Loading

“என் பின்னாடி சுத்தவும், அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ணினேன். ஆனா மத்த பசங்க மாதிரி
பெருசா லவ் டையலாக் பேசுறதோ, சர்ப்ரைஸ் பண்ணுறதோ நான் செய்ததில்லை. தினமும் கிளாஸ்ல, கிரவுண்ட்ல நடக்கற விஷயங்களை அவளோட ஷேர் பண்ணுவேன். அப்புறம் டவுட்ஸ் கிளியர் பண்றதுன்னு எங்களுக்குள்ள சாதாரண பேச்சுகள் தான்..”

“என்னங்க, போதும் இதெல்லாம் எனக்கு சொல்லிக்கிட்டு, நான் உங்களை நம்புறேன்..” என்றதும் புன்னகையோடு அவள் கன்னத்தை கடித்தவன்,

“மேடம், நான் உனக்கு துரோகமும் செய்துடல. இது ஒன்னும் கன்ஃபெஷனும் கிடையாது. ஆனா நமக்குள்ள ட்ரான்ஸ்பரன்ஸி இருக்கணும். அதைவிட, உன்னோட குற்றஉணர்ச்சியை போக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு. அதனால அமைதியா கேளு..” என்றதும், அமைதியாக செவி சாய்த்தாள்.

“சொல்லப்போனா, உன்னால தான் அவளோட உண்மை முகம் எனக்கு சீக்கிரமா தெரிஞ்சது. ஒருவேளை அதை வளர விட்டிருந்தாmஎன்னோட காயம் ஆழமாகி மீட்கவே முடியாம போயிருக்கும். ‘ஐ லவ் யூ’ங்கிற வார்த்தைக்கு மரியாதையே இல்லாம போயிடுச்சு, இழை. சாதாரணமா சொல்லிக்கிற ‘ஸாரி’, ‘தேங்க்யூ’ மாதிரி ஆகிடுச்சு…”

“உனக்கு தெரியுமா… தினமும் ‘குட் மார்னிங்’க்கு பதிலா ஐ லவ் யூ, வசீன்னு அவ சொன்னப்போ எவ்ளோ ப்ரவுடா ஃபீல் பண்ணினேனோ… அதுக்கப்புறம், ‘காதல்’ங்கிற வார்த்தையையே அளவுக்கு அதிகமா வெறுத்தேன்…”

“நீன்னு கிடையாது, வேற யார் மூலமா தெரிய வந்திருந்தாலும் எனக்காக நின்னிருக்கணும். சரியோ தப்போ, உண்மையை ஒத்துக்கிட்டிருக்கணும். அப்படி செய்யாம, என்னை குற்றவாளியாக்கினதும், நான் சொல்ல சொல்ல கேட்காம எங்க அப்பா மன்னிப்பு கேட்டதெல்லாம் என்னால மறக்கவே முடியாது…”

“எப்பவும் எங்க அப்பாவை தலை நிமிர்ந்து தான் பார்த்திருக்கேன். எங்க அம்மாவோட அழுகை, என் தம்பிங்களுக்கு நான் ரோல் மாடல், ஆனா அவங்க புரியாம பார்த்த பார்வை
எதுவுமே மறக்காது…”

“எது நிஜம், எது பொய்ன்னு கூட புரியாம யாரோ ஒரு பெண்ணை நம்பினது எவ்ளோ பெரிய தப்புன்னு அன்னைக்கே புரிஞ்சுகிட்டேன்…”

“எனக்கு வாழ்க்கையில கிடைச்ச முதல் தோல்வி..!! சாதாரண தோல்வி கிடையாது. அத்தனை பேர் முன்னாடியும் முட்டாளாக்கப்பட்டிருக்கேன்…”

“அதைவிட, நான் அவளோட பேசினதெல்லாம் அவ பிரெண்ட்ஸ் கிட்ட ஷேர் பண்ணி, ‘சீக்கிரமே காதலை சொல்ல வச்சு பின்னாடி சுத்த வைப்பேன்’ன்னு சொல்லியிருக்கா…”

