
துருவனும் அவனது நண்பர்களின் கோவா பயணம் விமானத்தில் தொடங்க, சரியாக இரண்டு மணி நேரத்தில் கோவாவிலுள்ள தாபோலிம் விமான நிலையத்தில் வந்து இறங்கினார்கள்…
வந்தவர்களை அழைத்து செல்ல இரண்டு கார்கள் வந்து நின்றன. அதில் துருவனும் அவர்களது நண்பர்களும் ஒரு காரில் ஏறிக் கொள்ள, அவர்களுடன் முன்னே ஜெஸியும் ஏறிக் கொண்டாள்.
ஏனையோர்கள் மற்றொரு காரில் ஏறிக் கொண்டனர்.
இரண்டு கார்களும் அவர்கள் தங்கப் போகும் இடத்தை நோக்கி பயணித்தன. துருவனை தவிர மற்ற அனைவரும் கண்ணாடியினுடே கோவாவை அதிசயமாகப் பார்த்துக் கொண்டே வந்தார்கள்.
“துருவா ! கொஞ்சம் என் இடுப்ப கிள்ளு !”என வித்யாசாகர், அணிந்திருந்த டி- சர்ட்டை தூக்கி அவனிடம் தன் இடையை காட்ட, துருவனோ அவன் டி – ஷர்ட்டை இழுத்து விட்டு, “முன்னாடி ஒரு பொண்ணு உக்காந்திருக்கா அறிவில்ல உனக்கு?”என பல்லை கடிக்க,
“முன்னாடி தான டா உக்காந்து இருக்காங்க…!”என்றவனை கொல வெறியில் பார்த்தான் துருவன்.மற்ற அனைவரும் சிரித்தனர்.
“சாரிடா என்னால இன்னும் இங்க வந்ததை நம்ப முடியல அதான் கிள்ள சொன்னேன்”என்று வழிய துருவனோ ‘ ஊப் ‘ என ஊதி தலையை இருபக்கமும் ஆட்டினான்.
“மச்சி கோவா டா !!! நானெல்லாம் இங்க வருவேன் நினைக்கவே இல்ல ! எல்லாம் உன் தயவால தான்டா மச்சி ! ஆஜீத் சொல்ல,
“யார் யாரோ நம்ம தயவுல ஓசில கோவா வரும் போது. நீ என் பிரண்ட் உனக்கு என்னடா…?! “என்றதும் நண்பர்கள் அவனை பார்க்க, அவனோ கண்ணாயினுடே ஜெஸியை பார்த்தான். அவளும் அவனை விழிகளால் எரித்து விட்டு பார்வையை மாற்றிக் கொண்டாள்.
“நீ பேசறது தப்பு துருவா ! கூட்டிட்டு வந்து ஓசின்னு சொல்றது அவங்க தன்மானத்த தீண்டறது போல இருக்கு டா ! நீ இப்போ அவங்களை தான் சொல்ற, ஆனா இன்னொரு வாட்டி சொல்லும் போது எங்களையும் சேர்த்து நீ சொல்லிடுவீயோன்ற நினைப்பு எங்களுக்குள்ளும் வந்திடும் டா !உன் உயிர காப்பாத்த வந்தவங்களுக்கும் உன் கிட்ட வேலை பார்க்க வந்தவங்களுக்கும் தன்மானம் ஒன்னும் இருக்கும். தயவு செய்து இப்படி பேசி சீண்டாத !”நண்பனாக அவனது பணத்துக்கு ஸலாம் போடாமல் உண்மையான நண்பனாக அறிவுரை வழங்கினான் ரிஷி.
ரிஷியின் பேச்சை கேட்ட ஜெஸிக்கு ரிஷியைப் பிடித்திருந்தது. ஆனாலும் துருவன் பேசியது உள்ளே சுருக்கென்று தான் இருந்தது.
நல்லவேளை மற்றவர்கள் யாரும் கேட்கவில்லை இல்லை நொந்து போயிருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டவள் அவனது தயவில் இங்கே இருக்க கூடாது என்று எண்ணி தனக்கும் தனது டீமிற்கும் செலவு செய்ய எண்ணியவள் எட்வர்டிடம் பணம் போடச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்பினாள். அவனும் பணத்தை போட்டு விட்டான்.
