
பார்ட்டி ஹாலில் நுழைந்தாள் ரூபிணி. அனைவருக்கும் அவளை ரூபிணியாக தான் தெரியும்.
“ரூபிணி.. ரூபிணி..” என்று பலர் அவளது பெயரை சொல்ல மாறாத புன்னகையுடன் நடந்தாள்.
ஸ்லிப் எனப்படும் உடை பட்டுத்துணியால் ஆனது. தோளில் இரண்டு கயிறு மட்டுமே இருக்க கழுத்தின் கீழ் அழகிய மடிப்போடு இறங்கி அவளது அங்க வளைவுகளை அழகாக காட்டியது.
ஒரு கையில் பர்ஸை பிடித்துக் கொண்டு மறு கை விரல்களை மட்டும் ஆட்டி விட்டு நடுவில் வந்து நின்றாள். கேமராக்களின் வெளிச்சம் கண்ணை கூசும் அளவு இருந்தாலும் சற்றும் அசராமல் நின்று விட்டு நகர அடுத்த ஆள் வந்து நின்றான்.
கேமராக்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. வெளியே இருப்பவர்களும் அழைப்பின் பெயரில் வந்தவர்கள்.
ஆளுக்கொரு பக்கமாக சென்று அவரவருக்கு பிடித்தவர்களோடும் தெரிந்தவர்களோடும் பேச ஆரம்பிக்க அவளிடம் நீட்டப்பட்ட வொயின் கிளாஸ் ஒன்றை எடுத்துக் கொண்டு கூட்டத்தில் கலந்தாள்.
இது முழுக்க முழுக்க மாடல் உலகில் இருப்பவர்களுக்கான இடம். இங்கிருக்கும் அனைவரும் பணச்செலுமையை உணர்ந்தவர்கள். பலவித பதவியில் இருப்பவர்கள்.
எல்லோரும் சாதாரணமாக பேசுவது போல் இருந்தாலும் தொழில் பேச்சும் நடக்கும். ஒரு சிலர் ரூபிணியிடம் பேசி விட்டு தங்களது அடையாள அட்டைகளை கொடுத்துச் சென்றிருந்தனர்.
ரூபிணி ஒரு பெண்ணிடமும் அவளது மேனேஜரிமும் பேசிக் கொண்டிருந்த நேரம் உதயகுமார் வந்து சேர்ந்தான்.
பலரது பார்வை அவன் பக்கம் திரும்ப ரூபிணி கடுப்போடு வேறு பக்கம் பார்த்தாள்.
உதயா கூட்டத்தில் கலந்த பிறகு சில நிமிடங்கள் வரை அனைவரும் அவனையே நோட்டம் விட்டனர்.
“அவர பார்த்தாளே மயக்கம் வருதுல?” என்று ஒரு பெண் கிரக்கத்தோடு மற்றவளிடம் சொல்ல ரூபிணியின் காதிலும் விழுந்தது.
“பட்.. அவர் யாரு கூடயும் சீரியஸ் ரிலேஷன்சிப்ல இருந்ததே இல்ல.. அந்த பொண்ணு யாருனு தெரியல”
ரூபிணி இதைக்கேட்டு புருவம் சுருங்க திரும்பி உதயாவை தேடினாள். அவனருகே மெடோனா நிற்க ‘புதுசா இருக்காளே.. யார் இவ?’ என்ற யோசனை வந்தது.
அந்நேரம் கைபேசி அதிர எடுத்துக் கொண்டு கூட்டத்தை விட்டு தள்ளிச் சென்றாள்.
மெலினாவின் பெயரை பார்த்து விட்டு எடுத்தாள்.
“என்ன சித்தி?”
“அவன் கிட்ட நீ பேசல தான?”
“சித்தி..”
“என் மேல கோபப்படாத..”
“சித்தி ஸ்டாப்.. நான் பச்சை குழந்தை இல்ல.. அப்படினா நீங்களும் என் கூட வந்துருக்க வேண்டியது தான?”
“நான் வர மாட்டேன்னா சொல்லுறேன்? என் கையில இருக்க பெரிய கட்டு வர விடாம தடுக்குது. உன்னை தனியா அனுப்பிட்டு எனக்கு இங்க பயமா இருக்கு”
“நீங்க பேசாம ரெஸ்ட் எடுங்க. இல்லனா நைட் ஃபோட்டோ சூட் பிரிப்பிரேஷன போய் பாருங்க. நான் இன்னும் ஒரு மணி நேரத்துல கிளம்பிடுவேன்”
“அவன்…”
“அவன் ஒரு பொண்ணோட வந்துருக்கான். என்னை கவனிக்க அவனுக்கு நேரமிருக்காது. நானும் நிம்மதியா இருப்பேன்”
“ஓ.. யாரு அது?”
