
தன் காதலை உணர்ச்சி வசத்துடன் மொழிந்து விட்டு மூச்சு வாங்க அவளது பதிலுக்காக காத்திருத்தான்.
ஆனால் அவன் எதிர்பார்த்தது நடவாமல், அவளிடம் பதிலின்றி போக சந்தேகமாக முகத்தை திருப்பி ஜெஸியை பார்த்தான்.
அவளோ அமைதியாக வளர்ந்து நின்ற மரத்தை வெறித்து பார்த்து வண்ணம், வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தாள்
அவளது அமைதியே அவனுக்கு உணர்த்தியது அவன் மொழிந்த காதல் வார்த்தைகள் எல்லாம் அவனுக்குள் மட்டுமே அடங்கிப் போனது என்று. அவன் உணர்ச்சி வசப்பட்டது எல்லாம் தனக்குள்ளே என்பது தாமதமாக தான் அவனுக்கு புரிந்தது.
‘ பேசாமல் காதலை சொல்லி விடலாமா?’ என்று கூட அவனுக்கு தோன்றியது.
‘ அவளே ! ஆரோன நினைச்சி அழுதுட்டு இருக்கா ! இந்த நேரத்தில காதலை சொல்றது சரியா ? இல்ல இதான் சரியான நேரமா? ‘ குழப்பத்துடன் அவளை பார்த்திருக்க, அவளோ கண்ணை துடைத்து விட்டு அவனருகே வந்தாள்.
எச்சிலை விழுங்கி, அவள் அருகே வருவதை விழி விரித்தப்படி பயத்துடன் பார்த்தான்.
“துருவா ! ஃபாதர்” அவன் பின்னே வரும் ஃபாதரை காமித்தாள்.
“வாம்மா ஜெஸி எப்படி இருக்கே?”எனக் கேட்டபடி அவர்கள் அருகே வந்து நின்றார்.
அவரிடம் தலையை தாழ்த்தி ஆசியை வாங்க, அவரும்”காட் பிளஸ் யூ!”என்று தலையில் கரம் பதித்து ஆசிர்வதித்தார். அவனும் அவளை போல அவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டான்.
“உன் கண்ணு ஏன் கலங்கி இருக்கு ஜெஸி? அழுதீயா?”என்றார்.
“இங்க வந்துட்டு அழாம இருந்தால் தான் ஆச்சர்யமே ஃபாதர்! என் பாதி வாழ்நாளே இங்க தானே ஃபாதர் கழிந்தது. என் தாய் வீடு இல்லையா ? மறக்க முடியுமா? என் வாழ்க்கையில முக்கியமான தருணங்கள் எல்லாம் இங்க நடந்தது தான். அதான் அதை நினைக்கும் போது என்னை அறியாம கண்ணீர் வந்திருச்சு ஃபாதர்”என்றவள் மிச்சமாக இருந்த கண்ணீர் சொட்டுகளை துடைத்தாள்.
“உன் கண்ணீருக்கான விடை சீக்கிரம் கிடைக்க போகுது… உன் கண்ணீரோட தேடல் முடிய போகுது. நீ சிந்தின கண்ணீருக்கு எல்லாம் பெரிசா அறுவடை பண்ண போற ஜெஸி ! நிறைய துன்பத்தை பார்த்த நீ இனி இன்பத்தை மட்டும் பார்க்க போற, என் சத்திய வார்த்தைகள் கண்டிப்பா பழிக்கும்”என்றார் புன்னகையுடன். அதைக் கேட்டதும் அவளது தேகம் சிலிர்த்து அடங்கியது.
“அந்தக் கடவுள் கொடுத்த துன்பத்தை மனசார ஏத்துக் கொண்ட எனக்கு அவர் கொடுக்க போக இன்பத்துக்கும் நான் பாத்திரமா இருப்பேன் ஃபாதர். அப்புறம் இது நைதுருவன். இவருக்கு தான் நான் பாடிகார்ட்டா இருக்கேன்… நீங்க ஸ்கூல் கட்ட என்ஜினீயர் கேட்டீங்களே அதான் கூட்டிட்டு வந்திருக்கேன்…”என்றாள்.
அமைதியாக அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு அவள் இங்கு அழைத்து வந்ததற்கு காரணமும் விளங்க மெல்ல விழிகளை விரித்து ஆச்சர்யத்துடன் அவளை பார்த்தான்.
