
உயர்தர ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தாயகம் திரும்பியதற்காக தன் நண்பர்கள் அனைவருக்கும் விருந்து கொடுக்க அழைத்திருந்தான் நைதுருவன்.
கிட்ட தட்ட இருபதுக்கும் அதிகமான நண்பர்கள், அவன் அழைத்ததற்காக அங்கு வந்திருந்தனர். அதில் சில பெண்களும் உண்டு.
அவர்களுக்கென தனி கூடத்தை பேசியிருந்தான் துருவன். அந்த கூடத்தின் வாயிலில் ஜெஸியும் அவளது குழுவும் நின்று, வந்த அனைவரையும் சோதனை செய்து விட்டு உள்ள அனுமதித்தனர்.
‘தன் நண்பர்களை பரிசோதிக்க வேண்டாம்’ என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல், அவளது ஆணைக்கு இணங்க பரிசோதித்து அனுப்பி வைத்ததே அவனது கோபத்திற்கு மேலும் தூபம் போட்டது போல் இருந்தது .
ஜெஸியை விழிகளால் எரித்த வண்ணமே நின்றிருந்தான். அவளோ ‘அவனெல்லாம் ஒரு ஆளு’ என்று அவனது பார்வையை அசட்டை செய்து விட்டு தன் வேலையில் கண்ணாக இருந்தாள்.
பரிசோதித்து விட்டு உள்ளே அனுப்பிய நண்பர்கள் அவனிடம் வந்து என்ன ஏதென்று கேட்டு ஒரு வழி செய்துவிட, அவர்களுக்கு விளக்கம் அளித்து ஓய்ந்து போனவன், அவர்களை எல்லாம் உரிய இடத்தில் அமர வைத்து விட்டு ஜெஸியை தேடி வந்தான்.
அவள் முதுகுக்கு பின்னாடி நின்று கோபமாக முறைத்தவன் அவள் திரும்பியதும் புன்னகை முகமாக தன் முகத்தை மாற்றி “ஜெஸி, என் பிரண்ட்ஸ் எல்லாரும் வந்துட்டாங்க. இனி நீங்க நிக்க வேணாம். நீங்களும் உள்ள வாங்க”என்றான் தன்மையாக,
அவளோ, தன்னோட சேர்த்து ஐவர் கொண்ட குழுவிடம். “ரவி , தன்யா என் கூட உள்ள வாங்க. ஸ்ரீ , அசோக் நீங்க இங்க நில்லுங்க” என்று கட்டளையிட்டாள்.
அவர்களும் ‘எஸ்’ மேம் என்று தன் வேலையைச் செய்ய தயாராகினர்.
“ஹேய் ஹேய் வெயிட் வெயிட்… ஆக்சுவலி இந்த ட்ரீட், நான் இந்தியாவுக்கு திரும்ப வந்ததுக்காக என் பிரண்ட்ஸ் எல்லாருக்கும் கொடுக்கறேன். நீங்களும் வந்து கலந்துக்கலாமே !!. எல்லாரையும் செக் பண்ணி உள்ள அனுப்பிட்டீங்கள, இனி யாரும் இங்க வரப்போறது இல்ல. சோ எங்க கூட நீங்களும் வந்து ஜாயின் பண்ணிக்கங்க ப்ளீஸ்” என்று கனிவாகப் பேசி ஐவரையும் அழைக்க, ஜெஸியை தவிர அனைவரும் அவனது பேச்சை நம்பினர்.
“டேய் அசோ!!! ரொம்ப நல்லவனா இருப்பான் போல டா. எந்த முதலாளிடா ட்ரீட்ல நம்மலையும் சேர்ந்து சாப்பிட கூப்பிடுவாங்க.
அவங்க சாப்பிட, நாம வேடிக்கை தானடா பார்ப்போம். அப்றம் கடைசியாக தனி தனியா ஆளா மாத்தி மாத்தி பார்த்துக்க சொல்லிட்டு அரக்கப்பறக்க சாப்பிட்டு வருவோம். இப்போ அவன் நம்ம எல்லாரையும் சேர்ந்தே சாப்பிட கூப்பிடுறான். போகலாமே டா!!! நாக்கு செத்து பல மாசங்களாச்சி இனியாவது அதை உயிரோட வச்சிக்கிறேனே டா!!!” அசோக்கிடம் ஸ்ரீ புலம்ப,
“எனக்கும் அதே தான்டா, ஆனா நம்ம மேம் அதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டங்களே டா!!!” கவலையாகச் சொன்னான்.
