
அத்தியாயம் 39
” சரி நான் பார்த்துக்கிறேன். அவர் வீட்டு அட்ரஸ் தெரியுமா? ”
” தெரியும் மேடம் . போன வாரம் தான் அவரு பொண்ணோட பர்த் டே ஃபங்சனுக்கு ஆஃபீஸில் உள்ள எல்லோரையும் அழைத்து இருந்தார் .”
” அட்ரஸ்ஸ எனக்கு மெசேஜ் அனுப்பு . இனி நீங்க வேற கம்பெனியில் வேலை தேடிக்கோங்க . நீங்க செய்த உதவிக்கு தேங்க்ஸ் . உன் ஃப்ரெண்ட் இலக்கியா கிட்ட சொல்லிடு . பாய் .” என்ற தீப்ஷீ ஃபோனை வைத்தாள்.
*****
வசந்தி தந்த அட்ரஸ்கு சென்ற தீப்ஷீ . காலிங் பெல் அழுத்தி நின்றாள் .
ஐபிஎஸ் யூனிஃபார்மில் வந்த தீப்ஷீயை பார்த்து பயந்துக் கொண்டே கதவை திறந்தாள் சரவணனின் மனைவி .
” இது சரவணன் வீடு தான ?”
” ஆமா . நீங்க எதுக்கு வந்திருக்கீங்க? ”
அவள் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே வெளியே வந்த சரவணனின் முகத்திலும் பயம் .
” நானும் சரவணனும் சின்ன வயசு ஃப்ரெண்ட் . சும்மா இந்த பக்கமா வந்தேன் அப்படியே அவனை பார்க்கலாம்னு வந்தேன். ” என்றாள் தீப்ஷீ .
” ஓ ! இவங்க ஃப்ரெண்டா . யூனிஃபார்மில் பார்த்ததும் பயந்துட்டேன் .”
” தப்பு செஞ்சவங்க தான் போலீஸை பார்த்து பயப்படணும். நீங்க ஏன் பயப்படுறீங்க? ” என்று சரவணனை பார்த்துக் கொண்டே, அவன் மனைவியிடம் கேட்டாள் தீப்ஷீ .
” ஸ்கூல் டீச்சரை பார்த்தால் வருமே ஒரு பயம் கலந்த மரியாதை . அது தான் எனக்கும் உங்கள பார்த்தால் வருது . வெளியே நிக்க வெச்சி பேசிக்கிட்டிருக்கேன் உள்ள வாங்க. ”
உள்ளே வந்த தீப்ஷீ அங்கிருந்த சோஃபாவில் உட்கார்ந்தாள் .
” டீ குடிப்பிங்களா ? ”
” குடிப்பேன் .”
சமையலறை உள்ளே சென்றாள் .
” மேடம் எனக்கு உங்கள தெரியாது. ”
” நீ பரந்தாமனுக்கு துணையா செய்ற மொள்ளமாரி வேலையப் பத்தி தெரிஞ்சுக்க வந்தேன் . எப்படி நீயே தனியா வந்து சொல்றீயா ? இல்ல நானே உன் வைஃப் முன்னாடி கேட்கட்டுமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் தீப்ஷீ .
” வேண்டாம் மேடம்.
என் வைஃப்க்கு இதெல்லாம் தெரியாது. தனியா வந்து நானே சொல்றேன் . அவள் முன் எதுவும் கேட்காதீங்க ப்ளீஸ். ” என்றான் சரவணன் .
” ஓகே. ” என்றாள் தீப்ஷீ .
டீ எடுத்து வந்து தந்தாள் சரவணனின் மனைவி .
” தேங்க்ஸ் .” என்று எடுத்துக் கொண்டாள் தீப்ஷீ .
” நான் இவங்களுக்கு நம்ம வீட்ட சுத்திக் காட்டிட்டு வரேன். ” என்ற சரவணன் எழ அவனோடு தீப்ஷீயும் சென்றாள் .
எல்லா இடத்தையும் காண்பிப்பது போல் காண்பித்து, கடைசியாக அவளை மொட்டை மாடிக்கு அழைத்து வந்தான் சரவணன் .
