Loading

குடும்பமாக அமர்ந்து சந்தோசமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் ரூபிணி. அவளது சந்தோசம் அவளை பெற்றவர்களுக்கு வித்தியாசமாக தெரியவில்லை. ஆனால் மெலினாவுக்கு இதற்கும் உதயாவுக்கும் சம்பந்தம் இருக்குமோ? என்ற சந்தேகமாக இருந்தது.

சாப்பிட்டு முடித்து வீடு திரும்பியதும் பெற்றோர்கள் ஓய்வெடுக்க மெலினா, “நடந்துட்டு வரலாம் வா” என்று ரூபிணியை இழுத்துக் கொண்டு சென்றார்.

அந்த அடுக்குமாடி குடியுருப்பு பகுதியில் இருக்கும் சிறிய விளையாட்டுத்திடலில் இப்போது யாருமே இல்லை. அதனால் ரூபிணியோடு அங்கே சென்ற மெலினா, “ரொம்ப சந்தோசமா இருக்கியே என்ன விசயம்?” என்று கேட்டார்.

ரூபிணி சந்தோசமாக சிரித்துக் கொண்டே கை வீசிக் கொண்டு நடந்தாள்.

“உன்னை தான் கேட்குறேன்”

“இன்னைக்கு ஆஃபிஸ் போனேன்ல?”

“ஆமா.. எதுக்குனு சொல்லாமலே போயிட்ட.. என்ன விசயம்?”

“உதயா பேசனும்னு கூப்பிட்டுருந்தான்”

மெலினா அதிர்ச்சியோடு பார்க்க, “என்ன நடந்துச்சு தெரியுமா?” என்று ரூபிணி சிரித்தாள்.

மெலினா அமைதியாக நடக்க, “நான் ஜெயிச்சுட்டேன்” என்று ரூபிணி துள்ளி குதித்தாள்.

அவளது சந்தோசத்தில் கலந்து கொள்ள முடியாமல் மெலினா நின்று விட்டார்.

ரூபிணியும் அவர் முன்பு நின்று நடந்ததை எல்லாம் சொல்ல ஆரம்பித்தாள்.

“அப்போ அவன பிடிக்கலனு சொல்லிட்டு வந்துட்ட?”

“அது மட்டுமா? பிடிக்கிற அளவுக்கு உன் கிட்ட என்னடா இருக்குனு கேட்டுட்டு வந்துட்டேன். தான் பெரிய இவன் மாதிரி பிகேவ் பண்ணான்ல.. அவன் கிட்ட வெறுக்க ஆயிரம் காரணம் இருக்கு.. பிடிக்க ஒன்னு கூட இல்லனு சொல்லிட்டேன். அவன் ஈகோ அங்கயே செத்துடுச்சு”

ரூபிணி வாய்விட்டு சிரிக்க, மெலினா பெருமூச்சு விட்டார்.

“இப்ப நீங்க ஏன் சோகமா
இருக்கீங்க?”

“எதிர்த்து கேள்வி கேட்டதுக்கே உன்னை அவ்வளவு தூரம் கஷ்டப்படுத்துனான். இப்ப பிடிக்கலனு சொல்லிட்ட.. என்ன செய்ய போறோனேனு நினைச்சா தான் பயமா இருக்கு”

“அய்யோ சித்தி.. இதுக்கு முன்னாடி இருந்தது வெறும் எதிரி உதயா.
இப்ப இருக்கவன் என்னை லவ் பண்ணுற உதயா. அவனுக்கு மனசு உடைஞ்சாலும் மறுபடியும் என் கூட சண்டை போட மாட்டான்”

“பைத்தியம் மாதிரி உளறாத.. அந்த மெடோனாவ கூடத்தான் லவ் பண்ணான். அவ ஏமாத்துனானு அவள எப்படி மாட்டி விட்டுருக்கான்? உன்னை மட்டும் விடுவானா?”

