Loading

அத்தியாயம் 30

 

சில மாதங்களுக்கு பின் ,

 

காரை ஓரமாக நிறுத்திய சத்யா , கீழே இறங்கினான் .

 

” சந்தியா , காலைலே எங்க போற? ”  என்று நடந்துச் சென்றுக் கொண்டிருந்த சந்தியாவிடம் கேட்டான் சத்யா .

 

திடீரென்று கேட்ட சத்தத்தில் பயந்தவள் . பின் சத்யா தான் என்பதை உணர்ந்து பெரும் மூச்சை விட்டு அவனிடம் திரும்பி , ” கோவிலுக்கு போய்ட்டு வரேன்  சத்யா. ” என்றாள் சந்தியா .

 

” என்ன காரணம் திடீர்னு கோவிலுக்குப் போற ? ” என்றுக் கேட்டான் சத்யா .

 

” காரணமில்லாம கோவிலுக்கு போகக்கூடாதா ? ”

 

” நீங்க போக மாட்டீங்களே , அதான் கேட்டான். ” என்றான் சத்யா .

 

” இன்னைக்கு எனக்கு பிறந்த நாள் சத்யா. ”

 

” இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சந்தியா. ”

 

“கூடிய சீக்கிரம் நாம கல்யாணம் பண்ணிக்க போறோம் ‌. ஆனா, இன்னும் என் பிறந்தநாள் கூட உங்களுக்கு தெரியலை. ”

 

” இனிமே எப்பவும் நான் தான் உனக்கு ஃபர்ஸ்ட் விஷ் பண்ணுவேன் சரியா. “என்றான் சத்யா .

 

” ஓகே சத்யா .”

 

” சரி வா , நான் உன்ன வீட்டில விடுறேன்‌. ”

 

” இது யார் கார் சத்யா? ”

 

” நம்மது  தான் சந்தியா .”

 

” இது கூட எனக்கு தெரியலை . எப்படியும் தீப்ஷீ தானே காரை தேர்ந்தெடுத்திருப்பா? ”  என்றாள் சந்தியா சாதாரணமாக .

 

சத்யாவிற்கு கோபம் வர , ” இங்க பார் நீ இப்படி தான் பேசுவன இப்பவே சொல்லிவிடு. நான் உன்ன கல்யாணம் பண்ணும் எண்ணத்தை இப்பவே என் மனசுலருந்து அழிச்சிடுறேன் . இந்த தொல்லைக்கு தான் கல்யாணம் வேண்டாம்னு  ஒதுங்கி இருந்தேன். ” என்றான்.

 

” சத்யா , சாரி இனிமே இப்படி பேசமாட்டேன். ”

 

” என்  வாழ்வில் அம்முவிற்கான இடம் என்னிக்குமே மாறாது . நான் அவள் மேல் கொண்ட அன்பும், என் உயிர் உள்ளவரை மாறாது . நாளைக்கே நமக்கு கல்யாணம் ஆனாலும் அவளுக்கு தான் முதல் உரிமை தருவேன் . இதை எல்லாம் உன்னால ஏத்துக்க முடியுமா என்று யோசிச்சு உன் முடிவை சொல். ”  என்றான் சத்யா  .

 

” எனக்கு தெரியும் சத்யா . எல்லாம் தெரிஞ்சு தான் நான் சம்மதம் சொன்னேன்.  ”

 

” பொறாமை கொண்டு அவளோடு போட்டி போடும் எண்ணமிருந்தால் இப்போதே விலகி போயிடு . இல்லண்ணா எதிர்காலத்துல யாருக்கும் நிம்மதி இல்லாத நிலை உருவாகும். ”

 

” இல்ல நான் ஏதோ விளையாட்டா கேட்டேன் , அதை நீங்க பெருசு பண்ணுறீங்க . தீப்ஷீ என் தோழி . நான் அவளை போட்டியா எல்லாம் நினைக்கமாட்டேன். ”  என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வர  .

 

கோபத்தை அடக்கிய சத்யா , அவளின் கண்ணீரை துடைத்தவன் , ” நாளைக்கே நமக்கு ஒரு மகள் பிறந்தால் , அவளுக்கு நான் முன்னுரிமை தந்தா உனக்கு கோபம் வருமா? ”

 

” வராது. ”

 

” தீப்ஷீயும் நம் மகள் தான் என்பதை உனக்கு இப்பவே தெளிவுப்படுத்துறேன் . கோபமா பேசிட்டேன் என்ன மன்னிச்சிடு.” என்றான் சத்யா .

