
என்னுள் நீ காதலாய்💞
அத்தியாயம் 44
செந்தமிழ் முகம் கழுவியபின், இளமாறன் வாங்கி வந்த டிரெஸ்ஸை அணிந்து கொண்டதும், அவன் குனிந்து அவள் உடையைச் சரி செய்தான். அந்த உடையில் அவள் மேடிட்ட வயிறு அழகாகத் தெரிய எழுந்து அவள் வயிற்றில் முத்தமிட்டு அவளை ஏற இறங்கப் பார்த்தான்.
“சைஸ் கரெக்ட்டா இருக்கா? இந்த தடவை M எடுக்கல, L சைஸ் தான் எடுத்தேன். நான் கல்யாணத்தப்போ பார்த்ததை விட இப்போ உன்னோட சைஸ் பெருசாகிடுச்சு. உன்னோட எல்லா சைஸ்ஸும் பெருசா ஆகிடுச்சு” அவள் முன்னழகை பார்த்து கொஞ்சலாய்ச் சொன்னவன், அதோடு விடாமல் அங்கு முத்தமும் வைத்தான். அவன் விலகியதும் தான் அவளுக்கு மெதுவாக அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்திட, வெட்கத்தில் கன்னங்கள் சிவந்து இமைகள் படபடக்க அவனைப் பார்த்தாள்.
“ஹையோ இப்படிலாம் பண்ணா நான் எப்படி பார்ட்டிக்கு கிளம்புறது. நாம நைட் வச்சுக்கலாம்” அவளை அணைத்து, அவள் காதோரம் சொன்னவன், “இங்க வா உட்காரு..” என்று அவளை மெத்தையில் அமர வைத்து, அவன் வாங்கி வந்த பவுண்டேஷன் க்ரீம், காம்பாக்ட் பவுடர், ஐ லைனர், காஜல், லிப்ஸ்டிக் போட்டு அவளைத் தயார் செய்தான்.
“இப்போ எதுக்கு இதெல்லாம்?” அவள் சிணுங்கலாகக் கேட்டிட, “பார்ட்டிக்கு எல்லாரும் நல்லா வருவாங்க டி. நமக்கு தான் பார்ட்டியே. அப்போ நாம நல்லா தான போகணும்” என்றவன், அவளை தயார் செய்து முடித்தபின், “நீ எப்பவும் முன்னாடி முடியை சுருட்டி கிளிப் போட்டு, பின்னாடி ஃப்ரீ ஹேர் விடுவியே. அந்த மாதிரி தலை சீவிக்கோ” என்றான்.
எழுந்து சென்றவள், நிலைக் கண்ணாடியில் தன்னுடைய முகத்தைப் பார்த்து ஆச்சரியத்தில் வியந்தாள்.
“நீ அழகா தான் இருக்க தமிழ். ஆனா டைம் போகப் போக டயர்ட் ஆகிடும். முகம் டல்லா ஆகிடும். அதுக்குத்தான் யூடியூப் பார்த்து இதெல்லாம் பண்ணேன். நீயும் ரெகுலரா இந்த மாதிரி போட்டுக்கோ. உன் அழகை அதிகமா காட்டும்” அவன் சொல்லிக் கொண்டிருக்க, அவளைக் கண்ணாடியில் பார்த்து மெய்மறந்து போனவள், அவன் பேசியதெல்லாம் கேட்டு இன்னும் மெய்மறந்தாள்.
செந்தமிழ் தன்னுடைய தலைமுடியை சீவிக் கொண்டிருக்க, சார்ஜரில் இருந்து அவனுடைய போனை எடுத்தவன், நிரஞ்சனா அனுப்பிய அந்த மெசேஜை படித்து லேசாக புன்முறுவல் செய்தான்.
இதை கண்ணாடி வழியே பார்த்தவள், ‘அப்படியே அவ கிட்ட இருந்து வந்த மெசேஜ் பார்த்ததும் சிரிப்பு. முகத்துல பளிச்சுன்னு வெளிச்சம் வேற, ஹுக்கும்..’ என்று மனதில் நினைத்து உதட்டை சுழித்துக் கொண்டாள். (தமிழ் அது போன் ஸ்கிரீனோட வெளிச்சம் மா.. எங்க மாறனை தப்பா நினைக்காத)
புனிதாவுக்கு போன் செய்து தகவல் சொல்லியபின் இருவரும் பார்ட்டிக்கு கிளம்பிட, இளமாறன் டாக்ஸி புக் செய்தான். டாக்ஸியில்… நாம வீடு வாங்கின பிறகு ஒரு கார் வாங்கலாம். எங்கயும் போக வர ஈஸியா இருக்கும்ல” அவன் மனதில் இருக்கும் ஆசைகளை எல்லாம் மனைவியிடம் சொல்ல, அவளும் ஆச்சரியமாகத் தான் அவனைப் பார்த்தாள்.