“நானும் அதுக்கு ஏத்த மாதிரி கார்ட் கொடுத்திருக்கேனேன்னு எனக்கே என்மேல கோபம்…”

“‘வசீ’ன்னு சொன்னா பிடிக்கல, பாட்டு பிடிக்கல, அவளோட இருந்த இடம், பேசின விஷயம்,
அவளுக்காக தொடங்கின காஃபி எதுவுமே பிடிக்கல…”

“அதைவிட,கூடப் படிக்கிறவங்களோட கேலிப் பேச்சு என்னை இன்னும் கோபப்படுத்துச்சு.. அடுத்த நாளே ஸ்கூல்க்கு வந்தவ, ‘ஸாரி வசீ… அப்பாவை எதிர்பார்க்கலை, பயத்துல அப்படி பேசிட்டேன்’ன்னு என்னென்னமோ விளக்கம் சொல்லி, ‘நாம எப்பவும் போல இருக்கலாம்னு’ சொன்னா… நான் DARE பத்தி கேட்கவும், அவளால பதில் சொல்ல முடியல…”

“எனக்கு அவ்ளோ ஆத்திரம். ஓங்கி ஒன்னு விட்டு, திரும்பி கூட பார்க்காம கிளம்பினேன். அதோட என் லைஃப்ல அவ சேப்டர் முடிஞ்சது…”

“ஆனா, அப்பா என்னை அடிச்சிருந்தா கூட எனக்கு அவ்ளோ வலிச்சிருக்காது… என்னை புரிஞ்சுகிட்டவங்க என் கூடவே இருந்தாங்க. அத்தை, அம்மாவை சமாதானப்படுத்தி, ‘இது ஒன்னும் கொலைக்குற்றம் இல்ல’ன்னு அழுகையை நிறுத்தினாங்க…”

“யாரோட பார்வையும் சந்திக்க முடியல. ஸ்கூல்ல என்னை சீண்டி கிண்டல் பண்ணினவங்களை அடிச்சு பிரச்சனையாயிடுச்சு…”

“அப்புறம்தான், ‘அப்பா இங்க இருந்தா சரிபடாது’ன்னு என்னை பெரிம்மா வீட்டுக்கு அனுப்பினாங்க. அங்க தான் ப்ளஸ் டூ முடிச்சேன்…”

“ஒருவேளை இந்த குழந்தை அன்னைக்கு நான் சொன்னதை சரியா செய்திருந்தா, இன்னைக்கு நான் இல்லாமலே கூட போயிருந்திருக்கலாம்..” என இழையின் நெஞ்சு திக்கென்றது.

“என்ன பேசுறீங்க..??” என்று கலங்கிய குரலில் கேட்டவளின் கரங்கள், வசீகரனை
காற்று புகாத அளவுக்கு இறுக்கிக் கொண்டது.

“நிஜமாதான்டி சொல்றேன். ஆனா தகுதி இல்லாதவளுக்காக என்னை அழிச்சிக்கிற அளவுக்கு
நான் முட்டாள் இல்லை..!!”

“ஆனா அதுக்கப்புறம் ஜாடை மாடையா பசங்க என்னை பேசின பேச்சு அப்படி..!! ஸ்கூல்ல
நம்பர் ஒன் ஸ்டுடென்ட், டீச்சர்ஸ் ஃபேவரெட் எல்லாமே மறைஞ்சு போற அளவுக்கு இந்த பேச்சு தான் ஹையர் செக்கன்டரி முழுக்க…”

“எவ்ளோ அசிங்கப்படுத்த முடியுமோ அந்தளவு பேசினாங்க. ‘ஒரு பொண்ணுகிட்ட ஏமாந்திருக்க நீயெல்லாம்’ன்னு எவ்ளோ நோகடிக்க முடியுமோ அவ்ளோ பேச்சு…” ன்றவனின் வார்த்தைகளை அதற்கு மேலும் தொடரவிடாமல் தன்னுள் விழுங்கிக்கொண்டிருந்தாள் இழை.

