Loading

எட்வர்டு, இட்ஸ் மை பெர்சனல் வர்க்… சோ பாடிகார்ட்ஸ் யாரும் கூட வர வேணாம். நானே தனியா போயிட்டு வந்திட்றேன்”என்றார் வீரமதி.

“ஒகே மேம்…! அட்லீஸ்ட் ஒரு கார்டையாவது கூட அழைச்சிட்டு போங்க மேம் ! நீங்க தனியா போறது எனக்கு சரியா படலை”என்று அக்கறையாக தான் சொன்னான்.

எட்வர்டின் விசுவாசத்தை அறியாதவரா இந்த வீரமதி. தன் கையில் வைத்திருக்கும் ஆயுதம் போல தான் வீரமதிக்கு அவன். பல முறை அவரது உயிரை அவன் காப்பாற்றி கொடுத்த கடவுளாக இருந்திருக்கிறான்… என்றுமே அவனை அவர் வேலைக்காரனாக  பார்த்தது இல்லை. இன்னொரு மகனாக தான் நினைத்திருக்கிறார். அலாதி நம்பிக்கை அவன் மீது வைத்திருக்கிறார். அதுவே அவரை வீழ்த்த போகும் ஆயுதமாகப் போகிறது.

“இட்ஸ் ஓகே எட்வர்டு ! போற இடம் ஒன்னும் ஆபத்தான இடமில்லை… சேஃப்பான இடம் தான். அதுனால தான் தனியா  போறேன் சொல்றேன்”என்றார் பொறுமையாக

“சாரி மேம் இவ்வளவு சொல்றீங்க புரியுது… பட் இடத்தை சொல்லுங்க மேம், ஒரு பாடிகார்ட்டா உங்க சேஃப்டிக்காக தெரிஞ்சு வச்சுக்க தான் கேட்கிறேன் மேம்… சொல்லுங்க”என்று கெஞ்ச,

எட்வர்டின் எண்ணம் அறியாதவர், அவனது அக்கறையில் நெகிழ்ந்து போனார். இருந்தாலும் போகும் இடம் பகிர்ந்து கொள்ள முடியாத இடம் என்பதால் அவர் கடைசி வரைக்கும் சொல்லவே இல்லை…

“டோண்ட் வொர்ரி எட்வர்டு, அப்படி எனக்கு ஏதாவது ஆபத்துன்னா, முதல்ல அழைக்கறது உன்னை தான் “என்றாள்.

“நோ மேம் !ஃபர்ஸ்ட் உங்களுக்கு எதுவும் அங்க ஆபத்துன்னா, அந்த ஏரியா போலீஸ்க்கு கால் பண்ணிட்டு எனக்கு கால் பண்ணுங்க மேம்”என்று எச்சரிக்க,  அவரும் சிரித்து கொண்டே”சரி”என தலையை ஆட்டியவர், கண்களால் காசி  அண்ணனை தேட, ஆனால் டரைவராக வந்தது என்னவோ புதிதாக வேலைக்கு சேர்ந்த ஒருவன் தான்.

“நீயா, காசி அண்ணன் இல்லையா? எங்க போனார்?”என்றார் வீரமதி முகத்தை சுருக்கிய படி.

“அவர் பொண்ண பார்க்கறதுக்கு  லீவ் போட்டு போயிருக்கார் மேடம்…!” என்றான் அவன்.

கொஞ்சம் அதிருப்தியுடன் “சரி வண்டி எடு !”என்றார் அவனிடம். அவனும் வண்டியில் ஏறிக் கொள்ள பின்னே இவரும் வண்டியில் ஏறிக் கொண்டு எட்வர்டிடம் தலையசைக்க, அவனோ  அந்த புது டரைவரிடம் வந்து.

“ஜாக்கிரதை எதுவும் பிரபலாம்ன்னா, பாதிலே பயந்து விட்டுப் போக கூடாது. போலீஸ்க்கு கால் பண்ணிட்டு எனக்கு கால் பண்ணு ! என் நம்பர்  உன் கிட்ட இருக்கு தான?”