“தெரியல.. புதுசா எவளாச்சும் கிடைச்சுருப்பா..”
“ஏய்.. அங்க நின்னு எதையும் பேசாத.. ரெகார்ட் பண்ணா முடிஞ்சது. அமைதியா இருந்துட்டு வா.. நிறைய குடிக்காத”
“தெரியும்…” என்று பல்லைக்கடித்தவள் பட்டென அழைப்பை துண்டித்து விட்டாள்.
மெலினா எப்போதும் ரூபிணியை கட்டுப்படுத்திக் கொண்டே தான் இருப்பார். ஆரம்பத்தில் கோபம் நிறைய வந்தாலும் இப்போதெல்லாம் பழகிக் கொண்டாள். ஆனால் அவர் உதயாவைக்கண்டு பயப்படுவது தான் அவளுக்கு பிடிக்கவே இல்லை.
இரண்டு முறை அவனால் ரூபிணி மிகப்பெரிய பிரச்சனைகளை சந்தித்திருக்கிறாள் தான். அதற்காக பழியும் வாங்கி விட்டாள். ஆனாலும் வெறி அடங்கவில்லை.
அதற்காக உதயாவைக்கண்டு அவனது செல்வாக்கை கண்டு பயப்பட வேண்டுமா? முடியாது. அவளால் அது முடியாது.
இருக்கும் இடம் உணர்ந்து முகத்தை சரி செய்து கொண்டவள் திரும்பி நின்றாள். ஒருவன் அவளை பார்த்து விட்டு உடனே அருகே வந்தான். தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசவும் ஆரம்பித்தான்.
ஒரு மணி நேரமும் கடந்து போனது. நிறைய ஆட்களை சந்தித்து பேசியது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதற்கு மேல் இங்கே இருக்க முடியாது என்று கிளம்பி வெளிப்பக்கம் வந்தாள்.
முதல் முறையாக எந்த தொந்தரவும் இல்லாமல் பார்ட்டியை அனுபவித்து இருக்கிறாள். அது தான் அவளை ஆனந்த கடலில் ஆழ்த்தியது.
டிரைவரை அழைத்து காரை எடுத்து வரச் சொல்லி விட்டு நடக்க யாரோ பேசும் சத்தம் கேட்டது.
கண்டு கொள்ளாமல் நடந்தவள் உதயாவின் குரலை கேட்டு விட்டு நின்றாள்.
‘இவனா? இங்க என்ன பண்ணுறான்?’ என்ற யோசனையோடு மெல்ல நடந்து எட்டிப் பார்த்தாள்.
அங்கே உதயா மெடோனாவை கட்டிப்பிடித்து இதழில் முத்தம் பதித்துக் கொண்டிருக்க ‘ச்சை.. இவ்வளவு தானா? நான் கூட லவ்வரா இருப்பாளோனு நினைச்சேனே’ என்று சலித்தாள் ரூபிணி.
ரூபிணி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அவளது காரின் முன் விளக்கின் வெளிச்சம் பட்டதில் உதயாவும் அவனது காதலியும் பிரிந்தனர். உதயா சட்டென திரும்பி பார்த்தான். அவன் கண்ணில் ரூபிணி பட்டாள்.
அவனுக்கு அவளை பார்த்துமே எரிச்சல் அதிகரித்தது. மெடோனாவை காருக்குள் அமர சொல்லி அனுப்பி வைத்தான்.
அவனது கார் கிளம்பியதும் பின்னால் வந்து நின்ற தன் காரில் ரூபிணி ஏறப்போக “என்ன மிஸ் ரூபிணி.. ஃப்ரீ சோ நல்லா இருந்துச்சா?” என்று கேட்டான் உதயா.
ரூபிணிக்கு உடனே கிளம்ப வேண்டும் என்ற அவசரம் காணாமல் போக நிதானமாக அவனை திரும்பிப் பார்த்தாள்.
“ஃப்ரீ சோ? இங்க என்னை இன்வைட் பண்ணிருந்தாங்க மிஸ்டர்”
“நான் எத சொல்லுறேன்னு உனக்கு நல்லாவே தெரியும். ஒருத்தரோட ப்ரைவட் மூமண்ட்ட எட்டிப் பார்க்குறியே அசிங்கமா இல்ல?”
