
யுகனின் மனதில் குழப்பம் சூழ்ந்திருக்க அதனை எப்படி சரி செய்வது என்று புரியாமல் இருந்தான்.
வந்தவர்கள் உண்மையைச் சொல்லியே அழைத்திருக்கலாமே ஏன் இப்படி தயங்கி நின்றார்கள் என்ற குழப்பம் தான் அவனைச் சுற்றியது.
“ஆதி சாப்பிட வாங்க” என்று தேஜா அழைத்திட
“ஹ்ம்ம்”என்றவன் “இங்க வாயேன் அஸ்வி”என்று அழைத்தான்.
அவள் அருகில் வந்து அமர்ந்ததும் மடியில் படுத்துக் கொண்டவன் “கொஞ்ச நேரம் இப்படியே இருக்கலாமா. இல்லை பசிக்குதா சாப்பிட்டு வருவோமா”என்று பரிதாபமாக கேட்க மனம் கனிந்தாள் தேஜா.
“இதை எல்லாமா கேட்பீங்க”என்றவள் தலையை வருடிக் கொடுக்க விழிகளை இதமாய் மூடிக் கொண்டான்.
“என்ன உங்க மைன்ட்ல ஓடுது ஆதி. எதுவா இருந்தாலும் சொல்லுங்க. அவங்களைப் போய் பார்க்கணுமா உங்களுக்கு. பார்த்து விட்டு வரலாம் நானும் உங்க கூட வர்றேன்”என்று அவள் சொல்லவும் விழித்தவன் “போய் பார்க்கிறது பிரச்சினை இல்லை அஸ்வி அவங்க எதையோ சொல்லாம விட்ட ஃபீல் எனக்கு. அது என்னன்னு தான் யோசிக்கிறேன்”என்றான்.
“நார்மலா தானே பேசினாங்க”என்று கேட்க
“நார்மலா தான் பேசினாங்க. பட் பிஹேவியர் நார்மலா இல்லை. இத்தனை வருஷமா இங்கே தான் இருக்கேன் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் நான் இங்கே இருக்கிறது தெரியும். அவங்கள்ள ஒருத்தரை கூடவா ரூபேஷ் விசாரிச்சு இருக்க மாட்டாரு. எங்க ஃப்ரெண்ட் அஜிஷ் லயா வீட்டுக்கு பக்கத்து வீடு தான் ஆக்ஸுவலி ரெண்டு பேரும் குட் ஃப்ரெண்ட்ஸ் அவன் ஃபேமிலி இன்னும் அங்கே தான் இருக்காங்க. அவன் கிட்ட கேட்டு இருந்தாலே சொல்லி இருப்பான் இந்த ரூபேஷ் இந்தியா வந்து நாலு வருஷம் ஆகிடுச்சு இத்தனை நாளும் பார்க்க வராதவன் இப்ப வர்றது தான் டவுட்டா இருக்கு”என்றான் யோசனையுடன்.
“நீங்க சொல்றதும் சரி தான். ஏன் குழம்பிட்டு உங்க ஃப்ரெண்ட் க்கு ஃபோன் பண்ணி பேசுங்க”என்று அவள் கூறவும் “குட் ஐடியா”என்றவன் கைபேசியை எடுத்து அஜிஸுக்கு அழைத்தான்.
சிறிது நேர நல விசாரிப்பிற்கு பிறகு ரூபேஷை பற்றி விசாரிக்க அஜிஷ் சட்டென அமைதியானவன் பின் “நீ இங்கே வர வேண்டாம் யுகி”என்றான்.
“ஏன் டா இப்படி சொல்ற”என்று கேட்க
“அந்த ரூபேஷ் அம்மா பைத்தியம் ஆகிடுச்சு.”
“என்னடா குழப்புற”என்றதும்
“கவி அம்மாவுக்கு இந்த பேய் பிசாசு அப்புறம் ஜாதகம் இதில் எல்லாம் நம்பிக்கை அதிகம் டா. நம்ம கவி அல்பாயுசுல போயிட்டதால ஆவியா சுத்தறதாகவும் அவ உன்னை தேடறனால தான் அவங்க குடும்பத்துக்கு கஷ்டம் தர்றான்னு”
“வாட் நான் சென்ஸ்”என்று உறுமினான் யுகன்.
