
யுகாதித்தன் கண்விழிக்கையில் மணி பத்தைத் தொட்டிருந்தது.
தலைவலி வேறு வாட்டி எடுக்க எழுந்து வந்தவன் கதவைத் திறக்க வீடு வெறுமையாக இருந்தது.
தேஜாவை எதிர்பார்க்காமல் தானே சமையலறைக்குள் போக அங்கே எல்லாம் கழுவி துடைத்து சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது.
“அதிசயமா இருக்கு. கிச்சன் இவ்வளவு நீட்டா இருக்கே”என்று சொல்லி கொண்டே ப்ளாக் காஃபி போட நீரை சூடேற்றினான்.
காஃபித்தூளை சற்று தூக்கலாக போட்டுக் கொண்டவன் சர்க்கரையை சற்று குறைத்தே போட்டான். ஏனோ கசப்பு சுவையில் காஃபி குடிக்கத் தோன்றியது அந்த நேரம்.
‘இந்நேரம் வந்திருப்பா எங்கே போனா…ஆபிஸ் போயிட்டாளா வீக் என்ட் லீவாச்சே’என்று யோசித்தபடி காஃபி கப்புடன் வெளியே வந்தான்.
பெட்டியுடன் வெளியே வந்தாள் தேஜஸ்வினி.
அவளைக் கேள்வியாக நோக்கிட “சென்னை போறேன்.”என்றாள் ஒரு வரியில்.
“இப்போ தானே போயிட்டு வந்தோம் மறுபடியும் என்ன வரச் சொன்னாங்களா”என்று நெற்றியைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.
“பர்மெனன்டா போறேன் இனி திரும்ப வர்ற ஐடியா இல்லை”என்றாள் நிதானமாய்.
“அஸ்வி”என்று எழுந்து நின்றவனை முறைத்துப் பார்த்தவள் “கால் மீ தேஜா இத்தனை நாளும் அப்படி தானே கூப்பிட்டீங்க.”என்று கூறி விட்டு
“இனி கூப்பிட கூட அவசியம் இருக்காது. இனி இங்கு இருந்தா தானே கூப்பிடறதுக்கு”என்றாள் காட்டமாக.
“ப்ப்ச் இப்ப எதுக்கு லூசு மாதிரி பேசற அஸ்வி. இப்ப என்ன ஆச்சு”என்றான் சலிப்பாக.
“பிடிக்காதவங்க கூட வாழ்ந்து நான் என்ன பண்ண போறேன் ஆதி. சுத்தமா பேச்சு வார்த்தை நின்னு ஒரு வாரம் மேல் ஆகிடுச்சு. “என்றாள்.
அவள் ஆதி என்று அழைத்ததில் திகைத்தவன்”ப்ப்ச் வொர்க் ப்ரெஷர் அதனால் தான்”என்று சமாளித்தான்.
“வொர்க் ப்ரெஷர் ஏன் இதுக்கு முன்னாடி வொர்க் ப்ரெஷர் உங்களுக்கு இருந்ததே இல்லை நீங்க என் கிட்ட சகஜமா பேசினதே இல்லை அப்படி தானே”என்றவள் “நான் சொல்லவா காரணம்”என அழுத்தமாக அவனைப் பார்த்தாள்.
அவளை நிமிர்ந்து பார்த்திட “நாம அன்னைக்கு எக்ஸ்பிரஸ்”எனும் போதே “அஸ்வி”என்று அதட்டலாய் மறுப்பு தெரிவித்தான்.
“அது தான் உண்மை ஆதி. என் கூட க்ளோஸ் ஆனது உங்களுக்கு பிடிக்கலை அதில் விருப்பம் இல்லை. என்னை இன்னும் அந்த பிரகாஷ்”என்று சொல்லி முடிப்பதற்குள் இடியாய் ஓர் அறையை அவள் கன்னத்தில் இறக்கியிருந்தான்.
கண் கண்ணாடி தனியே கழன்று விழுந்தது. அத்தனை வேகத்துடன் அடித்திருந்தான் அவளை.
“மரியாதையா போயிருடி”என்று எச்சரித்தவன் நாற்காலியை தள்ளி விட்டு வெளியே சென்று விட்டான்.
