Loading

நாட்களின் ஓட்டத்தை தடுக்கவோ தடைச் செய்யவோ அதிகாரமில்லாத மனிதர்கள் அதை பின் தொடர்வதே காலத்தின் பெரும் கட்டளையாகும்…

மீண்டும் மெய்காப்பாளாராக ஜெஸியை வரவழைத்து விட்டான் துருவன்… அவனது முரட்டுதனமும் பிடுத்தவாத குணத்தாலும் ஜெஸியை ஆட்டி வைத்தான். ஆனால் அவள் கைப்பாவை அல்லவே, அவன் ஆட்டி வைக்கும் திசையில் ஆடும் ரகமல்ல…! இருந்தும் அமைதி காத்து வந்தாள்.

அவனது முட்டாள் தனத்தினால் அவர்களது  இத்தனை வருஷ  உழைப்புக்கு களங்கம் விளைவிக்க நேருமோ என்ற கவலையில் தான் அவளும் மீண்டும் அவனுக்கு மெய்காப்பாளராக அவனிடம் சேர்ந்தாள்.

தங்களை விட  அதிகாரமும், ஆட்சி பலம் அவனிடத்தில் அதிகம் இருப்பதால் அமைதியாகிப் போனாளே தவிர, அவனுக்கு அடக்கிப் போகும் ரகமல்ல அவள்!

 வெறுப்புடனும் கோபத்துடனும் தான் அவனுக்கு மெய்காப்பாளாராக செல்கிறாள். அவனுடன் இருந்த நட்பு கொஞ்சம் கொஞ்சமாக உடைப்படுவதை அவனும் அவளும் உணர தான் செய்தனர். ஆனால் இருவரும் அதை காப்பாற்றிக் கொள்ள முன் வர வில்லை…

துருவனின் செயல் எல்லாம் அவன் மீது வெறுப்பை உண்டாக்கச் செய்தது. பொறுத்துக் கொண்டிருக்கிறாள். என்று வெடிக்க காத்திருக்கிறாளோ ?!

இதற்கிடையில் விஷயமறிந்த எட்வர்டும் ஜெஸியை தான் கடிந்துக் கொண்டான். அவன் மனதில் ஜெஸி மீது சிறு சந்தேக விதை விழுந்தது.

அன்று அந்த அறையில்  வீரமதியின் கண் முன்னாலே துருவனை சுட சொல்லிய போது அவள் தயங்கியதே, அவனது சந்தேகத்தின் விதையாகும்… வேலைக்கு செல்ல வில்லை என்று சொன்னவள் மீண்டும் அவனுக்கு மெய்காப்பாளராக செல்வதை அறிந்து கொண்டவனுக்கு  மேலும் அவனது சந்தேகம் வலுவானது.

அவளிடம் சென்று கேட்க, அவளும் நடந்ததை சொன்னாலும் அவன் மூளை நம்ப மறுத்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து போட்ட திட்டமோ என்று ஒரு பக்கம் யோசிக்க ஆரம்பித்து விட்டான். அதை எல்லாம் மனதிற்குள் வைத்துக் கொண்டான். யாரிடமும் பகிரவில்லை. முழுமையாக தெரியும் வரை பகிர வேண்டாம் என்று நினைத்தான். ஆனால் ஜெஸி மட்டும் துருவனும் இணைந்தால் அது தன் நண்பனுக்கு அவள் செய்கிற துரோகம் அதை ஒரு காலும் அனுமதிக்க கூடாது என்று எண்ணி முடிவு செய்திருந்தான். அதில் உடைப்படுவது ஒரு பெண்ணின் வாழ்க்கை என்று அவனும் யோசிக்க மறந்தான்.

ஒரு மாத காலம் ஓடி விட, துருவனை அழைத்த, ஃபாதர் ‘வெளிநாட்டில் இருந்து கிடைக்க வேண்டிய பணம் கிடைத்து விட்டு வளாகத்தில் மேலும் கட்டிடங்களை கட்ட அனுமதியும் கிடைத்து விட்டது என்ற செய்தியை சொன்னவர், எப்போது தொடங்கலாம்?’ என்று கேட்டார்.

அவனும் நண்பர்களிடம் கலந்து பேசி தேதியை சொல்ல அன்றே சிறு பிராத்தனை வைத்து ஆரம்பிக்கலாம் என்று பேசி முடிவு செய்தார்கள். அது போலவே பிராத்தனையை வைத்து கட்டிடம் கட்டும் வேலையை   தொடங்கி விட்டனர்.