“ப்ரைவட் ஏரியால நடந்தா தான் அது ப்ரைவட் மூமண்ட்.. இப்படி பார்க்கிங்ல வச்சு பண்ணது உன் தப்பு. நான் எட்டி பார்க்குற அளவுக்கு அதுல ஒன்னுமே இல்ல. வெரி பேட் கிஸ்ஸர்” என்று நக்கல் சொட்ட அவள் பேச உதயா அவளை நோக்கி வேகமாக வந்தான்.
“நான் பேட் கிஸ்ஸர்னு உனக்கு எப்படி தெரியும்? எப்ப என்னை கிஸ் பண்ண நீ?” என்று அவள் முகத்தருகே வந்து கேட்க கிண்டலாக சிரித்தாள்.
“பேட் கேரக்டர் இருக்கவங்க எல்லாத்துலயும் பேடா தான் இருப்பாங்க. நீ வொர்ஸ்ட் ஆச்சே.. பாவம் அந்த பொண்ணு.. நீ கொடுத்த கிஸ் கூட பிடிக்காம உன்னை விட்டுட்டு போயிட்டா”
“ஷீ… இஸ்… மை… கேர்ள்.. ஃப்ரண்ட்” என்று பல்லைக்கடித்தான்.
ரூபிணி ஆச்சரியமாக பார்த்தாள். இந்த விசயம் ஊருக்கு தெரியாதே.
“அய்யோ பாவம்.. டேஸ்ட் லஸ் கேர்ள்”
“உன் பாய் ஃப்ரண்ட் அளவுக்கு இல்ல..”
“அவன பத்தி நீ எதுக்கு பேசுற?”
“உண்மை கசக்குதுல அதிரூபிணி? மூளை இருந்தா இதெல்லாம் தானாவே புரிஞ்சுருக்கும்”
“நீ பேசுறது உண்மையே இல்ல மிஸ்டர்.. அண்ட்.. அறிவ பத்தி உனக்கு ப்ரூஃப் பண்ண வேண்டிய அவசியம் இல்ல. என் வளர்ச்சியே சொல்லும்”
“இதுக்கு பேரு தான் வளர்ச்சியா?” என்று கேட்டவன் நக்கலாக அவளை கீழிருந்து மேல் பார்க்க ரூபிணிக்கு பற்றிக் கொண்டு வந்தது.
அவனது நிறுவனத்தில் தேர்வாகியிருந்தால் இதை விட பெரிய அளவில் இருந்திருப்பாள் தான். ஆனால் இப்போது இருப்பதும் ஒன்று குறைவானது அல்லவே?
திடீரென விபரீத ஆசை ஒன்று தோன்றியது. அதை அவள் உளறி வைக்கும் முன்பு கைபேசி அதிர்ந்து அவளை காப்பாற்றியது.
“கிளம்பிட்டியா?” என்று கேட்ட மெலினாவுக்கு பதில் சொன்னவள் உதயாவை நக்கலாக பார்த்து விட்டு நடந்து சென்று காரில் ஏறிக் கொண்டாள்.
அவளை வெறுப்போடு பார்த்து விட்டு உதயா மறுபக்கம் சென்று விட்டான்.
அவனது மனம் இப்போது காதலியிடம் திரும்பியிருந்தது. மெடோனா மிகவும் பதட்டமாக கிளம்பிச் செல்கிறாள். அவளது குடும்பத்தில் எதோ பிரச்சனையாம்.
அவசரமாக போக வேண்டும் என்று கேட்டதும் அனுப்பி வைத்து விட்டான்.
என்னவென்று தெளிவாக கேட்க கூட நேரமில்லை. இப்போது கேட்டு விடலாம் என்று கைபேசியை எடுத்தான்.
சில நொடிகளில் அழைப்பை ஏற்றாள்.
“என்னாச்சு பேபி? எதுவும் சொல்லல.. எமர்ஜென்ஸினு சொன்ன.. அனுப்பிட்டேன். என்னனு கூட சொல்லல நீ?”
“என் ஃபேமிலி மெம்பருக்கு ஆக்ஸிடண்ட் ஆகிடுச்சு பேபி.. எங்க ஃபேமிலிய ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டது அவங்க தான். இப்ப ஆக்ஸிடண்ட்னு கேள்வி பட்டதும் மனசு கேட்கல. அண்ட்.. என் ப்ளட் கூட தேவைப்படும்.. அதான் போறேன்”
“ஓகே ஓகே.. வருத்தப்படாத.. சரியாகிடுவாங்க. ரீச்சாகிட்டு கால் பண்ணு. பயப்படாத..” என்று ஆறுதல் சொல்ல ஆரம்பித்தான்.
தொடரும்.
