Loading

அன்று தான் நீதிமன்றத்தில் வீரமதியின் வழக்கு வர. ஜெஸியும் எட்வர்டும் சென்றிருந்தனர். வீரமதி, கொலை செய்ததை ஒத்துக் கொண்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையை நீதிபதி வழங்கிருந்தார். அவர் செய்த கொலைக்கு உடனிருந்து உதவியதால் சீனிவாசனுக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதித்தனர்.

வீரமதி , இதில் நிவாஸ் பெயரை அவர் இழுக்கவே இல்லை. அவன் வாழ வேண்டியவன் என்று மறைத்து விட்டார்.

போலீஸ் அவரை கைது செய்து சிறைக்கு அழைத்து செல்ல இருந்த நிலையில் ராதாவும், ருத்ரணும் அவரை அணைத்து அழுது விட்டு வீடு வந்தனர்.

நீதிமன்றத்தில் நடந்தவற்றை துருவனிடம் சொல்ல, அவனோ ருத்ரனை அணைத்து அழுதான். “என்னால தான் அம்மா ஜெயிலுக்கு போனாங்க அண்ணா ! நான் தான் அவங்களை தண்டனை ஏத்துக்கங்க சொன்னேன். எனக்காக தான் இப்போ அவங்க கஷ்டப்பட போறாங்க… நான் அவங்களுக்கு ஒரு நல்ல மகனா இல்லேல அண்ணா !”என அழ,

“எமோசன் ஆகாத ! உன் உடம்புக்கு நல்லது இல்ல… ஒரு மகனா, நீ செஞ்சது உனக்கு தப்பா தெரிஞ்சாலும். ஒரு நல்ல மனுசன் நீ செஞ்சது சரி தான். அப்பாவ கொன்ன காரணம் சரியா இருந்தாலும் ஆரோன கொன்னது தப்பு அதுக்கு அவங்க தண்டனை அனுபவிக்கனும்… விடு ! ஏதாவது நல்லது நடக்கும்…நீ ரெஸ்ட் எடு” என்றான்.

அவனை வந்து பரிசோதித்த மருத்தவர் அடுத்த  இரண்டு நாட்களில்  டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்றார்.

கண் இமைக்கும் நொடியில் இரண்டு நாள் மறைந்திட, மருத்துவமனை வாசனையிலிருந்து விடுதலை பெற்று வீட்டிற்கு வந்து விட்டான் துருவன்.

அவனை அறையில் சேர்த்து விட்டு கீழே இறங்கினார்கள்.

“எது வேணும்னாலும் என்னை கூப்பிடுடா !”என்று ருத்ரன் சொல்லி விட்டு இறங்க,  அவனை தொடர்ந்து மற்றவர்களும் வந்து விட்டனர். ஆனால் மது மட்டும் தயக்கத்துடன் நின்றாள்.

மருத்துவமனையில் அவனுடன் ஒரே அறையில் இருந்தது அவளுக்கு பிடித்திருந்தது. அவன் ‘ மது ‘ என்றதுமே சிட்டாக பறந்து அவனுக்கு என்ன வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்தாள். அவனை கணவனாகவும் இவள் அவனது மனைவியாகவும் நினைத்துக் கற்பனையில் அங்கிருந்த நாட்களில் அவனுடன் கனவில் வாழ்ந்து  கொண்டிருந்தவளை கிள்ளி எழும்பி விட்டது போல இருந்தது அவன்

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தது.  இனி எப்படி அவன்  அறைக்குள் அவனுடன் இருப்பது? என நினைக்கும் போது உள்ளே சுருக்கென்று வலித்தது.

மது மட்டும் அறையை விட்டுச் செல்லாமல் இருப்பதை  கண்டு பிடித்து கொண்டு நுதல் சுருங்க பார்த்தான். அவளோ தயங்கி நின்றாள்.

” மது என்ன வேணும்? ஏன் இன்னும் இங்கே இருக்க? ஏதாவது சொல்லனுமா?” எனக் கேட்டதும். அவளுக்கு பேச நா எழவே இல்லை  மூச்சு வாங்கியது..

“மது உனக்கு  என்ன பிரச்சனை?” என்றான் சலிப்பாக.

“அது… நான் இங்க ஒரு ஓரமாக இருந்துக்கவா ?” எனக் கேட்டதும் அவன் தூக்கி வாரிப் போட்டது.

