Loading

எபிலாக்

மூன்று வருடங்களுக்கு பின் ,

கோக்கர்ஸ் வாக்கில் , தேவ் ,தீப்ஷீயின் கைகளை பிடித்துக் கொண்டு நடந்தான் .

” மாசம் மாசம் என்னை  இங்க கூட்டிட்டு வந்து இப்படி கைய பிடிச்சுக்கிட்டு நடந்தா என்ன அர்த்தம்? ” என்றாள் தீப்ஷீ .

” உன் மேல அவ்வளவு லவ்னு அர்த்தம். அன்னைக்கு உன் கைய பிடிச்சி நடக்க நான் எவ்வளவு ஏங்கினேன் தெரியுமா டி உனக்கு . அன்னைக்கு உன் கைய பிடிக்க எனக்கு நீ அனுமதி தரவில்லை . அதுக்கு தான் நான் உன்ன கொடைக்கானல் கூட்டிட்டு வந்து நீ செஞ்ச தப்புக்கு தண்டனை தரேன். ” என்றான் தேவ் .

” உங்க அளப்பறைக்கு அளவே இல்லையா . நாளைக்கு எவ்வளவு முக்கியமான நாள் இப்போ போய் இங்க வரணுமா? அடுத்த மாசம் வந்தால் என்ன . அங்க உங்க பையன் என்ன சேட்டை செஞ்சிட்டிருக்கானோ  தெரியலை? ”

” என் மச்சான் சத்யா தான், நீ கொடைக்கானல் போ இங்கு நான் பார்த்துக்குறேனு சொன்னான் . அதான் , நான் உன்ன கூட்டிட்டு வந்தேன். ”

” சரி வாங்க சீக்கிரமா சென்னைக்கு போலாம். ”

” அதெல்லாம் நேரத்துக்கு போயிடலாம் . நீ போய் எனக்கு எதையாவது வாங்கிட்டு வா. ”

” ஒருமுறை உங்களுக்கு வாங்கி தரலைன்னு  என்ன  பாடாய்ப்படுத்துவதெல்லாம் சரியே இல்லை . இங்கு உள்ள எல்லா பொருளையும் நான் உங்களுக்கு வாங்கி தந்துட்டேன் இனி வாங்கித் தர எதுவுமில்லை. ”

” சரி அழாதே ரூமிற்கு போலாம் வா.”

‘ இப்பவே கண்ணக்கட்டுதே. ‘  என்று நினைத்தாள் தீப்ஷீ .

*****

மறு நாள் சென்னையில் ,

மிக பெரிய பில்டிங் முன் நின்றுக் கொண்டிருந்தனர் .

” அம்மு ரிப்பன் கட் பண்ணு. ”  என்றான் சத்யா .

” சந்தியாவை கட் பண்ண சொல்லு சத்யா. ” என்று ஐந்து மாத கர்ப்பிணியான சந்தியாவை கை காட்டினாள் தீப்ஷீ .

” தீப்ஷீ , நீயே கட் பண்ணு. ” என்றாள் சந்தியா . இனி தன் வாழ்க்கையில் சத்யா இல்லைனு நினைத்த போது, அவனை  மீண்டும் கண்டு பிடித்து தந்த தீப்ஷீ, சந்தியாவிற்கும் முக்கியமாகி போனாள் .

தீப்ஷீ ரிப்பன்  கட் பண்ண…  கை தட்டினான் சத்யா கையில் இருந்த இரண்டு வயது , தீப்ஷீயின் மகன் விக்னராஜ் .

விக்னராஜ் பார்ப்பதற்கு தேவ் போல் இருப்பான் ஆனால் செயலெல்லாம் தீப்ஷீ போல் தான் .

விக்னராஜிற்கும் சத்யா என்றால் உயிர் .

அம்மாவும் மகனும் சத்யாவின் மேல் யாருக்கு உரிமை அதிகம் என்று சண்டைப் போட்டுக் கொண்டு நிற்பார்கள் .

இருவரையும் சமாதானம் செய்வதற்குள் சத்யாவிற்கும், தேவ்விற்கும் போதும் போதுமென்று ஆகிவிடும் .