“ஐயோ !!! ரூல்ஸ்ல பேசி கொல்லுவாங்களே டா. அதுக்கு நாம இங்க நின்னு வேடிக்கை பாக்கிறதே நல்லதுடா. கேட்க காதுக்கு தெம்பு இல்லடா ராசா எனக்கு” என்று பின் வாங்கினான் அவன்.
“அப்ப மூடிட்டு அமைதியா வேலைய பாரு!!!” என்று அவனை அடக்கினான் அசோக்.
‘இவன் நம்மல இப்படி கூப்பிடுற ஆள் இல்லையே !!! என்னவா இருக்கும்???’ என தன் நாக்கை கன்னத்து மேடையில் வைத்து அவனை பார்த்தபடியே யோசித்தாள்.
“என்ன யோசிக்கிறீங்க ஜெஸி?? வாங்க வந்து ஜாயின் பண்ணிக்கோங்க”
“நோ தங்கஸ் மிஸ்டர் துருவன். எங்களுக்கு எதுவும் வேணாம். ப்ளீஸ் இது உங்க டைம் நீங்க என்ஜாய் பண்ணுங்க. நாங்க எங்க டூட்டிய பார்க்கிறோம்”என்றாள்.
“ஓ கமான் மிஸ் ஜெஸி. இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் வேணாம். ப்ளீஸ் டூ ஜாயின் வித் அஸ். உள்ள வந்து நிக்க தான போறீங்க. அதுக்கு எங்க கூட நீங்க சேர்ந்து சாப்பிடறதுல என்ன வந்துட போது சொல்லுங்க??? உங்க டூட்டிய நீங்க பார்த்துட்டே எங்க கூட ஜாயின் பண்ணிக்கலாமே!!! “
அவன் அவ்வளவு சொல்லியும் ஒத்துக்காமலிருக்க, அவள் அருகில் வந்த ஸ்ரீ”அவர் தான் இவ்வளவு ரெக்வஸ்ட் பண்றாரே மேம் போய் தான் பார்ப்போமே !!! இங்க சீ ஃபுட்ஸ் எல்லாம் நல்லா இருக்கும் சொல்றாங்க ட்ரை பண்ணுவோமே மேம். வந்த ஆஃபர் ஏன் விடணும்???”அவளுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னான்.
அவனை முறைத்தவள்,’அது ஆஃபர் இல்ல ஆப்புனு எப்படி சொல்வேன் ஸ்ரீ உனக்கு !!!’ உள்ளுக்குள் எண்ணிக் கொண்டவள் யோசித்து விட்டு “சரி நாங்களும் உங்க கூட ஜாயின் பண்ணிக்கிறோம்”என்றாள்.
உள்ளுக்குள் குரூரமாக சிரித்தவன், வெளியே சாந்தமாகப் புன்னகை செய்தான். அவளும் தன் இறுகிய முகத்தில் சிறு மூரலை மலர விட்டாள்.
“ப்ளீஸ் கம்!!!”அவன் முன்னே செல்ல, ரவியை மட்டும் தன்னுடன் நிற்கச் சொன்னாள். மற்ற அனைவரையும் உள்ளே சென்றனர்.
“ரவி நீ சாப்பிட வேண்டாம் ஜுஸ்ஸோட நிறுத்துக்கோ!!! எனக்கு துருவன் மேல கொஞ்சம் டவுட்ஸ் இருக்கு. நாம சாப்பிட உட்கார்ந்தாலும் அலர்டா இருக்கணும் புரியுதா??”
“எஸ் மேம்” என்றான்.
“ரவி, ஸாரி!!! உன்னை மட்டும் சாப்பிட வேணாம் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத !”
“நீங்க எது சொன்னாலும் நான் செய்வேன் மேம். டூயூட்டில இதெல்லாம் அவாய்ட் பண்றது தான். அண்ட் நீங்க இங்க சாப்பிட வேணாம் சொன்னாலும் தனியா எனக்கு வாங்கி கொடுப்பீங்க எனக்கு தெரியும் .வெல்கம் மேம் நீங்க திரும்பி வந்ததுல ரொம்ப சந்தோசம்” என்றான்.
அவன் தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டு உள்ள நுழைய, அவனும் உடன் நுழைந்தான்.
அங்க நண்பர்கள் அனைவரும் ஒரு மேசையில் அமர்ந்திருக்க இந்த மூவரும் தனி டேபிளில் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் இருவரும் சேர்ந்து கொண்டனர்.
வந்த நண்பர்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை ஆடர் கொடுத்தனர். அதன் பின் பணியாட்கள் இவர்கள் மேசைக்கு வர , ரவியும் ஜெசியும் மட்டும் மாதுளை ஜூஸ் சொல்லிக்க கொள்ள மத்த இருவரும் ஜூஸே சொல்லலாம? வேணாமா?என முழித்தனர்.
