Loading

இழை அனைவருக்கும் பொருட்கள் வாங்க வேண்டும் என்றதில் மேலும் இரு நாட்களுக்கு கேரளாவில் தங்கள் இருப்பை நீட்டித்த வசீகரன் நகரின் மையத்தில் அமைந்திருக்கும் உயர்தர விடுதியில் அறை எடுத்திருந்தான்…

அன்று ஓரளவு ஷாப்பிங் முடித்து விட்டு அறைக்கு திரும்பியவர்கள் விடுதியை ஒட்டியிருக்கும் உணவகத்திற்கு சென்றனர்… வசீகரன் இங்கு அடிக்கடி வருவதால் பிரசித்தி பெற்ற உணவுகளை வரவழைத்தவன் தானே மனைவிக்கு ஊட்டியும் விட்டான்..

இருவரும் உணவை முடிக்கவும் “இழை இங்க பக்கத்துல டிஸர்ட் ரொம்ப நல்லா இருக்கும் என்னோட ஃபேவரெட் ட்ரை பண்றியா?” என்றான்.

“இல்லைங்க எனக்கு இதுவே ஃபுல்லா இருக்கு நீங்க வேணும்னா சாப்பிடுங்க நான் அதுக்குள்ள பேக் எடுத்துட்டு வந்துடுறேன் நாம இப்படியே கிளம்பலாம்”

“இல்லடி நானும் வரேன்..”

“ப்ச் எங்க வரீங்க? உங்களுக்கு பிடிக்கும் தானே நீங்க சாப்ட்டுட்டு இருங்க நான் பத்து நிமிஷத்துல வந்துடுறேன்” என்று அறைக்கு செல்ல வசீகரனின் நண்பன் அங்கு வந்து சேர்ந்தான்.

அவர்களின் சந்திப்பு ஏற்கனவே மாலையில் என்று திட்டமிட்டது தான், இழையிடமும் சொல்லியிருந்தான்.. ஆனால் முன்னரே வந்து விட்ட நண்பனின் அவசரத்தில் தகவல் தெரிவிக்க இழைக்கு அழைத்தான். அவள் ஏற்கவில்லை என்றதும் தகவல் தெரிவித்து

“நீ ரெஸ்ட் எடு இழை நான் ஒன் ஹவர்ல வந்துடுவேன்..” என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பி விட்டு நண்பனோடு கிளம்பினான்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் இழை கடுமையாக வாந்தி எடுத்து மயங்கி சரிந்திருந்தாள்.

**********

“சொல்லுங்கப்பா” என்று அதிதனும் அதிரலும் ஆளுக்கு ஒருபுறமாக அமர்ந்து அதிர்துடியனை நச்சரிக்க..,

“இருங்கடா சொல்றேன்” என்றவன் யாழியை பார்த்தவாறே.. “உங்கம்மாக்கு செல்ஃபி எடுக்க பிடிக்காது அதனால தான் கண்மூடியிருக்கா..” என்றிட யாழியோ அமைதியாக அமர்ந்து மெயில் மற்றும் சமூகவலைதள பக்கங்களில் தனக்கு வந்திருந்த தகவல்களை குறிப்பெடுக்க தொடங்கி விட்டாள்.

“இல்லையே அம்மா எங்ககூட எடுப்பாங்களே நீங்க பொய் சொல்லாதீங்க…” என்றாள் அதிரல்…

“நிஜமா தங்கம் உங்க அம்மாக்கு என்னோட செல்ஃபி எடுக்க பிடிக்காது. அவங்க வேண்டாம் சொல்லியும் நான் எடுத்ததால தான் கண்ணை இறுக மூடிக்கிட்டாங்க இல்லையான்னு அவங்களையே கேட்டு பாருங்க..” என்று அவர்களின் வரவேற்பில் யாழியுடன் தனித்திருந்த போது அதிர்துடியன் எடுத்த முதல் செல்ஃபி பற்றி பேசவும் யாழிக்கு இப்போதும் அத்தருணங்கள் மனக்கண்ணில் விரிந்ததில் என்ன முயன்றும் முகம் சிவப்பதை தடுக்க முடியாது ஜன்னல் புறமாக திரும்பி அமர்ந்து வேலையை பார்த்தாள்.

