Loading

அத்தியாயம் 44

 

அங்கு எல்லோரும் இவர்களை ஆர்வமாக பார்க்க . அப்போ தான் தீப்ஷீக்கு தன் தவறு புரிய. வெட்கத்தில் தேவ் பின் ஒளிந்துக் கொண்டாள் .

 

அவளின் தோள்களை ஆதரவாக தட்டியவன் அவளை உட்கார வைத்து விளையாட சென்றான் .

 

கோகுலுக்கும் விசயம் தெரிய . தேவ் வந்த பின் , ” என்ன மச்சான் நீயே பெரிய கோபக்காரன். உன் பொண்டாட்டி உனக்கு மேல் இருப்பாங்க போல்?” என்றுக் கேட்டான் .

 

” டேய்! அடங்குடா. ” என்றவன் இந்த முறை கவனமாக விளையாடி ஜெயித்துவிட்டான் .

 

தீப்ஷீயை பார்த்து தம்ஸ் அப் காண்பிக்க அவள் முகத்தில் சந்தோஷம் தெரிய , நிறைவாக உணர்ந்தான் தேவ் .

 

பின் அவளை வர சொல்லி கை காண்பிக்க .

 

அவளும் அவன் அருகே வர .

 

அவனின் நண்பர்களுக்கு தீப்ஷீயை இன்ட்டியூஸ் செய்து வைத்தான் .

 

அவனோடு விளையாடியவன் தீப்ஷீயிடம் , ” சிஸ் இவன தோக்கடிக்கவே முடியாது . இவனோட விளையாண்டா என்னால் ஒரு பாயின்ட் கூட எடுக்க முடியாது . இன்னைக்கு நீங்க வந்ததால் தான் சாருக்கு கொஞ்சம் கவனம் போயிடிச்சு.”

 

” சாரி ணா ஏதோ … ” என்ற தீப்ஷீ தடுமாற.

 

” அட விடுமா. இத வச்சே இவன நாங்க பல மாசம் கலாய்ப்போம். எங்களுக்கு அதுக்கு வாய்ப்பு தந்த உனக்கு தான் நாங்க நன்றிக் கடன் பட்டிருக்கோம் .” என்றவன் தேவ்வை கை காண்பிக்க .

 

அங்கு சிரிப்புக்கு பஞ்சமில்லை.

 

எல்லா இடத்தையும் சுற்றி காண்பித்தான் தேவ் .

 

தீப்ஷீ கடைசியாக தேவ்விடம் , ” எனக்கு டைக்குவாண்டோ சொல்லி தர்றீங்களா?”

 

” சொல்லி தரேன் . ஆனா , இங்க வேண்டாம் எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க . நான் உனக்கு வீட்டுல சொல்லி தரேன் . ”

 

” ஓகே.”

 

” சரி வா வீட்டிற்கு போலாம்.” என்றான் தேவ்.

 

இருவரும் வெளியே வர அங்கு தேவ்வின் காரும் , தீப்ஷீயின் பைக்கும் நிற்க .

 

இருவரும் ஒருவரை ஒருவர் கேள்வியாக பார்த்து நிற்க .

 

தீப்ஷீ தான் , ” நீங்க என்னோட என் பைக்குல வர்றீங்களா?” என்னோடு வருவானா என்று யோசனையாக கேட்டாள் .

 

” ஓகே.” என்று உடனே பதில் தந்தவன் .

 

வாட்ச்மேனிடம் கார் சாவியை கொடுத்துவிட்டு வந்தவன் .

தீப்ஷீக்கு பின்னால் டபுள் சைடு கால் போட்டு பைக்கில் உட்கார்ந்துக் கொண்டான் .

 

எந்த ஈகோ இல்லாமல் தேவ் வந்தது தீப்ஷீக்கு சந்தோஷத்தை தந்தது .

 

தேவ்வும் இந்த பயணத்தை ரசித்துக் கொண்டே வந்தான்.

 

வீட்டிற்கு வெளியே சத்யா , சந்தியா , சர்வேஷ் , கமலா , அக்ஷிதா , சரண்யா எல்லோரும் பேசிக் கொண்டிருக்க.

