
தான் பெற்ற முழு ஒளியை இரவிற்கு இரவல் தந்து தனக்கென கிடைத்த ஏகாந்தத்தை சுகித்து கொண்டிருந்தாள் வெண்மதியாள்.
மகன் உளறி கொட்டும் கதையை எல்லாம் அதிசயம் போல ‘ அப்படியா ! ஒ… ! ஆஹா ‘ என வியந்து அவனை மேலும்மேலும் பேசத் தூண்டும் விதமாக உற்சாக மூட்டினாள். அவனும் வாயில் அதக்கிய உணவை கொஞ்சம் கொஞ்சமாக உண்ட படி கையை அசைத்து கதை பேச பெண்ணவளுக்கு தெரிந்தும் தெரியாத பல கதையை கற்பனையாக்கி அவளுக்கு வார்த்துக் கொண்டிருந்தான்.
கணவன் சென்ற பின் ‘எனக்கு எதற்கு இந்தக் வாழ்க்கை தானும் அவனுடன் செல்ல வேண்டும்’ என்று முடிவெடுத்தவள் ஒரு கணம் மறந்து போனாள், தங்களின் இரு உயிர் அடங்கிய பொக்கிஷ ஊணை (மகனை). அவனை கண்டதும் தலையில் அடித்துக் கொண்டு அழுதவள். அவனை வாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
‘என்ன காரியம் செய்ய துணித்தேன்… என்னை போல இவனையும் அனாதை ஆக்கிட துணிந்தேனே !’ தன்னை தானே திட்ட ஆரம்பித்தவள். ஒரு முடிவாக அந்தச் சிந்தனையை எல்லாம் துடைத்தெடுத்தாள். தான் வாழ தனக்கு கிடைத்த பிடிமானம் இவன்( டென்னிஸ்). அவன் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும் என்றே மந்திரமாக தனக்குள் சொல்லிக் கொண்டு வாழ்கிறாள் பெண்ணவள்.
“மா… நாளைக்கி நீ வேலைக்கி போகக் கூடாது, என் கூடத்தான் இருக்கணும் ” என ஒற்றை விரலை உயர்த்தி செல்லமாக மிரட்டினான் குட்டி ஆரோன்.
“டென்னிஸ் குட்டி, அம்மா நாளைக்கி முழுக்க உங்க கூடத்தான் இருப்பேன். எங்கயும் போக மாட்டேன். நாளைக்கு முழுக்க நீயும் நானும் மட்டும் ஜாலியா சுத்துவோம். என் டென்னிஸ்க்கு பிடிச்ச இடத்துக்கெல்லாம் போறோம் “என உற்சாகமூட்ட, குதூகலித்தவன் உணவோடு சேர்ந்து அவள் கன்னத்தை எச்சில் செய்தான். அவனது சந்தோஷத்தை தனதாக்கி கொண்டு மகிழ்ந்தாள்.
நாளையோடு அவன் பிறந்து ஐந்தாண்டுகளாயின. நாளை ஒரு நாள் மகனின் ஆசைப்படி அவனோடு மட்டுமே இருக்க முடிவு செய்தவள். வீரமதியிடம் விஷயத்தை சொன்னாள்.
முதலாளி அல்லாது தாயாக அவளுக்கு விடுமுறை வழங்கியத்தோடு டென்னிஸை பேரனாக நினைத்து அவனுக்கு என ஒரு பெரிய விளையாட்டு பொருளை ஜெஸி மறுக்க மறுக்க கையில் திணித்தார்.
“ஆரோன் எனக்கும் பையன் தான் ஜெஸி. அதுனால என்னை கிராண்ட்மாவா நினைச்சு இதை என் கிராண்ட் சன்னுக்கு கொடுக்கிறேன் வாங்கிக்கோ ” என்று நீட்ட, அவரிடம் வாங்க அவள் மனமேனோ தயங்கியது .
‘ஆரோனை கொன்னவள், மேலும் நிவாஸ், ஷர்மியை அடைத்து வைத்து கொடுமை செய்யும் கொடுமைக்காரி கொலைகாரி’ என வீரமதிக்கு பல முத்திரைகளை குத்தி வைத்திருக்கிறாள் ஜெஸி. ‘கொலைக்காரிடம் இதை வாங்குவதா???’என்ற யோசனையை கலைத்த வீரமதி அவள் கையில் திணித்திருந்தார்.
