
பிரகதீஸ்வரர் அரசியலில் அசுர வளர்ச்சியை கண்டது சிலருக்கு பொறாமையும், சிலருக்கு வன்மமும் உண்டாக, சிலர் அவரை அழிக்கவும் திட்டமிட்டனர்.
அவரது அசுர வளர்ச்சியில் பகைகளையும் வளர்த்துக் கொள்ள, அவருக்கு அரசியல் ரீதியாக எதிரிகள் உருவாக்கினர்.
அடியாட்கள் துணைக்கு இருந்தாலும் மேலும் அவரது பாதுக்காப்பிற்காகவும் அவரது குடும்பத்தின் பாதுகாப்பிற்காகவும் மேலும் சில மெய்காப்பாளர்களை,அரசாங்கம் மூலமாக நியமிக்கச் செய்தார்.
ஆப்ரஹாம் தான் தன் மகனுடன் சில மெய்காப்பாளர்களை பிரகதீஸ்வரர் பாதுகாப்பிற்காக அனுப்பி வைத்தார்.
எட்வர்டு, ஆரோன், நிவாஸ் மூவரும் அவர்களது டீமுடன் பிரகதீஸ்வரர் இல்லம் வந்தனர்…
அன்று தான் நிவாஸ்ம் முதல் முறையாக வந்திருந்தான். அங்கே அவர்களது குடும்ப புகைப்படம் பெரிதாக இருப்பதைக் கண்ட நிவாஸ் உடைந்து கண்கள் கலங்கிப் போனான்.
அவனை வளர்த்த சித்தியும் அவனை கொடுமை செய்த பிரகதீஸ்வரரும் சிரித்த முகத்துடன் இருப்பதைக் கண்டு அவனுக்கு கோபம் கூடிப் போனது.
அவன் வளரும் வரை அவனுக்கு எந்த சிந்தனையும் இல்லை… ஆனால் அவரை மினிஸ்டராக கண்கூடாக பார்க்கும் போது’ தாய் தந்தை கொன்னது இவன் தான்’ என்ற எண்ணம் அவ்வபோது வந்து அவனை வெறிப் பிடிக்க வைத்தது. அவரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அப்போது தான் அவனுக்குள் பிறந்தது.
ஒரு முறை அவனை திட்டும் வாக்கில் வாய் தவறி பிரகதீஸ்வரர் உண்மையை சொல்லி விட, புரிந்து கொள்ளும் வயசில இருந்தவனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது, மிரண்டு போய் பிரகதீஸ்வரரை பார்த்தான்.
அவரும் தான் உளரியது உணர்ந்ததும் அவனை பார்க்க அதிர்ச்சியில் ‘அம்மா ‘என்று கத்தி அழத் தொடங்கினான்.
பிரகதீஸ்வரரரின் நல்ல நேரம் திருவிழா வேலையாக வீரமதி கோவிலுக்கு சென்றிருந்தாள். அவனது அலறல் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க, அவனது வாயை பொத்தி தூக்கிச் சென்றவர், அன்றே பணத்தை கொடுத்து காப்பகத்தில் விடச் சொல்லி விட்டார். அவரும் காப்பகத்தில் சேர்த்து விட்டு விஷயம் யாருக்கும் தெரிய கூடாது என்று மிரட்டி பணம் கொடுத்து விட்டு சென்றார்.
அவனது உள்ளிருக்கும் கோபத்தீயை அணைக்க, பிரகதீஸ்வரரை கொல்ல வேண்டும். அவனது லட்சியமும் அதுவானது.
நண்பரிகளிடம் அவனது வாழ்க்கையில் நிகழ்ந்த கொடுமைகளை சொல்லவில்லை. சொன்னால் மனதை மாற்றி விடுவார்கள் என்று தனக்குள்ளே அவன் மறைத்து கொண்டான்.