“எதுக்கு நீ இங்க இருக்கணும் நினைக்கிற? உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? ஒரு பையன் ரூம்ல இருந்துக்கவா கேட்கிற? ஆர் யூ மேட் மது?” என கத்திக் கேட்க, அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. முகம் செத்து விட்டது. இருந்தும் வேறு வழியில்லாமல் சொன்னாள்.

“அங்க இருக்கும் போது பக்கத்திலிருந்தேன். இப்போ உங்களுக்கு கூப்பிட சிரமமா இருக்கும் அதான்  இங்க இருக்கவா கேட்டேன்”என்று திணறி சொல்லி முடித்தாள்.

“நோ தேங்க்ஸ் மது ! நீ ஹாஸ்பிடல் என்னை பார்த்துக்கிட்டு ஹெல்ப் பண்ணதுக்கு ரொம்ப நன்றி. ஆனா இனி உன் உதவி தேவை படாது. அப்படியே எனக்கு ஏதாவது தேவைன்னா நான் அண்ணாவையோ இல்ல அண்ணியையோ இல்ல ராதா மாவையோ கூப்பிட்டு கேட்டுபேன் நீ போலாம்”என்றான்.

அவளும் மனமின்றி தலையை ஆட்டி விட்டு திரும்பி சென்றவளை “மது”என்று அழைத்தான். அவள் திரும்பினாள்.

“நீ பண்றது எல்லாம் பார்த்தால் , நீ என்னை லவ் பண்றது போல தெரியுது. உண்மையா?” என அவன் கேட்க, மறுக்க முடியாமல் ஒத்துக் கொண்டாள்.

“பட் உன் மேலே எனக்கு அப்படி எந்த அபிப்பிராயம்  இல்ல… இன்பெக்ட் நான் ஜெஸிய லவ் பண்றேன். அவ மட்டும் தான் என் வாழ்க்கை. ப்ளீஸ் யூ ஸ்டே அவே ஃபரம் மீ !”என்றான்.

மேலும் மேலும் அவள் தன் மீது காதலை வளர்த்துக் கொள்ள கூடாது என்று நறுக்கியது போல பேசி விட்டான். அவளும் அழுது கொண்டே ஓடி விட, இரு புறமும் தலையை அசைத்து விட்டு படுத்துக் கொண்டான்.

அவள் தாயிடம் தஞ்சம் புக, அவரோ தங்கள் நிலைமை சொல்லி ஆறுதல் சொன்னார்.

மேலும் நாட்கள் செல்ல, முழுமையாக தேறியிருந்தான். வீட்டிலே சுத்தி சுத்தி வந்தான். உடற்பயற்சி செய்தான். கொஞ்சம் தெளிவானதும் வேலைக்கு செல்ல முடிவு எடுத்தான். அவன் வீட்டை அளக்கும் வேளையில் கவனித்து கொண்டு தான் இருக்கிறான் மெய்காப்பாளர்கள்  ஒருவர் கூட அவன் அருகே இல்லை… வாசலில் இல்லை ஜிம்மில் இல்லை… என்னவென்று புரியவில்லை…

ருத்ரனை அழைத்து விஷயத்தை கேட்டான்.”இனி எதுக்கு உனக்கு பாடிகார்ட்ஸ் நான் தான் வேணாம் சொன்னேன் டா !”என்றான்.

“ஏன் நீ மட்டும் வச்சிருக்க?! என் உயிர் மட்டும் என்ன தக்காளி தொக்கா ! சீக்கிரம் அரெஞ்சு பண்ணு நாளையிலிருந்து நான் ஆபிஸ்  போகணும்…”என்று கட்டளையிட்டு சென்று விட,  தலையில் அடித்துக் கொண்ட ருத்ரன் ஜெஸிக்கு அழைத்து விஷயத்தை சொன்னான்.

அவளும் ரவியை அழைத்து சீப் பாடிகார்ட்டாக போக சொன்னவள் தன்யாக்கு பதிலாக இன்னொருவனை நியமித்தாள்.

மறுநாள் வேலைக்குச் செல்ல கிளம்பி வந்தவனை கடவுளை தரிசிக்க வைத்தார் ராதா. அவனோ மாறாக அவர் காலில் விழுந்தான். அவரோ மனம் நிறைய ஆசிர்வாதங்களை கொடுத்து உச்சி முகர்ந்து விட்டு சாப்பிட அமர்த்தி பறிமார, உண்டு முடித்தான்.

அதற்குள் அங்கே வந்து விட்டனர். ரவி ஶ்ரீ, அசோக் , புதிதாக வந்த வினோத். தன்யாவை அவள் அனுப்ப வில்லை மாறாக   அவளுக்கு வேற வேலை கொடுப்பதாக சொல்லிருந்தாள் ஜெஸி.