“இருக்கு சார்… நான் பாதிலே விட்டுடு போகிற ஆள் இல்ல சார். எதுவும் ஆபத்துன்னா கண்டிப்பா போலீஸ்க்கும் உங்களுக்கும் போன் பண்றேன் சார்”என்று கண்ணை காட்ட, எட்வர்டும் அவனை அழுத்தமாக பார்த்து விட்டு  தலை அசைப்புடன் நகர்ந்து விட, கார் புறப்பட்டது.

‘ அப்படி யார பார்க்க போறாங்க…? இவ்வளவு சீக்கிரட்டா போற அளவுக்கு என்ன பெர்சனல் வர்க்? ‘ என அவன் உள்ளுக்குள் குமைந்தான்.

அந்த பிரம்மாண்ட வீட்டை கார் தாண்டியதும் சீரான வேகத்தில் சாலையில் செல்ல, “ஜெகன்”என்றார்.

அவனும் சாலையில் கண்ணை பதித்து, அவர் புறம் திரும்பாமலே “மேடம்”என்றான்.

“*** இங்க போ “என்று கட்டளையிட, “எஸ் மேடம்”என்றான்.

“நம்ம போற இடம் யாருக்கும் தெரிய கூடாது ! உனக்கு எக்ஸ்ட்ரா பணம் கூட தர்றேன். நாம போன இடத்தை பத்தி யாருக்கும் மூச்சி விட கூடாது புரியுதா?  போற இடம் வெளியே கசிந்தது உன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை ஜாக்கிரதை !” என மிரட்ட,

“விசுவாசமாக இருப்பேன் மேடம் ! யார்கிட்டேயும் நீங்க போற இடத்தை சொல்ல மாட்டேன் மேடம். நீங்க என்னை நம்பலாம்… உங்க சாரதியா கண்டிப்பா உங்க நம்பிக்கைக்கு. உரியவனா இருப்பேன் மேடம்”என்றான்.

“ம்ம்… “என்று சாலையில் கண்ணை பதிக்க, அவனோ ஓட்டுவதில் கவனத்தை செலுத்தினான்.

மூன்று மணி நேரத்திற்கு பிறகு, வீரமதி சொன்ன இடத்திற்கு முன் காரை நிறுத்தினான் ஜெகன்.

கொடைக்கானலிலுள்ள அவரது எஸ்டேட்டுக்கு தான் வந்திருந்தார்.

வீரமதி என பெரிய எழுத்துக்களால் பொறிக்கப் பட்டிருந்த  பலகையை தாண்டி அந்தக கார் உள்ளே சென்றது. இரண்டு பக்கமும் தேயிலை நடுவில் பாதை அமைந்திருக்க,  கார் அதன் வழியே உள்ளே சென்று ஒரு சின்ன வில்லாவை போன்ற வீட்டின் முன் நின்றது.

வேகமாக ஒருவன் ஓடி வந்து கார் கதவை திறந்து விட, வீரமதி இறங்கினார்.

“வாங்க மா”என்று அவன் கையை கட்டி பணிவாக அழைக்க, “என்ன துளசி! எப்படி இருக்க? வீட்டில எல்லாரும் எப்படி  இருக்காங்க?”

“உங்க புண்ணியத்துல எல்லாரும் நல்லா இருக்காங்க மா !”என்றார், வீரமதி  எஸ்டேட்டில்  இருபத்தி ஆறு வருடங்களாக வேலை பார்ப்பவர், அதீத விசுவாசி எனலாம். கணவன் மனைவி சேர்ந்து இருவரும் அந்த ஒரே வீட்டில் தான் இத்தனை காலம் வேலை பார்த்து, தன் இரு பெண்களை கட்டிக் கொடுத்து பேரன் பேத்தி எடுத்து விட்டனர். இருந்தாலும் அவர்கள் அக்கடா என வேலை விட்டு நிற்காமல் வீரமதிக்காகவும் தங்களுக்காகவும் அங்கே இருக்கின்றனர்.

