
அத்தியாயம் -40 (இறுதி அத்தியாயம்)
நிரஞ்சன் மெதுவாக “எல்லாம் ஓகே ஆகிடுச்சு” என்று சொன்னான்.
சஹா “பு…பு ரியலை சத்தமா சொல்லு” என்று சொன்னான்.
நிரஞ்சன் கொஞ்சம் வெட்கத்தோடு முகம் முழுவதும் புன்னகையோடு “எங்க காதல் ஓகே ஆகிடுச்சு” என்றான். மூவரும் “ஹே…சூப்பர் கங்கிராட்ஸ்” என்று கூச்சலிட்டனர்.
அப்போது நேரலை நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் மேடையில் இருந்து இவர்களின் அணியின் பெயரை அழைத்தார்கள்.
ஆண்கள் அனைவரின் முகமும் நிரஞ்சனின் காதல் வெற்றிக் கொண்டாட்டத்தின் நிறைவோடு முகம் முழுவதும் புன்னகையோடு நால்வரும் முன்னால் சென்று ஒன்றாக “எல்லோருக்கும் வணக்கம்” என்று சொன்னவர்கள் நிரஞ்சன் “இதுவரைக்கும் எங்கள் குழுவின் பாடலைக் கேட்டவங்களுக்கு இன்றைக்கு எங்களின் புதிய உறுப்பினரின் முயற்சியாக இதோ….” என்று சொல்லவும் காந்தன் முதலில் பாட ஆரம்பித்தான்.
நதிகளோ தேங்குவதில்லை
அலைகடல் தூங்குவதில்லை
வாழும் வரை விழித்து
இருந்தால் உன் கனவை யார்
பறிப்பார் ஹோ… அதிகமாய்
ஆசைகள் கொள்வோம்
விதிகளை வேர்வையில்
வெல்வோம் வேற்றுமையின்
வேரறுத்து வானவில்லாய்
சேர்ந்திருப்போம் ஒன்று கூடி
யோசித்தோம் நம்மை நாமே
நேசித்தோம் எங்கள் விழியில்
இனிமேல் உலகம் முகம்
பார்க்கும் நித்தம் ஒரு கனவில்
தூங்கு உள்ளங்கையில்
உலகை வாங்கு…
என்று நிரஞ்சன் அடுத்து பார்த்தி, சஹா என எல்லோரும் ஒவ்வொரு வரியைப் பாடலை பாடிக் கொண்டிருக்க அவர்களின் இன்னிசையில் எல்லோரும் ஆரவாரமாக கேட்டுக் கொண்டிருக்கும் போது கடைசியாக சிற்பி வந்து
“றெக்கை விரிக்க வானம்
கேட்டேனே
அன்பே உந்தன் நெஞ்சம் கொடுத்தாய்…
உயிரே எனை மீண்டும் இணைந்தாயா
நான் இறக்கின்றேன்
புதிதாய் ஒரு ஜென்மம்
கொடுத்தாயே நான்
பிறக்கின்றேன் ஆஆஆ…”என்று சிற்பி ஏற்ற இறக்கங்களுடன் பாட அந்த அரங்கமே அவளின் இனிமையான குரலில் மிதந்து இருந்தது.
ஐவரும் ஒன்றாக கரங்களை கோர்த்து இறுதிப் பாடலை பாடி முடித்தனர்.இவர்களின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பாக எல்லோரும் கைத்தட்டி அதை ஏற்றுக் கொண்டனர்.
சிற்பிக்கு கொஞ்சம் படபடப்பு வரவும் நிரஞ்சன் சிற்பியின் கைகளை அழுத்தமாக பிடித்துக் கொண்டான்.எல்லோரும் ஆரவாரமாக அவர்களின் பாடிய பாடலுக்கான வாழ்த்தை தெரிவித்தனர்.
அங்கே வந்திருந்த பெண்கள் குழுவிற்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் என எல்லோருக்கும் இது கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்தது.
சிற்பி பாடி முடிக்கவும் இங்கே எல்லோரும் தாமரையை கொஞ்சம் கலக்கத்தோடு பார்த்தனர்.அவருக்கு எதுவும் தெரியாது என்று நினைத்து இருந்தனர்.
ஆனால் தாமரை முகம் முழுவதும் புன்னகையோடு எழுந்து நின்று கைத்தட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
எல்லோரும் அவரை ஆச்சரியமாக பார்ப்பதை உணர்ந்த தாமரை “நீங்க எல்லோரும் மறைத்தோ இல்லைன்னா சொல்லித் தான் எனக்கு எல்லாம் தெரியனும்னு அவசியம் இல்லை. என் பொண்ணு சிற்பி எல்லா விவரங்களையும் எனக்கு அவளே சொல்லி விட்டாள்.அதனால எனக்கு சிற்பி பாடுவதும் தெரியும் அவளுடைய விருப்பத்தையும் தெரிந்து நானும் என் மகளுக்கு வாழ்த்து சொல்லிட்டேன்” என்றார்.