“ஸ்வீட்டா இல்லடி..”

“பேசாதீங்க, நீங்க..” என்று அவன் இதழை கடித்திருந்தாள்.

“ஸ்ஸ்… இனி பேசல. விடுடி!! ஆனா அன்னைக்கு அவ ப்ரெண்ட்ஸ் பார்த்த பார்வை இன்னுமே மறக்காது…”

“அப்போ எனக்கு என்னமோ வாழ்க்கையோட எல்லைக்கே வந்துட்ட மாதிரியும், எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு தோணுச்சு…”

“அப்பா, சித்தப்பா, அத்தை இல்லன்னா என்னாகியிருப்பேனோ! ஆனா என் அப்பா அம்மாவை
இப்படி ஒரு நிலையில நிறுத்திட்டேனேன்னு நினைக்கும் போது என்னோட முட்டாள்தனம் எத்தனை பேருக்கு வலியை கொடுத்துடுச்சுன்னு புரிஞ்சது…”

“இன்னொரு முட்டாள்தனம் செய்யக்கூடாதுன்னு முடிவு பண்ணினேன்…”

“அப்பாவும் என்னை பெரிம்மா வீட்டுக்கு அனுப்பிட்டார். அங்க தான் நான் வாழ்க்கையை ஓரளவு புரிஞ்சுகிட்டேன்..”

“இழை நில்லு..” என்று வேகமாக தோட்டத்தினுள் நடந்துகொண்டிருந்தவள் பின்னே வசீ செல்ல, அவளோ அதை காதிலேயே வாங்காமல் இன்னும் வேகமாக நடந்து கொண்டிருந்தாள்.

“ஹே நில்லுடி..” என்று வசீ ஷாலை பிடித்து இழுக்கவும்,

“விடுங்க, என்கூட பேசாதீங்க..” என்று தொடர்ந்தாள்.

“ப்ச் நில்லுன்னு சொல்றேன்ல..”

“எதுக்கு நிற்கணும்? அந்த வயசுல இருந்ததுக்கு பேர் லவ்வெல்லாம் கிடையாது. ஜஸ்ட் க்ரஷ்..! சரியா சொல்லணும்னா ஹார்மோனல் சேன்ஜஸ். அதுக்காக உங்களையே அழிச்சிருப்பேன் சொல்லுவீங்களா? அதுவும் உங்களை ஏமாத்தினவளுக்காக..” என்று ஊடல் கொண்ட மனைவியை புன்னகையோடு பார்த்திருந்தவன்,

“அழறப்போ, சிரிக்கிறப்போ மட்டுமில்லடி… கோபத்துல கூட ரொம்ப அழகா இருக்க..!!” என்றவன் தன்னோடு சேர்த்தணைக்கவும், “விடுங்க..” என்று திமிறினாள்.

“உனக்கு கோபம் வருமா..?” என்று அதிசயிக்க, “இப்படியே பேசினா கண்டிப்பா வரும். அதுவும் உங்களை விட அதிகமா..”

“ப்ச்… அது அப்போ அந்த வயசுல வந்த தாட் ப்ராசஸ் இழை!! அதுகூட ஸ்வேதாக்காகவோ இல்லை என்னோட லவ் தோத்துப் போச்சுன்னு கிடையாது. அப்பா அம்மாவை தலைகுனிய வச்சுட்டேனேன்னு…”

“அது லவ் இல்லை..”

“நீ சொல்றது சரிடி. ஆனா அப்போ அந்த ரிலேஷன்ஷிப்புக்கு நான் கொடுத்திருந்த பேர் லவ்..!! அதுவும் நானா கொடுத்தது கிடையாது. சுத்தி இருக்கவங்க, அவ டெயிலி சொல்ற லவ் யூ எல்லாம் சேர்ந்து நானும் அப்படிதான்னு நினைச்சிருந்தேன்..”