” மேடம் ப்ளீஸ் என் வைஃப் கிட்ட எதுவும் சொல்லாதீங்க . நான் எனக்கு தெரிஞ்சதை உங்க கிட்ட சொல்லிடுறேன் . நான் செய்த காரியம் என் மனைவிக்கு தெரிஞ்சா அவ என்ன விட்டு என் பிள்ளையோடு போயிடுவா . அவங்க இல்லைணா நான் உயிரோடே இருக்க மாட்டேன். ”
” ஆபீஸில் நடப்பதை முதல்ல சொல்லு அப்புறம் நான் முடிவு பண்றேன். ”
” வைரஸ் உள்ள மெயிலை எனக்கு சந்தரன் அனுப்புவான் . நான் அதை வேலைக்கு அப்ளை பண்றவங்களின் மெயிலுக்கு அனுப்பிடுவேன் . அது மட்டும் தான் என் வேலை மேடம் . மீதி எல்லாம் சந்தரன் தான் செய்வான். ”
” கம்பெனியில் வேறு யார் எல்லாம் இந்த வேலை செய்றது.”
” எனக்கு மட்டும் தான் தெரியும் மேடம் . வேற யாருக்கும் தெரியாது . நானும் விரும்பி எல்லாம் செய்யலை மேடம் .
எங்களோடது காதல் கல்யாணம் தான். எனக்கு கல்யாணமான பின்னாடி தான் எனக்கு வேலை கிடைச்சது . வீடு , காரு , வீட்டிற்கு உபயோக பொருள் எல்லாம் வாங்க, தப்பான ஆளுனு தெரியாம ஒருத்தன் கிட்ட பணம் வாங்கிட்டேன். அப்புறம் அவன் பணம் வாங்க என் வீட்டிற்கு வந்து தொல்லை தந்தான் . அந்த சமயம் தான் பரந்தாமன் சார் என் கிட்ட இந்த வேலையை செய்ய சொல்லிக் கேட்டார் . நானும் பணத்திற்காக செய்தேன். ”
” சத்யாவை ஏன் கொன்னீங்க? ”
” சத்யா போல் நல்லா வேலை செய்றவங்க இருந்தா, சிஸ்டம் அட்மின் மூலம் அவங்களை வேலை விட்டு அனுப்பிடுவார் பரந்தாமன் சார் . அது போல் சத்யாவை அனுப்ப நினைச்ச போது சத்யாவிற்கு எப்படியோ நாங்க செய்ற வேலை தெரிஞ்சிடுச்சு அதான் அவனை கொன்னுட்டாங்க. ”
” அந்த சிஸ்டம் அட்மினுக்கு நீங்க செய்யும் வேலை தெரியுமா? ”
” தெரியாது மேடம் . சிலரை வேலைய விட்டு அனுப்ப தான் அவன் கிட்ட சொல்லுவார் . அவனும் எம்.டி சொல்றார்னு செஞ்சிடுவான் .”
” சந்தரன் மட்டுமா இல்ல அவனுக்கு பெரிய நெட்வொர்க் வெச்சு பலரோடு இந்த வேலை செய்றானா?”
” எனக்கு உண்மையா இது பத்தி தெரியாது மேடம் . என்னோட வேலை மெயில் அனுப்புவதோடு முடிஞ்சிடும் . எனக்கு தெரிஞ்சி சந்தரன் மட்டும் தான் என்னோடு பேசுவான் . எனக்கு மெயில் அனுப்புவான். ”
” உன்ன மாதிரி எல்லோருக்கும் பண கஷ்டம் வரும் . அதுக்காக இப்படி தான் அப்பாவி பொண்ணுங்க வாழ்க்கையில் விளையாடுவீயா ? இதே மாதிரி உன் வைஃப்கோ மகளுக்கோ நடந்தா என்ன பண்ணுவ? உன் வைஃப்க்காகவும் மகளுக்காக உன்ன விடுறேன். இனி இது மாதிரி வேலை செஞ்சா உன்ன கொல்லவும் நான் யோசிக்க மாட்டேன் .” என்றாள் தீப்ஷீ .
கீழே இறங்கி வந்தாள் தீப்ஷீ . அங்கு சரவணன் மனைவி அவர்களின் குழந்தையை தூக்கி கையில் வைத்திருந்தாள்.
” உங்க பாப்பா ரொம்ப அழகா இருக்கா . நிறைய பொறுக்கீங்க இருக்க உலகம் . உங்க பொண்ண பத்திரமா பார்த்துக்கோங்க . நான் போயிட்டு வரேன். ” என்றாள் தீப்ஷீ .
தீப்ஷீ சொல்லியதைக் கேட்ட சரவணனுக்கு செருப்பால் அடித்ததுப் போல் இருந்தது .