உடனே கனிகா தன் அம்மாவைக் கட்டிக் கொண்டு “தாங்ஸ் ம்மா சிற்பியை நீங்க புரிஞ்சுகிட்டீங்கல்ல அதோடு அவளுடைய விருப்பத்தையும் நீங்க ஒத்துக் கொண்டதில் ரொம்ப சந்தோஷம்” என்று சொல்லியவள் அன்பாக விழிகளில் கண்ணீரோடு கன்னத்தில் முத்தமிட்டாள் தன் தங்கையின் மேல் கொண்ட அளவுக்கடந்த பாசத்தினால் சிற்பி வெற்றி பெற்றது அவளையே வெற்றியடைந்தது போல் நினைத்தாள்.
அந்த அரங்கில் உள்ள எல்லோரும் வெற்றியாளர்களுக்காக அறிவிப்பிற்காக காத்திருந்தனர்.மொத்தம் மூன்று குழுவினர் இறுதிச் சுற்றுக்கு வந்து இருந்தனர்.
இறுதியாக இரண்டு குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அதில் நிரஞ்சனின் அணியும் இன்னொரு அணியும் வந்திருந்தனர்.பிறகு முடிவினில் நிரஞ்சனின் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.அரங்கமே அதிர அனைவரின் வாழ்த்து மழையில் நம் ஆண்களின் குழு அவர்களுக்கான கோப்பையும் பரிசுத் தொகையும் ஐவரும் ஒன்றாக அதை வாங்கினார்கள்.
எல்லோரும் வெற்றிக் கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருக்க புன்னகையும் மகிழ்ச்சியும் அங்கே நிறைந்து இருந்தது.
சஹா ஆனந்தத்தில் அந்த கோப்பையை எடுத்து முத்தமிட்டவன் மெதுவாக சிற்பியிடம் “ஹேய் சி…சிப்பி நீங்க ரொம்ப லக்கி தெரியுமா? நீ எப்போ எங்க வாழ்க்கையில் வந்தியோ அப்போது இருந்தே எங்களுக்கு வெற்றி தான் ரொம்ப தாங்ஸ்” என்று நிறைவான மகிழ்வில் சொன்னான்.அதைக் கேட்டு மற்ற மூவரும் ஒத்துக் கொண்டனர்.
சாம்பவி இவர்களுக்கு அருகில் வந்து வெற்றிக்கோப்பையுடன் புகைப்படத்திற்காக வந்து நின்றவள் எல்லோருக்கும் வாழ்த்துச் சொன்னாள்.
அடுத்து அந்த நிகழ்ச்சியை எடுத்து நடத்திய மற்ற நிறுவனங்களும் பங்குதாரர்கள் மற்ற போட்டியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சாம்பவி அவள் நினைத்த விஷயத்தில் சாதித்த மகிழ்ச்சியில் நின்றுக் கொண்டிருக்கும் போது மெதுவாக காந்தனிடம் “இனி ப்ராக்டீஸ் இருக்குன்னு சொல்லி என்னோடு வெளியே சாப்பிட வருவதற்கு மறுக்க காரணம் சொல்ல வேண்டியது இல்லைன்னு நினைக்கிறேன்” என்று கேட்டாள்.
காந்தனோ புன்னகையை மறைத்துக் கொண்டு “ஏன் நாளைக்கே மலேசியாவை சுத்திக் காட்ட என்னை வெளியே அழைச்சிட்டு போக மாட்டீங்களா” என்று இவனோ குறும்பாகக் கேட்டான்.
அவன் சொன்னதைக் கேட்டு சிரித்த சாம்பவி “ஹோ போலாமே! எதுக்கு நாளைக்கு இந்த இரவே சுற்றிப் பார்க்க போகலாம்” என்றாள்.
காந்தனும் சாம்பவியும் சிரித்து
பேசுவதைப் பார்த்து சஹா பார்த்தியிடம் “பார்த்தி ஒ…ஒருத்தன் கமிட் ஆகிட்டான்,இன்னொருத்தன் எப்படியாவது ஜோடி சேர்க்க புறா தூது விடுறான்,இவங்க ரெண்டு பேரும் நம்மளை பார்க்க வைச்சு பொறாமைப் பட வைக்கிறாங்க சிங்கிள் சாபம் சும்மா விடாது” என்று சொன்னான்.
பார்த்தி சிரித்துக் கொண்டே “கவலைப்படாதே! சஹா நமக்கான ஜோடி நம்மளை தேடி வருவாங்க” என்று சொன்னான்.
