Loading

துருவனிடம் அடிவாங்கி  அவமானத்துடனே இல்லம் வந்து சேர்ந்தாள் ரிஷிகா. அதற்குள் அங்கு மிலால் அவளுக்கு முன் வந்து சேர்ந்திருக்க  தூக்கி வாரி போட்டது அவளுக்கு.

வாசலில் மிலாலின் காரை கண்டதுமே அவளது நெஞ்சில் நீர் வற்றிப் போனது. வீட்டினுள் கடினப்பட்டு நுழைந்தாள். கூடத்தில் யாருமில்லை. ‘அறையில் இருப்பான் ‘ என்று எண்ணிக் கொண்டவள், வேகமாக வேறு அறைக்குள் நுழைந்து , அங்கிருந்த குளியலறைக்குள் புகுந்தவள், கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தாள்.

அவனது  ஐவிரல்களும் பதிந்திருந்தன. அதை அவமானச் சின்னமாய் எண்ணினாள்  

‘ குப்பையை தூக்கி என் பெட்ல  வைக்கச் சொல்றியா? ‘ என்று அவன் பேசினதெல்லாம் நினைவாக வந்துச் செல்ல, அவளுக்கு கோபம் தலைக்கேறியது.

அவனை எப்படியாவது தனது காலில் விழ வைக்க வேண்டும்… ‘ குப்பை ‘ என்று சொன்னதோடு ‘அவனது மெத்தையில் வைக்க வேண்டுமா?’ என்று கேட்டதற்காகவாது அவனை கல்யாணம் செய்து அவனது  அறையில் அவனை ராஜ்ஜியம் செய்ய வேண்டும் என்று சபதம் கொண்டவள் தன்னை ஒருவாறு சமாளித்து விட்டு, கன்னத்தில் பதிந்த தடத்தை  மேக் போட்டு மறைத்தவள்,  ‘ உப் ‘ என இதழை குவித்து ஊதியவள் வெளியே வந்து தனது அறையை நோக்கி நடந்தாள்.

அறைக்குள் அவள் இல்லாததும் நெற்றியை நீவிக் கொண்டே குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். அவளுக்கு அழைக்கலாம் என்று எண்ணியவர் ‘எப்போது தான் வருகிறாள். பார்போம்’ என்று நேரத்தை பார்க்க ஆரம்பித்து விட்டார். ஆனால் அவளோ சீக்கிரமாகவே வந்து விட்டாள்.

அறைக்குள்ளே சிறு இடத்தில் மது பொத்தல்கள் வைத்து பாரைப் போன்று பரப்பிக்கிடக்க, அதில் ஒன்றை எடுத்து சிறு குடுவையில் ஊற்றி குடித்தப்படி  நேரத்தை பார்த்து கொண்டிருந்தார்.

அவளும் அறைக்குள் நுழைந்ததும் குடித்துக் கொண்டிருக்கும் கணவனை தான் பார்த்தாள். அவரும் இவளை தான் பார்த்து கண்களால் அருகே அழைத்தார். முகத்தில் வியர்வை துளிர்க்க, எச்சிலை தொண்டைக்குழியில் பயத்தோடு விழுங்கி விட்டு அருகே சென்றாள். அவளை அமரச் சொல்ல அவளும் அமர்ந்தாள்.. அடி வாங்கிய கன்னத்தை தான் மெதுவாக வருடினார்.

“என்ன இங்க வந்து மேக்கப் போட்டு இருக்க?கோபமா இருக்க என்னை மயக்கவா?”என்று கேட்டு சிரிக்க, அவளுக்கோ கடுப்பாக இருந்தது. முகத்தில் காட்டாது அவரது கையை தட்டி விட்டாள்.

அவளது கன்னத்தை வருடிய கை அவள் தட்டியதும் அப்படியே நின்றது.

“என் கோபத்தை மறைக்க மேக்கப் போட்டிருக்கேன்னு கூட சொல்லலாம்”என்று அங்கிருந்து எழுந்து செல்ல இருந்தவளை கையை பிடித்து தன்னருகே இழுத்துவர் , இடையில் நகங்கள் புதைய பற்றிக் கொண்டு தன்னுடன் இறுக்கி அவள் முகம் நோக்கி குனிந்தவர் “உனக்கு என் மேலே கோபமா? ஹாஹா !”என கேட்டு அறையே அதிர சிரித்தார்.

