Loading

நடுப்பகலைக் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் தான் அறையிலிருந்து கீழே இறங்கி வந்தான் துருவன். அவனது அறைக் கதவை திறந்ததும் ஸ்ரீயும் அசோக்கும் காலை வணக்கம் வைத்தனர். அவனும் வெறும் கையை மட்டும் அசைத்து விட்டு கீழே இறங்கினான்.

“என்ன வாழ்க்கை டா !” என ஸ்ரீ  போகும் துருவனை பார்த்து அங்கலாய்த்து சொன்னவன்”என்ன வாழ்க்கை டா !”என்று தன்னை காட்டிச் சலிப்பாகச் சொன்னான்.

அதை கேட்டு சிரித்த அசோக்” வசனம்  ஒன்னு தான். ஆனா அதுக்கூட பணக்காரனுக்கும் ஏழைக்கும் தகுந்த மாதிரி மாடுலேஷன மாறி போகுது பாரேன் என்னத்த சொல்ல”என்று புலம்பினான்.

கீழே இறங்கி வந்தவன்”ராதாம்மா ! ஒரு கிரீன் டீ “என குரலை உயர்த்தி அவருக்கு கேட்கும் படி கத்திவிட்டு, மேசையில் இருந்த ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியை உயிர்பித்தான்.

அதில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலிருந்து ஹோசன்னா பாடல் ஒலித்தது. அப்பாடலில் வரும் த்ரிஷாவை கண்டதும், ஜெஸியின் எண்ணம் வர அமர்ந்த இடத்திலே அவளை  தேட ஆரம்பித்தான்.

ராதா க்ரீன் டீயுடன் வந்தவர் மகன் யாரையோ தேடுவதை கண்டு புருவம் சுருக்கினார்.

அவரை கவனிக்காது அவன் தேடுதலை தொடர, வாய்விட்டே கேட்டு விட்டார்.

“துருவ் யாரை தேடுற???”

ராதாவின் குரல் கேட்டதும் திரும்பினான். அவனுக்கு எதிரே வந்து நின்ற அவரை கண்டவன், அவர் கையில் இருந்த டீயை வாங்கிக் கொண்டு, மீண்டும் ஒரு முறை வீட்டை விழிகளால் அலசினான்.

“யார்ப்பா தேடுற??? சொன்னால் அவங்க இருக்காங்களா?? இல்லையானு?? எனக்கு தெரிஞ்சத சொல்வேன்ல” என்றவரை பார்த்து சிரித்தவன்,

“வேற யார தேட போறேன். எல்லாம் என் சீஃப் பாடிகார்ட் மிஸ் ஜெஸிய தான். இந்நேரம் இங்க இல்லாமல் எங்க போனாங்க…??”

“ஜெஸி பொண்ணா, அது இன்னைக்கி வராதுனு அக்கா சொன்னாங்கலே உன்கிட்டயையும் சொல்ல சொன்னாங்க. ஏதோ அந்தப் பொண்ணுக்கு முக்கியமான வேலையாம். இன்னைக்கி வர்றாதாம். நீ வெளிய போறதாக இருந்தால் இருக்கற பாடிகார்ட்ஸ் துணைக்கு கூட்டிட்டு போயிட்டு வந்திடுவீயாம்… அக்கா உன் கிட்ட இதையும் சொல்ல சொன்னாங்க”ராதா, வீரமதி சொன்னத்தை அவனிடம் ஒப்பித்தார்.

“லீவு போடணும்னா என் கிட்ட தான சொல்லணும். ஏன் அம்மா கிட்ட சொல்லிட்டு லீவு போட்டிருக்கா??? அவ எனக்கு பாடிகார்ட்டா  இல்ல என் அம்மாவுக்கா. நான்சென்ஸ்… வர வர ஒரு பாடிகார்ட் கூட என்னை இங்க மதிக்கிறது கிடையாது…”கோபமாக பேசியவனை கண்டு சிரித்த ராதா.

“செல்லம் ! அந்த பொண்ணு  நேத்தே அக்கா கிட்ட சொல்லும் போது உன் கிட்டயும் சொல்லவானு கேட்டுச்சு. அக்கா தான் வேணாம், நான் சொல்லிக்கிறேன் சொல்லிட்டாங்க… பாவம் அந்தப் பொண்ணு நாள் முழுக்க உன் கூட தான இருக்காள். முக்கியமான வேலையா இருக்கும்  லீவு போட்டிருக்கும் இதுக்கெல்லாம் ஸ்ட்ரிக்ட்டான முதலாளிய போலயா கோபப்படுறது”என்று அவன் தலையை களைத்து விட்டு சென்றார்.

