
“என்ன திடீர்னு இப்படி ஒரு ஞானோதயம்?”என தன் அருகே அமைதியாக அமர்ந்திருந்த துருவனிடம் கேட்டாள் ஜெஸி.
இருவரும் நட்பென்ற புது உறவை உருவாக்கி ஒரு நிமிடம் முழுதாய் முடிந்திருந்தது. அவளை விட்டு அகலாது அருகே நாற்காலி போட்டு உட்கார்ந்து கொண்டான்.
நட்பு என்று அவன் உண்டாக்கிய வட்டத்துக்குள் அவளை சேர்த்த நிமிடங்கள் கடந்து பேசாது அமைதியை தத்தெடுத்திருந்தான்.
அவனது அமைதியே சொன்னது அவன் இன்னமும் தன் செயலுக்காக வருந்துகிறான் என்று.
‘ அவன் தன்னை எதிர்க்கச் செய்தானே தவிர தன் குழந்தையை அழிக்கும் நோக்கம் அவனுக்கு இல்லை’ என்று அவளுக்கு நன்றாகத் தெரியும்.
‘வீரமதியின் வளர்ப்பு தான். பணக்காரன் என்ற பகட்டு இல்லை என்றாலும் ஆண் என்ற கர்வம்(தலைகணம்) அவனுக்கு இருந்தது தான். அதுவும் இப்போது உடைந்து விட்டது. இனியாவது மனிதனாக இருக்கட்டும்’ என்று எண்ணிக் கொண்டவள்
‘அவன் திருந்த தன் குழந்தையை தான் பழியாக்க வேண்டுமா கடவுளே ! அவளை உருவாக்கின நோக்கம் முடிந்ததென்று என் குழந்தைய எடுத்துக்கிட்டீங்களா கர்த்தரே ! இவனை மாற்ற தான் எனக்குள்ள உயிரை கொடுத்து அதை எடுக்கவும் செஞ்சுட்டீங்களா? நீங்க படைத்த உயிரை உங்களுக்கு மட்டும் தான் எடுக்க உரிமை இருக்கன்றது போல தான் என் குட்டி உயிரையும் எடுத்துக் கிட்டீங்களா. அதே போல இந்த அற்ப உயிரையும் எடுத்திருக்கலாமே இயேசுவே ! நான் என் கணவன் குழந்தைனு சொர்க்கத்திலோ நரகத்திலோ வாழ்ந்திருப்போமே…”என்று சொல்லிக் கண்ணை மூடியவளுக்குள் டென்னிஸ்ஸின் முகம் வர பட்டென எழுந்து கொண்டாள்.
கண நேரத்தில் தன் எண்ணப் போக்கையும் தன் தவறையும் புரிந்து தன்னை திட்டிக் கொண்டாள். தன் எண்ணம் போகும் போக்கு தவறாக அதை மாற்றும் பொருட்டு அவனிடம் பேச எண்ணினாள்.
அவளது கேள்வியில் விழுக்கென்று தலையை நிமிர்த்தி பார்த்தவன் உயிர்ப்பில்லா சிரிப்பை உதிர்த்தான்.
“ஏன் உனக்கு நான் அப்படி இருக்கணும் தான் எண்ணமா என்ன?” என நக்கலாக கேட்டான். அவனது நக்கலுக்கு முறைப்பை பரிசளித்தவள் அவன் கேள்விக்கு பதிலுமளித்தாள்.
“என் குழந்தையோட இறப்புனால தான் இந்த மாற்றமா? திருந்தணும்ன்ற எண்ணம் வந்ததது கூட அதான் காரணமா என்ன?”
“அந்த இறப்பு என்னை அதிகம் பாதிச்சது உண்மை தான். ஆனா அந்த இறப்பு என்னாலே. நீங்க ஆசையா எதிர்பார்த்த அந்த பிஞ்சு உயிர நான் என்னோட கெட்ட எண்ணத்தாலே கொன்னுட்டேன். ஒரு உயிரை கொல்ற அளவுக்கு நான் கெட்டவனா? என் எண்ணம் கெட்ட வழியில்லையா யோசித்திருக்குனு நினைக்கவே போதும் என்னை விட ஒரு அருவருப்பானவன் யாருமில்ல தோணுது. என் மனசாட்சியே என்னை கொலகாரனா பாக்குது. இதுக்கு மேலையும் உன்னை பழிவாங்கணும்ன்ற எண்ணத்தோட நான் இருந்தால், நான் மனுசா இருந்தாலும் உள்ளக்குள் நானும் ஒரு கொடிய மிருகம் தான். ஆனா என் அம்மா அப்படி என்னை வளர்க்கல… என் அம்மா என்னை சரியா தான் வளர்த்திருக்காங்க, என்ன நான் தான் கொஞ்சம் தடம் மாறிட்டேன். உன் கிட்டயும் கொஞ்சம் தவறா நடந்துக்கிட்டேன். உன் பாதுகாப்புல நான் இருக்கணுமான்ற என்னோட அகம்பாவம், எனக்கு நீங்க அடிபணியும்ன்ற எண்ணம். என்கிட்ட நீங்க மன்னிப்பு கேட்கணும். உங்களை ஓட வைக்கணும் நினைத்தேன்.