வீரமதி உள்ளே நுழைந்ததும்,  அவரை வரவேற்றார் கஸ்தூரி. துளசி நாதனின் மனைவி. அந்த வீட்டில் சமையல் வேலையிலிருந்து அனைத்துமாக இருக்கிறார்.

“வாங்க மா ! நல்லா இருக்கீங்களா?”என்று நலம் விசாரிக்க, “நல்லா இருக்கேன். முதல்ல உன் கையால எனக்கு காப்பி எடுத்துட்டு வா !”என்றவள், “ஆமா எங்க ஷர்மி?” கண்களால் வீரமதி அவளை தேட,

“மேல அவங்க ரூம்ல இருப்பாங்க மா !”என்று காப்பி போட செல்ல,

அவரோ” சரி அப்போ அவ ரூம்க்கு காபி எடுத்துட்டு வா !” என்று மாடிக்கு சென்று ஷர்மியின் அறையை நோக்கி சென்றாள். அது திறந்து தான் இருந்தது. உள்ளே அவள் நிவாஸை பார்த்து பொங்கி வந்த அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டு  காலை உணவை தன் கணவனுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள்.

“ஷர்மி ! “என்ற அழைத்துக் கொண்டு உள்ளே வர, அவளோ அவரை கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்தவள், பின் சுதாரித்து விட்டு, எழுந்து நின்று “வாங்க அத்தை ” என்றாள் கண்ணீரை துடைத்து விட்டு.

“எப்படி இருக்க ஷர்மி?”என்றார், அவளோ பக்கத்தில் பித்து பிடித்தது போல எதையோ வெறித்து பார்த்து கண்களில் கருவலையம் சுற்றிருக்க, மெய்காப்பாளானாக படிக்கட்டு தேகமுடையவன்  இன்று உடலை  இழந்து குச்சியை போலவே இருந்தான்.

“இருக்கேன் அத்தை ! “என்றாள் சுரமின்றி. அவர்கள் அருகே வந்த வீரமதி தன் மூத்த  மகனான நிவாஸின் தலையை கோத, அவனோ பயந்து தள்ளி அமர்ந்தான்.

“நிவா ! நான் தான் உன் அம்மா ! உன் அம்மா டா !”என்று நெருங்க அவனோ ” நான்  ஆரோவ  கொல்லல நான் கொல்லல “என பிளற்றினான். அதை கேட்டு வீரமதிக்கோ சுருக்கென்று இருந்தது.

“நிவா “என முகத்தை கையிலேந்தி “நீ உன் பிரண்ட கொலை பண்ணல நிவாஸ் ! நீ பண்ணல நாங்க தான் கொலை பண்ணினோம்… உன் மேலே எந்த தப்புமே  இல்ல ! இப்படி இருக்காத நிவாஸ் பழைய மகனா நீ எனக்கு வேணும் டா ! எங்களை பத்தி கொஞ்சம் யோசி டா !”என்று அழுது புலம்பிட,

“நீங்க எவ்வளவு கெஞ்சினாலும் உங்க புள்ளை அந்த இன்சிடென்ட் விட்டு வெளியே வரவே மாட்டான் அத்தை…!ஜன்னல் எல்லாத்தையும்  அடைச்சி போட்டு காத்து வரல சொல்றது போல இருக்கு  நீங்க பேசறது . எங்களை அடைச்சி வச்சிட்டு, ட்ரீட்மெண்ட் கொடுத்தால் இவன் குணமாகிடுவானா? என்ன பண்ணீங்க என் புருசன? அவன் இப்படி இருக்க காரணம் நீங்க தான்.