“உள்ள வாமா பேசலாம்… நீங்களும் உள்ள வாங்க தம்பி” என்று அலுவலகத்திற்குள் அழைத்து சென்றவர், அவர்களுக்கு குடிக்க கொடுத்து விட்டு பள்ளியை விரிவாக்குவதைப் பற்றி பேசினார். மேற்கொண்டு அதற்கான செலவை பற்றியும் சொன்னார்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டவன், உள்ளே மனக்கணக்கு இட்டப்படி அமைதியாக இருக்க, ஜெஸி ‘ அவன் என்ன பதில் சொல்வான்?’ என்று சற்று தவிப்பை உதட்டை கடித்தபடி பார்த்திருந்தாள்.
அவளோ ஜெஸியையும் ஃபாதரையும் புன்னகையுடன்”பண்ணிடலாம் ஃபாதர்…! உங்க பட்ஜெட்க்குள்ளே எங்களால பில்டிங் கட்டித் தர முடியும்… எப்போ ஆரம்பிக்கணும் சொல்லுங்க… நான் பிளானோட வர்றேன் ஃபாதர் “என்றான்.
இருவருக்கும் சந்தோசம், “ஒரு ஆறு மாசம் ஆகும் தம்பி. ஃபாரின்ல இருந்து வர வேண்டிய அமௌன்ட் வந்ததும் ஆரம்பிச்சடலாம். அதுவரை நீங்க பொறுமையா இருக்கணும்…”என்றார்.
“இட்ஸ் ஓகே ஃபாதர்… அதுக்குள்ள என்னுடைய மத்த வேலைகளை முடிச்சிடுவேன் ஃபாதர்… எங்களை நம்பி கொடுக்கறீங்க கண்டிப்பா அந்த நம்பிக்கைய இழக்க மாட்டோம் ஃபாதர்”என்றார்.
“இதுவும் ஒரு விதத்துல கடவுளுக்கு செய்ற ஊழியம் தான்… கடவுள் உங்களை நீண்ட ஆயுளோட ஆசிர்வதிப்பார்”என்று கையை உயர்த்தி ஆதிர்வதிக்க, கண்களை மூடிக் கொண்டு பெற்றுக் கொண்டான்.
இருவரும் அவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டனர்.
“எங்க நீ முடியாது சொல்லிடுவீயோ நினைச்சி பயந்தேன் துருவா”என்றாள் காரில் ஏறிய படி.
“ஜெஸி பயப்படறதா?! வரலாற்றிலே அது சாத்தியம் இல்லையே ! ஜெஸி”என கிண்டல் செய்ய, அவனை பொய்யாய் முறைத்தாள்.
“எப்படி ஜெஸி மறுப்பேன்? இப்போ தான் நாங்க கம்பெனி ஆரம்பிச்சிருக்கோம், வர வாய்ப்புகளை வேணாம் சொல்ல முடியுமா? எக்ஸ்பிரியன்ஸ் ஆனா என்ஜினீயர்ஸ்க்கும் கம்பெனிக்கும் தான் ஆஃபர் குமியும்… நாங்க இப்போ தானே ஆரம்பிச்சிருக்கோம்… மக்கள் மனசுல நாங்களும் பதிய, கடின உழைப்பு மட்டுமில்லை இது போன்ற வாய்ப்புகளும் அவசியம் ஜெஸி… “என்றான் அவளும் அதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டினாள்.
“அப்புறம் என் ஜெஸியோட பிறந்த வீட்டு ஆடரை இழக்க முடியுமா?”என்று கேட்டவன், இடையில் அவளை ‘ என் ஜெஸி ‘ என்று சொல்லிருந்தான்.
விழிகளைச் சுருக்கி அவனை கேள்வியாக பார்க்க, “என் பிரண்டு ஜெஸியோட பிறந்த வீட்டு ஆடரை வேணாம் சொல்ல முடியுமா?”என்று திருத்திக் கூற, சுருங்கிய கண்களும் மெல்ல விரிந்து சிரித்தன.
‘ அப்பா சிரிச்சிட்டா !’ என்று உள்ளுக்குள் ஆசுவாசப்பட்டுக் கொண்டான்.