நால்வரில்  ரிஷியும் துருவனும்  இதை பொறுப்புடன் உடனிருந்து பார்த்துக் கொள்ள,  மற்றவர்கள் மற்ற பிராஜெட்களை பார்த்தனர்.

வேலையை தொடர்ந்து ஒரு மாதம் காலம் ஓடி  விட்டது. தினமும் துருவன் இங்கு வந்து மேற்பார்வை பார்த்துக் கொண்டு அவர்கள் திட்டத்தை விளக்கி அதன் படி செய்ய சொல்வதுமாக இருப்பான். கொஞ்சம் நேரம் அலுவலகத்திலும் இருப்பான். அவனோடு ஜெஸியும்  அலைவாள். ஆனால் ஒரு வார்த்தை கூட பேசமாட்டாள்.

இவனும் செய்த செயலுக்கு இறங்கி வந்து மன்னிப்பும் கேட்டு விட்டான். ஆனால் அவனது நோக்கம் அறிந்ததால் ஒதுங்கி நிற்கிறாள்.

தேவைக்கு என்று பேசுவதை தவிர முன்பு இருந்தது போல நட்பின் பிணைப்பு இப்போது இல்லை…

அவனுக்கு அது வருத்தத்தை தந்தாலும் இந்த அதிரடியால் தான் அவளை தன்னுடன் வைத்துக் கொள்ள முடியும்.

  இல்லை என்றால் தன்னை விட்டு அவள்  முழுவதுமாக விலகி அல்லவா போயிருப்பாள். அவனை பொறுத்தவரைக்கும் அவன் செய்வது சரி. ஆனால் அவளுக்கு அல்ல ! இருவரும் முட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

அவளுடன் மீண்டும் நட்பு பாராட்ட பழைய படி அவளை தன்னுடன் சகஜமாக பேச வைக்க, அவளை நெருங்க  புதிய அணுகுமுறை யோசித்து வைத்தவன் அதை செயல்படுத்தும் நேரமும் அமைய அதை பயன்படுத்திக் கொண்டான்.

அன்று ஜெஸி மட்டும் தான் அலுவலகத்தில் அவளது அறையில் இருந்தாள் மற்ற நால்வரும் வெளியே சென்றிருந்தனர்.

அவளது தனிமையை பயன்படுத்திக் கொண்ட துருவன், அவளது அறைக் கதவை தட்டி உள்ளே வந்தான். அவளும் அவனை கண்டதும் சலிப்புடன் உள்ளே வரவேற்றாள். அவனுக்கு சுருக்கென்று வலித்தாலும் மறைத்துக் கொண்டு  உள்ளே வந்தான்.

அவளது துப்பாக்கி மேசை மீது இருந்தது. அதை வருடியபடி”உனக்கு இப்போ என்னை பிடிக்கறது இல்லேல ஜெஸி?” என்றான் அவளை பாராது.

அவளோ படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை முடி விட்டு அவன் முகத்தை வெறித்த படி”இப்போ என்ன டிராமா? என்ன வேணும் உனக்கு?”என்றாள்.

“டிராமாவா? என்னை பார்த்தால் நாடகம் போடறவன் போல தெரியுதா ?”

“சமீப காலமா அப்படி தான் தெரியுது!” என்றாள் அசராமல்… “அப்போ என் காதல் உனக்கு வெறும் நாடகமா தெரியுதா? நான் காதலிக்கறது போல நடிக்கிறேன் சொல்ல வர்றியா !”

அவளோ சற்று சலிப்பாக “பச் என்ன வேணும் உனக்கு இப்போ?”

“நீ என் கிட்ட பழைய படி பேச மாட்டியா ஜெஸி ? நட்பா இருக்க மாட்டியா? எனக்கு என் பிரண்ட் ஜெஸி கிடைக்க மாட்டாளா?”

“நமக்குள்ள இருந்த நட்பை நீ தான் காதல்னற பேருல நசுக்கி தர மட்டமாகிட்ட துருவா ! இனி பழைய படி நட்பா இருக்க என்னால முடியாது. அதை புதுபிக்கவும் இஷ்டமில்லை… விளக்கம் கொடுத்துட்டேன் போறீயா?”என்றாள் எரிச்சலாக.