 

” நீங்க கோபப்பட்டதுக்குக்கூட எனக்கு கஷ்டமா இல்ல .  ஆனா , ஒரு வார்த்தை சொன்னதுக்காக, என்ன வேண்டாத குப்பையா  தூக்கிப் போட்டீங்களேனு தான் கஷ்டமா இருக்கு .

 

தீப்ஷீ சொன்னதால் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்கீங்கனு புரியுது . என் காதல் உங்களுக்கு ஒரு நாள் புரியும் அது வரைக்கும் நான் காத்திருப்பேன் .

 

என்மேல் உங்களுக்கு காதல் வந்த பின் தான் நமக்கு கல்யாணம் இதில் மாற்றமில்லை . ஒருவேளை உங்களுக்கு காதல் வரலைன்னா நான் உங்கள கட்டாயப் படுத்த மாட்டேன். அதே சமயம் நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். நேரமாகுது வீட்டுல விடுறீங்களா ? ” என்றுக் கேட்டாள் சந்தியா .

 

அவளின் காதலையும், சுயமரியாதையும் ஒரே நேரத்தில் உணர்த்தியவளுக்கு பதில் சொல்ல முடியாமல் உட்கார்ந்திருந்தான் சத்யா . பின் அமைதியாக காரை ஓட்டினான் .

 

இருவரும் பேசாமல் அமைதியாக வந்தனர் . சந்தியா வீட்டின் முன் காரை நிறுத்திய சத்யா , ” நீ சொன்னது உண்மை தான் சந்தியா இல்லைன்னு நான் சொல்ல மாட்டேன். ஆனா , எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் . காதல் என்ற உணர்வே என் மனசுல இல்ல காரணம் என் பெற்றோர் .

 

கண்டிப்பா ஒரு நாள் எனக்கு உன்மேல் காதல் வரும் . ஆனா, கொஞ்சம் லேட்டாகும் . அதான் நீ காத்திருக்கிறேன் என்று சொல்லிட்டியே . ஐ எம் ஹாப்பி சோ நோ அழுகை . சிரிப்போடு எனக்கு இப்போ பாய் சொல்லு.  ” என்றான் சத்யா .

 

அவன் கூறியவிதமே அவள் முகத்தில் சிரிப்பை வர வைக்க , அழகாக சிரித்த சந்தியா, ” பாய் சத்யா. ” என்று அவனுக்கு கை அசைக்க .

 

” பாய் சந்தியா. ” என்றவன் ஆபீஸை நோக்கி சென்றான் .

 

*****

 

ஐடி கார்டை ஸ்வைப் செய்து ஆபீஸ் உள்ளே போனான் சத்யா . வேலை அதிகமாக இருப்பதால் தான் இன்று சீக்கிரம் ஆஃபீஸ் போக நினைத்தான் எதிர்பாராமல் சந்தியாவை பார்த்ததால் , எப்போதும் போகும் நேரத்திற்கு தான் சத்யாவால் போக முடிந்தது .

 

நேற்று உடம்பு சரியில்லாததால் சத்யா ஆஃபீஸ் போகவில்லை . உள்ளே வந்தவன் அவனின் டீம்மேட்ஸை பார்த்தான்  . சத்யா இப்போ டீம் லீடராக இருப்பதால் அவன் இல்லாத போது அவனின் டீம்மேட்ஸ் என்ன வொர்க் செய்தார்கள் என்று கேட்க போனான் .

 

” நேத்து என்ன வொர்க் செஞ்சீங்க. ”  என்றுக் கேட்டான் சத்யா .

 

” சத்யா …. அது.” என்று அவனின் டீம்மேட்ஸ் குமார் எதுவோ சொல்லமுடியாமல் இழுத்தான் .

 

” கமான் சொல்லு குமார். ” என்றான் சத்யா .

 

” நேத்து நாங்க செஞ்ச வேலை எல்லாம் டெலிட் ஆகிடிச்சு . நாங்களும் அட்மின் கிட்ட கேட்டோம் . என்ன பிரச்சனைனு ? அவங்க ஒழுங்க பதில் சொல்ல மாட்டேங்குறாங்க . டேட்டா ரெக்கவர் செய்ய ட்ரைபண்ணுறோம்னு மட்டும் தான் சொல்றாங்க . ஆனா, இன்னும் எங்களுக்கு எதுவும் வரலை. ” என்றான் குமார் .

 

” வாட் , நம்ம இந்த ப்ராஜெக்ட் முடிக்கிற ஸ்டேஜ் வந்துட்டோம். இப்போ எப்படி டெலிட் ஆனது? ” என்றுக் கேட்டான் சத்யா .

