
“எப்படிடி என்னை பார்த்து பயந்த நீ என்னோட வாழ முடிவெடுத்த?” கல்யாணத்துக்கு பிறகு எப்படி இருக்கும்னு பயமில்லையா?”
“கல்யாணத்துக்கு பிறகு எல்லாரோட வாழ்க்கையிலும் மாற்றம் வரும் அதுக்கு நாம தயாரா இருந்தா நிச்சயம் பிரச்சனைகளை சமாளிக்கலாம்.. இல்ல நான் எப்பவும் போலதான் இருப்பேன்னு சொன்னா பிரச்சனை அதிகரிக்கத்தான் செய்யும்.. பொதுவாவே நமக்கான தேவைகளையும் விருப்பங்களையும் நாம முறையா வரிசை படுத்திட்டாலே போதும் நமக்கு குழப்பம் இருக்காது…”
“கல்யாணத்துக்கு முன்ன அப்பாம்மா இப்போ முதல் இடத்துல நீங்க இரண்டாவது இடத்துல நம்ம இரண்டு பேரோட குடும்பம் அடுத்து வேலை, ப்ரெண்ட்ஸ்… இதுல நான் க்ளியரா இருக்கேன் இதுதான் என்னோட heirarchy.. ஒருவேளை உங்களை விட்டு முதல் இடத்தை மத்தவங்களுக்கு கொடுத்து உங்க உணர்வை நான் மதிக்காம இருக்கிறது பெரிய தப்பு!!
காலம் முழுக்க கூடவே உயிரா உறவா இருக்க போற உங்களை யோசிக்காம போனேனா நிச்சயம் அது என்னோட முட்டாள்தனம்… இப்படி அவங்கவங்களுக்கான இடத்தை முறையா தீர்மானிச்சிட்டாலே நமக்குள்ள சிக்கல் இருக்காது அப்புறம் எதுக்கு பயம்?”
“எப்படிடி இவ்ளோ தெளிவா இருக்க அன்னைக்கு பார்த்த பப்ளியான்னு சந்தேகமா இருக்கு.. அப்போ உனக்கு எந்த எக்ஸ்பெக்டேஷனும் இல்லையா?”
“இல்லைங்க!! எனக்கு நிஜமா எந்த எக்ஸ்பெக்டேஷனும் இல்லை… நானா ஒரு கற்பனை வச்சுட்டு அது நிஜமாகாம போறப்போ வலி கூடுமில்லையா அதுக்கு வாழ்கையை அதன்போக்கில் எதிர்கொள்ள நினைப்பேன்… எப்பவுமே உங்களோட அழகு, அறிவு, படிப்பைவிட உங்க குணமும், மனசும்தான் எனக்கு ரொம்பவே பிடிக்கும்..”
“அதுல பெருசா மாற்றம் இருக்காதுன்னு நம்பினேன், அதான் முடிஞ்ச வரை உங்களை கோபபடுத்தாத அளவு நடந்துக்கணும் முடிவெடுத்தேன்… உங்களுக்கு தெரியுமா என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கல்யாணத்தை எப்படி க்ராண்ட்டா நடத்தனும்னு கனவு காண்பாங்க ஆனா நான் கல்யாணத்துக்கு பிறகு உங்களோட அமைய போற வாழ்க்கை எப்படி இருக்கனும்னு தான் யோசிப்பேன்…”
“ஏன்?”
“மற்ற உறவு போல நம்மோடது கிடையாதே!! நமக்குள்ள யார் பெரியவங்கன்னு போட்டி போட்டா வாழக்கை நிலைக்காது இல்லையா?! அதே நேரம் பிடிக்காத பொண்ணுகூட வாழற ஒவ்வொரு நாளும் நரகமாகிடும் அதான் உங்களுக்கு பிடிச்சவளா இருக்கனும்னு நினைச்சேன் அதுக்கு உடனே தண்டனை அடிமைன்னு பேர் வைக்கறது..” என்று இதழ்களை சுழிக்கவும் அதை சுண்டி இழுத்து சங்கமித்தவன் நீண்ட நிமிடங்களுக்கு பின்..,
“இதெல்லாம் சரி ஆனா ஏன் எல்லார்கிட்ட இருந்தும் மறைச்ச?” என்னை ஏலகிரில பார்த்ததும் அத்தை கிட்ட சொல்லியிருந்தா தேவையில்லாத குழப்பம் வந்திருக்காதேடி…”
“நம்ம இரண்டு குடும்பத்துக்கும் பெருசா தொடர்பே இல்லாதப்போ அம்மா கிட்ட நான் என்னனு சொல்ல..? அவங்களுக்கு அன்னைக்கு நான் சொன்னது தெரிய வந்தா அவ்ளோதான்!! அதான் முடிஞ்ச வரை இதை பெரியவங்க செய்யற கல்யாணமா மாத்தினேன்..” என்றவளின் பேச்சுக்கள் கணவனின் ஆளுகையில் அடங்க ஊடல் கொண்ட நெஞ்சங்களின் கூடல் பொழுது அத்தனை அழகாய் அரங்கேறியது.