அங்கே வெற்றிக் கொண்டாட்டத்தில் இருப்பதால் ஆதர்வாளர்களில் ஒரு பெண்மணி சஹாவின் குரல் ஈர்க்கப்பட்டு அவனிடம் பேசுவதற்காக வந்தார்.
அவரைப் பார்த்து பார்த்திபன் “சஹா உன்னை தேடி காதல் வருதுடா” என்று கிண்டலாகச் சொல்வதை இவனும் ஆர்வத்தோடு பார்த்தான்.
அப்போது அங்கே வந்த பெண்மனி சஹாவிற்கு வாழ்த்து தெரிவித்து தன் நிறுவனத்துக்காக விளம்பரத்திற்கு நடிப்பதற்கு பேசி விட்டுச் சென்றார்.
அவர் போனதும் பார்த்தியை திரும்பிப் பார்க்கும் போது அவன் தனது இளம் இரசிகைகளுடன் நின்று ஆட்டோகிராப் போட்டுக் கொண்டிருந்தான்.
பின்னால் வந்து கழுத்தில் கைப் போட்டு “நல்ல எண்ணம்டா உனக்கு என் காதல் வந்திடுச்சுன்னா சொன்னே!” என்று அவனைப் பிடித்துக் கொண்டான்.
பார்த்தியோ மெதுவாக “ஹேய் விடுடா பேன்ஸ் என்னைப் பார்த்தால் தப்பா நினைப்பாங்க” என்றதும் இருவரும் செல்லமாய் சண்டை இட்டுக் கொண்டனர்.
நிகழ்வின் முடிவில் எல்லோரும் சென்று இருந்தனர்.நிரஞ்சனும் அவனது நண்பர்களும் சிற்பியின் குடும்பமும் நின்று இருந்தனர்.
சிற்பியின் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் வாழ்த்து தெரிவித்தனர்.தாமரை சிற்பியைக் கட்டிக் கொண்டு “நல்லா பாடுன்னே சிற்பி இன்றைக்குத் தான் உன் திறமையே தெரிந்தது என்னை மன்னிச்சிடு சிற்பி” என்று மன்னிப்பு கேட்டார்.
சிற்பியோ அம்மாவைக் கட்டிக் கொண்டு “அம்மா என்கிட்ட மன்னிப்பு கேட்டு என்னை வருத்தப்பட வைக்காதீங்க, நீ பாடுன்னு சொன்ன பிறகு தான் எனக்கு பெரிய நம்பிக்கையே வந்துச்சு” என்றனர்.
இரண்டு வருடத்திற்கு பிறகு…
மியூசிக் லவ்வர்ஸ் என்ற குழுவின் நான்கு நபர்கள் என்றது மாறி சிற்பியையும் சேர்த்து ஐவர் என்று மாறிப் போனது.ஆண்களின் குரலுக்கு இணையாக சிற்பியின் குரலும் இப்போது மேடையில் ஒலித்தது.
சில நேரங்களில் ஜோடியாக பாடும் பொழுது நிரஞ்சன் மற்றும் சிற்பியின் பொருத்தப் பாடல் சிறப்பாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
சாம்பவி நிரஞ்சனின் கைப்பேசியில் அழைத்தாள்.
“ஹலோ நிரஞ்சன்”
மறுமுனையில் “சொல்லுங்க சாம்பவி” என்று சொன்னான்.
“நம்ம சங்கீத மேளாவில் நாளைக்கு சின்னதாக ஒரு பார்ட்டி இருக்கு எல்லோரையும் அழைச்சிட்டு வாங்க” என்று சொன்னாள்.
உடனே நிரஞ்சன் சிரித்துக் கொண்டு “எல்லோரையும்னா காந்தனுக்கும் நான் தான் சொல்லனுமா? இல்லை” என்று பேச்சை இழுத்தான்.
சாம்பவி வெட்கமாக சிரித்துக் கொண்டு “அது அவர்கிட்டே நான் சொல்லிட்டேன் இருந்தாலும் நீங்க தானே உங்க குழுவோட ஹெட் அதான் உங்ககிட்டே சொன்னேன்” என்றாள்.
நிரஞ்சன் “சரி சரி நாங்க வரோம்” என்று சொல்லி அணைப்பை துண்டித்தான்.
மறுநாள் சாம்பவி சொன்ன இடத்திற்கு எல்லோரும் வந்து இருந்தனர்.இப்பொழுது அவரவருக்கு என்று தனிப்பட்ட நிறைய விளம்பர மாடல்களாக இருப்பதால் வசதியாக இருக்க ஆரம்பித்து இருந்தார்கள்.
தனித்தனியான குடியிப்பில் வசிக்க ