Loading

“ம்ம்.. சுடு !” என்று நின்ற நிலையில் இருந்தான் எட்வர்டு.

வீரமதி பதறி போய் “ஐயோ என் புள்ளைய விட்ரு, உன் புருஷனை கொன்ன என்னை கொல்லு ! என் புள்ளய விட்ரு !”என கதறினார்.

ஜெஸி , எட்வர்டு இருவருக்கும் அவரது கூற்றில் கேலி புன்னகை மலர்ந்தது இதழில்.

“உங்களுக்கு ஏன் வீரமதி மேம் நான் நியாயம் பார்க்கனும்? உங்க அக்காவ கொன்னது உங்க புருஷன் தானே ஆரோன் இல்லையே சமந்தமே இல்லாத என் நண்பனை ஏன் கொன்னீங்க? நாங்க ஏன் நியாயமா நடந்துக்கணும் வீரமதி மேம்?”என்றான் வெறுப்பை உமிழுந்து.

“மா ! பெத்தவங்க  பண்ண பாவம் புண்ணியம் எல்லாம் புள்ளைக்கு தான் சேரும். நீங்க ரெண்டு பேரும் ஒரு தப்பும் பண்ணாத அப்பாவிய கொன்ன  பாவத்துக்கு  நான் அனுபவிக்கனும் தானே மா ! உங்களுக்கு ஆரோனை கொல்லும் போது சுயநலம் தானே இருந்தது. இப்போ மகனை இன்னொருத்தர் கொல்ல நினைக்கும் போது பாசம் வருதா !  அப்போ ஆரோன பெத்த அந்த தாய் எவ்வளவு துடிச்சி இருப்பாங்க…? யோசிக்கலையே மா நீங்க…!”என்னும் போதே அவர் தலையில் அடித்து அழுதார்.

“ஜெஸி நீ என்னை சுடு! என் அப்பா அம்மா பண்ண பாவத்துக்கு நான் சாகத் தயார் தான். கமான் சூட் மீ ! “என்று நெஞ்சை நிமித்திக் கொண்டு அவள் முன் நின்றான்.

அவள் கைகளோ முதல் முறையாக நடுங்கின, அவள்  காதின் ஓரம் ‘ சுடாதே ‘ என ஆரோன் சொல்வது போல்  இருந்தது. மறுபக்கம் ‘ சுடு ‘ என்று எட்வர்டு கர்ஜித்து கொண்டிருந்தான்.

“எட்வர்டு! அவனை கொன்னுட்டா ! அப்புறம் அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? ஆரோன் இதுக்கு ஒரு காலும் சம்மதிக்க மாட்டான். வேணாம் எட்வர்டு அவனை விட்றலாம்!”என்றாள் தழுதழுத்த குரலில்.

“ஓ…! ஆரோன் சம்மதிக்க மாட்டானா? இல்ல உன்னால பண்ண முடியலையா ? ஆரோன மறைந்துட்டேல ஜெஸி ! புது உறவு வந்ததும் புருஷனையே மறந்தாச்சில “என்றவன் அவள் கோபத்தை தூண்டி விட்டிருந்தான்.

“ஸ்டாபிட் எட்வர்டு! என் புருஷனை நான் எப்பவும் மறக்க மாட்டேன். அவன் ஒன்னும் என் சிந்தனையில கலக்கல, மறந்து போக.  என் உயிரில கலந்தவன் அவனை மறக்கறது நான் இறக்கறதுக்கு சமம்…

நான் ஆரோன் இடத்துலே இருந்து யோசிக்கிறேன்… அவனை போல இரக்க குணம் யாருக்கு உண்டு எட்வர்டு! இப்போ கூட காதுல அவன் குரல் தான் சுடாதே சொல்றது போல இருக்கு… என்னால இவனை முடியாது எட்வர்டு !”என்று கையை இறக்கிக் கொண்டாள்.

“அப்போ நான் சுடுறேன் “என்று அவன் கையை உயர்த்தி அவனை சுட இருந்த வேளையில் அறைக்குள் இருந்த ரிஷிகா துருவனை சுட்டாள்.

“துருவா !”என இரு பெண்மணிகளும் அலற, ரிஷிகா அடுத்து  ஜெஸியை சுட, துப்பாக்கி முனையை திருப்பினாள்.

அதற்குள் அவளை அறிந்து கொண்ட எட்வர்டு அவளது கையில் சுட்டிருந்தான்.

வலியில் துப்பாக்கியை கீழே போட்டாள். அவளை பிடிக்கச் செல்ல, அவனை தள்ளி விட்டு வெளியே ஓடியவளை, துரத்திக் கொண்டு ஓடினான்.