“அப்படி என்ன பண்ணிட்டேன் என் மேலே கோபமா இருக்க?”என குரலை உயர்த்த அவளது தீப் பார்வையில் அடங்கினான்.

“எந்தவொரு உறவையும் கட்டாயப் படுத்தி பக்கத்துல வச்சுக்க நினைக்க கூடாது துருவா ! உனக்கு வேணா அதுல சந்தோசம் இருக்கலாம்… ஆனா அவங்களுக்கு அது சிறையா இருக்கும். உன் சந்தோசம் மட்டும் இங்க முக்கியமில்லை… புரிஞ்சிக்க !”என்றாள்.

“ஆசை பட்டத்த அடைய நினைக்கிறது தப்பா ஜெஸி?!”

“பச், நீ ஆசைப்பட்டது பொருள்ன்னா அது கிட்ட  உனக்கு எந்த எதிர்ப்பும் வாரது துருவா ! உன் கூடவே அதை நீ வச்சுக்கலாம். எவ்வளவு வேணா நீ கொடுத்து அதை விலைக்கு வாங்கலாம்.

ஆனா நீ ஆசைப்பட்டது ஒரு உயிர் அதுக்கு எல்லா உணர்வுகளும் இருக்கு… அதை மறைந்திடாத துருவா ! உன்  காதல் எனக்கு சிறை தான்” அவன் அமைதியாக தலை குனிந்து நின்றான்.

“இப்பவும் சொல்றேன். இந்தக் காதலை தூக்கிப் போட்டு வா ! நல்ல நட்பா இருக்கலாம்…”என்றாள்.

அவனும் வருத்தப்பட்டு யோசிப்பது போல முக பாவத்தை வைத்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்தவன்,  சட்டென நிமிர்ந்து நக்கல் சிரிப்புடன்” வாய்ப்பே இல்லை…  என் காதலை விட்டுக் கொடுக்க மாட்டேன்… உன்னையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். உன்னை என் காதலால அடைஞ்சே தீர்வேன்”என்றான்..

‘ இது திருந்தாது ‘ என்று உள்ளுக்குள் அவனை அர்ச்சித்தாள்.

“என் ஜெஸி, தப்பா பேசிட்டேன் என் நெத்தி பொட்டுல துப்பாக்கி வச்ச நீ ! அதுவே உன் பிரண்ட் அந்த எட்வர்டு சொல்லியும் ஏன் என்னை சுடலை? உன் கைகள் அன்னைக்கு நடுங்குச்சே ஏன் ஜெஸி? உனக்குள்ளே என் மேலே ஒரு சாப்ட கார்னர் இருக்குல ஜெஸி.

என் பேர் கெட்டுடும் எனக்காக பேசினியே ஜெஸி ! என் மேலே அக்கறை பட்டீயே ஜெஸி அதை வாழ்நாள் முழுக்க நான் எதிர்பார்க்கறது எனக்கு தப்பா தெரியல…! அப்படி ஆசைப்படறது என்ன தப்பா ?”

” கிடைக்காதுன்னு தெரிஞ்சும் ஆசைப்பட்டா அது யார் தப்பு துருவா ??”

“கிடைக்கும் நம்பிக்கையில் இருக்கேன் ஜெஸி ?!”

அவளிடம் பதில் இல்லை அசட்டையாக தோளை மட்டும் குலுக்கினாள்.

“ஓகே லீவ் இட்! நான் வந்த விஷயத்தை பேசறேன்… எனக்கு நீ ஷூட் பண்ண கத்துக் கொடுக்கணும் ஜெஸி ! ஷூட் பண்ண கத்துக்கணும் நினைக்கறேன்”என்றான்.

“ரவி கிட்ட சொல்லி சொல்லித் தர சொல்றேன்”என்றாள்.

“இல்ல நீ தான் எனக்கு சொல்லித் தரனும்… !”என்றான்.

“இந்த பிடிவாதம் தான் உன் மேலே எனக்கு கோபத்தையும்  வெறுப்பையும் உண்டாக்குது துருவா !”உணர்ச்சி வசத்தில் சொல்லி விட்டாள்.

“அதை எப்படி காதலா மாத்தணும் எனக்கு தெரியும் ஜெஸி ! ” என  அடக்கப்பட்ட சிரிப்புடன். அவளோ அவனை தீயாக முறைத்து விட்டு” என்னால முடியாது !” என்றாள்.