இருவரும் பார்ட்டி நடக்கும் ஹாலுக்கு செல்ல, அங்கு காத்திருந்த இனியனும் ரேவதியும் இவர்களை பார்த்ததும் மகிழ்ச்சியில் வாயடைத்துப் போனார்கள். “மச்சான் கலக்குறீங்க!” என்று அவனிடம் சொன்ன இனியன், “செந்தமிழ் உனக்கு இந்த ட்ரெஸ் அழகா இருக்கு” என்றான்.
இனியன் ரேவதி இருவரும் அவர்களைப் போலவே மேட்சிங் ட்ரெஸ் அணிந்திருந்தனர். ஆனால் வான நீல நிற காம்பினேஷனில் இருந்தனர்.
ஒரே மாதிரியான உடையை அணியலாம் என்பது இனியன் மற்றும் இளமாறனின் ஏற்பாடுதான். இளமாறன் தன் மனைவியையும், இனியன் தன் வருங்கால மனைவியையும் எல்லோருக்கும் மகிழ்ச்சியாக அறிமுகப்படுத்த நினைத்து இந்த ஏற்பாடுகளைச் செய்தனர்.
இரு ஜோடிகளும் உள்ளே நுழைய அங்கிருந்த எல்லோருடைய பார்வையும் இவர்கள் மீது தான். பார்ட்டியின் நாயகர்கள் அல்லவா! இனியனும் இளமாறனும் தங்கள் டீம் நண்பர்களிடம், தங்கள் இணையை அறிமுகம் செய்து வைத்தனர்.
மேனேஜர் அவர்கள் இருவரின் திறமைகளைப் புகழ்ந்து பேசிப் பாராட்ட, மற்றவர்கள் கைதட்டி, அவர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லி, உணவு டிரிங்க்ஸ் சாப்பிட ஆரம்பித்தனர். இனியனும் ரேவதியும் சாப்பிட்டுக் கொண்டே அவனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்க, பஃபே முறை என்பதால் இளமாறனே செந்தமிழுக்கு வேண்டியதெல்லாம் தட்டில் போட்டுக் கொண்டு வந்து கொடுத்து, அவளை சாப்பிடச் சொன்னான்.
“நீங்க சாப்பிடலையா?” அவள் கேட்க, “நான் அப்புறமா சாப்பிட்டுக்கிறேன். டைம் ஆகுது. நீ சாப்பிடு முதல்ல. பசங்க டிரிங்க்ஸ் சாப்பிட கூப்பிடுறாங்க. லைட்டா சாப்பிட்டுக்கிறேன்” என்றவன், கண்களாலே அவளிடம் அனுமதியும் வாங்கி, அவளை அங்கிருந்த ஒரு சோபாவில் அமர வைத்தான்.
“சாப்பிடு வந்துடுறேன்..” என்று சொன்னவன், கொஞ்சம் தள்ளி நின்றிருந்த அவனுடைய நண்பர்களுடன் இணைந்து கொண்டான்.
“என்ன மாறா.. அன்னைக்கு ரிலேட்டிவ்னு இன்ட்ரோ பண்ண. இன்னைக்கு ஒய்ஃப் னு சொல்ற. பார்க்க அவங்களை மாதிரியே தெரியல. ஆளே மாறிட்டாங்க. லவ் மேரேஜா?” அன்று மெரீனாவில் சந்தித்த நண்பர்களில் ஒருவன் இளமாறனிடம் கேட்க,
“ஆமா லவ் மேரேஜ் தான் நம்ம வீட்டுக்கு வந்தா மாறித் தான ஆகணும்” தான் செந்தமிழ் மீது வைத்திருந்ததுதான் உண்மையான காதல் என்று அறிந்தவன், தங்களுடையது காதல் திருமணம் என்று எந்தவிதத் தயக்கமுமின்றிச் சொன்னான்.
