Loading

அவள் மேனி எங்கும்  பட்டுப் புடவை சரசரக்க, நெற்றியில் சின்னதாக பொட்டு வைத்து, பெரிய காதணிகளும் காதில் ஊஞ்சலாட விட்டு, கழுத்தை ஒட்டின ஒற்றை அட்டிகையும் கை வளையல்களும் என தங்க புஷ்பம் போல ஜொலிக்க ஜொலிக்க கண்ணாடி முன் நின்று தன்னை அலங்கரித்து திருமணத்திற்கு செல்ல  தயாராகிக் கொண்டிருந்தாள் ஜெஸி.

இன்று தான் தன்யாவுற்கும் ரிஷிக்கும் திருமணம்… தன்யா வீட்டில் திடீரென மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட, வேறு வழயில்லாமல் அவளது காதலை   பெற்றோர்களிடம் உடைத்து விட்டாள்.

பெற்றோர்களின்   வீம்பு பட்டியலில் முதலிடமான மறுத்தல் வேலையை அவர்கள் சரியாக செய்ய, ஜெஸி தான் அவர்களை அடக்கி சமாதானம் செய்து ரிஷயை ஏற்க வைத்து திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வைத்தாள்.

ரிஷி வீட்டில் தன்யா, பெண் மெய்காப்பாளர் வேலையில் இருப்பது மட்டும் அவர்களுக்கு நெருடலாக இருந்தது.

அதை  ஜெஸியின் மூலம் ரிஷியே சரி கட்டவைத்து திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வைத்துவிட்டான்.

இருவரது பங்கேற்பிலும்  இன்று ரிஷி, தன்யா அவர்களின்  கல்யாணம் வைபோகம் நடக்கப் போகிறது… அதற்கு தான் அவளும்

குடும்பத்துடன்  திருமணத்திற்குச் செல்ல கிளம்பிக் கொண்டிருக்கிறாள்.

கதவு தட்டும் சத்தம் கேட்க, வேகமாக சென்று திறந்தாள். டெனியை தூக்கி வைத்த படி அறையில் வாசலில் நின்றிருந்தான் ஆரோன்.

காணாத பொன் சிலை  பெண் சிலையாய் நேரில் வந்து நிற்பது போல வாயை பிளந்து பார்த்தவன், செதுக்கிய அந்தச் சிற்பியை (பிரம்மனை) பாராட்டாமல் இல்லை அவன்.

என்றோ அவளை தழுவின கைகள் இரண்டும் இன்றும் அவளை தழுவ பரபரக்க… இவன் கட்டுப்பாடு போட்டு விட்டு  தன்னுள் அடக்கி வைத்தான். ஆனால் அவை எத்தனை காலம் அடங்கி இருக்கும்? அவளை ஆள தன் கட்டை அவிழ்க்க நேரம் பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன.

“அம்மா !”என்று அவளிடம் தாவினான் டெனி. அவனை தூக்கிக் கொண்டு “என்ன செல்லம்?”என்று  அணைத்து முத்தம் கொடுத்தாள். அவனும் அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ! லவ் யூ மா”என்றான்.

“ஓ… மீ டூ லவ் யூ டெனி !”என்று மீண்டும் அவன் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

அதில் ஏனோ அவனுக்கு பொறாமையாக இருக்க, இருமல் வந்தது போல் தன் இருப்பிடத்தை காட்டினான்.

அவர்கள் இருவரும் ‘ என்ன ?’ என்பது போல அவனை பார்த்தனர்.

இருவரது பார்வையில் கொஞ்சம் தடுமாறியவன் அதனை சமாளிக்கும் பொருட்டு, “ஆங் ! டெனி ! நீ பாட்டி கிட்ட இரு அப்பா, அம்மா கிட்ட பேசிட்டு வர்றேன்”என்று அவனை அவளிடமிருந்து பறிக்காத  குறையாக வாங்கி அவனை இறக்கி விட்டு அனுப்பி வைத்தான்.

புருஷனின் கள்ள தனத்தை அறிந்துக் கொண்ட அவனது கண்ணாட்டி இதழின் ஓரத்தில் பூத்த புன்னகையை மறைத்துக் கொண்டு  அங்கிருந்து மீண்டும் கண்ணாடி முன் நின்று தன்னை சரி பார்த்துக் கொண்டிருந்தாள்.

மகன் சென்றதும் திரும்பியவன் அவள் இல்லாததும் உள்ள நுழைந்து அவளை காண,

அவளோ அவளை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளை அப்பட்டமாக ரசித்தான் அவளது ரசிகன்.

மெல்ல அவளை நெருங்க, அவன் அருகே வருவதை ஓரக்கண்ணால் பார்த்தவாறு தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஜெ…!”அவன் தொண்டை அடைத்து சதி பண்ண, பேச்சில் ஒரு தயக்கம் வந்து தடை போட, உள்ளே  எழுந்த அவனது மனம் காரித் துப்பியது.