“இந்த ஃபோட்டோ ஏன்பா வச்சிருக்கீங்க வேற மாத்துங்க” என்று ஸ்க்ரீன்செவரில் குழந்தைகளுடனான புகைப்படத்தை வைத்திருப்பவன் வால்பேப்பராக அவர்களின் ரிசப்ஷனின் போது எடுத்த முதல் செல்ஃபியை வைத்திருந்தான்.

“ப்பா இதுல அம்மா உங்க மேல தூங்கிட்டு இருக்க மாதிரி இருக்கு வேண்டாம் வேற மாத்துங்க..” என்றான் அதிதன்.

“முடியாதுடா உங்க அம்மாகூட நான் எடுத்த முதல் செல்ஃபி எனக்கு ரொம்ப ப்ரெஷியஸ்!! இனி எத்தனை எடுத்தாலும் இதுபோல எடுக்கவே முடியாது தெரியுமா… உங்க அம்மாவையே கேட்டு பாரு..” என்றவன் பார்வை மனைவியை மையலிட யாழியோ அவன்புறம் திரும்பவே இல்லை.

“வேணும்னா ஒன்னு பண்ணலாம்”

“என்னதுப்பா?” என்றனர் ஆவலோடு..,

“உங்க அம்மா ஓகே சொன்னா இதேபோல ஒரு செல்ஃபி இப்பவே எடுக்குறேன்..” என்று அவர்களது வரவேற்பு உடையை காண்பிக்க யாழி புரியாமல் பார்த்தாள்.

“கண்ணா எனக்கு வேலை இருக்கு, நீங்க அப்பா கிட்ட சொல்லி வேற ஃபோட்டோ மாத்திக்கோங்க..”

“முடியாது இந்த மாதிரிதான் வேணும் உடனே வாங்க..” என்று அடம் பிடித்தவர்களிடம் “நீங்க இருந்தா அம்மாவுக்கு போஸ் கொடுக்க முடியாது அதனால் மாமாவோட பீச்க்கு கிளம்புங்க நாங்க செல்ஃபி எடுத்துட்டு வரோம்..” எனவும் உடனே ஒப்புக்கொண்டனர்.

துடியனை முறைத்து நின்றவளிடம், “கிளம்புடி பசங்களை விட்டுட்டு வந்து என்ன போஸ்ன்னு டிசைட் பண்ணிக்கலாம்” என்றவன் குழந்தைகளை விஷ்ணுவிடம் சேர்ப்பித்தபின் அறைக்கு திரும்பிக்கொண்டிருக்க மாணவர்கள் யாழியை சுற்றிக்கொண்டனர்…

“ஸாரி டூ இன்டரப்ட் கைஸ்..” என்றதில் உடனே அவர்கள் பேச்சை நிறுத்த “என்னங்க?” என்றாள் யாழி.

கைகடிகாரத்தை பார்த்தவாறே, “எங்களுக்கு ஒரு முக்கியமான பூஜை இருக்கு இஃப் யூ டோன்ட் மைன்ட் உங்க கலெக்டரை என்னோட அனுப்ப முடியுமா? வீ ஆர் கெட்டிங் லேட்..” எனவுமே திகைப்புடன் யாழி அதிரனை பார்த்திட..,

“ஸா ஸாரி ஸார்.. ஸாரி டூ டிஸ்டர்ப் யூ மேம்..” என்றவர்கள் விலகி நின்றனர்.

“தேங்க்ஸ் அண்ட் எக்ஸ்கியூஸ் அஸ்” என்றவன் யாழியோடு நடக்கவும்..,

“ஏங்க, அடங்கவே மாட்டீங்களா? ஏன் இப்படி மானத்தை வாங்கறீங்க?”

“நான் என்னடி பண்ணேன்?”

“அந்த பசங்க முன்னாடி என்ன சொன்னீங்க?”

“உண்மையை சொன்னேன்..” என்று தோள்களை குலுக்கியவன் மனைவியோடு லிஃப்ட்டில் ஏறினான்.

“உங்களை…” என்று யாழி பல்லை கடிக்க,

“நானென்ன என் பொண்டாட்டி கல்யாணமாகி இத்தனை வருஷம் கழிச்சு ஹனிமூன்க்கு ஒத்துகிட்டா எங்க ப்ரைவசியை கெடுக்காம கிளம்புங்கன்னா சொன்னேன்..”

“அப்போ நீங்க சொன்னதுக்கு என்ன வேற அர்த்தமா?”

“அது உனக்கு மட்டும் தானேடி தெரியும்” என்று சிரித்தவனின் புஜத்தில் கிள்ளியவள்,

“வர வர பசங்களை விட உங்க சேட்டை தான் அதிகமா இருக்கு. இதுக்கு தான் செல்ஃபி கதை சொல்லி பசங்களை விஷ்ணு கூட ப்ளான் பண்ணி அனுப்புனீங்களா?”

“நம்ம பசங்க அப்படியே உன்னையும் உன் தம்பியையும் ஜெராக்ஸ் எடுத்து வச்சிருக்காங்கடி தூங்க சொன்னா எனக்கே கதை சொல்லி தூங்க வைக்க பார்க்கிறாங்க. அதான் அவங்களை அவன் சமாளிக்கட்டும் நீ என்னை சமாளி..” என்று கண்சிமிட்டிட..,

“ஏங்க இது பப்ளிக் பிளேஸ்!! மினிஸ்டர் மாதிரியா நடந்துக்குறீங்க..”

“எங்கிருந்தா என்னடி? நீ பொண்டாட்டிங்கிறது மாறிடாதே!! தமிழ்நாட்டு பார்டர் தாண்டினா எவனுக்கும் என்னை தெரிய.ல ஆனா ஹனீமூன் வந்த இடத்துலயும் என்னை மறந்துட்டு நீதான் கலெக்டரா நடந்துட்டு இருக்க..”

“ஃபேமிலி ட்ரிப்ன்னு சொல்லி ஏமாத்தி கூட்டிட்டு வந்து பசங்கள விஷ்ணு கிட்ட விட்டுட்டு நீங்க செய்யற அராஜகம் தாங்கல..”

“அப்படி என்னடி பண்ணிட்டேன் பூஜைக்கு டைம் ஆச்சேன்னு ஞாபகபடுத்தினது தப்பா கொஞ்சமாவது புருஷன் மேல அக்கறை இருக்காடி உனக்கு..” என்று வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அதிர்துடியன் அடவு கட்ட.,

“அச்சோ ஏங்க.. என்னங்க பண்றீங்க” என்று யாழி அவசரமாக இருபுறமும் கண்களை சுழல விட்டு “முதல்ல வேஷ்டியை இறக்குங்க..” என்றாள்.

“முடியாதுடி..” என்றவனின் வேஷ்ட்டியை தானே இறக்கிவிட்டு,

“ப்ளீஸ் உங்களை தெரியாம கேட்டுட்டேன் இதோட விட்டுடுங்க.. உங்களுக்கு பூஜைக்கு நேரமாகலையா? வாங்க..” என்றழைக்க அதிர்துடியனோ அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்த இழை மயங்குவதை கண்டு ஓடிசென்று அவளை தாங்கியிருந்தான்.

யாழி தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சித்த போதும் இழையிடம் அசைவில்லை.. அப்போது தான் அவள் முகத்தில் இருந்த மாற்றத்தை கண்டவள், “இட்ஸ் எமெர்ஜென்சி ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணுங்க”

இழையை மருத்துவமனையில் சேர்த்த அதிர்துடியன் தன் தம்பி வசீகரனுக்கு அழைத்திருந்தான்.

ஆம் மரகதமும் அகிலாண்டநாயகியும் முறையே ஒருதாய் வயிற்றில் பிறந்த அக்கா தங்கைகளின் பெண்கள்… இடைதேர்தல் பிரச்சாரத்தில் இருந்ததால் அதிர்துடியனால் வசீகரனின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாது போக யாழியின் நிலையும் அதுவாகிவிட மரகதம் கணவரோடு கலந்துகொண்டார்.

