Loading

அத்தியாயம் 28

 

 

” சத்யா , உன்னோட வண்டி வந்துட்டு இருக்கு‌.  சோ எங்கள பிக்கப் பண்ண என்னோட கார் எடுத்துட்டு வர வேண்டியது தான . இதெல்லாம் நான் உனக்கு சொல்லணுமா ? ” என்று கோபமாக கேட்டான் தேவ் .

 

” எதுக்கு நைட் டைம் அங்கு போய் சாவி கேட்டு தொந்தரவு பண்ணணும்னு தான் கேப் புக் பண்ணேன். ” என்றான் சத்யா .

 

” … ”

 

தேவ் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக வந்தான் .

 

” அம்மு எப்படி இருந்தது ட்ரிப் ? ” என்றுக் கேட்டான் சத்யா .

 

” சத்யா , எல்லாமே சூப்பரா இருந்தது. ” என்று தொடங்கியவள் கோக்கர்ஸ் வாக்கில் ஆரம்பித்து கடைசியாக பார்த்த குறிஞ்சி முருகன் கோயிலில் முடித்தாள் .

 

ஒவ்வொரு இடத்தின் அழகை அழகாக கை அசைத்து , வாய் மட்டுமில்லாது தீப்ஷீயின் கண்களும் கதை சொல்ல .

 

ஆர்வமாக கேட்டான் சத்யா . குழந்தை போல் கதை சொல்லும் மனைவியை கண் சிமிட்டாமல் ரசித்தான் தேவ் .

 

‘ அம்முவின் கோபம் குறைந்ததாகவே தெரிகிறது . அம்மா , அப்பாவிடம் நாளை பேசிவிடுவாள் . இந்த பயணம் அவளின் வேதனையை குறைத்திருக்கு . இனி இவள் தேவ்வை ஏத்துக்க முயற்சி செய்வாள். ‘ என்று நினைத்த சத்யா , நிம்மதி அடைந்தான்.

 

இருந்த அசதியில் போனதும் தூங்கி விட்டாள் தீப்ஷீ . குளித்துவிட்டு வந்த தேவ் , அவளுக்காக பை நிறைய வாங்கிய பொருளை பீரோ மேல் வைத்துவிட்டான் .

 

இப்போது அவளுக்கு தரும் எண்ணம் அவனுக்கு இல்லை . அதை மகிழ்ச்சியாக பெற்றுக்கொள்ளும் மனமும் இப்போது அவளிடத்தில் இல்லை .

 

தீப்ஷீ அருகே படுத்த தேவ் தூங்கும் தீப்ஷீயிடம் , ” எல்லோருக்கும் கிப்ட் வாங்கினியே ஏன் உன்ன திட்டிக்கிட்டே இருக்கும் என் நானிக்கு கூட வாங்கினாயே , உனக்காக வாழும் எனக்கு ஒரு கர்சீப் கூட வாங்கலை ? நீ செய்வதற்கெல்லாம் நான் ஒரு நாள் உனக்கு தண்டனை தருவேன் . அதை நீ எப்படி தாங்குவாய் என்று தான் எனக்கு தெரியலை. ” என்றான் .

 

தேவ்வின் சத்தத்தில் தீப்ஷீ திரும்பி படுக்க , வேகமாக வாயை மூடிய தேவ் அமைதியாக தூங்கினான் .

 

காலையில் விரைவாக எழுந்து , குளித்து தயாரான தீப்ஷீ , ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள் .

 

வீட்டிற்காக வாங்கி வந்த பழம் , சாக்லேட் , ஸ்நாக்ஸை எடுத்து அக்ஷிதாவிடம் தந்தாள் .

 

” அக்ஷிமா , இந்த புடவை நல்லாயிருக்கா?”  என்றுக் கேட்டு அவரிடம் தந்தாள் தீப்ஷீ .

 

” ரொம்ப அழகாக இருக்கு டா. ”  என்ற அக்ஷிதா மகிழ்ச்சியாக அவள் தந்ததை வாங்கி கொண்டார் .

 

” அமர் அப்பா , இது உங்களுக்கு.” என்றாள் தீப்ஷீ .

 

” நானே இந்த கலரில் ஷேர்ட் வாங்கணும்னு இருந்தேன் . நீயே வாங்கிட்டு வந்துட்டியே சூப்பர். ” என்றார் அமர் .

 

நானி அருகில் சென்ற தீப்ஷீ , அவருக்கு வாங்கி வந்த புடவையை நீட்டினாள் .

 

” நல்லா இருக்கா நானி ? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

 

” என் பேரன் பணத்தில் வாங்கியது தான. நல்லா தான் இருக்கும் .” என்றார் இந்திராணி .