“சோ உனக்குள்ளே பயம் வந்திருச்சு, எங்க இவன் மேலே காதல் வந்திருமோன்ற பயம்… அதன் விலகி விலகி போற?! எப்படி சொல்லிக் கொடுக்கும் போது பக்கத்துல நிக்கணும்… உன் இதயம் வேற பலவீனமா இருக்கு சோ காதல் வர வாய்ப்பு இருக்கு ரைட் ?”

“ஸ்டாப்பிட் நாளையிலிருந்து நானே சொல்லித் தரேன்”என்று விறுவிறுவென சென்று விட்டாள்.

அவனோ “ஹூரே !”சந்தோசத்தில் கத்தியவன் வெளியேறினான்.

மறுநாளில் இருந்து அவனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி தொடங்கப்பட்டது. அவளை தொந்தரவு செய்யாது சமத்தாக தான் கற்றுக் கொண்டு வந்தான். கொஞ்சம் கொஞ்சமாக சுட கற்றும்  கொண்டான்.

இந்தப் பக்கம் பாடம் என்றால் இந்த பக்கம் பணி  என்று அவனது நாட்கள் நகன்றன !

அன்று கூட வேலையை மேம் பார்வை இட்டவாறே அமர்ந்திருவனின் கண்ணில் பட்டார் ஒரு முதியவர். அவர் ஜெஸியை பார்த்துக் கொண்டே இருந்தார். அவனுக்கு கோபமாக வந்தது அவரை அழைத்து விசாரித்தான்.

“எதுக்கு நீங்க அவங்களை பார்த்துட்டு  இருக்கீங்க, உங்க வேலைய கூட ஒழுங்கா பார்க்காம? “

“இல்ல தம்பி அவங்க இப்போ செய்தில வந்தாங்கல, அவங்க புருஷனை கொன்னுட்டாங்க செய்தி வந்ததுல”

“ஆமா அதுக்கு என்ன இப்போ ?”எனமும் போதே அவர் உண்மையை அனைத்தும் அவனிடம் சொல்ல, துருவனோ பதறி எழுந்தான்.

“என்ன சொல்றீங்க? இது உண்மை தானா?

“உண்மை தான் தம்பி !”

“நீங்க என் அப்பாகிட்ட வேலை பார்த்தீங்களா?!”

“இல்ல தம்பி என் தோஸ்த் தான் வேலை பார்த்தான். அவன பார்க்க தான்  நான் அன்னைக்கு போனேன். அந்த தம்பி எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்கு என் நண்பன் மூலமா அதான் கைம்மாறு செய்ய அந்தப் பொண்ணு கிட்ட சொல்லிடலாம் நினைக்கிறேன்.”

“நீங்க சொல்ல வேணாம் நானே சொல்லிக்கிறேன்… நீங்க யார் கிட்டையும் சொல்லிடாதீங்க…”என்று பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தான்.

அவர் சொன்ன விஷயம் அவனது நிம்மதியையும் தூக்கத்தையும் பறித்தது. இந்த உண்மை ஜெஸிக்கு தெரியக் கூடாது நினைத்தான்.  அவளை உடனே திருமணம் செய்துக் கொள்ள விரும்பினான். அந்த உண்மை தெரிய வதற்கு முன்னே அவளை தன் மனைவியாக மாற்றிக் கொள்ள எண்ணி ஒரு முடிவை எடுத்தான்.

மறுநாள் வழக்கமாக துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கும் இடத்திற்கு வந்தனர். அவன் நன்றாக கத்துக் கொண்டான் என்று அவளுக்கு தெரியும். ஆனால் அன்று அவன் போக்கு காட்டிக் கொண்டிருந்தது சலிப்பாக இருந்தது அவளுக்கு.

“இப்படியா  ஜெஸி இப்படியா ?”என்று கேட்டு அவளை கடுப்படித்தான்.

ஆனால் அவனது செயல்  எல்லாம் ஆரோனை நினைவு படுத்தியது.

துப்பாக்கி சுடுவதில் கைதேர்ந்த ஆரோன், ஜெஸியிடம் சொல்லித் தர சொல்லி கெஞ்சிட, அவளும் அவனது காதல் நாடகத்தை அறிந்து சொல்லி தர வந்தாள். அவன் பின்னே உரசியபடி நின்றவள் அவன் கையை நேராக வைத்து சுட கற்றுத் தந்தாள்.

