
“பிளடி , ஸ்கவுண்டர்…” என ஆரம்பித்து ஆங்கில கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் சொல்லி, வீட்டை அடையும் வரை அவனை உள்ளுக்குள் அர்ச்சித்து கொண்டு தான் இருந்தாள் ஜெஸி.
துப்பாக்கி முனையை நெற்றியில் வைத்து எச்சரிக்கை பின்பும் அவன் அடங்க வில்லை… வேண்டுமென்றே தன்னை சீண்டி, வம்பிழுத்து, கோபத்தை தூண்டி தன்னை வெறுப்பேத்தி எப்படியாவது இந்த வேலை வேண்டாம் என்றும் ஓட வைக்க இந்த முயற்சி என்று அவள் அறிந்திருந்தாலும்… அவனது எல்லை மீறின பேச்சுகள் எல்லாம் அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை…
கணவனை கொலை செய்தவர்களை பற்றிய உண்மைகளை அறியும் வரை தன்னுக்குள் இருக்கும் இந்த பொறுமையை காக்க வேண்டும் என்று மனதிற்குள் சூளுரை எடுத்துக் கொண்டு, தன்னை முழுவதுமாக சாந்தப் படுத்திக் கொண்டு முகத்தில் எதுவும் காட்டாது வீட்டிற்குள் நுழைந்தாள் ஜெஸி.
அவளை கண்டதும் ‘ அம்மா ‘ என்று ஓடி வந்த மகனை கொஞ்சம் எட்ட நின்று ஒரு கையை நீட்டி எச்சரிக்க, அவனும் இரு கைகளை தூக்கி “ஓகே போய் பாத் பண்ணிட்டு வாங்க ! வெயிட் பண்றேன்” என்று அழகாய் தலையை சாய்த்து சொன்னவனின் அழகை கண்ணில் நிரப்பிக் கொண்டு அவனை போல தலையை சாய்த்து காற்றில் முத்தத்தை கொடுத்து விட்டு அறைக்குள் நுழைந்து குளிக்க சென்றாள்.
அவள் குளித்து முடித்து வெளியே வர, உணவு மேசையில் இரவு உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் ஆரோக்கியா ! டெனியோ தாத்தாவிடம் விளையாடிக் கொண்டிருந்தான்.
தாய் வந்ததும் அவளிடம் தாவ, அவனை மடியில் அமர்த்தி கொஞ்சி விட்டு, இன்று பள்ளியில் நடந்ததை கேட்க, அவனும் அனைத்தையும் சொல்ல கதை போலக் கேட்டாள். அவன் பேசி முடித்ததும் முத்தம் வைத்தவள் நிமிர்ந்து ஆப்ரஹாமை பார்த்து “மாமா, அத்தை உங்க கிட்ட முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லணும்”என்றாள் சற்று தயங்கி.
“முதல்ல சாப்ட வா ஜெஸி. சாப்பிட்டே சொல்லு”என்றார் ஆரோக்கியா. அவளும் மகனை தூக்கி கொண்டு உணவு மேசையை நோக்கி நடந்தாள் அவனை அமர்த்தி தானும் அமர்ந்தாள். அவனுக்கும் இவளுக்கும் ஆப்ரஹாமிற்கும் சப்பாத்தியை வைத்தார் ஆரோக்கியா. அவரையும் அமர்த்தி சாப்பிட சொன்னவள் மகனுக்கு பிய்து போட்டு குருமாவை ஊத்திக் கொடுக்க, அவனும் தொட்டு தின்றான். அவன் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்தவள் மாமனாரின் அழைப்பில் தான் நிமிர்ந்தாள்.
“சொல்லுமா என்ன விஷயம்?” எனக் கேட்டார்.
பெருமூச்சை இழுத்து விட்ட படி பேச ஆரம்பித்தாள் “ஒரு பைவ் டேஸ் கோவா போறது போல இருக்கு மாமா ! என் டீம்ல இருக்க ரவி, ஶ்ரீ, அசோக்கை அனுப்புறதா தான் சொன்னேன். ஆனா அவங்க கேட்கல, நாங்க ஐஞ்சு பேருமே போக வேண்டிய சூழ்நிலை.. போய் தான் ஆகனும் மாமா, நோ அதர் ஆப்ஷன்… போயிட்டு வரட்டுமா ?”என தயங்கியே கேட்டாள்.