ஆனா, என் அம்மாக்கு அப்றம் நான் வியந்து பார்க்கிற பெண் நீங்க தான். என் உயிரை காப்பாத்தியும் எனக்கு புத்தி வரல. ஒரு உயிரை வைத்து எனக்கு பாடம் புகட்டும்னு கடவுள் நினைச்சிட்டார் போல. அதுக்காக நான் வருத்தப்படுறேன். வெட்கமா இருக்கு எனக்கு… நான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது. அநியாயமா உங்க குழந்தைய நான் கொன்னுட்டேன்… அதுக்கு இந்த ஜென்மத்துல எனக்கு மன்னிப்பே இல்ல…”அவன் உளறிக் கொண்டிருக்க, கையை நிறுத்தி தடுத்தவள்
“நீ திருந்தினது எனக்கு சந்தோசம் தான். நீ புரிஞ்சுக்கிட்டதே போதும். மறுபடியும் குழந்தை கொன்னது நீ தான் சொல்லாத. என்னோட கவனமின்மையும் அதுல இருக்கு. நீ ஒருவனே மட்டும் மொத்த பழியை ஏத்துக்காத. என்னவோ இந்த உலகத்துக்கு குடுத்து வைத்துக்கல என் மகள் வாழ…”என்று உதடுகளை பிதுக்கி மேலே பார்த்து சொன்னவளின் இமைகள் நனைந்திருந்தன. அவள் மீண்டும் அழுகிறாள் என்று தெரிந்தது.
அவள் கையை அழுத்தி இருந்தான் அவன். அவளது கன்னத்தை தொட்ட நீரை துடைத்துக் கொண்டாள்.
அவன் அழுத்தியிருந்த கையை மெதுவாக திருப்பி பார்க்க பச்சையாக ஆரோனின் முழுப் பெயர் இருந்தது. அதை மெல்ல மனதிற்குள் வாசித்தான்.
மேசையில் இருந்த அலைபேசி அலறியது.
அவன் தான் எடுத்தான். திரையில் டென்னிஸ்ஸும் அவனது கணவனும் ஒன்று போல கன்னத்தில் வைத்திருக்கும் புகைப்படத்தை தான் வைத்திருந்தாள் அவள்.
அது அவனுக்கு தெரியும் படி தூரத்தில் தான் இருந்தது. எடுத்து அவளிடம் கொடுத்தான். அவளும் ஒலியை அடக்கிவிட்டு பேச ஆரம்பித்தாள்.
“செல்லம், அம்மாக்கு வேலை முடிஞ்சது. இன்னும் அரைமணி நேரத்தில் அங்க இருப்பேன்…”என்றாள். மீண்டும் அங்கு என்ன சொல்லப்பட்டதோ
” ம்கூம்… பிராமிஸ் இனி உன் கூட தான் இருப்பேன் போக மாட்டேன்”என்று வாக்குறுதி கொடுத்தாள்.
அவன் அங்க முத்தம் வைக்க இவளும் வாய் வார்த்தையாக”முத்தா… பாட்டிட்ட இருங்க, அம்மா வந்ததிட்றேன் செல்லம் பை”என்று போனை அணைத்தவள் திரையில் தெரிந்த இருவரையும் பார்த்தாள். உணர்ச்சி வசத்தால் கண்ணீருடனே முத்தம் வைத்தாள்.
அவனுக்கு தான் ஏதோ போல் ஆகிவிட்டது… அவள் முகத்தை இமைக் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை தன் முகத்தில் நிலைத்திருப்பதை கண்டு புருவங்கள் நெறிய அவனை கண்டாள்.
“இது முதல் குழந்தை இல்லையா??”
“இல்ல டென்னி… டென்னிஸ் தான் முதல் குழந்தை. அவன் பிறந்து பைவ் இயர்ஸ் ஆச்சி ! இது செக்கண்ட் பேபி”என்றாள்.
“மேரேஜ் ஆக்கி எத்தனை இயர்ஸ் ஆச்சி??”
“சிகிஸ் இயர்ஸ் ஆச்சி”என்றாள்.
அவனோ அதிர்ந்து”அப்போ உங்க ஏஜ்?”என்றாள்.”டுவென்டி நைன்…”என்றான்.
“என்ன விட, திரி இயர்ஸ் ஓல்டா நீங்க??”என வாயை பிளந்து கேட்டான்.
“எஸ்… அக்கான்னு கூப்பிடுறீயா?”என நக்கல் செய்ய, “ம்கூம் மாட்டேன்”என்றான்.