ஆனால் அவனால் தான் அதை ஏற்றுக் கொள்ள முடிவில்லை… ‘ எப்படி லீவு போடலாம்? ஏன் எங்கிட்ட சொல்லாம லீவு போட்டாள்? அவளை…’ என்று பல்லை கடித்தவனுக்கு. அந்த கூடம் முழுதும் நின்று அவனை பார்த்து அவள் சிரிப்பது போல இருந்தது. மூச்சு முட்டியது அவ்விடம்  விட்டு வெளியே வந்தான்.

ஒருவாரம் அவளுடன் இருந்த நாட்களில்  அவளது அருகாமை அவனுக்கு பழகி பிடித்துப் போக ! சட்டென முடிந்த அந்த ஐந்து நாட்கள் நீடிக்காதோ’ என்று ஏறிங்கினான்.

இன்று அவள் விடுமுறை எடுத்துக் கொண்டதில் மேலும் அவனது ஏக்கம் கூடியது.  புல்வெளியில் நடந்தான். ஆனாலும் அவளைப் பற்றிய நினைப்பு மலர்ந்து கொண்டே இருந்தது.’ அவள் வராததற்கு காரணத்தை அறிந்து கொள்ள மூளை குறுகுறுக்க, அவன் எதிரில் தன்யா தோன்றினாள்.

தன்யாவை கண்டதும் அவள் அருகே சென்று “உங்க சீனியர் மேம் எங்க போயிருக்காங்க??? ஏன் லீவ் ?”என உள்ளிருக்கும் தவிப்பை காட்டாது வழக்கமான முக பாவனையுடன் கேட்டான்.

“தெரியல சார். சம் பெர்சனல் வர்க்கா இருக்கலாம் “என்று முடித்துக் கொண்டாள்.

“அதென்ன பெர்சனல் வர்க்?”என்று மீண்டும் கேட்டான்.

இந்த முறை அவளிடமிருந்து பதில் வரவில்லை. தோளை மட்டும் குலுக்கி விட்டு ‘ தெரியாது ‘ என்பது போல அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

அதே கேள்வியை மீண்டும் ரவியிடம் கேட்டான். அதே பதில் அதே அமைதி. கடுப்புடன் அங்கிருந்து அறைக்கு வந்தான்.

அங்கே நின்ற இருவரையும் கண்ட பின் அவர்களிடமும் கேட்டான்.

அதே பதிலைச் சொல்ல. அவனுக்கு உச்சி முதல் பாதம் வரை கோபம் ஜிவ்வென்று ஏறியது.

“அடேய் நீங்க  மாறவே மாட்டீங்களாடா? சொல்லி வச்ச மாதிரி ஒரே பதிலை சொல்லிட்டே இருக்கீங்க… ஏன் உங்க மேம் எங்க போயிருக்காங்க உங்களுக்கு தெரியாதாக்கும்? இல்ல சொல்லக் கூடாதுனு சொல்லிட்டு போயிருக்காங்களா??”என சீற்றமாக அவன் கேட்க,  அதற்கும் அவர்கள் அமைதியாக நின்றார்கள்.

“ச்ச… “என உள்ளே சென்று கதவை அடைத்தவனுக்கு பைத்தியம் பிடிக்காத குறையாக தான் இருந்தது.

“துருவா ! வாட் ஹாப்பண்ட் டூ யூ? ஃபைவ் டேஸ் கூட இருந்த போது நல்லா தானே இருந்த  இப்போ மட்டும் என்ன உனக்கு? இப்படி ஒரே நாள்ல அவளை மிஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீயே டா துருவா ! அப்படி என்ன பண்ணிட்டா உன்னை?”என கண்ணாடி வழியே தன் பிம்பத்தை பார்த்து கேட்டவனுக்கு, எதையோ இழந்த உணர்வு தான், முழுதாய் ஆட்டிப் படைத்தது.  அறை முழுவதும் சுற்றித்திருந்தான். தலைகீழாக சுவரில் சாய்ந்து  நின்றான். யோகா செய்தான்.ம்கூம் எந்த பயனும் இல்லை.

‘அவ ஏன் வரல?? அப்படி என்ன பெர்சனல் வேலை? ஐ வான்ட் டூ னோ தி ரீசன்”என்று தனக்கு தானே கேட்டு அடம்பிடித்தவன் அவளை பார்க்க வேண்டும் என்ற ஆசை  எழ, எப்படி அவளை வர வைப்பதென்று  யோசித்தவன். சட்டென அரத பழசான திட்டம் ஒன்று மூளையில்  உதிக்க, வேகமாக குளியலறைக்கு புகுந்து பத்து நிமிடத்தில் வெளியே  தயாராகி வந்தான்.