எதுக்கு நீங்க ஆரோன கொல்லனும். அவன் ரொம்ப நல்லவன் அவனை ஏன் கொன்னீங்க? அவனை கொன்னு  ஜெஸியும் டெனியையும் இப்படி தனியாக நிக்க வச்சுட்டீங்களே! அப்படி என்ன எங்க ஆரோன் மேலே வன்மம் உங்களுக்கு? ஏன் அவன கொன்னீங்க? உங்களுக்கு அவனுக்கும் அப்படி என்ன பகை? ஆசிரமத்தில வளர்ந்த இவன் எப்படி உங்களுக்கு பிள்ளையானான்?. ஏன் எங்களை அடைச்சி வச்சிருக்கீங்க? பதில் சொல்லுங்க…!”என்று  அழுது  கொண்டே  கத்திக் கேட்டாள்.

வீரமதியின்  கண்களோ அவர் முன்னே பயந்து ஒடுங்கிப் போயிருக்கும்  நிவாஸை வெறித்து பார்த்திருந்தன, அந்த பார்வையின் அர்த்தம், அந்த விழிகளில் என்ன இருக்கிறது என்று ஷர்மியால் கண்டுபிடிக்க முடியவில்லை… அவரது அமைதி மேலும் அவளுக்கு எரிச்சலை தான் கொடுத்தது. அவர் இங்கு வரும் போதெல்லாம் இதை தான் கேட்டு கத்தி வைப்பாள். ஆனால் அவரோ அவளை அழுத்தமாக பார்த்து விட்டு சென்று விடுவார். அவளோ இன்று பதில் கிடைத்திடாதா? இந்த சிறையிலிருந்து விடுதலை கிடைத்திடாதா? கணவன் பழைய படி மாறா மாட்டானா?  என்று ஒவ்வொரு நாளும் தவித்து கொண்டிருக்கிறாள்.

“நந்து, நந்தனா எங்கே?”என்றார் அவள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காது.

“நான் என்ன உங்க கிட்ட கேட்டுட்டு இருக்கேன் நீங்க என்ன பதில் சொல்லிட்டு இருக்கீங்க? உண்மைய சொல்லுங்க, நீங்க எப்படி நிவாஸ்க்கு அம்மாவானீங்க ? ஆரோன  ஏன் கொன்னீங்க? எங்களை ஏன் அடைச்சு வச்சிருக்கீங்க? இவன் ஏன் இப்படி இருக்கான்? உண்மையிலே யாருங்க நீங்க?” பைத்தியம் பிடிக்காத குறையாக மூளையை அறித்த கேள்விகளை அவர் வருகையின் போது கேட்டு தான் வைக்கிறாள். ஆனால் அவர் தான் இதழ்கள் மலர்ந்து வார்த்தைகளை உதிர்க்க மறுக்கிறார்.

தன் கணவனின் நிலயை ஒவ்வொரு நாளும் காணும் போதெல்லாம் நெஞ்செல்லாம் வலியிலும் வேதனையிலும் துடிக்கிறது… ‘இதற்கு தீர்வு என்ன என்ன?’ என்று யோசித்து அவளும் நிவாஸை போல ஆகிவிடுவாள் போலும்.

“ஷர்மி ! “எனும் போதே கஸ்தூரி இருவருக்கும் காப்பி கொண்டு வந்து கொடுக்க, ஷர்மி மறுத்து விட்டாள். அவரோ டேபிளை காட்டி வைக்கச் சொல்ல, அவரும் வைத்து விட்டுச் சென்றார்.

“எடுத்துக் குடி ஷர்மி ! கத்திக் கத்தி உன் தொண்டை வறண்டு புண்ணாகிட போகுது?”

“என் தொண்டை மட்டுமில்ல, என் வாழ்க்கையும் அப்படி தான் இருக்குங்க. எவ்வளவு சந்தோசமா இருந்தோம் தெரியுமா உங்களுக்கு? இப்படி மொத்தமா வாரி சுருட்டி வச்சிருக்கீங்களே…! எதுக்கு எங்களை இப்படி அடைச்சு வச்சிருக்கீங்க…? ப்ளீஸ் எங்களை விட்டுடுங்க, நாங்க வேற எங்கயாவது போய் பொலச்சிக்கிறோம்? நான் சம்பாரிச்சாவது என் புருஷனையும் என் புள்ளையும் பார்த்துப்பேன் எங்களை விட்டுங்க ப்ளீஸ்!”என்று அவர் முன்  மண்டியிட்டு கெஞ்சினாள்.

