Loading

கிருஷ்ண மூர்த்தி-மரகதம் தம்பதிகளுக்கு மொத்தம் இரண்டு பிள்ளைகள், மூத்தவர் லட்சுமண மூர்த்தி, இளையவர் சந்தான மூர்த்தி,…. ஜெயமோகன் தாத்தா சொன்னது போல் கிருஷ்ண மூர்த்தியின் ஜெராக்ஸ் தான் லட்சுமண மூர்த்தி,… தகப்பனை போல் சாந்தமான குணமுள்ளவர், தாயும் அப்படி தான், ஆனால் கண்டிப்பானவர், பாசம் காட்டும் நேரத்தில் பாசத்தை காட்டுவார், கண்டிக்கும் நேரத்தில் கண்டிப்பார்,….

சில வருடத்திற்கு முன்னர் தான் உடல்நல குறைவால் கிருஷ்ணமூர்த்தி தவறினார், அவர் போன நாட்களிலிருந்து மரகதம் குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொண்டார்,  இவரின் பொறுப்பில் தான் அந்த குடும்பமே இயங்குகிறது, ஒருசமயம் அவர் கண்டிப்போடு செயல்பட்டாலும், பல சமயம் தன் குடும்பத்தினரிடம் அன்பாக தான் பழகுவார்,….

லட்சுமண மூர்த்தியின் மனைவி அன்னலட்சுமி, இவர் அப்படியே தன் கணவனுக்கு எதிர்மறை, எந்நேரமும் இவருக்கு கோபம் மூக்கின் மீது இருந்து கொண்டே இருக்கும், ஒருவரை திட்டாமல் அவருக்கு நாள் ஓடாது, இவரை பற்றி கதையின் போக்கில் இன்னும் தெரிந்து கொள்வோம்….

லட்சுமண மூர்த்தி-அன்னலட்சுமி தம்பதியருக்கு இரண்டு ஆண்பிள்ளைகள்,… மூத்தவன் வித்தார்த், இவன் அப்படியே தன் தாத்தா மற்றும் தந்தை போன்றவன், மிகவும் சாதுவானவன், வித்தார்த்திற்கு சில வருடத்திற்கு முன்னர் தான் திருமணமானது, மனைவி பெயர் சுமித்ரா, வாயில்லா பூச்சு, சிறு வயதிலிருந்தே பொத்தி பொத்தி வளர்க்க பட்டவள், கல்லூரி படிப்பு முடித்திருந்தாலும் கூட சுயமாக முடிவு எடுக்க தெரியாது, அவளின் தாய் தந்தை சொல் தான் வேதவாக்கு, இரண்டு வருடத்திக்கு முன்பு தான் வித்தார்த் சுமித்ராவிற்க்கு இரண்டு குடும்பங்களின் முன்னிலையில் ஊரே மெச்ச திருமணம் நடந்தேறியது, வித்தார்த் தன் மனைவியை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்வான், ஆனால் அவளின் மாமியார் மணிக்கு ஒரு தடவையாவது சுமித்ராவை தேள் கொட்டுவது பொல் கொட்டி கொண்டே இருப்பார்,

திருமணமான இரண்டு வருடத்திற்கு பின்பும் சுமித்ரா தாயாகாமல் இருக்கும் காரணத்தினால் இப்போதெல்லாம் அன்னலட்சுமியின் பேச்சு அதிகமாகியது, பொறுத்துப்பொறுத்த பார்த்த வித்தார்த், தன் மனைவியை தாய் வசைபாடுவது பொறுக்காமல், ஒரு முறை அன்னையிடம் குரலை உயர்த்தி பேசிவிட்டான், அன்றையிலிருந்து சுமித்ராவின் மீது அன்னலட்சுமிக்கு வன்மம் உண்டாகிருந்தது, சுமித்ராவோ தன்னால் தாய் மகனுக்கு இடையில் பிரட்சனை வரக் கூடாது என்று  கணவனை மாமியாரிடம் தனக்கு சாதகமாக எதுவும் பேச விடாமல் கட்டுப்படுத்தி கொண்டிருக்கிறாள்….