***************
“இழை ப்ளீஸ்டி..” என்று வசீ கையை பிடிக்க.,
“விடுங்க!! நான் தான் உங்க மேல பைத்தியமா இருந்திருக்கேன் அன்னைக்கு என்னை பூரணம், பூசணிக்கான்னு சொன்னதெல்லாம் சும்மா எவ்ளோ ஈசியா கிளம்பு உன் வீட்ல விடுறேன்னு சொல்றீங்க எப்படி முடிஞ்சது?” என்றவளை வசீகரனின் கரங்கள் சுற்றி வளைக்க..,
“ஒன்னும் வேண்டாம் நாம வீட்டுக்கு கிளம்பலாம் இங்கிருந்தா என்னை ரூம் அரெஸ்ட் பண்ணிட்டு குளிர்ல இருப்பீங்க.. உங்களுக்கு தாங்கும் ஆனா எனக்கு தாங்காது..” என்றவளின் விழிகளில் நீர் துளிர்த்தது.
“ப்ச் ஸாரிடி அதுவும் உனக்காகதான்!!” என்றவன் அவளை கைவளைவில் இருத்தி காஃபி கோப்பையை நீட்ட.., “எனக்கு வேண்டாம்..” என்று எழுந்து கொண்டாள்.
“ஏன்டி விட்டு கொடுப்பேன்னு சொல்லிட்டு இப்போ சொல்றதைகூட கேட்க மாட்டேங்கிற?”
“உங்களுக்காக விட்டு கொடுப்பேன்னு சொன்னேனே தவிர நம்ம உறவையோ உங்களையோ என் உரிமையையோ விட்டு கொடுப்பேன்னு எப்படி நினைச்சீங்க? நான் தப்பு பண்ணினா எடுத்து சொல்லுங்க இல்ல திட்டிடுங்க அதை விட்டுட்டு இன்னொரு முறை இதுபோல செய்யாதீங்க எனக்கு ரொம்பவே வலிக்குது..” என்று கண்ணீரை உள்ளிழுத்தவள்,
“சரி எதுக்கு அப்படி சொன்னீங்க சொல்லுங்க?” என்று சீறியவளை இழுத்து மடியில் அமர்த்தியவன்,
“பேசவே தெரியாதோன்னு நினைச்சேன் எவ்ளோ பேசுறடி நீ!! சொல்றேன் முதல்ல குடி..” என்று புகட்ட “உங்களுக்கு..” என்றவள் கோப்பையை அவனிடம் திருப்பவும் ஒரு மிடறு விழுங்கியவன்,
“உன்னை போல தான்டி நானும் உன்னை பற்றின எந்த எக்ஸ்பெக்டேஷனும் வச்சுக்கல அண்ட் நீ ஒன்னும் எனக்கு பிடிக்காத பெண்ணில்லை!! ஆனா என்னோட பேச்சு உன் அழுகை எல்லாம் சேர்ந்து என்னை உனக்கு பிடிக்குமாங்கிற கேள்வி தான் எனக்குள்ள.. ஆல்பம் பார்த்ததும் அநியாயமா ஒரு குழந்தை மனசை கலைச்சிட்டோமோன்னு திக்குன்னு ஆகிடுச்சு டேட் பார்க்கவும் கொஞ்சம் நிம்மதியானேன்.. சரி எப்படி காதல்னு தெரிஞ்சுக்க கேட்டா நீ நான் பழிவாங்கணும், தண்டனைன்னு சொல்லவும் கொஞ்சம் ஹைப் ஆகிட்டேன்..”