ஏ.எஸ் கம்ப்யூட்டர் சொலியூஷன் அண்ட் நெட்வொர்க் புரோடக்சன் என்ற ஐடி கம்பெனிக்குள் அனைவரும் மகிழ்ச்சியாக சென்றனர் .

ஒருபுறம் ப்ரோக்ராம் மூலம் ப்ராஜெக்ட் செய்வதும், மறுபுறம் பெரிய நிறுவனங்களை ஹாக்கர்ஸிடம் இருந்து பாதுகாப்பு தருவதற்காகவே இந்த கம்பெனியை தொடங்கினான் சத்யா .

மூன்று வருடங்களாக வீட்டிலேயே ப்ராஜெக்ட் செய்துக் கொண்டு கம்பெனி உருவாக்க பணம் சேர்த்துக் கொண்டிருந்தான் சத்யா .

தீப்ஷீயும், சந்தியாவும் பணம் தர முன்வந்த போது அதை மறுத்துவிட்டான் சத்யா .

” நான் பணம் சம்பாதிக்க நினைப்பதே உங்களை பார்த்துக் கொள்ள தான் அதை உங்க பணத்திலே செய்ய எனக்கு விருப்பமில்லை . நான் கம்பெனி தொடங்க கொஞ்ச லேட் ஆகும் . ஆனால் , என்னால் முடியும். ” என்று சொல்லிவிட்டான் சத்யா .

சி.இ.ஓ அறைக்கு சென்றனர் , ” சந்தியா  , போய் உட்காரு. ” என்றாள் தீப்ஷீ .

தீப்ஷீக்கு நன்கு தெரியும் எங்கு சத்யா மேல் உரிமை எடுத்துக் கொள்ளணும். எங்கு சந்தியாவிற்கு முன்னுரிமை தரணும் என்று . அதனால் , தான் எந்த சங்கடமும் இல்லாமல் அனைவரும் ஒன்றாக இருக்க முடிகிறது .

அழகாக போட்டோ எடுத்தாள் தீப்ஷீ .

பின் கமலாவை உட்கார வைத்தான் சத்யா . அவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை , ‘ அம்மாவையே பார்த்துக் கொள்ளாதவர்களின் மத்தியில் வளர்த்த என்னை இப்படி ஒரு மரியாதையான இடத்தில் உட்கார வைத்துவிட்டானே. ‘ என்று பெருமையாக நினைத்தார் கமலா .

பெரியவர்கள் எல்லாம் பில்டிங் முழுவதும் சுற்றி பார்த்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினர் .

சந்தியா , தீப்ஷீ , தேவ், விக்னராஜ் மட்டும் சத்யாவோடு இருந்தனர் .

தன் வேலை எல்லாம் முடித்த சத்யா . அனைவரையும் கடற்கரைக்கு அழைத்துச் சென்றான் .

சந்தியா ஆர்.ஈ.எஸ் ஜுவல்ஸ் எம்.டியாக திறமையாகவும் பொறுப்பாகவும் ஜுவல்லரி கடையை நடத்திவருகிறாள் .

தேவ் பல நாடுகளுக்கு சென்று டைக்குவாண்டோ விளையாடி வெற்றிப்பெற்று வந்துக் கொண்டிருக்கிறான் . பல இடங்களில் வெற்றி  ஸ்போர்ட்ஸ் அகாடமி கிளைகளை உருவாக்கி பெரிய அளவில் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறான்  .

கடலை பார்த்த விக்னராஜ் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.

நால்வரும் மணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் .

விக்னராஜ் ஓட , அவன் பின்னால் ஓடினான் தேவ் .

சந்தியாவிற்கு போன்கால் வர அவள் பேச எழுந்து போனாள் .

சத்யாவும், தீப்ஷீயும் தங்கள் முன் இருக்கும் கடலை பார்த்தனர் .

‘ இந்த கடலின் ஆழம் போன்றது எங்கள் நட்பின் ஆழம். ‘ என்று நினைத்தனர் இருவரும் .

