
அத்தியாயம் 17
” சத்யா , வந்துட்டியா . கொஞ்சம் தீப்ஷீயை பாரு பா , முகமே சரியில்லை . மாப்பிள்ளை வீட்ல இருந்து வர்ற நேரம் , இவள் இப்படி இருந்தா, அவங்க தப்பா நினைக்க மாட்டாங்களா ? ” என்றார் சரண்யா .
” சரண்யாமா , மாப்பிள்ளைனு நீங்களே முடிவு செய்யாதீங்க. இன்னும் அம்மு சம்மதம் சொல்லலை . ” என்றான் சத்யா .
” தங்கமான பையன் அவளுக்கு எப்படி பிடிக்காம போகும் . நீ போய் அவ கிட்ட பேசி சரி செய்வ என்று நினைத்தால் இங்கு நீயே சோகமா நிக்குற . ” என்றார் சரண்யா .
” அப்படியெல்லாம் இல்ல சரண்யாமா . நான் அம்முவை சரி செய்றேன் . அம்மு என்னிக்குமே உங்களையோ, அப்பாவையோ அவமானப் படுத்துற மாதிரி நடக்க மாட்டா . நீங்க கவலை படாம வேலையை பாருங்க . ” என்றான் சத்யா .
‘ ஆமாம்ல , என் மகள் சேட்டை செய்வாளே தவிர நல்ல பிள்ளை . ‘ என்று நினைத்த சரண்யா , சத்யாவின் ஆறுதலான வார்த்தையில் பதட்டம் இன்றி அமைதியாக , வேகமாக வேலையை செய்ய ஆரம்பித்தார்.
சத்யா , தீப்ஷீ அறைக்கு சென்றான்.
அங்கு தீப்ஷீ சோகமாக பெட்டில் உட்கார்ந்திருந்தாள் .
அவளை இயல்பாக்க சத்யா , ” எங்கடா ரூம்லையும் அம்முவை காணோம் . ” என்று சத்தமாக பேசிக் கொண்டே தேடிவது போல் பாவனை செய்தான் .
” என்ன சத்யா விளையாடுறியா ? ” என்றாள் தீப்ஷீ .
” குரல் மட்டும் நல்லா கேட்குது . ஆளை காணோம் . ” என்றான் சத்யா .
” சத்யா. ” என்று கத்தியவள் சத்யாவை அடிக்க வந்தாள் .
” சும்மா விளையாடினேன் அம்மு . முன்ன பின்ன நான் உன்ன புடவையில் பார்த்ததில்லை அதான் யாரோ என்று நினைச்சிட்டேன் .” என்று அவளின் அடியை வாங்கிக் கொண்டே சொன்னான் சத்யா .
அழகோவியமாக இருந்தாள் தீப்ஷீ . மயில் பச்சையும் , ஊதா கலரும் கலந்து வரும் டிசைனர் சாரி போட்டிருந்தாள் . அவள் எப்போதும் போடும் சிறிய தங்க தோடும் , தங்க செயின் மட்டுமே போட்டிருந்தாள் . எந்த ஒப்பனையுமின்றி சிறிய வட்ட கருப்பு பொட்டு வைத்து தேவதையாக இருந்தாள் தீப்ஷீ . என்ன சிரிப்பு தான் தீப்ஷீ முகத்தில் இல்லை . சிரிப்பும் இருந்தால் அவள் இன்று பேரழகி தான் .
சத்யாவின் கேலிக்கு எதுவும் சொல்லாமல் அமைதியாக சென்று பெட்டில் உட்கார்ந்தாள் தீப்ஷீ .
” என்ன அம்மு , நான் இருக்கும் போது நீ கவலைப்படலாமா ? நீ நாளைக்கு ஐ.பி.எஸ் ஆக போற… அப்போ நீ எவ்வளவு தைரியமா இருக்கணும் . உன்னால் வீட்டில் உன்னோட தேவைக்காக கூட தைரியமா போராட முடியலைனா நாளைக்கு நீ எப்படி தைரியமா மக்களை காப்பாத்துவ ? ”
கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்தாள் தீப்ஷீ .
” சத்யா , கண்டிப்பா அப்பா அம்மாவுக்காக நான் கல்யாணம் பண்ணிப்பேன் . என்ன பெண் பார்க்க வருபவனிடம் என் கனவை தைரியமா சொல்லி சம்மதமான்னு கேட்பேன் . ஒருவேளை ஒத்துக்கல்லைணா நான் சம்மதிக்க மாட்டேன் . அப்பா வேற ஆளை தான் தேடணும் .”
” தட்ஸ் மை கேர்ள் . அப்படியே லைட்டா சிரி . ” என்றான் சத்யா .