“உனக்கு இந்த புராஜக்ட் பண்றதுல ஒன்னும் கஷ்டம் இல்லையே துருவா ?” அவள் அக்கறையில் வினவ,
“அதிகமா ஹார்ட் வரக் போட்டா தான். ஜெஸி, தொழில்ல முன்னேற முடியும்… எனக்கு எந்த கஷ்டமும் இல்லை… சரியான நேரத்துல முடிச்சி கொடுத்திடுவேன் என்னை நம்பலாம்…” என்றான்.
“உன்னை நம்பினதுனால தான்.நான் உன்னை ஜஸ்ட் பண்ணினேன் துருவா ! ஐ ஹோப் யூ டூ யூர் பெஸ்ட்”என்றாள்.
“தேங்கி யூ தேங்கி யூ சோ மச் !”என்றான் நெஞ்சை தொட்டு.
****
இருவரும் அவனது கம்பெனிக்கு வந்து சேர்ந்தனர்.
நண்பர்கள் ஆவலோடு அவனை சூழந்து ஜெஸியுடன் சென்ற நிகழ்வை கேட்க, அவனோ கிடைத்த ஆடரைப் பற்றி சொன்னான்.
“ஆறு மாசத்துக்குல இருக்கற புராஜக்ட் எல்லாத்தையும் முடிச்சிடலாமா துருவ்?” ரிஷி சந்தேகமாக கேட்டான்.
“ட்ரை பண்ணுவோம் ரிஷி ! ஹார்ட் வரக் பண்ணி தான் ஆகனும்… வர ஆஃபர் வேணாம் எப்படி சொல்றது?”
“ஆமா ஆமா! காதல் தேவதை மூலமா கிடைச்ச ஆஃபர்… வேணாம் சொன்னா அவங்க மனசு பீல் பண்ணாத என்ன ப்பா?”வித்யாசாகர் அவனை கிண்டல் செய்ய,
“டேய் !! நீ என்ன சொன்னாலும் அதான் உண்மை… அவளை கொஞ்சம் கொஞ்சமா நெருங்க எனக்கு இது தான் வழி. அவ சொல்ற எல்லாத்தையும் நான் செய்வேன்… என் காதலுக்காக என்ன வேணாம் செய்வேன்”என்றான் ஆணித்தரமாக,
“ம்ம்.. அவ சாக சொல்வா போய் சாவு !”என்று அஜய் சலிப்பாக சொல்ல, “நிச்சயமா டா சாவேன். அவ சாக சொன்னா சாவேன். அவ என் காதலை மறுத்தாலும் சாவேன். அவ இல்லாத வாழ்க்கை எனக்கு இல்லை…” என்று
சன்னமாக சொல்ல, அவர்களோ கலக்கமானர்கள்.
ரிஷி தான் அந்த பேச்சை மாற்றும் பொருட்டு” ஜெஸி ! உனக்கு தான்றது உண்மைன்னா… கண்டிப்பா அவ உனக்கு கிடைப்பா ! சாவ பத்தி பேசாம வாழ்றத பத்தி பேசலாம்.. முக்கியமா புராஜக்ட் பத்தி பேசலாம்..”என்றான் அவர்கள் பேசும் தலைப்பும் மாறிப் போனது..
இரவானது அவரவர் கிளம்பி விட, துருவுடன் ஜெஸியும் அவளது டீம் வீட்டிற்கு கிளம்பினார்கள். வீடு வந்ததும் ஜெஸி வீரமதியிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப துருவுடன் உள்ளே நுழைந்தாள்.
அவர்களுக்காக நடுக் கூடத்தில் வெகு நேரம் காத்திருந்தார் வீரமதி அவருடன் மதுமதியும் துருவன் காணப் போகும் படபடப்பில் இருந்தாள்… அவன் மேல் அவளுக்கு ஒரு ஈடு பாடு, வீரமதி வழியே அவனை பற்றி அறிந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ஆசையை வளர்க்க ஆரம்பித்தாள். அவனுக்காக தான் பொய் சொல்லி சென்னைக்கு வந்திருக்கிறாள்.
உள்ளே வந்ததுமே தாய் அருகே இருந்த மதுமதியை கண்டு புருவம் சுருங்கப் பார்த்தான்.
ஜெஸியும் வீரமதியை வணங்கி விட்டு அவளை தான் பார்த்தாள்.