“விடுவான்.. ஏன்னா மெடோனா நம்பிக்கை துரோகி.. நான் அவன நம்ப வைக்கல. அவனுக்கு துரோகம் பண்ணல.. என் மனசுல இருக்கத வெளிப்படையா சொல்லிட்டேன்.. அதை கேட்டு அவன் பார்த்த பார்வை.. அந்த வலி… அய்யோ.. எவ்வளவு சந்தோசமா இருந்துச்சு தெரியுமா? ஒருத்தர உடைச்சு பார்க்குறது அவனுக்கு அவ்வளவு பிடிக்கும்னா இன்னைக்கு அவனும் உடைஞ்சான். அத நான்‌ பார்த்தேன்”

மெலினா அமைதியாக நின்றார்.

“என் பேரு கெட்டு.. என் மரியாதை போய் ஒவ்வொரு நாளும் நான் அனுபவிச்ச வலிக்கு மருந்து போட்டுருச்சு அவனோட வலி. பழிவாங்குறதுனா அவனுக்கு அவ்வளவு பிடிக்குமே.. இன்னைக்கு அதோட மறுபக்கத்த பார்க்கட்டும்.”

“இதுக்கப்புறம் என்ன செய்யுறதா இருக்கீங்க?”

“எதுவுமே இல்ல. நான் என் வேலைய பார்ப்பேன். அவன் அவன் வேலைய பார்ப்பான். கால், டெக்ஸ்ட், டேட்டிங் எதுவும் இல்ல. பிரேக் அப் பண்ணிட்டோம்னு சொல்லப்போறதும் இல்ல”

“இப்படியே இருந்துடுவீங்க?”

“ஆமா.. காண்ட்ராக்ட் முடியுற வரை இப்படியே இருக்கலாம். முடிஞ்சதும் பிரேக் அப்னு சொல்லிடலாம்”

“அவன் ஒத்துக்கிட்டானா?”

“அவனோட ஐடியா தான். இப்பவே பிரிஞ்சா என் வேலை பாதிக்கும்னு சொன்னேன். சரினு ஒத்துக்கிட்டான். இனிமே நிம்மதியா.. சந்தோசமா.. என் வேலைய பார்த்துட்டு இருக்க போறேன்” என்றவள் துள்ளிக் கொண்டு ஓடினாள்.

மெடோனாவுக்கு யார் பக்கம் சாய்வது என்று புரியவில்லை. ரூபிணிக்கு உதயா செய்தது மிகப்பெரிய பாவம். ஒவ்வொரு முறையும் தவறான வார்த்தைகளை கேட்டு விட்டு முகம் இறுக அவள் அமர்ந்திருக்கும் போது, மெலினாவின் இதயம் வலிக்கும்.

ஆனால் அதற்காக உதயாவை காதலில் விழ வைத்து மறுத்து விட்டு வருவதா? முதலில் என்ன செய்ய போகிறாள் என்று தெரியவில்லை. இப்போது எல்லாம் முடிந்த போது, அவரால் எதுவும் செய்ய முடியாமல் போனது.

ரூபிணியின் வாழ்வில் பிரச்சனை எதுவும் இல்லாதவரை உதயாவை பற்றி அவருக்கு அக்கறை இல்லை.

•••

உதயாவின் நிறுவனத்தில் ரூபிணி சேர்ந்து ஒரு வருடம் ஓடியிருந்தது. அன்று சந்தித்த பிறகு இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை. இடையே பார்த்தாலும், சம்பிரதாய புன்னகையுடன் கடந்து செல்ல ஆரம்பித்தனர்.

ரூபிணி பல நாட்கள் ஊரில் இருப்பதே இல்லை. வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருந்தாள். அதனாலும் கூட உதயாவை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை.

இன்று ஒரு சோ இருக்க, ரூபிணியும் மெலினாவும் வந்திருந்தனர். நிறைய மாடல்கள் வந்திருக்க, பலரோடு பரஸ்பரம் பேசிக் கொண்டிருந்தனர்.

ஆல்பஸோடு மெடோனா வந்திருந்தாள். அவள் ரூபிணியை பார்த்ததும் உடனே அருகே வந்தாள்.