ஸ்காட்ச் விஸ்கி இருந்த கிளாஸை கையில் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக பருகிக் கொண்டே, தாடி ட்ரிம் செய்யப்பட்ட கன்னத்தில் கன்னக்குழி நன்றாகவே தெரிய சிரித்தவாறு, ஸ்டைலாக பேண்ட் பாக்கெட்டில் ஒரு கையை நுழைத்துக் கொண்டு, கால் பேலன்ஸ் காக ஒரு மேசையில் சாய்ந்து நின்றிருந்தவனைப் பார்த்து ரசித்தவாறு அவன் மனைவி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் தன்னைப் பார்த்து ரசிப்பதைக் கவனித்தவன் அவளைப் பார்த்து, ‘என்ன..?’ என்பது போல் புருவம் உயர்த்தி, கண்கள் கொஞ்ச சிரித்து, உதட்டைக் குவித்து சத்தமில்லாமல் பறக்கும் முத்தமும் வைக்க, அவள் வெட்கத்தில் குனிந்து கொண்டாள்.
இளமாறன் உள்ளே வந்ததிலிருந்து அவன் மனைவிக்குப் பறக்கும் முத்தம் தருவது வரை, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த நிரஞ்சனாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
தனியாக கம்பெனி வைத்து விட்டான், ப்ராஜெக்ட் கள் செய்து தருகிறான் என்று கேள்விப்பட்டு, அவனை மிஸ் செய்து விட்டோம் என வருந்தியவள், ‘அவன் கம்பெனியில் நல்ல வேலை நல்ல சம்பளத்திற்கு சேர்ந்து, முடிந்தால் கம்பெனி பார்ட்னராகி விடலாம்” என்று ஏதேதோ திட்டத்தில் இப்போதெல்லாம் மெசேஜ், போன் கால்கள் செய்து பார்க்கிறாள். அவன் எதையும் கண்டு கொள்வதே இல்லை, அந்த கடுப்பு வேறு அவளுக்கு.
நிரஞ்சனாவும் அவள் தோழி ரேஷ்மியும் செந்தமிழுக்கு அருகில் சென்று அமர்ந்தனர். “ஹாய் நான் நிரஞ்சனா.. இவ என் ஃப்ரெண்ட் ரேஷ்மி” என்று அறிமுகப்படுத்திக் கொள்ள, அந்த பெயரைக் கேட்டதும் அவளுக்குள் ஏற்பட்ட அதிர்வை மறைத்து, அவர்களைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தாள்.
“உங்க பேரு?” நிரஞ்சனா கேட்க, “செந்தமிழ்..” என்றாள். “என்ன படிச்சிருக்கீங்க?” என ரேஷ்மி கேட்டிட, “+2..” என்றும், அவள் ஊர் பெயரும் எவ்விதத் தயக்கமுமின்றித் தான் சொன்னாள்.
“உங்க மேரேஜ் அரேஞ்ச் மேரேஜ் தான?” ரேஷ்மி கேட்க, அவள், “ஆமா.. அரேஞ்ச் மேரேஜ் தான்” என்றதும், “அதான இளமாறன் இருக்கிற அழகுக்கு அவனோட டேஸ்ட்டுக்கு இந்த மாதிரி பேர் இருக்கிற, படிக்காத, பட்டிக்காட்டு பொண்ணை போய் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிப்பானா?” என்று நிரஞ்சனா குதர்க்கமாய் சொல்லிட, அவளுக்குச் சுருக்கென்றது.
அவள் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருக்க, அது போதாதா அவர்களுக்கு. “செந்தமிழ்.. உனக்கு ஒண்ணு தெரியுமா? இளமாறன் நிரஞ்சனாவை தான் லவ் பண்ணான். கிரீட்டிங் கார்டும் பூவும் கொடுத்து எவ்ளோ அழகா ப்ரொபோஸ் பண்ணான் தெரியுமா?” ரேஷ்மி அவள் மனதை நோகடிக்கும் எண்ணத்தில் பேசிட, செந்தமிழ் அவர்களை அடிபட்ட பார்வை பார்த்தாள்.
“நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன். அதுக்கு ஒரு காரணம் இருக்கு. இளமாறன் உன்கிட்ட நல்லா செக்ஸ் வச்சுக்கிறானா? ப்ரெக்னன்ட்டா இருக்கியா? அதுக்குள்ள அவனுக்கு கல்யாணம், குழந்தை எப்படி? இல்ல வேற ஏதாவது, டெஸ்ட்டியூப் அந்த மாதிரி” என்று அவர்கள் பேசியதில் அவளுக்கு உடல் கூசியது.