தேஜஸ்வி அழுது தீர்த்தாள். ஏற்கனவே இரவெல்லாம் அழுதது வேறு கண்ணை பாதித்திருக்க இப்போது அதனோடு தலைக்குத்தலும் சேர்ந்து கொண்டது.
தலையைப் பிடித்துக் கொண்டு இன்னும் இன்னும் அழுதாள். தானே வழிய போய் கேட்பது அவமானமாக இருந்தது அவளுக்கு.
என்ன காரணம் என்று சொல்லி விட்டாவது விலகிப் போகலாமே என்ற ஆதங்கம் அவளுள்.
பழைய காதலை புதுப்பிக்க நினைக்கிறானா அதையாவது சொன்னால் தான் விலகி இருப்போமே எதுவுமே பேசாமல் ஒதுக்குவது தானே மனதை அறுக்கிறது.
தன்னை தீண்டியது அவன் காதலுக்கு செய்த அநீதியாக நினைக்கிறானோ அதுதான் இந்த விலகலோ… நான் தான் அவனைக் கட்டாயம் செய்து திருமணம் வரை கொண்டு வந்தேனோ… ஒரு வேளை அவன் பழைய காதல் திரும்பி வந்து விட்டாளோ என்று எல்லாம் யோசித்தவளுக்கு தலையே வெடித்து விடும் போலிருந்தது. அப்படியே உறங்கிப் போயிருந்தாள். இருள் கவிழத் துவங்கிய நேரத்தில் விழித்தவளுக்கு இன்னும் தலைபாரம் குறையாமல் இருக்க அப்படியே அமர்ந்து கொண்டாள்.
ஏழு மணிக்கு மேல் வந்த யுகன் அவளைப் பாராமல் அறைக்குள் செல்ல அது இன்னுமே அது அவளுக்கு வேதனையைத் தந்தது.
ஐந்து நிமிடங்கள் கூட கழிந்திருக்காது மீண்டும் வெளியே வந்தான்.
அவளருகே வந்தமர்ந்தவன் தோளோடு இழுத்து அணைத்துக் கொள்ள மனம் அதற்கு தான் ஏங்கித் தவித்ததோ எனும் விதமாக அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
அவள் உச்சந்தலையில் இதழ் பதித்தவன் “ரிலாக்ஸ் டா. ரிலாக்ஸ்”என்று சொல்லச் சொல்ல அவள் அழுகை கூடியதே தவிர குறையவில்லை.
“இப்போ அழுகைய நிறுத்தப் போறீயா இல்லையா நீ”என்று அதட்டியவன் நிமிடத்தில் எழுந்து அவளைத் தூக்கிக் கொண்டான்.
“விடுங்க நீங்க இப்படி தான் அன்றைக்கும்”என்று விசும்பியபடியே பேச “ஹ்ம்ம் அன்னைக்கும்”என்றவன் “சோடா புட்டி எல்லாம் அவசரம் தான் உனக்கு. எதைப் பேசணும் பேசக் கூடாது எதுவும் தெரியாது.”என்றான் சலிப்பாக.
“நானா ஸ்டார்ட் பண்ணலை”என்றாள்.
“ஓஹோ”என்று புன்னகைத்து விட்டு “இனிமே அந்த நாய் பேர் உன் வாயில் இருந்து வந்தது அவ்வளவு தான் உனக்கு சொல்லிட்டேன்”என்றான் குரலில் கடுமையைத் தேக்கி.
“எனக்கு மட்டும் ஆசையா அவனைப் பத்தி பேசறதுக்கு.”என்றாள் எரிச்சல் மிகுந்த குரலில்.
தலைவலி வேறு கூறு போட்டது அவளை.
“என்ன ஆச்சு தலைவலிக்குதா உன் க்ளாஸ் எங்க”என்றவனிடம் எதுவும் பேசாமல் விலகி அமர “ஐம் சாரி அஸ்வி கோபத்தில் “என்று பேசத் தயங்கியவன் “சரி வா போயிட்டு வாங்கிட்டு வரலாம்”என்றான்.
“என் கிட்ட ஆல்டர் க்ளாஸ் இருக்கு”என்றவள் “உனக்கு என்னைப் பிடிக்கலையா ஆதி. இல்லை உன் எக்ஸ் வந்துட்டாங்களா அவங்க கூட இருக்கணுமா உனக்கு நான் இடைஞ்சலா இருக்கேனா”என்று தவிப்பாய் கேட்க அவனுக்கு இப்போது தான் புன்னகை வந்தது.