அவள் சிரித்து கொண்டே” எப்போ டிஸ்சார்ஜ்னு சொன்னாங்களா?”
“அரைமணி நேரத்துக்கு முன்னாடி, டாக்டர் ஒரு மணி நேரம் கழிச்சு போலாம் சொன்னாங்க. இன்னும் ஒரு அரை மணி நேரத்தில போயிடலாம்”என்றான் பெருமூச்சை ஒன்றை விட்டு மௌனமானாள்.
“இன்னைக்கி நீங்க ஏன் லீவு?”என உள்ளே தன் வன்மம் எழ காரணமாக இருந்த அந்தக் கேள்வியை கேட்டே விட்டான்.
“டென்னிஸ்க்கு பெர்த்டே. அவன் கூட அந்த நாள் முழுக்க இருக்கணும் நாங்க ரெண்டு பேருமே ஆசைப்பட்டோம். பச்… ஆரோ இல்லனாலும் டென்னிக்கு அம்மா , அப்பாவா நான் இருக்கும் போது அந்த நாள்ல அவன் கூட இருக்கணும். அதான் லீவ்” என நகங்களின் இடுக்குகளை பார்த்து கொண்டே சொன்னாள்.
மீண்டும் துக்கம் வந்து அவன் தொண்டையை அடைப்பது போல இருந்தது. “ஸாரி”என்றான்.
“மறுபடியும் ஆரம்பிக்காத…”என்று அப்படியே சாய்ந்து கண்களை மூடினாள்.”நாளைக்கு நீங்க வீட்டுக்கு வர வேண்டாம்…”என்றதும் படக்கென்று கைகளை விலகிப் பதறி போய் பார்த்து”ஏன் வர வேணாம்??”சிறு கோபம் தொணிக்க கேட்டாள்.
“மூணு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு உங்க பையன் கூட டேஸ் ஸ்பெண்ட் பண்ணிட்டு வாங்க… இது நான் பண்ண தப்புக்கு சின்ன கம்பென்சியேட்”என்றான் வெண்பற்களை காட்டி. அவனை மெச்சுதலாகப் பார்த்து விட்டு “தேங்க்ஸ்” என்று வந்து கண்ணை மூடிக் கொண்டாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் அவனே அவளை அழைத்துக் கொண்டு வீட்டின் முன் நிறுத்தியவன் சிறு தலையசைப்பில் அவளிடமிருந்து விடைபெற்று சென்று விட்டான்.
உள்ளே வந்தவளை கண்டு புன்னகைத்து படி வந்த ஆரோக்யா அவள் கையில் வெண்பிளான் இருந்த தடத்தை கண்டு பத்றி போய் விசாரித்தார்.
அவள் வேலையில் மயங்கி விட்டதாகவும் மருத்துவமனை சென்று வந்ததாகவும் சொல்லி சமாளித்தாள்.
அவளை கவலையோடு கண்டவர்கள் ஓய்வு எடுக்கும்படி கட்டளையிட்டனர்.
ரவி, அசோக் , தன்யா , ஸ்ரீ மட்டுமே அவனோடு அவன் இல்லம் அவர்களையும் போக சொல்ல இருவர் மட்டும் உடன் இருப்பதாகச் சொல்லி மற்றவரை அனுப்பி வைத்தனர்.
இல்லம் நுழைந்தவன் அறையே கதியென அடைந்திட, மதிய உணவையும் மாலை தேநீரையும் மறுத்தவன் இரவிற்கு தான் வெளியே வந்தான்.
அவனது குடும்பம் மொத்தமும் கூடத்தில் கூடி இருந்தது. அவனும் அவர்களுடன் ஐயக்கியமானான்.
“என்ன டாபிக் ஓடுது?”அன்றைய நிகழ்வை மறக்க முயன்று முடியாமல் மூச்சு முட்ட அறையில் கிடைந்தவனுக்கு வெளியே வந்து அவர்களது குடும்பத்துடன் இணைந்து பிறகு கொஞ்சம் சீரானது போல் இருந்தது. அனைத்தையும் மறந்து அவர்களிடம் ஒன்றிட விரும்பினான்.
“அத்தை பெர்த்டே வருது… அதை வழக்கமா செலிபிரேட் பண்ண முடியலைனாலும் சின்னா தான் ஒரு கெட்டுகெதர் மாதிரி சொந்தம், பிஸ்னஸ் சர்க்கில், பிரண்ட்ஸ இன்வைட் பண்ணலாம் சொன்னா அத்தை கேட்க மாட்டிகிறாங்க…”என்றாள் நிக்கிதா.