நால்வரையும் முகம் சுருங்கப் பார்த்தவன், அவர்கள் அருகே வந்தான்.  “ஜெஸி எங்க? இவன் யாரு?”என கேட்டான்.

“ஜெஸி மேம்க்கு பதில நான் தான் இனி  சீப் பாடிகார்ட் ! இது வினோத் தன்யாக்கு பதில வந்திருக்கான் சார்” என்றான். அவனுக்கோ கோபம் பழியாக வந்தது.

“எங்க உங்க மேடம்?!” பல்லைக்கடித்துக் கொண்டு கேட்டான்.

“தெரியாது சார். போன்ல தான் பேசினாங்க சார்…!”

“ஏன் அவங்க வரல?”

“அவங்க வேலையிலிருந்து ரிலீவ் ஆகிட்டாங்க..!”என்றான்.

துருவனோ “ஆஆ…!” என கத்தி தன் கோபத்தை

அடக்க முடியாமல் இங்கும் அங்குமா நடந்தான். வேகமாக தனது செல்லை எடுத்தவன் யாருக்கோ அழைத்து கத்தத் தொடங்கி விட்டான்.

****

“மா… இந்த சேரியில சூப்பரா இருக்கீங்க?”என்று முந்தானை பிடித்து கன்னத்தில் வைத்து அதன் மென்மையை உணர்ந்த படி நின்ற மகனை பார்த்தாள்.

அவனது செயல்  சில நேரங்களில் ஆரோனின் சாயல் தென்படும், ஆரோன் கார்பன் காப்பி போலவே இருப்பான் டெனி. அதை உணரும் தருணம் எல்லாம் ஆரோனின் நினைவு அவளை ஆக்கிரமிக்கும். இன்றும் கூட  அவளுக்கு ஆரோனின் நியாபகம்  தான் வந்தது. அதுவும் அவனுக்கு பிடித்த பிடிக்காத சிவப்பு நிற ஷிபான் சேரியை தான் கட்டி  இருந்த போதும்.

அன்றும் கூட இதே சேலை கட்டி ஆப்பிளை போல இருந்தவளை கைகளால் அள்ளிக் கொண்டான் அவளது ஆரோன்.

“பச்… ஆரோன் என்ன இது? இப்போ தான் டா குளிச்சேன். இப்போ தான் நீயும் என்ன எழ விட்ட, அதுக்குள்ள என்ன?”என்றாள், அவனுக்குள் உருகி போய்.

ஆனால் அவனோ அதையெல்லாம் சிந்தனையில் எடுக்காமல் தன்னிருகைகளால் அவளை துழாவிக் கொண்டிருந்தான். அவனுக்குள் நெளிந்து கொண்டே இருந்தாள்.

“உன்னை யாரடி சேரி கட்டிக்க சொன்னா?அதுவும் இந்த சேரிய ? நீ சேரி கட்டினாலே எனக்கு பிடிக்காது. சும்மா சும்மா கட்டி வந்து என்னை உசுப்பேத்தறடி நீ !”என்று செல்லமாக கோபம் கொண்டவன் அவள் ஆப்பிள் கன்னத்தை கடித்து வைத்தான் .

“நான் சேரி கட்டினா மட்டும் உனக்கு ஏன்டா பிடிக்க மாட்டீக்கிது?”

“பின்ன நான் இருக்க வேண்டிய இடத்துலே அது இருக்கே !  அதுவும் நாள் முழுக்க…! எனக்கு கோபம் வருமா வராதா?”

“அதுக்காக நான் சேலையே கட்டக் கூடாதா?”

“மம்… எஸ் கட்டாத ! நீ சேலை கட்டினா என்னோட எல்லா பார்ட்ஸ் சூடாகி நீ தான்

வேணும் அடம்பிடிக்குது  நான் என்ன பண்ணட்டும்? “எனக் கேட்டு அவளை  ஆள தொடங்க அவன் கைகளை தட்டி விட்டாள்.

“ஏன்டி?”

“சாருக்கு நான் சேலை கட்டினா மட்டும் தான் அப்படி இருக்குமோ… எந்த ட்ரெஸ் போட்டாலும் உன் டர்ட்டி மைண்ட் டர்டியா தான் யோசிக்குது… அதுக்காக நீ என்னை எந்த ட்ரெஸ் போட கூடாது சொல்லுவ போல !”