“நான் சென்ஸ் னு நமக்கு புரியுது அவங்களுக்கு புரியலையே இந்த அம்மாவை ரூபேஷால விட்டுட்டும் போக முடியலை கூடவும் இருக்க முடியலை அந்த பாடு படுத்துது. அதனால லாஸ்ட் சான்ஸா உன்னை மீட் பண்ண வந்திருக்காங்க அவங்க. “
“நான் வந்து என்னடா செய்ய முடியும்”என்று கேட்க
“நீங்க ரெண்டு பேரும் ரூம் மேட்ஸா இருந்ததை நம்ம கமலேஷ் உளறி வச்சுட்டான்”
“ஹேய் லூசு தனமா இருக்குடா அவளும் நானும் ஒரே வீட்டில் டெனன்டா இருந்தோம். அவ்வளவு தான்.”என்று விளக்கம் கொடுக்க
“அது எனக்கு புரியுது யுகி. அவங்க கவியை இழந்ததில் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆயிட்டாங்க டா. ஏற்கனவே ஆக்ஸிடென்ட் ல நிறைய ப்ராப்ளம் இப்போ இப்படி ரூபேஷ் தாங்க முடியாமல் தான் உன்னை பார்க்க வந்தான்”என்றான் அஜிஸ்.
“ஓகே டா அதுக்கு எதுக்கு என்னை பார்க்க வரணும்”என்று கேட்க
“நீ கவியோட இருந்ததால ஆஸ் ஏ ஹஸ்பண்டா திதி குடுக்க வைக்க நினைக்கிறாங்க”என்று உண்மையை உடைத்து விட்டான் அஜிஷ்.
“வாட் ரப்பிஷ் இது சுத்தமா பைத்தியக்காரத்தனம் டா. லயாவை நான் விரும்பினேன் தான். அதுக்காக இப்படி இதெல்லாம் போய் நம்பிட்டு. அவ பேயா. சத்தியமா எனக்கு தாங்க முடியலைடா. அவ ஏஞ்சல் டா. அவளைப் போய் இப்படி”என்று தவிப்புடன் பேச
“அந்த அம்மா அதை தான் திரும்பி திரும்பி பேசுது யுகி. ரூபேஷ் முடியாமல் தான் வந்தான். “என்ற அஜிஸ் “உனக்கு பிடிக்கலைன்னா வர வேண்டாம் யுகி. பட் ஒரு விஷயம் சொல்றேன் நீ வந்தா ரூபேஷ் வொஃய்ப் கொஞ்சம் நிம்மதி ஆவாங்க ஏன்னா இதுக்கு எல்லாம் அனுபவிக்கிறது அந்த பொண்ணு தான்.”
“அவங்க என்னடா செஞ்சாங்க பாவம்”
“எதுவும் செய்யலை. உனக்கே தெரியும் கவி இறக்கறதுக்கு நாலு மாசம் முன்னாடி தான் ரூபேஷுக்கும் அவங்களுக்கும் மேரேஜ் நடந்தது. அவங்க ஜாதகத்தில் தோஷம் இருந்ததை மறைச்சு மேரேஜ் பண்ணிட்டாங்க அதான் கவி அவ பாட்டி எல்லாம் இறந்துட்டதா கொடுமை பண்றாங்க. கவிக்கு திதி பண்ணிட்டா இந்த பொண்ணோட தோஷம் போய் குடும்பம் செழிக்குமாம்”என்று அவன் விளக்க
“அந்த அம்மா படிச்சு எதுக்கு ஆகுது. வேலைக்கு போய் எதுக்கு ஆகுது இதை எல்லாமா நம்புவாங்க”என்று கோபம் கொண்டவனிடம் “படிச்சவன் படிக்காதவன் எல்லாம் அப்படி தான் இருக்காங்க. இந்த மூட நம்பிக்கை எல்லாம் எப்போ தான் ஒழியுமோ தெரியவில்லை”என்றவன் சிறிது நேரம் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்தான்.