மனதிற்குள் பகை, கோபம், வெறி, வன்மம் அனைத்தும் சேர்ந்து அவனோடு வளர்ந்து வன்மத்தின் மொத்த உருவமாக வளர்ந்து நிற்கிறான். அவரை நேரம் பார்த்து கொல்ல துடித்தான்.
வீரமதியின் மேலும் அவனுக்கு கோபம் தான். தன்னை தேடி வராத கோபம். அவரையும் வெறுத்து இருந்தான் உண்மையை அறியாத வரை.
வீரமதிக்கோ முதல் முறையாக நிவாஸை பார்த்ததும் தாய்மையின் உணர்வில் உடல் அதிர்ந்து சிலிர்த்து போனது… அவனை பார்க்கும் போதெல்லாம் அப்படியே உடல் அதிர்ந்து அடங்கியது. அவனை பற்றி அவனிடம் கேட்கவும் பயமாக இருந்தது.
விஷயம் தெரிந்தால் பிரகதீஸ்வரர் அவனை ஏதேனும் செய்து விடுவாரா? இல்லை அவன் தன் அக்காவின் மகன் தானா? என்ற குழப்பத்தில் இருந்தார்.
‘அக்காவின் ஜாடை அப்படியே இருந்தாலும் எப்படி தெரிந்து கொள்வது என்ற யோசனையில் தான் இருந்தார்.
வீட்டில் அனைவரும் சுற்றுலா சென்றிருந்தனர். பிரகதீஸ்வரரும் வெளியே அவரது தொண்டர்களும் தான் இருந்தார்கள்.
பிரகதீஸ்வரருக்கு முடியவில்லை காய்ச்சல் தான். டாக்டர் அவரை பரிசோதித்து மாத்திரை எழுதி கொடுத்துட்டு விட்டு போனார். அவருக்கு உடம்பு சரியில்லை என்பதால் தான் வீரமதியும் சுற்றுலா செல்லவில்லை..
அவர் வற்புறுத்த, இவர் மறுத்து விட்டு அவருடன் இருந்து விட்டார். அவர்களுக்கு துணையாக அறை வாசலில் நிவாஸ் இருந்தான்.
எட்வர்டும் ஆரோனும் வெளியே சென்றிருந்தனர். ஆனால் வீட்டு வாசலில் அவர்களது டீம் இருந்தது.
“மதி ! நீயும் போயிருக்கலாமே !” தனக்கு பணிவிடை செய்யும் மனைவியிடம் கேட்டார்.
“உங்களை இந்த நிலமையில விட்டுடு நான் மட்டும் போய் சந்தோசமா இருப்பேன் நினைக்கிறீங்களா? அங்கிருந்து உங்களை நினைச்சிட்டு இருக்கறதுக்கு இங்கே உங்க கூடவே இருந்திடுவேன்”என்றவரை அன்று போல இன்னும் குறையாத காதலோடு பார்த்தார்.
“மதி ! இப்படி வந்து உட்கார் !”என்றார் பாசமாக, அவரும் வந்து அமர, அவரது கையை பிடித்து காதலோடு முத்தமிட்டவர்,
“நான் இவ்வளவு சந்தோசமா இருக்க காரணம் நீ மட்டும் தான் மதி ! நீ என் தேவதை. நீ என் மனசுக்குள்ள வந்த பிறகு என் வாழ்க்கை எப்படி மாறிச்சி உனக்கே தெரியும்… நீ ஒருத்தி என் வாழ்கையில் வந்ததும் அந்த எட்டு லெட்சுமி என் வீட்டுக்கு வந்தது போலடி… இன்னும் கொஞ்ச நாள் உன் காதலோடு வாழனும்… கடைசி காலத்துல உன் மடியிலே சாகணும்டி”என்றார்.
அவரோ”என்னங்க?”என்று வாயை பொத்த, அவரது விரல்களுக்கு முத்தமிட்டார். தன் நெஞ்சில் வீரமதியை சாய்த்து கொண்டார். வீரமதி வெளியே புன்னகைத்தாலும் அதில் வன்மமே நிறைந்திருந்தது.
