
ஹேய் ரிஷிகா ! என்னடி நான் பேசிட்டே இருக்கேன். பதில் பேசாம சிரிச்சிட்டு இருக்க, ஏதாவது சொல்லுடி?” தன் பேச்சிற்கு எதிர்வினைக் காட்டாமல் விரக்தியில் சிரித்துக் கொண்டிருக்கும் ரிஷிகாவை உலுக்கி கேட்டாள் அவளது தோழி ரேகா.
“என்னடி சொல்லச் சொல்ற? என்னால எப்படிடி அந்தக் கிழவன விட்டுட்டு வர முடியும்??? யாரை நம்பி வர சொல்ற??? நான் இருக்க நிலமையில வெளிய வந்தால் நான் பிச்சை தான் எடுக்கணும். பிச்சை எடுக்கச் சொல்றீயா என்னை?? போடி”என்றாள் கடுப்பாக.
“அதுக்காக உன்னோட இந்த இளமையும் அழகையும் அந்த கிழவனுக்கு அர்ப்பணித்துட்டேன் சொல்லி உன் வாழ்க்கைய அவன் கூடவே கழிக்கப் போறீயா??? பிடிச்சது தான் பிடிச்ச, ஒரு யங் பிஸ்னஸ் மேனா பிடிக்கக் கூடாதா?? அந்தக் கிழவன் தான் உனக்கு கிடைச்சானா???”
“நான் என்னடி பண்ண? அந்த நேரத்துல அம்மா உயிரை காப்பாத்தணும்ன்ற எண்ணத்தில அவன் என்ன சொன்னாலும் தலையாட்டினேன். இப்பையும் அதான் பண்றேன். யாருக்காக என் உடம்பையும் வாழ்க்கையும் அடகு வச்சேனோ அவங்களே என்னை புரிஞ்சுக்கல. என்னை தான் தலை மூழ்கிட்டாங்காலே.
எனக்கு ஏதுடி குடும்பம் எல்லாம். அந்தாள விட்டு வந்தால், எனக்கு ஏது டி நாதி எல்லாம். எவன், நான் படிச்ச படிப்புக்கு வேலை கொடுப்பான்? அந்தாள போல தான் என்னை வச்சுக்க கூப்பிடுவானே தவிர, பொண்டாட்டினு சொல்லி வீட்டுக்கு கூட்டுப் போக மாட்டான்டி எல்லாம் என் விதி.
அழக கொடுத்து மொத்த வாழ்க்கையையும் பறிச்சிட்டார்டி அந்தக் கடவுள்” என விரக்தியாக உதடுப்பிதுக்கிச் சொன்னவளை பாவமாகப் பார்த்தாள் அவளது தோழி.
பிழைப்புக்காக தமிழ் நாட்டிலிருந்து மும்பை சென்றது ரிஷிகாவின் குடும்பம். தங்கை , தம்பி, அன்னை , தந்தை என ஐவராக குடிசையில் இருந்தனர். தம்பி, தங்கை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்க, அவளது தாய் , தந்தை அருகே இட்லி கடைப் போட்டிருந்தார்கள். இவள் மட்டும் படித்த படிப்புக்கு வேலை தேடிக் கொண்டிருக்க, அவள் படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை.
அவளது அழகில் மயங்கிய மிலால் அவளை பி.ஏ வாக தனதருகில் வைத்துக் கொண்டார். அனைத்தும் நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது. மாதங்கள் கடக்க முதலாளியின் ஆசை அவளுக்கு புரிய வேலையை விட்டு நிற்க துணிந்தாள்.
ஆனால் விதி, அவளது தாயின் மூலம் அவளை பிடிக்காத வழியில் அழைத்து சென்றது.
அவளது தாய்க்கு இதயம் மாற்று சிகிச்சை செய்ய நேர்ந்தது. தன் முதலாளியிடம் உதவி கேட்க, அவரோ பணத்தை தந்து மாறாக அவளையே கேட்க, வேறு வழியின்றி அவர் கேட்டது போல திருமணம் செய்து கொண்டாள்.