 

” தெரியலை. ” என்றான் குமார் .

 

” இன்னைக்கு ஒரு நாள் வெயிட் பண்ணுவோம் . அட்மின் ரெக்கவர் பண்ணலைணா  மேனேஜர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணலாம் . நானும் ரெக்கவர் செய்ய முடியுமானு பார்க்கிறேன் . நீங்க எல்லாரும் ரிமைனிங் வொர்க் செய்யுங்க. ” என்றவன் தன் இடத்திற்கு சென்று சிஸ்டத்தை ஆன் செய்தான் .

 

சத்யாவிற்கு ஹேக்கிங் தெரியும் என்பது தீப்ஷீயை தவிர வேற யாருக்கும் தெரியாது . அவன் பொதுவாக ஹேக்கிங் தெரியும் என்பதை யாரிடமும் சொல்லமாட்டான் . ரெஸ்யூமில் கூட சத்யா , ஹேக்கிங் தெரியும் என்று குறிப்பிட்டிருக்க மாட்டான் .

 

பத்து நிமிடத்திலேயே அவனின் சிஸ்டத்தின் மூலம் அட்மின் மற்றும் எம்.டி சிஸ்டத்திற்குள் நுழைந்துவிட்டான் சத்யா .

 

அவனின் ப்ராஜெக்ட்டை மறுபடியும் அவனின் சிஸ்டத்தில் ஏற்றிக் கொண்டான்.

 

‘ ஏன் அட்மின் ப்ராஜெக்ட்டை அனுப்பலை . கஷ்டப்பட்டு ரெக்கவர் செய்ற மாதிரி இல்லையே . எதற்கும் இரண்டு பேரோட சிஸ்டத்தை முழுசா செக் பண்ணிடலாம். ‘ என்று மனதிற்குள் பேசிக் கொண்டவன் முதலில் அட்மின் சிஸ்டத்தில் தேடியவன் , எல்லாம் சரியாக இருக்க அதை மூடிவிட்டு. எம் . டி சிஸ்டத்தில் தேடினான்.

 

அவனுக்கு கிடைத்த தகவலை பார்த்துக் கொண்டிருந்த சத்யாவின் முகத்தில் ஏசி காற்றையும் மீறி வியர்வை சுரந்தது .

 

‘ வெளியே தெரியாமல் இவர்கள் இவ்வளவு வேலை செய்றாங்களா ? இவங்கள எப்படியாவது ஜெயிலுக்கு அனுப்பணும். ‘ என்று நினைத்தவன் கர்சிஃப் மூலம் அவனின் வியர்வையை துடைத்தான் .

 

‘ இந்த தகவல் போதாதே , இவங்கள பத்தி கம்ப்ளைன்ட் பண்ண. ‘  என்று யோசித்தான் .

 

‘ முதலில் கிடைத்த தகவலை உன் பர்சனல் அக்கௌன்டில் ஏற்றிக் கொள் சத்யா. ‘ என்று சரியான யோசனை தந்தது அவனின் மனசாட்சி.

 

அனைத்து தகவலையும் அக்கௌன்டில் ஏற்றிக்கொண்டவன் முதலில் எம்.டி சிஸ்டத்தில் இருந்து வெளியே வந்தான் .

 

புதியதாக கிடைத்த தகவலை பற்றி யோசித்த சத்யா . ஏன் அவனின் ப்ராஜெக்டை டெலிட்டானது போல் மறைத்து வைத்தார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள முயற்சி செய்திருந்தால், பின் நாளில் வர போகும் இன்னல்களில் இருந்து அவன் தப்பி இருப்பான் .

 

பதட்டத்தை குறைக்க கேன்டீன் சென்றான் சத்யா .

டீ வாங்கியவன் அங்கிருந்த சேரில் அமர்ந்தான் . இனி என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தான் .

 

‘ முதலில் அமைதியாக இருக்கணும் சத்யா . எனக்கு தெரிந்ததை யாரிடமும் தெரிந்ததுப் போல் காண்பித்துக்கொள்ள கூடாது . முழுமையான தகவலை முதலில் நான் கண்டுபிடிக்கணும்.

 

இதனால் பாதிக்க பட்டவர்களின் தகவல் கிடைத்தால் முதல்ல அவங்களை போய் சந்திக்கணும் . எனக்கு இவங்க சட்டவிரோதமாக செய்யும் வேலை தெரியும் என்பது இவர்களுக்கு கடைசிவரை தெரியாமல் பார்த்துக்கொள்ளணும்.