“உன்கிட்ட பேச முயற்சி செய்த போதெல்லாம் நீ பிடிகொடுக்காம போனது, நம்ம கல்யாணத்துக்கு நீ உடனே சம்மதிச்சது, என்னோட கிஸ் அக்செப்ட் பண்ணினது அப்புறம் நமக்குள்ள நடந்ததெல்லாம் ஒருவேளை நீ சொன்ன தண்டனைக்காகவான்னு நொந்து போயிட்டேன்… அதான் கோபத்துல வார்த்தையை விடறதுக்கு கொஞ்சம் தள்ளி இருந்து யோசிக்கலாமேன்னு சொன்னேனே தவிர உன்னை விட்டுட்டு இருக்கவா கல்யாணம் செய்தேன்?..”
“லைஃப்ல உன்னை மிஸ் பண்ணிட கூடாதுன்னு நினைச்ச நான் எந்த சூழலும் நாம சேர்ந்து எதிர்கொள்ளணும்னு இருந்தேன் ஆனா இப்படி நான் யோசிக்கவே முடியாதளவு போகும்னு எதிர்பார்க்கலை.. இனி இப்படி செய்ய மாட்டேன், போதுமாடி?!..”
“உங்களுக்கு எப்போயிருந்து என்னை பிடிக்க ஆரம்பிச்சது? சொல்லுங்க, ஹிட்லர்குள்ள ரெமோ இருப்பார்னு நான் எதிர்பார்க்கவேயில்ல..” என்றவளின் கன்னத்தை கடித்தவன்,
“உனக்காவது குறிப்பிட்டு சொல்ல ஒருநாள் இருக்குடி ஆனா எனக்கு எப்போ எப்படி நீ எனக்குள்ள வந்தன்னு சொல்ல தெரில.. சரியா சொல்லணும்னா நீ எனக்குள்ளேயே இருந்திருக்க ஆனா எனக்கு தான் உன்னை அடையாளபடுத்த நேரம் எடுத்திருக்கு… உனக்கு தெரியுமா ஸ்வேதா எனக்கு தினமும் ஐ லவ் யூ சொல்லியிருந்தாலும் நான் சொன்னதில்ல அட்லீஸ்ட் கார்ட்லாவது உன் லவ்வை சொல்லுன்னு சொல்லி கேட்கவும் தான் அந்த கார்ட்!!”
“அன்னைக்கு ஸ்வேதா வெளிலவர லேட் ஆகவும் அப்புவோட பர்த்டே ப்ரிபரேஷன் இருந்ததால அவசரமா உன்கிட்ட கொடுத்துட்டு போயிட்டேன்.. அன்னைக்கு அவ அப்பா என்னை இஷ்டத்துக்கு பேசவும் ஏதோ ஒரு வேகத்துல தான் ஆமா பிடிச்சிருந்தது கொடுத்தேன் என்ன செய்வீங்கன்னு கேட்டது..”
“எனக்கு அதெல்லாம் ஞாபகமே இல்லைங்க.. உங்களோட அதிர்ச்சியும் அழுகையும் தான் மனசை கஷ்டபடுத்தினது..”
“நம்ம கிட்ட இருக்கிற குறை என்னன்னு தெரியாம இருக்கிறது தான் மிகப்பெரிய குறை இழை.. ஆனா நீ செய்த நல்லதால எனக்கு என் பக்ககுறைகள் தெரிஞ்சது.. ஒரு காதல் என்னை முழுசா உருக்குலைச்சுடுச்சு!! ஒருவேளை அவளோட நடிப்பை உண்மைன்னு நம்பி பல வருஷம் தொடர்ந்திருந்தா என்னோட சேர்த்து என் குடும்பமும் மோசமா பாதிக்கபட்டிருக்கும்.. ஸ்வேதா இனி கிடையாதுன்னு ஈஸியா முடிவு செய்துட்டாலும் அதுல இருந்து வெளியில வர ரொம்பவே கஷ்டப்பட்டேன்…”
“சிலநேரம் நாம் எடுக்குற தப்பான முடிவுகளே அதுக்கப்புறம் நம்மளை சரியான பாதையில பயணிக்க வைக்கும்.. அதுக்கு அப்புறம்தான் யாரை எங்க நிறுத்தனுங்கிறதை விட நான் எங்க நிற்கனும்னு தெரிஞ்சுகிட்டேன் என்னோட ஒவ்வொரு அடியையும் கவனமா எடுத்து வச்சேன்.