“ம்ம். கண்டிப்பா எதுக்கு உனக்கு அதெல்லாம்… நான் இருக்கும் போது “என அவள் மீது படர,

” மூணு வயசு பையன பெத்தவன மாதிரிய பேசற நீ?”

“அவனுக்கு ஐம்பது வயசு வந்தாலும் இப்படி தான் பேசுவேன் இப்படி தான் டெம்ட்ட பண்ணுவேன்”என்று அவளை மீண்டும் ஆள தொங்கி விட்டான்.

அதை நினைக்கையில் ஒரு புறம்  வெட்கத்தில் மேனி சிவந்தாலும் மறுபுறம் அவனின்றி அவளது இளமை கரைவதை நினைத்து வேதனையாக இருந்தது. மீண்டும் அவன் கைகள் தன் இளமையை ஆட்கொள்ளாத என்று இருந்தது அவளுக்குள். அவன் முத்தங்களில் குளித்திட மாட்டோமா? அவன் அணைப்பில் இளைப்பாறுதல் கிடைக்காதா என்று ஏங்கி தவித்துக் கொண்டிருந்தாள் . கண்களில் துளி கண்ணீர் எட்டிப்பார்த்தது. மகனின் அழைப்பில் அதையும் மறைத்துக் கொண்டு அவனை பார்த்தாள்.

“வாங்க டைம் ஆச்சு !”என்றான்.

இருவரும் கிளம்பி தயாராகி வந்தனர். தன் பேரனை தூக்கி மடியில் வைத்து கொஞ்சியவர் மருமகளை பார்த்தார்.

இன்னும் புத்தம் புது மலரை போல இருந்தாள். இந்த புஷ்பம் கிடைத்து சோலையாக செழித்த மகனது வாழ்வு சீக்கிரத்தில் வாடி விட்டதே  என்று வருந்தினார்.

“அத்தை ! இன்டர்வியூ போறேன் என்னை பிளஸ் பண்ணுங்க” என்றாள்….

“கர்த்தர் உன் கூடவே இருப்பர். நீ எடுக்கற எந்த முயற்சிக்கு அவன் பலன் கொடுப்பார். நீயும் ஆரோன் போல பாடிகார்ட் போறத நினைச்சி பயந்துட்டு இருப்பேன். ஆனா இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு”என்று ஆசிர்வதித்து அவள் நெற்றியில் முத்தம் வைத்தார்.

ஜெஸியும் மெய்காப்பாளர் வேலையை  விட்டு விட்டு மகனுக்காகவும் மாமியார் மாமனார்க்காகவும் வாழ தொடங்கி விட்டாள். இருந்தாலும் வீட்டில் இருந்தால் ஆரோனின் நினைப்பு ஆக்கிரமிக்கும் என்பதால் வேலைக்கு செல்ல முடிவெடுத்தவள் ஃபாதர் சொன்ன அறிவுரைக்கு இணங்க, அவரது பள்ளியில் ஆசிரியராக செல்ல எண்ணினாள்.

டெனிக்கு ஒரே குஷி அம்மா, தன் பள்ளியில் வேலை பார்ப்பதோடு தன்னுடன் இருக்க போவதை எண்ணி  சந்தோசமாக இருந்தான். அதை களைக்கும் விதமாக அவள் முன்னே ஆப்ரஹாம் வந்து நின்றார்.

“என்னாச்சி மாமா ஏன் டென்ஷனா இருக்கீங்க?”

“இல்லம்மா துருவன்  நம்ம செக்யூரிட்டி சர்வீஸ் போன் போட்டு எனக்கு பாடிகார்ட்டா ஜெஸி தான் வரணும் சொல்லிருக்கான். நம்ம மேனேஜரும் அவங்க ரிலீப் ஆயிட்டாங்க சொல்லி பார்த்திருக்கான். கேட்கல ஜெஸி தான் வேணும்.. இல்ல உங்க செக்யூரிட்டி சர்வீஸ் இல்லாம பண்ணிடுவேன் மிரட்டி இருக்கான். என்னம்மா நடக்குது  இங்க?”என்றதும் அவளுக்கு கோபமும் அவமானமாக இருந்தது…

அவர்களிடம் அணைத்தையும் சொல்லி முடித்தவள் அவர்கள் முகத்தை பார்த்தாள்..