இங்கு அதிர்துடியனின் அழைப்பு தொடர்ந்திருந்த நிலையில்.., வசீகரனோ எப்போதும் போல மனைவியுடன் இருக்கையில் மொபைலை சைலென்ட்டில் போட்டிருந்தவன் நண்பன் அவசரமாக அழைக்கவும் அதை மாற்ற மறந்திருந்தான்.

வேலையை முடித்தபின் இழைக்கு அழைப்பதற்காக கைபேசியை எடுத்தவன் அதிர்துடியனின் தொடர் அழைப்புகளை கண்டு இழை மருத்துவமனையில் இருக்கும் செய்தி தெரிந்ததும் அடித்து பிடித்து ஓடி வந்திருந்தான்.

“தனியா விட்டுட்டு எங்கடா போன?” என்றவனை “தேங்க்ஸ்ண்ணா..” என்று கண்ணீரோடு கட்டிக்கொண்டான்.

சிறுவயதிலிருந்தே இழைக்கு மீன் ஒப்புக்கொள்ளாது அலெர்ஜியாகிவிடும் அதனால் மிகவும் கவனமாக இருப்பாள்.. ஆனால் இன்று வசீகரன் அங்கு பிரசித்தி பெற்ற உணவுகளை தன் கையாலேயே ஊட்டி விடவும் என்னவென்று கூட உணராமல் அவனை பார்த்தவாறு உண்டதன் விளைவே மருத்துவமனை வாசம்.

வசீகரனை ஆசுவாசபடுத்திய துடியன் அறைக்கு அழைத்து செல்ல இழை மிகவும் சோர்ந்து காணப்பட்டாள்.., முகம் கை கால்களில் ஆங்காங்கே தடித்து சிவந்திருப்பதை கண்டவனின் விழிகள் கலங்கவும்
“வசீ காம் டவுன் ஒன்னுமில்லடா..”

“என்னடி இது? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே?”

“ஸாரிங்க நீங்க ஆசையா ஊட்டிவிடவும் எனக்கு எதுவும் தெரில… கடைசியா புரியவும் ஒருநாள் தானே என்னாகிடும்னு கேர்லெஸ்ஸா இருந்துட்டேன்”

“ப்ச் போடி எனக்கு தூக்கிவாரி போட்டுடுச்சு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா கொடுத்திருக்க மாட்டேனே.. நான் வரேன்னு சொல்லியும் விட்டுட்டு தனியா கிளம்பிட்ட..”

“ஸாரிங்க இனி இப்படி செய்யமாட்டேன்..” என்றபோது இருவரின் விழிகளிலும் கண்ணீர் தேங்கியிருந்தது..

“வசீ என்னடா இது நீயும் அழுது இழையையும் அழ வச்சுட்டு வா இப்படி..” என்று அதிர்துடியன் அழைக்கவும் நினைவு வந்தவன், “இழை உனக்கு சொல்ல மறந்துட்டேனே இவர்தான் என்னோட துடி அண்ணன்..” என்றான்.

“எனக்கு தெரியுங்க..”

“அண்ணனை தெரியுமா?”

“ஏங்க நம்ம எஜூகேஷனல் மினிஸ்டரை தெரியாதவங்க யாராவது இருப்பங்களா மேம்மையும் தெரியும்” என்றிட மருத்துவர் இழையை ஆராய்ந்து டிஸ்சார்ஜ் செய்யவும் அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் ஹோட்டல் அறைக்கு திரும்பியிருந்தனர்.

“நீங்களும் இங்கதான் ஸ்டே பண்ணியிருக்கீங்களாண்ணா?”

“ஆமாடா பசங்களுக்கு லீவ் எனக்கும் இடைதேர்தல் முடிஞ்சு இப்பதான் ரிலாக்ஸ் ஆனேன் அதான் ஒரு நாலு நாள் ட்ரிப்.. நீங்க எப்போ கிளம்பறீங்க?”

“நாளைக்கு ஈவினிங் ஃப்ளைட்ண்ணா..”