இளையவன் விக்ராந்த் நம் கதையின் நாயகன், இவன் அப்படியே அவன் தாயை போல, அவன் ஏதாவது ஒன்று முடிவு செய்து விட்டால் அது படி தான் நடக்க வேண்டும், இல்லையென்றால் வீட்டையே இரண்டாக்கிவிடுவான், அதையும் மீறி அவனை யாராவது கட்டுப்படுத்த நினைத்தால் தன் சுயரூபத்தை காட்டிவிடுவான், இவனை பற்றியும் கதையின் போக்கில் தெரிந்து கொள்வோம்,…

சந்தான மூர்த்தி இவருக்கும் கோபம் அவ்வளவாக வராது, ஆனால் தந்தை, சகோதரனை போல் மிருதுவானவரும் இல்லை, சில சமயம் அன்பாகவும், சில சமயம் கண்டிப்புடனும் செயல்படுவார்,… இவரின் மனைவி ஊர்மிளா, அமைதியான குணம் கொண்டவர், தன் கணவனை எதிர்த்து ஒரு சொல் சொல்ல மாட்டார், இவர்களுக்கு ஒரு பெண் இருக்கிறாள், பெயர் இனியா, இவள் சரியான சுட்டிபெண், தன் அம்மாவை போலவே தான் இவளும், இப்போது தான் கல்லூரி முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறாள்,…

இவ்வளவு தான் இவர்களின் குடும்பம்….

லட்சுமண மூர்த்தியின் குடும்பத்தில் உள்ள அனைவரும், நித்திலாவின் வீட்டு முற்றத்தில் கூடியிருந்தனர்,…. லட்சுமண மூர்த்தி தன் குடும்பத்தினரை ஜெயமோகன் மற்றும் வைத்தீஸ்வரியிடம் அறிமுக படுத்தி வைத்தார், அவர்கள் இருவரும் மாப்பிள்ளையை தான் அளவெடுத்துக் கொண்டிருந்தனர்,…

நெடுநெடுவென்று ஆறடிக்கும் சற்று அதிகமான உயரத்துடன், முறுக்கேறிய புஜங்களுடன், சிவந்த நிறம் என வசீகரிக்கும் முகத்துடன் காணப்பட்ட விக்ராந்தை பார்த்ததுமே பிடித்து போய் விட்டது தாத்தா பாட்டி இருவருக்கும்,…

இவர்கள் அவனை கண்ணெடுக்காமல் பார்த்து கொண்டிருக்க, விக்ராந்தோ யாருக்கோ பெண் பார்க்கும் படலம் நடப்பது போல், அவர்களுடன் கலந்து கொள்ளாமல் போனில் மூழ்கிருந்தான், தாத்தா பாட்டியின் பார்வை தன் மகனின் மீது இருப்பதை அறிந்த லட்சுமண மூர்த்தி,… “ம்க்கும்” என செறுமியவாறு,…”போனை ஆஃப் பண்ணுப்பா” என்றார் தன் மகனிடம் மெல்லிய குரலில்,….

முகத்தில் சலிப்பு தெரிய, தன் தந்தை பேச்சிற்கு கட்டுப்பட்டு, போனை அணைத்து பாக்கெட்டிற்குள் வைத்தான் விக்ராந்த்,….

“பொண்ணை வர சொல்லுங்களேன் பார்த்துடுவோம்,” மரகத பாட்டி புன்னகை மாறா முகத்துடன் சொல்ல,….”ஹாங்,.. சரிங்க” என்ற ஜெயமோகன், தன் மனைவி ஈஸ்வரிக்கு கண்ஜாடை காட்ட, அவர் தன் பேத்தியின் அறைக்கு சென்று, அவளை அழைத்து வந்தார்,…

தங்க நிற காஞ்சி பட்டில், சங்கு கழுத்தில் தங்க நெக்லஸ் ஜொலிக்க, காதில் பெரிய அளவிலான ஜிமிக்கி அழகாக ஆட, பிறை நெற்றியில் வானவில்லை போல் வளைந்த புருவங்களுக்கு இடையே சிறிதாக வட்ட பொட்டிட்டு, சிறிது செயற்கை அலங்காரத்துடன் கூடிய, இயற்கை அழகும் கலந்து எழிலோவியமாக வந்து நின்றாள் நித்திலா,..

