
கண்களை மூடி அதன் மீது வலது கரத்தை வைத்து மறைத்து படுத்திருந்தாலும் கண்ணீர் நிக்காமல் வழிந்தோடியது. மூளையிலிருந்து கால் வரைக்கும் அவனது குரலும் அதன் தாக்கமும் நிறைந்திருந்தன.
அவளது தட்டையான வயிற்றில் முகத்தை பதித்து நாபியில் முத்தம் வைத்து அவளைத் தாபத்திற்கு இழுத்து சென்ற நாட்கள் ஏராளம்.
கணக்கில் காட்ட முடியாது கோடிக்கணக்கான முத்தங்களை நாபியில் பதித்தும் பதுக்கியும் வைத்திருந்தான் அந்தக் கள்வன். இன்றும் கூட முத்தம் ப(து)திக்கும் வேலையில் இறங்கியவன் அவளது அடி வயிற்றை வருடி”நம்ம செக்ண்ட் ரிலீஸ் எப்போடி?”மனைவி முகம் பார்க்காமல் கேட்டான்.
“என் கிட்ட கேட்டா??”என்றவளின் அசட்டையான கேள்விக்கு அவளிடைக்கு ஒரு கடியை கொடுத்து உருண்டவன் அவள் நெஞ்சின் மீது தலையை வைத்து அவள் முகம் பார்த்து “சீரியஸா கேக்குறேன்டி எப்போடி என் பட்டரு”என்று உதட்டைப் பிடித்து வலிக்க வலிக்க ஒரு முத்தத்தை வைத்தான்.
கன்றி சிவந்த உதட்டைப் பார்த்து அவன் நெஞ்சில் அடியைப் போட்டவள், “எனக்கு என்ன ஜோசியமா பார்க்கத் தெரியும் அடுத்த ரிலீஸ் எப்போனு சொல்ல?? ஜூனியர் பிறந்து நாலு வருஷம் ஆச்சு, அடுத்த ரிலீஸ்க்கு அவன் பிறந்து ஆறுமாசத்திலே உழைக்கவும் ஆரம்பிச்சிட்டோம். இதுக்கு மேல என்னடா பண்ணணும்ங்கறா. கிடைக்கும் போது கிடைக்கட்டும் விடுடா !”
“அப்படி எல்லாம் விட முடியாதுடி. முதல் குழந்தை தான் உன் இஷ்டம் போல பையனாகிட்டான். ரெண்டாவது நான் ஆசைப்பட்டது போல பொண்ணு வேணும். அதுவும் லேடி ஆரோனா பிறக்கணும்…”என்று தன் ஆசையை தன் காதல் மனைவிடம் சொன்னான்.
“டோண்ட் வொர்ரி பாடிகார்ட்டே ! லேடி ஆரோன சீக்கிரமாவே கொண்டு வந்திடலாம்..”என்று சமாதானம் செய்தாள்.
எதையோ சிந்தித்தவன்”ஒரு வேள எனக்கு எதுவும் பிரச்சினை இரு…”என்று முடிக்கும் முன்பே வாயைப் பொத்தியவள்,”டென்னிஸை ஒன்னும் நாம போராடி பெத்துக்கல. இயற்கையாவே கடவுள் நமக்கு கொடுத்தார். அதுபோல அடுத்தக் குழந்தையும் நமக்கு இயற்கையாகவே கடவுள் கொடுப்பார் தேவயில்லாம யோசிக்காத” என்று கடுப்பானாள்.
“சரிடி யோசிக்கல போதுமா ! உடனே மலையேறிடாத நீனு”என்று அவள் தாடையில் முத்தம் வைத்து கழுத்தில் கடித்து வைத்தான்.”ஸ்… ஆ”என முணங்கினாலும் ஆசையாக ஏற்றுக் கொண்டாள் அவனது ஒவ்வொரு இம்சையையும்.
“ஆரோ ! செக்கண்ட் ரிலீஸ் கண்டிப்பா வேணுமா என்ன?? டென்னிஸ் போதுமே நமக்கு… “என்றவளை முறைத்தவன்
“என்னப் போல என் புள்ள ஒத்தையா வளரது எனக்கு பிடிக்கலடி. அவனுக்கு துணையா தம்பியோ தங்கையோ வேணும் ஜெஸி…”என்று சிறு வயதில் தனியாக வளர்ந்த ஏக்கத்தைச் சொன்னான். அவள் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தாலும் அவளுக்குள்ளும் சில ஏக்கங்கள் இருப்பதை உணர்ந்தவன் பேச்சை மாற்றும் பொருட்டு வேறொரு காரணத்தையும் சொன்னான்.