“வசீ சித்தப்பா இது அரேன்ஜ்ட் மேரேஜ்ன்னு சொன்னாரு ஆனா உங்களை பார்த்தா அப்படி தெரியலையே?” என்றதும் புன்னகையோடு “அப்படியும் சொல்லலாம்ண்ணா..” என்றான்.

“அப்படின்னா.. டேய் அப்போ நீ சொன்ன பப்ளி இழையா?” என்றிட வசீகரபுன்னகை ஆடவனிடம்.

“ரொம்ப சந்தோஷமா இருக்குடா..” என்றதும் அவர்களின் கதையை வசீகரன் சுருக்கமாக சொல்லவும்,

“இழையை விட நீதான் லக்கியஸ்ட்னு தோணுது ஆனா இரண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர்!! அம்மா உங்களுக்கு முதல்ல விருந்து கொடுக்கணும்னு சொல்லிட்டு இருந்தாங்க நான் சித்தப்பாக்கு சொல்றேன் அடுத்தவாரம் வீட்டுக்கு வந்துடுங்க..”

“சரிண்ணா, குழந்தைங்க எங்க காணோம்”

“விஷ்ணுவோட பீச் போயிருக்காங்கடா நாளைக்கு இங்க தானே இருப்பீங்க கூட்டிட்டு வரேன்”

“எப்படி இருக்கு இழை பரவாலயா?”

“ஓகேக்கா” என்றவள் எழவும், “நீ எங்க வர ரெஸ்ட் எடு!!”

“இல்லக்கா இருக்கட்டும் வரேன்..” என்றவள் வெளியில் வந்தமரவும், “இழை அண்ணா மினிஸ்டர் மட்டுமில்ல அடுத்த எலெக்ஷன்ல சிஎம் கேண்டிடேட்!!”

“நிஜமாவா சொல்றீங்க?..”

“ஆமா ஆனா இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரலை கூடிய சீக்கிரமே வரும்”

“கங்க்ராட்ஸ் மாமா!! எங்கப்பாக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் எங்க எல்லாரோட வோட் உங்களுக்கு தான்..”

“அண்ணா உங்களுக்கு கேன்வாஸ் பண்ண ஆள் ரெடியா இருக்கு..” என்று வசீ சிரிக்க,

“ஏன் பண்ண கூடாதா?” என்றவள், “அக்கா என் ஃபிரெண்ட்டோட தங்கச்சி மட்டுமில்ல அவ காலேஜ்ல பலருக்கு ரோல்மாடல்.. யூத் ஐகான் நீங்கதான்.. உங்களை போலவே வரணும்னு வெறித்தனமா படிச்சுட்டு இருக்கா நீங்க எனக்கு அக்கான்னு சொன்னா நம்பவே மாட்டா….” என்றிட யாழியின் முகத்தில் மென்னகை..!!

நேரம் போனதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தவர்கள் இழையின் அசதியை கண்டு, “சரிம்மா எங்களுக்கு முக்கியமான வேலை இருக்கு கிளம்பறோம் நீ ரெஸ்ட் எடு” என்று கிளம்பினர்.

“இழை துடி அண்ணா வீட்ல தான்..” என்று ஆரம்பிக்கவும் ‘புரிஞ்சதுங்க’ என்பதான தலையசைப்பு இழையிடம்.

“உனக்கு தெரியுமா அண்ணாவும் அண்ணியும் அரேஞ்ட் மேரேஜ் ஆனா அப்படி தெரியாது அவ்ளோ அன்யோன்யமா இருப்பாங்க ஒருமுறை அம்மாவே யாழி மாதிரி பொறுப்பான மருமகள் எனக்கும் கிடைச்சா நிம்மதியா இருப்பேன்னு சொன்னாங்க.. அண்ணி அந்த அளவு ரெஸ்பான்ஸிபில்டி!!”

“ஆமாங்க யாழி அக்கா ரொம்பவே அமைதி, சாஃப்ட் ஸ்போகன், கேரிங் நான் அவங்ககிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு”

மூன்று மாதங்களுக்கு பிறகு:

“என் மகன் தானான்னு கேட்டீங்களே இப்போ பேசுங்க..” என்றிட திருவிடம் கனத்த அமைதி!!