அவள் கெஞ்சுவதை அவரால் பார்க்க முடியவில்லை… மருமகள் கண்ணீர், உள்ளே  அவரை கரைத்தாலும், தன் இதயத்தை திடப் படுத்திக் கொண்டு அவளுக்கு பதிலளித்தார்.

“ஷர்மி! நிவாஸ் என் மகன், என்னுடைய மூத்த மகன் அவன். அவனை நான் தான் பாத்துக்கணும்… அவன் மட்டும் எனக்கு சொந்தம் இல்லை, நீயும் என் பேத்தி பேரனும் கூட எனக்கு சொந்தம் தான். இதெல்லாம் உங்களுக்காக தான். இத விட்டுடு எங்க போகணும் நினைக்கிற நீ? டாக்டர்ஸ் வச்சு அவனுக்கு ட்ரீட்மெண்ட் பார்த்திட்டு தான இருக்கேன்… பசங்க படிக்க நல்ல ஸ்கூல் சேர்ந்திருக்கேன்… உனக்கு இங்க என்ன குறை?”

“தங்கம் தான சொல்லி, கூண்டுக்குள்ள இருக்க சொல்றீங்களா? சொர்க்கமாவே இருந்தாலும் சுதந்திரம் இல்லேனா அது நரகம் அத்தை. நான் இப்போ நரகத்துல இருக்கேன்… ஒவ்வொரு நாளும் என் புருஷனை பார்த்து இரத்த கண்ணீர் வடிக்காத குறையா அவனை நினைச்சி அழுதிட்டு இருக்கேன்… முடியல அத்தை எங்களை விட்டுடுங்க”என மீண்டும் அவள் அதே பல்லவியை அவரிடம் பாட அவர் தான் மனம் இருங்குவதாக இல்லை.

“எல்லாம் சரியாகிடும் ஷர்மி ! நிவாஸ் இப்படி இருக்கறது உனக்கு  எவ்வளவு  வலின்னு எனக்கு புரியுது. அதே வலி எனக்கும் இருக்கு. கண்டிப்பா அவன் சரியாகிடுவான். சரியாக்கிடுவேன். நான் செலக்ட் பண்ணிருக்க, டாக்டர்ஸ் அவனை குணப்படுத்திடுவாங்க, நீங்க எல்லாரும் பழைய படி ஹாப்பியா  இருப்பீங்க…”என்றார் கண்களை துடைத்துக் கொண்டு..

“நான் இவ்வளவு சொல்றேன், கொஞ்சம் கூட உங்க மனசு இறங்கவே இல்லை… போதும் இதுக்கு மேலையும் எங்களால இருக்க முடியாது. நாங்க போறோம்… எங்களை நீங்க விடலேனா, நான் போலீஸ்க்கு  போன் பண்ணுவேன். நீங்க ஒரு கொலைக்காரின்னு சொல்லுவேன்”என்று அவரை மிரட்ட, அவரோ சத்தமாகச் சிரித்தார்.

“என்னை கொலைக்காரின்னு சொல்லி போலீஸ் புகார் கொடுத்தால், அவங்க உண்மை என்னன்னு விசாரிப்பாங்க. அந்தக் கொலைக்கு உன் புருஷனுக்கும் பங்கு இருக்கு. அவனையும் சேர்த்து தான் அரெஸ்ட் பண்ணுவாங்க… அவன் இப்படி இருக்க நிலமையில் ஜெயிலுக்கு போகணுமா?”என கேட்க அவளோ வாயில் கை வைத்து அதிர்ந்தாள்.