பிறந்த நாள் விழா  அன்று மிலால் அவளை அடித்து இழுத்து சென்றவர், வீட்டில் வைத்து வெளுத்து எடுத்து விட்டார். அவர் காலில் விழுந்தவள் “என்னை விட்ருங்க… உங்க கூட வாழ எனக்கு இஷ்டமில்லை… எனக்கு அவனை பிடிச்சிருந்தது. அவன் கூட வாழ ஆசைப்பட்டேன்… அதான் அப்படி நடந்துக் கிட்டேன். ஆனா அவன் என்னை குப்பையா நினைச்சான் அதான் கோபத்துல அப்படி செஞ்சேன்…”என்று உண்மையை ஒத்துக் கொள்ள, அதற்கு மேல் அவருக்கு அவள் மீது வெறுப்பு வர, அவளை வீட்டை விட்டு துரத்தி விட்டார்.

அந்த வீட்டை விட்டு வெளியே வந்தவள் தோழியின் வீட்டில் கொஞ்ச காலம் தங்கினாள். பின் தனது வயிற்று பிழைப்பிற்காக வேலைக்கு செல்ல முடிவெடுத்தாள். ஒரு பெரிய ஹோட்டலில் அவளுக்கு ரூம் சர்வீஸ் வேலை கிடைத்தது.

ஆனாலும் அவளால் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. அவளது அழகை பார்த்து அவளை படுக்கைக்கு அழைத்தவர்கள் அதிகம். அவர்களிடம் தப்பிப்பது கத்தியில் நடப்பது போல இருந்தது  அவளுக்கு.

அங்கே அவளுக்கு என்று ஒரே ஆறுதலாக, நண்பனாக சதீஸ் மட்டும் இருந்தான். அவளை மனுஷியாக பார்ப்பது அவன்  மட்டும் தான். அவனால் தான் அவள் தப்பித்து கொண்டிருக்கிறாள். இதற்கு காரணம் ஜெஸி, துருவ் அவர்களை பழி தீர்க்க நினைத்துக் கொண்டிருந்த நேரம் தான் துருவ் , ரிஷிகா வேலை செய்யும் ஹோட்டலுக்கு வந்திருந்தான். அவன் வந்த வேலையை முடித்து  விட்டு போகும் போது தான் அவனை கண்டாள் அவள். மேனேஜரிடம் குழைவாக பேசி விஷயத்தை கரந்தவள்.

மறுநாள் அந்த அறையின் இன்னொரு சாவியை சதீஸ் மூலம் பெற்றுக் கொண்டு முன்னதாகவே உள்ளே நுழைந்து அறைக்குள் பதுங்கி விட்டாள்.

இந்த முறை அவனை கொலை செய்யும் நோக்கத்தோடு துப்பாக்கியுடன் தான் ஒழிந்து இருந்தாள். அவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரம் அறையை விட்டு மெல்ல வந்தவள், துருவனையும் ஜெஸியையும் கொல்ல நினைத்து தான் முதலில் துருவனை  சுட்டாள். ஜெஸியின் பக்கம் தன் துப்பாக்கியை திருப்பிட அதற்குள் எட்வர்டு அவளை சுட்டு விட தப்பித்து ஓடினாள், அவனை துரத்திக் கொண்டு போய் விட்டான்.

“துருவா !”என அழைத்துக் கொண்டு ஜெஸி அவனை மடியில் தாங்கினாள். வீரமதியும் அவனை தாங்கினார்.

“நீங்க செஞ்ச பாவத்துக்கு இவங்க தண்டனை கொடுக்கலை… ஆனா கடவுள் கொடுத்துட்டார் பாருங்க…! ஏன்மா ஆரோன் கொன்னிங்க?”என கேட்க, அவர் அழுகையை மட்டுமே பதிலாக தந்தார்.

அதே நேரம் ஜெஸி ஆம்புலன்ஸ்க்கும் போலீஸ்க்கும் தகவல் தந்தாள்.

“மா, நீங்க போலீஸ்ல சரண்டர் ஆகிடுங்க எனக்காக. நான் ஜெஸிக்கு வாக்கு கொடுத்திருக்கேன் நீங்க தண்டனை அனுபவிச்சி  தான் ஆகனும்.  என் மேலே சத்தியம் பண்ணுங்க”என்றதும், அவரும் அதை ஒப்புக் கொண்டு சத்தியம் செய்தார்.