“நீங்க வேலைக்காக பொண்டாட்டியை விடாம ஸ்டேட் ஸ்டேட்டா சுத்தினா உங்க மகன் பொண்டாட்டி பின்னாடி சுத்தறதை மட்டுமே வேலையா வச்சுட்டு ஸ்டேட் ஸ்டேட்டா போயிட்டு இருக்கான்… இப்போ சந்தேகம் தீர்ந்ததா?” என்று கேட்க திரு கண்ணும் கருத்துமாய் சேனலை மாற்றிகொண்டிருந்தார்.

“பொண்டாட்டி பின்னாடி சுத்தலைன்னு திட்டினீங்க இப்போ பின்னாடி சுத்தறான்னு திட்டுறீங்க… வேலையா முக்கியம்னு கேட்டீங்க இப்போ வேற வேலை இல்லையான்னு கேட்கிறீங்க இல்ல நான் தெரியாமதான் கேட்கிறேன் உங்களுக்கு வேற வேலை இல்லையா?” என்று கேட்டபோதும் மனிதர் வாயே திறக்காமல் அபியிடம் கண்களால் மற்றொரு கோப்பை கேட்க அவரும் சிரிப்புடன் கொண்டு வந்து கொடுத்தார்…

“அபி உன் மாமாக்கு இதெல்லாம் பத்தாது நீ ஒரு அண்டால டீ கொண்டு வந்து வை அவரை அதுலே முக்கி எடுத்தாதான் அடங்குவாரு..”

“அக்கா மாமா பாவம் போதும்..” என்றபோதும் நாயகிக்கு கோபம் தணியவில்லை.

“என் மருமகளை கவனிக்கலைன்னு குறை இப்போ கவனிச்சா அதுக்கும் குறை என்னதான்டி பண்ண?” என்றவர் மீண்டும் திருவேங்கடத்திடம், “நீங்க மேட்ச் பார்க்கறதுக்காக எல்லாம் நான் அவங்களை திரும்ப வர சொல்லமுடியாது வேணும்னா இன்னும் சிலவருஷம் கழிச்சி பேத்தியோட சேர்ந்து பாருங்க..” என்றவருக்கு அத்தனை ஆதங்கம்.

பின்னே..!! கேரளாவில் இருந்து திரும்பிய வசீகரன் விருந்தை முடித்துகொண்ட அடுத்தவாரமே மனைவியோடு கோவா, மணாலி, சிம்லா, அந்தமான், மால்டீவ்ஸ் என்று சுற்றி இறுதியாக சுவிட்சர்லாந்து சென்று சேர்ந்திருக்கிறான் அங்கிருந்து கிளம்ப இன்னும் இரண்டு வாரங்களேனும் ஆகும் என்று இழை சொல்லியதில் திருவிற்கு தாளவில்லை.

“உன் மகன் வேணும்னே பிங்கி என்னோட மேட்ச் பார்க்ககூடாதுன்னு கூட்டிட்டு போயிருக்கான்..” என்ற திருவின் குற்றசாட்டிற்கு தான் இத்தனை நேரம் நாயகி கொடுத்த பதிலடி..

“இன்னும் எவ்ளோ நாளாகும் பிங்கி..” என்றார் தொடுதிரையில் தெரிந்த மருமகளிடம்..

“அனேகமா அடுத்த மாசம் கிளம்பிடுவோம் மாமா..”

“சீக்கிரம் வாடா நீ இல்லாம வீடே வெறிச்சோடி இருக்கு… வோர்ல்ட் கப் ஆரம்பிக்க போகுது..”

“அச்சோ மறந்தே போயிட்டேன் கண்டிப்பா அதுக்குள்ள வந்துடுறோம் மாமா..” என்று சொல்ல நாயகி கணவரை முறைத்தார்.

“அத்தை உங்களுக்கும் அபித்தைக்கும் இங்கிருந்து என்ன வேணும் சொல்லுங்க?”