அதுவரை செய்த தவறை எல்லாம் திருத்திக்க தொடங்கினேன்..”
“முக்கியமா அந்தந்த வயசுக்கு என்ன செய்யணுமோ அதை மட்டும் செய்தேன்… ஆனா என்னோட வாழ்க்கை சரியான பெண் கையில போய் சேரனும்னு நினைச்சேன் ஆனா அதுக்கு காரணம் ஸ்வேதாவான்னு கேட்டா என்னோட பதில் இல்ல!!”
“என்ன சொல்றீங்க ஸ்வேதா இல்லையா?”
“ஆமா!! அவ இல்லை நீ!!”
“நானா?”
“ஆமாடி! அன்னைக்கு கோபம் கண்ணை மறைச்சதுல உன் முகம்தான் சரியா நினைவு இல்லையே தவிர உன்னோட ஒவ்வொரு வார்த்தையும் மனசுல ஆழமா பதிஞ்சிருந்திருக்கு.. அடுத்தவங்க கஷ்டத்தை தன்னோட கஷ்டமா பார்த்து அதை போக்க நினைக்கிற மனசு எவ்வளவு உன்னதமானது!! அடிக்கடி உன்னோட வார்த்தைகள் என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்கும்.”
“முதல்ல கோபபட்டேன், அடுத்து சிரிச்சுகிட்டேன், அதுக்கப்பறம் இப்படியும் ஒருத்தி நமக்காக இருக்க முடியுமான்னு நம்ப முடியாம இருந்தேன் கடைசியில ஏன் அப்படி சொன்னன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.. எப்போ எந்த நேரம் என் மனசுக்குள்ள வந்தன்னு சரியா தெரியலை ஆனா என்னையறியாமலே நான் பார்த்த பெண்களில் எல்லாம் உன்னை தான் தேடி இருக்கேன்..”
“எங்கப்பா நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பார்த்தார் ஆனா அதுல ஒரு பெண்ணா நீ இருந்திட மாட்டியான்னு ஒவ்வொருமுறையும் அவங்களை மீட் பண்ணுவேன் தழும்பை தேடுவேன்.. அதே சமயம் ஒரு சின்ன பொண்ணு சொல்லிட்டு போனதை பெருசா எடுத்துக்கனுமான்னு தோனுச்சு…”
“ஏன் அப்படி?”
“இல்லடி சொன்ன உனக்கே அது நியாபகம் இல்லாமலும் போகலாம் அப்புறம் எந்த நம்பிக்கையில் இருக்கன்னு எனக்கு நானே கேட்டுப்பேன்… ஆனா நம்மோட உள்ளுணர்வு எப்பவும் தப்பாகாது.. நீ எனக்கு தான்னு அது சொல்லிட்டே இருந்தது..”
“ஏங்க எனக்குதான் அம்மாகிட்ட பயம் உங்களுக்கென்ன அத்தை மாமாகிட்ட நேரடியா சொல்லியிருந்தா இன்னும் சந்தோஷபட்டிருப்பாங்களே…”
“இல்ல இழை ஏற்கனவே என்னால அவங்க பட்டதுபோதும்.. இப்போ நீ எங்க என்ன பண்ணிட்டிருக்க உனக்கு என்மேல விருப்பமா இல்லையான்னு எதுவும் தெரியாம அவங்களுக்கு இன்னொரு ஏமாற்றம் கொடுக்க நான் தயாரா இல்ல.. அதனால முதல்ல நான் கண்டு பிடிச்ச பிறகு அவங்ககிட்ட சொல்லி உன்னை பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணிக்க இருந்தேன்… ஆனா உன்னோட நிச்சயம் எனக்கு பெரிய ஷாக்..”
“தப்பு என் மேல தாங்க!!”
“என்ன சொல்ற?”