“தனியா வந்துருக்க? எங்க அவன்?அதுக்குள்ள கழட்டி விட்டுட்டானா?” என்று மெடோனா நக்கலாக கேட்க, ரூபிணி அவளை சலிப்பாக பார்த்தாள்.

“பதிலே இல்ல? அப்ப அதான் உண்மையா?”

“ஒரு தடவ வாங்குன அடி உனக்கு பத்தாதுல?”

“அன்னைக்கு நீ உட்சத்துல இருந்த.. அதுனால என்னை அடிச்சுட்டு தப்பிச்சுட்ட.. இன்னைக்கு உனக்கு சமமா நானும் நிக்கிறேன். அடிச்சா உன் கைய உடைச்சுடுவேன்”

“ஓ.. சமமா?”

“எஸ்.. இந்த சோ-க்கு வந்துருக்கதுலயே தெரியலயா? நீ மட்டும் உயரத்துல இல்லனு”

ரூபிணிக்கு சிரிப்பு வந்தது.

“ஓ.. உனக்கு அந்த நினைப்பு வேற இருக்கா? கனவுல வாழ வாழ்த்துக்கள்”

“என் கனவ விடு. உன் கனவு கலைஞ்சுடுச்சே.. உதயா உன்னை துரத்திட்டான் தான? உன்னை அவனுக்கு என்னைக்குமே பிடிக்காது ரூபிணி.. இது தெரியாம அவன் கூட டேட்டிங் வேற?”

“எனக்கு நிறைய வேலை இருக்கு.. கிளம்பு” என்று ரூபிணி பொறுமையாக சொல்லி வைத்தாள்.

“ஆனா எனக்கு இதான் வேலை.. ஆனா ஒன்னு.. விஷாலும் சரி.. உதயாவும் சரி.. நான் தூக்கிப்போட்டவங்க.. கரெக்ட்டா எப்படி அவங்க கூட நீ கணெக்ட் ஆகுற? ரொம்ப சீப்பா இல்ல?”

ரூபிணியின் பொறுமை பறக்க பார்த்தது. இழுத்துப் பிடித்துக் கொண்டு புன்னகைத்தாள்.

“அந்த ரெண்டு பேரு கிட்டயும் போய்.. மெடோனா வேணுமா? ரூபிணி வேணுமானு கேட்டா கண்ண மூடிட்டு என்னை தான் சூஸ் பண்ணுவாங்க.. நீ அவங்கள தூக்கிப்போட்டதா நினைப்பா உனக்கு? அவங்க தான் உன்னை தூக்கிப்போட்டாங்க. அதுலயும் உதயா உன்னை ரோட்டுல போட்டான். ரொம்ப ஆடாத.. விஷால் இப்ப இருக்க ஜெயிலுக்கு பக்கத்துல, ஒரு ரூம் உனக்கும் புக் பண்ண சொல்லிடுவேன். பேசாத.. வாயத்திறந்து இன்னொரு வார்த்தை பேசுனா இங்கயும் அடி வாங்குவ. அண்ட்.. எனக்கு நீ சமமா? உன் கூட இருக்கவன் எப்படிப்பட்டவன்னு தெரியுமா? சாக்கடையில விழுந்துட்டு உடம்பெல்லாம் சந்தனம் பூசிட்டதா நீ நினைச்சுட்டு இருக்க. எனக்கு தான் அந்த நாத்தம் தாங்க முடியல. ச்சீ போ..”

பல்லைக்கடித்துக் கொண்டு பேசிய ரூபிணி, வேறு ஒரு பெண் அருகே வரவும் பட்டென அவள் பக்கம் திரும்பி பேச ஆரம்பித்து விட்டாள்.

மெடோனா அதிர்ச்சியோடும் அவமானத்தோடும் அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள்.

மெடோனா சென்ற பிறகு உதயா அவளது தோளில் கை வைக்க, திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.

“ஓ.. நீயா?” என்றவள் அமைதியாக, “அவள விலாசிட்ட போல?” என்று கேட்டு வைத்தான்.