 

தீப்ஷீ, தேவ் ஒன்றாக வருவதை அவர்கள் சந்தோஷமாக பார்க்க, சத்யா தன் ஃபோனில் அவர்களை ஃபோட்டோ எடுத்தான்.

 

தீப்ஷீ வண்டி ஓட்ட தேவ் பின்னால் உட்கார்ந்து வருவதை பார்க்க அழகாக இருந்தது.

 

” என்ன எல்லோரும் வெளிய மீட்டிங் போட்டுட்டிருக்கீங்க?” என்று கேட்டாள் தீப்ஷீ.

 

” சும்மா தான் பேசிட்டிருந்தோம் அம்மு . விசாரணை என்னாச்சு?”

 

” ரொம்ப கேள்வி கேட்டாங்க சத்யா. தென் ஆதாரம் நமக்கு சாதகமா இருந்ததாலும். அவங்களுக்கு பெரிய அரசியல் பலமோ, செல்வாக்கோ இல்லாததாலும் என்ன விட்டுட்டாங்க.”

 

” நல்லவேளை ரொம்ப பயந்தேன் அம்மு. பைக் தர்றீயா சந்தியாவோட வெளிய போறேன்.”

 

தீப்ஷீ சாவியை தந்தாள் .

 

” அம்மு , நைட் எல்லாருக்கும் நிலா சோறு மொட்ட மாடில வந்துருங்க. தேவ் நீயும் தான். ”

 

“ஓகே  சத்யா.” என்றான் தேவ்.

 

” ஓகே சத்யா பாய்.” என்ற தீப்ஷீ

முகத்தில் சிரிப்போடு சத்யாவோடு செல்லும் சந்தியாவை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

‘நானும் தேவ்வின் காதலை முன்பே உணர்ந்திருந்தாள். நாங்களும் இப்படி தான் சந்தோஷமாக வெளியே சென்றிருப்போமோ?’ என்று ஏக்கமாக நினைத்தாள். தேவ், தீப்ஷீ இதுபோல் எங்கும் வெளியே சென்றதில்லை.

 

அவளின் ஏக்கப் பார்வையை பார்த்த தேவ்விற்கும் வருத்தமாக இருந்தது, ‘ நாம தீப்ஷீயை கஷ்டப்படுத்துறோமோ?’ என்று நினைத்த தேவ் .

 

” தீப்ஷீ, வீட்டுக்கு வரீயா?”

 

” வரேன்.” என்ற தீப்ஷீ அவனோடு சென்றாள்.

 

இருவருக்கும் டீ போட்டு எடுத்து வந்தாள்.

 

அதை குடித்த தேவ்விற்கு ஆச்சரியமாக இருந்தது .

 

முன்பெல்லாம் ஏனோ தானோனு கடமைக்கே தீப்ஷீ டீ போட்டு எடுத்துவருவாள்‌. அதில் ருசியே இருக்காது இருந்தாலும் தேவ் அதை விரும்பிக் குடிப்பான்.

 

ஆனால், இன்று அவள் போட்டு வந்த டீ ருசியாக இருந்தது தேவ்வின் ஆச்சரியத்திற்கு அதுதான் காரணம்‌.

 

தேவ் டீ குடித்துக் கொண்டே ஃபோன் பார்ப்பது போல் காட்டிக் கொண்டு தீப்ஷீயை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருக்க.

 

தீப்ஷீயோ அவனை வெளிப்படையாக சைட் அடித்துக் கொண்டே டீ குடித்தவள். பின் வீட்டு வேலை செய்ய ஆரம்பித்தாள்.

 

*****

 

” சந்தியா , அங்கு உட்கார்ந்துட்டு போலாமா?” என்று சத்யா கோவிலில் உள்ள குளத்து பக்கத்தில் உள்ள படியை காட்ட .

 

” ஓகே சத்யா.” என்ற சந்தியா அவனோடு படியில் உட்கார்ந்தாள்.

 

” எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சந்தியா. அம்மு தேவ்வை ஏத்துக்கிட்டது. கண்டிப்பா அவ வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு தெரிஞ்சு தான் அந்த கல்யாணத்தை நடத்தி வெச்சேன். அவளோட மாற்றத்தை பார்க்கும் போது மனசுக்கு நிறைவா இருக்கு.”