“ஜெஸி மா ! உன் மேலே எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கு ! அது என்னைக்கும் குறையாது. ஆனா நீ இப்படியே இருக்க போறீயா? நாங்க உனக்கு மாமனார் மாமியார் தான் ஆனாலும் நீ  எங்களுக்கு பெறாத மக, நாங்க உனக்கு பெத்து எடுக்காத அப்பா அம்மா ! உன் வாழ்க்கை நல்லா இருக்கணும் நாங்க நினைக்க மாட்டோமா? உனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கு மா ஏன் நீ வாழ கூடாது” ஆப்ரஹாம் கேட்க,

“ஆனா அதெல்லாம் தாண்டி ஆரோன் மேலே நான் வச்சிருக்க காதல் இருக்கே ! எனக்கு எது போதும் மாமா ! டெனி, நீங்க,  அத்தை போதும்… ஆரோன் கூட வாழ்ந்த வாழ்க்கையே இந்த பிறப்புக்கு போதுமானது.  அவன் கூட வாழும் போது கிடைச்ச பொக்கிஷ

நினைவுகள் மீதி நாட்களுக்கு போதுமானது. இனி எந்த உறவை சேர்த்துக்கவோ இழக்கவோ தயாராக இல்லை…  இதுக்கு ஒரு முடிவு கட்டிட்டு வர்றேன் மாமா “என்று மகனை அழைத்துக் கொண்டு சென்று விட, இருவரும் அவளை பெருமையாக பார்த்தனர்.

 

பாடலொன்றை விசிலடித்தப்படி கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்தான் துருவன்.

அலுவலகம் செல்ல கிளம்பி வந்த துருவனுக்கு ஜெஸி கொடுத்த அதிர்ச்சி தான் மெய்க்காப்பாளர் மாற்றம்.

தன்னிடத்தில் ரவியை போட்டு விட்டு தன்யாக்கு பதில் வேறு ஒருவரை நியமித்து இருந்தாள் ஜெஸி. அதை கேட்டதும் துருவனுக்கு எங்கிருந்து  தான் வந்ததோ அத்தனைக் கோபம்… சிந்தனையை மழுங்கடித்தது போல,  என்ன செய்கிறோம் என்று யோசிக்காது ! செக்யூரிட்டி சர்வீஸ் மேனேஜரை அழைத்து “எனக்கு பாடிகார்ட்டா ஜெஸி தான் வேணும்… இல்லேனா உங்க சர்வீஸ் செண்டர் மேலே கேஸ் போடுவேன்” என்று மிரட்டி வைத்து விட,  மேனேஜரோ ஆப்ரஹாமிடம் சொல்ல அவர் ஜெஸியிடம் வந்து கேட்க, அவர் கேட்டதும் அவளுக்கே அவமானமாக இருந்தது. இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கிறேன் என்று அதே சேலையுடன் விறுவிறுவென துருவனின் இல்லத்திற்கு வந்தவள் வேகமாக அவனது அறையை நோக்கி சென்றாள்.

அங்கே தலைவாரிக் கொண்டிருந்தவனின் பின்னால் வந்து நின்றாள். கண்ணாடியில் பிம்பத்தின் வழியே அவளை பார்த்தவன், “பச் காலையிலிருந்து உனக்கு இதே வேலையா போச்சி டி. ஒன்னு இங்க நிக்கற இல்ல அங்க நிக்கற ! மனுசன் உன் நினைப்பாவே இருக்கணுமா? போடி!” என செல்லமாக கோபித்து கொள்ள, அவளோ  அவனை நெருங்கி கன்னத்தில் அடி கொடுத்திருக்க, தாள முடியாமல் அப்படியே தரையில் அமர்ந்து விட்டான்.

“நீ எல்லாம் மனுசன் தானா டா ! நான் என்ன டீனேஜ் ஏஜ்ல இருக்கேன் நினைப்பா உனக்கு? எனக்கு ஒரு குடும்பம் குழந்தைன்னு இருக்கு. என் புருசன் கூட இல்லைனாலும் அவங்க இன்னமும் அதே பாசத்தோடவும் மரியாதையோடும் நடத்துறாங்க… அவங்க முன்னாடி என்ன தலை குனிய வச்சுடேல ! அப்படி என்னடா காதல் பொல்லாத காதல் உனக்கு வந்திருச்சு என் மேலே ! என்ன பண்றோம்? ஏது பண்றோம் ? கூடவா ஒரு மனுசனுக்கு தெரியாது? ஜெஸி தான் வேணும் இல்லேனா கேஸ் போடுவேன் சொல்ற ! அங்க வீட்ல என்னை என்ன நினைப்பாங்க… இப்படி முட்டாள் மாதிரி நடந்துக்கற நீ !”என காட்டு கத்தலாக கத்த, கீழே அமர்ந்து  அவள் அடித்த கன்னத்தை பொத்தியபடி  சேலை அணிந்து வந்த செர்ரி பழத்தை ரசித்து கொண்டிருந்தான்.