இடையில் அவன் கன்னத்தில் இதழ் பதிக்க கழுத்தில் கடித்து வைக்க என்ற அவளும் அவனிடம் சில்மிசங்கள்  செய்தாள்.

சட்டென அவனும் திரும்ப இவள் எக்கி முத்தமிட வர, இருவரது இதழ்களும் உரசிக் முத்ததீ பற்றிக் கொண்டது.

அதை நினைத்தவள் அவன் நினைவில் கண்களை மூடி சிலை போல நிற்க, துருவனோ  அந்த சிலையை கண்டு மயங்கி அவளது இடையை வளைத்து நெருக்கத்தை கூட்டியவன் அவளது இதழில் முத்தமிட குனிந்தான்.

****

இதழோடு இதழ் கலக்க அவளை நெருங்கி வந்தவன், அவள் முணங்களை கேட்டு கொப்பளிக்கும் கோபத்தோடு விலகி நின்றான்.

அவள் ஆரோனின் நினைவில் ‘ஆரோ ஆரோ ‘ என இரு முறை உச்சரிக்க, முத்தமிட வந்தவனுக்கு உள்ளுக்குள் தீக்கணல் கனன்றது.

கோபத்தில் என்ன செய்கிறோம் என்று புரியாமல் ‘ ஆஆஆ…’ என கத்தி இரு முறை தரையில்  சுட, அவளோ நினைவிற்கு வந்தாள்.

“துருவ்…!”என்றவளுக்கு அங்கே என்ன நடந்தது என்று தெரியவில்லை… அவனோ ஆக்ரோஷ கோபத்தில் கண்கள் சிவக்க நின்றான்.

“என்னாச்சி உனக்கு ஏன் இவ்வளவு கோபமா இருக்க?”

“உன்னால் தான்டி எனக்கு இவ்வளவு கோபம் வருது. ஆரோ ஆரோ எப்பவும் அவன் தான ! அவனை உன்னால் மறக்கவே முடியாதா !  அவன் தான் செத்துட்டானே ! இன்னமும் ஏன் அவனை நினைச்சி என் உயிர வாங்கற ஜெஸி ! அவன் தான் இப்போ இல்லையே ! அவனை நினைச்சி எவ்வளவு நாள் நீ வாழ போற ? ஆஆஆ உன் மேலே எனக்கு எப்படி இப்படி வெறித்தனமா காதல் வந்துச்சி ஜெஸி ?! என்னை  ஏன் மிருகமா மாத்தற? என்னால என் வாழ்க்கையில் நீ  இல்லேன்ற ஒரு நொடி கூட ஏத்துக்க முடியல…! எனக்கு நீ வேணும் ஜெஸி, வாழ்க்கை முழுக்க வேணும் ஜெஸி! நீ இல்லேனா என்னால எதுவும் முடியாது ஜெஸி. செத்துடுவேன் செத்துடுவேன் “என்று மடங்கி அழுதான்.

கிட்ட  அவனும் சிறு பிள்ளையை போல தான் இன்னொருவரின் பொருள் தவறி கைகளில் கிடைத்ததும் அதை தன்னுடையது சொல்லிக் கொள்ளும் குழந்தை உடையவர் வந்து கேட்கும் போது தரமாட்டேன் என்று  அடம்பிடிப்பது போல தான். அவனுக்கு ஜெஸியை  விட்டு கொடுக்க, மனம் வரவில்லை. அவளை தன்னுடையவளாக மாற்ற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறான். அதில் அவனுக்கு யார் பேச்சும் எடுபடவில்லை… அதில் ஜெஸியும் அடங்குவாள்.

ஜெஸியோ அவனது நிலையை கண்டு மிரண்டு போயிருந்தாள். தன்னால் தானோ என்ற  குற்றவுணர்வு சடுதியில் வந்து அவள் மனதில் அமர்ந்து கொண்டது. அவனை மாற்றும் பொறுப்பு தனக்கு உள்ளதை என்பதை உணர்ந்தவள், அதற்கான வழியை உள்ளுக்குள் யோசித்தாள்.

“துருவா ! நீ சரியில்ல ! உன் மனசு ரொம்ப பாதிக்கப்பட்டுருக்கு… நம்ம ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்”என்றாள்.