வேண்டுமென்றே தீப்ஷீ ” ஈ …. ” என்று எல்லா பல்லையும் சிரிப்பதுப் போல் காண்பித்தாள்.
” இப்படியே போய் வர போகிற பையன் முன்னாடி நின்னா போதும் , அவனே உன்ன வேண்டாம்னு கும்புடு போட்டுட்டு ஓடிடுவான் . ” என்றான் சத்யா .
” நல்ல ஐடியா சத்யா . ”
” ஹே அம்மு அப்படியெல்லாம் பண்ணி மானத்தை வாங்கிடாதே. ” என்று சத்யா சொல்லிக் கொண்டிருக்கும் போது உள்ளே வந்தான் சர்வேஷ் .
” என்ன இரண்டு பேரும் இன்னைக்கு கூட விளையாடிட்டு இருக்கீங்க ? மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்துட்டாங்க. அப்பா உங்க இரண்டு பேரையும் கூட்டிட்டு வர சொன்னார்.” என்றான் சர்வேஷ் .
இப்போ சர்வேஷ் , சத்யாவோடு பேசுவான் . வேலைக்கு சென்ற பின் தன் தவறை உணர்ந்து சத்யாவோடு பேச ஆரம்பித்தான் சர்வேஷ். (ஒருவேளை அவன் வேலை செய்யும் இடத்தில் ஏதாவது போதி மரம் இருக்குமோ. இருந்தாலும் இருக்கும். ) சத்யாவும் எந்த பந்தாவும் செய்யாமல் சர்வேஷ்ஷோடு பேசினான் .
” பெண் பார்க்க தான் வந்திருக்காங்க சர்வேஷ் . ” என்றான் சத்யா .
” ஏதோ ஒன்னு . இப்போ வாங்க வெளியே போகலாம் . ” என்ற சர்வேஷ் முன் செல்ல… சத்யாவும், தீப்ஷீயும் பின்னால் வந்தனர் .
” இவ தான் என்னோட பொண்ணு தீப்ஷீ.’ என்ற தினேஷ் , நண்பனின் குடும்பத்திற்கு தீப்ஷீயை அறிமுகம் செய்து வைத்தார் .
” இவன் தான் சத்யா , பக்கத்து வீட்டில் இருக்கும் பையன் என்று சொல்வதைவிட என்னோட இன்னொரு பையன் என்பதுதான் நிஜம் . ” என்றார் தினேஷ் .
” வா மா , வந்து உட்காரு . சாதாரண ஃபேமிலி கெட் டு கெதராக நினைச்சிக்க . ” என்றார் கவிதா .
தீப்ஷீயும் எந்த பதட்டமும் இல்லாமல் போய் உட்கார்ந்தாள் .
” இவன் தான் என் நண்பன் முரளி . இவங்க தான் முரளி மனைவி கவிதா , இவங்க பையன் தமிழன்பன் . ” என்றார் தினேஷ் .
” என்ன அங்கிள் , இப்போ தான் புதுசா சொல்லுற மாதிரி இருக்கு. ” என்று சரியாக யூகித்தான் தமிழன்பன் . தீப்ஷீ சத்யாவின் முக மாற்றத்தை வைத்து .
” ஆமா அன்பா , நேத்து நைட்டு தான் கல்யாணத்துக்கே சம்மதம் சொன்னா… அதான் எதுவும் சொல்லாமல் இந்த பெண் பார்க்க நிகழ்ச்சியை தொடங்கிட்டேன் . ” என்றார் தினேஷ் .
” அங்கிள் நீங்க செய்தது தப்பு . இது வாழ்க்கை சம்மந்தப்பட்டது . முதல என்னப் பத்தி சொல்லி, உங்க பெண்ணுக்கு பிடித்திருந்தால் மட்டுமே நீங்க இன்னைக்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சியை செய்திருக்கணும் .” என்றான் தமிழன்பன் .
” எனக்கு டைம் இல்ல அதான் சொல்லல அன்பா . ”
என்றார் தினேஷ் .
தமிழன்பன் ஏதோ சொல்ல வர அதற்குள் முரளி , ” நீ சும்மா இரு டா , இப்பவும் தீபுவுக்கு பிடித்தித்தால். தான் எதுவா இருந்தாலும் முடிவு செய்ய போறோம் . ” என்று தமிழன்பன் வாயை மூடினார் .
தமிழன்பன் தன்மனதில் நினைத்ததை நேராக பேசியதை பார்த்து , இருபத்தைந்து மார்க் போட்டாள் தீப்ஷீ . சத்யா ஐம்பது மார்க் போட்டான் .
” அங்கிள் சொல்லலை ணா என்ன ? நான் சொல்றேன் . என் பெயர் தமிழன்பன் , இந்தியன் வங்கி மயிலாப்பூர் பிரான்ச்சில் மேனேஜராக இருக்கேன் . கோபம் வரும் , எந்த கெட்ட பழக்கமுமில்லை . ” என்றான் தமிழன்பன் .