 

” என்னோட பணத்தில் வாங்கியது நானி. இது என் அன்பின் அடையாளமாக வாங்கியது , பணத்தால் எடை போடாதீங்க. ” என்ற தீப்ஷீக்கு கோபத்தில் கண்கள் கலங்கியது .

 

” அக்ஷிமா , நான் வீட்டிக்கு போய் அம்மா , அப்பாவுக்கு வாங்கியதை கொடுத்துட்டு வரேன். ” என்ற தீப்ஷீ கோபமாக பையை எடுத்துக்கொண்டு சென்றாள் .

 

ரூம் கதவில் சாய்ந்துக் கொண்டு இவ்வளவு நேரம் ஆசையாக அனைவருக்கும் தீப்ஷீ தந்ததை பார்த்துக்கொண்டிருந்த தேவ்விற்கு நானியின் பேச்சு கோபத்தை வரவழைத்தது . இந்திராணி பேசியது அங்கிருந்த அமர், அக்ஷிதாவிற்கும் பிடிக்கவில்லை தான், இருந்தும் எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருந்தனர் .

 

இந்திராணி அருகே வந்த தேவ் , ” நானி இப்படியெல்லாம் தீப்ஷீ கிட்ட பேசாதீங்க . என்னோட பணம் எல்லாம் இனி அவளுடையது தான் . அவளை இன்னொரு முறை கஷ்டப்படுவது போல் பேசினால் , நான் இந்த வீட்டை விட்டு போய்விடுவேன். ” என்றான் தேவ் .

 

” இப்படியெல்லாம் பேசக்கூடாது தேவ் .” என்றார் அமர் .

 

” அப்பா , நீங்க வேணுனா உங்க மனைவி தேவையில்லாம உங்க அம்மா கிட்ட கஷ்டப்படுவதை அமைதியா பார்த்திட்டு இருப்பீங்க . நான் அப்படி இருக்க மாட்டேன் . அவள் தப்பு செய்தால் திட்டுவதில் தப்பில்லை , தேவையில்லாம அவளை அழ வெச்சா நான் அமைதியா வேடிக்கை பார்ப்பேனு  நினைக்காதீங்க.” என்ற தேவ் தன் அறைக்கு சென்றுவிட்டான் .

 

இந்திராணி முகம் சோகத்தில் இருக்க அமைதியாக தன் அறைக்கு செல்ல எழுந்தார் .

 

” அம்மா , அவன் ஏதோ தெரியாம பேசிட்டான் . நீங்க வருத்தப்படாதீங்க. ” என்றார் அமர் .

 

” அவன் பேசுவதில் தப்பில்லை . நான் இப்படி தான் எப்போதும் பேசுவேன் . இனி என்னை நான் தான் மாத்திக்கணும். ”  என்றவர் உள்ளே சென்றுவிட்டார்  .

 

” கவலைப்படாதீங்க எல்லா சரியாகிடும். ” என்றார் அக்ஷிதா.

 

தலையை ஆட்டிய அமர் ரூமிற்கு செல்ல , சமையலறை சென்றார் அக்ஷிதா .

 

****

 

“அம்மா… ”  என்றுக் கத்திக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் தீப்ஷீ .

 

” பாருடா , எங்களை இன்னும் ஞாபகம் வெச்சிருக்க? ”  என்று ஆச்சரியமாக கேட்டார் சரண்யா .

 

” அம்மா !” என்று பல்லைக் கடித்தாள் தீப்ஷீ .

 

” சும்மா டா , எப்படி இருந்தது கொடைக்கானல் ட்ரிப் . எனக்கு என்ன வாங்கிட்டு வந்த? ” என்றுக் கேட்டார் சரண்யா .

 

” அங்க செம்ம கிளைமேட் மா . உங்களுக்கு புடவை வாங்கி இருக்கேன் . அப்பா எங்க?” என்றாள் .

 

” ரூம்ல இருக்கார். ” என்றார் .

 

உள்ளே சென்றவள் , ” அப்பா , நல்லா இருக்கீங்களா? ” என்றுக் கேட்டாள் .

 

” நான் நல்லா இருக்கேன்,  நீ எப்படி இருக்க ? ” என்றார் தினேஷ் .

 

” நல்லா இருக்கேன் . அப்பா , இது உங்களுக்கு .”

 

” தேங்க்ஸ் டா .” என்றவர் அவள் தந்ததை வாங்கிக் கொண்டார் .

 

” டேய் அண்ணா . ” என்றாள் தீப்ஷீ .