பனாஜியில் உயர்தர ஹோட்டல் ஒன்றியில் வண்டி நின்றது. அவர்கள் இறங்கிக் கொண்டார்கள். அந்த ஹோட்டலை வெறித்து பார்த்தாள் ஜெஸி. அவள் கணவனுடன் அடிக்கடி இதே ஹோட்டலுக்கு வருகை தந்திருக்கிறாள்.
இன்றும் அதே ஹோட்டலுக்கு வந்திருக்க, கணவனின் நினைவு அவளை தொற்றிக் கொண்டது… அவர்கள் முன்னே நடக்க இவர்கள் பின்னே நடந்தனர்.
ஜெஸியை கண்டதும் அந்த ஹோட்டல் மேனேஜர் அவளிடம் வந்து பேசினார். அதை கவனித்த துருவன் ‘ இவளுக்கு இது ஃபர்ஸ்ட் டைம் இல்ல போலிருக்கே ? தனியாவா வந்திருப்பா ?!”என யோசித்தவன் ‘நமக்கு எதுக்கு? ‘ என்று தலையை குலுக்கி விட்டு அவர்கள் பேசுவதை வெறித்து பார்த்து நின்றான்.
அவளோ மேனேஜரிடம் பேசி விட்டு அவர்களுக்கு என்று இரண்டு அறைகள் கேட்டாள். ஒன்று அவளும் தன்யாவும் இருக்க, மற்ற ஒன்று அந்த மூவருக்கும்.
இங்கே இவர்கள் ஒற்றை அறை
அதுவும் கொஞ்சம் பெரிய அறையாக கேட்டு வாங்கிக் கொண்டனர்.
ஜெஸி கையில் கிடைத்த திறப்பை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் வந்து தங்கும் வழக்கமான அறையை அது. அதே பார்த்துக் கொண்டு நின்றவளின், அருகே வந்த துருவனோ “நோ பிராபலம் ஜெஸி ! நீங்க லக்சூரிஸ் ரூம்மா கூட கேட்டு வாங்கிக்கோங்க… ஐ வில் பே ஃபார் இட் “என்றான்.
“டேய் “என ரிஷி அவனை அடக்க, “நம்மல நம்பி வந்திருக்காங்க, கொஞ்சம் தயங்குவாங்கன்னு சொன்னேன் அவ்வளவு தான்”என்றான் தோளை குலுக்கி,
ரிஷியோ தலையில் அடித்துக் கொண்டான்.
ஜெஸியோ ” நோ தேங்க்ஸ் ! “என்றவள் “ரிஷி “என்றாள். அவனும் அவளை பார்க்க, ” பணக்கார நண்பனாச்சே ! கூஜா தூக்காம அவன் பேசினதுக்கு கண்டிச்சி நீ பேசின பாரு கிரேட் ! உன்னை போல நண்பர்கள் சிலர் கூட இருந்தால் சில பணக்கார பகட்டு நாய்ங்க கொஞ்சம் திருந்துங்க…! எனிவேஸ், நீ இப்படியே இரு மாறிடாத !”என்று அவள் தன் பயணப் பெட்டியை இழுத்துச் செல்ல துருவனின் முகம் கறுத்து விட்டது.
திறப்பை கொண்டு திறந்தவள், தன் பயணப் பையை உள்ளே இழுக்க அவளை தொடர்ந்து தன்யாவும் நுழைந்தாள்.
பெட்டியை வைத்து விட்டு நேராக ஜன்னல் திரையை விலக்கினாள். காற்றை போல அவனது நியாபகங்களும் அவளை வந்து தீண்டின.
வந்ததும் அவளது வேலை ஜன்னல் திரையை விலக்குவது தான், அவனது வேலையோ அவளை கொஞ்சுவது தான். அவள் இடையை அழுத்தி தன்னோடு சேர்த்து கழுத்தில் முகத்தை புதைத்து ஜன்னலில் வழியே தெரியும் அவ்வூரின் அழகை இருவரும் ரசிப்பார்கள்.