“இந்த வொன் வீக் இதைத் தான் திங்க் பண்ணியா நீ”என்றதும் அவள் அமைதியாக அமர்ந்து இருக்க அவள் முடியை கலைத்து விட்டவன் “சாரி டா” என்றான் வருத்தமாக.
“நான் அப்போ அன்னைக்கு ஏதாவது மிஸ்டேக் பண்ணிட்டேனா ஆதி அதான் கோபமா இருந்தீங்களா. நிஜமா நான் என்ன செஞ்சேன்னு தெரியலை ஆதி. நான் யாரையும் நினைச்சு அமைதியா இருக்கலை ஆதி எனக்கு எந்த பழைய நினைப்பும் கிடையாது ஆதி ப்ளீஸ் நம்புங்க”என்று கண்ணீருடன் பேசியவளை அணைத்துக் கொண்டவன் அடுத்து பேச விடாமல் தடுத்திருந்தான்.
“நீ எந்த தப்பும் செய்யலை ஓகே. நான் தான் ப்ம்ச் நான் தான் எதை எதையோ யோசிச்சு”என்று தலையிலடித்துக் கொண்டவன் நெஞ்சை நீவிக் கொண்டான்.
அவனின் செய்கைகளைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவள் “ஸ்ட்ரெஸ் பண்ணிக்க வேண்டாம் ப்ளீஸ் ஆதி. ஹஸ்பண்ட் வொய்ப் ரிலேஷன்சிப் நீங்க நினைக்கிறப்ப இருந்தா போதும் இப்போ எதையும் நான் கேட்கலை ஆதி. பழைய மாதிரி நார்மலா பேசினா போதும் வேற எதுவும் நான் எக்ஸ்பெக்ட் பண்ண மாட்டேன் ஆதி.”என்றாள் பரிதவிப்புடன்.
ஒரு வேகத்தில் அவனை விட்டு செய்வதென்று முடிவெடுத்து விட்டாலும் இப்போது தன் பெற்றோர் அதை எப்படி ஏற்பார்கள் தன்னை நினைத்து வருந்துவார்களே அவர்களை வேதனையில் ஆழ்த்த வேண்டுமா என்ற குழப்பமும் கவலையும் அவளுக்கு.
குறைந்த பட்சம் சாரதா கிருஷ்ணனோடு இருந்து கொள்ளலாம் கேட்டால் பெங்களூரின் காலநிலை தனக்கு ஒத்து வரவில்லை என்று கூறிக் கொள்ளலாம் என்று தான் எண்ணி கிளம்பி இருந்தாள். ஆனால் அவனைக் கண்டதும் தன் ஒட்டுமொத்த கோபத்தை காட்ட எண்ணி பேச அது வேறெங்கோ சென்று முடிந்திருந்தது.
“லிஷன் அஸ்வி ஏதோ மைன்ட் அப்செட் அதனால சரியா பேசலை மத்தபடி உன் மேல எந்த கோபமும் இல்லை அஸ்வி. எனக்கு கொஞ்சம் டைம் தேவைப்பட்டது அதனால தள்ளிப் போனேன் வேற எந்த ரீசனும் இல்லை அஸ்வி”என்றான் விளக்கமாக
“சடனா இக்னோர் பண்ணவும் மனசுக்கு கஷ்டம் ஆகிடுச்சு ஆதி.அதுவும் இல்லாமல் உங்க எக்ஸ் கேர்ள் ஃப்ரெண்ட் டைரியை படிச்சேன்”என்றாள் தயக்கமாக.
“ஓஓஓ”என்றவன் “அதான் டைரி வெளியே இருந்ததா..”என்று வினவ ஆமென்று தலையாட்டினாள்.
“அவ்வளவு டீப் லவ் ஏன் ரெண்டு பேரும் பிரிஞ்சிங்க… வீட்டில் ஒத்துக்கலையா…அத்தையா இருக்காதே… ஒரு வேளை அவங்க வீட்டிலையா”என்று மேலும் மேலும் கேள்வியாக கேட்க
“இப்போ தலைவலிக்கலையா உனக்கு”என்று அதட்டி விட்டு “நான் ஏதாவது டின்னர் பண்றேன்”என்று எழுந்து கொண்டான்.