“ஸ்வேதா எப்படி கேரக்டர், என்ன மாதிரியானவன்னு எதுவுமே தெரியாது. அந்த நேரம் அந்த நிமிஷங்கள் மட்டுமே முக்கியமா இருந்தது. எதையும் யோசிக்க தோணல. இப்போ புரியுது அது எவ்ளோ அபத்தம்னு. ஆனா அப்போ நிஜமா தெரியல..”

“ஸ்வேதா தேடி வந்திருந்தாலும், எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லாதப்போ முடியாதுன்னு சொல்லியிருக்கணும். அதைவிட்டுட்டு ஒருத்தி தேடி வந்து சுத்தினா கூட சேர்ந்து சுத்தணும்னு அவசியம் கிடையாதே. ஒருவேளை அவளுக்குப் பிறகு இன்னொருத்தி வந்திருந்தா அவளோடவும் சுத்தியிருப்பேனோ? அப்போ அதுக்கு என்ன அர்த்தம்?”

“கிடைக்கிற சான்ஸை யூஸ் பண்ணிக்கிறதுக்கு பேர் காதலான்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன்…”

“அப்போ நீங்க லவ் பண்ணலையா? ஆனா ஸீரியஸா இருந்தேன்னு சொன்னீங்க…”

“இல்லடி. சத்தியமா எனக்கு ஸ்வேதா மேல பெருசா ஈடுபாடு கிடையாது. அவதான் தேடி வந்தா, ஸ்பெஷலா ஃபீல் பண்ண வச்சா. என்கிட்ட பேசினது, அவ ஃப்ரெண்ட்ஸ் எதிர்லேயே ஸாங் பாடினது, ப்ராக்டீஸ் முடியற வரைக்கும் காத்திருந்தது பிடிக்கவும் அதுக்கு காதல்னு பேர் வச்சு கண்டினியூ பண்ணினேன்..”

“அவளோட டைம் ஸ்பெண்ட் பண்ணுறது, படிப்பு சொல்லிக்கொடுக்குறதுன்னு சொன்ன நேரத்துக்கு அதை செய்துமுடிக்கறதுன்னு கமிட்டடா இருந்தேன். அதைத்தான் ஸீரியஸா இருந்தேன்னு சொன்னேன்…”

“ஆனா அவ என்னை காக்க வச்சு, அதை அவ ஃப்ரெண்ட்ஸ்க்கு காட்டினது நினைச்சாலே எனக்கு என்மேலதான் கோபம் அதிகமா வரும். அவளை மட்டும் தப்புசொல்ல முடியாது. ஐ ஆம் எ லூசர்..”

“எனக்கு என்ன வேணும்னு தெளிவு அப்போ இல்ல. படிக்கிற வயசுல படிப்பை கோட்டைவிட்டு வாழ்க்கையையும் தொலைச்சிருப்பேன். ஆனா என்னோட ஃபேமிலி என்னை சரியான நேரத்துல சரியான இடத்துக்கு கொண்டு சேர்த்தாங்க. அதையெல்லாம் கடந்து இப்போ உன்னோட இருக்கேனே, இந்த நிஜத்தை நம்புடி!”

“ஓகே. அப்போ இனி அப்படி பேச மாட்டீங்களே?”

“ப்ராமிஸா பேச மாட்டேன், அதுவும் பிங்கி ப்ராமிஸ்..”

“அது என்ன பிங்கி ப்ராமிஸ்?” என்று திகைத்த இழையின் முகம் கணவனின் தீண்டலில் செந்நிறம் கொள்ள,

“தெரில. ஆனா இந்த பிங்கிக்கு இப்படிதான் செய்வேன்” என்று சிரித்தவன் அவளை அணைத்துக்கொண்டான்.

“என்னங்க…” என்ற அவள் சிணுங்கலுக்கு, “நீ நம்புற மாதிரி சத்தியம் பண்ணேன். இன்னொரு தரம் வேணுமா?” என்றவன் மேலும் அவளை சிவக்க வைத்தான்.