” பூ வாங்கிக்கோங்க? ” என்று கேட்டார் ஒரு பாட்டி .

” இரண்டு முழம் பாதி பாதியா தாங்க. ”  என்றான் சத்யா .

பணத்தை தந்து வாங்கிய சத்யா ஒன்றை தீப்ஷீக்கு தந்தவன் மற்றொன்றை சந்தியாவிற்கு தர அவள் அருகில் சென்றான் .

” தாயி அந்த தம்பி யாருமா? உனக்கு பூ தந்தது. வேறு பெண்ணுக்கு பூ வெச்சிவிடுது?” என்று சத்யாவை பார்த்துக் கேட்டார் அந்த பூ விற்கும் பாட்டி .

” அவன் என் உயிர்ப்பாங்கி. ” என்றாள் தீப்ஷீ .

” அப்படினா ? ” என்றுக் கேட்டார் பாட்டி .

” என்னோட உயிர் நண்பன். ” என்றாள் தீப்ஷீ .

” சரி தாயி நான் வரேன். ” என்ற பாட்டி சென்றுவிட்டார் .

” ஐயோ என்னோட செயினை பிடிங்கிட்டு ஓடுறான் . யாராவது பிடிங்களேன். ” என்றுக் கத்தினார் ஒரு பெண் .

திருடனை வேகமாக ஓடிச் சென்று பிடித்த தீப்ஷீ , அவனை அடி பின்னி எடுத்தாள் .

செயினை அந்த பெண்ணிடம் தந்தவள் அந்த திருடனை பிடித்துக் கொண்டு சத்யா அருகே வந்தாள் .

” சத்யா , இவனை ஸ்டேஷனில் விட்டுட்டு வரேன் . நீங்க வீட்டுக்கு போங்க. ” என்றவள் திருடனை இழுத்துக் கொண்டே ரோட்டிற்கு சென்றாள் .

மூவரும் தீப்ஷீயை கோபமாக பார்த்தனர் . குற்றம் நடந்தால் போதும் அங்கு சென்றுவிடுவாள் தீப்ஷீ . ஐ.பி.எஸ் பதவி அவளின் இரத்தத்தில் கலந்துவிட்டது . அவளிடம் வரும் கேஸ்ஸை வெற்றிகரமாக முடிக்காமல் விடமாட்டாள் தீப்ஷீ . அவளின் உயிரைப் பற்றிக் கூட தீப்ஷீ கவலைப் படமாட்டாள் .

தீப்ஷீயை பற்றி நன்கு தெரிந்தவர்கள் . அவளை தடுக்க முடியாமல் அமைதியாகினர் .

தேவ் போன் அடிக்க .

” ஹலோ மச்சான் எப்படி டா இருக்க ? ”

” நீ ஏன் பேச மாட்ட ? நல்லா குடும்பஸ்தானா வாழ்க்கைய என்ஜாய் பண்ணுறீங்க . சிங்கிளா நான் படுற கஷ்டம் உனக்கு எங்கடா புரிய போகுது ? எங்க டா அந்த சத்யா ? ” என்றான் சர்வேஷ் .

” இங்க தான் டா இருக்கான் . லவுட் ஸ்பீக்கர்ல போடுறேன் . ஆன , உன் தங்கச்சிய கட்டிக்கிட்டு நான் என்ஜாய் பண்ணுவேனு நீ எப்படி சொல்லலாம் ? ” என்றான் தேவ்.

” டேய் ! என் கிட்டையே படம் காட்டுற பார்த்தியா . என் தங்கச்சிய லவ் பண்ணிட்டு . அவ தான் வேணும்னு அவ கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்னாடி வந்து என் கிட்ட அழுதது மறந்து போச்சோ . அது மட்டுமா இந்த உலகத்துலே மாசா மாசம் ஹனிமூன் போற ஒரே ஆள் நீ தான் டா. ” என்றான் சர்வேஷ் .

சத்யா சத்தமாக சிரிக்க . தேவ்வோ அழகாக வெட்கப்பட்டான் .

