Loading

    அருண் தலை குனிந்து நிற்க பிரதன்யா இதுதான் வாய்ப்பு என்று அவனைப் பேசி தீர்த்து விட்டாள்.

    “அம்மா தாயே போதும் விட்டுடு”என்று கையெழுத்து அவன் கும்பிட்டு விட

    “இதெல்லாம் நல்லா பண்ணுங்க ஆனா சொல்ல வேண்டிய விஷயத்தை என் கிட்ட சொல்லாதீங்க என்ன”என்று ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் அவள் வர அருணுக்கு தலை சுற்றாத குறை தான்.

    அவளை மலையிறக்குவதற்குள் ஒரு வழியாகிப் போனான் அருண். கந்தசாமியையும் அவள் விட்டு வைக்கவில்லை ‘எப்படி சொல்லாமல் செல்லலாம்’என்று கேட்டு வைக்க

    “உனக்கு எதுக்கு சிரமம் னு தான் மா சொல்லலை. மத்தபடி மறைக்கணும்னு நினைக்கலை”என்று மருமகளை சமாதானம் செய்தவர் பேரனோடு வெளியே கிளம்பி இருந்தார்.

    அவர்கள் கிளம்பியதும் மீண்டும் வேதாளமாய் முருங்கை மரம் ஏற அருண் திணறிப் போனான்.

    “ஹேய் பாவம்டி நானு”என்று பரிதாபமாக நிற்க பக்கென்று சிரித்தவள் “பணத்துக்கு வேற வழி செய்வோம் கந்துவட்டி வேண்டாம்”என்றாள்

    “லோன் கூட போட முடியாது தனு.ஏற்கனவே ரெண்டு போகுது”என்றவனிடம் “லோன் வேண்டாம் நகை இருக்கு தானே அதை வச்சுட்டு செட்டில்மென்ட் பண்ணலாம்.”என்றாள்.

    “ஹேய் விளையாடாத. உன் அப்பா போட்டது அது ஏதாவது விசேஷம் னா என்ன செய்வ அதெல்லாம் வேண்டாம்”என்றான்.

    “ஆமா எல்லாத்தையும் தூக்கி மாட்டிட்டு போற மாதிரி தான்.”என்று அலுத்தவள் அவன் ஒப்புக் கொள்ளும் வரை விடவில்லை.

    “ஓகே ஓகே சம்மதிக்கிறேன் பட் உன் வீட்டில் சொன்ன பிறகு தான் வாங்கிப்பேன்”என்றான் அழுத்தமாக.

    “டன்”என்றவளை தன் பக்கம் இழுக்க “ஹ்ம்ம் நோ நோ என் கிட்ட பொய் சொன்னதால் எதுவும் கிடையாது.”என்று விலகிப் போக

    “அதுவும் நீ தான் சொல்வியா இதிலாவது புருஷன் என் பேச்சைக் கேட்கலாம்”என்று வம்பு செய்தவன் தன் மடியில் அவளை அமர்த்தி இருந்தான்.

    இடையோடு வளைத்து பிடித்திருக்க அவன் தோளில் சாய்ந்து விட்டாள் தவிப்புடன்.

    “தனு.”என்றவனின் குரலே கரகரத்து வெளியே வர திகைப்பாக அவன் பக்கவாட்டில் சாய்ந்து முகம் பார்த்தாள்.

    கையைப் பிடித்தவன் விரல்களுக்கு முத்தமிட்டு நிமிர அவன் கழுத்தோடு கைகளை மாலை போல சுற்றிக் கொண்டாள்.

    சட்டென தூக்கிக் கொண்டவன் படுக்கையறை நோக்கி நகர அடுத்து என்ன நடக்கும் என்று புரியத் துவங்கிய நொடி துள்ளி குதிக்க முயல “ஷ் ஏன் டி”என்றான் கண்கள் சொக்கி.

    “ஏன்னா மாமாவும் மகியும் வந்திடுவாங்க”என்றவளின் குரல் உள்ளடங்கி ஒலித்தது அவன் விழி வீச்சில்.

    “வந்தா பார்த்துப்போம்”என்றவன் காலிலேயே கதவைத் தள்ளி சாத்தி விட்டான்.