“ச்சோ… அமைதியா இருங்க” என்று அவன் கரத்தை இறுக்கிப் பிடித்து இதழ்களையும் அடைத்தாள்.

சிறிது தூரம் சென்றவர்கள் சிற்றோடையில் கால் நனைய அமர்ந்தனர்.

“எனக்கு காதல் மேல நம்பிக்கை இல்லாம போயிடுச்சு. சூடு கண்ட பூனை மாதிரி அதுக்கப்புறம் வேற யார் மேலயும் லவ் வரலை. உன்னையும் சேர்த்து…” என்றான்.

“ஒரு சின்னக் குழந்தைக்கிட்ட கார்ட் கொடுத்து அனுப்பினதும், நடந்த தப்புக்காக நீ வந்து அழுததும், அதுக்கும் நான் உன்னை திட்டினதும் எல்லாமே எவ்ளோ முட்டாள்தனம்னு அப்புறம் தான் புரிஞ்சது.”

“நான் சின்னக் குழந்தை இல்ல. சிக்ஸ்த் படிச்சிட்டிருந்த பெரிய பொண்ணு” என்றாள்.

“அப்போ என் இடுப்பளவுகூட இல்லாம பப்ளிமாஸ் மாதிரி இருந்த நீ குழந்தை இல்லாம வேற என்ன?” என்றதும் இழை மௌனமானாள்.

“இப்பவும் அப்படியா இருக்கேன்?” என்று மெல்ல கேட்டாள்.

“இல்லை, ரொம்ப மெலிஞ்சிருக்க. ஏன் அத்தை ஒழுங்கா சாப்பாடு போடலையா?”

“அப்படியில்ல. உங்களுக்காக டையட் எடுத்து வொர்க் அவுட் பண்ணினேன். உங்களுக்கு பிடிச்சிருக்கா?”

“எனக்காகவா?” என்று அதிர்ந்தான்.

“ஆமா, உங்களையே கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணின நாளிலிருந்து உங்களுக்கு பிடிச்சவளா மாறிக்கிட்டேன்.”

“இழை… இதெல்லாம் எதுக்காக? இப்படி இருந்தா தான் எனக்கு பிடிக்கும்னு யார் சொன்னா? அன்னைக்கு கோபத்துல பேசினதை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிட்டியா?”

அவள் பதிலாக ஆழமான மௌனம் மட்டுமே இருந்தது.

“இதோ பார் இழை… நீதான் என்னோட வாழ்க்கைன்னு முடிவு செய்து இத்தனை வருஷமா நான் உன்னை தேடினது உன்னோட உருவத்தை மனசுல வச்சிட்டு கிடையாது. நான்தான் சொன்னேனே, எனக்கு உன்னோட முகம் சரியா நினைவில்ல. இந்த தழும்பும் மச்சமும் தான் ஞாபகத்துல இருந்தது. அதுவும் உனக்கு தையல் பிரிக்க கூட நானும் வந்ததால இது பக்கம் பக்கமிருந்ததை தெரிஞ்சுகிட்டேன். இல்லன்னா இன்னும் கஷ்டப்பட்டிருப்பேன்…”

“அதே சமயம் காதலோட தேடினேன்னு நான் பொய் சொல்லமாட்டேன். கல்யாணம்ங்கிறது ஒரு லைஃப்லாங் கமிட்மென்ட். முதல்ல அதன்மேல நம்பிக்கை இருக்கணும். அடுத்து நம்மோட துணைக்கு உண்மையா இருக்கணும். எத்தனை கஷ்டம் வந்தாலும் பிரியாம ஒண்ணா ஃபேஸ் பண்ணணும். இதெல்லாம் தான் என்னோட குறிக்கோளா இருந்தது…”

“நிச்சயமா உனக்கும் எனக்கும் பெருசா புரிதல் கிடையாது. எனக்கு நீ எல்லாத்துக்கும் அழுவன்னும், உனக்கு நான் எப்போதும் கோபப்படுவேனும்னு மட்டும்தான் தெரியும். அதுக்குமேல ஒருத்தருக்கு ஒருத்தரை அதிகமா தெரியாது.”