முதுகெலும்பு இல்லாத பூச்சிக்கு கொடுக்கு இருக்குனு காட்டுதோ ! என் கிட்ட உன் கோபத்தை காட்ட உனக்கு எப்படி தைரியம் வந்தது? நான் சொன்ன படி தான் நீ நடந்துக்கணும் சொல்லிருக்கேன் மறந்து போச்சா?”என கேட்டு அவரது தடித்த உதடுகளை வைத்து வன்மையாக கன்னத்திலும் இதழிலும் பதிக்க, உள்ளே அருவருப்பு பட்டவள், முகத்தில் காட்ட முடியாமல் கஷ்டப் பட்டாள்.

“அப்போ உணர்ச்சி இல்லாத பொம்மையா உங்க கூட இருக்கணுமா?”என பொங்கி வந்த கோபத்தை அடக்க முடியாமல் வார்த்தைகளாக தன்னை மீறி கொட்டி விட்டவளை, அதிர்ந்து பார்த்தவர் முகம் கடுகடுக்க, “உணர்ச்சி உள்ள நீ, நான் ஆட்டி வைக்கற பொம்மையா தான் இருக்கணும்… நீ காட்ட வேண்டிய  உணர்வுகள் கூட நான் சொல்றதா தான் இருக்கணும். காட் இட் ?!”என முகத்தில் அவர் காட்டிய கடுமையை கண்டு கொஞ்சம் அஞ்சி தான் போனாள்.

“ம்ம்…”என கண்களால் அவர் மெத்தையை காட்ட, அவளோ வேண்டா வெறுப்பாக அமளியில் சென்று விழுந்தாள். ஒரு மிடறு மதுவை உள்ளுக்குள் விழுங்கி  குடுவையை மேசையில் வைத்து விட்டு வாயை துடைத்தவர், அவளை பார்த்துக் ஏளனமாக  சிரித்துக் கொண்டே  அவரது ஆடையை அகற்றி அவள் மீது படர்ந்தார்.

அவர் சொன்னது போல தனது கைப்பாவையாக அவளை ஆட்டி வைத்து, வன்மையாக அவளை ஆட்கொண்டு அவள் வலியில் துடிப்பத்தை ரசித்து விட்டு  விலகி படுத்துக் கொண்டார். 

வலியில்  போர்வைக்குள் சுருங்கி படுத்துக் கொண்டவளின் விழிகள் சொட்டு சொட்டாக  நீரை வார்த்தன. துருவன் கொடுத்த அவமானமும், மிலால் கொடுத்த வலியும் அவளை உள்ளுக்குள் வேறு விதமாக செதுக்கி கொண்டிருந்தது. எப்படியாவது துருவனை வைத்து மிலாலிடமிருந்து தப்பிச் செல்ல வேண்டும்.. துருவன் கொடுத்த அவமானத்திற்கு அவனை பழி தீர்க்க வேண்டும் என்று தனக்குள்ளே ஒரு சபதம் ஏற்றுக் கொண்டாள்.

****

சிடுசிடுவென முகத்தை வைத்துக் கொண்டு இல்லம் நுழைந்தவன் தாயை கண்டதும் முகமாறி  ஆச்சரியம் கொண்டது. உள்ளே எழுந்த கடுப்பு  , கோபம்  எல்லாம் அவனது தாயின் முகத்தை கண்டதும் பறந்து போனது.

வேகமாக வீரமதியின்  அருகே வந்து அமர்ந்தான்.”மாம்… என்ன அதிசயமா இருக்கு ! இந்நேரம் நீங்க ஆபீஸ்ல தான இருப்பீங்க… இங்க என்ன?”எனக் கேட்டான்.

“கொஞ்சம் தலைவலி துருவா ! அதான் ருத்ரன பார்க்க சொல்லிட்டு நான் வீட்டுக்கு வந்துட்டேன்”

“ஆர் யூ ஓகே மாம்…! டாக்டர் கிட்ட போலாமா?”

“தேவையில்ல துருவா ! சின்ன தலைவி தான் உன் ராதாமா கொடுத்த இஞ்சி டீல எல்லாம் போயிடுச்சி !சொல்லு நீ எங்க போயிட்டு வர?”என்று மகனிடம் விசாரிக்க,

“பிஸ்னஸ் விஷயமா பிரண்ட்ஸ் கிட்ட பேசிட்டு வரேன் மாம்”என்று அவர்களுடன் கலந்து பேசியதை சொன்னான்.