அவன் ஜெஸியின் பக்கம் திரும்ப அவனுக்காக அழுது கொண்டிருந்தாள்..” அன்னைக்கி நீ சொன்னது பொய் தான ஜெஸி ! இந்த கண்ணீர் எனக்காக தான?” அவளால் பதில் சொல்ல முடியவில்லை…

“ஜெஸி ! என்னை காப்பாத்து பிளீஸ் என்னை காப்பாத்து நான் வாழனும் , உன் கூட நூறு வருசம் வாழனும்… எனக்கு நீ வேணும் ஜெஸி. ஐ மேட்லி லவ் வித் யூ! ப்ளீஸ் என்னை சாக விட்றாத நான் உன் கூட வாழனும்”எனும் போதே அவள் கைகள் அவனிடமிருந்து விலக,

அவனோ கெட்டியாக பிடித்துக் கொண்டு, “இந்த  கைய விட மாட்டேன் ஜெஸி ! கடைசி வரைக்கும். ஆரோன் போல பாதிலே போக மாட்டேன். உன் கூட முழுசா வாழ்ந்துட்டு  உனக்கு அப்புறம் தான் போவேன்”என பேசிக் கொண்டே போக வீரமதிக்கு அதிர்ச்சி என்றால்  ஜெஸிக்கு பேச்சே வரவில்லை…

அதற்குள் ஆம்புலன்ஸ் வர, அவனோ மயங்கினான்  அவனை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அவனை அனுமதிக்க வெளியே வீரமதியும் ஜெஸியும் கண்ணீருடன்  நின்றிருந்தனர். வீட்டிற்கு தகவல் போக, அனைவரும் வந்து விட்டனர்.

அவர்கள் வீரமதியிடம் விசாரிக்க , அவரோ அழுது கொண்டிருந்தார்.

“அவன் உடம்புல துப்பாக்கி குண்டு படுற அளவுக்கு நீ என்ன பண்ணிட்டு இருந்த ஜெஸி?! எதுக்கு உன்னை அவனுக்கு பாடிகார்ட்டா  நியமிச்சோம்? அவன் உயிருக்கு ஆபத்துங்கறதால தானே ? என்ன பண்ணிட்டு இருந்த நீ?”காட்டமாக கத்தினான் ருத்ரன்.

வீரமதியோ , “ஜெஸி மேலே எந்த தப்பும் இல்ல தப்பெல்லாம்   என் மேலே தான் ருத்ரன்”என்றார். அவனோ புரியாமல் பார்க்க, அதற்குள் அங்கே போலீஸ் வந்தது.

“மேடம்,  மினிஸ்டர் பிரகதீஸ்வரர் கொன்ன குற்றத்துக்காக  உங்களை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்”என்றதும் அங்கிருந்த குடும்ப மக்களுக்கு அதிர்ச்சி

ருத்ரனோ , “அம்மா என்ன சொல்றார் இவர்? நீங்க அப்பாவை கொன்னிங்களா? “

“அது மட்டுமில்ல உங்க தாத்தாவையும் ஆரோனை கொன்னதும் நான் தான்… சார் என்னை நீங்க அரேஸ்ட் பண்ணலாம்”என்றவர் அழுது கொண்டிருந்த ராதாவின் அருகே வந்து

” நான் இல்லைன்னு இந்தக் குடும்பம் சிதைந்திட கூடாது ! நீ தான் பாதுக்காக்கனும், பாத்துக்கணும்… ருத்ரா நீ கம்பெனிய பார்த்துக்க, இனி நான் வெளியே வருவேனோ இல்லையோ !இந்த குடும்பம் மொத்தமும் உங்க பொறுப்பு !”என்றவர் அவர்களுடன் சென்று விட்டார்.

அவருடன் வாசனும்  சேர்ந்து சிறைக்கு சென்றார். ரிஷிகாவையும் பிடித்துக் கொண்டனர்.

சிறைக்கு சென்றவர்களை சிறையில் சென்று பார்த்தார் விஸ்வேஸ்வரர்.

அவரை கண்டதும் மன்னிப்பு கேட்டார் வீரமதி. “நீங்க அண்ணன் கொன்னது தப்பில்லை… உங்களை நான் வெளிய எடுக்கறேன்  அண்ணி !”என்றார்.

” வேணாம் விஸ்வேஸ் ! ஒரு அப்பாவிய கொன்ன பாவத்துக்கு தண்டனை வேணும் எனக்கு… எனக்கு ஒரு உதவி செய்வீயா விஸ்வேஸ் ?!”

“என்ன அண்ணி சொல்லுங்க  செய்றேன்”

“என் தம்பி குடும்பத்தை பார்த்துக்கப்பா அவங்களுக்கு  நம்மலை விட்டா யாரும் இல்ல “

என்றார் அவரும் ஒப்புக் கொண்டு விட்டு அங்கிருந்து  நகர்ந்து விட்டார்.

மினிஸ்டர் கொலை செய்யப்பட்டார் எனக் கேட்டதும் தமிழ் நாடு கொந்தளிக்க, அதை எப்படியோ தடுத்து விட்டனர் போலீஸ்ம் அரசாங்கமும்.