    படுக்கையில் விட்டவனுக்கு எதிர்பார்ப்பெல்லாம் அவள் சம்மதத்தில் நிற்க அவள் விழிகள் நொடிதனில் சம்மதம் வழங்கி இமைச்சிறைக்குள் புகவும் ஆடவனின் ஆலிங்கனத்தில் தள்ளாடி நின்றாள் பெண்.

    நெற்றியில் உவர்நீர் துளி பூக்க உள்ளத்தில் மகிழ்ச்சி மலர் மலர அவனின் ஆளுகையில் உயிர் பூ திடுக்கென்று மலர்ந்தது அவளுக்கு.

    தீண்டலும் சீண்டலுமாய் நீடித்த நிமிடங்கள் இருவரின் ஆவலையும் ஆர்ப்பரிப்பையும் இன்னும் இன்னும் கூட்ட செய்ய பின்னிய யாக்கைகள் இருவரின் தேடல் நிறைவேறிய மகிழ்ச்சியில் தளர்ந்து ஆசுவாசம் கொண்டது.

     **********

    உறக்கம் கலைந்து எழுந்திருந்தான் யுகாதித்தன். அருகினில் தேஜா இல்லை.

    ‘எப்போது எழுந்து சென்று இருப்பாள்’என்ற சிந்தனையுடன் வெளியே வந்தவன் அவளைத் தேட சமையலறையில் இருந்து வெளிப்பட்டாள்.

    “ஃபீவர் விட்டுடுச்சா”என்று கேட்டபடியே அவளின் அருகில் செல்ல அப்போது தான் அவள் தயாராகி நின்றதையே உணர்ந்தான்.

    “எங்கே கிளம்பிட்ட நீ”என்றதும் “சென்னைக்கு போறேன் எனக்கு என் அம்மாவைப் பார்க்கணும்”என்றாள் அவனைப் பாராமல்.

    “ஏன் திடீர்னு.‌ நேத்து நடந்ததுக்கு அப்செட் ஆகிட்டியா அஸ்வி”என்றவன் “ஐம் சாரி அஸ்வி சட்டுன்னு ஒரு கோபம்”என்று விளக்கம் தர முயல

    “எதையும் கேட்கிற மனநிலையில் நான் இல்லை. எனக்கு வீட்டுக்கு போகணும் தட்ஸ் இட்”என்றாள் அழுத்தமாக.

    “நான் உனக்கு”என்றவனிடம் “நான் போகணும் ப்ளீஸ்”என்று விறுவிறுவென வெளியேற அதுவே அவனுக்கு தலையிறக்கமாக போனது.

    “எப்படி போவ டிக்கெட்”என்று கேட்க

    தான் செல்லவிருக்கும் ஃப்ளைட் மற்ற விபரங்கள் அனைத்தும் கூறி விட்டு”அப்படி எல்லாம் தப்பான முடிவு எதையும் எடுக்க மாட்டேன்” என்றாள் முறைப்பாக

    “இவ்வளவு ஈகோ ஆகாது உனக்கு ஓகே வெய்ட் பண்ணு நானும் வர்றேன் ஓபன் டிக்கெட் எடுத்துக்கலாம்”என்று கிளம்ப போக

    “ப்ளீஸ் நான் தனியா போகணும் என்னை விடுங்க”என்று அவள் சொல்ல மீண்டும் அவனிடம் கோபம் துளிர்த்தது.

    தன்னிடம் எதுவும் கேளாமலேயே இப்படி கிளம்பி செல்கிறாளே என்ற கோபத்தில் அவன் கதவை அடித்துச் சாத்தினான். அத்தனை ஆத்திரம் பொங்கியது.

    “ப்ப்ச் டேமிட் எப்படி பண்றா”என்று கத்தியவன் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான்.

    ஒரு வித அவஸ்தையாக இருந்தது அவனுக்கு.

    தான் பேசுவதற்கு கூட அவகாசம் தராமல் சென்றவள் மீது அவனுக்கும் கோபம் துளிர்க்க “போனா போடி உன்னை நானும் கூப்பிட மாட்டேன்”என்று சொல்லிக் கொண்டு படுத்து விட்டான்.