அவர்களைப் புறக்கணிக்க நினைத்து ஏதும் பேசாமல், பதற்றமாய் சோபாவில் இருந்து எழுந்தவள், பதற்றத்தில் கையில் இருந்த பீங்கான் தட்டைக் கீழே போட்டு விட, அது உடைந்த சத்தத்தில் எல்லோரும் இவர்களை திரும்பிப் பார்க்க, அவள் நடுங்கிப் போனாள்.
அவர்கள் பேசியதை ஆரம்பத்தில் இருந்தே கேட்டுக் கொண்டிருந்த இளமாறன், அருகில் செல்வதற்குள் அவர்கள் வன்மத்தை வார்த்தைகளில் கொட்டித் தீர்த்திருந்தனர்.
செந்தமிழுக்கு அருகில் சென்ற இளமாறன், அவள் கன்னங்களைத் தாங்கி நெற்றியில் முத்தமொன்று வைத்து, “தமிழ் ஒண்ணும் இல்லடி.. பதட்டப் படாத. நான் இருக்கேன்ல” எனச் சொல்லிட, அவனது நெற்றி முத்தத்திலும் ஆறுதலான பேச்சிலும் அவள் நடுக்கம் அப்படியே அடங்கிப் போனது. ஆதரவாக அவள் கையை பிடித்தவன், நிரஞ்சனாவைத் திரும்பி அனல் பார்வை பார்த்தான். சட்டென நிரஞ்சனாவின் கன்னத்தில் அறைந்தான்.
அவன் விட்ட அறையில் பயந்து போய் நிரஞ்சனா பார்த்திருக்க, “மாறா.. யூ இடியட். எதுக்கு நிரஞ்சனாவை அடிச்ச?” ரேஷ்மி சீறிக் கொண்டு வந்தாள். அவளையும் அடிக்க கை ஓங்கியவன் அடிக்காமல் நிறுத்தி,
நிரஞ்சனாவைப் பார்த்து, “என்னடி கேட்ட? செந்தமிழ் வயித்துல இருக்கிறது என்னோட குழந்தை தான்னு உன்னை மாதிரி கேடுகெட்டவளுக்கு நான் ப்ரூஃப் பண்ணனும்னு அவசியம் இல்ல. உன்னை மாதிரி ஒருத்தியை லவ் பண்ண பாவத்துக்கு பிராயச்சித்தமா என்னோட செந்தமிழை நான் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணேன். ச்சீ உன்கிட்ட எனக்கு வந்ததுக்கு பேர் லவ்வும் இல்ல, எந்த எழவும் இல்ல. இவ்வளவு நாள் நீ என்னை எது சொன்னாலும் நான் பொறுத்து போனேன். ஆனா எவ்வளவு தைரியம் இருந்தா நீ என் தமிழை பேசுவ?” ஆக்ரோஷமாகக் கத்தினான்.
“என்னடா… ரொம்ப பேசுற யூ ……………” ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகளால் நிரஞ்சனா அவனைத் திட்டிக் கொண்டிருக்க, “என்ன இங்கிலீஷ்ல திட்டிட்டு இருக்க. நான் தமிழ்ல உன்னை திட்டட்டுமா? அடச்சீ உன்னை அடிக்கத் தொட்ட கையை கூட ஆசிட் ஊத்தி கழுவனும். இன்னொரு தடவை ‘அழகா இருக்க, எனக்கு உன்னை பிடிக்கும் அப்படி இப்படின்னு’ எனக்கு மெசேஜ் பண்ண, உன் புருஷன் நம்பருக்கு மெசேஜை ஃபார்வர்ட் பண்ணிடுவேன்” விழிகள் சிவக்க கோபத்தில் கத்திக் கொண்டிருந்தவன், செந்தமிழிடம் திரும்பி, “நாம போகலாம் தமிழ்..”என்றான்.
கொஞ்ச தூரம் சென்றவன், மீண்டும் நிரஞ்சனாவிடம் திரும்பி, “அன்னைக்கு என்ன கேட்ட? என்னால உன்னை செக்ஸ்ல திருப்திப் படுத்த முடியுமா அப்படின்னு தான கேட்ட. உன்னை மாதிரி இருக்க நிறைய பேரை என்னால திருப்திப் படுத்த முடியும். நீ வேணும்னா என்கிட்ட ஒரு நைட் வந்து பார்க்குறியா?” என்றவன், அவளைப் பார்த்து கேலியாக சிரித்தவாறு தமிழை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.
காதலாய் வருவாள்💞