உள்ளே துருவனுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர்.

ஜெஸி சோர்வாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டாள். அவளுக்கு ஆறுதலாக ராதா அருகே அமர்ந்தாள்.

சிகிச்சை முடித்து விட்டு டாக்டரும் வர அவரை சூழந்த மக்கள் அவனது நலனை விசாரிக்க, ‘ குண்டை எடுத்து விட்டதாகவும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை !’ என்றதும் உயிரே வந்தது அனைவருக்கும்.

அங்கிருந்து ஜெஸி வீட்டிற்கு வந்தாள். அவளை அணைத்து அழுதார் ஆரோக்யா, செய்தியை பார்த்து அதிர்ச்சியான இருவரும் மருமகளை கண்டதும் கலங்கி நின்றனர். உள்ளே சென்றவள் தண்ணீருக்கு அடியில் நின்று  ஆரோனின் கடைசி நிமிடங்களை நினைத்து மூச்சாக கதறி அழுது தீர்த்தாள். அவளை யாரும் அங்கு தடுக்கவில்லை மொத்த குமறலையும் நீர் போல கொட்டி அழுது தீர்த்தாள்.

மெல்ல விழிகளை திறந்தான் துருவன், அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு நான்கு நாட்களானது.

அறுவை சிகச்சை முடிந்ததும், அவனை மூன்று நாள்  ஐ.சி. யூ வில் வைத்திருந்தவர்கள். நான்காம் நாள் அவனை வார்டுக்கு மாற்றினார்கள்.

அவன் கண் விழித்த போது, அவனது குடும்பம் மொத்தமும் அங்கே நின்றிருந்தது. மூன்று நாட்கள் மருத்துவமனையிலே தவம் போல கிடந்தார்கள்.

ராதாவும் ருத்ரனும் மட்டும் அவனை நெருங்கி நின்றார்கள்.

“இப்போ எப்படி இருக்கு துருவ்?” ராதா அவன் தலையை வருடிக் கொண்டு கேட்டார். அவரை கலங்கிய கண்களுடன் பார்த்தவன்”பரவாயில்லை ராதா மா ! கொஞ்சம் பெயின் இருக்கு சீக்கிரமா அதுவும் போயிடும் “என்றான் புன்னகைக்க முயன்று.

அருகே இருந்த ருத்ரனிடம் “அண்ணா ! அ… அம்மா… “

அவனோ தன் குடும்பத்தை ஒரு தரம் பார்த்து விட்டு “நல்லா இருக்காங்க ! நாளைக்கு கோர்ட்ல நம்ம கேஸ் தான் வருது. நாளைக்கு தான் அம்மாக்கு தண்டனை தருவாங்க…! பாட்டி எங்கன்னு? நிதின் கேட்டுடே இருக்கான்.

நான் வேலை விஷயமா பாரின் போயிருக்காங்க  வர கொஞ்ச வருசமாகும் சொல்லிருக்கேன். எப்படி அவன சமாளிக்க போறேன் தெரியல டா ! அம்மா இல்லாம இனி  இந்த வீடும், ஆபிஸ் எப்படி இருக்க போகுது தெரியல துருவ்…?!”என அழுக ஆரம்பித்தான்.

“அண்ணா !  அம்மா மட்டும் தான் இருக்க மாட்டாங்க… ஆனா இந்த வீடு எப்பவும் போல தான் இருக்கும் அண்ணா ! ராதாம்மா  இருக்கும் போது நமக்கு என்ன கவலை…?! உனக்கு ஆபீஸ் பரிச்சயம் இல்லையா என்ன? அம்மாக்காக காத்திட்டு இருப்போம்ணா ! கண்டிப்பா அவங்க வருவாங்க…!”என்றான் அவனும் ஆமோதிக்க, ராதா அவனை அணைத்தும் முத்தம் வைத்தார்.

நித்திகா, லோக்கித், லோகிதாவும் அவனிடம் நலம் விசாரித்து சென்றார்கள். மதுவும் மதுரனும் சுமதியும் புது மனிதர்களாக நின்றார்கள்.

அவர்களை முகம் சுருக்கி முதலில் பார்த்தான். ருத்ரன் தான்”அவங்க தான் நம்ம அத்தை , அது மது தெரியும்ல , அது மதுரன். மாமாவும் சரண்டர் ஆயிட்டார். இவங்க இனி நம்ம பொறுப்பு “என்றான்.  அவர்களுக்கு புன்னகை செய்தவன் மீண்டும்  ருத்ரனை பார்த்தான்.

“அம்மாவ பார்த்துட்டு தான் வந்தேன். அம்மா சொல்லி தான் இவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்”

“சித்தப்பா !”