“துருவ் ! இது மதுமதி… என் தூரத்து சொந்தம். எனக்கு தம்பி முறை வேணும் இவங்க அப்பா ! உனக்கு மாமா, இவ மாமா பொண்ணு முறை வரும்…”என்றவர் மதுவிடம் திரும்பி”இது தான் துருவன் என் இரண்டாவது பையன்”என்றான்.
“ஹாய் மாமா !”என்றாள் குதூகலமாய்..
‘ மாமாவா ? ‘ என அவளை கேள்வியாக பார்க்க,
ஜெஸிக்கோ அவள் யாரென புடிப்பட, அவள் வந்ததும் நல்லது என நினைத்துக் கொண்டாள்.
“பி. ஏ இங்கிலீஷ் படிச்சிருக்கா , சென்னையில் தான் வேலைப் பார்ப்பேன் ஒரே அடம். அதான் அவங்க அப்பா இங்க விட்டு போயிருக்கான். இங்க இருக்க போறா ! உன் கம்பெனியில வேலை இருந்தா போட்டுக் கொடேன் அம்மாக்காக “என்று கெஞ்ச அவனால் மறுக்க முடியவில்லை…
“சரிம்மா ! நாளை என் கம்பெனிக்கு கூட்டிட்டு போறேன். எங்களுக்கு பி ஏ வா இருக்கட்டும்”என்றான்.
அவரோ ‘ இப்போ ஆனந்தமா ?’ என்பது போல மதுவை பார்க்க, “தேங்க்ஸ் அத்தை . தேங்க்ஸ் மாமா”என்றாள்.
மீண்டும் ‘ மாமா ‘ என்றதும் கடுப்பாகி போக, அவன் முகம் பார்த்த வீரமதி, “அவங்க ஊர்ல அத்தை மகனை மாமா தான்டா சொல்வாங்க…” என்றார் புன்னகையுடன்.
“மா ப்ளீஸ் ! அந்த வழக்கத்தை அங்கே வச்சுக்க சொல்லுங்க… இங்க அதெல்லாம் ‘ நோ ‘.. “
“ஹேய் லிஸன் ஹீயர் யூ கால் மீ துருவ்! இன் ஆபிஸ் கால் மீ சார்… இதை விட்டுடு மாமா, வோமா னா செம்ம கடுப்பாகிடுவேன்.. நான் சொன்ன படி தான் கூப்பிடனும் ஓகே வா !”என்றதும் அவள் பூ முகம் வாடிப் போனது.
துளிர்த்த கண்ணீரை உள்ளித்த படி ‘சரி ‘ என்றாள். “துருவ்”என வீரமதி அழைக்க, ” குட் நைட் மா ! குட் நைட் ஜெஸி”என்று அங்கிருந்து அகன்று விட, இவருக்கு தான் சங்கடமாக இருந்தது.
ஜெஸி கிளம்பிட, அவரோ மதுவிற்கு ஆறுதல் சொன்னார்.
****
தனது அன்னையின் அறைக்குள் நுழைந்தவளது வாயை பொத்தி கையை மடக்கி அவளது பூவுடலை மொத்தமும் தன்மீது சாய்த்து அவளது சுவாசத்தை கழுத்தின் வழியே நுகர்ந்து கிறங்கி நின்றான் துருவன், அவள் வந்த காரியத்தை அறிய மறந்து அவள் அருகாமையை ரசித்து நின்றான் துருவன்.
யார் அந்த அவள்??
முகம் சோர்ந்து போயிருந்த தன் மருமகளை தேற்ற அருகே அமர்ந்தார் வீரமதி.
அவருக்கு மது என்றால் கொள்ளப்பிரியம். அவர் தான் அவள் பிறந்ததும் மதுமதி என்று பெயர் வைத்தார். அவருக்கு மிகவும் நெருக்கமான பெயர் அது… மதுமதி வளர்ந்ததும் அவ்வாறே இருக்க, மதுமதியின் மேலே தனி பாசம் அவருக்கு உண்டு…
அவளை தன் மகன் நைதுருவனுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற விருப்பம் அவள் பிறந்ததலிருந்து உண்டு…
ஆனால் பிரகதீஸ்வரரை எண்ணி தான் அதை மறைத்து வைத்திருந்தார்… இருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் அவர்களை சென்று எப்படியாவது பார்த்து விட்டு வருவார்… தனியாக தான் செல்வார். மகன்களை அழைத்து செல்ல மாட்டார். இருந்தாலும் மகன்களை பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்.