எழுந்து கொண்டு வாசலை நோக்கி நடந்தவர், “என் புருஷன கொன்ன எனக்கு மத்தவங்கள கொல்றது ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்ல…”என்று கீழே இறங்கி சென்று விட, எதையோ வெறித்து பார்த்து முனங்கிக் கொண்டு இருக்கும் நிவாஸை அதிர்வுடன் பார்த்தவள் மடங்கி அழ ஆரம்பித்து விட்டாள்.

மாலை வரை இருந்து குழந்தைகளை பார்த்து கொஞ்ச நேரம் செலவழித்து விட்டு வீடு திரும்பினார் வீரமதி.

இரவில் எட்வர்ட்டின் ஆளான அந்த புது ட்ரைவர் ஜெகன் வீரமதி சென்ற இடத்தையும் அங்கே அவரது மகன் குடும்பம் இருப்பதாக, தான் அறிந்த உண்மையை  சொன்னவன் மேலும் அங்கே இருக்கும் பாதுகாப்பையும் சொல்லி முடித்தான்.

மறுநாள் விடுமுறை எடுத்துக் கொண்டு அதிகாலை வேளையிலே பைக்கில் கொடைக்கானலுக்கு சென்றான் எட்வர்டு. அவன் எஸ்டேட்டை அடைந்ததும் சரியாக கார் அவ்வழி கடந்து செல்ல அதை தொடர்ந்தான். அவன் தொடரக் காரணம் உள்ளே ஷர்மி இருப்பதை கண்டு கொண்டான்.

காருக்கு பின்னே வண்டியை செலுத்தினான். கார் நேராக அப்பெரிய பள்ளியின் வளாகத்தினுள்ளே சென்றது. இவனும் உள்ளே சென்று ஓரமாக பைக்கை நிறுத்தி விட்டு அவளை தொடர்ந்தான். அவளோ நந்து நந்தனாவை அவரவர் வகுப்பில் விட்டு விட்டு மீண்டும் காரை நோக்கி செல்ல, அவளை வழிமறித்தான் எட்வர்டு.

அவனை கண்டதும் தனது இன்னுயிர் வந்தது போல இருந்தது “என்னை தெரியுதா ஷர்மி?”அவளிடம் கேட்க அவளோ கண்ணீரை தாரத்தாரையாக வார்த்தாள். “ஏன் இப்படி வந்து ஒளிஞ்சு இருக்கீங்க? எங்க அந்த துரோகி? அவனை பார்த்து குறுக்குல மிதிச்சி சில விஷயங்கள் கேட்கணும் போல இருக்கு எங்க இருக்கான் அவன்? ஏன் ஓடி ஒளியறான்? எங்களுக்கு பயந்தா? அவன் தான ஆரோன கொன்னது?”பல்லை கடித்துக் கொண்டு சீறினான்.

அவளோ இருக்கும் இடத்தை உணர்ந்தவள், ‘ எந்த நேரம் வேண்டுமானாலும் காவலுக்கு இருக்கும் அந்த தடியன்கள் வரக் கூடும் என பயந்தவள், “அண்ணா ! உங்க கிட்ட எல்லாம் உண்மையை சொல்றேன். ஆனா இது அதுக்கான நேரமில்லை. ஈவினிங் ஐஞ்சு மணிக்கு நந்தனா கிளாஸ் பிப்த்’  பி ‘ ல உட்காருங்க, நானும் வந்திட்றேன். நான் ஓடிட மாட்டேன், பசங்கள அழைக்க ஈவினிங் நான் தான் வருவேன், சொல்லிட்டு வரேன். இப்போ நான் போகலைனா அவங்களை தேடி வந்திடுவாங்க அண்ணா ! பிரச்சனை ஆகிடும் . ப்ளீஸ் அண்ணா !”என அவள் கெஞ்ச,

“உன் போன் நம்பர கொடுத்திட்டு போமா !” என்றான். “என் கிட்ட போன் இல்ல… புடுங்கி வச்சிட்டாங்க அண்ணா !”என்றதும் அவன் அவளை நம்பலாமா? வேணாமா?’ என்று  யோசிக்க,” என்னை நம்புங்க அண்ணா ! எனக்கு உங்க உதவி தேவைப் படுது. சத்தியமா உங்களை ஏமாத்த மாட்டேன்” என்றாள் கையெடுத்து கும்பிட்டு.