 

” எனக்கும்தாங்க.”

 

” நீ சந்தோஷமா இருக்கீயா?”

 

” இது என்ன கேள்வி சத்யா? நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.”

 

” நானும் தெரிஞ்சுக்கணும்ல நான் உன்ன நல்லா பார்த்துக்குறேனானு ?”

 

” என் வீட்டுக்காரர் என்னை நல்ல பார்த்துக்குறார். அவர் என்ன புரிஞ்சி நடந்துப்பார். என் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார். அவரால யாரையும் கஷ்டப்படுத்த முடியாது. அப்படி இருக்க அவர் பொண்டாட்டி கண்டிப்பா முடிசூடாத ராணியா தான் இருப்பாள்.”

 

” போதும் . என்னால முடியலை.”

 

” நான் உண்மைய தான் சொன்னேன். என்ன நீங்க எந்த அளவுக்கு பார்த்துக்குறீங்கணா எங்க அம்மா அப்பாவ இதுவரைக்கு நான் மிஸ் பண்ணாத அளவு நீங்க என்ன பார்த்துக்குறீங்க. அன்பா பார்த்துக்குற கணவர். பாசமாக பார்த்துக்குற கமலாமா‌. நல்ல மனசு உள்ள தீப்ஷீ குடும்பம் . எல்லாரும் எனக்கிருக்காங்க.”

 

அவள் பேசும் அழகை ரசித்துக் கொண்டிருந்தான் சத்யா .

 

பேசும் ஆர்வத்தில் அதை கவனிக்காத சந்தியா . அப்போது சத்யாவின் பார்வையில் நாணம் கொண்டு கன்னங்கள் சிவக்க கீழே குனிந்துக் கொண்டாள்.

 

அவளை அணைக்கத் துடித்த கையை இருக்கும் இடம் கருதி கட்டுப்படுத்தினான் சத்யா.

 

” சத்யா, வீட்டுக்கு போலாமா டின்னர்க்கு கமலாமாவுக்கு ஹெல்ப் பண்ணணும்.”

 

” சரி வா போலாம்.”

 

இருவரின் மனதும் நிறைவாக இருந்தது.

 

சந்தியா பெரிய வீட்டு பெண் போல் இல்லாமல் சாதாரணமாக தன்மையாக நடந்துக்கொள்வாள்.

 

தீப்ஷீ முன்பு சொன்னது போல் சந்தியா சத்யாவிற்கு தாயாக மாறி அன்பு காட்டினாள்‌.

 

சத்யாவும் சந்தியாவின் சின்ன சின்ன ஆசையை நிறைவேற்றி அவளை சந்தோஷமாக பார்த்துக் கொண்டான்.

 

*****

 

பௌர்ணமி நிலவு வானில் அழகாக காட்சியளிக்க மொட்டை மாடியில் ,

 

சத்யா , சந்தியா , சர்வேஷ் , தீப்ஷீ , தேவ் வட்டம் போட்டு உட்கார்ந்துக் கொண்டு நிலாவை ரசித்து பார்த்துக் கொண்டே கதை அளந்தனர்.

 

தேவ் மட்டும் அவ்வளவாக பேசவில்லை.

 

சந்தியா நால்வருக்கும் பிளேட் எடுத்து வைக்க . தீப்ஷீ எல்லோருக்கும் பரிமாறினாள்.

 

சத்யா பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டாள் தீப்ஷீ.

 

சத்யாவிற்கு தெரியும் அவள் ஏன் அவன் பக்கத்தில் உட்காருகிறாள் என்று‌.

 

சத்யாவே அவளின் தட்டை வாங்கி ஊட்டி விட ஆரம்பித்தான் .

 

சாப்பிட்டுக் கொண்டே தீப்ஷீ இரண்டு முறை தேவ்வை ஏக்கமாக பார்த்தாள்.

 

ஏனோ அவளுக்கு இன்று தேவ் கையால் ஒரு வாய் சாப்பிட வேண்டும் போல் இருந்தது.