    “டேய் அறிவு வாளி நான் சண்டை போட்டா நீ வந்து சமாதானம் செய்ய மாட்டீயா அப்படி என்ன ஈகோ உனக்கு. “என்று கவிலயாவின் குரல் எங்கோ அசரீரியாக கேட்பது போல இருந்தது யுகாவிற்கு.

    “லயா”என்றவன் திடுக்கிட்டு எழுந்து அமர தேஜஸ்வினியின் கோபம் புரிந்தது.

    “ப்ப்ச் அவ கோபம் குறையட்டும் போகலாம். அதுவரைக்கும் அங்கேயே இருக்கட்டும்”என்று முடிவு செய்தவன் பத்மநாபனுக்கு அழைத்து தேஜஸ்வி சென்னை வந்து கொண்டிருக்கிறாள் என்று தகவல் கொடுத்தான்.

  மறுவீடு முடித்த பிறகு முதல் முறையாக பிறந்தகம் வருகிறாள் அதில் சந்தோஷம் தான் என்றாலும் தனியாக வருகிறாளே என்ற ஆதங்கம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை பத்மநாபனால்.

    ‘எதுவும் பிரச்சினையாஇ இருக்குமோ அப்படி இருந்தால் ஏன் நமக்கு தகவல் சொல்லப் போகிறார் ஏதாவது அவருக்கு வேலை இருந்திருக்கும் அதனால் தனியாக அனுப்பி வைத்து இருப்பார்’என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டார் பத்மநாபன்.

    ஆனாலும் உறுத்தலாக இருந்தது அவருக்கு. ஊருக்கு வருகிறேன் என்று ஒரு வார்த்தை கூட தங்களிடம் சொல்லாமல் கிளம்பி வருகிறாளே அப்படி என்ன அவசரம் என்று யோசிக்க யோசிக்க தேஜா வரட்டும் கேட்டுக் கொள்வோம் என்று எண்ணிக் கொண்டார்.

    பத்மநாபனுக்கு தகவல் சொல்லி விட்டாலும் யுகாவிற்கு மனது அடித்துக் கொண்டது. ஒரு வேளை ஊருக்கு செல்லவில்லை என்றால் எனும் எண்ணம் வர “இல்லை நாமளும் கிளம்புவோம்”என்று சொல்லியபடி “படுத்துறா இந்த கண்ணாடி”என்று வேறு திட்டிக் கொண்டான் அவளை.

    அவன் தயார் ஆகும் போதே குறுஞ்செய்தி வந்ததற்கான ஓசை கேட்க அதை எடுத்து பார்த்தான்.

    தேஜா தான் ஏர்போர்ட் வந்து விட்டதாகவும் ஃப்ளைட் ஏறப் போவதால் மொபைலை அணைத்து வைக்க போவதாகவும் அனுப்பி இருந்தாள்.

    கடுப்பாகிப் போனான் இவன்.

    “இவ்வளவு ஆணவம் ஆகாதுடி உனக்கு”என்று கத்தினான்.

    இந்த திருமணம் ஆயிரம் சமாதானம் செய்து நடந்திருந்தாலும் அவருக்காக இவருக்காக என்று சப்பைக்கட்டு கட்டிக் கொண்டு ஏற்றிருந்தாலும் அவன் இயல்பான ஒரு வாழ்க்கையையே வாழ எண்ணி இருந்தான். கடந்த காலத்தை மறக்க முடியாவிட்டாலும் அதனை மனதில் ஒரு ஓரம் இருத்தி விட்டு தேஜாவுடன் எல்லோரைப் போலவும் தான் வாழ ஆசை கொண்டான் அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு எவ்வளவோ முயற்சி செய்து தான் இந்த நிலைக்கு வந்திருந்தான். எல்லாம் இயல்பாய் இலகுவாய் செல்லும் நிலையில் தனது கடந்த காலத்தை பற்றி சொல்லவே எண்ணி இருக்க அதற்கு அவசியம் இல்லை என்பது போல யாரோ மூலம் இந்த தகவல் அவளுக்கு தெரிந்ததில் மிகுந்த வருத்தம் அவனுக்கு.

    அடுத்தவன் வாழ்க்கை பற்றி ஏன் தான் பேசுகிறார்களோ என்று ஆயாசமாக உணர்ந்தான்.