இவர்களது சரசத்தை நிவாஸால் பார்க்க முடியவில்லை… அவனது நெஞ்சுக்குள் அவரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தீயாக அங்கமெங்கும் பரவி மூளையை வந்தடைந்தது.
வீரமதி வெளியே சென்ற நேரம் உள்ள சென்றவன், தூக்க மயக்கத்தில் இருந்த பிரகதீஸ்வரரை கொல்ல முயற்சி செய்தான்.
அவன் கத்தியை உயர்த்திய நேரம்
“நிவாஸ் “என வீரமதியின் ஒற்றை அழைப்பில் ஆடிப் போனான்.
விஷயம் தெரிந்து தன் வாழ்க்கை
முடிந்தது என்று நினைத்தான்.
மாறாக வீரமதியோ அவனை தனியாக அழைத்து வந்தவர், “எதுக்காக அவரை கொல்ல வந்த?” அவர் கேட்கவும் அவரது முகத்தை பார்க்காமல் எங்கோ பார்த்தபடி
” என் அப்பா அம்மாவை கொன்னவன, என்னை கொடுமை செய்து என்னை வளர்த்த அம்மா கிட்ட இருந்து பிரிச்சி திருவிழால தொலைந்து போயிட்டான் சொல்லி என்னை ஆசிரமத்தில சேர்ந்தவன கொலை செய்ய வந்தேன் “என்றிட அவருக்கு உண்மை புரிந்தது கைகள் நடுங்க, அவனை தொட வர, அவனோ விலகி நின்றான்.
“நிவாஸ்”என்றதும் கையை நீட்டி தடுத்தவன். “உங்களை எவ்வளவு தேடினேன் தெரியுமாம்மா. என்னை வந்து நீங்க கூட்டிட்டு போவீங்க எதிர்பார்த்துட்டு இருந்தேன். ஆனா நீங்க வரவே இல்லை.. அவரோட சந்தோசமா இருக்கீங்கல… எங்க அப்பா அம்மா சாபம் உங்களை சும்மா விடாது!”என்றான்.
“நிவாஸ் ! நீ போனதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் உன்னை நான் தேடாத நாளே இல்லை… நீ கிடைக்கவே இல்லை.. என் பசங்கல அணைக்கும் போது முதல்ல உன்னை அணைக்கறதா தான் நினைப்பேன். நீ தான் என் முதல் குழந்தை அதை யாராலும் மாத்தவே முடியாது. இப்போ கூட நான் அவரோட சந்தோசமா வாழ்றேன் நினைச்சிட்டு இருக்கற நீ ஆனா உண்மை அது இல்லை அவரை கொலை செய்ய துடிச்சிட்டு இருக்கேன்”என்றவர் விழிகளை அகல விரித்தான். அவர் உண்மை அனைத்தும் கூற, அவனுக்கோ கண்களில் கண்ணீர் தொக்கி நின்றது. வேகமாக சென்று “அம்மா” அணைத்துக் கொண்டான்.
அவரும் அவனை அணைத்து பாசத்தை பொழிந்தார். தாயை பிரிந்த கன்று மீண்டும் தாயை கண்டு இணைவது போல சேர்ந்து கொண்டனர் இருவரும்… அதன் பின் வாசனுக்கும் அவனை பற்றி சொல்ல மிகவும் சந்தோசபட்டார்.
தனியாளாக இருந்த வீரமதிக்கு பலமாக இருவரும் துணை இருக்க நேரம் பார்த்து பிரகதீஸ்வரரை கொலை செய்ய காத்திருந்தனர்.
அவர்கள் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. பிரகதீஸ்வரர் ஆட்களில் ஒரு கருப்பு ஆடு வீரமதிக்காக வேலைப் பார்த்தது.