மதுமதியிடம் துருவனைப் பற்றி பேசி பேசியே அவள் மனதில் அவன் மேலே ஆசையை விதைக்க செய்தார்
பிரகதீஸ்வரர் இருக்கும் வரைக்கும் இவர்களை குடும்பத்துடன் சேர்த்துக் கொள்ள முடியாத காரணத்தால் அவரை கொல்லும் வரை அப்படி ஒரு உறவு இல்லை என்பது போல காட்டிக் கொண்டார். அவரது கணக்கின் படி ருத்ரனுக்கு வெளியே பொண்ணெடுத்தவர், அதன் பின் பிரகதீஸ்வரரை கொன்று விட்டு தம்பியையும் அவனது குடும்பத்தையும் உள்ளே சேர்த்துக் கொள்ளலாம் என்று மனக்கணக்கு போட்டார். அதன் படி அனைத்தும் நடக்க, இப்போது மருமகளை மட்டும் உள்ளிழுத்திருக்கிறார்.
துருவனையும் மதுமதியயையும் காதலிக்க வைத்து திருமணம் வரை கொண்டு சென்றாலே போதும் அதன் வழியே மற்றவர்களும் வந்து விடுவார்கள் என்று இன்னொரு கணக்கை போட, மகனோ அவர் போட்ட கணக்கை தவறாக மாற்ற வேறு வழியில் போயிக் கொண்டிருப்பத்தை அவர் எப்படி அறிவாரோ !
“மது ! அவனுக்கு ‘ மாமா ‘ ‘ அத்தான் ‘ முறை வச்சி கூப்பிடறது சுத்தமா பிடிக்காது. வயசுக்கு மரியாதை கொடுத்து எங்களை அம்மா , அண்ணா , அண்ணி கூப்பிடறான்… நித்து குட்டி கிட்ட கூட அவன் சித்தப்பா சொல்லாத, துருவ் சொல்லு தான் சொல்லுவான். அதே போல உன் கிட்டையும் அப்படி சொல்லிட்டான்… அவனை தப்பா எடுக்காத டா என்ன..? போக போக அவனோட குழந்தை தனம், பேச்சு , அவனோட அன்பு உனக்கு எல்லாம் புரியும் சரியா ! எதையும் போட்டு குழப்பிக்காம போய் தூங்கு மது “என்று அவளை அணைத்தபடி ஆறுதல் சொல்ல,
அவளோ ‘ சரி ‘ என தலையை ஆட்டி கன்னத்தில் தேங்கிருந்த கண்ணீரை துடைத்து விட்டு எழுந்து அறைக்கு சென்றாள்.
அவள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்த வீரமதி, தலையை இருபுறமும் ஆட்டி, அப்படியே ‘ அவள போலவே தொட்டத்துக்கு எல்லாம் கண்ணீரும் கம்பளியுமா இருக்கா ! ‘ என முனங்கி விட்டு உறங்க சென்றார்.
***
இரவின் நிறமாறி வெளிச்சமெங்கமும் பரவ, காலை வேளையில் அவரவர் வேலையில் தன்னை ஈடு படுத்திக் கொண்டிருந்தனர்.
நைதுருவன் அலுவலகம் செல்ல தயாராகி கீழே வந்தான். அனைவரும் சாப்பிட அமர, இவனும் வந்து அமர்ந்தான். ராதா பரிமாற அவருக்கு துணையாக மதுவும் பரிமாறினாள். ராதாவும் வீரமதியும் எவ்வளவு சொல்லியும் மறுத்து விட்டு அவர்களுக்கு பரிமாறினாள்.
நேரம் விரைவதை சுட்டிக் காட்டி அவளை அமர வைத்து சாப்பிட வைத்தார் ராதா…
அவளுடன் அனைவரும் சகஜமாக பேசினாலும் துருவ் மட்டும் அவளை கண்டுக் கொள்வதாக தெரியவில்லை. அவன் நித்தினை வம்பிழுத்துக் கொண்டே சாப்பிட்டான். அவளுக்கு அவன் தன்னிடம் பேசாமல் இருப்பதும், கண்டுகொள்ளாமல் இருப்பதும் கொஞ்சம் வலித்தது.