*****
ஸ்டேஷன் சென்றவள் தன் சட்டையில் மாட்டியிருந்த பட்டன் கேமராவை எடுத்தாள் . சரவணன் வீட்டிற்கு சென்றது முதல் நடந்த நிகழ்வு எல்லாம் வீடியோவாக பதிவாகி இருக்க . அதை சிஸ்டத்தின் மூலம் பென் ட்ரைவில் ஏற்றிக் கொண்டாள் .
” ஆனா , இதை நான் ஆதாரமாக பயன்படுத்த போவதில்லை . சூழ்நிலையால் தப்பு செய்தவனுக்கு திருந்தி வாழ ஒரு வாய்ப்பு தரலாம். ” என்றாள் தீப்ஷீ தனியாக .
****
தன் வேலையை முடித்த தீப்ஷீ . வீட்டிற்கு செல்ல அவளுக்கு முன் அங்கிருந்தான் ஶ்ரீதர் .
ஶ்ரீதரோடு தேவ் சிரித்து பேசிக் கொண்டிருந்தான் .
‘ ஓ ! ஐயாவுக்கு இப்போ பொறாமை தீ வரதில்லைப் போல். என் ஃப்ரெண்டோட சிரிச்சி பேசிட்டிருக்கான்.’ என்று நினைத்த தீப்ஷீ அமைதியாக தன் அறைக்கு சென்று தூங்கி விட்டாள் . இரவு வேலை இருப்பதால் கிடைத்த நேரத்தில் தூங்கினாள் அவள் .
இரவு ஒரு மணிக்கு ஶ்ரீதரும் , தீப்ஷீயும் வெளியே வந்தனர் .
தேவ் கவலையாக தீப்ஷீயை பார்த்துக் கொண்டிருந்தான் .
” முக்கியமான கேஸ் . நான் ஒரு ஐ.பி.எஸ் ஆபீசர் மறந்துடாதீங்க. நான் தனியாவே போவேன் . வீட்டில் உள்ளவங்க பயப்படுவாங்கனு தான் நான் ஶ்ரீதரோடு போறேன் . தனியாவா போறேன் ஏன் இப்படி நிற்குறீங்க? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
” எனக்கு பயமா இருக்கு . நானும் உங்களோடு வரவா ?” என்றுக் கேட்டான் தேவ் .
” நான் கேஸ் விஷயமாக போறேன் . ஐ.பி.எஸ் வேலை இப்படி தான் இருக்கும். நான் இனிமே இப்படி தான் அடிக்கடி வெளியே போவேன். நீங்க தான் உங்கள மாத்திக்கணும். எனக்கு ஒன்னும் ஆகாது. நான் போயிட்டு வரேன். ” என்ற தீப்ஷீ தன் பைக்கில் ஏறினாள் .
” பாஸ் , நான் பார்த்துக்குறேன் . நீங்க உள்ள போங்க. ” என்ற ஶ்ரீதர் அவன் வண்டியில் தீப்ஷீயை பின் தொடர்ந்துச் சென்றான் .
*****
லட்சுமி ஜெராக்ஸ் கடையின் வெளியே இருவரும் நின்றனர் .
‘ இதை எப்படி திறப்பது? ‘ என்று யோசித்துக் கொண்டே ஏதாவது கிடைக்கிறதா என்று தேடினான் ஶ்ரீதர் .
வீட்டில் இருந்து வரும் போதே டூல்ஸ் பேக்கை எடுத்து வந்த தீப்ஷீ அதன் உதவியோடு திறந்தாள் .
” பல முறை திருடி இருக்க போல? ” என்றான் ஶ்ரீதர் .
” நீ சிறந்த போலீஸ் ஆகணும்னா குற்றவாளி போல யோசிக்கணும் , திருடனை போல திருடணும். ” என்றாள் தீப்ஷீ .
” பாருடா !” என்றான் ஶ்ரீதர் .
அங்கிருந்த சிஸ்டத்தை ஆன் செய்தாள் தீப்ஷீ .
அவன் யார் யாருக்கு மெயில் அனுப்பினான் . யாரோடு ஃபோனிலிருந்து வீடியோ எடுக்கிறான் . யாரை ஃபோனில் மிரட்டி பணம் வாங்கினான் என்று எல்லா தகவலும் ஆதாரத்தோடு கிடைத்தது . அனைத்தையும் பென்டிரைவில் ஏற்றினர் .