 

தேவ்வும் அவளை பார்த்தவன் ,

‘ கல்யாணத்தன்னைக்கு ஊட்டி விட்டப்ப நீ செய்த ஆர்ப்பாட்டம் என்ன ? இப்போ பார்க்கிற பார்வை என்ன? ‘ என்பது போல் பார்த்தான்.

 

தீப்ஷீயின் மனம் புரிந்த சத்யா ,” தேவ், நீ வந்து தீப்ஷீக்கு ஊட்டு . நான் சந்தியாவுக்கு ஊட்டிவிடணும்.” என்றான்.

 

தீப்ஷீ கோபமோ வருத்தமோ படவில்லை சத்யாவின் செயலுக்கான அர்த்தம் அவன் சொல்லாமலே அவளுக்கு புரியும்.

 

சந்தியாவும், சத்யா தீப்ஷீக்கு ஊட்டிவிடுவதை தப்பாக நினைக்கமாட்டாள். ஏக்கமாவும் பார்க்க மாட்டாள் . தீப்ஷீ எவ்வளவு சத்யாவிற்கு முக்கியம் என்பதை சத்யா பலமுறை சந்தியாவிடம் சொல்லியிருக்கான்.

 

அவர்களின் நட்பின் ஆழமும் சந்தியா அறிந்த ஒன்றே.

 

சத்யா சொன்ன பின் தேவ் எதுவும் பேசாமல் தட்டை வாங்கி தீப்ஷீக்கு ஊட்டிவிட ஆரம்பித்தான்.

 

தீப்ஷீ கண் கலங்க அதை தேவ்விற்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள முயற்சி செய்துக் கொண்டிருக்க ‌.

 

தேவ்வோ கர்சீப்பை எடுத்து யாரும் அறியாமல் அவளின் கண்களை துடைத்து விட்டான்.

 

‘ சில மாசமா என்னை காதலிக்கிற உனக்கே இவ்வளவு ஏக்கமும் வருத்தமும் இருக்கும் போது,  சின்ன வயசிலிருந்து உன்னை நேசிக்குற என்னோட வலி உனக்கு புரியுமா?’ என்று நினைத்தான் தேவ்‌.

 

சாப்பாட்டை முடித்தவர்கள் எல்லாத்தையும் எடுத்துவைத்து பேச ஆரம்பிக்க .

 

அப்பொழுது தேவ் அவன்  டைக்குவாண்டோ விளையாட சென்ற இடத்தில் நடந்த விசயத்தை பேசி முடிக்க.

 

சர்வேஷ்,” உன்ன நினைச்சி எனக்கு பெருமையா இருக்கு தேவ் . நீ ஃபேமஸ் டைக்குவாண்டோ பிளேயர். சத்யாவும் திறமையானவன். நான் தான் டா நல்லா படிக்காம  இருந்துட்டேன். ஏதோ வேலை செய்யனும்னு செஞ்சுட்டிருக்கேன்‌.” என்று தன்னை தாழ்த்திக் கொண்டான்.

 

அங்கிருந்தவர்களுக்கு மனசு பாரமாக .

 

சத்யா,” எல்லாரோட லைஃப்பும் ஒரே மாதிரி இருக்காது . அதுக்கு நீ திறமை இல்லாதவனு அர்த்தம் இல்லை சர்வேஷ் . உனக்கு ஆட்சேபனை இல்லன்னா நீ பார்க்குற வேலைய விட்டுட்டு என்னோடு கொஞ்ச நாள் ப்ராஜெக்ட் பண்ணு . அப்புறமா பெரிய கம்பெனியில் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணு. அதுல கண்டிப்பா உனக்கு வேலை கிடைக்கும் அதுக்கு நான் பொறுப்பு.”

 

” கண்டிப்பா நாளைக்கே வேலைய ரிசைன் பண்ணிட்டு, உன்னோடு வேலை செய்றேன் சத்யா.” என்று உடனே சர்வேஷ் சம்மதித்தான். இனி சத்யா சர்வேஷ்ஷை பார்த்துக்கொள்வான் என்று அங்கிருந்து எல்லோரும் நிம்மதியடைந்தனர் .