 

” சத்தமெல்லாம் அதிகமா இருக்கு ?” என்றான் சர்வேஷ் .

 

” இந்தா , இதை கொடுக்க தான் வந்தேன். ” என்றாள் தீப்ஷீ .

 

” எங்க வீட்டு இளவரசிக்கு கோபம் குறைந்ததோ? ” என்று நாடக பாணியில் சர்வேஷ் கேட்டான் .

 

” என் வேதனை உனக்கு விளையாட்டா இருக்கு . நாளைக்கு உனக்கும் விருப்பமில்லாம கல்யாணம் நடந்தா என்னோட வருத்தம் உனக்கு புரியும். ”  என்றாள் தீப்ஷீ .

 

” சூழ்நிலையால் நடந்த கல்யாணத்துல நீ எங்க கிட்ட கோபப்படுறது மட்டும் சரியா? ” என்றுக் கேட்டான் சர்வேஷ் .

 

” அதான் இப்போ பேசிட்டேனே. ”  என்றாள் தீப்ஷீ .

 

” சரி வாயாடி. ” என்றான் சர்வேஷ் .

 

” நேரமாகுது , நான் சத்யாவை பார்க்க போகணும் .” என்றவள் பையை எடுத்துக்கொண்டு ஓடினாள் .

 

” கமலாமா , இந்த கலர் சாரி உங்களுக்கு நல்லா இருக்கும். ” என்றவள் அவர் மேல் புடவையை வைத்து பார்த்தாள் .

 

” நல்லா இருக்கு டா , நீ எப்படி இருக்க? ” என்றுக் கேட்டார் கமலா .

 

” நல்லா இருக்கேன் கமலாமா .” என்றாள் தீப்ஷீ .

 

” உங்க வீடு இது இல்லையே , ஒரு வீடு தள்ளி இருக்கு .” என்றான் சத்யா .

 

” இந்த காம்பவுண்டில் இருக்கும் மூன்று வீடும் என்னோடது தான். ” என்றாள் தீப்ஷீ கெத்தாக .

 

” பெரிய ஆளு தான் நீங்க. ” என்றான் சத்யா .

 

” உனக்கு எதுவும் நான் வாங்கிட்டு வரலை. ” என்றாள் தீப்ஷீ .

 

” எனக்காக நீ தேடி தேடி வாங்கி இருப்ப. ” என்றான் சத்யா .

 

அது தான் உண்மையும் கூட . மரத்தால் செதுக்கிய  போட்டோ ஸ்டாண்டை எடுத்து தந்தாள் தீப்ஷீ .

 

அதை வாங்கிய சத்யா , திறந்து பார்க்க . சிறுவயது சத்யா மற்றும் தீப்ஷீ ஒருபுறம் இருக்க மறுபுறம் இப்போது எடுத்த இருவரின் போட்டோ இருந்தது .

 

” ரொம்ப சூப்பரா இருக்கு அம்மு , மரத்தில் அழகாக நம் உருவத்தை செதுக்கி இருக்காங்க. ”  என்றான் சத்யா .

 

” ஆமா சத்யா. ”  என்றாள் தீப்ஷீ.

 

” சரி அம்மு , ஆபீஸ் போகணும் நேரமாகுது. ” என்றான் சத்யா .

 

*****

 

நாட்கள் வேகமாக ஓட , ரிசப்ஷனுக்கான ஷாப்பிங் என்று பிசியாக இருந்தனர் தேவ்வும், தீப்ஷீயும் .

 

தீப்ஷீ , ஐ.பி.எஸ் எக்ஸாம் எழுத வேண்டிய நாளும் வந்தது .

 

” கணேசா , நான் எப்படியாவது ஃபர்ஸ்ட் அட்டம்ட்லே பாஸாகணும். ” என்று வேண்டிய தீப்ஷீ பிள்ளையார் பாதத்திலிருந்த ஹால் டிக்கெட்டை எடுத்தாள் .

 

பின்பு வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல சென்றாள் . தேவ்வோ அவளை ட்ராப் செய்வதற்காக கார் சாவியை கை விரலில் சுத்திக் கொண்டே வெளியே வந்தான் .

 

ஆனால் அங்கு சத்யா காரில் சாய்ந்த படி தீப்ஷீக்காக நின்றுக் கொண்டிருந்தான் .

 

ஏமாற்றம் தேவ்வின் முகத்தில் . அவன் வெளியே வந்த போதே சத்யா புரிந்துக் கொண்டான் ,

‘ இவன் தீப்ஷீயை ட்ராப் செய்ய தான் சந்தோஷமாக வந்திருக்கான் . ஆனா தீப்ஷீ , என்ன வர சொன்னது இவனுக்கு தெரியாது போல. ‘  என்று நினைத்தான் சத்யா .