“காஃபி தரவா… கொஞ்சம் பெட்டரா இருக்கும்”என்றவன் வெளியே சென்று விட இவளின் எண்ணங்கள் எல்லாம் ஏன் இருவரும் சேரவில்லை என்பதில் போய் நின்றது.
இருவருக்குமான காஃபியோடு வந்தவனிடம் இருந்து கோப்பையை வாங்கியபடி “அவங்க கூட ஏன் ப்ரேக் அப் ஆச்சு ஆதி. இன்னும் அவங்களும் இப்படி தான் இருக்காங்களா… உங்களுக்கு அவங்க கூட இருக்கணுமா”என்று கேட்க யுகாவின் பார்வை அவளில் அழுத்தமாக படிந்தது.
“பதில் சொல்லுங்க”என்றாள்.
“ஆமாம் னு சொன்னா அவளோடு சேர்த்து வச்சிடுவியா நீ”என்று கேட்கவும் கண்களில் நீர் திரள “சேர்த்து வைக்கிறேன்”என்று தடுமாறி விசும்பலாக பதில் அளித்தாள்.
“அப்போ நீ என்ன செய்வ அஸ்வி. உன் வீட்டில் என்ன பதில் சொல்வ… ஹ்ஹான் புருஷன் எக்ஸ் நினைப்பிலேயே இருந்தான் அதனால மனசு தாங்காம அவங்களை சேர்த்து வச்சுட்டேன் சொல்வியா… இல்லை வேற ஏதாவது முடிவு பண்ணி வச்சிருக்கியா?”என்றான் அழுத்தமாக.
“நான் வேற என்ன தான் செய்ய ஆதி.? உங்களுக்கு இந்த ரிலேஷன்சிப் கஷ்டமா இருக்கு. அதோட உங்க எக்ஸை மறக்கவும் முடியலை. ரொம்ப கஷ்டப்படுறீங்க இதால. நான் ஏதாவது சொல்லி சமாளிப்பேன்”
“ஸோ நீ என்னை விட்டு இருந்துடுவ இல்லையா”என்றதும் பதிலே பேசவில்லை அவள்.
“காஃபி குடி. சேர்த்து வைக்கிறாளாம். ஆளைப் பாரு சோடா புட்டி”என்று திட்டியவன் “சேர்த்து வைக்கிறவ தான் மூச்சுக்கு முந்நூறு தடவை ஆதி ஆதினு செல்லப்பேர் வச்சு கூப்பிடுறியோ”என்றான் முறைப்பாக.
அவனின் முறைப்பில் தலை குனிந்து கொண்டபடியே”எனக்கு வேற என்ன செய்றதுனு தெரியலை ஆதி. இந்த ஒதுக்கம் என்னை அவ்வளவு பாதிக்குது. ப்ளீஸ் சண்டை கூட போடுங்க பட் இக்னோர் பண்ணி பேசாம மட்டும் இருக்காதீங்க. உங்களுக்கு அவங்களை மறக்க முடியலைனா சொல்லுங்க நான் எப்படியாவது அவங்க கூட சேர்த்து வைக்கிறேன்”என்று இரண்டு விதமாக பேசியவளைக் கண்டு யுகாதித்தனுக்கு சிரிப்பில் முகம் கனிந்தது.
” ஏதாவது பேசுங்க ஆதி. நான் உங்களுக்கு தடையா இருக்க மாட்டேன் ஆதி. எப்படியும் என் வீட்டில் அத்தை மாமாவைனு எல்லாரையும் கன்வின்ஸ் பண்றேன். என்னால முடியும் ஆதி “என்று படபடத்தாள் தேஜஸ்வி.
“அவ கூட நான் சேரணும்னா செத்து மேலே போனா தான் முடியும். அவ இறந்து ஆறு வருஷம் ஆகுது. கப்பை குடு காஃபி தீர்ந்திடுச்சு”என்றவன் “உன் குழப்பமும் சந்தேகமும் சேர்ந்தே தீர்ந்துடுச்சு தானே”என்றபடி அங்கிருந்து வெளியேறினான்.
….. தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
9
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Super thejuuu initha konjo relax ava .kavii epdi ipdi aaachunu therlaye .laya oru pure soul mari irukka