‘ கல்யாணம் ஆகி பிள்ளையே பெத்துட்டான் இன்னமும் பேச தயங்கறான்…! இவனை வச்சிட்டு ச்ச ‘ என்றிட,  இவனோ முயன்று “ஜெஸி !”என்றான்.

அவனது மனப் போராட்டத்தை அறிந்த ஜெஸி தனக்குள் சிரித்துக் கொண்டு “சொல்லுங்க ஆரோன்” என்றாள் அவனை பாராமல்.

“நீ இந்த புடவையில ரொம்ப அழகா இருக்க ! யூர் ஆர் கில்லங் மீ ! “என்றான் கஷ்டப்பட்டு.

“ஓ…! தேங்க்ஸ் !”என்று சப்பென்று ஆக்கிவிட்டாள். அவனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.

‘ என்ன அவனுக்கு மட்டும் முத்தம் எனக்கும் மட்டும் வெறும் தேங்க்ஸா !’ என முகம் கூம்பி போக,

அடக்கப்பட்ட சிரிப்புடன் அவன் முகத்தை பார்த்து விட்டு தனது கைப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பிய வேளையில் மீண்டும் “ஜெஸி” என்றான்.

“சொல்லு ஆரோ !”என்றாள்.

காதலுடன் “லவ் யூ ஜெஸி !”என்றான்.

அதற்கு அவளோ, அவன் முகம் பார்த்து ” ம்…  லேட்டாச்சி வாங்க போலாம் !”என்று அலட்சியம் செய்து விட்டு  முன்னே சென்றவளின் கைகளை பிடித்துக் கொண்டு சுவரில் சாய்த்தான்.

அவளது அலட்சிய  பதிலில் அவனுக்கு கோபம் சுர்ரென்று வர,

“என்னடி நினைச்சிட்டு இருக்க நீ ? நானும் மூணு மாசமா ஐ லவ் யூ

! ஐ லவ் யூ சொல்லிட்டு இருக்கேன்… அதை கண்டுக்காம அலட்சிய படுத்துட்டு போற  ! அன்னைக்கு கார்ல சொன்னதுல இருந்து இப்போ வரைக்கும் உன் கிட்ட என் காதலை சொல்லிட்டு தான் இருக்கேன். ஆனா உன் கிட்ட எந்த ரெஸ்பான்ஸ் இல்ல! என் காதல் உனக்கு எப்படி தெரியுது ?”எனக் கோபத்தில் கத்தி கேட்டு விட்டான்.

அவளும் அவன் முன் கை கட்டிக் கொண்டு சன்னமாக முறைத்தவள்

“என்ன இப்போ ? குட் நைட் ! குட் மார்னிங் மாதிரி ஐ லவ் யூ சொன்னா  நான் என்ன பண்றது? என்னைய என்ன ரியாக்ட் பண்ண சொல்றீங்க…? என் பழயை ஆரோன் இப்படி இல்ல. அவன் ஐ லவ் யூனு சொல்லிட்டு இருக்க மாட்டான். அவன் காதல சொல்ற ஸ்டைலே வேற, இந்நேரம் நீ அழகா இருக்கனு வாய் வார்த்தையில் சொல்லிருக்க, என் அழகா ஆராதிருச்சிருப்பான் நானும் நாலஞ்சு சேலை மாத்திருப்பேன்…  எனக்கு அது தான் பிடிக்கும்… நீங்க தள்ளி நின்னி மெசேஜ் போல சொல்றது எனக்கு பிடிக்கல ! என்ன தயக்கம் உங்களுக்கு என் கிட்ட, நட்போட கட்டி அணைக்கற காதலா அணைக்கறதுக்கு என்ன வெட்கத்த விட்டு நான் கேட்கணுமா உங்க கிட்ட? “என்றவளின் குரல் உடைந்திருந்தது.

இன்னும் தன்னிடம் நெருங்காது தள்ளி நிற்கும்  அவனிடம் நெருக்கத்தை உருவாக்கவே அவன் நெருங்கி வரவே இவ்வாறு அவன் காதல் சொல்லு நேரமெல்லாம் அலட்சியம் செய்வது போல வேற ஏதோ பேசி விட்டு செல்வாள். இன்றும் அதே செய்ய, அவளது உணர்வை புரிந்து கொள்ளாதவனுக்கோ கோபம் வந்தது

“நான் இப்படி தான் ! நான் பழைய ஆரோன் இல்ல ! அவன் காதல் சொல்ற விதம் எனக்கு தெரியாது நியாபகத்துல இல்ல ! உனக்கு அவனை தான் பிடிக்கும் என்னை இல்லை… அதனால தான் நீ என்னை நெருங்கல ! வந்த நாள்ல முத்தம் கொடுத்த, அதுக்கு அப்புறம் ஏன் உன் கடமை செய்யல நீ? என்னா நான் பழைய ஆரோனா இல்லைனு தான !என் கிட்ட பழைய ஆரான எதிர்பார்க்காத !அவன் இல்ல நான் “என்று கோபத்தில் கத்தி விட்டு போக இவளுக்கு அழுகையும்  உள்ளே வலியும் கொணர்ந்தது.