“ம்ம்… குட் ! எனக்கு உன் பிரண்ட்ஸ் பத்தி நல்லாவே தெரியும்… அவங்க மிடில் கிளாஸா இருந்தாலும் அவங்க கூட பழக விட்ட காரணம் அவங்க கேரக்டர் மட்டும் தான். பணக்காரனோட சேர்ந்து உன்னால  வாழ்க்கையோட போராட்டத்தை தெரிஞ்சிக்க முடியாது துருவா. மிடில்  கிளாஸ்ல வாழ்றவங்களுக்கு தான் வாழ்கையோட போராட்டம்னா என்னானு  தெரியும். அவங்களுக்கு தான் ஒழுக்கமா வாழ தெரியும்… நீ அவங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கணும்  அம்மா ஆசைப் பட்றேன். அதே நேரம் பணத்தை காட்டி அவங்களை மாத்திடதே ! பணமோ பகட்டோ பெருசு இல்ல… ஒழுக்கம் மட்டுமே பெருசு !”என்று வகுப்பு எடுத்தார். அவரிடம்

“சரி மாம் !”என்றவன், அவர் எடுத்த வகுப்பிற்கு உள்ளுக்குள் எரிச்சல் பட்டு, வெளியே மறைத்து  நல்ல பிள்ளையைப் போல தலையை ஆட்டிக் கொண்டு கேட்டான்.

“உனக்கு என்ன தேவையோ அதை தயா கிட்ட கேளு ! அவன் பார்த்து செய்வான். உனக்கு ஆபீஸ் வேணும்னா நம்ம **** பில்ட்டிங் சும்மா தான் இருக்கு… உன் இஷ்டப்படி நீ மாத்திக்கோ ! என் தயவுல இருக்காம சொந்தக்கால்ல நிக்கணும் நினைக்கற உன் முடிவுக்கு நான் எப்பவும் கட்டுப்படுவேன் துருவா ! இதுல உன் பியூசர் மட்டுமில்ல உன் பிரண்ட்ஸ் பியூசர் இருக்கு சோ கேர்ஃபுலா இரு, வீரமதியோட பையன் தோல்விய தழுவினான் இருக்க கூடாது !”என்று சொல்லி விட்டு தன் அறைக்கு செல்ல, அவரையே பார்த்து விட்டு அமர்ந்து விட்டான்.

நாட்கள் ரெக்கை கட்டி பறக்க, நண்பர்களுடன் சேர்ந்து செய்ய போகும் தொழிலுக்காக  முனைப்போடு அலைந்து  திரிந்தான். நண்பர்கள் கொடுத்த பணத்துடன் மேற்கொண்டு பணத்தை போட்டவன், தொழிலுக்கு  தேவையானதை செய்தான்.

அவனுக்கு சொந்தமான இடத்தில் இருந்த சிறு கட்டிடத்தை தனது அலுவலகமாக  வைத்துக் கொண்டவன் உள்ளுக்குள் சில வற்றை மாற்றி அமைக்க எண்ணி இருந்தான்.

இன்டரியர் வர்க், அலுவலகம் பார்க்க அழகாக இருக்க மெனக் எடுத்தான்.. வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் கொடுத்து ஆட்களை தேர்வு செய்தான். சம்பளம்  நியமித்தான். அலுவலகம் தொடங்கும் முன்னே சில ஆடர்களையும் எடுக்க ஆரம்பித்தான்.

பம்பரம் போல சுற்ற ஆரம்பித்து விட்டான். அவனுடன் ஜெஸியும் அவளது கைகளும் உடன் சுற்றின.  அவனது வேலைகள் ஒரு புறம் இருந்தாலும் ஜெஸியை வம்பிழுக்காமல் அவனது அன்றைய நாள் முடியாது.அதை செய்துகொண்டு தான் இருந்தான்.

அன்று நண்பர்களுடன் அலுவலகம் வந்திருந்தான், ஜெஸியின் கூட்டம் உடன் இருந்தது.

“டேய் ஆபீஸ் தான இது? வேற எதுவும் கிளப்பா ! எனக்கு ஆபீஸ் பீலே வரல டா துருவா !”என்றான் வித்யாசாகர்.

“அடேய் !! ஆபீஸ் பீல் வரக் கூடாதுன்னு தான் இன்டீரியர் டிசைன் கொஞ்சம் வித்தியாசமா பண்ண சொல்லிருக்கேன். அதுக்காக ஆபீஸ் பீலே வரலேன்னு வேலைய பார்க்காம இருந்திடாத ! இந்த கூரை கூட இல்லாம தெருவுல நிக்க வேண்டியது வந்திடும் “என்றான் துருவன்.