“ஏன் மாம் வேணாம் சொல்றீங்க? செலிபிரேட் பண்ணலாமே மாம் ” துருவனும் சொல்ல,
“என்ன பேசற துருவ், அப்பா இறந்து மூணு மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள இந்த செலிபிரேஷன் தேவையா??? என் பிறந்தநாள ஒரு வருசம் கொண்டாதனால என்ன நட்டமாக போகுது? இதெல்லாம் வேணாம் துருவ்…”என்று மறுத்தார்.
“மாம் .. நீங்க இதை ஏன் செலிபிரேசன் நினைக்கறீங்க? அப்பா இறந்த துக்கம் இன்னும் நம்ம ஒவ்வொருத்தரோட இதயத்தில வலியா இருக்கு. என்ன தான் நாம ஒருத்தருக்கொருத்தர் சிரிச்சி பேசினாலும்… உள்ளுக்குள்ள வேதனைய சுமந்து கிட்டு தான் இருக்கோம். அதை எல்லாரும் மறக்க, கொஞ்சம் ரெபிரேஷ்ஷாக ஒரு சின்ன கெட்டுகேதர் மாதிரி வைப்போம் மாம். ஓடி ஓடி உழைக்கிற உங்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஷேன் போல இருக்கும். ப்ளீஸ் ஒத்துக்கோங்க…”என்று இறஞ்சினான் ருத்ரன்.
“மதிம்மா ப்ளீஸ் ஒத்துக்கோங்க… நீங்க ஹாப்பி இருக்கிறத நாங்க பார்க்கணும்… ப்ளீஸ் ப்ளீஸ்” லோகிதாவும் வற்புறுத்த,
“ஆமா மதிமா ! இந்த வீடும் கொஞ்சம் களை இழந்து போயிருக்கு. இந்த செலிபிரெசனால பழைய ஹாப்பின்ஸ் கொஞ்சமாவது கொண்டு வரலாம்.பப்ளீஸ் மதிம்மா” லோகித்தும் கெஞ்சினான்..
ராதாவும் தன் பங்கிருக்கு வீரமதியிடம் கெஞ்சினார். குழந்தைகள் ஆசைகள் போலவே நடக்கட்டும் அவர்கள் விருப்பத்திற்கு’ சரி’ சொல்ல அனைவரும் கத்திக் கூச்சலிட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
மறுநாள் வீரமதி அலுவலகம் கிளம்ப, தன் நண்பர்களை சந்திக்க துருவனும் கிளம்பியிருந்தான். அவனுடன் ஸ்ரீ மட்டும் ரவி இருக்க வீரமதியின் கண்களோ ஜெஸியை தேடியது.
“துருவ், ஜெஸி இன்னைக்கி வரலையா??? நேத்து மட்டும் தான் லீவு சொல்லிருந்தாள் இன்னைக்கே ஏன் வரல…?”சந்தேகமாக கேட்டார்.
“அவங்களுக்கு உடம்பு சரியில்ல மாம். நான் தான் மூணு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வர சொன்னேன்”என்றான்.
“என்னாச்சி ஜெஸிக்கு???”என யோசிக்க,”மேம் அவங்களுக்கு திரி டெஸ் பிராபலம். அதான் சார் ரெஸ்ட் எடுத்துட்டு வர சொன்னார்”என்றாள் தன்யா.
மகனை ஆச்சர்யமாகப் பார்த்தார் வீரமதி.
“எஸ் மாம். என்னை எதுவும் ஆக கூடாது ஃபுல் டே எனக்கு பாதுகாப்பா நிக்கறாங்க. அதுல அவங்களுக்கு அந்த திரி டெஸ் ப்ரொபலம் வேற எப்படி மேனேஜ் பண்ணுவாங்க? அவங்களால முடியும் தான். பட் என்னால அப்படி விட முடியாது மாம். லீவு கொடுத்தேன். இது தன்யாவுக்கும் தான். அவங்களுக்கும் அந்த பிராபலம் வந்தால், சி கேன் ஆல்ஸோ டேக் லீவ் மாம்…”என்ற மகனை வியப்பாகப் பார்த்தார்.
“ரொம்ப நல்ல காரியம் செய்திருக்க துருவ். ஐ ஆம் ரியலி ப்ரௌட் ஆப் யூ” என்று தோளை தட்ட, கசந்த முறுவலோடு அவரை பார்த்தான்.
‘நான் செஞ்சது மட்டும் உங்களுக்கு தெரிஞ்சதுனா, உங்க பார்வையிலே என்னை எரிச்சிருப்பீங்க… ஸாரி மாம், இனி உங்க வளர்ப்பு தப்புன்னு சொல்லும் படி நடக்க மாட்டேன் . ரியலி ஸாரி மேம்.”என்று உள்ளுக்குள் மன்னிப்பு கோரினான்.