காதலித்தும், கணவன் மனைவியாக வாழ்ந்து பிள்ளையை பெற்ற பின்னும் இந்த நிலை அவசியம் தானா ! புருஷன் அருகே இருந்தும் நெருக்கம்  இல்லாதது வேதனையாக இருந்தது. அதுவும் அளவில்லாத காதலை கொண்ட  இருவரும் இப்படி தள்ளி நிற்கும் நிலை எப்போது தான் மாறுமோ ?

இருவருக்குமே இருவரும் நெருங்கி வராத கோபம். அவனோ கோபத்திலிருக்க, இவளோ  வலியை மறைத்து கொண்டு வந்தாள். அந்த பயணம் அமைதியாக.

மண்டபகத்திற்கு வந்தது விட்டனர்.  அவர்களை வரவேற்றார் தன்யாவின் தந்தை சேகர் உள்ளே அழைத்து செல்ல, அவர்களை வரவேற்று அமர வைத்தார் தன்யாவின் தாய் கோமதி.

ஆரோக்கிய , ஆப்ரஹாம் தன் நண்பர்கள் குடும்பத்துடன் பேரனை வைத்துக் ஐக்கியமாகி விட்டனர்.

இவனோ தன் நண்பர்களை தேடிச் சென்றான் அவளும்  தன்யாவை பார்க்கச் சென்றாள்.

அறையின் உள்ளே தன்யாவை அலங்கரித்து கொண்டிருக்க, உடன் ரெக்ஸ்லினும் ஷர்மியும் அவளை கலாய்த்துக் கொண்டிருந்தனர்

அறைக்குள் நுழைந்தாள் ஜெஸி.

“இதான் நீங்க வர நேரமா?” ஷர்மி அவளை கண்டிக்கும் விதமாக கேட்கவும் தன்யாவை கண்ணாடி வழியே பார்த்து கண் சிமிட்டியவள், ஷர்மியின் கேள்விக்கு பதில் சொல்லும் முன் முந்திக் கொண்டாள் ரெக்ஸ்லின்.

“என்னடி இப்படி தங்க விக்ரஹம் மாதிரி ஜொலிக்கற ஜெஸி பார்த்ததும் ஆரோன் பூசை நடத்தாமலா  போயிருப்பான். மேடமும் ரெண்டு மூணு தடவை குளிச்சிருப்பாங்க  அதான் லேட்டாகிருக்கும்”என அவளை கேலி செய்தாள்.

ஜெஸியோ அமைதியாக இருந்தாள். அவளது அமைதியை கண்ட இருவரும் என்ன வென்று கேட்க, அவள் நடந்ததை சொன்னாள்.

“நீ ஏன் பழைய ஆரோன் அவனுக்குள்ள தேடற? இப்போ எப்படி இருக்கானோ அப்படியே ஏத்துக்கோயேன்டி “என்ற ஷர்மி ஏறிட்டவள்,” நான் அவன் கிட்ட பழைய ஆரோன் எதிர்பார்க்கல அதே நேரம் அப்படி சொன்னாலாவது பொறாமையில  என்னை நெருங்குவான் நினைச்சி தான் சொன்னேன்…”

“அவன் தான் நெருங்கணுமா? நீ நெருங்க கூடாதா? கணவன் மனைவிக்குள்ள என்ன கூச்சம்…?! நீயே அவனை கட்டிப்பிடி முத்தம் கொடு ! அவனை உன் கன்ட்ரோலுக்கு கொண்டு வாடி !”

ரெக்ஸ்லினும் சொல்ல,

“நான் தாண்டி தயக்கம் இல்லாமல் முத்தம் கொடுத்தேன் அவனை கட்டி அணைக்கிறேன். நான் மட்டுமே செஞ்சுட்டு இருக்க முடியுமா? அந்த பக்கம் ரியாக்ஷன் வேனும்ல… லவ் யூ சொல்றவன் கட்டி அணைச்சி முத்தம் கொடுக்கறதுக்கு என்ன? நானா போய் லவ் மேக் பண்றதுல எனக்கு எந்த பிரச்சனை இல்ல ! ஆனா அவன் அதுக்கும் ரியாக்ட் பண்ணலனா நினைக்கவே அசிங்கமா இருக்கு டி…!”என்று தன் பீலிங்ஸ் கொட்டு விட, அவளுக்கு தோள் கொடுத்தனர் அவளது தோழிகள்