 

கமலா மாடிக்கு வர,

 

” கமலாமா ஏன் நீங்க இப்போ அகடாமி வரதில்லை ? சத்யா கல்யாணம் முடியட்டும் கேட்போம்னு இருந்தேன். ” என்று கேட்டான் தேவ்‌.

 

” கல்யாண வேலைக்காக தான்பா வராம இருந்தேன். நாளைல இருந்து வரேன். எனக்கும் அங்க வர்றது ரொம்ப பிடிச்சிருக்கே . உங்க எல்லோருக்கும் புள்ள பொறக்குற வரைக்கும் வரேன் . அதுக்கு அப்புறம் புள்ளைங்களை நான் பார்த்துப்பேன்.” என்ற கமலா நான் உங்களிடமிருந்து நல்ல செய்தி எதிர்ப்பார்க்கிறேன் என்று சொல்லாமல் தேவ்‌, சத்யாவிடம் சொல்லிவிட்டு  சென்றார்.

 

” அச்சோ கமலாமா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. அது தப்பாச்சே . ” என்று சர்வேஷ் சொல்ல .

 

சர்வேஷ்ஷை அடிக்க  சத்யாவும், தேவ்வும் துரத்தினர்.

 

அவன் இவங்க கையில் சிக்காமல் ஓடியேவிட்டான்.

 

சத்யாவும் தேவ்வும் கீழே வந்திருக்க . யாரும் இருக்காங்களா என்று பார்த்த சத்யா தேவ்விடம்,” என்ன நடக்குது தேவ்? தீப்ஷீக்கிட்ட மாற்றம் தெரியுது. ஆனா, உன் கிட்ட அதுக்கான சந்தோஷம் இல்லையே?”

 

” நீ சொன்னதால அவ என்ன காதலிக்கிறா. அத நான் எப்படி ஏத்துக்க முடியும் ? நீயே சொல்லு சத்யா? ”

 

” நான் எப்போ அவக் கிட்ட உன்ன காதலிக்க சொன்னேன்? உன் கிட்ட நல்லா பேச மட்டும் தான் நான் சொல்லிருக்கேன். லவ் பண்ணுனு நான் சொன்னா அவ உடனே உன்ன லவ் பண்ணிடுவாளா? லவ் இஸ் ஃபீலிங் அண்ட் எமோஷனல் பாண்ட் லவ் இஸ் நாட் வொர்க் . நான் சொன்னதும் அவ உன்ன காதலிக்க காதல் ஒன்னும் வேலை இல்லை புரியுதா.”

 

” அவளுக்கு எப்படி என் மேல திடீருனு லவ் வந்திச்சு?”

 

” நான் இல்லாதப்ப என்ன சார்ந்தவங்களை நீ நல்லா பார்த்துக்கிட்டதா நான் கேள்வி பட்டேன் . அப்போ எனக்கே உன் மேல் மரியாதை வந்துச்சு. அவளுக்கு உன் மேல் காதல் வராதா? நீ அவளை காதலிப்பதை அவள் கண்டுப்பிடிச்சிருப்பா ‌. சோ அவ உன்னை லவ் பண்ணிருக்கலாம்.”

 

தீப்ஷீக்காக எழுதிய டைரியை அவள் படித்துவிட்டாள் என்பது நினைவுக்கு வர தேவ் அமைதியாக நின்றான்.

 

” நான் உன் கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கேன் . அவ உன்ன புரிஞ்சிக்குற வரை தான் உனக்கு கஷ்டம் . அவ உன்ன நேசிக்க ஆரம்பிச்சிட்டா இந்த உலகத்துல யாரும் உன்ன விட லக்கியா இருக்க மாட்டாங்க‌னு. அத தான் இப்பவும் சொல்றேன். அவ கிட்ட ஒழுங்கா நடந்துக்க . இன்னொரு தடவை அவ கண்ல ஏக்கத்த பார்த்தேன். நான் மனுஷனா இருக்க மாட்டேன்.”