‘அவரது கெஸ்ட் ஹாவஸில் வைத்து அவரது கட்சியிலே அவருக்கு மேலே இருக்கும் கட்சி பிரமுகரை போட்டு தள்ள போகிறார் என்றும் அதுவும் தனியாக ‘ என்று சொல்ல வீரமதிக்கு வசதியாகிப் போனது
பிரகதீஸ்வரர் தன்னுடன் இருக்கும் காவலாளியையும் அடியாட்களையும் துணைக்கு வர வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு தனியாக புறப்பட்டார்.
இங்கோ அவர் செல்வதை உறுதி செய்து விட்டு வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து , வீரமதி, வாசன், நிவாஸ் மூவரும் கூடி பேசிக் கொண்டார்கள்.
“அவர் அந்த *** ஆளை போட்டு தள்ள தான் வீட்டுக்கு வர சொல்லிருக்கான். எப்படியும் கேமிரா ஆஃப் பண்ண சொல்லிருப்பான். வேலைபார்க்கற அத்தனை பேரையும் போக சொல்லிருப்பான். இதான் சரியான நேரம் பின் வாசல் வழியாக போய் அவனை கொன்னுடலாம். ஒரு எவிடன்ஸ் கூட யாருக்கும் சிக்காம வீட்டையே கொழுத்திடுவோம்…
அரசியல் மீட்டிங்கல இரு தலைவர்கள் விபத்துல இறந்துட்டாங்க சொல்லிடலாம் என்ன ?”எனக் வீரமதி கேட்கவும் இருவருக்கும் சரியென பட, ஒத்துக் கொண்டனர்.
வெளியே ஏதோ சத்தம் கேட்டது. உடனே நிவாஸ் வெளியே சென்று பார்த்தான் யாருமில்லை உள்ளே சென்று விட்டான்.
மூவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
அதற்கு முன்னே ஆரோன் அனைத்தையும் கேட்டு விட்டு அங்கிருந்து
பிரகதீஸ்வரரை காப்பாற்றச் சென்றான்.
காவல் அதிகாரிகளுக்கு அழைக்கலாம் என்று நினைத்தவன் முதலில் அவரை காப்பாற்றி விட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம்”என்று முடிவெடுத்தவன்,
அவர்கள் அங்கு பேசிக் கொண்டிருப்பதை பாதி மட்டுமே கேட்டு விட்டு பிரகதீஸ்வரரை காப்பாற்ற வேகமாக காரை ஓட்டினான் . ஆனால் அவரும் கொலை செய்ய தான் அங்கு இருக்கிறார் என்ற விஷயம் அவனுக்கு தெரியவில்லை…
பிரகதீஸ்வரரும் அவருக்கே கட்சியிலிருக்கும் தலைவரும் காரசாரமாக பேசிக் கொண்டிருக்க, இவன் வேகமாக உள்ளே நுழைந்தான்.
பிரகதீஸ்வரர் அவனை கண்டதும் அதிர்ந்தார் “என்ன ஆரோன் இங்க வந்திருக்க?”சற்று கடுப்புடன் கேட்டார்.
“ஐயா உங்க கிட்ட முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லணும்…”என்றான்.
“அதை விட முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கேன். நீ வெளியே போய் நில்லு !”என்றார். அவனும் சொல்ல துடிக்க, அவர் கேட்கும் நிலைமையில் இல்லை என்பதை புரிந்து கொண்டு வெளியே வந்து நின்றான்.
வாசலை அளந்து கொண்டிருந்தான். அவனால் அவர் பேசிக் கொண்டதை ஜீரணிக்க முடியவில்லை… என்ன செய்வது என்ன நடக்க போகிறது. அவர்கள் எதுக்கு மினிஸ்ட்ரை கொல்ல வேண்டும் என்று யோசித்தவன், தனது அழைப்பேசியை எடுத்து ஜெஸிக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினான்.
“மினிஸ்டர் உயிருக்கு ஆபத்து ஜெஸி, அதுவும் அவரோட வைஃப் வீரமதி மேமும், வாசன் அப்புறம்… “என சொல்லிக் கொண்டிருக்கும் போதே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க, அவனோ அதை அனுப்பி விட்டு வேகமாக உள்ளே நுழைந்தான்.