“உன் ஆரோன் அப்படியா சொல்லு? எவ்வளவு ரொமான்டிக் அவன். ஏதோ அவன் பழச மறந்துட்டு வேற ஆளா இருக்கான். அவன நீ நெருங்கணும் நினைக்கிறான். நீ அவன் ஓயிப் டி நெருங்கிப் போறதில்லை தப்பே இல்ல…! புரியுதா?  அவன் தயக்கத்தை நீ தான்டி ஒடைக்கணும்… அட என்னடி இவ? இவ நமக்கு கிளாஸ் எடுத்தது போய் நாம இவளுக்கு எடுத்துட்டு இருக்கோம். இங்க பாரு ஹஸ்பானட் அண்ட் ஓய்ப்குள்ள தயக்கமே இருக்க கூடாது.  நீங்க லவ் பண்றத பார்த்து பத்து பதினைஞ்சு குழந்தைகளை பெத்துப்பீங்க எதிர்பார்த்தா நீங்க என்னடா, ஒத்தையோட நிக்கறீங்க? தயக்கத்தலாம் பார்க்காத ஜெஸி, அவனுக்குள் இருக்க பழைய லவ்வபில் ஆரோன நீ தான் எழுப்பி விடணும்…  சீக்கிரமா எல்லாத்தையும் முடிச்சிட்டு எனக்கு மருமகப் பொண்ண பெத்துக் கொடுடி ! என்றதும் ஜெஸியின் முகத்தில் வெட்கம் தவழ்ந்தது.

இங்கோ மூவரும் தனியாக  நின்று பேசிக் கொண்டிருந்தனர். “என்ன டா மாமா டல்லா இருக்க?” ஆரோனை பார்த்துக் கேட்டான் நிவாஸ்

“ஒன்னுமில்ல டா !”என்றான் சலிப்பாக,.”ஒண்ணுமில்லனு சலிப்பாக சொல்ற !என்ன தான் பிரச்சனை?”எனக் கேட்டான் எட்வார்டு முதலில் தயங்கியவன் பின் அனைத்தும் சொல்ல, இருவருக்கும் சிரிப்பு பொத்துக் கொண்டு வர, அடக்கிக் கொண்டனர் இருவரும்.

அவர்கள் சிரிப்பை அடக்குவது பார்த்து இவனுக்கு கோபம் வந்தது.

“ஏன் டா நீ என்ன டீ.ஆர் ஃபேன்னா ஹீரோயின தொடாம  நடிக்கறது போல, நீ உன் பொண்டாட்டிய தொடாமல் காதலிக்கிறீயாக்கும்… ?”என நிவாஸ் ஆரோனை கேலி செய்ய, அவனை முறைத்தான் ஆரோன்.

“அவன ஏன்டா முறைக்கற? அவன் சொல்றதுல என்ன தப்பு இருக்கு ! இன்னும் நீ என்ன காலேஜ் பையனா, லவ் மட்டுமே பண்ணிட்டு இருக்க? நீ அவளுக்கு புருசன் அவளுக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கும்ல நீ தான் அதை பூர்த்தி செய்யணும்… அவ உன் கிட்ட பழைய ஆரோன் எதிர்பார்க்கல அப்படி ஏதாவது சொன்னாலாவது நீ கோபப்பட்டு பொங்கி அவளை நெருங்குவன்னு சொல்லிருப்பா. ஒரு காலத்துல ஆரோன் யாரு தெரியுமா? தி மாஸ்டர் ஆப் லவ் ! அவன் கிட்ட தான்டா லவ் பண்றதையே கத்துக்கணும்…! இப்படி இருக்கியே மச்சான் நீ !”என்று எட்வார்டு தலையில் அடித்துக் கொள்ள அவனையும் சேர்த்து முறைத்தான்.

“இப்படி எங்களை முறைச்சிட்டு இருக்காம போய் ஜெஸி கூட சேர்ந்து சந்தோஷமா வாழ பாரு மகனே !எங்களை போல ரெண்டா வச்சிருக்காம, சிங்கிலா வச்சிட்டு சிங்கிள இருக்கணும் நினைக்காம அவ கூட மிங்குளாக பாரு “,என்று அறிவுரை வழங்க,

அவனும் யோசிக்க ஆரம்பித்தான்.

‘ஏன் அவளை நெருங்க கூடாது? அவள் எதிர்பார்க்கிறது அவனை தான ! பழைய ஆரோன விட நான் என்ன குறைச்சலா போயிட்டேன்.. அவன விட நான் எவ்வளவு லவ் பாய் காட்டுறேன் பாருங்க டா ‘ என தனக்குள்ளே சூளுரை எடுத்துக் கொண்டான் இந்த புதிய ஆரோன்.