 

தேவ் சத்யா அருகே வர , ” எனக்கு வேலை இருக்குனு நான் போகிறேன் தேவ் . நீயே அவளை எக்ஸாம் சென்டருக்கு கூட்டிட்டு போறீயா ? ” என்றுக் கேட்டான் சத்யா .

 

” எக்ஸாம் எழுத போகும்போது எதுக்கு அவள கஷ்டப்படுத்தணும் . நீயே அவளை ட்ராப் பண்ணிடு சத்யா. எனக்கு அகாடமில வேலை இருக்கு பாய். ”  என்ற தேவ் , சத்யாவை கடந்து சென்றான் .

 

” தேவ் , ஒன் மினிட். ” என்றான் சத்யா .

 

தேவ் திரும்பி சத்யாவை பார்த்தான் .

 

” இந்த கஷ்டமெல்லாம் அவ உன் காதலை புரிஞ்சிக்குற வரை தான் . அவ உன் காதலை உணர்ந்து உன்ன காதலிக்க ஆரம்பிச்சானா  இந்த உலகத்துல உன்ன விட யாரும் லக்கியா இருக்க மாட்டாங்க. ” என்றான் சத்யா .

 

” ஐ எம் வெயிட்டிங் .” என்று விஜய் ஸ்டைலில் சொல்லிய தேவ் கார் எடுக்க சென்றுவிட்டான் .

 

தீப்ஷீ சிரித்துக் கொண்டே வந்து சத்யா காரில் ஏறினாள் .

 

‘ ஆல் த பெஸ்ட் . உனக்கு எப்பவும் வெற்றி மட்டும் தான் கிடைக்கும்.’  என்று மனதில் அவளிடம் பேசினான் தேவ் .

 

தீப்ஷீயும் சரியாக அந்த நேரத்தில் தேவ்வை பார்க்க . முதல் முறையாக அவனிடம் சொல்லாமல் வந்தது அவளுக்கு உறுத்தலாக இருந்தது . அவனையே பார்த்துக்கொண்டிருக்க தேவ்வின் கார் வெளியே சென்றது .

 

” அம்மு , நல்லா ப்ரிப்பேர் பண்ணிட்டியா? ”

 

” எக்ஸாமிற்கு ரெடியா இருக்கேன் சத்யா .”

 

எக்ஸாம் சென்டர் வெளியே காரை  நிறுத்தினான் சத்யா . அவளோடு சத்யாவும் கீழே இறங்கி நின்றான் .

 

” சத்யா , நான் பார்த்துக்கிறேன் . நீ போ , உனக்கும் ஆஃபீஸ்க்கு நேரமாகுது .” என்றாள் தீப்ஷீ .

 

ரிஸ்ட் வாட்ச்சை திருப்பி நேரம் பார்த்த சத்யா , ” அம்மு , ஆல் த பெஸ்ட் , பயப்படாமல் நிதானமா எழுது . யூ கேன் டூ யிட் .”  என்றான் .

 

” ஓகே சத்யா , பாய். ”

 

சத்யா சென்றுவிட , தான் எழுத போகும் அறையை நோட்டீஸ் போர்டில் தேடி குறித்துக் கொண்டாள் .

 

இன்னும் நேரம் இருந்ததால் போனை எடுத்த தீப்ஷீ , ” ஹலோ கவி , எங்கடி இருக்க இன்னும் வராம ? ”  என்றுக் கேட்டாள் .

 

” நான் வரமாட்டேன் தீப்ஷீ . என்னோட ஹஸ்பன்ட் போக வேண்டாம்னு சொல்லிட்டார்.” என்றாள் கவி .

 

” ஏன் டி? ”

 

” காரணம் எல்லாம் கேட்காதே தீப்ஷீ பட் யூ ஆர் ரியலி லக்கி , உன்னோட ஹஸ்பண்ட் உன்ன எக்ஸாம் எழுத சம்மதிச்சிருக்காங்க .” என்றாள் கவி .

 

” … ”

 

‘ நான் அவனிடம் அனுமதி கேட்கவே இல்லையே. ‘  என்று நினைத்தாள் .

 

” சரி டி நீ நல்லா எக்ஸாம் எழுது பாய். ” என்றாள் கவி .

 

” பாய் கவி .” என்றாள் தீப்ஷீ  .

 

தேவ்வின் கடைசி பார்வையே நினைவிற்கு வர தீப்ஷீ , தேவ்விற்கு ஃபோன் செய்தாள் .

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்