அதில் கடுப்பான ஜெஸி “துருவா !”என அழைக்கவும் நினைவுக்கு வந்ததும் “என்ன ஜெஸி ?”என்று கேட்டான் எதுவும் மண்டையில் ஏறாமல்.

அவளோ தலையில் கைவைத்து விட்டாள். “இவ்வளவு நேரம் திட்டினேன், உன் மண்டையிலே ஏறுச்சா? இல்லையா?”

“நீ இங்கேயும் இங்கயும் இருக்கற வரை எனக்கு எதுவுமே ஏறாது ஜெஸி”என்று மூளையையும் நெஞ்சையும் தொட்டு காமித்து விட்டு சொல்ல அவளுக்கோ கோபம் தலைக்கேறியது.

“இவ்வளவு தூரம் சொல்றேன் உனக்கு புரியவே இல்லையா டா ! நான் உனக்கு இல்ல… இப்பவும் எப்பவும்.. எனக்கு உடலும் மனசும் ஆரோனுக்கு மட்டும் தான். வேற யாருக்கும் அதை பங்கு போட மாட்டேன்”என்று தெளிவாக உரைக்க, இவனுக்கு உள்ளே கோபம் கனன்றாலும் பொறுமையாக  இருந்தான்.

“அப்ப ஏன் வேலையை விட்டு போன?  உன் உடலும் மனசும் ஆரோனுக்கு தான் தெளிவா இருக்கற நீ, வேலைக்கு வர வேண்டியது தான ஜெஸி  ! ஏன் நீ வேலைக்கு வரல? ஏன் ரிலிவ்வான எங்க இவன் மனச மாத்திடுவான்ற பயம் தான !” என்க அவளுக்கோ அவன் வார்த்தை கடுப்பாக இருந்தது.

“லுக் மிஸ்டர் துருவன் , எங்க நீ என் மனசை மாத்திடுவியோன்னு நான் ஒன்னும் வேலையிலிருந்து ரிலீவாகல… என் குடும்பத்தையும் என் பையனையும் பார்க்கனும் தோணுச்சு ரீலிப் ஆனேன்…! அவ்வளவு தான். நான் வந்த வேலையும் முடிஞ்சது நான் ஏன் இங்க வேலைக்கு வரணும்?”அவள் கேட்க, அவனுக்குள் ஒரு சிறு ஏமாற்றம் அதை  மறைக்க  முயன்றவன்,

“இதை நான் நம்பணுமா  ஜெஸி? உன் பயம் தான் இங்க தெரியுதே..!  உனக்கே உன் மேலே நம்பிக்கை இல்லை… சோ நீ வேலைக்கு வரலை. ஒத்துக்கோ பேபி ! நாம வேற சவால் விட்ருக்கோம் மறந்துட்டியா? இப்படி பின் வாங்கற?”அவள் தன்மானத்தை  தூண்டி விட்டிருந்தான் துருவன்.

அவளும் சேலையை இழுத்து சொருகி கொண்டவள்” சவால்ல ஜெயிக்கிறேனா இல்லையான்னு பாரு ! என் ஆரோன் தவிர யாருக்கும் என் மனசுல இடமில்லை அதை நான் நிரூப்பிச்சு காட்றேன் ” என்று சொடக்கிட்டு சொன்னவள், “நான் வேலைக்கு வரேன் டா ! நீயா? நானா ? பார்க்கலாம்”என்று வெளியே செல்ல எத்தனித்தவளை தடுத்தான் துருவன்.

“ஜெஸி ! இந்த நிமிசம்  நீ என்ன நினைக்கறீயோ எனக்கு தெரியல ஆனா எனக்கு கவிதை போல இருக்கு. நீ, நான், நம்ம ரூம்ல சண்டை போட றது பார்த்தால், புருசன் பொண்டாட்டி சண்டை போடற போல பீல் குடுக்குது டி…! ரொம்ப ஹாப்பியா இருக்கேன்”என்று ரசித்து சொல்ல,

அவளோ வெறுமையாக பார்த்து வைத்தாள்.”ரொம்ப சந்தோஷப்பட்டுக்காத இதெல்லாம் நிலைக்காது நடக்காது… சீக்கிரம் கிளம்பி வா ! நாங்க வெயிட் பண்றோம் “என்று கீழே இறங்க, அவனோ கோபத்தில் மெத்தையை எட்டி உதைத்து விட்டு கீழே இறங்கினான்..