இதை அறிந்த குடும்பத்தினர். அவளது நிலையைப் புரிந்து கொள்ளாது அவளை வீட்டில் சேர்க்காமல் ஒதுக்கி வைத்து விட்டனர். அவளும் மிலாலே கதியென ஒரு பொம்மை போல உயிர்பில்லாமல் வாழ்கிறாள்.
“இப்பையும் ஒன்னும் கேட்டு போகல. ஒரு பணக்காரனா பார்த்து மிலால் கிட்ட இருந்த உன்னை காப்பாத்த உதவி கேளு. அவனும் உதவறேன் சொல்லி உன்னை அந்தாள் கிட்ட இருந்து காப்பாத்தீனா, அவன கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிடு”என்று அவளுக்காக திட்டத்தை வகுத்து சொல்ல,
“எவன்டி என்னை காப்பாத்த, அந்த மிலால் கிட்ட போராடுவான்? இதெல்லாம் நடக்கிற காரியமா??” என சலித்துக் கொண்டு கேட்டாள்.
“ஏன் நடக்காது. இந்த இடத்துல தான் உன் அழக நீ யூஸ் பண்ணனும் ரிஷிகா.உன் அழகுல மயங்கி உனக்காக உயிரையும் கொடுக்கிறேன் சொல்றானோ அவனே உன்னை மிலால் கிட்ட இருந்து காப்பாத்துவான். அவனே போதும் சொல்லி அவன் கிட்ட சரண்டராகிடு !”என்று விவரித்தாள்.
அவளது சொன்னதெல்லாம் ஃபாண்டஸி கதையில் கஷ்டப்படும் பெண்ணை காப்பாத்த வரும் இளவரசனை போல தன்னை ஆபத்திலிருந்து மீட்டு காப்பாத்திச் செல்வது போல கற்பனை செய்து பார்த்தாள். ஏனோ இளவரசனாக துருவன் வந்து போக” திடுக்கிட்டாள்.
அவளை உலுக்கிய ரேகா”என்னடி கற்பனைப் பண்ணி பார்த்தியாக்கும்…?”என அவள் அமைதி அறிந்து கேட்க, அதில் புன்னகைத்தவள்”இதெல்லாம் ஃபாண்டஸிடி கற்பனை பண்ண நல்லா இருக்கும் நிஜத்தில அப்படி எவனும் வர மாட்டான்…” என்றாள் உள்ளே எழுந்த ஏமாற்றத்தோடு.
“அதெல்லாம் வருவான்டி. உன் வாழ்க்கை அவனால மாறணும் இருந்தால் கண்டிப்பா மாறும்டி”என்று அடிச்சி சொல்ல, அவர்கள் இருவரின் கவனத்தை ஈர்த்தது அந்த ஆண்களின் சிரிப்பு சத்தம். இருப்பெண்களும் திரும்பிப் பார்க்க, அங்கே துருவனும் அவனது நண்பர்களும் எங்கிருக்கிறோம் என்பதை மறந்து சிரித்து கொண்டிருந்தனர்.
அனைவரையும் போல் ரேகா அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்பிக் கொள்ள, ரிஷிகாவின் கண்கள் அவ்விடத்தை விட்டு அகலவில்லை. துருவனை விழுங்குவதை போல பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஹேய் என்ன அவனுங்களே பார்த்துட்டு இருக்க? உனக்கு தெரிஞ்சவனா??”எனவும், துருவனை சுட்டிக் காட்டியவள்”அ… அவ.. அவன்…”என்றவள் நடந்ததைச் சொல்ல,
“பேசாம அவன் கிட்டையே உதவி கேளுடி. எனக்கு என்னமோ உன் அழகுல மயங்கி தான் முத்தம் கொடுத்திருக்கணும். உண்மை தெரிஞ்சதும் மழுப்பி இருப்பான். போய் பேசி அவன் கிட்ட உதவி கேளு” என்று அவளை தள்ளாத குறையாக அனுப்ப, அவளும் தயங்கி தயங்கி அவனிடம் பேச சென்றாள்.
அவனோ இருக்கையை விட்டு எழுந்து கழிவறை நோக்கி நடந்தான். அவள் ரேகாவை பார்க்க அவளோ”போ” என்று மேலும் ஊந்தினாள்.