பட்டென  கதவை திறந்து புயல் போல வந்தவனைக் கண்டு அதிர்ந்தனர். அவர்கள் அதிர்ந்ததை பொருட்படுத்தாது “நான்  மால் போறேன்”என்று யாருக்கோ சொல்லிக் கொண்டு  கீழே இறங்க அவசரமாக அவன் பின்னே இறங்கினார்கள்.

ராதா அவனை சாப்பிட அழைக்க, மறுத்து விட்டு வெளியே சென்றான். அவனுடன் நால்வரும் தொற்றிக் கொண்டனர். முகத்தை கடுமையாக வைத்திருந்தான்.

ஐவருமாக மாலுக்குள் நுழைந்தனர். படம் பார்க்க போவதாகச் சொல்லி அவர்கள் நால்வரையும் உடன் அழைத்து சென்றான். அது ஒரு ஆங்கிலப் படம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. ரவி படம் பார்த்தாலும் துருவனின் மேல் கண்ணு வைத்திருந்தான்.

அவன் பார்வை தன் மேல் இருப்பதையும் கண்டு கொண்டவன் வில்லங்கச் சிரிப்போடு திரையில் கண்ணை பதித்தான்.

நால்வரின் கவனமும் படத்தில் இருப்பதை உணர்ந்தவன், ரவிடம் ‘ஒரு கால்… பேசிட்டு வர்றேன்’ என்று சொல்லிக் கொண்டு எழுந்தான். ரவி வருவதாகச் சொல்லி எழ, அவனை தடுத்து படம் பார்க்கச் சொல்லிவிட்டு வெளியே வந்தவன், தன் திட்டத்தை செயல் படுத்த தொடங்கினான்.

அருகே இருந்த கேம் சென்டருக்குள் நுழைந்தவன், துப்பாக்கி சுடும் விளையாட்டு அருகே சென்று பொம்மை துப்பாக்கியை தூக்கி சுட ஆரம்பிக்க அருகே திரையிலும் சவுண்ட் சிஸ்டத்தினாலும் துப்பாக்கி சுடும் சத்தம் உண்மையான சத்தத்தை போல கேட்டது. அதான் தனக்கு வேண்டும் என்று எண்ணியவன் ஜெஸிக்கு அழைத்து  தன்னை கஷ்டடியில் வைத்திருப்பதாகவும் காப்பாத்துமாறு நாடகம் போட்டவன்,”அவள் வரேன்”என்று சொன்ன பின் தான் போனை வைத்தான்.

அவசரத்தில் அவளது மூளை செயல் படாமல் போனது. எதையும் யோசிக்காமல் அடுத்த  இருபது  நிமிடத்தில்  படப்படப்புடன் வந்து சேர்ந்தவளை கண்டு உலைக்கணலாக கொதித்திருந்த மனம் அடங்கிப் போனது.

துப்பாக்கிக் குறி வழியே, சோலைகளை சேலையில் அதக்கி, புடவையணிந்த பூந்தோட்டமாக வந்தவளை கண்டு ஒரு நிமடம் அனைத்தையும் மறந்து போனான். வாயை பிளந்து அவளது அழகைப் பார்த்தான்.

பின் தன்னை சுதாரித்துக் கொண்டு நக்கல் சிரிப்புடன் அனைத்தும் தன் நடிப்பென அவளிடம் சொல்லாமல் சொல்ல, கோபத்தில் அவனை அடிக்க ஓங்கிய கையை மடக்கி தன் அணைப்புகள் அவளை கொண்டு வந்தவன்,”நாட் பேட் டுவென்டி மினிட்ஸ்ல வந்து சேர்ந்துட்டீயே ! பரவாயில்லை எனக்கு  ஒண்ணுனதும் துடிச்சி வேகமாக வந்தத பார்த்ததும் மனசுல குற்றாள சாரலே அடிக்கிது ஜெஸி…”என்று காதுக்குள் கிசுகிசுத்தான்.

ஓடிவந்த பதட்டமும் படப்படப்பினாலும் கண்ணை கட்டுக் கொண்டு வந்தது அவளுக்கு அவன் கை வளைவுக்குள்ளே மயங்கிச் சரிந்தாள்.

அவள் மயங்கியதில் பதட்டம் அடைந்தவன், அவள் கன்னத்தைத் தட்டி எழுப்ப காலுக்கடியில் இரத்தம் வருவதை கண்டு ” ஜெஸி” என அலறி விட்டான்.

வேகமாக தன் ட்ரைவருக்கு அழைத்தவன், காரை தயாராக வைக்க சொல்லி விட்டு அவளை ஏந்திக் கொண்டு விரைந்தான். கார் தயாராக இருக்க அவளை படுக்க வைத்து தானும் உடன் அமர்ந்து வண்டியை எடுக்கச் சொன்னான்.