“அது மட்டும் இல்லடி, இப்போ எல்லாம் நம்ம ஜூனியர் ரொம்ப பொஸ்ஸிவ் ஆகுறான். நான் உன்னை பார்த்தாலே என்னை முறைக்கறான். உன் கைய பிடிச்சாலே போதும் அவன் பொருள எடுத்தது போல ஓடி உன்ன வந்து கட்டிப்பிடிச்சிக்கிறான். உன் கிட்ட நெருங்கவே விடமாட்டிகிறான்… அவன் இல்லாத நேரம் தான் இந்த ஆப்பிள் எனக்கு கிடைக்குது. ஸோ… இன்னொரு புள்ளைய பெத்து அவன் கவனத்தை அது பக்கம் திருப்பிட்டா , நாம டிஸ்டர்பன்ஸ் இல்லாம கொஞ்சிக்கலாம்லே எப்படி நம்ம ஐடியா??” என்று காலரை தூக்கிவிட்டுக் கொண்டு சொல்ல,
“த்து…”என துப்பி விட்டு திரும்பிக் கொண்டவளை அவன் மொத்தமாக ஆக்கரமித்தான்.
அவன் பேசியவை யாவும் காதில் கேட்டுக் கொண்டே இருக்க, அதை நினைக்க மனம் கணத்து போனது. கணவனின் ஆசை நிறைவேறிய நேரத்தில் கணவனையும் அவன் ஏங்கிய மகளையும் இழந்து விட்டதை எண்ணி கண்ணீர் வடித்தாள்.
அவள் வயிற்றில் நான்கு மாத சிசு வளர்வதை கூட உணராது இறந்த கணவனின் நினைவில் கிடந்தாள் ஜெஸி.
டென்னிஸை சுமந்த போது கூட கர்ப்பிணி பெண்களுக்கு வரும் தலைசுற்றல் , வாந்தி அவளுக்கு வரவில்லை. நான்கு , ஐந்து மாதத்தில் தான் அது போன்ற உபாதைகள் இருந்தது. நாட்கள் தள்ளிப் போனதையும் பேட்ஸ் எண்ணிக்கை குறையாது இருப்பதை கண்ட ஆரோன் கணக்கிட்டு சொன்ன பிறகு தான் அவள் கர்ப்பம் தரித்திருப்பது தெரிய வந்தது அவளுக்கு.
அது போலத் தான் இந்த முறையும் நான்கு மாத கருவைச் சுமந்தவளுக்கு தெரியவில்லை தான் கருவுற்று இருப்பது.
மூன்று மாதமாக மாத விலக்கு வராது இருப்பதை கூட பொருட்படுத்தாமல். கணவனை பற்றியும் அவனை கொன்றவர்களை கண்டு பிடிக்கும் தீவிரத்தில் இருந்தவளுக்கு இவையெல்லாம் அவள் கருத்தில் பதியவில்லை என்பது உண்மை..
கருவுற்றத்தை உணராது அதை தவர விட்ட தன் மீது கட்டுக்கடங்காத கோபம் வந்தது அவளுக்கு. ஆரோன் ஆசைப்படி உருவான குழந்தையை காப்பாற்ற வக்கிலாமல் போய்விட்டத்தை எண்ணி தனக்குள்ளே உருகி மறித்து போனாள் பெண்ணவள்.
கரு கலைந்து போனதற்கு முழுக்காரணம் தான் என்று முழு பழியையும் ஏற்றுக் கொண்டாள். அதற்கு தண்டனை மனசாட்சியிடம் கேட்டு மன்றாகி கொண்டிருந்த வேளையில் தான் அவளது டீம் உள்ளே நுழைந்தது.
ஜெஸி கண் விழித்ததை செவிலியர் மூலம் அறிந்த கொண்டவர்கள் அவளை பார்க்க உள்ளே வந்தனர்.
நால்வரும் உள்ளே நுழைய தயங்கி தயங்கி தனியாக வந்த துருவன் ஓரமாக ஒதுங்கி அவள் முகம் பார்த்தான். கண்களை மறைத்திருந்தாலும் கன்னத்திலிருந்த கண்ணீர் கோடுகள் சொன்னது அவள் அழுகிறாள் என்பதை.
அவளது ஒவ்வொரு துளி கண்ணீரும் தன்னால் தனது அசட்டுத் தனத்தால் வந்த விளைவு என்று நினைக்கவே உள்ளம் சுட்டது . உள்ளுக்குள் ஒரு உயிரைக் கொன்று விட்டதாக நினைத்து நொறுங்கிப் போயிருந்தான்.