அவளது தயக்கம் இருவருக்கும் புரியாமல் இல்லை கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, “நீ சொல்ல வரது எங்களுக்கு புரியுது மா. இதுல என்ன தயக்கம்?? வேலைன்னு வந்துட்டா போய் தானே ஆகனும்… நீ போயிட்டு வா டெனிய நாங்க பார்த்துக்கிறோம்” ஆரோக்கியா சொல்ல அவள் இதழ்களில் புன்னகை சூடிக் கொண்டது.
“எனக்கு தெரியாததா மா உன் வேலையை பத்தி ! என்னைக்கும் உன் மேலே இருக்கற நம்பிக்கை மாறாது டா எங்களுக்கு! நீ எங்களுக்கு மருமக இல்லை மகள். மகளை போய் தப்பா நினைப்போமா? நீ பத்திரமா போயிட்டு வா மா !”என்றார் ஆப்ரஹாம்.
இருவரின் நம்பிக்கையும் பாசத்தையும் கண்டு நெகிழ்ந்து போனாள் ஜெஸி. கண்களின் விளிம்பில் துளிர்த்த நீரை காட்டிக் கொள்ளாமல் மறைத்து விட்டு அவர்களுடன் சிரித்தப்படி உண்டாள்.
இரவு உணவை முடித்து விட்டு இருவரிடமும் சொல்லிக் கொண்டு மகனை தூக்கி அறைக்குள் சென்றாள். மகனை மெத்தையில் அமர வைத்து அருகே அவளும் அமர்ந்தவள் அவன் பிஞ்சு கைகளை தன் கைகளுக்கு வைத்துக் கொண்டு, அவனிடம் “அம்மாக்கு ஒரு பைவ் டேஸ் ஹெவி வர்க் செல்லம்… அதுனால அம்மா வேற ஊருக்கு போகணும் , அம்மா இல்லாம டெனி தாத்தா , பாட்டி கிட்ட சமத்தா இருக்கணும் இருப்பீங்களா? அம்மா டெனிக்கு பிடிச்சத வாங்கிட்டு வருவேனாம் ஓகே வா அம்மா போகட்டுமா?”எனக் கேட்டதும்.
“ஒகே மா ! ஆனா சீக்கிரமா வந்திடனும்…!”என ஒற்றை விரலை நீட்டி எச்சரிக்க , அதில் குட்டி முத்தம் வைத்தவள் அவன் நெற்றி முட்டி,”லேட் பண்ண மாட்டேன். என் டெனி குட்டிய தவிக்க விடமாட்டேன். பைவ் டேஸ் தான், அப்புறம் சீக்கிரமா வந்திடுவேன்”என்க, அவளை தாவி அணைத்துக் கொள்ள மகனை இறுக்க அணைத்துக் கொண்டாள்.
அவனை உறங்க வைத்தவள், தேவையான உடைகளையும் பொருட்களையும் பெட்டியில் அடுக்கி வைக்க ஆரம்பித்தாள்.
அவன் சொன்னது போல் இல்லாமலும் ஃபார்மல் ஆடையும் இல்லாமல் நார்மலாக எடுத்துக் வைத்துக் கொண்டிருந்தவளின் கண்ணில் பட்டது அந்த உடை… பத்து வயது குழந்தையின் ஆடைப் போல இருந்தது. ஆனால் அது அவளுடைய ஆடை தான் ஆரோன் ஆசையாக மனைவிக்கு வாங்கிக் கொடுத்த ஆடை…
அதே கோவாவில் தேனிலவுக்கு சென்ற நேரம் அங்கிருப்பவர்களை போல இருக்க எண்ணி ஆசையாக வாங்கி வந்து நீட்டியவனுடமிருந்து பறித்து பிரித்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி. அதை தன் உடல் மேல் வைத்து பார்க்க தொடை வரை தான் இருந்தது. போட்டால் மிக இறுக்கமாக இருக்கும் என்று அறிந்தவள் ஆரோனை முறைக்க, “என்னடி ?”என்றான்.