“என்ன பார்த்த பைத்தியக்காரன போல தெரியுதுல ஜெஸி ! ஆமா நான் பைத்தியம் தான் உன் மேலே  பைத்தியமா இருக்கேன்… அது தெளிவாகனும்ன்னா நீ என்னை கல்யாணம் பண்ணிக்கணும் ஜெஸி !”

“முட்டாள்!!! எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி புருசன் கொழந்தை இருக்கும் போது எப்படிடா உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்?”

“அவன் தான் செத்து போயிட்டானே ஜெஸி ! இன்னும் ஏன் அதே காரணத்தை சொல்லிட்டு இருக்கற?”

“யார் சொன்ன அவன் செத்து போயிட்டான்னு? அவன் உயிரோட தான் இருக்கான்…” என்றதும் மிரண்டு போய் அவளை பார்த்தான்.

“அவன் செத்துட்டான் மத்தவங்க சொல்லலாம்… ஆனா என்னை பொறுத்தவரைக்கும்  அவர் உயிரோட தான் இருக்கான். உயிருக்கு உயிரா  இருக்கான் என் உடலுக்குள்ள இருக்கான்.. அவன் உடல் மறிச்சி போனாலும்… உயிர் என்னோட வாழ்ந்துட்டு தான் இருக்கு… அவனை தவிர என்னால இன்னொரு உறவை ஏத்துக்க முடியாது. நீ என் மேலே இருக்க அந்த எண்ணத்தை மாத்து துருவா ! இது தப்பான எண்ணம் !”என்றாள் எச்சரிக்கையாக

“முடியாது என்னால மாத்திக்க முடியாது ஜெஸி ! எனக்கு நீ வேணும் ! என்னை நீ கல்யாணம் பண்ணித்தான் ஆகனும். உனக்கு ஒரு வாரம் டைம் தர்றேன் அதுக்குள்ள உன் மனசை மாத்திட்டு என்னை கல்யாணம் பண்ணிக்க ஓத்துக்கோ இல்ல… உன் கண்ணு முன்னாடியே தற்கொலை செய்துப்பேன் ஜெஸி ! “என்று மிரட்டல் விட,

“என்ன மிரட்றீயா துருவா ! இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்… இன்னைக்கி நாளைக்கு இல்ல எத்தனை ஜென்மத்துலையும் ஆரோன் தான் என் புருசன் அதுல எந்த மாற்றமும் இல்ல…!”என  உறுதியாக சொல்ல  அவனோ காதை பொத்திக் கொண்டு “ஆ – வென “கத்தியவன் “அப்படி சொல்லாத ஜெஸி ! நீ அப்படி சொல்லும் போது எனக்கு இப்போவே செத்துடனும் போல இருக்கு “

“துருவா !”அவள் அதட்ட, அவள் கையை பிடித்தவன்” நீ ஒவ்வொரு முறையின் துருவா! துருவா ! கூப்பிடும் போது எனக்குள்ள எப்படி இருக்குனு தெரியுமா ஜெஸி ! அதை என் வாழ்நாள் முழுக்க கேட்டுட்டு இருக்கணும் ஆசைபடறேன்டி ! உன் கண்டிப்பு , அரவணைப்பு , காதல், முத்தம் எல்லாம் இந்த துருவனுக்கு மட்டுமே வேணும் ஜெஸி… ப்ளீஸ் என் காதல்ல அக்சப்ட பண்ணுடி !”அவள் கைப்பிடித்து கெஞ்ச, அவளோ மறுப்பாக தலை அசைத்தாள். அதில் கோபம் கொண்டவன்  அவள் கையை உதறி விட்டு தள்ளி சென்று நின்றான்.

“துருவா ! நீ டிஸ்டர்ப் ஆகிருக்க ! டாக்டர் கிட்ட போலாம், மெடிசின் எடுத்த  எல்லாம் சரியாகிடும்… நான் உனக்கு எப்பவும் நல்ல பிரண்டா இருப்பேன்… நமக்குள்ள இந்த காதல் பிரச்சனை வேணாமே ! ப்ளீஸ் துருவா கொஞ்சம்  யோசி !”என்று பொறுமையாக எடுத்து சொல்ல அவனோ கேட்பது போல இல்லை

“இல்ல ஜெஸி ! உனக்கு ஒரு வாரம் தான் டைம்… அடுத்த வாரம் உனக்காக அந்த சர்ச்ல காத்துட்டு இருப்பேன். நீ எனக்கு சாதகமான பதிலை தான் சொல்லணும் !”என்று அங்கிருந்து விறுவிறுவென சென்று விட்டான். அவளோ நிலைகுலைந்து போனாள்.