” டேய் மச்சான் சிரிக்காத டா . ஒழுங்கு மரியாதையா உங்க அப்பாக் கிட்ட சொல்லி எனக்கு உடனே பொண்ணு பார்க்க சொல்லு . இல்ல நான் மனுஷனா இருக்க மாட்டேன் .”

” சர்வேஷ் , அப்பா பெண்ணு பார்த்துட்டுதான் டா இருக்காங்க . நீ தான் அது சரியில்ல இது சரியில்லணு சொல்லிட்டிருக்க . ” என்றான் சத்யா .

” எங்களுக்கு என்ன எங்க அப்பாவா பொண்ணு பார்த்தாங்க ? நாங்களா பார்த்துக்கலை ? நீ எங்க மானத்த வாங்குறதுக்குனே எங்க பிரெண்ட்டா இருக்க டா .” என்றான் தேவ் .

” நீ ஏன் சொல்ல மாட்ட . நான் இங்க அமெரிக்கால இருக்கேன். எனக்கு இங்க யார் மேலையும் லவ் வரலை. நான் என்ன டா பண்ண ? நானும் எவ்வளவு  ட்ரை பண்ணிட்டேன்.”

” சரி விடுடா மச்சான் . நீ தான் இந்தியா வர போறல . இங்க எதாவது செட்டாகுதான்னு  பாரு .” என்றான் சத்யா .

” ஃபங்ஷன் நல்ல படியா முடிஞ்சதா ? ”

” நல்ல படியா முடிஞ்சது . நீ இல்லன்றது தான் கஷ்டமா இருந்தது .” என்றான் சத்யா .

” முக்கியமான வேலை வந்துடிச்சு டா அதான் … ” சர்வேஷ் .

” சரி விடுடா எப்போ வருவ?” தேவ்.

” ஒன் வீக்ல வந்துடுவேன் . சரி டா அப்புறமா பேசுறேன் . பாய் டா மச்சான்ஸ் .” என்ற சர்வேஷ் போனை வைத்தான்.

சர்வேஷ் இரண்டு வருடங்களாக அமெரிக்காவில் புகழ் பெற்ற கம்பெனியில் பெரிய பதவியில் வேலை செய்துக் கொண்டிருக்கிறான்.

தினேஷ், சர்வேஷை பெருமையாக நினைக்கும் படி இந்த இரண்டு வருடங்களில் சர்வேஷ் தன்னை மாற்றிக் கொண்டு, வாழ்க்கையில் உயர்ந்துக்கொண்டே இருந்தான்.

சர்வேஷ் கேட்டதால் அவனை மட்டும் சத்யா ஏ.எஸ் கம்ப்யூட்டர் சொலியூஷன் அண்ட் நெட்வொர்க் புரோடக்சனில் பார்ட்னராக சேர்த்துக் கொண்டான்.

சர்வேஷ் சென்னையில் உள்ள அமெரிக்கா பிரான்ஞ்சில் வேலை செய்துக் கொண்டே . சத்யாவோட கம்பெனியை பார்த்துக்கொள்ள முடிவு செய்திருக்கான்.

தேவ் கார் ஓட்ட , தூங்கிக் கொண்டிருந்த விக்னராஜை ஒரு பக்கம் மடியில் படுக்க வைத்துக் கொண்ட சத்யா மறுபக்க தோளில் சோர்வாக இருந்த சந்தியாவை படுக்கவைத்துக் கொண்டான் .

வேலை முடித்து வீட்டிற்கு வந்த தீப்ஷீயை, அடிக்க தேவ் துரத்தினான் .

அவன் கையில் சிக்காமல் தீப்ஷீ ஓடினாள் .

” அப்பா , அம்மாவை பிடிங்க. ”  என்று தந்தைக்கு உற்சாகம் தந்தான் விக்னராஜ் .

தேவ்விற்கு உதவ சத்யாவும் எழுந்தான் .

இவர்களின் லூட்டியை பார்த்து அனைவரும் சிரித்தனர் . இனி இவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி மட்டுமே .

முற்றும் .

 

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்