அவனும் அவளது வார்த்தைகளை  நம்பி அனுப்பி வைத்தான். கார்க்குள்ளே இருந்த கஸ்தூரிக்கு தூரத்தில் அவள் ஒரு ஆணுடன் பேசுவது மட்டும் தெரிய, அவள் வந்ததும் சரியாக கேட்டு வைத்தார்.

“யார் கூடமா பேசிட்டு இருந்தீங்க? “என்றதும் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. உள்ளே எழுந்த படபடப்பை மறைத்து சாதாரணமாக இருப்பத் போல காட்டிக் கொண்டவள், அவரிடம்” பேரண்ட் மா! நந்தனா கிளாஸ் தான் அவர் பொண்ணும் படிக்கறா? அதான் விசாரிச்சார். அப்புறம் இன்னக்கி சின்ன தான் ஒரு மீட்டிங் நந்தனா கிளாஸ் இருக்கு அதை மிஸ் சொல்லிட்டாங்க இவரும் சொல்லிட்டு போனார்”என்று முடித்துக் கொள்ள, கஸ்தூரியும் சந்தேகிக்காமல் விட்டு விட, இவளும் அப்போது தான் மூச்சை விட்டாள்.

எட்வர்ட்டை கண்டதும் மனதில் இனம்புரியாத இன்பம் வந்து சேர்ந்ததும். தன்னையும் தன் கணவனையும் மீட்டு எடுக்க வந்த ஆபந்தபாந்தவனாக தெரிந்தான்.

மாலை வரை காத்திருந்தாள்,  இருட்டில் வாழ்பவர்கள் கூடிய சீக்கிரம் ஒளி கிடைந்து விடும் என்ற எண்ணத்தில் திளைத்திடும் சந்தோசத்தில் இருக்கும் மனங்களை போல தான் அவளும் இருந்தாள்.

மாலையும் வந்தது, காரில் இருக்கும் பாதுகாவலர்களிடம் கொஞ்சம் தாமதம் ஆகும் என்று சொல்லிக் கொண்டு உள்ளே வேகமாக சென்றாள் . நந்துவை அவனது வகுப்பிலிருந்து அழைத்து வந்தவள் கஸ்தூரியிடம் கொடுத்து விட்டு காருக்கு அனுப்பி வைத்தவள், நந்தனா வகுப்பிற்கு செல்ல, அவளை மடியில் வைத்து பேசிக் கொண்டிருந்தான் எட்வர்டு.

‘எங்கே  வராமல் போயிடுவானோ?’ என்று பயந்தாள். அவள் வரும் முன்னே  அவன் வந்திருந்தான் குழந்தைக்கு அவனை நன்கு தெரியும் என்பதால் மாமா என்று தாவினாள். அவனும் அவளை கொஞ்சி விட்டு மடியில் அமர்த்திக் கொண்டவன், அவளுக்கு பிடித்த பிஸ்கட் சாக்லேட் என வாரி இரைக்க, அவளும் மடியில் அமர்ந்து  அவன் கேட்கும் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டே சாப்பிட்டாள்.

“உன் அப்பா எங்க நந்தனா?”என்றான்.

“அப்பா ! வீட்ல தான் இருக்கார். ஆனா அவர் யார்கிட்டேயும் பேச மாட்டிகிறார். எங்க மூணு பேரையும் பார்த்து பயப்படுறார். நாங்க அப்பான்னு போனாலே பயந்து ஒதுங்கறார். அம்மா தினமும் அவரை பார்த்து அழுதுட்டே இருப்பாங்க மாமா…!”என்றவள் வீரமதி வருவதையும் ஷர்மி  பேசுவதையும் ஒன்னு விடாமல் சொல்லி முடித்து  விட்டாள்.