“வந்ததுமே வா டா !”என்று அவன் முகத்தை தள்ளி விட, “மீண்டும் வந்து ஒட்டிக் கொள்ளும் காந்தத்தை போல மீண்டும் அவளை ஒட்டிக் கொள்வான்… ‘வந்ததே அதுக்கு தானே ‘ என்று அவளை கொஞ்ச ஆரம்பிப்பான். அந்த அறையில் ஒவ்வொரு இடத்திலும் அவனது நினைவுகள் அவளை பார்த்து சிரித்தன.
“மேடம் என்னாச்சி?” தன்யா கேட்க, ” ஆரோவோட நினைவுகள் என்னை ஆக்கிரமிக்கிது தன்யா ! நாங்க எப்போ கோவா வந்ததாலும் இதே ஹோட்டல் இதே ரூம்ல தான் தங்குவோம். இந்த ரூம்ல அவனோட நியாபகம் அதிகமா இருக்கு தன்யா” என்றாள் குரல் தழுதழுத்தது.
“வேற ரூம்க்கு போலாமா மேம் !” அவள் அக்கறையில் கேட்க, “இட்ஸ் ஓகே தன்யா ! ஆரோவோட நினைவுகளுடன் வாழ கத்துட்டேன் எனக்கு ஒன்னுமில்லை”என்றவள் அலைபேசி எடுத்து அமர்ந்து எட்வர்டு அனுப்பிய பணத்தை அவளுடன் வந்த தன்யா, அசோக் , ஶ்ரீ, ரவிக்கு என சரிசமமாக பிரித்து அவர்கள் கணக்கில் போட்டு விட, நால்வருக்கும் குறுஞ்செய்தி வர எடுத்து பார்த்தனர்.
“மேம் எதுக்கு பணம் போட்டிருக்கீங்க?” தன்யா கேட்க, அதே நேரம் அழைப்பு மணி அடிக்க, தன்யாவிடம் கண்ணை காட்டினாள். அவளும் சென்று திறக்க நால்வரும் படையெடுத்து வந்திருந்தனர்.
“மேம் என்ன இது? பணம் போட்டிருக்கீங்க?”ரவி பதறி கேட்க, மற்றவர்களுக்கும் அதே கேள்வி தான் அவளது விடைக்காக காத்திருக்கின்றனர்.
அவளோ சிரித்து கொண்டே “பணம் எதுக்கு போடுவாங்க? செலவு பண்ண தான். கோவா வந்திருக்கோம், உங்களுக்கு பிடிச்ச விஷயம் நிறைய இருக்கும் வாங்கவோ போகவோ பணம் வேணாமா? வேடிக்கை பார்க்கவா உங்களை இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்… அவனை நான் வாட்ச் பண்ணிக்கிறேன் நீங்க என்ஜாய் பண்ணுங்க… என் பசங்க நீங்க யார் தயவுலையும் இருக்க கூடாது ஏங்கவும் கூடாது”என்றதும் நால்வருக்கு கண்கள் கலங்கி போனது .
“அட ! செண்டிமெண்ட் எதுக்கு? லெட்ஸ் என்ஜாய் காய்ஸ்…! அப்புறம் நன்றி சொல்லாதீங்க, என் தம்பி தங்கச்சிக்கு தான் நான் செய்றேன் புரியுதா?!”என்றாள்.
“செண்டிமெண்ட்டா பேசுறேன் நினைக்காதீங்க மேடம். தாயில்லாத எங்களுக்கு நீங்க தான் அம்மா…! “என்றான் ஶ்ரீ.
“அடப்பாவி!! என்ன வேணும் கேளுடா வாங்கி தர்றேன். அதுக்காக ஓவரா ஐஸ் வைக்காதடா !”என்றாள். அவர்கள் சிரித்து கொண்டனர்.