“ஆனா கல்யாணத்துக்கு பிறகு உனக்கு பிடிச்ச மாதிரி என்னை மாத்திக்கணும்னு நினைச்சேனே தவிர, இப்படி முழுசா மாறி நிற்கலை. ஆனா நீ..!!” என்று வேதனையோடு பார்த்தவனுக்கு, ஏற்கனவே காரணமின்றி அவளை அழவிட்டதில் தன் மீதே கோபம். அவள் அவனுக்காக எடுத்த சிரத்தையில் அந்த கோபம் இன்னுமே கனன்றது.

“ஏன்டி இப்படி? அதுவும் நான் சொல்லாம..??” என்றிட இழையிடம் மெல்லிய நடுக்கம்.

“இதோபார், இப்படி அமைதியா நின்னு என்கிட்ட சாதிக்க நினைச்ச அவ்ளோதான்..! இந்தளவுக்கு காதலிக்க, எனக்காக காத்திருக்க, நான் உனக்கு அப்படி என்ன செஞ்சேன்? தயவுசெய்து சொல்லி தொலைடி…!” என்று கோபமாக கத்தி விட்டவனுக்கு, இப்போதும் அவள் பேரன்பில் கண்கள் கலங்கிப் போயிருந்தது.

“என்னங்க..” என்று இழை தோள் தொடவும், “தொடாதடி..” என்று தட்டி விட்டான்.

“ப்ளீஸ் கோபப்படாதீங்க… சொல்றேன்…” என்ற இழையின் குரல் தழுதழுத்திருந்தது.

அதில் வசீகரன் நிமிர்ந்து பார்க்க, “ப்ளீஸ் கோபமாகாதீங்க… எனக்கு… என்மேல கோபப்பட்டா சரியா பேச முடியாது…” என்று கண்ணீரோடு சொன்னவளை இழுத்து அணைத்து கொண்டான்.

“ஸாரிடி… அது நீ எனக்காக!! ப்ச்… நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும் இழை. அப்புறம் ஏன் இப்படி செய்தன்னு நான் கேட்கவே இல்லையே? நிஜமாவே உன்னோட காதல் என்னை பித்தாக்குது. இனி கோபப்பட மாட்டேன், சொல்லு…” என்று தன்னருகே அமர்த்தி தழும்பில் முத்தமிட்டான்.

“காதலுக்கு உருவம் தேவையில்லைங்க… மனசு தான் முக்கியம்!!” என்று இழை தொடங்கவுமே, வசீகரன் ஆச்சர்யத்தோடு பார்த்திருந்தான்.

“எனக்குமே நீங்க இப்போ எப்படி இருப்பீங்கன்னு பெருசா தெரியாது. அதிகபட்சமா என்ன பிடிக்கும்னு அத்தை மூலமா தெரியும். கோபம் அதிகமா வரும், அதுவும் முன்கோபம் கிடையாதுன்னு புரிஞ்சுக்க ரொம்ப வருஷமாச்சு.”

“ஸ்கூல் பியூப்பில் லீடர், ஸ்போர்ட்ஸ் பார்டிசிபேஷன், நல்லா படிப்பீங்கன்னு தெரியும். ஆனா அதெல்லாம் பல வருஷம் முன்ன. இப்போ எப்படின்னு தெரியாது…”

“நிஜமா சொல்லணும்னா, நான் உங்களை கல்யாணம் செய்யணும்னு முடிவு செய்ய ஒரு காரணம் நீங்கன்னா, இன்னொரு காரணம் எங்கம்மா…”

“அத்தையா?”

“ஆமா..!! உங்களுக்கு ஒரளவு எங்கம்மாவைப் பற்றி தெரியும். நான் சொல்லவேண்டியதில்ல. அவங்களுக்கு அப்புறம் என்னை யார் பார்த்துப்பா என்பதுதான் அவங்களோட பயம்.”