தன் பாட்டி சொல்லிக்கொடுத்தது போல் நிமிர்ந்து அனைவரையும் பார்த்து கைகூப்பி ஒரு வணக்கத்தை வைத்தாள்,… அனைவருக்கும் நித்திலாவை பார்த்தவுடனேயே பிடித்து போய்விட்டது, அன்னலட்சுமிக்கு நித்திலாவை பிடித்ததோ இல்லையோ அவள் அணிந்திருந்த தங்க நகைகளை மிகவும் பிடித்திருந்தது, அதை விட அவள் பெரிய நகைகடை ஓனரின் மகள் என்பதால் இன்னும் அதிகமாவே பிடித்தது, அந்த ஒரே காரணத்திற்காகவே தன் கணவரின் சொல்லை தட்டாமல் இங்கு வந்திருந்தார்,…..

அனைவரும் பெண்ணை பார்த்து கொண்டிருக்க, விக்ராந்தோ அவள் புறம் மறந்தும் திரும்பவில்லை.

“பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்கா, வாமா வந்து பாட்டி பக்கத்துல உட்காரு” மரகத பாட்டி பரிவாக சொல்ல, அவள் தன் தாத்தா பாட்டியை ஏற்று பார்த்தாள்… அவர்களோ “போடா கண்ணு” என கண்களாலேயே அனுமதி தர, அவளும் சென்று மரகத பாட்டியின் அருகில் அமர்ந்தாள்,….

“இங்க பாரும்மா நித்திலா, இனி நாங்களும் உனக்கு குடும்பமாகிட்டோம், நீ உன் தாத்தா பாட்டிகிட்ட பேசுற மாதிரியே எங்க கிட்ட பேசலாம்” அவள் பதட்டத்தை அறிந்து அவளின் கரத்தில் அழுத்தம் கொடுத்து ஆறுதலாக சொன்னார் மரகதம்….

நித்திலாவிற்கு அவரின் பேச்சு ஒரு பக்கம் நிம்மதியை தந்தாலும், இன்னொரு பக்கம் பயத்தை உண்டுபண்ணியது, அது எதனால் வந்த பயம் என்பதை அவள் மட்டுமே அறிவாள்….

“ஹாய் அண்ணி, நான் இனியா, உங்களோட ஒன்னேயொன்னு கண்ணே கண்ணான நாத்தனார் தான் நான், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணி” இனியா சொல்ல, அவளுக்கு மெல்லிய சிரிப்பை மட்டுமே கொடுத்தாள் நித்திலா….

“ஏய் வாயாடி,… நீ மட்டும் இன்ட்ரோ ஆகிக்கிட்ட, என் தங்கச்சி கிட்ட நான் அறிமுகம் ஆகிக்க வேண்டாமா” என செல்லமா அதட்டிய சுமித்ரா,….”நித்திலா,… நான் சுமித்ரா, நீ கட்டிக்க போறவரோட அண்ணன் பொண்டாட்டி, உன்னோட அக்கா” என இதழ் விரிய சொன்னவள்…..”இனியா சொன்ன மாதிரி நீ ரொம்ப அழகு, சிரிச்சா இன்னும் அழகா இருக்க, என்னோட கொழுந்தன் ரொம்ப கொடுத்து வச்சவர்” என்றாள் சுமித்ரா,….

அவள் பதில் பேசாமல் மௌனமாக தலை குனிய,.. ஊர்மிளாவோ… “என்னம்மா எதுவும் பேச மாட்டேங்கிற, அத்தையே சொல்லிட்டாங்களே, நாங்களும் உங்க குடும்பமாகிட்டோம்னு, அப்புறம் என்ன தயக்கம்” என்று கேட்க,….”இல்ல,.. அது” என தயங்கியவள்,..”ஃபர்ஸ்ட் டைம்னால கொஞ்சம் தயக்கமா இருக்கு, போக போக பழகிரும்” நித்திலாவின் இனிமையான குரலை கேட்டு அனைவரும் முகமலர்ந்தன,…

“அண்ணி நீங்க பேசுனீங்களா? இல்ல பாடுனீங்களா? எவ்வளவு ஸ்வீட்ட்டா இருக்கு தெரியுமா உங்க வாய்ஸ்” இனியா சொல்ல, நித்திலா புன்னகைத்தாள்…. தான் எதுவும் பேசாமல் நித்திலாவும், மற்றவர்களும் பேசுவதை மட்டும் பார்வையாளராக இருந்து பார்த்து கொண்டிருந்தார் அன்னலட்சுமி…