“அவருக்கு மீட்டிங் இருக்கு போயிருக்கார். அவருக்கு அம்மா ஜெயிலுக்கு போனது தான் வருத்தம். வேற எந்த வருத்தமும் இல்ல அவர் காட்டிக்கவும் இல்ல…”என்றான்.

“ம்ம்…”என்றவனது கண்கள் அவனையும் தாண்டி வாசலை நோக்கி சென்று ஜெஸியை தான் தேடின.

ஆனால் ருத்ரனோ அவனது நண்பர்களை தேடிகிறான் என்று தவறாக நினைத்துக் கொண்டு அவனிடம்”உன் பிரண்ட்ஸ் நேத்து வரைக்கும் வந்துட்டு  போனாங்க… இன்னைக்கி முக்கியமான வேலைக்கு ஈவினங் வர்றோம் சொல்லிட்டு போயிருக்காங்க…”என்றான்.

அவனும் தலையை ஆட்டி விட்டு கண்களை மூடி படுத்துக் கொண்டான். அதற்கு மேல் அவனை தொந்தரவு செய்யாமல்  அனைவரையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.

“எல்லாரும் வீட்டுக்கு போங்க நான் துருவ் பார்த்துக்கிறேன்… ஏதாவதுனா போன் பண்றேன்”என்றான்.

“நானும் இருக்கேன் ப்பா !” ராதா  சொல்லவும்” வீட்டையும் பார்த்து இங்கயும் பார்க்கறது கஷ்டம் மா ! நான் பார்த்துக்கிறேன்”

“இன்னொரு  ஆள் உனக்கு துணைக்கு வேணுமேப்பா ! ”  இருவரும் பேசிக் கொள்ள, இடையில் புகுந்த மது” நானும் சேர்ந்து துருவ்வை பார்த்துகிறேன் மாமா “என்றாள்.

“உனக்கு எதுக்கு சிரமம் மது?”

“இல்ல அத்தை ! எனக்கு இதுல எந்த சிரமமும் இல்லை.. ப்ளீஸ் நானே பார்த்துக்கிறேனே “என்று கெஞ்ச, அவர்களோ சுமதியை பார்த்தார்கள்.

அவரும் சம்மதமாய்  தலையை அசைத்தார்.

இருவர் மட்டும் இருந்துக் கொண்டு மற்றவர்கள் சென்று விட்டார்கள்.

ஒரு நாள் முழுதும் அறையில் அழுது தீர்த்தவள்  மகன் வரும் நேரமறிந்து மீண்டும் குளித்து விட்டு தன்னை மாற்றிக் கொண்டு அவனுக்காக காத்திருந்தாள்.

ஆப்ராஹம் தான் அவனை பள்ளியிலிருந்து அழைத்து வந்தார். வீடு வந்ததும் அங்கே ஜெஸியை கண்டதும் வேகமாக ஓடி தாவி அணைத்துக் கொண்டான்.

எப்போது அவன் பள்ளியை விட்டு வரும் போது  பாட்டி தான் வரவேற்பார். ஆனால்  அவன் மனம் அன்னையை தான் தேடும். இருந்தும் யாரிடமும் சொல்ல மாட்டான்.

இன்று அன்னையை கண்டதும் குதூகலத்தில் மனம் திறந்தான்

“மா ! நீங்க வேலைக்கு போலியா?”

“இல்ல டெனி! இனி போக மாட்டேன். உன் கூட தான் இருப்பேன்”என்றாள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு.

“அப்போ ஈவினிங் நான் ஸ்கூல் விட்டு வரும் போது நீங்க வீட்ல இருப்பீங்களா?”ஆசையாகவும் ஏக்கத்தோடு கேட்கும் மகனை இன்னும் அணைத்து கொண்டு கண்ணீர் வடித்தாள்.

“இனி நீ ஈவினிங் ஸ்கூல் விட்டு வரும் போது அம்மா உனக்காக காத்திட்டு இருப்பேன் “என்று உத்தரவு கொடுத்தாள். அவனும் அவள் கன்னத்தை பாசமாக எச்சில் செய்தான். இரண்டு நாட்கள் இப்படியே செல்ல, டெனி முகத்தில் அவ்வளவு சந்தோசம்…

“துருவ்வை நீ போய்  பார்க்கலையா ஜெஸி மா !”ஆரோக்யா தான் ஆரம்பித்து வைத்தார்.

“இல்லத்த.. போகல ! ரவி மூலமா விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். அவன் இப்போ நல்லா இருக்கான் !”என்றாள்.