” இரண்டு மணி நேரம் நாங்க இங்க தான் இருக்க போறோம் . நல்லா யோசிச்சி உங்க முடிவ சொல்லுங்க . ஆனா, நான் இப்பவே என் விருப்பத்தை சொல்லிடுறேன் , எனக்கு உங்களை பிடிச்சிருக்கு . உங்களுக்கும் பிடித்திருந்தால் மேற்படி பேசலாம் , இல்லணா நண்பர்களாக இருக்கலாம் . ” என்றான் தமிழன்பன் .
அவன் சொல்லியவிதம் பிடித்திருக்க முதல் முறை அவனை நிமிர்ந்து பார்த்தாள் தீப்ஷீ . ‘ மனதில் பட்டதை பட்டெனப் பேசுகிறான் . பார்க்கவும் அழகாகதான் இருக்கிறான் . ஆனாலும்
ஏதோ தடுக்குதே . ‘ என்று மனதில் நினைத்த தீப்ஷீ , ” ஓகே. ” என்றாள் தீப்ஷீ .
சூழ்நிலையை சகஜமாக்க தீப்ஷீயை சீண்டுவதுப் போல் தமிழன்பன் , ” எனக்கு ஓகேவா தீப்ஷீ ??? ” என்றுக் கேட்டான் .
” இல்ல , நீங்க சொன்னதுக்கு ஓகே . ” என்று தீப்ஷீயும் விளையாட்டாக சொன்னாள் .
சரண்யா அருகில் நின்றுக் கொண்டிருந்த சத்யா மெதுவாக அவர் காதில் , ” சரண்யாமா , நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் . ” என்றான் .
” இப்போ , எங்கே போற சத்யா ? ” என்றுக் கேட்டார் சரண்யா .
” முக்கியமான வேலை இருக்கு . ” என்று அவரிடம் மெதுவாக சொல்லியவன் .
” எல்லாரும் பேசிட்டிருங்க இதோ வந்துடுறேன் . ” என்று நாகரீகம் கருதி எல்லோரிடமும் சொல்லிய சத்யா, வெளியே சென்றான் .
‘ இவங்க முன்னாடி சத்யாவை உரிமையா, இப்போ எங்க என்ன தனியா விட்டுட்டு போறேன்னு கத்த முடியலையே . அன்னைக்கு ஒரு நாள் அப்பா சொன்னாங்களே கல்யாணம் ஆன சத்யாவிட்டு பிரியணும்னு. இனி என்னுடைய நட்பு சத்யாவோடு முன்பு போல் இருக்காதா ? ‘ என்று நினைத்த தீப்ஷீ , கண்ணில் ஏக்கத்தோடு சத்யாவையே பார்த்தாள் .
அவளின் வேதனையை உணர்ந்தது போல் சரியாக அந்த நொடி திரும்பி தீப்ஷீயை பார்த்த சத்யா , கண்களை மூடித் திறந்து , நான் இருக்கிறேன் , பயப்படாதே என்று பார்வையால் சொன்னான் .
அதைப் புரிந்துக்கொண்ட தீப்ஷீயின் முகத்தில் சிறு புன்னகை , மனதிலும் ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டாள் .
அனைத்தையும் பார்த்தும் பார்க்காததுப் போல் உட்கார்திருந்தனர் முரளி , கவிதா , தமிழன்பன் .
” வாங்க அண்ணி , நாம போய் சமையல் வேலையை பார்க்கலாம் . ” என்ற கவிதா , சரண்யாவை அழைத்துக் கொண்டு சமையலறை சென்றாள் .
” முரளி , உனக்கு பிடித்த புத்தகங்கள் ஸ்டடி ரூமில் இருக்கு வா போய் கொஞ்ச நேரம் அதை படிக்கலாம் . ” ,என்ற தினேஷ் , முரளியை ஸ்டடி ரூமிற்கு அழைத்துச் சென்றார் .
தனியாக மாட்டிக் கொண்ட சர்வேஷ் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான் , ‘ நான் மட்டும் இப்போ இந்த இடத்தைவிட்டு போகலைனா அப்பா கிட்ட திட்டு வாங்குவேன் ? எப்படி இங்கிருந்து போறது ? ‘ என்று மனம் புலம்ப ,
திடீரென்று பல்பு எரிய தன் போனில் பாட்டை ஆன் செய்த சர்வேஷ் போன் வருவதுப் போல் பாட்டை நிறுத்தி , ” ஹலோ தேவ் , என்ன டா ? இரு டா நெட்வொர்க் ப்ராப்ளமா இருக்கு இன்டர்நேஷனல் காலாக இருப்பதால் . நான் வெளியே வந்து பேசுறேன் . ” என்று போனில் தனியாக பேசிக் கொண்டிருந்த சர்வேஷ் , ” எக்ஸ்க்யூஸ் மீ . ” என்று தமிழன்பனிடம் சொல்லியவன் விட்டால் போதும் என்று வெளியே ஓடிவிட்டான் .