ஒரு வாரம் நிம்மதியின்றி சடுதியில் ஓடி விட்டது. அன்று தான் அவள் தன் முடிவை சொல்லும் நாள்…  ஆரோன் காதல் சொன்ன அந்த சர்ச்சிலே அவளை வர சொல்லிருந்தான். அவள் முடிவில் என்று மாற்றம் இல்லை… ஆனால் அவனது முடிவால் இவளுக்கு தான் சிறு கலக்கம் இருந்தது. இதை பற்றி அவள் ருத்ரனிடம்  பேசியிருந்தாள் அவனும் துருவனிடம் எவ்வளவு சொல்லி பார்த்தும் தன்னிலை இருந்து மாறவில்லை..

அவனது பிடிவாதத்தில் கடுப்பான ருத்ரனும் “நீங்க உங்க முடிவுல இருந்து மாறாதீங்க ! நான் அவனை பார்த்துக்கிறேன்”என்று நம்பிக்கை அளித்தான்.

இருந்தும் கலக்கத்துடன் தான் சர்ச்சிற்குள் வந்து கர்த்தரிடம் மண்டியிட்டு தன் மனக் குழப்பங்களையும் கலக்கங்களையும்

கண்ணீருடன் கொட்டி தீர்த்து விட்டாள் கண்ணீருடன. அவளுடன் சிறு பாதங்களை தரையில் புதைய மண்டியிட்டவாறு டெனியும் கடவுளிடம் தாயிக்காக பிராத்தினை  செய்தான்.

“ஜெஸி”என்ற ஃபாதரின் அழைப்பில் விழித்திறந்து எழுந்து நின்றாள் ஜெஸி. அவளுடன் டெனியும் நின்றான்.

“நான்  சொன்னனே உன் கண்ணிருக்கு விடை கிடைக்கப் போகுத்துனு, அது இன்னைக்கி கிடைச்சிருச்சி”என்று  வாசலை காட்ட, ஆரோன் தயங்கிய படி உள்ளே வந்தான்.

இவளுக்கு நெஞ்சடைக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது ! ஆரோனை பார்த்த டெனி உரிமையாக “அப்பா…!”என்று ஓடி அவன் காலை கட்டிக் கொண்டான்.

இவளுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அங்கே மடங்கி ஓ வென அழுதாள். “உள்ள வா ஆரோன்”என்றதும் காலை கட்டிக் கொண்டு நிற்கும் மகனை மண்டியிட்டு கதறும் மனைவியையும் புதிதாக பார்ப்பது போல பார்த்தான்.

“அது உன் பையன் தான் டென்னிஸ் ஆரோன்…!”என்றார் அவனும் அவனை தூக்கிக் கொண்டு அவன் முகத்தையே பார்க்க, டெனியோ ஆரோனின் கன்னத்தை பற்றி”இவளோ நாள் என்னையும் அம்மாவையும் விட்டுடு எங்க அப்பா போன?”எனக் கேட்கவும் அவனும் பதில் சொல்ல தடுமாறினான்.

அழுது கொண்டிருந்தவள், அவன் அமைதியாக இருப்பதைக் கண்டு பீதியுடன் அவனை பார்த்துக் கொண்டே எழுந்தாள்.

“ஃபாதர் அவனுக்கு என்னாச்சி? என் அமைதியா இருக்கான்? டெனிய பார்த்ததும் கூட ஏன் பேசல?”என அதிர்ச்சியுடன் கேட்டாள்.

“ஆரோன் இப்போ நம்ம ஆரோன் தான். ஆனா பழச எல்லாம் மறந்துட்டான். அதுனால தான் அவன் கிடைக்க தாமதம்… வீரமதி அடித்த அடியில் உள்ள ஏற்பட்ட பாதிப்பு தான் இது. ஆனா இது நம்ம ஆரோன் தான். அவன் நெஞ்சை பார்” என்றார்.

அவளும் அவன் அருகே வந்து அவனது சட்டையை விலக்க,அதில் ஜெஸி என்று தமிழில் எழுதி அதை சுற்றி ஹார்ட் வரைந்த டாட்டு இருந்தது.