“என்னமா இத்தனை மாசம் பாடிகார்ட்டா அவன் கிட்ட வேலை பார்த்திட்டு இப்படி நீ அவனை பார்க்க போகலேனா என்ன நினைப்பாங்க…? தப்பு பண்ணது வீரமதி தான. அதுக்கு தான் அவங்க ஜெயில்ல இருக்காங்களே ! துருவ் என்ன பண்ணினான் ? போய் பாரு மா “என்றார் விவரம் அறியாமல்.

அவளாலும் அவரது வார்த்தையை மீறி எதுவும் செய்ய முடியவில்லை…” சரி அத்தை !”என்றவள், மறுநாள் டெனியை அழைத்துக் கொண்டு அங்கே மருத்துவமனைக்கு சென்றாள்.

***

இரண்டு நாளாக மது நான் அவனுக்கு வேண்டியதை செய்து கொண்டிருந்தாள். குண்டு பட்டது அவனது வலது நெஞ்சில் என்பதால் அவனால் அவனது கையை தூக்க முடியவில்லை… உணவு ஊட்டினால் தான் அவனால் உண்ண முடியும்.

அந்த வேலையை மது தான் செய்தாள். முதலில் துருவன் சங்கடம் கொண்டதால் ருத்ரன் நித்திகாவை அழைத்தான்.  அவளும் வந்தாள். ஆனால் மது தான் கெஞ்சி மன்றாடி அவளே பார்த்துக் கொள்வதாக கேட்டுக் கொண்டாள். ருத்ரனும் வேறு வழி இல்லாமல் அவளையே பார்க்கச் சொன்னான். ஆனால் மது தன்னையே சுற்றி வருவது துருவனுக்கு பிடிக்கவில்லை…

“அண்ணா ! மது ஏன் இங்க இருக்கா? எதுக்கு எல்லாம் பண்றா ! அண்ணி வர மாட்டேன் சொல்லிட்டாங்களா? அண்ணி எனக்காக இதை கூட பண்ண மாட்டாங்களா? “என எரிச்சலாக  கேட்டான்.

“அடேய் !! உன் அண்ணி அப்படியாடா உன் கிட்ட பழகு வா ! நீ அவளை புரிஞ்சு வச்சது அவளோ தானா? அவ வர்றேன் தான்டா சொன்னா ! ஆனா மது தான் நிதின் வச்சிட்டு அங்கயும் இங்கேயும் அலைய வேணாம். நான் பார்த்துக்கிறேன் உனக்கு துணைக்கு இங்க இருக்கா டா !  நானும் வீட்டுக்கு போ மா ! நான் பார்த்துக்கிறேன் சொல்றேன் கேட்கல.. நீ இங்க இருக்கற வரைக்கும் அவளும் இருப்பா !”என்றான். அவனுக்கோ சலிப்பாக இருந்தது.

“ஐ திங் ஷி லவ்ஸ் யூ டா!”

“வாட் லவ்வா?”என அதிர்ந்தான் துருவ்.

“கூல் டா ! மாமா பொண்ணு அவ ! அத்தை பையன் நீ ! இது கியூட் லவ்வுல”என்றதும் அவன் கடுப்பானான்.

“டேய் அவ உனக்கு பார்த்து பார்த்து செய்றது பார்த்தாலே அது தான் தோணுது. ரொம்ப நல்ல பொண்ணு டா விட்றாத தம்பி !”என்றான் சிரிப்புடன்.

“அண்ணா ! பீ சீரியஸ். நான் ஜெஸிய விரும்புறேன். அவளை தான் கல்யாணம் செஞ்சுப்பேன் ! மது கிட்ட நீ தெளிவா சொல்லிடு” என்றதும் அவன் முகம் மாறியது. பதில் சொல்லாமல் இருந்தான்.

“என்ன அண்ணா அமைதியா  இருக்க? ஏதாவது சொல்லுணா!”

“என்னடா சொல்லச் சொல்ற? அவ உனக்கு எந்த விதத்தலையும் சரியில்லை… உன்னை விட பெரியவ, ஒரு குழந்தைக்கு அம்மா !அதே நேரம் அவ உன்னை விரும்பல ! இத்தனை நாள்ல உன்னை வந்து அவ பார்க்கல…! இதுல இருந்தே தெரிய வேணாம் ஷு அவாய்ட்ஸ் யூ ! இப்படி இருக்க நிலையில அவளை லவ் பண்றேன் அடம்பிடிச்சிட்டு வாழ்க்கைய தொலைச்சிடாத டா ! மது தான் உனக்கு பெஸ்ட் ஜாய்ஸ். நாட் ஜெஸி. அதை உன் மூளைக்குள்ளவும் மனசுலையும் பதிவு செய்ய பாரு !”எனும் போதே கதவு திறக்கும் சத்தம் கேட்டது. யாரென இருவரும் பார்த்தனர் ஜெஸி தான்.