பிரகதீஸ்வரர் தான் அந்தத் தலைவரை போட்டு தள்ளி இருந்தார். அதிர்ச்சியுடன் அங்கே வந்தான் ஆரோன்.
“ஐயா !”என அதிர்ச்சியில் முனங்க… “நீ ஏதோ சொல்ல வந்தீயே பா என்ன அது?”துப்பாக்கி பார்த்துக் கொண்டே சொல்ல, அவனோ அவர் பின்னால் வந்து நின்ற வீரமதியை பார்த்தான்.
“ஐயா அவங்க…!”என காமிக்க, அவர் திரும்பும் வேலையில் அவரது நெஞ்சில் கத்தியை வைத்து குத்திருந்தார் வீரமதி… கீழே விழுந்தார் பிரகதீஸ்வரர்.
அவரது கண்களோ அதிர்ச்சியில் தெறித்து வெளியே வந்து விழும் l அளவுக்கு விரிந்தன. ” ம… மதி ! நீயா??!!”
“நான் தான்… உங்க ஆசை மனைவியே தான். எப்படி என்னை ஏமாத்தி என் அக்காவையும் என் மாமாவையும் கொன்னீங்களோ, அதே போல உங்களை ஏமாத்தி உங்க அப்பாவையும் கொன்னேன். இப்போ உங்களையும் கொல்ல தான் வந்திருக்கேன்… ஈவு இரக்கம் இல்லாம, எந்த தப்புமே செய்யாத என் அக்கா மாமாவை பதவிக்காக கொன்னீங்களே உன்னையும் உன் அப்பாவையும் எப்படி சும்மா விடுறது அதான் நானே உங்களுக்கு தண்டனை கொடுத்துட்டேன். உன் அப்பாவை கொல்றது ஈசியா இருந்தது… ஆனா உன்னை கொல்ல எனக்கு இவ்வளவு வருஷமாச்சு எனிவே உன்னை கொல்ல போறேன்…
ஆமா இவங்க யாருனு உனக்கு சொல்லணும் ல அதை முதல்ல சொல்லிடுறேன். இது என் தம்பி சீனிவாசன். அப்புறம் இது யாருனு தெரியணும்ல, நீ தொலைச்சியே என் புள்ளை நிவாஸ் அவன் தான். என்னை வந்து சேர்ந்துட்டான் பார். இனி நாங்க ஒன்னா சந்தோசமா இருப்போம்… நீ செத்து போடா !”என்று மேலும் மேலும் அவர் நெஞ்சில் கத்தியை வைத்து குத்த, பிரகதீஸ்வரரின் உயிர் போனது.
ஆரோன் வேகமாக போலீஸை அழைக்க அலைபேசியை எடுக்க, அவரை தடுத்தான் சீனிவாசன்.
“என்ன நடுக்குது நிவாஸ் ! பாதுக்காக்க வேண்டிய மனுசனா நீயும் சேர்ந்து கொல்ற என்னடா ஆச்சு உனக்கு?”என ஆரோன் அவன் மீது பாய்ந்து கொண்டு கேட்க,
“இவர் சாக வேண்டிய ஆள் ! என் அம்மா அப்பாவை கொன்னவன், என் அம்மா இவங்க கிட்டு இருந்து என்னை பிரிஞ்சவன் இவன் உயிரோட இருக்க கூடாது. அதான் நாங்க இவனை கொன்னோம்”என்றான் பழி வெறியில்.
“நோ ! இது தப்பு டா ! உடனே போலீஸ்க்கு போன் பண்றேன்”என்று அலைபேசி எடுக்க , வாசனோ புடுங்கி தூர போட்டார்.
“தம்பி ! இவரால் நாங்க இழந்தது அதிகம்… இவரை கொன்னது தப்பா தெரியல… வெளிய யார் கிட்டயும் சொல்லிடாதீங்க தம்பி. நிவாஸ் பிரண்டுன்றதால உங்களை சும்மா விடறோம் இத்தோட இதை மறந்திடுங்க !”என்று பேசி பார்க்க, அவனோ விடுவதாக இல்லை ..