அவரும் மகனை நினைத்த கவலை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்குவதாக எண்ணிக் கொண்டார்
கண்களை பறிக்கும் விண்மீன்களின் ஆட்சி வேளையில் அவன் தூக்கத்தை பறித்து அவனது சிந்தனை எங்கும் தனதாக்கிக் கொண்டாள் அந்தக் கஞ்சுகக் காரிகை…
ஏசியின் ஆளுமை அறை எங்கும் நிறைந்திருக்க, முகத்தில் தேவையற்ற வியர்வை துளிகள் படர்ந்திருந்தன. மனதில் உதிர்த்த குழப்பத்தின் அடையாளமாக்கின.
வயது மூத்தவள் என்பதையே அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதில் திருமணமாகி குழந்தை ஒன்று இருப்பது மேலும் அவனுக்கு நெருடலாகிப் போனது.
அவள் பக்கம் மனம் சாய இருந்த வேளையில் இப்படி ஒரு விசயம் அவனுக்குள் இடியை இறக்கியது போல் இருந்தது.
காதல் கடலில் விழுவதற்கு முன் கிடைத்த எச்சரிக்கையா? அவள் தனக்கு வேண்டுமா? வேண்டாமா? நட்பிலே நின்றுக் கொள்வது சரியா? இல்லையா?. அடுத்த கட்டமான காதலில் குதித்து விடுவதா? பல கேள்விகள் அவனுக்குள்.
அவனை தூங்க விடமால் கேள்விகள் அனைத்தும் அவன் உறங்கும் பொழுதை அபகரித்தன.
அவள் தனக்கு வேண்டுமா? அவள் இல்லாமல் தன்னால் இருந்து விட முடியுமா? அளவற்ற விண்மீன்களை போல அளவற்ற கேள்விகளும் அவனுக்குள் ஏராளமாக உதிக்க, திணறிப் போனது அவனது மனதும் மூளையும்.
என்ன சொன்னால் அடங்குவான் என்றே அறியாமல் போனது இரண்டு செயலிகளும்… கண்களை மூட, மூளை கட்டளை பிறப்பித்தாலும் தூங்காமல் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தான் துருவன்.
‘தூங்கி விடு ‘ என மூளை கெஞ்சுவது கண்டும் மணமிறங்காமல் கொட்ட கொட்ட முழித்து இருவரின் உயிரை வாங்கிக் கொண்டிருந்தவன் விடியல்
பிறக்கவே இருவருக்கும் விடுதலை தந்து உறக்கத்தை நாடினான்.
அன்று வார இறுதி நாளாக இருந்தாலும் அனைவரும் வேலையாக இருந்ததால் யாரும் அவனை கண்டுக் கொள்ளவும் இல்லை தொந்தரவு செய்யவும் வில்லை… அவனை அவன் போக்கிலே விட்டு விட்டனர்.
சூரியன் உச்சிக்கு வர எழுந்து வந்தவனுக்கு அலட்சியத்தோடு வணக்கம் வைத்தனர், ஶ்ரீயும் அசோக்கும்… அவர்கள் செய்கையில் புன்னகை உதிர்த்தவன் எதுவும் சொல்லாமல் கடந்து வந்து விட்டான்.
ராதா, அவனருகே வந்து கிரீன் டீயை கொடுக்க, “தேங்கி யூ ராதா மா !”என்று வாங்கிக் கொண்டான்.
அவன் விழிகளையே பார்வையிட்டவர், பதறிப் போனார். அவன் அருகே அமர்ந்து அவன் தலையை வருடியவர் ” நைட் முழுக்க தூங்களையா துருவா?”என அவனது செக்கரை படிந்த விழிகளை வைத்துக் கொண்டு கேட்க, அவனிடத்தில் ஒரு சிறிய அதிர்வு’எப்படி கண்டு பிடித்தார் என்று?’ என்று யோசிக்க
“நான் உன் அம்மா டா ! உன்னை பெத்துக்க மட்டும் தான் செய்யல… உன்னை வளர்த்தது நானு… உன்னை பத்தி எனக்கு நல்லாவே தெரியும். நீ சரியா தூங்கலேன்னா உன் கண்ணு சிவந்து போயிரும்… பாரு இன்னைக்கி கூட சிவந்து தான் போயிருக்கு… ஏன்டா தூங்கல? வேலை எதுவும் பார்த்தீயா?” தாடையை பற்றி குழந்தையிடம் கேட்பது போல கேட்க, அவனுக்கு தான் கண்கள் கலங்கி விட்டது அவரது அக்கறையில். கண்ணீரை அவருக்கு காட்டாமல் சிமிட்டி விட்டவன் அவர் மடியிலே சாய்ந்து விட்டான்.