“இந்த இன்டீரியர் வரக் பார்க்க புது எனர்ஜி கொடுக்குது மச்சி ! சோர்வா இருப்பவனும் இந்த வரக் பார்த்தால் சோர்வை தூக்கி போட்டு வேலை பார்ப்பான்…! நல்ல இமாஜின் மச்சி “என்று ஆஜீத் அவனை பாராட்டினான். 

“தேங்க்ஸ் மச்சி !”என்றான்.

“ஆமா மச்சி ! அதென்ன ரூம் ! நமக்கா?”

“எந்த ஊர்ல ஆபீஸ் வேலை பார்க்கறவனுக்கு ரெஸ்ட் எடுக்க ரூம் கொடுக்கறான் அதுவும் ஏசியோட?”ஆஜித் கேட்க, 

“அதானே அப்போ அது யாருக்கு?” சாகர் கேட்க, “அதுவா? பாடிகார்ட்ஸ்க்கு அந்த ரூம்… என்ன பாதுகாக்க வந்திருக்காங்க…  அவங்களுக்கு ரெஸ்ட் தேவை படும்ல லேடிஸ் வேற இருக்காங்க… சோ அவங்களுக்காக “என்றான்.

அதை கேட்ட, ஜெஸியோ தன்யாவை பார்த்து உதட்டை பிதுக்கினாள். “இவர் என்ன மேக் மேம் எனக்கு புரியல ! நம்மளை தான் அவருக்கு பிடிக்காதுல அப்புறம் எப்படி நமக்காக ரூம்  அரேஞ்ச் பண்றார்? என்னவா இருக்கும் மேம்?” தன் சந்தேகத்தை கேட்டாள்.

“இதுல சொல்றதுக்கோ  நினைக்கறதுக்கோ பெரிசா  ஒண்ணுமில்ல தன்யா ! ஆபீஸ் ஓபன் பண்ண போறது யாரு வீரமதி மேம்… நிச்சயம் ஆபீஸ் சுத்தி பார்ப்பாங்க… நமக்கு ரூம் இல்லாமல் வெளிய நின்னா சும்மா இருக்க மாட்டாங்க… அதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடி சார் நல்ல பிள்ளையாட்டம்  அரேஞ்ச் பண்ணிருக்கார். நீ ஒன்னும்  அவன் திருந்திட்டான் நினைச்சிடாத ! எல்லாம் சுயநலம் தான். ரூம்மையும் கொடுத்து இம்சையும் கொடுக்க போறான் வேற எதுக்கு? “என்றாள். தன்யாவோ  சிரித்து விட்டாள்.

அவள் துருவனை கணித்தது சரி என்பது போல அவனும் நண்பர்களிடம் அதையே தான் வெறுப்புடன் சொல்லிக் கொண்டிருந்தான்.

“நமக்கு ரெஸ்ட் எடுக்க ரூம் இருக்கோ இல்லையோ !அவங்களுக்கு கொடுத்தே ஆகனும் இல்ல வீரமதி  என்னை அவ்வளவு தான் ஒரு வழி ஆக்கிடும்! எல்லாம் என் நேரம் டா !ரூம் மட்டும் கொடுத்திருக்கேன். ஆனா அதுல அவங்களை நிம்மதியா இருக்க விட்டாத்தானே !”என வன்மமாக சிரித்துக் கொண்டான் துருவன்.

****

“மேம் என்னால  ஒரு வாரமெல்லாம் ட்ரிப் போக முடியாது !”என்று சன்னமாக நின்றவள் சொல்ல,

“அப்போ இந்த வேலை வேணாம் எழுதி கொடுத்துட்டு போக சொல்லுங்க மாம்… வேலை பார்க்க முடியாது சொல்றவங்களுக்கு எல்லாம் எதுக்கு வீராப்பு … எழுதி கொடுத்துட்டு  ஸ்கூல் பொண்ணுகோ பையனுக்கோ பாடிகார்ட் வேலை பார்க்க சொல்லுங்க அவங்களுக்கு எல்லாம் அதான் சரியா இருக்கும்…”என நக்கலாக பேசி அவளது கோபத்தை மேலும் ஏற்றி விட வேறு வழியில்லாமல் வருவதாக ஒத்துக் கொண்டாள் ஜெஸி. துருவனோ விஷமமாய் சிரித்து கொண்டான்

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்