மணமக்கள் இருவரையும் மேடையில் அமரச் சொல்லி கல்யாண் சடங்குகள் செய்தார் ஐயர்.

ஜெஸி, ஷர்மி, ரெக்ஸ்லினும் மேடையில் கீழ் நின்று சிரித்து பேசிக் கொண்டிருக்க, அவர்களுக்கு எதிராக அமர்ந்த ஆரோன் ஜெஸியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது பார்வை அவளை துளைத்திட, திரும்பி அவனை பார்த்தாள். அவனோ பார்வையை மாற்றாது  அவளையே பார்த்திருந்தான். இவளுக்கு குப்பென வியர்க்கவும் முகம் சிவக்கவும்  செய்தது.

அவனது விழுங்கும் பார்வையை கண்டு தலை குனிந்து கொண்டாலும் ஓரப்பார்வையால் அவனை பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். இவனும் அவளை விடாது பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளும் அங்கிருந்து நழுவி வேலை என்று அங்குமிங்கும் செல்ல அவனது விழிகளும் அவளை தொடர தான் செய்தன ! அவன் விழிகள் செல்லும் இடத்தை இருவரும் பார்த்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

“டேய் உண்மைய சொல்லு உனக்கு  பழசெல்லாம் மறந்தா போச்சி?” நிவாஸ் சந்தேகமாக கேட்க, “ஏன் அதுல உனக்கு என்ன சந்தேகம்?”

“இல்ல அப்பவும் சரி இப்பவும் சரி ஜெஸிய நீ பார்க்கற பார்வை மட்டும் மாறாவே இல்லை டா ! அப்படியே அதே அவளை முழுங்கற பார்வை !எனக்கு உன் மேல டவுட் தான்”என அவனை மேலிருந்து கீழ் வரைக்கும் பார்த்துவிட்டு சொன்னான். அதற்கு எட்வார்டும்” எனக்கும் அதே சந்தேகம் தான்”என்றான்.

“ச்சீ போங்க டா ! ” என்று முகத்தை திருப்பிக் கொண்டாலும் அவனையும் ஆட்கொண்டது அந்த வெட்கம்.

முகூர்த்த நேரம் நெருங்க ஐயர் கொடுத்த தாலியை ரிஷி, தன்யா கழுத்தில் கட்டி தன் பாதியாக்கிக் கொண்டான். அக்னியை வலம் வந்தவர்கள் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினார்கள் அடுத்ததாக ஜெஸியிடம் வந்தனர்.

ஜெஸியின் காலில் தன்யா விழப் போக, அவளை தாங்கிப் பிடித்தவள் “என்ன பண்ற தன்யா நீ? எனக்கு அவ்வளவு வயசெல்லாம் இல்லமா ! நீ கால்ல விழுந்து என்னை  வயசானவளா ஆக்கிடாதே !”என்றாள்.

” வயசுக்காக கால் விழலக்கா ! எங்க காதலை காப்பாத்திக் கொடுத்ததுக்காக, நாங்க நல்லா வாழனும் மனசுக்காக நன்றியா கால்ல விழறதுல தப்புல்ல ! அதனால எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க…”என்று மீண்டும் விழப் போக, அதனை மறுத்து விட்டு “ரெண்டு பேரும் சந்தோசமா வாழ்றதே, எனக்கு நன்றி சொல்றது போல தான்… ஹாப்பி மேரிட் லைப்”என்று வாழ்த்தினாள்.

பின் மணமக்கள் பரிசு வாங்குவதிலும் போட்டோ   எடுப்பதிலும் பிசி ஆகி விட, நண்பர்கள் அனைவரும் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஜெஸி முன்னே வந்து நின்றனர் ரவி , அசோக் , ஶ்ரீ மூவரும் வந்து நின்றனர்.

“எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லை மேம் ! நீங்க முதல்ல ரவிக்கு பாருங்க, அப்புறம் இவனுக்கு… இல்ல இல்ல எனக்கு அப்புறம் இவனுக்கு பாருங்க…”என்று மொட்டையாக ஶ்ரீ  ஏதோ சொல்ல, அவளோ புரியாமல் அவர்களை பார்த்து விட்டு “என்ன பார்க்க?”

“பொண்ணு தான் மேடம். பொண்ணு பாருங்க எங்களுக்கு.. இதோ அந்தக் கிழவிக்கே கல்யாணம் ஆச்சி எங்களுக்கு வயசு போயிட்டே இருக்கே ! நீங்க தான் இந்த பாவ பட்ட ஜீவன்களுக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் !”என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு மூவரும் நிற்க, மற்றவர்கள் கொள்ளென சிரித்தனர்.