‘தேவையில்லாம ஆசையை வளர்த்துக் கொண்டோமோ , அவன் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை… இதில் தன் காதலை மட்டும் ஏற்றுக் கொள்வானா? பேசாம ஊருக்கே சென்று விடலாமா ?’ என்று தனக்குள்ளே முனங்கி கொள்ள,
‘ சிறு முயற்சி கூட உன் காதலுக்காக எடுக்காம இப்படி எடுத்ததும் நடையும் ஓட்டமுமா இருந்தா என்ன பண்றது? போராடி எதையும் அடைய வேணாமா? நீ யாரு வீரமதி மருமக, இப்படி கோழையா இருக்கலாமா? காதல்ல நீ சொன்னதும் உடனே உன்னை ஏத்துக்கனுமா? இதென்ன நியாயம்? இரண்டு பேருக்கும் ஒரே நியாயம் தான் போராடி தோத்து போ ! ஆனா புற முதுகு காட்டி ஓடாத ‘ என மனம் உள்ளுக்குள் அவளுக்கு தைரியத்தீயை மூட்டி விட்டுக் கொண்டிருந்தது.
லேசாக அது பற்றிக் கொள்ள, அவளும் தன் முடிவை கொஞ்சம் மாற்றி வைத்தாள்.
நேரம் விரைவதை வீரமதி சுட்டிக் காட்ட, வேகமாக உண்டாள். அதற்குள் அவனும் சாப்பிட்டு விட்டு ஷு அணிய சென்றான். இவளும் இதர வேலைகளை முடித்துக் கொண்டு அவன் அருகே வந்து நின்றாள்.
“குட் மார்னிங் மா…”என்றவள் ‘ மாமாவை ‘ முழுங்கி விட்டு “துருவ் “என்றாள்.
“ம்ம்… குட் மார்னிங் மது !” என்றான். அவன் அவள் பெயரை உச்சரித்ததும் அவளுக்குள் ஜிவ்வென்று இருந்தது.
“இதுக்கு முன்னே வேற எங்கயும் வர்க் பண்ணிருக்கீயா?”
“இல்ல… இதான் என்னுடைய முதல் வேலை…”
“ம்ம்… நாங்க சொல்லி கொடுக்கறத கத்துப்பேல?”
“ம்ம்… கண்டிப்பா கத்துப்பேன்! உங்களுக்கு பிடிச்சது போல நடந்துப்பேன்”என்று சிறுமியை போல தலையை ஆட்டிச் சொல்ல, அவளது தலையுடன் காதணியும் சேர்ந்து ஆடியது. அதை ரசனையுடன் பார்த்தவன், “நைஸ் இயரிங்”என்றான்.
அவ்வளவு தான் அவள் கால்கள் தரையில் அவளையே சொன்னது போல பறந்தாள். ஆனால் அதற்கு மாறாக துருவனோ மச்சமளவு காதணியை அணிந்திருக்கும் ஜெஸியை தான் நினைத்தான்.
‘ அவ ஏன் இந்த மாதிரி லாங் இயரிங் போடறது இல்ல…? போட்டா எவ்வளவு அழகா இருக்கும்?! ப்ச் “என தோளை குலுக்கினான்.
சரியாக ஜெஸியும் “போலாமா துருவா?!” என வர அவனோ அவளது காதணியை தான் பார்த்தான்.
தூரத்திலிருக்கும் பொடி நட்சத்திரத்தை போல வெள்ளியில் நட்சரத்திர தோடாக அணிந்திருந்தாள். அதை பார்த்திருந்தவன் கேள்விக்கு பதிலளிக்க தவறினான்.
“துருவா போலாமா?”மீண்டும் கேட்க, “போலாம்”என்றவன்.” மது கம்…!”என்றான்.
மூவருமாக காரில் ஏறிக் கொள்ள, உள்ளே ஏறின மதுவோ ஒரு கூட்டமே காருக்குள் இருப்பதை கண்டு வாயை மூடி அதிர்ந்தாள்.
“இவங்க எல்லாரும் யாரு?”
“இவங்க என்னுடைய பாடிகார்ட்ஸ் ! எப்பவும் என் கூட தான் இருப்பாங்க”என்று செல்லை பார்த்தப்படி பதில் சொன்னான். “ஏன் இவங்க உங்க கூட இருக்காங்க ?!”