அதற்குள் அவளோ வீட்டிற்கு அழைத்து விட்டு விஷயத்தை மேம்போக்காக சொல்லி விட்டு வைத்து  விட்டாள்.

“வினோத், இனி நீ  வர வேண்டாம் . நான் தன்யாவா கூப்பிட்டுகிறேன் “என்றாள். அவனுக்கு வாயெல்லாம் பல்லாக இருந்தது.”எப்பா !  கோல்கேட்  விளம்பரதுக்கு நடிக்க வடிந்தது போல நிக்கற என்னடா ?” ஶ்ரீ கேட்க, “அது வந்து அண்ணா”என்று வழிய !”

“என்ன லவ்வா?” என்றதும் ஆம் என்று வெட்கப்பட, தலையில் அடித்துக் கொண்டனர்  அசோக்கும், ஶ்ரீயும்.

“மேம் ! எதுக்கு நீங்க இவ்வளவு தூரம் ஸ்ட்ரைன் எடுத்துக்கணும்… பிடிக்கலைனா பிடிக்கலை சொல்லிட்டு போகலாம்ல  ஏன் இன்னமும் பொறுமையா இருக்கீங்க?” ரவி கேட்க,

“மத்த விஷயங்கள் னா மிரட்டி அதட்டி பணிய வச்சிட்லாம்… ஆனா இது லவ் கொஞ்சம் சென்சிடிவ்வானது பொறுமையா தான் ஹாண்டில் பண்ணனும்… இல்ல உயிர் நஷ்டம் ஆகலாம் ரவி. அதான் பொறுமையா இருக்கேன்… ஆனா அந்த பொறுமைக்கும் எல்லை உண்டு “என்றாள்.

துருவன் வந்துவிட,  ஐவரும் அலுவலகம் வந்தனர். தன்யா அங்கே நேரடியாக வந்து விட்டாள். ரிஷி தான் அவளது வருகையை கண்டு குழம்பினான்.

“என்னடி வர மாட்டேன்  சொன்ன, இப்போ என்ன இங்க வந்து நிக்கற?”

“மேடம் தான் இங்க வர சொன்னாங்க… இனி இங்க தான் வேலையாம்… “என்றாள் சலிப்பாக,

ரிஷியோ “அப்பாடா ! இனி வெளிய, மீட் பண்ண வேண்டியது இல்லை.. இங்கே லவ்வஸ் பண்ணலாம்… காசு மிச்சம்”எனவும் புசு புசுவென தன்யாவுக்கு கோபம் வர அவனை மொத்தியவள்,” லவ் சொல்றது முன்னாடி அப்படி கவனிச்சிட்டு அக்சப்ட் பண்ணினது, எல்லாம் கசக்குதோ ! வெளுத்துடுவேன். இங்க லவ்ஸ்  பண்ணினாலும் வெளியவும் கூட்டிடு போற நீ ! இல்ல அவ்வளவு தான்”என்று மிரட்ட, முதலில் பயந்தவன், பின் அவளை அணைத்துக் கொண்டான்.

இருவரும் காதலை சொல்லி அதை வளர்க்கவும் ஆரம்பித்து விட்டனர். துருவன் அலுவலகத்துக்குள் நுழைந்து விட, இவர்கள் வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்து விட்டனர்.

அன்று முழுவதுமே ஜெஸியும் துருவனும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு தான் திரிந்தனர். இரவில் வேலை முடிந்ததும் ராதாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டாள், அவனும் எதுவும் சாப்பிடாமல் படுத்து விட்டான்.

வீட்டிற்கு வந்தவள், டெனியை படுக்க வைத்து விட்டு தன் மாமனார் மாமியாருக்கு அனைத்தையும்  சொல்லி புரிய வைத்தாள். ஆரோனை  தவிர வேற வாழ்க்கை இல்லை திட்டவட்டமாக சொல்லி விட்டாள். அவர்களும் அவளை முழுதாக நம்பினார்கள்.

அந்த வாரம் முழுதும் ஜெஸியும் துருவனும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு தான் இருந்தார்கள். ஒத்த வார்த்தை பேசிக் கொள்ளவில்லை…

இதற்கு இடையில் வாரத்தில் அரசு விடுமுறை வர, துருவனும் அலுவலகத்திற்கு விடுமுறை கொடுத்து விட்டு இவர்களுக்கு மட்டும்  வேலை என்ற பெயரில் அவனது வீட்டில் சும்மா உட்கார வைத்து விட்டான் , ஐவரும் துருவன் மேல் கோபமாக இருந்தனர்.