” நான் கூட இவ்வளவு பெரிய தப்பு செய்றவன் எப்படி எல்லா தகவலும் அப்படியே வெச்சிருக்க போகிறானு நினைச்சேன் . ஆனால் , இவன் பெரிய முட்டாள் எல்லாத்தையும் அழிக்காமல் அப்படியே வெச்சிருக்கான். ” என்றான் ஶ்ரீதர் .
” அவன் முட்டாள் இல்ல நாம தான் புத்திசாலி . பெண்களின் மானம் சம்பந்தப்பட்டது. அதனால், யாரும் கம்ப்ளைன்ட் கொடுக்க மாட்டாங்கங்கிறது அவர்களின் எண்ணம் . அதையும் மீறி கம்ப்ளைன்ட் வந்தா இவனுங்களுக்கு தகவல் சொல்ல ஆட்கள் உண்டு . என் கிட்ட கேஸ் வந்ததால். நான் உன் உதவியோடு சத்தம் இல்லாம இந்த கேஸை முடிச்சிட்டேன் . அதுவும் இல்லாம அவன் ஒருவனா தினமும் பத்து பேரை மிரட்டுறான் . அவனுக்கே இந்த தகவல் இல்லாமல் வேலை செய்ய முடியாதே . அதான் அப்படியே வெச்சிருக்கான்.” என்றாள் தீப்ஷீ .
” நீ சொல்றதும் உண்மை தான் தீப்ஷீ . ஆனா, அன்னைக்கு அந்த பெண் ஸ்டேஷன் வந்தப்பவே இவன் உஷாரா தப்பித்திருக்கலாம். ” என்றான் ஶ்ரீதர் .
” அவன் என்ன அவளின் ஃபோனை மட்டுமா பார்த்துட்டிருக்கான் . பணத்தின் மேல் உள்ள ஆசையால் ஒரு நாளைக்கு பத்திலிருந்து இருபது பேரின் ஃபோனில் என்ன கிடைக்கிறது என்று நாய் போல் பார்த்துட்டிருக்கான் . அதுவும் இல்லாம இவர்களின் அலட்சியம் நம் வேலைய சுலபமாக்கிடுச்சி.” என்றாள் தீப்ஷீ .
” சரி வா போலாம். ” என்ற ஶ்ரீதர் தீப்ஷீயை அழைத்துக் கொண்டு சென்றான் .
அவளின் வீட்டிற்கு வெளியே நின்றனர் இருவரும் .
” ஶ்ரீதர் இங்கே நைட் தங்கிக்கோ. ”
” இல்ல தீப்ஷீ , என்னோட வீட்டிற்கு போனால் தான் காலைல எழுந்து ஸ்டேஷன் போக சரியா இருக்கும் . இவனுங்கள என்ன செய்ய போற?”
” நாளைக்கு செம்ம ஷோ இருக்கு . ஜஸ்ட் வெயிட் அண்ட் வாட்ச். ” என்றாள் தீப்ஷீ .
சிரித்துக் கொண்டே சென்றான் ஶ்ரீதர் .
உள்ளே வந்த தீப்ஷீ அங்கு சோஃபாவில் உட்கார்ந்திருந்த தேவ்வை கோபமாக பார்த்தாள் .
” உனக்கு உன் வேலை முக்கியம் என்றால், எனக்கு நீ முக்கியம் அதான் இங்கு உட்கார்ந்திருக்கிறேன் . என்னமோ உன் பின்னால் வந்தது போல் முறைக்குற? ” என்றுக் கேட்டான் தேவ் .
” நீங்க சர்வேஷ் வண்டியில் எங்கள பின் தொடர்ந்தது எனக்கு தெரியாதுனு நினைச்சீங்களா . நான் ஒரு ஐ.பி.எஸ் என்பதை மறந்துடாதீங்க. ” என்றாள் தீப்ஷீ.
சாக்லேட்டை திருடி தின்று மாட்டிக் கொண்ட குழந்தை போல் திரு திருவென முழித்தான் தேவ் .
” இது தான் உங்களுக்கு நான் தரும் கடைசி வாய்ப்பு. இனி இது மாதிரி செய்தீங்க, நான் பத்ரகாளியாக மாறிடுவேன். ” என்ற தீப்ஷீ ரூம் உள்ளே செல்ல.
” இப்போ மட்டும் என்ன தேவதை போலவா இருக்க… பத்ரகாளியா தான் இருக்க. ” என்ற தேவ் ரூமிற்கு சென்றான்.