“என்ன லுக் இங்க??? சீ ஃபுட் இங்க நல்ல இருக்கும் சொன்னீல ஆடர் பண்ணி சாப்பிடு!!!”என்றாள்.
“ஆனா நீங்களும் ரவியும்…”என இழுக்க, “எல்லாம் ஒரு சேஃப்டிகாக தான். நீங்க வொர்ரி பண்ணிக்காம நல்ல சாப்பிடுங்க. கிடைச்சா ஆஃப்ர் ஏன் விடணும் ஸ்ரீ???”எனவும் “ஈஈஈஈ…”என இளித்து வைத்தான்.
நண்பர்களை கவனித்து விட்டு இவர்கள் அமர்ந்திருக்கும் மேசைக்கு வந்தான்.
“டோன்ட் ஹெசிடெட் . என்ன வேணுமோ கேட்டு வாங்கி சாப்பிடுங்க”என்றவன் ஜெஸியின் புறம் திரும்பி ” வெல் ஜெஸி, உங்களுக்கும் இது தான் ஃபர்ஸ்ட் டே போல… பிரேக் அ லேக்!!!!” என வாழ்த்தியவன்.
“உங்களுக்கும் சேர்த்து நானே ட்ரீட் வச்சிட்டேன். ப்ளீஸ் எஞ்சாய்”என்றவன் உள்ளுக்குள் ‘இருக்குடி உனக்கு’ என்று கருவினான்.
ஆடர் செய்த உணவு வகைகளைப் பணியாட்கள் கொண்டு வந்தனர். நண்பர்கள் அனைவரும் உணவுகளை பகிர்ந்து உண்டனர். அதே போல தன்யா, ஸ்ரீ , அசோக் ஆடர் செய்த உணவுகள் வர பகிர்ந்து சாப்பிட, ஜெஸியும் ரவியும் ஜூஸை மெதுவாகப் பருகினார்கள்.
ஜெஸியின் கண்கள் துருவனின் மேல் மட்டும் படிந்திருக்க, தன் நண்பர்களிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தாலும் அவனது பார்வையும் அவள் மேல் தான் இருந்தது.
தன் நண்பனின் பார்வையும் செல்லும் இடத்தைப் பார்த்தான் ரிஷி. நோட்டம் விட்டம் படி வேடிக்கை பார்க்கும் ஜெஸியே தென்பட்டாள். மீண்டும் தன் நண்பனை பார்த்தான்.
“ஆனா மச்சி !!! ஒரு ஆக்சிடெண்ட்லையும் உனக்கு அடிச்சது பார் லக்கு!!! பக்கத்துல கண்ணுக்கு குளிர்ச்சியா லேடி பாடிகார்ட். உனக்கு எனர்ஜி டவுனே ஆகாது டா. செம்ம பீல்ல இருப்பேல மச்சி!!! எனக்கு இப்படி ஒரு லேடி பாடிகார்ட் இருந்தா, ‘அழகியே மேரி மேரி மீ!!!” கெஞ்சி கூத்தாடி கல்யாணம் பண்ணி லைப் லாங் பக்கத்துலே வச்சிப்பேன். பாடிகார்டுக்கு பாடிகார்ட் ஆச்சு அந்த லேடி எனக்குனு ஆச்சு…”என்றவனை புன்னகையுடன் பார்த்தவன் அவன் பிடரி வழியே அவள் முகத்தைப் பார்த்தவன்.
“அழகு எப்பவும் ஆபத்தானது ரிஷி. ரொம்ப ஆபத்தானது. கண்கள பறிக்கற அழகு தான் உயிரையும் சேர்த்து பறிக்கற பேராபத்து. தூரத்தில இருந்து ரசிக்கறத்தோட நிறுத்திக்கறது நல்லது. பக்கத்தில் வச்சு ஆராதிக்கணும் நினைச்சா…” நெற்றிப் பொட்டில் துப்பாக்கி போல் இரு விரல்களை வைத்து சுடுவது போல காட்டினான்.
“நீயா இப்படி பேசற??? உன் அழகுல மயங்காத பொண்ணா, உன் கண் பார்வைக்கே விழுந்து கிடப்பாளுங்க… நீ என்னடானா அழகு ஆபத்துனு தத்துவம் பேசற!!!! ட்ரை பண்ணி பாரு மச்சி, இந்த ஆபத்தும் உனக்கு அடிப்பணியும் “என்று ஏற்றி விட்டான் அவனை.
தன் நண்பனுக்கு அமைதியை பதிலாக தந்தவன் மீண்டும் அவள் முகத்தை நோக்கினான்.