அவர்கள் வந்தும் அதே நிலையில் இருந்தவளை எண்ணி வருந்தியவர்கள் வேறு வழியின்றி அழைத்தார்கள்.
“மேம்…”என்று தன்யா அழைக்க அவர்கள் பின்னே மூவரும் நின்றனர்.
லேசாக கைகளை விலகி மூவரையும் பார்த்தாள். அவர்கள் முன் அழக் கூடாது என்று நினைத்து தன்னை கட்டுப்படுத்த முயன்றாள். ஆனாலும் முடியாமல் போனது.
“உள்ளுக்குள்ள வச்சி புழுங்காதீங்க மேம் அழுதிடுங்க ப்ளீஸ்… நாங்க தானே இருக்கோம் எங்க எல்லாரையும் கூட பிறந்தவங்களா நினைச்சி அழுதுடுங்க மேம்” என்று சொன்னது தான் தாமதம் மடையை திறந்த வெள்ளம் போல ஓவென கத்தி அழுதாள்.
அங்கிருக்க ஆறு பேரின் மனமும் கணத்தது. அவளது அழுகையில் உரைந்து போய் நின்றான் துருவன்.
தன்யாவின் வயிற்றில் முகத்தை புதைத்தவள்”நானே என் குழந்தைய கொன்னிட்டேன் தன்யா. குழந்தை உருவானது கூட தெரியாம இருந்து என் குழந்தைய தவர விட்டுட்டேனே… ஆரோன் ஆசைப்பட்டு எதிர்பார்த்த குழந்தைய நானே கொன்னிட்டேனே” என்று அந்த அறையே அதிர கத்தி அழுத்தாள்.
அவளை சமாதானம் செய்ய வழித்தெறியாமல் போக, இதற்கு எல்லாம் காரணமான துருவன் மீது அத்தனை கோபமும் பாய்ந்தது மூவருக்கும்.
“மேம்… நீங்க இதுக்கு காரணமே இல்ல. இதுக்கெல்லாம் காரணம் இவன் தான் மேம். இவனால தான் இப்படி ஆச்சி. நீங்க சொல்லுங்க இவனை இப்பவே இங்கயே அடிச்சி கொன்னுடுறேன்… “என்று அவன்மீது பாயப் போனான் ரவி .
‘என்ன வேணாலும் செய்துக் கொள்’ என்று சிலைபோல நின்றாலும் தான் செய்த செயலுக்கு உண்மையாகவே வருந்திக் கொண்டு தான் நின்றிருந்தான்.
அவள் கழுத்தை பிடிக்க இருந்த நேரத்தில் அவளது குரல் ரவியை தடுத்தது. “வேணா ரவி, துருவ்வுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. என் குழந்தைய இழந்ததுக்கு நான் தான் காரணம். நான் மட்டும் தான் காரணம். இதுல நான் யாரையும் பிலேம் பண்ண மாட்டேன் ரவி. அவனை எதுவும் செய்யாத” என்று அழுத்தமாகக் கூற எல்லாரும் அதிர்ந்தார்கள்.
துருவன் அவளையே வெறித்து பார்த்தான்.
“ஏன் மேம் அவன் மேல் இருக்கற பழிய உங்க மேல தூக்கிப் போட்டுகிறீங்க… இது சதி மேம் முழுக்க முழுக்க இவன் செய்த சதி. இவன் மட்டும் தான் காரணம். அட்லீஸ்ட் போலீஸ் கிட்டயாவது கம்பளைண்ட் கொடுங்க மேம் உள்ள போய் சாவட்டும் இந்த நாய்.”என்று அசோக் பல்லைக் கடித்தான்.
துருவனோ செய்த தவறுக்காக தண்டனைகளை அனுபவிக்க முழுமனதோடு நின்றான்.
“ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க எனக்கு அபார்சன் ஆனதுக்கு அவன் எந்த விதத்தில காரணம் இல்ல. என்னை பத்தி அவனுக்கு எதுவுமே தெரியாது. எனக்கு மேரேஜ் ஆனது, ஆரோன் இறந்து போனது, எனக்கு ஒரு புள்ள இருக்கறது எதுவுமே அவனுக்கு தெரியாது. ஏதோ விளையாட்டு தனமா என்னை பழிவாங்க அப்படி பண்ணிட்டான்.
நான் கர்ப்பமா இருக்கிற விஷயம் எனக்கே தெரியாம இருக்கும் போது அவனுக்கு எப்படி தெரியும் நான் ப்ரெக்னன்ட் இருக்கேன்றது.
தெரிஞ்சிருந்தால் கண்டிப்பா அதை செய்திருக்க மாட்டான்.