“நாளைக்கி மகனோட சந்தோசமா இரு !”என்றார் உற்சாக குரலில். ஆனால் குரலில் மட்டுமே உற்சாகம் இருந்தது. கண்களில் குற்றவுணர்ச்சியே தேக்கி இருந்தது. அதை அவள் கவனிக்க தவறவில்லை. ஆனாலும் எதுவும் தெரியாதது போல இருந்துக்கொண்டாள்.
“ரொம்ப நன்றி மேம். ஆனா துருவ்வ்வ்…”என இழுக்க, அவள் தோளில் கைவைத்தவர், “எனக்கு என் மகன் எப்படி முக்கியமோ, அதைவிட உன் புள்ளைக்கு நீ ரொம்ப முக்கியம். நாள் முழுக்க என் மகனோட தான இருக்க, ஒரு நாள் உன் புள்ளையோட இரு ! அவன நான் பார்த்துகிறேன். அதான் நாலு பாடிகார்ட்ஸ் இருக்காங்களே போதும்” என்றிட , சிறு மூரலோடு விடைபெற்றாள்.
அவன் வைத்து விளையாடும் பொம்மையை கண்டதும் அவள் மனதுக்குள் ஓடியது வீரமதியின் உரையாடல்கள்.
அவர் கொடுத்த பொம்மையை தூக்கி எறிய தான் தோன்றியது. ஏதோ நினைவில் வீட்டுக்கு கொண்டு வந்திட டென்னிஸ் அதை பார்த்து அதனை தன்னோடு வைத்து கொண்டான்.
அவன் உண்டு முடிக்க, அவனை மெத்தையில் கிடத்தி, தானும் அவனருகில் படுத்து அவன் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் தந்தவள், அவனை எப்படியோ உறங்க வைத்துவிட்டாள்.
அவனது தலையை கோதியப்படி கணவனின் புகைப்படத்தைப் பார்த்தாள். அதே வசீகர சிரிப்பு. மெத்தையில் மகனை விட்டு எழுந்தவள் கணவனின் புகைப்படத்தின் முன் வந்து நின்றாள்.
“ஆரோ ! நாளைக்கு நம்ம டென்னிஸ் பிறந்த நாள் மறந்துட்டீயா??? உன் பிராமிஸ் என்னாச்சி? அவனோட பர்ஸ்ட் பெர்த்தேடே அப்ப என்ன சொன்ன?? நியாபகம் இருக்கா???”
பதில் வராது என்று தெரிந்தும் அவனிடம் கண்ணீருடன் கேட்டாள். அன்றைய நாளில் அவன் சொன்ன பதில் காதில் ஒலித்தது.
“என் மகனோட ஐம்பதாவது பிறந்தநாளை கூட நான், அவன் முதல் பிறந்த நாளை போல கொண்டாடுவேன். என்னோட தள்ளாடற வயசுல கூட அவனுக்கு நான் தான் கேக்கு ஊட்டிவிடுவேன்” என்றவன் ஐந்தாவது பிறந்த நாளில் கூட இல்லாமல் போனதை ஏற்றுக் கொள்ளவோ தாங்கிக் கொள்வோ அவளால் முடியவில்லை.
அவனிறப்பு இயற்கை என்றாலும் மனதை தேற்றிக் கொண்டிருப்பாளோ என்னவோ ! ஆனால் அது ‘ திட்டமிட்ட கொலை ‘ என்று ஆணித்தரமாக நம்பிக் கொண்டிருக்கிறாள். அதனாலே அவள் நெஞ்சில் வலியும் வெறியும் உண்டாகிருந்தன.
வீரமதி தான் மினிஸ்ட்ரையும் தன் கணவனை கொன்றிருக்கிறார் என தெரிந்து கொண்டாலும், அவர் தான் கொலை செய்தார் என்று நிரூபிக்க போதீய ஆதாரங்கள் இல்லையே ! அவர் கொலை செய்ய காரணத்தை அறிய வழி அவளுக்கு தெரியவுமில்லை. செல்ல வேண்டிய இடமறிந்தும் வழி அறியாது போக, திக்கு தெரியாத காட்டில் விட்டது போல எந்த திசையில் சென்றால், தன் இலக்கு வருமென்று குழம்பி தவித்தாள்.