துருவ் ஜெஸியை பார்க்க, ருத்ரனோ இருவரையும் பார்த்து விட்டு வேகமாக வெளியே சென்று விட்டான். அவ சென்றதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குள் டெனி கட்டிலில் ஏறி அவனருகே சென்றான்.

துருவனோ அவனை தன் வயிற்றில் அமர்ந்தினான். அவனை கண்டு பதறியவள்”டெனி !”என அதட்டி அவனை தூக்கச் செல்ல, துருவ் தடுத்து விட்டான்.

“என்னாச்சி துருவ் உனக்கு? ஏன் இங்க இருக்க? எப்படி அடிப்பட்டுச்சி உனக்கு?”அவன் காயத்தை தடவிக் கொடுத்தப்படி கேட்டான். அவன் பிஞ்சு விரலை முத்தமிட்டவன்,

“நாங்க ஃப்ரெண்ட்ஸ் கூட விளையாடும் போதும் அடிப்பட்டுடுச்சி !  சீக்கிரமா சரி ஆகிடும் !”என்றான்.

இருவரையும் இப்படி பார்க்க  பத்திக் கொண்டு வந்தது அவளுக்கு. ஆனால் அவளால் எதுவும் சொல்லவோ செய்யவோ முடியவில்லை..

“ம்ம்…!”என்ற டெனி அவன் காயத்தில் முத்தம் வைத்தான்.  அவனது திடீர் செயலில் இருவரும் ஆச்சர்யமாக பார்த்தார்கள்.

“காயப்பட்ட இடத்துலே முத்தம் வச்சா ஆறிடும்ன்னு அம்மா சொல்வாங்க துருவ் ! உனக்கும் சீக்கிரமா இந்தக் காயம் ஆறிடும் என்ன “என்று மீண்டும் மீண்டும் முத்தம் வைத்தான். அவனோ அவனை இறுக அணைத்து நெற்றியில் முத்தம் வைத்தான். இருவரும் பாசப் பிணைப்பில் இருந்தனர்.

“தேங்கியூ டெனி மா ! அப்படியே நீ சொன்னப்படியே உங்க அம்மாவையும் இங்க முத்தம் கொடுக்க சொல்லும் என் காயம் சீக்கிரமா ஆறிடும்.  கொடுக்க சொல்றியா?! ” என நக்கலாக அவளை  பார்த்து விட்டு இவனிடம் கேட்டான்.

சட்டென  அவளுக்கு கோபம் வர “துருவ் ! “என அவனை அதட்டினாள். அவன் நமட்டுச் சிரிப்பு சிரிக்க, அவனை முறைத்தவள் டெனியை தூக்கி “தன்யா”என்றாள். அவளும் வர டெனியை கொடுத்து விட்டு, வெளியே இருக்கும் படி சொன்னவள் அவள் சென்றதும்  அவன் அருகே வந்து அமர்ந்தாள்.

தன் மொத்த கோபத்தையும் அடக்கி கொண்டு அவனிடம் சாதாரணமாக பேச ஆரம்பித்தாள்.

“இப்போ வலி எப்படி இருக்கு?”

“ம்ம்… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வர இருந்தது. ஆனா என் பையன் இங்க முத்தம் கொடுத்ததும் வலி பறந்து போச்சி !”என்றான்.

விழுக்கென நிமிர்ந்தாள்.

“துருவ்…”என ஏதோ சொல்ல ஆரம்பிக்க,

அவனோ”என்ன?! நான் உன்னை விரும்பல,டெனி உன் பையன் இல்ல… உன் எண்ணத்தை மாத்து அதானே சொல்ல போற !”என்றதும் அவனை முறைத்தாள்.

“ஜெஸி ! நீ என்ன தான் சொன்னாலும் நான் உன்னை தவிர யாரையும் லவ் பண்ண மாட்டேன் மேரேஜ் பண்ணிக்கவும் மாட்டேன்…. நான் உன்னை தீவிரமா காதலிக்கிறேன் ஜெஸி உனக்கு அது புரியுதா? புரியலையா ?”