 

ச்ச! டீசன்டான கம்பெனி போல் ஊர் உலகத்தை ஏமாற்றிக் கொண்டு உள்ளே யாருக்கும் தெரியாமல் இப்படி ஒரு கேவலமான வேலை செய்துக் கொண்டிருக்காங்க .

 

இப்படி பட்ட வேலை செய்து இவங்க சம்பாதித்த பணத்தில் நான் இதுவரை உயிர் வாழ்ந்தேனு நினைச்சாலே எனக்கு பற்றிக்கொண்டு வருது.

 

இதைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது . அம்மு கிட்ட கூட சொல்ல வேண்டாம் .’ என்று நினைத்தவன் உள்ளே போனான் .

 

குமார் அருகே சென்ற சத்யா , ” குமார் ரிமைனிங் வொர்க் எல்லாரும் முடிக்க முடிக்க எனக்கு அனுப்ப சொல்லுங்க . இன்னும் இரண்டு நாளுல நாம ப்ராஜெக்டை சப்மிட் பண்ணனும். ” என்றான் .

 

” சத்யா நம்ம ப்ராஜெக்ட் எல்லாம் இன்னும் ரெக்கவர் ஆகலையே?” என்றான் குமார் .

 

” ஜஸ்ட் டு வாட் ஐ சே .”என்றான் சத்யா .

 

” ஓகே சத்யா ரிமைனிங் ப்ராஜெக்ட் வொர்க் , நாங்க முடிக்க முடிக்க உங்களுக்கு அனுப்பிடுறோம்.” என்றான் குமார் .

 

தன் இடத்திற்கு சென்று சத்யா ப்ராஜெக்ட் வொர்க் செய்துக் கொண்டே எம்.டி அறையை கண்காணித்துக் கொண்டிருந்தான் . அப்படியே ரெக்ரூட்மெண்ட் டீமில் உள்ளவர்கள் பற்றிய தகவலை தேடிக் கொண்டிருந்தான் சத்யா.

 

அட்மின் , எம்.டி அறைக்குள் நுழைந்தான்.  அதை குறித்துக் கொண்டான் சத்யா . ஆனால், அவனுக்கு இப்போது சந்தேகம் வரவில்லை ஏனென்றால் அட்மினை அவனுக்கு நன்றாக தெரியும் ரொம்ப நல்ல மனிதன். அதுவுமில்லாமல் அட்மின் , எம்.டியை ஒரு நாளைக்கு பத்து முறையாவது பார்ப்பதுப் போல் தான் அவர்கள் ஆஃபீஸ் வேலையும் இருக்கும் என்பதால் சாதாரணமாக எடுத்துக்கொண்டான் சத்யா .

 

” எக்ஸ்க்யூஸ் மீ சார் .” என்றான் அட்மின் .

 

” எஸ் கம் இன் .” என்றார் எம்.டி பரந்தாமன்.

 

” சார் நீங்க சொன்னது போல் தான் செஞ்சிருக்கேன். ”

 

” சத்யா வந்து உன் கிட்ட எதுவும் கேட்டானா ? ”

 

” இல்ல சார். ”

 

” ப்ராஜெக்ட் ரெக்கவர் பண்ண முடியலைனு சத்யா டீமிடம் சொல்லிடுங்க .

 

சத்யா டீம்மேட்ஸ் தான் தப்பு செஞ்சது போல் சத்யா கிட்ட சொல்லிடுங்க .

 

இரண்டு நாள் கழிச்சி அவன் என் கிட்ட வந்து ப்ராஜெக்ட் சொன்ன தேதிக்கு என்னால முடிக்க முடியலைனு சொல்லுவான் .

 

அவனே வேலைய ரிசைன் பண்ணுவான் இல்லைன்னா நானே அவனை வேலையைவிட்டு தூக்கிடுவேன். ” என்றார் பரந்தாமன்.

 

” சத்யா திறமைசாலி பின் ஏன் அவனை வேலைய விட்டு அனுப்ப நினைக்கிறீங்க? ”  என்றுக் கேட்டான் அட்மின் .

 

” அதிக அறிவு ஆபத்து அதான் . இனி நீ உன் வேலைய மட்டும் பார்க்கலாம். ” என்றார் பரந்தாமன் .

 

இது உனக்கு தேவையில்லாத விஷயம் என்று அவர் சொல்லாமல் சொல்வது புரிய .

 

” தேங்க்யூ சார். ” என்ற அட்மின் வெளியே சென்றுவிட்டான் .

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்