“ஏழு கதை வயசு ஆகிடுச்சி இன்னும் உங்களுக்கு பொண்ணு பார்க்கணுமா? அவளை போல லவ் பண்ணி தொலைச்சா தான் என்னவாம்? நானும் வீட்ல பேசி உங்களுக்கு கல்யாணம் பண்ணி  வைப்பேன்ல !”

“அவளுக்கு என்ன மேம் அல்வா ஜூஸ்னு கொடுத்து கரெக்ட் பண்ண ஆளு இருக்கு. ஆனா எங்களுக்கு பச்ச தண்ணீர் கொடுக்க கூட ஆள் இல்ல மேம்… பாடிகார்ட்டா தான் போடுறீங்க, பாடியே இல்லாத கிழடுகளுக்கு எல்லாம் பாடிகார்ட் போட்டு எங்களை நீங்க சிங்கிள்ஸா வச்சிருக்கீங்க !” என புகார் வைக்க, இருவரையும் அடிக்க பாய்ந்தாள் ஜெஸி ! அங்கே கலகலப்பாக இருந்தது.

திருமணத்திற்கு வந்த ருத்ரன் நிவாஸிடம் தயங்கி தயங்கி பேசியவன், பின் நன்றாக பேசி பழகி , அவனை வீட்டிற்கு அழைக்க, நிவாஸும் வருவதாக சொன்னான். அண்ணன் தம்பி இல்லாது நட்பாக பழகினார்கள்.

இரவு வரை அந்த கூட்டம் கொட்டமடித்துக் கொண்டிருந்தது. தன்யாவை புகுந்த வீட்டில் விட்டு  இரவில் தான் ஜெஸியும் ஆரோனும் வந்து சேர்ந்தனர். முதலில் ஆரோக்யாவும் ஆப்ரஹாமும் டெனியை அழைத்து  வந்து விட்டனர். அவர்கள் அறையில் தான் அவன் உறங்கி கொண்டிருந்தான். எழுப்ப வேண்டாம் என்று ஜெஸிடம் மறுத்து விட்டனர்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில் இவனும் உடை மாற்றி பால்கனி சென்று ஊஞ்சலில் அமர்ந்து விட, உள்ளே வந்தவள் கதவை தாழிட்டு, அவனை பார்த்து விட்டு, இரவு ஆடையை எடுத்துக் கொண்டு, குளியலறை சென்று  குளித்து உடை மாற்றியவள், அவனை  நோக்கி சென்று அருகே அமர்ந்து கொண்டாள்.

அவள் பக்கத்தில் அமர்ந்ததும் அவளை பார்த்துக் கொண்டிருக்க, இவளோ தலை குனிந்து

“சாரி ஆரோ ! நான் பழைய ஆரோன் வச்சி சொன்னது தப்பு தான்.  ஆனா கம்பேர் பண்ணனும் சொல்ல, நீ என்னை…”என அவளை முடிக்க விடாமல், அவளது தாடையை பற்றி இழுத்து இதழோடு இதழ் சேர்த்து அவள் வார்த்தைகளை தடை செய்தான் இதழ் முத்ததினாலே !

சற்றும் எதிர்பாராதவள் கண்களை அகல விரித்தாள். அவனோ முத்ததுக்கு எதுவும் இடையூறு செய்யாமல் அவளது இடையை பற்றி தூக்கி மடியில் அமர்த்தி முத்தத்தை மேலும் தொடர்ந்தான். அவனது கைகளை வேறு அத்து மீறின.

இரண்டு முறை அதனை அடக்க முயன்று தோற்று போனாள். வலம் வந்த கைகள் அவளை இம்சைக்க, முத்தம் வேற பித்தம் கொள்ள செய்ய, கண்கள் சொருக, முத்தமெனும் போதை அவளது சுயநினைவை பறித்தது.

வெகு நேரம் கழித்து அவளை விடுவிக்க, அவளோ கண்களை மூடிக் கொண்டு அவனை பார்க்காமலிருந்தாள்.

அவனோ இமையில் முத்தம் வைத்து திறக்க வைத்தான். சொக்கிய விழிகளை மெல்ல திறந்தாள். அவனை கண்டு சிவப்பாய்  வெட்க ரேகைகள் பாய்ந்தன உடலெங்கும்.

“நான் பழைய ஆரோன் இல்ல அவன விட லவ்வர் பாய் இந்த புதிய ஆரோன் காட்டணும். இதை நான் கம்பேர் பண்றதுக்காக சொல்லல, என் ஜெஸிய நான் எனக்குள்ள போட்டி போட்டு லவ் பண்ணனும் ! என் தயக்கம் என் ஜெஸிய ஹர்ட் பண்ணதுனா அதை உடைச்சி வெளி வரது தப்பில்லை… என் காதல்ல இருந்து இனி உனக்கு விடுதலையே இல்ல “என்றவனை கண்கள் கலங்க பார்த்தாள்..