“விஜய் மாமாவோட ஃபோட்டோல பார்த்தப்பவே ஆஷ்மிட்ட கேட்டேன் ஆனா அவளுக்கு உங்க பேர் தெரியலை மாமாவோட பிரென்ட்ன்னு மட்டும் சொன்னா அப்புறம் எந்த ஊர்ல இருக்காங்கன்னு கேட்கவும் நீ ஏன் கேட்கிறன்னு கேட்டா அதுக்கு மேல நான் கேட்டிருந்தா அவ ஒரு ஓட்டைவாய் சித்தி கிட்ட உளறி இருப்பா உடனே ஏன் என்னனு தோண்டி துருவுவாங்க…”
“அம்மாவை பேசுவாங்க அதான் அவ கல்யாணத்துக்காக காத்திருந்தேன் ரெண்டு குடும்பமும் சந்திச்சுகிட்டா போதும் அடுத்து எப்படியாவது கல்யாண பேச்சு வரும் அப்படிதான் நினைச்சேன்… ஆனா அப்பவே சொல்லியிருக்கனும்..”
“என்னங்க என்னோட ட்ரெஸ் பேக் பண்ணினேன்னு சொன்னீங்க ஆனா மூணு செட் சுடிதார் தான் இருக்கு?” என்று பெட்டியை புரட்டினாள்.
“ப்ச் அதான் அவ்ளோ நைட் டிரஸ் கொடுத்தேனேடி போதாதா?”
“அதைபோட்டுட்டு வெளியே போக முடியுமா” என்று முறைக்கவும்,
“நாம வெளில போறதா எப்போ சொன்னேன் உட்கார் முக்கியமான விஷயம் பேசணும்..” என்றவன்
“முதல்ல எனக்கு நைன் டூ சிக்ஸ் ஜாப்ல விருப்பமில்ல” என்று தன் வேலை குறித்து விளக்கியவன், “எனக்காக தயங்காத உனக்கு என்ன தோணுதோ சொல்லு பிடிக்கலைன்னா அதுக்கு என்ன ஆல்டர்னேடிவ் ரெண்டு பேருக்கும் பொதுவா பிடிக்கிற மாதிரியா மாத்திக்கலாம் தப்பில்லை… விட்டு கொடுக்கறது இரண்டு பக்கமும் இருக்கணும் ஒருவழி பாதையா இருந்தா ரொம்ப நாள் நிலைக்காது…”
“எனக்கு நீங்க கொடைக்கானல் கூட்டிட்டு போயிருக்கலாம்னு இருந்தது… ரொம்ப மிஸ் பண்ணினேன்”
“ஏன்டி உன்னை கூட்டிட்டு போனா என் வேலை நடக்குமா?”
“ஏன் நான் என்ன செய்ய போறேன் உங்களை டிஸ்டர்ப் பண்ணாம அமைதியா கூட வந்திருப்பேன்..”
“நீ என்னை எவ்ளோ டிஸ்டர்ப் பண்றன்னு எனக்குதான்டி தெரியும்.. நான் நானாவே இல்ல அந்தளவு என்னை மாத்தியிருக்க, கொடைக்கானலுக்கு உன்னை கூட்டிட்டு போகலையே தவிர உன்னோட வீடியோஸ் எத்தனை முறை பார்த்திருப்பேன்னு கணக்கே இல்ல தெரியுமா? நான் விரும்புற பெண் கிடைச்சாலே அதிர்ஷ்டசாலின்னு நினைச்சேன் ஆனா அவ என் மேல உயிரா இருக்காங்கிறது வேற லெவல் ஃபீல் இழை உனக்கு புரியாது..”
“ஃபாரினர்ஸ் வந்தபோது உன்னை விட்டுட்டு இருந்ததுக்கு அப்பா ஒரே பேச்சுன்னு அம்மா சொன்னங்க ஆனா நிச்சயம் நீ என்னை புரிஞ்சுப்பன்னு நம்பினேன் அதேபோல இருந்த… அவங்க டிஃப்ரென்ட் கல்சுரல் எக்ஸ்ப்ளோரேஷன்காக வந்திருக்கவங்க இது ரொம்ப கவனமா, பொறுப்பா எடுத்து செய்ய வேண்டிய வேலை இழை…”
“கவனிக்க வேண்டிய சின்ன சின்ன விஷயங்கள் எவ்வளவோ இருக்கு அப்படியெல்லாம் விட்டுட்டு வர முடியாது.. இதுக்கு முன்ன ஃபாரீனர்ஸ் வந்த போது அவங்களோட கல்யாண மண்டபத்துலயே நானும் தங்கியிருந்தேன் இப்போ உன்னை விட்டு இருக்க முடியாம தான் நைட் எவ்ளோ நேரமானாலும் நம்ம ரூம்க்கு வந்துடுவேன்..”