ஜெஸி , தான் மகன் டெனியை அழைத்து வந்திருந்தாள் வேறு வழியின்றி. ஆரோக்யாவும் ஆப்ரஹாமும்  ஊருக்கு செல்வதால் இவனை இங்கு அழைத்து வந்திருக்க, நிதினுடன் விளையாடினான்.

அவனை அங்கு எதிர்பாராத துருவ் அவனை கண்டதும் அவனை தூக்கிக் கொண்டான்.

“ஹாய் டெனி சார் ! நீங்க எப்போ வந்தீங்க? இங்க வந்துட்டு என்னை பார்க்க ஏன் வரல நீங்க?”

“அம்மா ! தான் உங்க கூட சேரக் கூடாது பேசக் கூடாது சொன்னாங்க… நீங்க ரொம்ப பேட் பாயாம் “என்றான் மழலை மொழியில்.. அவன்  அவ்வாறு சொன்னதும் கோபம் பழியாக வர, “நீ இன்னைக்கி முழுக்க என் கூட தான் விளையாதட்ற வா யாரு என்ன சொல்றா பார்போம்!”என்ற தீவரத்தோடு அவனையும் நித்தினை அழைத்துக் கொண்டு ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்தான்.

வீடெங்கும் மகனை தேடி களைத்தவள் வேலையாட்களிடம் விசாரிக்க டெனி துருவனுடன் ஜிம்மில் இருப்பதாக சொன்னார்கள் அவளும் வேகமாக அங்கே சென்றாள்.

அங்கே நிதின் விரல் விட்டு எண்ண டெனியை முதுகில் சுமந்துகொண்டு தரையில் புஷ் அப் செய்து கொண்டிருந்தான்.

“டெனி “என அழைக்க , அவன் வேகமாக இறங்கி தாயிடம் வந்தான் “உன்னை என்ன சொன்ன என் கிட்ட சொல்லாம எங்கேயும் போக கூடாதுனு… நீ ஏன் இங்க வந்த?உன்னை எங்க  எல்லாம்  தேடினேன் தெரியுமா?” என்று அவனை அதட்ட,

“மேடம் அவனை தூக்கிட்டு வந்தது நான் தான்… என்னை கேளுங்க? அவனை எதுவும் கேட்க வேண்டாம்… ஆமா எதுக்கு நீ இவன் கிட்ட என்னை பேட் பாய் சொன்ன? என்ன பேடா நடத்துட்டோம் உன் கிட்ட பிள்ளை கிட்ட சொல்லி என்னையும் அவனை பிரிக்க பார்க்கறியா ? அவ்வளவு பயமா என் மேலே ?!”நக்கலாக கேட்க,

“ஆமா பயம் தான். அது குழந்தை சட்டுனு எல்லார் மேலையும் பாசத்தை வச்சிடும்… அதுக்கு அப்புறம் அவங்க பிரிஞ்சு போனது அவங்களை கேட்டு அழும். அப்படி நீ பாசத்தை காமிச்சு உன்னை கேட்டு அழுதா நான் என்ன  செய்வேன்… ஏற்கெனவே நான் பட்டது போதும்

திரும்பவும் முடியாது என்னால”என்று அவ்விடம் விட்டு நகர அப்படியே சிலை போல நின்றான்.

நாட்கள் படையெடுத்து செல்ல, இருவரது சண்டை மட்டும் ஓயாமல் இருந்தது. அவன் இருவரதுஇடைவெளியை கரைக்க என்ன இவளோ மேலும் மேலும் தள்ளிச் சென்று தனக்குள்ளே இறுகி போனாள்… ஆனாலும் அவன் முயற்சியை கைவிடவில்லை முயன்று செய்து தான் கொண்டிருக்கிறான். இதற்கு இடையில் தான் அந்த அதிர்ச்சியான தகவல் துருவனின் காதில் வந்து எட்ட, அதிர்ந்தவன்,

ஜெஸி தனக்கு கிடைத்தே ஆக வேண்டும். என்ற முனைபோடு யோசித்தவன், ஒரு வார கால கெடு கொடுத்திருந்தான் ஜெஸிக்கு.

ஒரு வாரத்தில் பதில் சொல்ல வேண்டும் முடியாது என்றால் தற்கொலை செய்துக் கொள்வேன் என்று மிரட்ட, என்ன செய்வதென்று தடுமாறி போனாள் ஜெஸி.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்