“நீ இங்க தான் இருந்தியா?”

“இதுக்குப்பின்னாடி நின்னுருந்தேன். ரெண்டு பேரும் கவனிக்கல”

“அவளா வந்து பேசி வாங்கிட்டு போறா.. சரியான மெண்டல்.. எப்படி போய் இவள லவ் பண்ண? உன் டேஸ்ட்டே சரியில்ல போ”

“அப்படி சொல்ல முடியாது. ஒரு தடவ தப்பா போயிடுச்சு அவ்வளவு தான்” என்று தோளை குலுக்கினாள்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ராஜ் வந்து விட்டான். உதயா அவனை பார்த்து தலையை மட்டும் அசைக்க, ராஜ் புன்னகைத்து வைத்தான்.

“போகலாமா? என் பக்கத்துல தான் நீ உட்காரனும்”

“ஆமா.. பை” என்று உதயாவிடம் சொல்லி விட்டு தன் உடையை ஒரு கையில் தூக்கிக் கொண்டு ரூபிணி ராஜோடு சென்றாள்.

மாடல்களுக்கு தனி இருக்கைகள், உதயாவைப்போல ஆட்களுக்கு தனி பகுதி என்று ஒதுக்கியிருந்தனர்.

உதயா தன் இடத்தில் அமர்ந்து விட்டாலும், அவனது பார்வை முழுக்க ரூபிணி ராஜின் மீது தான் இருந்தது. ராஜ் ஒரு நொடியும் அமைதியாக இல்லை. அவளிடம் எதாவது பேசிக் கொண்டே இருந்தான்.

உதயாவுக்கு பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக விடை பெற்றுக் கொண்டிருந்தது.

அதைப்பற்றிய அக்கறையே இல்லாமல், ரூபிணி ராஜின் பேச்சுக்கெல்லாம் செவி சாய்த்து பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

சோவில் பல விதமான உடைகளை அணிந்து ஆட்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு உடையை பற்றியும் பேச்சு போய்க் கொண்டிருந்தது.

எல்லாம் முடிந்ததும் ஆளாளுக்கு நின்று படம் எடுக்க, சிலர் ரூபிணியையும் உதயாவையும் ஒன்றாக நிற்க சொன்னார்கள்.

உதயா ரூபிணியின் இடையில் கை போட்டு தன்னோடு நிறுத்திக் கொண்டு, ராஜை ஒரு பார்வை பார்த்து விட்டு படத்துக்கு போஸ் கொடுத்தான்.

படங்களை எடுத்தது முடிந்ததும் ஆளுக்கொரு பக்கமாக கிளம்ப, ரூபிணியை ராஜ் தன்னோடு வருமாறு அழைத்தான்.

ரூபிணி ஒரு நொடி அதிர்ந்து விட்டு, “இல்ல என் மேனேஜர் கூட போகனும்” என்று சொல்லிக் கொண்டிருக்க, “மேனேஜர்னு பொய் சொல்லாத.. பாய் ஃப்ரண்ட்டுனு உண்மைய சொல்லு” என்று உதயா வந்து நின்றான்.

வந்தவன் கையும் சும்மா இல்லாமல் ரூபிணியை வளைத்துப் பிடித்துக் கொண்டது‌.

ரூபிணிக்கு உடனே பதில் சொல்ல முடியாமல் சமாளிப்பாக சிரித்தாள்.

“அவ பாய் ஃப்ரண்ட் நான் இருக்கேன் ராஜ். நீங்க போயிட்டு வாங்க” என்றதும் ராஜ் தலையை ஆட்டி விட்டு நடந்தான்.

“நாமலும் போகலாமா சுகர்?”

“சுகர்?”

“கமான்..போகலாம் வா.. உன் சித்தி கிட்ட சொல்லிட்டு கிளம்புவோம்..”

“ஹேய் எங்க?” என்று கேட்டவளுக்கு பதில் சொல்லாமல் இழுத்துச் சென்று விட்டான்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
10
+1
2
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்