“நான் வரப்போ நீ தூங்கிட்டு இருப்ப எழுப்ப மனசே வராதுடி.. அதேபோல உன்னை ஸ்ட்ரேஞ்சர்ஸ் முன்ன எம்பேராஸ் பண்ண கூடாதுன்னு தான் கூப்பிடலை பட் கடைசில நீயா வரவும் உன்னை மிஸ் பண்ணின எனக்கு அது டபுள் எனெர்ஜியா இருந்தது தெரியுமா.. இனி என்னோட ஸ்கேட்யூல் உன்னோட சேர்ந்து ப்ளான் பண்ணத்தான் அடுத்த ஆறு மாசம் எதையும் ஒத்துக்கலை…”
“ஆறு மாசத்துக்கா?”
“ஆமா!! நமக்குள்ள எவ்ளோ புரிதல் இருக்கும்னு தெரியாது அப்படியிருக்கப்போ நான் உன்னை விட்டுட்டு ப்ரோஃபஷனுக்கு இம்பார்டன்ஸ் கொடுத்து கிளம்பிட்டா அப்புறம் நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிறது எப்படி? இப்போல்லாம் நிறைய திருமணங்கள் சீக்கிரமா முடிவுக்கு வந்துடுது…”
“நிறைய பார்க்கிறேன் அதனால நானுமே கல்யாணத்துக்கு அப்புறம் நம்மோட லைஃப்பை சிக்கல் இல்லாம கொண்டு போகணும்னு தான் யோசிப்பேன் அதனால தான் முதல் ஆறு மாசம் உனக்காக!! ட்ரெக்கிங் போக மாட்டேனே தவிர வீட்ல இருந்து ப்ராஜெக்ட்ஸ் மட்டும் செய்து கொடுக்கலாம்னு டிசைட் பண்ணியிருக்கேன்.. அதுக்கப்புறம் நம்ம குழந்தை வரப்போ அதுக்கு ஏத்த மாதிரி ப்ளான் பண்ணிக்கலாம் ஓகேவா?”
“ஹப்பா என்னை விட அதிகமா நீங்க யோசிச்சிருக்கீங்க…”
“கண்டிப்பாடி கல்யாணத்தை ஆடம்பரமா நடத்துறதை விட அதை சிறப்பா வாழ்ந்து காட்டனும் அதுல தான் வெற்றி இருக்கு நீ சொன்னது போல நமக்கு முக்கியத்துவமான விஷயங்கள் எவ்வளவோ இருக்கலாம் ஆனா அதுல எது முதல்லன்னு வரிசைபடுத்திட்டாலே போதும் லைஃப் தோற்காது.. எனக்கு நீதான் முதல்ல!!” என்றவனின் அணைப்பில் அடங்கியவள்..,
“முதல் ஓகே!! ஆனா அது என்ன பூரணம்? எனக்கு என்னன்னே புரியலை …”
“பூரணம் இல்லடி பரிபூரணம்!!”
“அப்படின்னா என்னங்க?”
“முழுமை, நிறைவுன்னு அர்த்தம் நீ இல்லாம நான் முழுமை இல்லன்னு சொன்னேன், துமஹாரி பினா மே அதூரா ஹுன்! (I am incomplete without you)”
“ஹான்..”
“ஐ மீன் XX பெண் என்றால் YY ஆண் கிடையாது XY தான் ஆண்… என்னில் சரிபாதியா இருக்க X ங்கிற பெண் இல்லன்னா நான் நிறைவு பெறமுடியாது அதுபோல என்னோட முழுமை நீன்னு சொன்னேன் இப்போ புரியுதா?”
“என்னங்க இது?” என்று முகம் சிவந்தவள்.., “இப்படி தான் சொல்லுவீங்களா?” என்றாள்.
“வேற என்ன சொல்ல? இப்படிதான் உலகம் சுழலுது… சிலருக்கு YY இருந்தாலும் அதுல X இல்லாம இருக்காது… அவங்க XYY இல்ல XXY யா இருப்பாங்க… எப்படி பார்த்தாலும் நீங்க இல்லன்னா நாங்க இல்லடி சிம்பிள்!!” என்று தோள்களை குலுக்கிட இழை வசீயின் மார்போடு ஒன்றினாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
4
+1
+1