“குழப்பமாக இருக்கு இராதாமா! எனக்கு பிடிச்ச விசயம் ஒன்னும்… எனக்கு சொந்தமாக்கிக்கன்னு மனசு சொல்லுது ! வேணாம் மூளை சொல்லுது ! எதை நான் எடுத்துக்க, அந்த விசயம் எனக்கு வேண்டுமா? வேணாமா? எப்படி நான் தெரிஞ்சுக்க…? அது எனக்கு அத்தியாவசியமா? அனாவசியமா? நான் எப்படி கண்டு பிடிக்க ராதா மா குழப்பமா இருக்கு ! பக்கத்துல தான் இருக்கு, ஆனா அது தேவையா ? இல்லையா? என்னால கான்பிடென்ட் சொல்ல முடியல. நான் என்ன பண்ண ராதாமா?”என்று பூசி மொழுகி தனக்குள் உறுத்திக் கொண்டிருந்ததை அவரிடம் கொட்டி விட்டான்.
“துருவா, அந்த விஷயம் வேணுமா? வேணாமா? நமக்கு தேவையா ? இல்லையா ? பல நேரங்களில் பல இடங்கள் இந்த குழப்பம் பிரதானமா இருக்க தான் செய்யும்… சில நேரத்தில் அந்தக் குழப்பத்துக்கு தீர்வு சட்டுனு கிடைச்சிடும், சில விசயங்கள்ல நம்மலை வச்சு செஞ்சிட்டு தான் குழப்பம் தீரும். எனக்கு என்னமோ இரண்டாவதா சொன்னது தான் உனக்கு வந்திருக்கு… அந்த குழப்பத்தை ஈசியா நம்மல விட்டு போகாது. அம்மாக்கு தெரிஞ்ச விஷயத்தை சொல்றேன் கேட்டுக்க, எந்த விஷயம் உனக்கு தேவையா? தேவை இல்லையா? முக்கியம் முக்கியம் இல்லையான்னு தெரிஞ்சுக்க, நீ அந்த விஷயத்தை விட்டு கொஞ்சம் தள்ளி இரு ! அது அந்த நாள் முழுக்க உன்னை தொந்தரவு செய்யாம , அதனுடைய நினைப்பு கொஞ்சம் கூட இல்லாமல் உன்னால இருக்க முடியும் நினைச்சா, அது நமக்கு தேவை இல்லை.ஒரு நாள் கூட அதை சிந்திக்காமல் இருக்க முடியல ஏதாவது ஒரு வகையில் உனக்கு நியாபகமா வந்து வந்து போகுதுன்னா, உனக்கு அது எவ்வளவு தேவை நீயே புருஞ்சிப்ப “என்றார்.
அவரை விழிகள் விரிய ஆச்சரியமாகப் பார்த்தான் துருவன்.
“என்ன டா அம்மாவ அப்படி பார்க்கற? அப்படி என்ன சொல்லிட்டேன் நான்?”என்க,
“நீ சொன்னது உனக்கு வேணா பெருசா இல்லாம போகலாம். ஆனா எனக்கு பிலோஸ்பி ராதாம்மா ! தூக்கத்தை விட்டுடு பதில் தேடிட்டு இருந்த எனக்கு இது தான்டா பதில் சட்டுன்னு சொல்லிட்ட நீ! லவ் யூ சோ மச் ராதாம்மா ! ஆனா எப்படி ராதாமா அதுக்கு சட்டுனு தீர்வு சொன்ன?”என்று கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு, அவர் முகம் ஏந்தி கேட்க, அவரோ சிரித்துக் கொண்டேன”எல்லாம் அனுபவம் தான்டா… நான் அளவா படிச்சிருந்தாலும், இந்த அனுபவம் மூலமா நிறைய கத்துக்கிட்டேன் , தெரிஞ்சுகிட்டேன்… உனக்கும் இதெல்லாம் ஒரு பாடம் தான். நீ என் கிட்ட சந்தேகம் கேட்டு தெளிஞ்சிக்கிட்ட, நாளைக்கு உன் புள்ள வந்து கேட்பான் நீ உன் அனுபவத்தை சொல்லு !”என்றிட, புன்னகைத்தான்.
அவன் தலையில் கோதி விட்டு உள்ளே சென்று விட, அவனோ இன்று முழுக்க அவளை பற்றி சிந்திக்க கூடாது, அவளை நினைக்க கூடாது என்ற தீர்மானத்துடன் அலுவலக வேலை சில இருந்ததால் அதை பார்க்க வேண்டும் என்று எண்ணியவன் கிளம்ப அறைக்கு சென்றான்.
பத்து நிமிடத்தில் கிளம்பி வந்தவன், அசோக்கிடம் அலுவலகம் செல்ல இருப்பதாக சொல்ல, அவர்களும் அவன் பின்னே சென்றனர்…
அவன் காரினுள் அமர்ந்திருக்க, அவனது இடது வலது புறத்தில் ஶ்ரீயும் ரவியும் அமர, பின்னே அசோக்கும், தன்யாவும் அமர, முன்ன ஜெஸி அமரும் இடம் காலியாக இருந்தது.