“சரி சரி நல்லா ரெஸ்ட் எடுங்க ! அடுத்து அந்த தலைவலி என்ன சொல்ல போகுதோ எங்க போக போகுதோ ! அதுக்குள்ள ரெடியாகிடுங்க…!”என்றாள்.
“ஏன் மேடம் அவன் தான் உங்களை ரொம்ப பேசி கடுப்படிக்கறான்ல உங்களை டார்ச்சர் பண்றானே ! ஏன் அவனுக்கு பாடிகார்ட்டா இருக்கணும் நினைக்கிறீங்க… வேற இடமா மேடம் நமக்கு இல்லை…! ஏன் இவன் பண்ற டார்ச்சர் பொறுத்துட்டு இருக்கணும்…?”அசோக் கேட்டிட
“உங்க கிட்ட சொல்ல என்ன இருக்கு, ஆரோனோட இறப்புக்கு காரணமானவங்க அந்த வீட்ல தான் இருக்காங்க, அவங்களை கண்டு பிடிக்க தான் எல்லாத்தையும் சகச்சிட்டு இருக்கேன்” என்றதும் அவர்களுக்கு புரிய,
“ஒகே மேம்… கண்டிப்பா நாங்களும் உங்களுக்கு எப்பவும் உதவியாக இருப்போம் மேம்”என்றான் ரவி. அவனை தொடர்ந்து அனைவரும் சொல்ல, அவர்களை கர்வமாக பார்த்தாள்.
***
இங்கோ கோபமாக இருந்தான் துருவன், ரிஷியோ தனியாக அமர்ந்து விட்டான். வித்யா தான் ரிஷியிடம் வந்து” பாரு உன்னால தான் அவன் இப்படி இருக்கான். நண்பனுக்கு சப்போர்ட் பண்ணாம நீ என்ன அவங்களுக்கு சப்போர்ட் பண்ற? அவன் தான் நமக்கு எல்லாம் பண்றான். அவனை நீ விட்டுக் கொடுக்கலாமா? என்ன டா நீ?”
“இதான் இது தான் இதுக்கு தான் நான் யோசிச்சேன்.. அவன் எல்லாம் நமக்கு செய்றான் அவன் பண்ற தப்ப பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றீயா? வீரமதி அம்மா அப்படி இல்ல அது உனக்கே தெரியும், இவன் ஏன் டா இப்படி இருக்கான்? காசு இல்லைனாலும் நமக்கு தன்மானம் இருக்குல டா. அதுல கை வச்சி சும்மா இருப்பீயா நீ? அதை தான் அவனும் பண்ணிட்டு வந்திருக்கான். அவங்க இவனை பாதுக்காக்க வந்திருக்காங்க, அவங்க ஓசியில வந்திருக்காங்க சொன்னா, இவன் வாங்கி கொடுக்கற சோறு அவங்களுக்கு இறங்குமா, இல்ல இந்த மெத்தை தான் அவங்களை தூங்க விடுமா, கூடிட்டு வந்து இப்படி எல்லாம் பேசறது தப்பு டா ? அதை தான் சொன்னேன்… முதல்ல அவங்களை பழி வாங்கறேன் நிக்கறான்ல அந்த எண்ணத்த மாத்த சொல்லு, தான் உயிர பணையம் வச்சி இவன் உயிர பாதுகாக்க வந்திருக்காங்க, அவங்களை மதிக்க சொல்லு! அவன் நமக்கு செய்றான் தான் அதுக்காகலாம் என்னால என்னை மாத்த முடியாது நான் இப்படி தான்” என்று அறைக்குள் சென்று விட்டான்.
அவனோ துருவனை பார்க்க, துருவனோ” என் முடிவை மாத்திக்க மாட்டேன், அவளை வேலைய விட்டு அனுப்பாம ஓய மாட்டேன். அதுக்காக என்ன வேணாலும் செய்வேன். எது வேணும்னாலும் பேசுவேன் டா” என்று அவன் இன்னொரு அறைக்குள் செல்ல, நடுவே இவர்கள் தான் முழித்துக் கொண்டிருந்தன
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
2
+1
+1