யுகனுக்கு கோபமாய் வந்த போதிலும் ரூபேஷ் மனைவியை நினைத்து பரிதாபம் கொண்டான்
தேஜாவை அழைத்து அஜிஸ் பேசியதை கூற தேஜாவிற்கு முகம் சிறுத்தது.
“இப்போ என்ன செய்யலாம் அஸ்வி”என்று அவளிடமே கேட்க
“உங்க விருப்பம்”என்று முடித்துக் கொண்டாள்.
லயாவை யுகனின் காதலியாய் ஏற்றவளுக்கு நிச்சயம் அவனின் மனைவியாக நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
“அஸ்வி”என்றதுமே உடைந்து அழுதாள்.
“ஹேய் என்னம்மா”என்றவன் அவளை அணைத்துக் கொள்ள “உங்க வொய்ஃப் நான் தானே ஆதி. அப்புறம் எப்படி நீங்க. உங்களுக்கு இதுல சம்மதமா …”விம்மி வெடித்து அழ யுகாதித்தன் அதிர்ந்து போனான்.
**********
அருணும் ப்ரதன்யாவும் ஒரு வித இறுக்கமான மனநிலையிலேயே இருந்தனர்.
சத்யாவிடம் மகிழனைத் தர அவர்களுக்கு துளியும் விருப்பம் இல்லை. அவனை விட்டுச் சென்றது ஒரு பக்கம் இருந்தாலும் இப்போது அவனை வளர்க்கிறேன் என்று தானே கூறினாள். ஆனால் அந்த சிறுவனுக்கு ஒரு மிட்டாய் கூட வாங்கி வரவில்லை. குறைந்த பட்சம் அவனைப் பாசமாக தூக்க கூட இல்லை. இப்படிப்பட்டவளிடம் பிள்ளையை தருவதா என்ற எண்ணம் தான் இருவருக்கும்.
அப்படி செய்திருந்தாலுமே மகிழனை தரும் எண்ணம் இல்லை தான் இருவருக்கும்.
“தனு பேசாமல் அவங்க கிட்டவே”
“முடியவே முடியாது நான் மகியை யாருக்கும் விட்டு தர மாட்டேன்”என்றாள் பட்டென்று.
“சொல்ல வந்ததை முழுசா கேளு தனு”என்றவன் “எதுக்கு திடீர் னு மகியை கேட்கறாங்கனு நேரடியாக கேட்கவா”என்று வினவ
“மகி பேரில் சொத்து எதுவும் வாங்கி இருக்கீங்களோ அதை தெரிஞ்சுட்டு வந்து இருக்காங்க ளோ”என்றதும் இறுக்கம் தளர்ந்து சிரித்தவன் “பைத்தியம் அது இருந்திருந்தால் இந்நேரம் நான் கடனை அடைச்சுட்டு நிம்மதியா இருந்திருக்க மாட்டேன். அதுவும் இல்லாமல் அவங்க வீடு பயங்கர வசதியான ஆளுங்க”என்றான்.
.
“வேற என்ன ரீசன் பிரசாத். மகி மேல பாசம் னு சொன்னா அவங்க மனசாட்சியே அதை நம்பாது”என்று கூற அதை ஆமோதித்தான் அருண்.
இருவரும் குழம்பித் தவித்த வேளையில் அங்கே சத்யா தன் கணவனிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.
“எனக்கும் மகிழனை கேட்க ஆசை இல்லை தான் ங்க ஆனா என் அப்பா இப்படி செய்வார்னு கனவில் கூட நான் எதிர்பார்க்கலை”என்றவள் “பேசாம உண்மையைச் சொல்லி மகிழனை கேட்போமா அவனுக்கும் ஃப்யூச்சர் செக்யூர் பண்ணலாம் தானே”என்றாள் யோசனையாக.
