்டார்.

சிரித்தார்.

“நீங்க எல்லாரும் நினைக்கலாம்…

‘இந்த ஆள் முன்னாடி T-shirtல

வந்தார்… இப்போ shirtல

வந்திருக்காரே’ன்னு…”

மாணவர்கள் அமைதியாகிப்

பார்த்தார்கள்.

“ஒரு நல்ல teacher என்ன

கற்றுக்கொடுப்பார்னு தெரியுமா?

பாடம் மட்டும் இல்ல… வாழ்க்கையும்.”

சிறிது நேரம் நின்றார்.

“நான் முன்னாடி நினைச்சது

‘நான் என்னவோ அதுதான் முக்கியம்’ன்னு.

ஆனா…

‘நான் எங்க இருக்கேன்,

யாருக்கு முன்னாடி நிற்கிறேன்’ங்கிறதும்

அதே அளவு முக்கியம்.”

அவர் சிரித்தார்.

“நான் T-shirt  ஐ விடவில்லை…

அதை எப்போது அணியணும்னு

கற்றுக்கிட்டேன்.”

மண்டபம் முழுக்க கைதட்டல்.

அந்த நாள் மாணவர்கள் எடுத்துச்

சென்ற பாடம்

உடை மாற்றம் இல்லை…

உணர்வு வளர்ச்சி.

“நாம் யார் என்பதும் முக்கியம்…

நாம் எங்கு நிற்கிறோம் என்பதும்

அதே அளவு முக்கியம்.”

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்