“ம்ம்… என்ன இது? பத்து வயசு குழந்தை போட வேண்டிய ட்ரெஸ் வாங்கிட்டு வந்து என்னை போட சொல்ற? இதை போட்டு உன் கூட கோவால ஊர்வலம் வரணுமா?”பல்லை கடித்துக் கொண்டு கேட்டாள்.
“ஆமா வரணும்… இந்த ஏரியா ஒரு மினி ஃபாரின் டி. இங்க அதுக்கு ஏத்தது போல இருக்காம சிஸ்டர்ஸ் கெவுன போல முழுசா போத்திட்டு வராதடி ! இப்படி போட்டு வாயேன் , நல்லா இருக்கும் டி!”என்றான்.
“இந்த ஊருக்கு ஏத்தது போல இருக்கணும் நினைக்கிறது சரி. ஆனா நான் ஏன் எனக்கு அன்கன்ஃபர்டபிலா இருக்க ட்ரெஸ் போட்டுக்கணும்? எனக்கு இந்த ட்ரெஸ் ஒத்து வராதுன்னு உனக்கு தெரியாதா? ஐ ஹேட் திஸ் கைண்ட் ஆப் டிரேஸ் ஆரோ !”என்றாள்.
அதை அவளிடம் இருந்து பிடிங்கி மெத்தையில் தூரமாக எறிந்து விட்டு ” உனக்கு எது வசதியா இருக்கோ அதை போட்டுவா !” என கொஞ்சம் முக வாட்டத்துடன் சொன்னான். அவளும் தான் எடுத்து வந்த உடையை அணிந்து வர, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே அவளுடன் சுற்றி பார்க்க சென்றான்.
அவளும் கெஞ்சி கொஞ்சி பேசி அவனை சமாதானம் செய்து அன்றைய நாளை மாற்றியவள், இரவில் அறைக்கு வந்து தஞ்சம் கொள்ள அவனோ மெத்தையில் சாய்ந்து அமர்ந்து செல்லை நோண்ட இவளோ குளித்து முடித்தவள், அவனை ஏமாத்தாது அவன் எடுத்துக் கொடுத்த ஆடையை போட்டு கொண்டு அவன் முன் வந்து நின்றாள்.
பாதி தொடை தெரிய, இறுக்கி பிடித்து முன் அழகை எடுத்துக் காட்ட, சிறு நூல் வடிவில் ஸ்லிவ் இருக்க, தலையை விரித்து விட்டு அவன் முன் வந்து நின்றாள். ‘ வாவ் ‘ என்று வாயை பிளந்தவன், அவளை இழுத்து மெத்தையில் போட்டு, கழுத்தில் முத்தம் வைக்க போனவனின் வாயை தன் கரத்தால் அடைக்க, சலிப்பாக “பச்… என்னடி?”என்றான்.
“என் கேள்விக்கு பதில் சொல்லிட்டு என்னை என்ன வேணா பண்ணிக்கோ !”,என்றாள்.
“அதை நீ சொல்லணுமாக்கும்…! சரி கேள்வி என்ன?”என்றான் அவள் பக்கவாட்டில் கையை தலையை முட்டுக் கொடுத்து படுத்து கொண்டு கேட்டான்.