“நான் கண்டிப்பா போலீஸ் போவேன்”என்று ஆரோன் பிடித்த பிடியிலே இருந்தான்
நிவாஸ்ஸூம் அவனும் வாக்கு வாதத்தில் இருக்க, ஆரோன் பின்னால் வந்த வீரமதி கட்டயை வைத்து அடித்து விட அவன் மயங்கி கீழே விழுந்தான்.
“அம்மா !”என அலறினான் நிவாஸ்.
“நிவாஸ் புரிஞ்சுக்க ! என்னாலையோ உன்னாலையோ இல்ல வாசனலையோ ஜெயிலுக்கு போக முடியாது. அதுவும் மினிஸ்டர கொலை பண்ணிருக்கோம். தீர்ப்பு ஆயுள் தண்டனையா இருக்கலாம் இல்ல தூக்கு தண்டனையா கூட இருக்கலாம்… அதை அனுபவிக்க சொல்றியா? என்னால முடியாது. போலீஸ் போறேன் சொல்ற இவனை கொல்றது தான் சரி இவனையும் இந்தாளோட சேர்த்து எரிக்கறது தான் சரி… இவனும் சாகட்டும் வாங்க போலாம்”என்றார்.
” அம்மா ! அவனுக்கு நான் புரிய வைக்குறேன் மா அவனை காப்பாத்துங்க…” என கெஞ்ச அவரோ இறங்க வில்லை..
“இல்ல நிவாஸ் அவனும் சாகணும்… இல்ல நாம குடும்பத்தோட வாழ முடியாம ஜெயில் தான் வாழ்நாள்ல கழிக்கணும்.. வேற வழி இல்ல வா !”என்று அவன் கெஞ்சலை பொருட்படுத்தாது அவனை இழுத்துக் கொண்டு வந்து விட்டனர்.
உள்ளே கேஸை வெடிப்பாது போல செய்து வைத்து விட்டு அவர்கள் மூவரும் தப்பிச் சென்று விட்டனர். அது வெடித்து சிதறியது. உடல் பாகங்கள் எதுவும் கிடைக்காத படி செய்து விட்டனர்.
மறுநாள் செய்தியில் இரு தலைவர்கள் ஒரே வீட்டில் கேஸ் வெடித்து இறந்து விட்டனர். அவருடன் பிரகதீஸ்வரரின் மெய்காப்பாளர் ஒருவனும் உயிர் இழந்தான் என்று அவர்களது புகைப்படத்தை காட்டினார்கள்…
அந்த வீடு வெடித்து சிதறிய போது மயக்கமடைந்தான் நிவாஸ் . நண்பன் இறந்த அதிர்ச்சி அவன் மூளையை பாதிக்க, ‘ஆரோனை நான் கொல்லவில்லை ‘ என்று பினற்ற ஆரம்பித்தான்.
நடந்த அனைத்தையும் கூறி முடிக்க, ஜெஸியின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.
“உங்க பழி வெறிக்க உங்க புருஷனை கொன்னது என்னவோ சரி தான்… ஆனா என் புருஷனை ஏன் கொன்னீங்க…? தப்பு செஞ்ச புருசனுக்கு தண்டனை கொடுத்த உங்களுக்கு என் புருஷனை கொன்னதுக்காக தண்டனை கொடுக்க வேண்டாமா?”
“தாராளமா கொடு ! ஏத்துக்கிறேன். உன் புருஷனை கொன்னது அப்புறம் நான் நிம்மதியா தூங்கவே இல்லை… அந்த அப்பாவியே கொன்னதுக்கு என் மனசாட்சி எனக்கே எதிரியா மாறி பல நாட்கள் ஆச்சு… என்னை கொன்னுடு ! உன் மூலமா உன் புருஷனை கொன்ன பாவத்துக்கு தண்டனை அனுபவிச்சிடறேன் கொல்லு என்னை கொல்லு !ஜெஸி”என கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினார்.