அவனும் புருவம் உயர்த்தி யோசிக்க, சரியாக ஷர்மியும் வந்தாள்.”நிவாஸ்க்கு  என்னாச்சி ஷர்மி?”

“அவ சொல்றது எல்லாம் உண்மை தான் அண்ணா !”என்று ஆரம்பித்திலிருந்து இறுதியாக வீரமதி பேசி சென்றது வரைக்கும் சொல்லி முடித்து அழுதாள்.

“எங்களை எப்படியாவது காப்பாத்துங்க அண்ணா ! அவரை என்னால அப்படி பார்க்க முடியல…! அவர் ஜெயிலுக்கு போகணும் தலை எழுத்து இருந்தால் என்ன பண்ண முடியும் போகட்டும் அண்ணா ! ஆனா அதுக்கு முன்ன அவரை குணப்படுத்தனும் அண்ணா ! ப்ளீஸ் அண்ணா எங்களை காப்பாத்துங்க…!”கை எடுத்துக் கும்பிட, அவள் கரம் பற்றியவன் “நான் உன்னை காப்பாத்தறேன் ஷர்மி. உங்களை அந்த வீரமதி மேம் கிட்ட இருந்து மீட்கறது என் பொறுப்பு. இந்த போன் பத்திரமா வச்சிக்க, நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசு, இதுல ஜெஸி நம்பரும் இருக்கு அவகிட்டையும் பேசு… சீக்கிரமா அந்த வீட்ல இருந்து நிவாஸையும் உன்னையும் பசங்களையும்  கூட்டிட்டு வந்துடறேன் நீ தைரியமா இரு !”என்று ஆறுதல் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

இவை அனைத்தும் ஜெஸியிடம் சொல்ல, அவள் கணித்தது சரியாக தான் இருந்தது. இருந்தாலும் அவள் எதிர்பாராத ஒன்று நிவாஸ் வீரமதியின் மூத்த மகன் என்பது. இருவரும் சேர்ந்து மினிஸ்டரை கொல்ல காரணம் என்ன என்பதை யோசித்தாள்.

“மினிஸ்டர் வீரமதியோட காதலனையோ கணவனை கொன்னு இவங்களை மேரேஜ் பண்ணிருப்பாரோ ! ஒருவேளை இவங்க பழி வாங்க இவரை மேரேஜ் பண்ணி நேரம் காலம் பார்த்து கொலை செய்து இருக்கலாம் என் உள் மனசு சொல்லுது எட்வர்டு”

“இருக்கலாம் ஜெஸி ! ஆனா நிவாஸ் சின்ன வயசில இருந்து உன் கூட தான இருந்தான். அவன் எதுவும் உன் கிட்ட சொல்லிருக்கானா? இல்ல வீரமதி மேம் ஆசிரமத்துல வந்து அவனை பார்த்தாங்களா?  உனக்கு எதுவும் தெரியுமா?”என கேட்கவும் “அப்படி யாரும் அவனை தேடி வந்தது இல்லை. சொன்னதுமில்லை “என்றாள்.

“ஏதோ மர்மம் இருக்கு ஜெஸி மினிஸ்டர் சாவிலும் “

“கண்டு பிடிக்கலாம் எட்வர்டு”என்றவள்”அவங்களை பத்தின டீடெய்ல்ஸ் கேட்டேனே !”

“இன்னும் கிடைக்கல அதுவும் மர்மமா தான் இருக்கு ஜெஸி ! சீக்கிரமா கையில் கிடைச்சிடும்…”என்றான்.

“ஷர்மிய அங்க இருந்து காப்பாத்தனும் எட்வர்டு ! நம்ம பசங்க அனுப்பி நேரம் பார்த்து அவங்களை இங்க அழைச்சிட்டு வர சொல்லிடு”என்றவள் யோசனையுடன் அமர்ந்து விட்டாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்