“உண்மையை சொல்லி அது நமக்கு பேக் ஃபயர் ஆகிட்டா என்ன செய்ய சத்யா. அந்த அருண் ஏதாவது கோல்மால் பண்ணி முழு சொத்தையும் எடுத்துக்கிட்டா நம்ப நிலைமை”என்று கேட்க
“அதுவும் சரிதான்”என்றவள் “வேற வழியே இல்லையா ங்க”என்று பாவமாய் கேட்க
“வேற வழி இல்ல சத்யா. என்னடா இப்படி கல்நெஞ்சமா பேசறானேன்னு நினைக்காதே நான் உன் அத்தை பையன் இருந்தாலும் எந்த வித எண்ணமும் இல்லாமல் உன்னை மேரேஜ் பண்ணி இருக்கேன். எனக்கு இது முதல் கல்யாணம் தெரியும் தானே உனக்கு. எனக்கும் ஆசை உண்டு சத்யா. ஓபனா பேசறேனே. நம்ம குடும்ப சொத்து அது. அதை உன் பையன் நேமில் இருக்கறதால அவனுக்கே விட்டு தர முடியாதே. அவன் பேரில் சொத்து இருக்கறதுக்கு பிராயச்சித்தமாக அவனை வளர்க்க வேணும்னா செய்யலாம். மத்தபடி வேறெதுவும் என் கிட்ட எதிர்பார்க்காத சத்யா. எல்லாரையும் பகைச்சு தான் இந்த கல்யாணமே நமக்கு நடந்தது. “என்றான் அவளின் கணவன்.
“எனக்கு புரியாமல் இல்லைங்க. ஆனால் மகியை சொத்துக்காக கேட்கிறது கில்டியா இருக்கு”என்றாள்.
“அப்போ வா சத்யா அந்த சொத்து அவனுக்கே போகட்டும் நம்ம லைஃபை அந்த குடிசையில் இருந்தே ஸ்டார்ட் பண்ணுவோம்”என்றதும் தயங்கி நின்றாள்.
“முடியாது தானே…பிகாஷ் நீ செல்வ செழிப்புடன் வாழ்ந்தவ உன்னால புகழ் கூட வாழ்ந்த லைஃபையே டாலரேட் பண்ணிக்க முடியலை. நாம எதுவுமே இல்லாமல் போகற லைஃப் இன்னும் கீழ் மட்டம் சத்யா புரிஞ்சுக்க”என்றான் அவன்.
மகிழனை தன்னிடம் வைத்து கொள்ளும் முடிவில் தீர்மானமாக இருந்தாள் சத்யா.
நான் ஒன்றும் அவனை அழைத்து சென்று கொடுமைப்படுத்த போவதில்லையே. என் மகனை நான் வளர்க்க கேட்கிறேன் இதில் என்ன தவறு இருக்கிறது. ஆம் சொத்து என் தேவை தான் அதுவும் வேண்டும் மகனும் இதை சாக்கிட்டு வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் ஆணி வேரென பதிந்திருந்தது.
மகிழனின் மனதை அவள் உணரவே இல்லை. அந்த குழந்தைக்கு தாய் தான்தான் எனினும் அவன் இதுநாள் வரை தன்னை யாரென்று தெரியாமல் வளர்ந்து இருக்கிறானே தன்னிடம் வருவானா தன்னோடு அழைத்துச் சென்றால் நிம்மதியாக இருப்பானா இதுவெல்லாம் அவள் சிந்தனையிலேயே இல்லை.தற்போதைய ஒரே குறிக்கோள் அவள் தந்தையின் சொத்து மட்டும் தான். அதைப் பெற்று விட்டால் அதன் பிறகு மகிழனின் ஆசைப்படி அவனின் சித்தப்பாவை பார்க்க விரும்பினால் பார்த்து வரட்டும் அவனோடு சேர்ந்து இருப்பதென்றால் இருக்கட்டும் என்று பெருந்தன்மையுடன் யோசிப்பதாக நினைத்துக் கொண்டாள் ஆனால் அவள் எண்ணம் முழுவதும் அவள் அறியாமல் சுயநலம் தான் அப்பிக் கிடந்தது. அதனை அவள் அறிவாளா மனம் தெளிவாளா பொறுத்திருந்து பார்ப்போம்
….தொடரும்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
6
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

Super super super super super super super