கழிவறை நோக்கி நடந்தவன் அவர்கள் டேபிளுக்கு அருகே அமராமல் தள்ளி அமர்ந்திருந்த ஜெஸியும் அவளுடன் அமர்ந்திருந்த தன்யா, ஸ்ரீயிடம் வந்தான்.
அவன் வந்ததும் எழுந்தாள், “என்ன போலாமா???”எனக் கேட்டாள் சட்டை இழுத்து விட்டபடி.
“இல்ல… கிளம்புறதுக்கு வரல நான். ரெஸ்ட் ரூம் போகணும்”என்றான். அவனை ஒரு மாதிரி பார்த்தவள்”போ ! யார் தடுத்தா??”
“நீயும் வா !”என்றான் சிரிக்காமல்.
“வாட் நான்சென்ஸ் ! நான் ஏன் வரணும்??”என சீற்றமாக கேட்டாள்.
“நீ தான என் பாடிக்கார்ட். என் பின்னாடி தான வரணும்… பாத்ரூம் போற இடத்தில எவனாவது வந்து என்னை பரலோகம் அனுப்ப முயற்சி பண்ணா, நான் என்ன பண்றது??? நீ வெளிய இருந்து வரதுக்குள்ள என் உயிர் வெளிய போயிடும். எனக்கு என் உயிர் ரொம்ப முக்கியம் அதான் கூப்டுறேன் வா”என்று சிறு குழந்தை போல அடம்பிடிப்பவனை கண்டு தன்யாவிற்கும் ஸ்ரீக்கும் சிரிப்பு வந்தது.
பற்களை அரைத்தப்படி அவனை முறைத்தவள்” ஸ்ரீஈஈஈ, அவன் கூட போ !”என்றாள். “எஸ் மேம்” என்று அவனுடன் செல்ல அவனருகில் வந்து நின்றான்.
துருவன் அவளை நக்கலாக பார்த்துவிட்டு கழிவறை நோக்கி செல்ல தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.
“ஏன் மேம் துருவ் சார் உங்களை எப்போதும் வம்பிழுத்திட்டு இருக்கார்?”
“வேற எதுக்கு பொண்ணா பொறந்து அவனுக்கு பாடிகார்டா நிக்கறேன்ல அந்த கடுப்பு தான்”என்றாள் குறையாத கோபத்துடன்.
உள்ளே சென்ற இருவரும் வந்த வேலையை முடித்து விட்டு கண்ணாடி முன் நின்று கைகழுவிக் கொண்டிருந்தனர்.
அவர்களை பின் தொடர்ந்து ரிஷிகா, வெளியே நின்றாள். உள்ளே சற்று தயக்கத்தோடு எட்டிப் பார்க்க, அவன் மட்டும் நிற்பது போல் தெரிய தைரியத்தை வரவழைத்து கொண்டு கதவை திறந்து உள்ள வந்தவள், வேகமாக சென்று அவனை பின்பக்கமாக வந்து அணைத்தாள்.
‘மோகினி பிசாசோ’ என்று பயந்து அவளை தன்னிடம் பிரித்து தூர தள்ளினான். அவளோ தள்ளிய வேகத்தில் தடுமாறி நின்றாள்.
நெஞ்சில் கை வைத்து தன்னை ஆசுவாச படுத்திக் கொண்டவன், அவளை பார்த்தான். அவளும் படப்படப்புடன் அவனை பார்த்தாள்.
“ஆர் யூ மேட் ??? இது ஜென்ஸ் டாய்லேட் கவனிச்சியா இல்லையா??? எதுக்கு உள்ள வந்த நீ??? ஹாவ் டெர் எதுக்கு என்னை கட்டிபிடிச்ச???”அவ்விடமே அதிர கத்தினான்.
“ஸாரி !! நா… நான் ஒரு பிரச்சனையில இருக்கேன்… உன் கிட்ட சொல்லி ஹெல்ப் கேட்கணும்னு தான் உன்னை ஃபலோவ் பண்ணிட்டு வந்தேன். நீ ரெஸ்ட் ரூம்க்குள்ள நுழைஞ்சத பார்க்காம உள்ள வந்துட்டேன்” என்று அப்பாட்டமாகப் பொய் சொன்னாள்.