துருவனின் தலையில் இருந்த துப்பாக்கி அப்படியே அவரை நோக்கி திரும்பியது… அவரை கொல்ல நினைத்தாள். இடையில் வந்து நின்றான் துருவன்.
“எங்க அம்மா தான் ஆரோன கொன்னதுன்னு தெரிஞ்சு போச்சி. அவங்களை போலீஸ் ஒப்படைக்கிறது தான் சரி .. நான் சொன்னது போல ஒப்படைச்சிடுறேன் அவங்களை விட்டுடு “என்றான்.
“எதுக்கு ஆள் பலத்தையும் பணம் பலத்தையும் காட்டி தண்டனை அனுப்பவிக்காம வெளிய வரதுக்கா… நான் அவங்களை விட்றதா இல்லை. என் ஆரோன் கொன்ன அவங்களை சும்மா விடப் போறது இல்லை . நீ நகரு ! அவங்களை நான் கொல்லனும் “என்றாள்
“முடியாது அதுக்கு நான் விட மாட்டேன். நீ என் அம்மாவை கொல்ல கூடாது ஜெஸி !”என்றான்.
“முடியாது நான் அவங்களை கொல்லுவேன். அவங்களால் என் ஆரோனை திருப்பி கொடுக்க முடியுமா? முடியாதுல…! அப்ப எதுக்கு அவங்க உயிரோட இருக்கணும்?”என்று கேட்டு டிரிக்கரை அழுத்தினாள்.
“ஜெஸி நோ !”என்று வீரமதியை மறித்து நின்றான்.
“நீ விலகு துருவா ! உங்க அம்மாவோட சேர்ந்து நீயும் சாகாத !”
“பரவாயில்லை என் அம்மாவோட சேர்ந்து சாகறது சந்தோசம் தான். முதல்ல என்னை சுடு !அப்புறம் அவங்களை சுடு !”என்றான்
“ஐயோ வேணாம் துருவ் ! நீ தள்ளி போ ! நான் அவ கையால சாக வேண்டியவ !”என்று அவனை தள்ளி விட்டார்.
அவனும் அவரை விடாது “அம்மா உங்களை நான் சாக விட மாட்டேன்” அவருக்கு துணையாக நின்றான்.
“வேணா துருவா ! நீ கிட்ட வராதே ! அவங்க சாக வேண்டியவங்க நீ போயிடு இங்க இருந்து ” என்றாள்.
அவனும்’ முடியாது ‘ என்று மறுத்து விட்டு மீண்டும் தாயின் அருகே வந்து நின்றான்.
வீரமதியை குறி வைத்திருந்த துப்பாக்கியை அப்படியே துருவன் பக்கம் திருப்பினான் எட்வர்டு. அவனை புரியாமல் பார்த்தாள் ஜெஸி.
“ஜெஸி , நீ சுட வேண்டியது வீரமதிய இல்ல… துருவனை ! அப்போ தான் வீரமதிக்கு, நாம ஆரோனை இழந்து தவிக்கற தவிப்பு அவங்களுக்கு புரியும். அந்த வலியும் வேதனையும் அவங்களும் அனுபவிக்கனும் . இது தான் அவங்களுக்கு நாம கொடுக்கற தண்டனை. ம்ம் .. துருவன சுடு !”என எட்வர்டு கர்ஜிக்க, ஜெஸி விக்கித்து போனாள்.
“ம்ம்…சுடு ” என மீண்டும் அவளை வற்புறுத்த, அவளோ அவனை சுட தயங்கினாள். ஆனா அறையின் உள்ளிருந்த யாரோ அவனை சுட,.
அவன் கீழே விழந்தான். அவனை சுட்டதும் இல்லாமல் அந்தத் துப்பாக்கி முனை ஜெஸியின் பக்கம் திரும்பி விட, ஜெஸி மீதும் குண்டு பாய்ந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
2
+1
+1