அதைக் கண்டதும் வேகமாக, அவள் நெஞ்சில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள். ஆனால் அவளோ மிரட்சியுடன் அவளது அழுகையை பார்த்திருந்தான். ஆனால் அவளை அணைக்க வில்லை..

அதே நேரம் கையில் பூங்கொத்துடன் ஆசையாக வந்த துருவன், இந்தக் காட்சியை கண்டு உறைந்து நின்றான். எது நடக்க கூடாது என்று எதிர்பார்த்தானோ அதுவே நடந்து விட, ஆரோனை அணைத்து அழுகும் ஜெஸி கண்டு இவனுக்குக் வலித்தது.

கடைசி துளி வரை ‘அவள் கிடைப்பாள்’ என்று ஆசையை வளர்த்தவன், அது கண்முன்னே சிதைத்து போனதை கண்டு உடைந்து போனான். அங்கிருந்து விறுவிறுவென சென்று விட்டான்.

“எப்படி ஃபாதர் ஆரோன கண்டு பிடிச்சீங்க…?”

“சொல்றேன் மா ! அதுக்கு முன்ன வீட்டுக்கு போகலாம் உங்க அம்மா அப்பா பார்க்க வேணாமா?”எனவும்

“ஆரோன்  உன் வீட்டுக்கு போலாமா?”என்றார்.

“ஃபாதர் இத்தனை நாள் எனக்கு யாருமில்லை… என்னை தேடி யாரும் வர்றாம இருந்ததும். எனக்கு யாருமில்லன்னு தான் நினைச்சேன். ஆனா ஒரு குடும்பத்தை விட்டு  தனியா கஷ்டப்பட்டு இருந்தேன் இப்போ புரியுது. இவ்வளவு அன்பான குடும்பம் எதுவுமே எனக்கு  நியாபகத்து இல்லைன்றது நினைக்கும் போதே கஷ்டமா இருக்கு ஃபாதர்.

ஆசையா காலை கட்டிக்கிட்ட மகனை கூட என்னால நினைவிலே வச்சுக்க முடியலே ! கண்ணீர் விட்டு அழற என் மனைவிக்கு கூட என்னால ஆறுதல் கூட சொல்ல முடியல…! இதுக்கு நான் செத்திருக்கலாம் ஃபாதர்”என்று வருத்தம் கொண்டாள்.

“ஆரோன்  ஏன் இப்படி பேசற? நீ கிடைச்சதே எங்களுக்கு எவ்வளவு பெரிய சந்தோஷம் தெரியுமா? நீ இறந்துட்டன்றது எங்களால இன்னைக்கி வரைக்கும் ஜீரணிக்க முடியல..! ஆனா உன்னை பார்த்ததும் எங்க கவலை எல்லாம் காத்த மறைஞ்சு போச்சி… சந்தோசத்தை இழந்த வீட்ல உன்னால மீண்டும் சந்தோசம் கிடைச்சிருக்கு… அதை மறுபடியும் இழக்க வேண்டாம்.. அத்தையும் மாமாவும்  உங்களை பார்த்தா சந்தோசப் படுவாங்க… வாங்க போலாம்”என்றாள்.

அனைவரும் காரில் ஆரோன் வீட்டுக்கு வந்தனர். முதலில் உள்ளே நுழைந்த ஜெஸி…”அத்தை , மாமா இங்க வாங்க !”என்றதும் வெளியே வந்த இருவரும் ஆரோனை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். வேகமாக தன் மகனை கட்டிக் கொண்டு கதறி விட்டனர்.

ஜெஸி எட்வர்டு அழைத்து உண்மையை சொல்ல, அவனும் அடித்துப் பிடித்து ஓடி வந்தவன் நண்பனை தழுவி அழுது தீர்த்தான். குடும்பம் ஒன்னு கூடி மகிழ்ந்து அந்த தருணத்தை அழகாக மாற்றிக் கொண்டிருந்தனர்.

ஆரோன் கிடைத்த சந்தோசத்தில் அவள் துருவனை

மறக்க அவனை நினைவூட்டும் விதமாக அலைபேசி அலறியது, ருத்ரன் தான். துருவனின்  தற்கொலை முயற்சியை சொல்ல, அவளோ அனைவரிடமும் சொல்லிக் கொண்டு வேகமாக துருவனை காண சென்றாள்.

பதட்டத்துடன் செல்லும் ஜெஸியை எட்வார்ட் அவளை சந்தேகமாக பார்த்தான்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்