அழகான உதடுகள் சிரிப்பற்று இருந்தன. முத்தங்கள் கூட நழுவிக் கொள்ளும் வழுவழுப்பான கன்னங்கள். உயிரை பறிக்கும் கண்கள் ஆனால் உயிர்ப்பாக இல்லை. அவளுக்காக வளைந்த புருவங்கள். எப்போதும் ஓரிரு முடிச்சுகளுடன் இருக்கும் நுதல். திருஷ்டி போட்டு வைத்த காதுகளென யாவும் அதனதன் இடத்திலிருந்து பார்ப்பவர்களை ஒரு நிமிடம் அடிமையாக்கி ஆண்டு விடும். பிறந்ததிலிருந்து அழகை அவள் தன்னுடனே தக்கவைத்து கொண்டாள் போலும்..
‘இந்த அழகான ஆபத்தையும் அடையலாம் போலயே…’ என எண்ணியவன் அவளை ஒரு மார்க்கமாக பார்க்க, அவள் அவனை பார்த்ததும் நண்பர்கள் புறம் திரும்பினான்.
நண்பர்கள் கூட்டத்திலிருந்த ஒருவன்”டே வித்யா எங்கடா????”என்றான்.
ஃபோர்க்’கில் மாட்டிய கறித்துண்டை வாயில் வைத்து மெண்ட படி” வருவான் டா “என்றான் மீண்டும் ஜெஸியை குரூரமாக பார்த்த படி.
சரியாக பணியாள் உடையில் வந்த ஒருவன் ஒரு கையில் உணவு தட்டு வைத்துக் கொண்டு அதற்கு அடியில் இன்னொரு கையில் கத்தியொன்றை பிடித்தப்படி வந்தான்.
அந்த ஹாலில் வந்து போகும் ஆட்களை எல்லாம் பார்த்து கொண்டிருந்தவளுக்கு, அந்த ஆடவன் புதிதாகத் தெரிந்தான். அவனை நோட்டம் விட ஆரம்பித்தாள். .
அங்கிருப்பவர்கள் யாரும் அவனை கண்டு கொள்ளவில்லை . முகத்தில் அணிந்திருந்த மாஸ்க் அவனை தனியாக காட்டியது. அவனையே வட்டமிட்டன அவளது கண்கள்.
அவனோ துருவனை நெருங்க நெருங்க கத்தியின் பிடியை இறுக்கினான். கொஞ்சம் சுதாரித்தவள். அவனுக்கும் துருவனுக்கும் உணவு தட்டே இடைவெளியின் அளவாக இருக்க, தன் கன்னை எடுத்து தட்டில் சரியாகச் சுட்டாள்.
தட்டு உடைந்து உணவு தெரிக்கச் அந்த அதிர்ச்சியில் கத்தியை கீழே போட்டு, மயங்கி சரிந்தான் அவன்.
கீழே விழுந்த தன் நண்பனை கண்டு அதிர்ந்த “டேய் வித்யா !!! ” எனக் கத்திய படி மயங்கி சரிந்த தன் நண்பனை நெஞ்சில் போட்டு அவனை எழுப்ப முயன்றான்.
அதில் அவளுக்கு எழுந்த சந்தேகங்களும் தீர துப்பாக்கியைப் பின்னாடி சொருகிய படி அவன் அருகே வந்தாள்.
“மிஸ்டர் துருவன், இவர் உங்க பிரண்டா??? நான் என்னமோ உங்கள கொலை பண்ண வந்த கல்பிரிட்னு நெனச்சேனே!!!” என பதற்றம் கொண்டது போல நடித்தாள்.
அவளை தீயாக முறைத்தவன் “கன் கையில இருந்தா யார வேணா சுடுவீயா நீ??? என் பிரண்டுக்கு மட்டும் எதாவது ஆச்சி நான் உன்னை சும்மா விட மாட்டேன்”என்று அவனை எழுப்ப முயன்றான்.
அவளோ அங்கே வைத்திருந்த சீரக மிட்டாயை வாயில் மென்ற படி அசட்டையாக நின்றவள் அசோக்கிடம் கண்ணை காட்டினாள்.
அசோக்கும் தலையை அசைத்து விட்டு வித்யாசாகரின் நெஞ்சை நான்கு முறை அழுத்திய பின்னே இருமலுடன் மீண்டும் உயிர் பிழைத்தான்.
அவன் கண் விழுத்து, சுழற்றி தன் நண்பர்களை பார்த்த பின் அனைவருக்கும் உயிரே வந்தது. அவனுக்கு தண்ணீரைக் கொடுத்தனர்.