“நான் காலேஜ் ஜாயின் பண்ணினதிலிருந்தே அவங்களோட ஒரே கவலை என்னோட கல்யாணம்தான்..!!”

“நாங்க இருக்க வீட்டுக்கு பக்கமிருந்த ஒரு ஆன்டி… அம்மாக்கு ரொம்ப பழக்கம். அவங்களுக்கும் ஒரே பொண்ணு. அது கூட பதினைந்து வருஷம் கழிச்சு பிறந்தவங்க.”

“ரொம்பவே ஆடம்பரமா கல்யாணம் செய்திருந்தாங்க. நாங்களும் போயிருந்தோம். ஆனா அவங்களோட மேரேஜ் லைஃப் இரண்டு வருஷம்கூட நிலைக்கலை.”

“முதல்ல ஏதேதோ காரணம் சொல்லி அந்த அக்காவை அனுப்பி பணமும் பொருளும் வாங்கிட்டிருந்தவங்க, ஒருநாள் அவங்களை மொத்தமா அனுப்பிட்டாங்க.”

“தன் பெண்ணை இனி பார்க்கவே முடியாதுங்கிற அதிர்ச்சியில அந்த ஆன்டிக்கு சித்தம் கலங்கிப் போச்சு. தன் பெண்ணுக்கு நடந்த அநீதிக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க போராடின அந்த அங்கிளும் ஒருகட்டத்துல சோர்ந்து, வீட்டோட முடங்கிட்டார்.”

“அடுத்த இரண்டு வருஷத்துல உடம்புக்கு முடியாம… ஒருத்தர் பின்னாடி போயிட்டாங்க…”

“இளகின மனசு கொண்ட எங்கம்மாவை இது ரொம்பவே பாதிச்சுடுச்சு. நாளைக்கு என்னை எப்படி கட்டிக்கொடுக்க போறோங்கிற பயம் மனசுல விழுந்துடுச்சு.”

“அப்பதான் அப்பா கிட்ட உங்களை பற்றி பேசினாங்க…”

“என்னை பற்றியா?”

“உங்களை மாதிரி ஒரு மகன் இருந்திருந்தா, என்னை பற்றின கவலையே இல்லாம இருந்திருப்போம்னு சொல்லிட்டு இருந்தாங்க.”

“அதுவரை உங்களை பற்றி பேசினா கண்டுக்காம போயிடுற நான், அப்பத்தான் அவங்க பேச்சை கவனிக்க ஆரம்பிச்சேன்.”

“அம்மாக்கு ஜித்து, அப்பு பிடிக்கும்னாலும் உங்கமேல தனி பாசம். நீங்க பிறந்தப்போ அத்தை கூட என் பாட்டி தான் இருந்தாங்களாம்.”

“எங்க அம்மாவுக்கு கல்யாணமாகிற வரை உங்களை வீட்டுக்கு தூக்கிட்டு வந்து பார்த்துக்கிறதும் அம்மா தானாம்.”

“அதுவும் நாங்க அங்க இருந்த இரண்டு வருஷத்துல, நீங்க பாட்டிக்காக செய்ததையெல்லாம் அடிக்கடி சொல்லிட்டு இருப்பாங்க…”

“அப்போ அத்தையோட வார்த்தைக்காக தான் காத்திருந்து என்னை கல்யாணம் செய்துகிட்டியா..?” என்று ஏமாற்றத்தை மறைத்து கேட்டான்.

“இல்லங்க. அவங்க உங்களை மாதிரி மருமகன் வேணும்னு கேட்கலை. மகன் இருந்திருந்தா நிம்மதியா இருந்திருப்பேன்னு தான் சொன்னாங்க…”

“அப்புறம் எப்படி?” என்ற வசீயை பார்த்த இழையின் மனதில் அன்றைய தினம் விரிந்திட, தொண்டை அடைத்தது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்