அவள் பொய் சொல்கிறாள் என்று அவள் கண்களை வைத்தே கண்டுகொண்டவன் அதை காட்டிக்கொள்ளாது, அவள் வந்த நோக்கத்தை தெரிந்துக் கொள்ள எண்ணினான்.
“என்ன பிரச்சனை உனக்கு??? என் கிட்ட வந்து ஏன் ஹெல்ப் கேக்குற??? முதல்ல யார் நீ??”எனக் கேட்டதில் அதிர்ந்தவள், ‘அதற்குள் தன்னை மறந்து விட்டானா??? பார்த்து இரண்டு நாள் கூட முடியவில்லை என்னை மறந்து விட்டானா??’அதிர்ச்சியும் வலியும் ஒன்று சேர்ந்து அவளை தாக்கின.
“என்னை அதுக்குள்ள மறந்துட்டீயா??? கிளப்ல உன் பிரண்ட்னு நினைச்சி எனக்கு முத்தம் கொடுத்தியே நியாபகம் இருக்கா? அந்தப் பொண்ணு தான் நான். எனக்கு பிரச்சினை வரக் காரணமே நீ தான். நீ மட்டும் அன்னைக்கு முத்தம் கொடுக்காம இருந்திருந்தால் எனக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா??? என் புருஷன் தினமும் என்னையும் உன்னையும் சேர்த்து வச்சி அசிங்கமா பேசி, அடிக்கறான் உதைக்கறான் டார்ச்சர் பண்றான். என்னை நீ தான் அவன் கிட்ட இருந்து காப்பாத்தணும்”என்று பொய்யாய் அழுது அவன் முன்னே காட்சிகள் ஓட்டினாள்.
நெற்றியை கீறிக் கொண்டு யோசித்தவனுக்கு அவள் யாரென்று விழுங்கியது. மேலும் அவள் சொன்ன விஷயம் அனைத்தும் பொய் என்று கூறியது அவளது இரு விழிகள்.
“அவன் உன்னை டார்ச்சர் பண்ணினா போலீஸ்ல கம்ப்லைன்ட் பண்ணு. ஏன் என் கிட்ட வந்தது சொல்ற? நான் கிஸ் பண்ணினது ஒரு ஆக்சிட்டேன்ட். அதுக்கு தான் உன் புருசன் என்னை கொல பண்ண பார்த்தானே ! மறுபடியும் அவன் கிட்ட மாட்டி விட பார்க்கிறீயா ? கிளம்பு இங்க இருந்து…”
“ப்ளீஸ் !! உன்னால மட்டும் தான் என்னை காப்பாத்த முடியும். என்னை காப்பாத்தி எங்கயாவது கூட்டிட்டு போயிடு !”என கெஞ்ச, நெற்றியில் அறைந்தவன், “அறிவிருக்கா உனக்கு ! சம்பந்தமில்லாம என் கிட்ட வந்து காப்பாத்துனு கெஞ்சிட்டு இருக்க, போ போலீஸ் கிட்ட கம்பலைண்ட் கொடு அவங்க உன்னை உன் புருஷன் கிட்ட இருந்து காப்பாத்துவாங்க என்னை ஆள விடு !”என நகர இருந்தவனை தடுத்தவள்,
“ப்ளீஸ் போகாத ! நான் உன்னை விரும்புறேன். நீ தான் என்னோட முதல் காதல். உன் கூட வாழ ஆசைப்படுறேன். என்னை அவன் கிட்ட இருந்து காப்பாத்தி எங்கயாவது கூட்டிட்டு போயிடு ! நிஜமா உனக்கும் என்னை பிடிக்கும் நீ என்னை காதலிப்ப ! ஒரு வாய்ப்பு கொடு !”என கெஞ்ச, வாய்விட்டே சிரித்தவன்
“ஒரு செக்கேன்ட் ஹாண்ட லவ் பண்ண நான் என்ன முட்டாளா??? இன்னொருத்தன் யூஸ் பண்ணிட்டு தூக்கி போட்டத நான் யூஸ் பண்ண, நான் என்ன கேனையா??? இல்ல நடமாடும் மறுவாழ்வு மையமா??? ப்யூர் சிங்கில்டி என்னை போல ஒருத்திய தான் நான் எதிர்பார்ப்பேன். இன்னொருத்தன் யூஸ் பண்ணின பொருள் எனக்கு குப்பை ! நீயும் எனக்கு குப்பை தான்.உன்ன தூக்கி என் வீட்டு பெட்ல வைக்க சொல்றீயா… ச்சீ வெளியே போடி !” என்று முகம் சுழித்தான்.