காசி அண்ணன் வண்டியை இயக்க,வேகமாக அவர் தோளில் கையை வைத்து” அண்ணா ! இன்னும் ஜெஸி வரல வெயிட் பண்ணுங்க “என்றான். பக்கத்தில் இருந்த ஶ்ரீயும் ரவியும் அவனை முறைக்க, தன்யா தான்” மேடம் தான் லீவுல இருக்காங்களே மறந்துட்டீங்களா?”என்றாள்.
அவனோ தலையில் கைவைத்து விட்டு”சாரி… நீங்க வண்டி எடுங்க அண்ணா !”என்றான்.
‘ யாரை நினைக்க கூடாது ! உன் கிட்ட சொன்னேனோ ! அவங்களை தான் நியாபகப் படுத்துவீயா நீ !’ உள்ளிருக்கும் மனதை கடிந்திட, நினைவு முழுக்க அவளாக இருந்தாள் நான் அவளை மட்டும் தான் நினைவு படுத்துவேன்”என்று சொல்லாம் சொல்லி விட, இவனோ சலித்து கொண்டான்.
அலுவலகம் சென்று நண்பர்களுடம் எஞ்சிய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும், ஒரு மூலையில் அவளது நினைப்பு இருந்து கொண்டு தான் இருந்தது. கண்ணாடி வழியே அவர்களுக்கு ஒதுக்க பட்ட அறையில் அவளை தேட, அவளோ இல்லை என்று மூளை நிதர்சனத்தை உணர்த்த, முகம் கசங்க, மனதில் ஒரு சுணக்கம்…
“என்னடா அமைதியா இருக்க?”ரிஷி அவனை உலுக்கிட, “நத்திங் டா !”என்று சமாளித்தான்.
“சரிடா ! ஓபனிங் ஃபங்ஷன் என்ன என்ன தேவையோ அதெல்லாம் ரெடி பண்ணனும் ஐயர புக் பண்ணனும். இன்விடேசன் ரெடி பண்ணனும் இன்வைட் பண்ணனும்… என்ன செய்யனும் லிஸ்ட் போடலாம் டா !”சாகர் சொல்ல மற்றவர்களும் ஆமோதித்தனர். அந்த வேலையில் தன்னை ஈடுபடுத்தி, அவளை மறக்க நினைத்து அதில் பாதி வெற்றியும் கண்டான்.
மாலை நேரத்தில் இல்லம் வந்தவன், உடன் வந்தவர்களை அனுப்பி வைத்து விட்டு நாளைக்கு விடுமுறை என்று லீவும் கொடுக்க அவர்கள் ஒருவரை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டனர்.
ஆனால் ரவி தான் இன்னும் கோபம் அடங்காமல் பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பினான்.
“கன்ஃபார்மா லீவு தான? இல்ல லீவு கொடுக்கறது போல கொடுத்துட்டு, மேடம பழிவாங்கினது போல எங்களையும் பொய்யா நடிச்சி பழிய தீர்த்துக்க மாட்டீங்களே !” என நெஞ்சில் இருந்த கோபத்தை வார்த்தைகளுடன் கொட்டித் தீர்த்துக்க, முதலில் சுருக்கென்று வலித்தாலும், செய்த தவறுக்கு தண்டனை என்று ஏற்றுக் கொண்டவன், புன்னகை முகத்துடனே அவனிடம்”உங்க மேடம் என்னை மன்னிச்சாலும் நீங்க மன்னிக்க தயாரா இல்ல போல… எனிவே நீங்களாவது என்னுடைய தவற நியாபகப்படுத்துனதுக்கு நன்றி. மறக்க மாட்டேன். இனி அது போல இன்னொரு தவறும் செய்ய மாட்டேன். நாளை உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். என்ஜாய் யூர் ஹாலிடே “என்று அவன் அறைக்கு சென்று விட, ரவிக்கு தான் கொஞ்சம் உறுத்தலாகிப் போனது.
அவனது மாற்றம் அந்த நால்வரும் சிறு அதிர்ச்சியை தந்தாலும், அவனை நம்பலாமா? வேணாமா? என்ற கேள்வியும் அவர்களுக்குள் கேட்காமல் இல்லை… நால்வரும் ஒரு சேர தோளை குலுக்கி விட்டு இல்லம் நோக்கி சென்றனர்.
இரவு உணவை முடித்துக் கொண்டு வந்தவனுக்கு முள் படுக்கை அவனை அன்போடு அழைக்க மெத்தையில் விழுந்தவனுக்கு பாரம் அழுத்தியது. செய்த தவறு நியாபகத்திற்கு வந்து இம்சித்தது. இமைகள் இரண்டு சேர விடாமல் தூக்கம் அவனை நாட விடாமல் தடுத்தது அவளது நினைப்பு… அவளை நாள் முழுக்க நினைக்க கூடாது என்று எண்ணியவனுக்கு நேரதிராக அவளை மட்டுமே நினைக்கும் படியாக அமைந்து விட, அவனால் எதுவும் முடியவில்லை… அவளை மறக்க, நினைக்காமல் உறங்க நினைத்தவனுக்கு அவனது அனைத்து பாகங்களும் அவனுக்கு எதிரியாகிட, அவள் தான் தீர்வென்று எண்ணி அவளுக்கு அழைத்தான்.