“டேய் விக்கி… என்னடா யாருக்கோ பொண்ணு பார்க்க வந்த மாதிரி இப்படி இருக்க, பொண்ணை பாரு” வித்தார்த் தன் தம்பியிடம் மெதுவான குரலில் சொல்ல….”பார்த்து என்ன பண்ண” என்றான் விக்ராந்த் சலிப்புடன்,…

“என்னது பார்த்து என்ன பண்ணவா…? டேய் ஏன்டா இப்படி பேசுற, நிஜமா பொண்ணு அழகா இருக்காங்க, உனக்கு இந்த பொண்ணு தான் மேட்சிங்கா இருப்பாங்கன்னு தோணுது, நீயும் பாரேன்” வித்தார்த் சொல்ல,…”ப்ச்…. எனக்கு எது மேட்சிங்கா இருக்கும்னு எனக்கு தெரியும், மத்தவங்க சொல்றாங்க அப்டிங்கிறதுக்காகலாம் நான் யாரையும் மேரேஜ் பண்ணிக்க முடியாது” எரிச்சலுடன் சொன்னான் விக்ராந்த்….

“என்னடா… பொண்ணு பார்க்க வந்துட்டு இப்படி பேசிட்டு இருக்க, உனக்கு இதுல விருப்பம் இல்லையா, இஷ்டம் இல்லைனா முன்னாடியே சொல்லி தொலைக்க வேண்டியது தானேடா” வித்தார்த் கடிந்த குரலில் சொல்ல,… “சொன்னனே நம்மள பெத்தவர்கிட்ட, நான் சொல்லியும் கேட்காம அவர் என்னை இங்க கொண்டு வந்து நிறுத்திட்டாரு, எதை மனசுல வச்சிக்கிட்டு இப்படி பண்றாருனு எனக்கு தெரியல, ஆனா ஒன்னு அவர் நினைக்கிறதும் நடக்காது, இந்த கல்யாணமும் நடக்காது” என்றான் விக்ராந்த் உறுதியான குரலில்….

வித்தார்த் அதற்கு மேல் தம்பியிடம் பேசவில்லை, தந்தையிடம் பேசிக்கொள்ளலாம் என இருந்துவிட்டான்,…..

“பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, மேல என்ன பேசனுமோ அதை பேசி முடிச்சிடலாம் சம்மந்தி” மரகத பாட்டி சொல்ல,….”நான் பொண்ணு கிட்ட தனியா பேசணும்” என்ற விக்ராத்தின் உறுதியான குரலில் அனைவரும் அவனை நோக்கினர்,….

‘போச்சுடா’ வித்தார்திற்கு பீதியாக, லட்சுமண மூர்த்தி சிறிதும் கலக்கம் கொள்ளாமல் “சம்மந்தி உங்களுக்கு இதுல ஏதாச்சும் ஆட்சபணை இருக்கா” என்றார் ஜெயமோகனை நோக்கி…

“அதெல்லாம் இல்லப்பா, தாராளமா மாப்பிளை பேசட்டும், நித்தி கண்ணு, மாப்பிளைய மாடிக்கு கூட்டிட்டு போடா” தன் தாத்தாவின் குரலில் தான் நித்திலா இயல்பு நிலைக்கு திரும்பினாள்…. விக்ராந்த் அவளிடம் தனியாக பேச வேண்டும் என்று சொன்ன நொடியே அவளுக்குள் பயமும் பதற்றமும் தொற்றி கொண்டது, இப்படி தான் நடக்கும் என அவளுக்கு முன்னமே தெரிந்திருந்தாலும், அவளின் இதயம் பயத்தில் தத்தளிக்க ஆரம்பித்தது,…..

தன் தாத்தாவிற்கு தலையை மட்டும் அசைத்து சம்மதம் தெரிவித்தவள், எழுந்து மாடிப்படியேறினாள், வீட்டின் டெரர்ஸ் பகுதியில் நித்திலா தலைகுனிந்து கரங்களை பிசைந்தபடி நிற்க, அவளுக்கு முதுகை காட்டியபடி நின்றான் விக்ராந்த்,…

சில நிமிடம் மௌனமே அங்கு ஆட்சி புரிய, விக்ராந்த் தான் முதலில் பேச தொடங்கினான்,,…

“எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை, என் அப்பாவோட வற்புறுத்தலால தான் வேறு வழி இல்லாம இங்க வந்தேன், நீயே எல்லார்கிட்டயும் சொல்லிடு இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்லைன்னு” என சொல்லிவிட்டு, அவளின் முகத்தை கூட பார்க்காமல் அகன்று விட்டான்,….