“இனி நீ அழுதால் என்னை ஹாஸ்பிட்டல தான் சேர்க்கணும்… அவ்வளவு வலிக்குது இங்க !”என்று நெஞ்சை சுட்டிக் காட்ட அவளோ

“ஆரோ !”என பதறி வாயை பொத்த , அவன் கையை விடுவித்து மீண்டும் முத்தமிட்டான். இருவரும் முத்தத்தில் மோதிக்கொண்டனர்.

அவள் விடுவிக்க, அவனோ ஒற்றி எடுத்து விடுவித்தான்.

“எப்படி இருந்தது?”எனக் கேட்க, அவளோ “பழைய ஆரோன் போல இல்ல”என விளையாட்டாய் சொல்ல, “அப்படியா இரு டி உன்னை கதற கதற…”என இழுக்க, அவளோ பெரிதாய் கண்களை விரிக்க,”காதலிக்கிறேன் சொல்ல வர்றேன்டி”என்று அவளை தூக்கி கொண்டு அமளியில் கிடத்தி அருகே படுத்தான்.

அவனது ஆடையை அவளும் அவளது ஆடையை அவனும் விடுதலை கொடுத்து, இருவரும் ஒருவருக்கொருவர் ஆடையை ஆகிப் போனார்கள். பிரிந்த சென்ற  வலிக்களுகெல்லாம் முத்த ஒத்தடம் மருந்தாகி இதமாக இருந்தது.

அவளது நெஞ்சாங்கூட்டில் தஞ்சம் கொண்டவன், தன்னை மட்டுமே சுமக்கும் நெஞ்சுக்குள் கோடி முத்தங்களை பரிசாக்கினான்..

இன்று போல பல இரவுகளும்  பகல்களையும்  மறந்து புதிதாய் காதல் அத்தியாயத்தை தொடங்கி விட்டனர் ஜெஸியும் புதிய ஆரோனும்…

கொஞ்சமும் வெட்கமில்லாமல் வெய்யோனின் வெங்கதிர்கள் அறைக்குள் பிரவேசித்து பின்னிப் பிணைந்து கிடக்கும் காதல் மெய்க்காவலர்களை எழுப்ப முயன்று அதில் வெற்றியும் கண்டன.

முதலில் கண்விழித்த ஜெஸி, நேரமானதை உணர்ந்து வேகமாக எழுந்தவள், சட்டென தன் கோலத்தை கண்டு வெட்கம் கொண்டு போர்வையை இழுத்து நெஞ்சோடு சேர்த்துக் கொண்டாள்.

பக்கத்திலிருக்கும் ஆரோனைப் பார்க்க, அவனோ டெனியை போல

சலனமில்லாமல் உறங்கிக் கொண்டிருந்தான். அவனது வலிய கரம் இடையையும் அவனது கால் அவளை கிடுக்குப்பிடியும் போட்டிருந்தது. மொத்தத்தில் அவளை அவனுக்குள் அடக்கிக் கொண்டு உறங்கி கொண்டிருந்தான்.

அவனது பிடியில் தன்னை கஷ்டப்பட்டு மீட்டெடுத்து திசைக்கொன்று இருந்த ஆடைகளை தேடி எடுத்து உடுத்தி கொண்டவள், குளியலறைக்குள் புகுந்தாள்.

வெகு நேரம் கழித்து பூந்துவலில் வந்தவள் சேலையை கட்ட ஆரம்பித்தாள். இடையில் கண்விழித்த ஆரோனும் தலைக்கு கையை அண்டம் கொடுத்து நேற்று தன் வசம் இருந்தவளை கண்டு மீண்டும் ரசிக்க ஆரம்பித்தான்.

சேலை கட்டுவதில் கவனம் கொண்டிருந்தவள், கள்வனின் பார்வையை கண்டுக் கொள்ள வில்லை…

மடிப்பை வைத்து விட்டு மேலங்கங்களை சேலையால் மறைத்த போது கள்வனின் மோகப் பார்வையை கண்டு திகைத்தவள், பின் திரும்பிக் கொள்ள,  வாய் விட்டே சிரித்தான் அந்தக் கள்வன்.  அவளோ அவன் புறம் திரும்பி முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள்.

சேலையை கட்டி முடித்தவள் தலையில் சுற்றியிருந்த துண்டை எடுத்து, கண்ணாடி முன் நின்று தன் கூந்தலை உலர்த்த ஆரம்பித்தாள். தன் ஆடைகளை எடுத்து அணிந்தவன், கைகளை முறுக்கி அவளை அணைக்க வர, அவளோ கண்ணாடியில் அவனை பார்த்து விட்டு சட்டென விலகினாள். அவனும் வந்த வேகத்தில் கண்ணாடியில் மோதிக் கொண்டான்.