இரண்டு ரிங்கிற்கு பிறகு தான் எடுத்தாள். “ஹாய்” என்றான்.
“ஹாய் சொல்லு என்ன விஷயம்?”என்றாள்.
அவனோ தயங்கி” சாரி ! டிஸ்டர்ப் பண்ணிட்டேனா !”என்றான்.அவளோ பட்டென “ஆமா !” என்றாள். இவனுக்கு தான் ஒரு மாதிரி ஆனது. அமைதியாகிப் போனான்.
அவளுக்கோ அவனது அமைதியில் முகத்தில் புன்னகை படர்ந்தது.”மிஸ்டர் துருவா ! என்ன அமைதியாகிட்ட?”
“ஒண்ணுமில்ல, உங்க கிட்ட சாரி கேட்க தான் போன் பண்ணினேன்.. ரியலி சாரி ஜெஸி ! நான் வேணும்னே எதையும் பண்ணல? நான்…”என ஏதோ சொல்ல வரும் முன்னே தடுத்தவள்”என்ன மேன் நீ மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கற நான் தான் உன் மேலே எந்த தப்பும் இல்லைனு சொல்லிட்டேனே அப்புறம் என்ன? மறுபடியும் ஆரம்பிக்கற !”
“நீங்க ஈசியா உன் மேல தப்பு இல்லைனு பெருந்தன்மையா சொல்லிட்டீங்க. ஆனா எனக்கு தான் தூக்கம் வராம கில்டியோட இருக்கேன்…”என தன் பக்க நிலமையை சொல்ல, ‘ நீயாவது செஞ்ச தப்ப உணர்ந்து பீல் பண்றீயே! ஆனா உங்க அம்மாவும் தான் இருக்காங்களே !ரெண்டு கொலை பண்ணிட்டு எதுவும் செய்யாத மாதிரி குடும்பத்தோட சந்தோசமா ‘ அவரை நினைத்து உள்ளுக்குள் கொதித்துப் போனாள்.
“ஜெஸி”என அவன் அழைக்க,”ஆங்… இருக்கேன்”என்றாள்.
“இப்போ ஹெல்த் எப்படி இருக்கு ?”
“கொஞ்சம் பெயின் இருக்கு ! பட் நவ் ஐ ஆம் ஓகே. மன்டே வந்துடுவேன்”என்றாள்.
அதை கேட்டும் உள்ளுக்குள் யாரோ குதூகலிப்பது போல இருந்தது.
“டெனி சும்மா இரு !” இடையில் அவளது அதட்டல் வார்த்தை கேட்க “சார் இன்னும் தூங்கலியா?” என்று கேட்டான்.
“எங்க விளையாடிட்டே இருக்கான். தூங்க மாட்றான் !”
“நாளைக்கு சண்டே தானே விளையாடட்டுமே !”
“நாளைக்கு மார்னிங் பைவ்க்கு மார்ஸ் இருக்கு சர்ச்சுக்கு போகணும் தூங்கினா தானே போக முடியும்… “
“வாட் மார்னிங்கே வா !”என்று அதிர, “அந்த டைம் எப்பையும் போவோம்… எங்களுக்கு பழகிடுச்சி!”என்றாள்.
“அதுக்கு குழந்தை பாவங்க!”
“இது எங்களுடைய கடமை துருவா ! இப்போ இருந்தே அவனுக்கு பழக்கினா தான்.. வளர்ந்ததும் சரியா போவான்”என்றாள்.
“சரி தான். ஒகே டைமாச்சி, நீங்க தூங்குங்க.. குட் நைட்”என்றான்.
“நீயும் எதையும் நினைக்காம தூங்கு குட் நைட் !”என்று வைத்து விட அவன் தான் வெறித்து கொண்டிருந்தான் அலைபேசியை. கோவாவில் எடுத்த அவளது புகைப்படங்களை பார்த்துக் கொண்டே தாமதமாக உறங்கி போனவன்,
சூரியன் எழும் முன்னே எழுந்து, அதிகாலை கடனை முடித்துக் கொண்டு வேகமாக வெளியே வந்தவன் யாரையும் தொந்தரவு செய்யாது காரை எடுத்துக் கொண்டு பறந்தான்.
அவன் இறங்கிய இடம் என்னவோ ஜெஸி வழக்கமாக செல்லும் சர்ச்சிற்கு தான். முன்ன வந்தவன் தாமதமாக வந்த ஜெஸியை வரவேற்க, அவளோ விழித்துக் கொண்டிருந்தாள் அவளை கண்டு.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
2
+1
+1