“இந்த ட்ரெஸ் போட்டுட்டு உன் கூட வந்திருந்தால் உனக்கு பிடிச்சிருக்குமா? நீ ஹாப்பியா இருந்திருப்பீயா ஆரோ? “அவள் கேட்க,
உதட்டை பிதுக்கியவன்”நிச்சயமா ஹாப்பியா இருந்திருக்க மாட்டேன். ஒரு புருஷனா பொண்டாட்டி மேலே வர, பொஸ்ஸஸிவ் வந்திருக்கும், உன்னை எவனும் பார்க்க கூடாதுன்னு உன்னை புரோடெக்ட் பண்ணியே என் டே முழுக்க போயிருக்கும், நான் என்ஜாய் பண்ணிருக்க மாட்டேன். என்னோட சேர்ந்து நீயும் என்ஜாய் பண்ணிருக்க முடியாது. ஆனா இப்போ நான் மட்டும் பார்த்து பார்த்து ரசிச்சு என்ஜாய் பண்ண போறேன்… சாரி டி என் ஆசை ரொம்ப எக்ஸ்டிரிமா போயிடுச்சி !சாரி அகைன்டி”என்று ஒற்றை காதை பிடித்து கொண்டு விழியாலே கெஞ்ச, அவன் கையை தட்டி விட்டு,”உன் சாரிக்காக இதை நான் கேட்கல, என் மேல சின்ன கோபம் உன் நெஞ்சில ஓரத்தில இருந்தாலும் அதை போக்கறதும், உன் ஆசையோடு விபரீதத்தை எடுத்து சொல்லவும் பொண்டாட்டியான எனக்கு கடமை இருக்குல அதான் அப்படி கேட்டேன். அதே பொண்டாட்டிக்கு புருஷனோட ஆசையை நிறை வேத்தற கடமையும் இருக்கறதால தான் இதை போட்டேன். எப்படி?”என்று புருவம் உயர்த்த,
“சொல்ல வார்த்தையே இல்ல செயல்ல காட்டட்டுமா?”என்று கேட்டு அவள் அனுமதியை கூட பெறாமல் அவள் ஆற்றிய கடமைக்கு அவளை போற்றி தக்க பரிசை கணக்கு இல்லாமல் கொடுத்தான்.
அந்த ஆடையில் வாழ்ந்து கொண்டிருந்த அவனது நினைவு அவளையும் தொற்றிக் கொள்ள, அவன் புகைப்படத்தை பார்த்து “லவ் யூ ஆரோ”என்றாள் கண்ணீருடன்.
****
மறுநாள் விடிய, அத்தை மாமாவிடம் சொல்லி விட்டு, மகனை அழைத்து கொண்டு சில அறிவுரைகளை கூறி, அவனை இறுக்க அணைத்து முத்தம் வைத்தாள்.
பின் அவனை பள்ளியில் இறக்கி விட்டு, நேராக வீரமதி இல்லத்தில் தான் காரை நிறுத்தினாள்.
தனது பயணப் பெட்டியை இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
அவனது நண்பர்கள் கூடத்தில் அமர்ந்து வீரமதியுடனும் ருத்ரனிடமும் பேசிக் கொண்டிருக்க, ஓரமாக ரவி, ஶ்ரீ. , அசோக் , தன்யா ஜெஸிக்காக , காத்திருந்தனர்.
அவளும் உள்ளே நுழைய ஏதோ ஒரு ஆவலில் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தது துருவனின் இதயம் , அதை அறிந்தும் அறியாது அமர்ந்திருந்தவனுக்கு அவனை நினைத்தே அவனுக்கு வியப்பாக இருந்தது.
தன் பேச்சை கேட்க மாட்டாள் என்று தெரிந்தும் ஒரு எதிர்பார்ப்போடு அமர்ந்திருக்க, அவளோ அவனது எதிர்பார்ப்பை உடைத்து ஏமாற்றம் தரும் விதமாகவே ஃபோர்மலில் வந்து நின்றவளை ஏகத்துக்கும் அவன் முறைத்தான். அவளோ அதை அசட்டை செய்தாள்.
வீரமதியிடம் சொல்லிக் கொண்டு அவர்கள் கிளம்பிட, காரில் ஏற இருந்தவன் அவளை முறைக்க அவளோ, அவனுக்கும் மட்டும் கேட்கும் படி, “நான் உனக்கு பாடிகார்ட் தான், நீ சொல்ற டிரஸ் எல்லாம் போடற அளவுக்கு அடிமை இல்ல… போக போறது கண்ணுக்கு குளிர்ச்சியான இடம் . ஆனா அதை பார்க்க உனக்கு ரெண்டு கண்ணு வேணும் இல்லையா இழந்திடாத என்ன !” என்று தன் கூலர்ஸை ஊதி விழிகளில் அணிந்து விட்டு சிரித்துக் கொண்டே எச்சரிக்கை செய்து விட்டு முன்னாள் ஏறிக் கொண்டாள்.
“டாமிட் !”என அவளை வாய்க்குள் திட்டி விட்டு உள்ளே ஏறிக் கொண்டான்.
அவர்களது கோவா பயணமும் தொடங்கியது..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
+1