” நம்மை தனியா விட மற்றவர்களைவிட உங்க அண்ணண் தான் அதிக சிரமம் பட்டுட்டாங்க . ” என்றான் தமிழன்பன் .
சத்தமாகவே சிரித்தாள் தீப்ஷீ .
” நீங்க சிரிச்சா ரொம்ப அழகாக இருக்கீங்க . ” என்றான் தமிழன்பன்.
” தேங்க்ஸ் . ” என்ற தீப்ஷீயின் நினைவு ரூமில் சத்யா சொன்னதை தான் ஞாபகப்படுத்தியது , ஈ என்று சிரித்தால் மாப்பிள்ளை ஓடிவிடுவார் . கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கினாள் தீப்ஷீ .
” நாம இதுக்கு முன்ன பார்த்திருக்கோம் ஞாபகம் இருக்கா ? ” என்றுக் கேட்டான் தமிழன்பன் .
” அமர் அங்கிள் வீட்டு ஃபங்ஷன் அப்போ நாம் பார்த்திருக்கோம் . ” என்றாள் தீப்ஷீ .
” அப்போ நாம சின்ன பசங்க . எப்படி ஆட்டம் போட்டோம் . ” என்றான் தமிழன்பன் .
ஆம் என்று தலை ஆட்டினாள் தீப்ஷீ .
” உன்ன பத்தி சொல்லு . ” என்றான் தமிழன்பன் .
இருவரும் மற்றவரை புரிந்துக் கொள்ள முயற்சி செய்துக் கொண்டிருக்க சத்யாவோ,
****
பைக்கை எடுத்த சத்யா சென்றது தமிழன்பன் வேலை செய்யும் இடத்துக்கு தான் .
உள்ளே சென்றவன் , அங்கு வேலை செய்துக்கொண்டிருந்த கிளார்க்கிடம் சென்றான் , ” சார் எனக்கு ஹோம் லோன் கொஞ்சம் அவசரமா தேவை , மேனேஜரை கூட நல்லா கவனிக்கிறேன் . ” என்றான் சத்யா .
” தமிழன்பன் சார் கை ரொம்ப சுத்தம் , அவருக்கு அதெல்லாம் பிடிக்காது . அதுவும் இல்லாம அவரு இன்னைக்கு லீவ் . உனக்கு அசிஸ்டன்ட் மேனேஜர் தான் சரியா வருவார் . அவர் ரூம் அங்கிருக்கு உள்ளே போய் பார் . ” என்றார் .
அனுமதிப் பெற்று உள்ளே வந்த சத்யா, அசிஸ்டன்ட் மேனேஜரிடம் லோன் பத்திக் கேட்டான் . அப்போது அவர் எல்லா விபரங்களையும் சொன்னவர் மேலும் சத்யா எதிர்ப்பார்த்த தகவலையும் சொனானார் , ” தமிழன்பன் நேர்மையான ஆள் , அவர் கிட்ட நாம கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும். ” என்றார் .
ஒருவழியாக அவரை சரி செய்து வெளியே வந்த சத்யா அங்கு நின்றிருந்த செக்யூரிட்டியிடம் , ” தமிழன்பன் எப்படி ? ” என்றுக் கேட்டான் .
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஹையோ அப்போ மாப்ள தேவ் இல்லையா … இது என்னடா ட்விஸ்ட் … புதுசா யாரோ வர்றான் … அதுவும் நல்லவனா இருக்கான் … தேவ் எதுவும் பிரச்சனை பண்ணுவானோ
தமிழன்பன் குடும்பம் கதையினில் புது வரவாக வந்துள்ளனர்.
IPS கனவில் உள்ளவள் தனக்காக கூட தைரியமாக வீட்டில் பேச மாட்டேன் என்றால் எப்படி?
தமிழன்பன் தீயின் உணர்வுகளை புரிந்து பேசியது அருமை.
அவளிடம் கலந்து பேசாமல் இந்த ஏற்பாடு செய்தது தவறு என்று எடுத்து கூறுகின்றான்.
சத்யா அதற்குள்ளாக தனது தோழியின் நலனுக்காக தமிழன்பனை பற்றி விசாரிக்க சென்றுவிட்டானே.
தேவ்க்கு இந்த பெண் பார்க்கும் படலம் பற்றி தெரியவந்தால் என் செய்வானோ?