மோதிய தலையை தேய்த்துக் கொண்டே திரும்பி அவளை முறைக்க, அவளோ வாய்விட்டு சிரித்தாள்.

“உன்னை…!”என்று தாவிப் பிடிக்க, அவனுக்கு பழிப்பு காட்டி விட்டு சிட்டென பறந்துவிட்டாள். இவனும் சிரித்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தான்.

அவள் சென்ற அடுத்த பதினைந்து நிமிடத்தில் மீண்டும் காபி கப்புடன் உள்ளே வர அவனும் குளியலறையிலிருந்து வெளியே வந்தான்.

அவனிடம் காபியை நீட்ட, அதனை வாங்கிக் கொண்டவன், பக்கத்தில் வைத்து விட்டுப் அவளை பிடித்துக் கொண்டான்.

“பச்… வேலை இருக்கு விடு ஆரோ !”என நெளிய, அவனோ மேலும் அவளை இறுக்கி “நெத்தில காயம் பட்டிருக்கு மருந்து போட்டுட்டு போ !”என்றான்.

அவளோ அவனது வெண்பிறை நுதலை கண்டு விட்டு அவனை முறைத்தாள்.

“என்னடி?”

“அங்க தான் ஒண்ணுமே இல்லையே !”

“உள் காயம் ! கொஞ்சம் முத்த ஒத்தடம் கொடு சரியாகிடும் !”என்றான் அப்பட்டமாக,

“கொடுக்கலேனாலும் சரியாகிடும் விடு என்னை !”என்று பரபரத்தாள்.

“நீ என்ன டாக்டரா?! நீ சொன்னதும் சரியாக !”

“அப்போ நீ மட்டும் என்னவாம் ?! பெரிய டாக்டர் போல பேசற ! “என வம்பு வளர்த்தாள்.

” முத்தம் கொடுக்க முடியுமா? முடியாதா?”அவளை இன்னும் இறுக்கி அணைக்க, அவளும் மாட்டேன அவள் பிடியிலிருக்க, “அப்போ நான் எடுத்துக்கிறேன்”என்று அவளது இதழை நோக்கி குனிந்தான்.

வெளியே ஜாக்கிங் சென்று வீடு திரும்பிய ஆப்ரஹாம் “ஜெஸி மா !”என அழைத்ததும்,  அவளோ அவன் இதழில் கைவைத்து தடுத்து “மாமா கூப்பபிட்றார் விடுடா !”என்று விடுபட போராட ! அவனோ முத்தம் வேண்டும் என்றே நின்றான்.

அவர் மீண்டும் அழைக்க, அவள் பதில் சொல்ல வர, இவனோ அவள் வாயை பொத்தி விட்டு “அப்பா ! அவ ரெஸ்ட் ரூம்ல இருக்கா இப்போ வந்திடுவா !”என்றான். அவரும் அமைதியாக அறைக்குள் சென்று விட்டார்.

இவனோ புருவத்தை உயர்த்தி, ‘எப்படி ?’ எனக் கேட்க, அவளோ வாயிலிருந்த கையை காட்ட, கையை எடுத்தவன்  பட்டென அதை சிறையெடுத்தான். அவளது இதழை கொய்து விட்டு விலக,  அவனை நான்கு அடி அடி அடித்து விட்டு தான் வெளியே சென்றாள்.

அன்றோடு முடியாமல் அவனது காதல் சில்மிஷங்கள் தினமும் தொடர, சொல்ல முடியாத இன்பமான இம்சையாகிப் போனான் அவன்.

தினமும் காலையிலும் மாலையிலும் அவளை தன் காதலில் திளைக்க வைத்தான். இளமையை கசப்பாய் நினைத்தவளுக்கு தித்திக்கும் இனிப்பாக மாற்ற, மீண்டு வந்தான் அவளது காதல் கஞ்சுகன்.

சந்தோஷத்தையும் சிரிப்பையும் மறந்த குடும்பம், இன்று  சோகங்களை மறந்து சிரித்து கொண்டிருக்கிறது.

சிறு துளி மோகம் பெருவெல்ல காதலில் சிக்கித் தத்தளித்து  மீள முடியாமல் மீண்டு வர மனமில்லாமல் முழ்கிக் மூழ்கி முத்தெடுத்தனர் இருவரும்…

டெனியின் உறக்கம் வரை பொறுப்பான தாய் தந்தையாராக அவனுடன் பேசி விளையாடி கதைகள் நூறு சொல்லி அவனை தூங்க வைத்ததும் கணவன் மனைவியாக ஈருடலும் ஓர் உயிரென  உடலென பின்னிக் கொண்டு இரவை கழித்தனர். இவ்வாறே அவர்களுக்கு  நாட்களும்  வாரங்களும் மாதங்களும் எல்லாம் காதலோடு கரைந்தன

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்