அவளோ வெற்று சிரிப்புடன் “எனக்கு உன் காதல் புரிஞ்சாலும்  அதுக்கு ஒரு பயனும்  இல்ல துருவா ! ஆறு மாசம் ஆகுமா நான் உனக்கு பாடிகார்ட்டா வந்து. இந்த ஆறு மாசத்துல மூணு மாசம் சண்டையில போச்சி இன்னொரு மூணு மாசம் தான் ப்ரெண்ட்டா இருந்தோம். அதுல என் மேலே உனக்கு எப்போ காதல் வந்தது எனக்கு தெரியாது. இந்த குறுகிய நாட்கள் வந்த காதலே உன்னால மறக்க முடியாது சொன்னா, எட்டு வருசம் என்னுடைய காதல் அதை எப்படி மறப்பேன் சொல்லு ? என் மனசுக்குள்ள  ஆரோன் வேர் விட்டு மரமா இருக்கான். அவ்வளவு சீக்கிரம் அவனை பிடிங்கி போட்டிட முடியாது. அது பல யுகங்கள் ஆனாலும் முடியாது. அவன் உடல் மட்டும் தான் டா என்கூட இல்ல ! ஆனா உயிர் என் கிட்ட தான் இருக்கு. நீ எவ்வளவு முயற்சி பண்ணினாலும் என் மனசை உன்னால மாத்த முடியாது. அந்த விஷயத்துல நீ தோத்து தான் போவ. நான் எச்சரிக்கையா சொல்றேன் உன் மனச மாத்திட்டு உன்னை விரும்பற பொண்ணா பார்த்து மேரேஜ் பண்ணிக்க ! நான் வர்றேன்”என்று வேகமாக எழுந்தவள் “டேக் கேர்” என்று கதவை நோக்கி சென்றாள்.

துருவனோ புன்னகையுடன் “ஜெஸி, இங்க மாறாதது மாற்ற முடியாததுன்னு எதுவுமே இல்லை… மரமா இருந்தாலும் ஒரு ‘ ரா ‘ இருந்தால் வேரோட ஈசியா சாய்க்கலாம்… உன் மனச என்னால மாத்த முடியும்.  உன்  மனச மாத்தி அதுல இந்த துருவன குடி வர வைக்கலை நான் நைதுருவனே இல்லை…!”என்றான்.

“அவ்வளவு கன்ஃபிடேன்ட்டா ? அதையும் தான் பார்க்கலாம்… யாரு மனசு மாறுதுன்னு” என்றாள் திமிராக,

அவனும் அதற்கு குறையாமல்”எஸ் அவ்வளவு கன்ஃபிடேன்ட்டா தான் என் லவ் மேலே பார்க்கலாம் யார் மனசு மாறுதுன்னு “என்றான் கர்வத்துடன்.

அவள் சட்டென கதவை சாத்திட விட்டு வெளியே ஏறினாள். இவனோ ‘ ஊப் ‘ என ஊதி விட்டு மெத்தையில் சாய்ந்தான்.

வெளியே வந்ததும் நாற்காலியில் அமர்ந்திருந்த ருத்ரன் முன்னால் வந்து நின்றாள்.

“என் மேலே உங்களுக்கு  கோபமா ருத்ரன்?”

“ஐயோ ! இல்லங்க ஜெஸி ! கோபம் எதுவும் இல்ல… ஆனா துருவ்வ நினைச்சா?”என இழுக்க,

“அவன் மனசை நீங்க தான் மாத்தணும்…! ஆரோனை தவிர என் வாழ்க்கையில யாருக்கும் இடமில்லை. அதை தெளிவா சொன்னாலும் வீம்பு பிடிக்கிறான். நீங்க அவன் மனசை மாத்த முயற்சி பண்ணனும். இனி உங்க வீட்டுக்கு நான் வர போறதில்ல ! உனக்கு பாடிகார்ட் வேணும்ன்னா வேற ஆட்களை அனுப்பி வைக்கிறேன்.. என் குடும்பத்தை மட்டும் தான் நான் பார்க்க போறேன்”என அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, மது வந்தாள். இவளுக்கு ஒரு சிரிப்பை கொடுத்து விட்டு உள்ளே சென்றாள்.

“மது…!” என புருவம் சுருங்க  பார்த்தாள்.

“மது தான் அவனை பார்த்துக்கறா ! இங்க இருந்து ரொம்ப அக்கறையா பார்த்துக்கறா !  அவ அவனை காதலிக்கறான்னு  நினைக்கறேன்  ஆனா அவன் புரிஞ்சுக்க மாட்டீகிறான்…”என்றான் வருத்தத்துடன்

“எஸ் தெரியும் ! மது தான் அவனுக்கு சரியானவ ! எப்படியாவது அவங்க இரண்டு பேரையும் சேர்த்து வைங்க !”என்று சொல்லி விட்டு டெனியை கூட்டிக் கொண்டு போனாள். அவனும் யோசித்தபடி நின்றான்.

*****

“என்ன மா இது?”ஜெஸி முன்ன வந்து நின்ற ஆப்ரஹாம் கேள்வி கேட்க, “என்ன?”என்பது போல அவரை பார்க்க, அவரோ அனைத்தும் சொன்னார். அவளோ  கோபத்தில் கொதித்து எழுந்தவள் நேராக துருவன் வீட்டிற்கு சென்று கை நீட்டிருந்தாள் அவனை.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்