“என்னை தீத்துக் கட்ட, பல பேர் காத்துட்டு இருக்காங்க… ஒரு வி. ஐ. பி சன் நான். என்னை என்ன வேணாம் பண்ணலாம் இல்லையா? என் உயிருக்கு நிறைய ஆபத்து இருக்குனு அம்மா தான் அரேஞ்ச் பண்ணினாங்க…!” என்று கொஞ்சம் தன்னை உயர்வாக தூக்கிச் சொன்னான்.
பின்னாடி அமர்ந்த ஶ்ரீயோ “ம்க்கூம், இது வரைக்கும் அப்படி யாரும் அட்டாக் பண்ண வந்ததா தெரியலை ! வாய் கொடுத்து வம்ப இழுத்துட்டு வந்தது மட்டும் மிச்சம். “என்று நொடித்துக் கொள்ள, அது அவனுக்கு தெளிவாக கேட்டு விட்டது. ஶ்ரீயை திரும்பி பார்த்து முறைத்தான்.
“என் கூட வரதும் சாவை நோக்கி போறதும் ஒன்னும்… என்ன என் கூடவே வர்றியா? இல்ல தனியா வர்றியா?”என்று சாதாரணமாக கேட்டாலும் அவளுக்கோ வாழ்க்கையின் துணையாக வருவாயா? இல்லையா?”என்று கேட்பது போல அவளுக்கு தோன்றியது.
மதுவோ” எல்லாரும் சாவை நோக்கி தானே போறோம்… சோ போற வழியில துணையாக நீங்க இருக்கும் போது வரதுக்கு என்ன கஷ்டம்? நான் கண்டிப்பா உங்களோட தான் வருவேன் தனியா போக மாட்டேன். உங்கள விட்டு உயிர் இருக்கற வரை போக மாட்டேன்”என்றாள் அழுத்தமாக ஆனால் அதை அவன் கவனித்ததாக தெரியவில்லை போனில் மூழ்கி விட்டான்.
ஜெஸி தான் அதன் உள்ளர்த்தத்தை உணர்ந்து அவள் புறம் திரும்பிப் பார்த்தாள். அவளும் அவளை பார்த்தாள். இருவரும் புன்னகைத்துக் கொண்டனர். வண்டி அலுவலகம் சென்றது.
அவரவர் தங்கள் வேலையில் பார்க்கச் சென்றனர். மதுவை அழைத்துக் கொண்டு நண்பர்களிடம் வந்தவன் அவளை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, ஐவருக்கும் பொதுவான பி . ஏ என்றவன் ரிஷியிடம் வேலையை பற்றி சொல்லிக் கொடுக்கும் பொறுப்பை ஒப்படைத்தான்.
அன்றைய நாளின் பாதி வேளை முடிய, மதிய சாப்பாட்டிற்காக அனைவரும் செல்ல, இவளும் தனக்கென தனியாக வந்த கேரியரை எடுத்துக் கொண்டு ஜெஸியின் அருகே வந்து அமர்ந்தாள் . அவளை தங்களுடன் சேர்த்துக் கொண்டனர்.
ஜெஸி தன்யாவிடம் கண்ணைக் காட்ட, அவளும் தலையை ஆட்டி விட்டு பேச்சுக் கொடுக்கும் சாக்கில் மதுவை பற்றியும் முழு விவரத்தை கேட்க, அவளும் அவர்களுடன் சகஜமாக பேசிய படி அனைத்தையும் கொட்டி விட்டாள், ஜெஸியும் அவளுக்கு தேவையான விவரத்தை சேகரித்துக் கொண்டாள்.
நாட்கள் அதன் போக்கில் கடக்க, நிவாஸ் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகிக் கொண்டிருந்தான். வீரமதியோ, அவனைத் தேடும் வேட்டையில் இறங்கிருந்தார் எட்வர்டும் ஜெஸியும் அவரை தீவிரமாக கண்காணித்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு மூவரும் ஒரே வட்டத்தில் சுற்றி சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
வீரமதியின் செயலை இன்னும் அதிகமாக கண்காணிக்க அவர் இல்லாத போது அவர் அறைக்குள் சென்று மினி மைக் பொருத்தி விட்டு வர சொல்லிருத்தான் எட்வர்டு.