‘தன்னை குட்பை என்றதலியே பேரடி வாங்கியவள் , அவன் தன்னை கண்டு முகம் சுழித்தது தான் அழகி என்ற கர்வம் சுக்குநூறாக உடைந்து உள்ளுக்குள் வன்மமத்தை வளர்க்க அவன் முன் சொடக்கிட்டவள், ” இந்த குப்பைய கோபுரமா நினைச்சு என் காலடில வந்து நீ விழல, நான் ரிஷிகா இல்லடா !” என சபதம் கொள்ள, அவளை ‘பளார் ‘என்று அறைந்தவன்”என் முன்னாடி பேசவே தகுதி இல்ல உனக்கு , இதுல சொடக்கு போடுறீயா ! கை இருக்காது ஜாக்கிரதை கிளம்பு டி”என்று கர்ஜிக்க அவள் அவனை முறைத்து கொண்டு சென்று விட்டாள்.
அவள் சென்றதும்’ உஃப் ‘என்று ஊதியவன் தலையை சிலுப்பிக் கொண்டு வெளியே வர அங்கே ஜெஸி நின்றிருந்தாள்.
உள்ள சென்ற இருவரும் வராமல் இருக்க அவர்களை தேடிச் சென்ற ஜெஸிக்கு அத்தனையும் கேட்டது. வெளி நின்றவள் கைகட்டிக் கொண்டு வந்தவனை வெறித்தாள்.
அவளை கண்டதும் தன்னை பகட்டாக காட்டிக் கொண்டவன்” ச்ச… இந்த பொண்ணுங்களே இப்படித்தான் போல பணக்கார பசுங்களா பார்த்து வளைச்சி போட்டு சொகுசான வாழ்க்கைய வாழணும் நினைக்கறாளுங்க. அதுக்கு எதை வேணாலும் அடகு வைப்பாளுங்க போல …”அவள் காது படவே பெண்களை தவறாக பேச சுர்ரென்று அவளுக்கு கோபம் வந்தது.
“ஓ… உங்க அம்மாவும் அப்படி தானோ !”என்றதும் கோபத்தில் “ஏஏய்”என்று கர்ஜித்தவன் அவளை அடிக்க கையை ஓங்க, பிடித்து பின்னே மடக்கி கொஞ்சம் முறுக்க வலியில் உயிர் போனது அவனுக்கு.
“எல்லா பொண்ணுங்களும் அப்படி தான் நினைக்கற உன் மைண்ட் விட பொண்ணுங்க கேவலமானவங்க இல்ல… அவங்களை பத்தி பேச நீ ஒன்னும் யோக்கியனும் இல்ல, வேலைக்கு வந்த என்கிட்டயே அசிங்கமா பேசின நீ பொண்ணுங்கள பத்தி பேசவே கூடாது. ஒரு பொண்ண வச்சு எல்லா பொண்ணுங்களையும் ஏன் உன் அம்மாவையும் சேர்த்து தான் தப்பா சொல்றேன் மறந்திடாத. இதான் உனக்கு லாஸ்ட் வார்னிங்… பொண்ணுங்கள பத்தி பேசின , பேசற வாயை ஒடச்சிடுவேன் மைண்ட் இட் “என்று அவனை விடுவிக்க,
கைவலியில் முகம் சுணங்கினான். ‘ ஸ்ரீ ‘ என்றழைக்க, வெகு நேரம் சிலையாக நின்றவன் உயிர்பெறறு வந்தான்.
அவனிடம் கண்ணை கட்ட துருவனை அழைத்துக் கொண்டு போனான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
5
+1
+1