“ஆரோ ! உன்னை கொன்னது அந்த வீரமதி தான் அவங்க வாயால ஒத்துக்கிட்டாங்க. ஆனா ஏன்? ஏன் உன்னை கொன்னாங்க சொல்லுடா ? எதுக்கு உன்னை கொல்லணும்?? ஏன் நீ அவங்க பேரையும் பிரகதீஸ்வரன் பேரையும் சொன்ன? யார் அந்த வாசன் அவன் பேரையும் ஏன் சொன்ன??? இவங்க மூணு பேர்ல யார் உன்னை கொன்னது?, உன்னை எதுக்காக கொல்லணும் சிரிக்காம சொல்லுடா !”அவன் எதிரே இருந்தால் சட்டையை பிடித்து உலுக்கி எடுத்திருப்பாள் போலும். பதிலின்றி போக சத்தமின்றி அழுதாள்.
அவள் கண்ணீர் கரையை தாண்டியது. ஆனால் துடைக்க அவன் கைகள் வரவில்லை.
முகத்தை மூடி மண்டியிட்டு அழுதாள் ஜெஸி. அவளது தோளை தொட்டது வலிய கரம், கைகளை விலகிப் பார்த்தாள் ஆரோன் தான் சிரிப்புடன் நின்றிருந்தான்.
அவன் கைகள் நீட்ட, அவன் கையில் தன் கையை வைத்தாள். அவளை இழுத்து தன் கைவளைவுக்குள் வைத்துக் கொண்டான். அவளை மெத்தையில் அமர வைத்து தானும் அமர்ந்தவன், அவள் கண்ணீரை துடைத்து விட்டு.
“என் வெறப்பு வேலாயி ! ஏன்டி அழற ??நான் உன்னை விட்டு போன மாதிரி ஏன் கதற? உன் கூட , உனக்குள்ள தான்டி இருக்கேன். இங்க தான் இருக்கேன்”என்று அவள் நெஞ்சை குத்திக் காமித்தான்.
“அழாதடி என் அலமேலு ! ரொம்ப குழம்பி போயிருக்க, அதான் உன்னால் எதுவும் கண்டு பிடிக்க முடியல… குழம்பி போன குட்டையில நீ தேடினாலும் மீன் கிடைக்காது. தெளிந்த நீர்ல நீ தேடுறதையும் தான்டி எல்லாம் கிடைக்கும். தெளிவா உன் மனசை வச்சிக்க, நான் கொடுத்த க்ளுவ திரும்ப திரும்ப கேளு. உனக்கு வழி கிடைக்கும்”என்று அவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு தலையை வருடி கொண்டே சொன்னான். அவள் விசும்பல் கண்ணீரெல்லாம் மாயமாக மறைந்து போனது. அவன் முகம் பார்த்தாள்.
“தெட்ஸ் மை ஜெஸி”என்று நெற்றியில் இதழ் பதித்தான். கண்களை மூடி அதை சுகித்தாள். அவளை மெத்தையில் சாய்த்து அவள் மேல் படர்ந்தவன், நுதலில் தொடங்கி நெஞ்சக் குழி வரை முத்தம் வைத்து அவளோடு ஊடலை தொடங்கினான்.
அவள் குழப்பமாக இருக்கும் வேளையில் எல்லாம், மருந்தாளானாக தன் ஊடல் வைத்தியத்தை தொடங்கி அவள் மனதோடு பேசி முத்தம் வைத்து ஆழம் சென்று அலசி அவளது குழப்பத்தை நீக்கி தெளிவடைய செய்து தன் காரியத்தையும் சேர்த்து சாதித்து கொள்வான் அந்தக் காரியக்காரன்.
இன்றும் அவள் நினைவு சுவடிலிருந்து உயிர்பெற்றவன் ஒரு கூடல் நிகழ்த்தி தெளிய வைத்து, உறங்க வைத்து விட்டு மறைந்தான். அவளும் மகனோடு தன்னை மறந்து உறங்கிப் போனாள்.
ஆதவன் கதிர்களை விரித்து விடியலை வாரி வழங்கினான். ஜெஸிக்கு முன்னே எழுந்தமர்ந்த டென்னிஸ் அவள் கன்னத்தில் முத்தம் வைத்து எழுப்பினான்.
“அம்மா, இன்னிக்கி டென்னிக்கு பொறந்த நாள் எந்திரி…”அவளை போட்டு உலுப்ப, “கொஞ்சம் நேரம் டென்னி”என்று அவனை இழுத்து அணைத்து கொண்டு மீண்டும் உறங்கிப் போனாள்.