 

” முன்னாடி சொல்லுவியே உன் கிட்ட இருந்து அவள பிரிச்சு கூட்டிட்டு போகவும் யோசிக்கமாட்டனு . இப்பவும் அத சொல்லுவியா சத்யா?”

 

” அவ உன்ன லவ் பண்ற தைரியத்துல சொல்றீயா? உன்ன வெறுத்தப்பவே என்னோட வார்த்தைக்காக உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டவ . உன்ன லவ் பண்றப்ப நான் சொன்னா உன்ன விட்டு வரமாட்டானு நினைக்குறீயா?”

 

“…” பதிலில்லாமல் தேவ் நின்றான்.

 

“ஒரு நாளும் நான் அப்படி சொல்லமாட்டேன் . ஏன்னா எனக்கு எப்பவும் அம்முவோட சந்தோஷம் தான் முக்கியம்.”

 

சந்தியாவும், தீப்ஷீயும் வர…  சத்யா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

 

தேவ்விற்கு கோபம் வரவில்லை. மாறாக அவனுக்கு ஆச்சரியம் . தீப்ஷீயாக சத்யாவிடம் எதுவும் சொல்லவில்லை என்பது தேவ்விற்கு நன்றாக தெரியும்.

 

தீப்ஷீ தனியாக இன்று சத்யாவோடு பேசவே இல்லை. தீப்ஷீ சத்யா வீட்டிற்கு தேவ்வோடு தான் வந்தாள். அதற்கு முன்பு சாயங்காலம் சத்யாவை பார்த்தாள் ஆனால், அப்பொழுதும் அங்கு எல்லோரும் இருந்தார்கள். இவர்களின் நட்பின் ஆழம் என்றுமே அதிசயம் தான்.

 

தீப்ஷீயோடு தேவ் வீட்டிற்கு செல்ல .

 

தேவ்வே தீப்ஷீயின் வருத்தம் பிடிக்காமல் தன் பிடிவாதத்தை விட்டு அவளோடு காதல் செய்ய முடிவெடுத்திருக்க. சத்யாவும் அதையே வேறு விதமாக சொல்ல. அவன் தீப்ஷீயிடம் பேச முடிவெடுத்தான்.

 

வீட்டில் எல்லோரும் படுக்க சென்றியிருக்க . வீட்டை பூட்டிய தேவ் ரூமிற்கு வர .

 

தீப்ஷீ படுத்துக்கொண்டே ஃபோன் நோண்டிக் கொண்டிருந்தாள்.

 

” தீப்ஷீ வரீயா டைக்குவாண்டோ கத்து தரேன்?”

 

அவனை பாவமாக பார்த்த தீப்ஷீ ,” டையர்டா இருக்கு . நாளைக்கு சொல்லி தர்றீங்களா?”

 

‘நாளைக்கு வரைக்கும் என்னால வெயிட் பண்ண முடியாது.’ என்று நினைத்தவன் அவளிடம்,” நாளைக்கு எனக்கு வேற வேலை இருக்கு .

இன்னைக்கு வரமுடியுமா? முடியாதா?”

 

வேண்டா வெறுப்பாக தீப்ஷீ சென்றாள் .

 

ஒவ்வொன்றாக கற்றுத்தந்தவனுக்கும் தெரியாது, கற்றுக்கொண்டவளுக்கும் தெரியாது எப்போது பாடம் காதலாக மாறியது என்று.

 

தீப்ஷீயை தூக்கியவன் அவள் கண்களை பார்த்து ,” ஐ லவ் யூ செல்லம்‌. நீனா எனக்கு எவ்வளவு இஷ்டம்னு உனக்கு தெரியுமா? நீ வெறுத்தப்பவே உன் பின்னாடி நாய் மாதிரி வருவேன். நீ காதலிக்கும் போது உன்ன விட்டுடுவேனா? எதுக்கு என் அன்புக்காக ஏக்கமா பார்த்த? இந்த உயிர் பிறந்ததே உனக்காக தான்.” என்றவன் அவளை பெட்டில் படுக்க வைத்தவன். தன் உரிமையை தன்னை காதலிக்கும் மனைவியிடம் எடுத்துக்கொண்டான்.

 

இனி இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மட்டுமே.

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்