ப்ளீஸ் இந்த பிரச்சினைய இத்தோட விட்டுடுங்க. யார் மேலையும் பழிய போட வேணாம்… அப்றம் காய்ஸ் இது யாருக்கும் தெரியக் கூடாது. முக்கியமா என் பேமிலிக்கும் எட்வர்டுக்கும் தெரிய கூடாது ஓகே”எனவும் நால்வரும் சரியென்றனர்.
“எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும் தன்யா”என்று கண்களை மூடி பின்னாடி சாய்ந்து கொண்டாள். தன்யாவின் விழி அசைவில் மூவரும் செல்ல அவளும் அவர்கள் பின் சென்றாள்.
துருவ் மட்டும் செல்லாமல் அவளை நெருங்கி அமர்ந்தவன். டிரீப்ஸ் ஏறிக் கொண்ட அவளது கரத்தை பற்றி அமர்ந்தான்.
சட்டென விழி திறந்து அவனை பார்த்தாள்.” ஜெஸி ! நீங்க சொன்ன அத்தனையும் உண்மைதான். உங்களை பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது. உங்களுக்கு மேரேஜ் ஆனது, உங்க ஹஸ்பண்ட் இறந்தது நீங்க ப்ரெக்னன்ட் இருந்தது எதுவுமே தெரியாது.
நீங்க என் கிட்ட சொல்லாம லீவ் போட்ட கோபத்துலே தான் இப்படி பண்ணிட்டேன். ஆனா நீங்க ப்ரெக்னன்ட் இருக்கீங்கனு தெரிஞ்சா,பிராமிஸா இப்படி செய்திருக்க மாட்டேன் ஜெஸி.
ஒரு லேடி எனக்கு படிகார்ட்டா இருக்கான்ற காழ்புணர்ச்சியில் இப்படி செய்துட்டேன்… நான் போட்ட திட்டத்தில எல்லாம் நீங்க ஜெயிச்சிட்டே இருக்கீங்கன்ற ஆத்திரம் வேற, என்னை இப்படி செய்ய வச்சது. ரியலி ஸாரி ஜெஸி. நீங்க பெருந்தன்மையா, ‘நான் மட்டும் தான் காரணம் சொன்னாலும்’ உங்க குழந்தைய கொன்னது நான் தான். சின்ன மன்னிப்பு கேட்கறதுனால உங்க பெரிய வலி ஆறிடாது தான். ஆனா அதை தவிர வேறு எனக்கு என்ன சொல்றது தெரியல.
ஆரம்பித்திலே இருந்தே உங்களுக்கு நான் ட்ரபில் தான் கொடுத்துட்டு இருக்கேன்.. ஸாரி இனி என்னால உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. நானே போய் அம்மா கிட்ட நீங்க வேணாம்னு சொல்லிடுறேன். நீங்க ஜெயிச்சிட்டீங்க, நான் தோத்துட்டேன். ப்ளீஸ் என்னை எப்பாவது மன்னிக்கணும் தோணுச்சினா மன்னிச்சிடுங்க. நீங்க நாளையிலிருந்து வீட்டுக்கு வர வேணாம்… நான் அம்மா கிட்ட பேசிக்கிறேன்”என்று விழிகளை துடைத்துக் கொண்டு வாசலை நோக்கி சென்றவனை வார்த்தையால் தடுத்தாள்.
“எனக்கு உன்னோட பாடிகார்ட்டா வேலைப்பார்க்க எந்த அப்ஜக்சனும் இல்ல… உனக்கு நான் உன்னோட பாடிகார்ட் இருக்கறது பிடிக்கலேனா போய் தரலாமா சொல்லு”என்று வாசலை காமித்தாள்.
தன்னால் அவள் கஷ்டப்படக்கூடாது என்று மனமின்றி அப்படி சொன்னானே தவிர, அவனால் அவளைப் பார்க்காமல் இருக்க முடியாது என்பதே உண்மை.
கண்ணைத் துடைத்தவன் அவள் முன் கை நீட்டி “பிரண்ட்ஸ்??”என்றான். அவன் கையையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“நீங்க என் கூட இருந்தால், ஒரு தனி தைரியம் எனக்குள்ள வருது. உங்களை பார்த்து நான் மோட்டிவெட் ஆயிப்பேன்.
ப்ளீஸ் என் கூடவே பாடிகார்ட்டா இல்லாம நல்ல பிரண்டா இருப்பீங்களா???…”என்றிட அவன் கண்களில் வழிந்த உண்மையை கண்டவள், அவன் கையில் தன் கையை வைத்து அவனது நட்பை ஏற்றாள். இருவரும் கையை குலுக்கிக் கொண்டனர்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
2
+1
+1