அவளும் வீட்டில் யாரும் இல்லாத நேரமும் அமைய, துருவன் மட்டும் அறையில் இருக்க மற்றவர்கள் வெளியே சென்றிருக்க, வீரமதியின் அறைக்குள் பதுங்கி பதுங்கி நுழைந்தாள் ஜெஸி .
அப்போது தான் வெளியே வந்த துருவ் அதனை கண்டு கொண்டான்.
காவலுக்கு நிற்க வைத்து ஶ்ரீயும் அசோக்கும் சொதப்பி விட்டார்கள். துருவனோ மெதுவாக உள்ளே நுழைந்தான். அவளோ அதற்குள் பொருத்தி விட்டு எழுந்தவள், எட்வர்டு போனை எடுத்து விட்டு திரும்புவதற்குள் அவள் வாயை பொத்தி கையை பின்னே மடக்கி அவளோடு சுவரில் சாய்ந்தான்.
“திருடி ! எதை திருட இங்க வந்த?”என்று காதோரம் கேட்டாலும் அவளது உடலிருந்து பரவிய இயற்கை வாசத்தை நுகர, அது மெல்ல அவனை கிறங்கடித்தது. அவள் கழுத்தில் முகாமிட்டு தினமும் முத்தங்களிட ஆசை கொழுந்து விட்டு அவனுள் எரிந்தது… ஆனாலும் தன்னை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அவளிடம் விசாரிக்க, “ம்ம்”என்று வாய்க்குள்ளே முனங்கினாள்.
“கையெல்லாம் எடுக்க மாட்டேன்… பதில் சொல்லு !” என்றான். அவளுக்கு தான் ஆயாசமாக இருந்தது. ஆனாலும் அவளை அவன் விடவில்லை.
அப்போதும் அவளை விடாமல், “ஏன் ஜெஸி நீ லாங் இயரிங் போடறதே இல்ல…? சின்னதா மச்சம் போல இருக்க தோடு தான் போடற, லாங்கா தான் போட்டா என்னவாம் ?”என்று அவள் காதில் கிசுகிசுப்பாக கேட்டான். அவளோ அவனை ‘என்ன பிறவி?’என்பது போல பார்த்தாள்.
அவன் அவளை விடுவதாக தெரியவில்லை , அவள் தனது இன்னொரு கையின் முட்டியை வைத்து அவன் வயிற்றை வேகமாக குத்த, ‘ ஐயோ ! அம்மா !” என கத்தி அவளை விடுத்து வயிற்றை பிடித்துக் கொண்டு கத்தினான்.
அவளோ அவனருகே அமர்ந்து “ஷ்” என்று வாயில் கை வைக்க, அவனோ “போடி ராட்சசி ! வயித்துல இருக்கற குத்தானி எல்லாம் வெளியே வந்திடுச்சு ஷ்’ ங்கற
மனுஷி தானா நீயி?”என்று புலம்பினான்.
அவன் கையிலிருந்த போனை காட்டி “இது எட்வர்டு போன் இதை எடுக்கத்தான் வந்தேன். மேடம் பெர்மிஷனோட, அதை சொல்ற விட்றீயா? வாய பொத்திட்டு கேள்வி கேட்டா என்ன டா பண்ண? அதான் குத்தினேன் ரொம்ப வலிக்குதாடா ! ஹாஸ்பிட்டல் போலாமா?”என்று அருகே இருந்த நீரை எடுத்து கொடுக்க, அவனை மடக்கென குடித்து முடித்தான்.
“இனிமே முன்னாடி வந்து அட்டாக் பண்ணு ! பின்னாடி வந்து அட்டாக் பண்ண இதான் நடக்கும்…” என்று கேலி செய்ய, ” ஆத்தி இனி நோ அட்டாக் !என்னால முடியாது” என்று எழ முடியாமல் எழுந்து முன்னே செல்ல, அவளோ வாய் விட்டே சிரித்தவள் ஒரு முறை அறையை பார்த்து நகன்றாள்.
****
“ஜெஸியா என்னை ஆள் வச்சு அடிச்சது?” நம்பாமல் மீண்டும் அவனிடம் கேட்க, அவனோ முகமெல்லாம் இரத்தத்துடன் ‘ ஆமாம் ‘ என்க அவனுக்கு சர்வமும் அடங்கி போனது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
3
+1
+1