    நேற்றே தனது கடந்த காலம் பற்றி சொல்லி இருக்கலாம் தான். ஆனால் ஏற்கனவே கோபத்தில் இருப்பலளிடம் தான் எதையாவது கூறப் போய் அது இன்னும் அவன் மீதான அதிருப்தியை அதிகப்படுத்தி விடும் என்ற அச்சத்தினால் தான் கூறாமல் விட்டது அதுவும் மது அருந்திய நேரத்தில் லயா பற்றி கூறி வேறு ஏதேனும் எக்கச்சக்கமாக பேசி அது தேஜாவின் மனதில் பதிந்து போனால் தங்கள் எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் வேறு அவனுக்கு.

    ஏற்கனவே காதலில் தோல்வி கண்டு அதனால் ஏச்சு பேச்சுக்களுக்கு ஆளாகி இப்போது தான் தைரியமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவள் திருமணம் செய்து வந்திருக்கிறாள் மீண்டும் அவள் நம்பிக்கை உடையும் வகையில் நிகழ்வுகள் நடந்து விட்டதே என வருந்தினான்.

    கடகடவென்று ஒரு குறுஞ்செய்தியை டைப் செய்தவன் அதை தேஜாவிற்கு அனுப்பி விட்டு “என் மேல நம்பிக்கை வை அஸ்வி. நான் நிச்சயம் அதை ஸ்பாய்ல் பண்ண மாட்டேன். பொறுமையா இதை படிச்சுட்டு யோசி. ப்ளீஸ்டா வீட்டில் யார் கிட்டயும் நமக்குள் நடந்ததை பத்தி பேச வேண்டாம். நீ எப்போ சொல்றியோ அப்ப வந்து நான் உன்னை கூப்பிட்டுக்கிறேன். ஃபர் கிவ் மீ அஸ்வி. “என்று அவளுக்கு அனுப்பி வைத்து விட்டு “டால் என்னை ப்ளெஸ் பண்ணு நான் கண்டிப்பாக அஸ்வியை நல்லா வச்சுக்க தான் விரும்பறேன்”என்றான் மனதினுள் கவிலயாவிடம் வேண்டுதலாய்.

    தேஜாவிற்கோ மனது குழம்பிப் போய் இருந்தது.

    “ஏன் என்னிடம் எதுவும் சொல்லவில்லை சொல்லி இருக்கலாம் தானே என்னைப் பற்றி எல்லாம் தெரிந்தும் இப்படி நடந்து கொண்டானே”என்று கோபமாய் வந்தது அவளுக்கு.

    “நான் சிறு விஷயத்திற்கு கூட கறாராக இருப்பவள் நடப்பவள் என்று அறிந்தவன் தானே அப்படி இருந்தும் இதனை மறைத்து விட்டானே “என்று ஆதங்கம் பிறக்க கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள்.

    அவனை விட்டு வரவும் முடியவில்லை தான். அதற்காக கூட இருந்து கோபத்தைக் காட்டவும் விழையவில்லை அவள். தன் கோபம் அடங்கியதும் அவனிடம் நிச்சயம் விளக்கம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

    கவிலயா அவன் நினைவுகளில் இருந்து அகலாமல் இருக்கும் போது உறக்கத்தில் கூட அவள் பெயரை விடாமல் சொல்பவன் எப்படி என்னோடு திருமணம் வரை வந்தான். அதுவும் புதிதாக தன்னை அவனோடு இறுக்கி உறங்க வைத்தான் என்றெல்லாம் குழப்பம் தோன்ற அமைதியாக அந்த நேரத்தை கடக்க முற்பட்டாள் தேஜஸ்வினி.

‘இப்போது லயா எங்கிருப்பாள் மீண்டும் தங்களைத் தேடி வருவாளோ அப்படி வரும் போது யுகா தன்னை விட்டு விடுவானோ அல்லது தங்கள் வாழ்வில் அவள் பிரச்சினையாக வருவாளோ எங்களை பிரிக்க நினைப்பாளோ’ என்றெல்லாம் யோசித்தாள் பெண்.

 

    ….. தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
23
+1
3
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. Super super super super ava உயிரோடு இல்லை nu therinjatha konjam nimmathiya irukkum illana ipditha varuvala varamattala illa ivan poietuvananu manasu adichukitte irukkum