அவள் அணைப்பிலிருந்து திமிறியவன், அவள் மேலமர்ந்து கன்னம் , மூக்கு என முத்தம் வைத்து மீண்டும் உலுக்கினான். “இம்சை” என்று கண்ணை திறந்தாள்.
கணவனின் வசீகர சிரிப்பை பறித்து கொண்டான் போலும், ஒரு நொடி அதை ரசித்து மீண்டவள், “அப்படியே அப்பன போல சீக்கிரம் எழுந்தால் தூங்க விட்றதே இல்ல ” என்று புலம்பியவள் கிச்சு கிச்சுக்காட்டி அவனை சிரிக்க வைத்தாள். இருவரும் மெத்தையில் விளையாடினார்கள். அவனை தூக்கிக் கொண்டு குளியலறை சென்று காலைக் கடன்களை முடிக்க வைத்து வெளியே அழைத்து வர அவனுக்காக காத்திருந்த அவனது தாத்தா ,பாட்டி அவனை தூக்கிக் கொஞ்சி வாழ்த்துக் கூறினார்கள்.
பின் குளித்து முடித்து புத்தாடையை அவனுக்கு அணிந்து விட்டு, அவனோடு மூவரும் ஜார்ஜிற்கு சென்றனர்.
ஃபாதரிடம் குடும்பமாக ஆசீர்வாதம் வாங்கினார்கள். பின் அருகே இருந்த ஹோமில் காலை உணவிற்கும் மதிய உணர்விற்கும் பணம் கொடுத்தார்கள். அதன் படி காலை உணவை அவர்களோடு அங்கே சாப்பிட்டு விட்டு அடுத்ததாக தாயும் மகனும் ஊர் சுற்றக் கிளப்பினார்கள்.
அவனுக்கு பிடித்த இடத்திற்கு எல்லாம் அவனை அழைத்து சென்றாள். கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தாள்.
பூங்காவிற்குள் நுழைந்து, அவனை விளையாட வைத்துக் கொண்டிருந்தாள்.
அவன் விளையாடுவதை பார்த்து கொண்டிருந்தவளின் செல் அலறியது எடுத்து பார்த்தாள். புது நம்பராக இருந்தது.
“ஹலோ”என்றாள்.
” ஜெஸி என்னை காப்பாத்து ப்ளீஸ் என்னை காப்பாத்து. நெத்தில கண்ணு வச்சிருக்காங்க ப்ளீஸ் என்னை காப்பாத்து”என்று துருவன் அலற ,
பின்னாடி துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க,”ஆஆஆஆ” என அலறினான்.
“எங்க இருக்க நீ???”என பதற்றமாகக் கேட்டாள்.
“**** மால்ல ஃபிப்த் ஃப்ளோர்…”என்றான்.
“இரு வரேன்”என்று போனை வைத்தவள் மகனை தூக்கி கொண்டு”அம்மாக்கு ஒரு முக்கியமான வேலை. முடிச்சிட்டு வர்றேன்”என்று அவனை காரில் அமரவைத்து வேகமாக ஓட்டியவள் நால்வரையும் அழைக்க நாட் ரிசப்பில் என்று வந்தது…
அம்மாவின் பதற்றத்தை கண்டு அமைதியாக இருந்தான் டென்னிஸ் அவனை வீட்டில் விட்டு விட்டு மால்’லை நோக்கி காரை வேகமாக ஓட்டி வந்தவள் காரை நிறுத்துவிட்டு உள்ளே நுழைந்தாள்.
மால் வழக்கம் போல் இயங்கி கொண்டிருந்தது. சந்தேகத்தோடு அவன் சொன்ன இடத்திற்குச் செல்ல, அங்கே விளையாட்டு துப்பாக்கியை வைத்து அவளை குறிப்பார்த்து கொண்டிருந்தான் துருவன்.
“யூ பிளடி சீட் “என வேகமாக அவனை அடிக்க கையை ஓங்க, அவனோ அவள் கையை பிடித்து மடக்கி தன் கைவளைவுக்குள் அவளை நிறுத்தியவன் “பரவாயில்லை எனக்கு ஒண்ணுனதும் வந்திட்டீயே !”என காதில் கிசுகிசுக்க, அவளோ அவன் கைவளைவுக்குள்ளே மயங்கி சரிந்தாள்.
கால் வழியே இரத்தம் வடிய “ஜெஸி…” என கத்தியவன் அவளை தூக்கிக் கொண்டு ஓடினான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
+1