“ஜெஸி ஜெஸி…”என அவளை தட்டி எழுப்பிக் கொண்டே இருந்தான். கை, காலிலிருந்து வரும் ரத்தத்தை தடுத்து நிறுத்தலாம் கால் வழியே வரும்  உதிரத்தை தடுக்க முடியவில்லை. பார்க்க பார்க்க தன் மீதே கோபம் வந்தது.

“அண்ணா கொஞ்சம் சீக்கிரமாக போங்க…”என்றான். அவனது செல் அலறியது.  ரவி தான். எடுத்து காதில் வைத்தவன், அவனிடம் அனைத்தையும் சொல்லி மருத்துவமனையின் பெயரையும் சொல்லி வரச் சொன்னான்., அவர்களும் அடித்து பிடித்து அங்கிருந்து மருத்துவமனைக்கு  விரைந்தார்கள்.

அவளுக்கு உள்ளே சிகிச்சை அளிக்க வெளியே பதற்றத்தோடு அமர்ந்திருந்தான்.

அவனது ஆடையிலும் இரத்தம் இருக்க, அதை தொட்டுப் பார்த்தான். கண்களில் கண்ணீர் கடல் சூழ, தன்னை வெறுத்த படி  உட்கார்ந்திருந்தான்.

விளையாட்டாகச் செய்த ஒன்று வினையானது. அவளை வெறுப்பேத்த அவளைப் பதற வைக்க,  சீண்ட  தான் இவ்வாறு செய்தான். ஆனால் அவளை உடலளவில் நோக அடிக்க என்றுமே எண்ணியதில்லை அவன். ஆனாலும் மாறாக அனைத்தும் நிகழ பரிதவித்து போனான்.

கண்களை மூடி கைகளில் முகத்தை புதைத்திருந்தான். மருத்துவர் வெளியே வர, வேகமாக அவர் அருகே வந்தான்.

“டாக்டர் அவங்களுக்கு  என்னாச்சி???” பதற்றமாக வினவினான்.

“நீங்க அவங்க ஹஸ்பண்டா?” என்றதும் மிடறு விழுங்கியவன்,”இல்ல பிரண்ட் “என்றான்.

“அவங்களுக்கு அபார்சன் ஆயிடுச்சி… உள்ள அவங்களுக்கு ட்ரீட்மெனட்  போயிட்டு இருக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க”என்று சென்று விட , ஒரு நிமிடம் அனைத்தும் இயங்க மறுத்தது அவனுக்கு.

“அபார்சன்”என்ற வார்த்தை இதயத்தை சிதற வைத்தது. பித்து பிடித்தது போல நின்றவனை  கோபமாக வந்து அவன் சட்டையை பிடித்து தூக்கி அவனை அறைந்திருந்தான் ரவி.

அவன் எதுவும் சொல்லவில்லை. ‘இந்த  அறை தனக்கு தேவை தான் ‘என்று சிலையாக நின்றான். மேலும் இரண்டு அடி அடித்தவனை தடுத்தனர் ஸ்ரீயும் அசோக்கும். அவர்களிடம் இருந்து திமிறியவன் அவனது சட்டையை மீண்டும் பற்றி,

“எங்க மேடம என்னடா பண்ண??? ஏன்டா அவங்களை ஹாஸ்பிட்டலுக்கு  கூட்டிட்டு வந்த?? சொல்லுடா சொல்லு” சட்டையைப் பிடித்து உலுக்கினான்.

பதில் வரவில்லை கண்ணீர் தான் வந்தது கண்ணீரை வடித்துக் கொண்டு அமைதியாக  நின்றான் துருவன்.

“சொல்லித் தொலைடா ! இல்ல  உன்னை கொன்னுடுவேன்” நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து கோபத்தில் கத்தினான்.

அவனிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த ஸ்ரீ”அமைதியா இரு ரவி. இது ஹாஸ்பிட்டல் ! முன் கோபத்தால கண்டதையும் செஞ்சு தொலைக்காத அமைதியா இருடா ! “என்று அடக்கினான்.

“மேடமுக்கு மட்டும் ஏதாவது ஆச்சி. இவன் சாவு  என் கையில்ல தான் டா” என்று அடங்காமல் கத்த, அவனை ஸ்ரீ, அசோக் அடக்கப் படும்பாடு பட்டனர்.

அவனது  கோபத்தை கண்டு விட்டு அருகே நின்ற தன்யாவிடம் ” உங்க மேடம் மேரீடா???”என கேட்டான்.

“ம்ம்.. ஆமா ஆனா… மூணு மாசத்துக்கு முன்னாடி தான் அவர் இறந்து போனார். உங்க அப்பா கூட  இறந்து போன பாடிகார்ட் ஆரோனோட ஒயிஃப் தான் ஜெஸி மேம் “என்று சொல்லி அவன் தலையில் இடியை இறக்கினாள்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்