குடித்து முடித்தவன் கஷ்டப்பட்டு எழுந்து நின்றான். அவனுடன் அவனை பரிதாபமாகப் பார்த்தபடி எழுந்து நின்றான் துருவன்.
“நீ ஏன்டா வெயிட்டர் போல வந்திருக்க?? இவனை ஏன்டா அட்டாக் பண்ண வந்த???” நண்பன் ஒருவன் கேட்டதும். வித்யாசாகர் அருகே நின்றிருந்த துருவனை பார்த்தான்.
“அது… அது எனக்கு சாக்கிங் சப்ரைஸ் கொடுக்க வந்திருப்பான்” என்று தன் நண்பனுக்காக வக்காளத்து வாங்க வந்து மாட்டிக் கொண்டான்.
“ஏன்டா அதுக்காக அட்டாக்கா டா பண்ண வரணும். ஏதோ அவங்க குறி தட்டுல இருந்ததுனால தப்பிச்சான். வேற எங்கயும் இருந்தால். ட்ரீட்டுக்கு வந்த நாம இவன் எழவுக்கு தான் போயிருக்கணும்” என்றதும் பயத்தில் எச்சிலை விழுங்கினான் சாகர்.
“அதெல்லாம் நடந்திருக்காது. அப்படி மட்டும் நடந்திருந்தது, இவளை நான் சும்மா விட்டிருக்க மாட்டேன். எப்படி நீ என் நண்பன சூட் பண்ணலாம்??? ” என ஜெஸியிடம் எகிறினான்.
அவளும் அவன் கத்தலில் காதை குடைந்து விட்டு” மிஸ்டர் துருவன் ஏன் இப்படி கத்துறீங்க??? நீங்க சொன்னது போல தான், உங்களை அட்டாக் பண்ண வந்தவன சூட் பண்ணினேன்.பச் ஆனா குறி தப்பிருச்சி. இல்லேன நெஞ்சிலே பாஞ்சிருக்கும். நீங்க சொன்னது போல உங்கள அட்டாக் பண்ண வந்தவன கொன்னுருப்பேன். ஜஸ்ட் மிஸ்” என்றவளை பீதியாக பார்த்த சாகர்,
“ஏதே ஜஸ்ட் மிஸ்ஆஆ… !! அம்மாடி !! டேய் என்னை அட்டாக் பண்ற மாதிரி வா டா னு சொன்னீயே , என்னை அட்டாக் பண்ணா கொலை பண்ண பாடிகார்ட் இருக்குனு சொன்னீயாடா !! ஆத்தாடி இனி உன் சகவாசமே எனக்கு வேணாம் டா”என்று கும்பிடாக போட்டு ஓடியே போய் விட்டான்…
“டேய் சாகரா !!”அழைக்க அழைக்க அவன் ஓடியே போய் விட்டான்.நெற்றியை கீறியபடி ஜெஸியை பார்க்க அவள் நக்கல் சிரிப்புடன் அவன் அருகே வந்தவள்.
“உனக்கு என்னை பிடிக்கல ரைட்??? இப்படி ஏதாவது பண்ணி என்னை வேலை விட்டு நிறுத்தணும் நெனைக்கற??? சரியா??”என்றதும் அமைதியாக நின்றான்.
“பேசாம நீயே உங்க அம்மா கிட்ட போய் ‘எனக்கு ஜெஸிய பிடிக்கல, வேறொரு மேல் பாடிகார்ட் போடுங்க சொல்லிடு!!! உனக்கும் இப்படி பட்ட கிறுக்குத்தனங்கள் செய்யணும் அவசியம் இருக்காது. எனக்கும் இந்த தலைவலி எல்லாம் இருக்காது” என்று அவனையும் சேர்த்து தான் சொன்னாள்.
அதற்கு அவனும் பதிலுக்கு புன்னகைத்து”அவ்வளவு சீக்கிரம் கிவ் ஆப் சொல்றவன் நானில்ல. நீயா என் அம்மா கிட்ட போய் என்னால இவனுக்கு பாடிகார்ட்டா இருக்க முடியாதுனு கெஞ்சுவ , கெஞ்ச வைப்பேன். உன்னை ஓட வைக்கிறேன்” என்று சொடக்கிட்டு சப்தம் கொள்ள,
“பார்க்கலாம்”என்று விட்டு அவள் வெளியே செல்ல” பார்க்கலாம்டி” என்று அழுத்தமாக சொல்லிக் கொண்டான்.
இருவரில் யார் வீரமதி முன் நிற்க போகிறார்களோ!! யார் முதலில் தன் தோல்வியை தழுவிகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
+1