இப்போது அனைவரின் முன்னிலையிலும் நின்றாள் நித்திலா….. “உனக்கு எங்க வீட்டு பையனை பிடிச்சிருக்கு தானேம்மா” மரகத பாட்டி நித்திலாவிடம் கேட்க, அவள் லட்சுமண மூர்த்தியை பார்த்தாள்,…

அவள் கண்களாலேயே அவளுக்கு ஆறுதல் அளிக்க, கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டவள்,…”பிடிச்சிருக்கு” என்றாள் ஒற்றை வார்த்தையில்,….

நித்திலாவின் இந்த பதிலில் இத்தனை நேரம் அவள் முகத்தை ஏறெடுத்து பார்க்காத விக்ராந்த் கோபமாக அவளை ஏற்று பார்த்தான், அவன் பார்வையில் அப்போது ஒரு வித குழப்பம், அதிர்ச்சி, என பல வகை உணர்வுகள் கலந்து தெரிந்தது, அதற்கு மேல் அவனால் எதுவும் பேச முயலவில்லை,…

“அப்புறம் என்ன பொண்ணே பிடிச்சிருக்குன்னு சொல்லிடுச்சு, அடுத்து கல்யாணம் தானே” சந்தான மூர்த்தி சந்தோசத்துடன் சொல்ல…..”ஆமாப்பா,… ஹை நம்ம வீட்ல மறுபடியும் இன்னொரு கல்யாணம் நடக்க போகுது” என குதூகலித்தாள் இனியா,….

“சம்மந்தி,… மாப்பிளை எதுவும் சொல்லலையே, அவருக்கு எங்க பேத்தியை பிடிச்சிருக்கு தானே” ஜெயமோகன் தயங்கி தயங்கி கேட்க,…. “என் பையனுக்கு உங்க பேத்தியை போட்டோல பார்த்ததுமே பிடிச்சுப் போச்சு” என்ற லட்சுமண மூர்த்தி, “உங்க மாப்பிளை வாயால அதை கேட்கணும்னு நினைக்கிறீங்க அப்படி தானே” என்றவர்…..”கண்ணா உனக்கு பொண்ணை பிடிச்சிருக்கு தானே” என்றார் மகனிடம்….

அவரின் முகத்தில் வெற்றி புன்னகை உதிர்த்தது, அதை பார்த்து சலித்து கொண்ட விக்ராந்த், இனி தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற விகிதத்தில்…”பிடிச்சிருக்கு” என்றான்,…. விக்ராத்தின் இந்த வார்த்தையை கேட்ட பிறகு தான் ஜெயமோகன், வைத்தீஸ்வரிக்கு முழு சந்தோசம் ஏற்பட்டது போல் இருந்தது,….

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. போச்சுடா பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான் … 😳😳நித்திலா மனசுல வேற என்ன இருக்குன்னு தெரியல … என்ன நடக்க போகுதோ

  2. பெண் பார்க்கும் படலம்.
    மாப்பிள்ளையை தாத்தா, பாட்டி பார்த்தாயிற்று. வெளித்தோற்றதை மட்டும் வைத்து எடைபோட்டாயிற்று.
    பெண்ணை மாப்பிள்ளையை தவிர குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பார்த்தாயிற்று. மாமியார் அவளது நகைகளையும், சொத்து மதிப்பையும் எடைபோட்டாயிற்று.
    தனியே பேச சென்றால் முகத்தை கூட பார்க்காமல் தனது தீர்மானதை மட்டும் தீர்மானமாக சொல்லி செல்கின்றான். என்ன வகை இவன்?
    எதற்காக விக்ராந்த் திருமணத்திற்கு ஒத்துவர மாட்டேன் என்கின்றான்?
    லக்ஷ்மண மூர்த்திக்கும் நித்திலாவிற்கும் ஏற்கனவே தகவல் பரிமாற்றம் உண்டோ?

    1. Author

      ஆம்,.. அதை பற்றி அடுத்த எபியில் வரும், மிக்க நன்றி சிஸ்