“நீ போயிருக்கிறது என் மகனை புரிஞ்சுக்கவா இல்ல எங்களுக்கு ஷாப் பண்ணவா? ஏற்கனவே சொன்னதுதான் பிங்கி முடிஞ்சா பேத்தியோட வா உங்க மாமாக்கு மேட்ச் பார்க்க ஆள் வேணுமாம்..” என்று அழைப்பை துண்டிக்க இழையின் சிவந்த கன்னத்தை வருடிக்கொண்டே அமர்ந்தவன்

“என்ன சொன்னாங்க இவ்ளோ வெட்கபடற?”

“மாமாக்கு பேத்தி வேணுமாம்..” என்றதும் நாயகிக்கு அழைத்தவன்,

“ம்மா படிப்பு, வேலை, கல்யாணம்னு இதுவரை எல்லாமே அவர் விருப்படி செய்தேன் இனியாவது என் வாழ்க்கையை வாழறேனே.. மூணு மாசம் கழிச்சு கல்யாணம் வச்சுக்கலாம்னு நான் சொன்னபோதும் கேட்காம உடனே கல்யாணம் செய்து என்னை குறை சொல்றதே வேலையா வச்சிருக்கார் இனியும் அவர் இஷ்டத்துக்கு இருக்கமுடியாது வைங்க..” என்று அழைப்பை துண்டிக்க ஸ்பீக்கரில் கேட்டுகொண்டிருந்த திரு நாயகி கேள்விகேட்கும் முன் நழுவிவிட்டார்.

“மாமா பாவம் என்ன பேசுறீங்க நீங்க..”

“போடி உங்க மாமாக்காக எல்லாம் நான் குழந்தை பெத்துக்கமுடியாது..”

“யாருக்காகவும் நீங்க பெத்துக்கமுடியாது நான்தான் பெத்தெடுக்கனும்” என்ற இழையின் கிண்டலில் சப்தமாக சிரித்து,

“ரொம்ப தேறிட்டடி நீ?”

“உங்க கூட சேர்ந்திருக்கேனே.. ஆமா உங்களுக்கு மாமா மேல என்ன கோபம்?”

“கோபமெல்லாம் இல்ல.. அது வேற விஷயம் உனக்கு சொன்னா புரியாது…”

“உங்களுக்கு புரியற மாதிரி சொல்ல தெரியாதுன்னு சொல்லுங்க” என்றவள் சிரிப்பில் கலந்தவன்,

“எனக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும்.. அப்பாவோட டைம் ஸ்பென்ட் பண்ணினதைவிட அவங்களோட தான் அதிகமா இருப்பேன்… சமைக்கறப்போ இருந்து தூங்கற வரையிலும் அம்மாவோட தான்!! ஆனா விஆர்எஸ் வாங்கிட்டு வந்தவர் முதல்நாளே,

‘ஆம்பளை பசங்கள ஒரு வயசுக்கு மேல தனியா வளரவிடனும் இன்னும் உன்னோடவே வச்சிருந்தா என்ன அர்த்தம்னு திட்டி என்னை தாத்தாவோட தூங்க சொல்லிட்டார்.. அப்போ நான் எய்ட்தோ நைன்த்தோ படிச்சிட்டிருந்தேன்.. ஏனோ தெரியல அதுக்கப்புறம் தனியாவே இருந்து பழகிட்டேன் என்னை அம்மாகிட்ட இருந்து பிரிச்சிட்டார்னு கடுப்பு வேறொன்னுமில்ல..’”

“சரி சொல்லு எப்போ குழந்தை பெத்துக்கலாம்?”

“எனக்கு எப்பவும் ஓகேதான்.. உங்களுக்கு?”

“இப்பவே பைஃவ் மந்த்ஸ் ஆகபோகுதுடி போதும்..!! நம்ம ஜூனியர் வரட்டும் அப்பாக்கும் போர் அடிக்குமில்லையா..”

அதிர்வோடு கணவனை பார்த்தவள், “ஏங்க இப்போ தானே அவருக்காக பெத்துக்க மாட்டேன் சொன்னீங்க.. இப்போ என்ன சொல்றீங்க எனக்கு புரியல..”

“நான் தான் சொன்னேனே உனக்கு புரியாது, விடு..” என்று சிரிப்போடு நகர்ந்தான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்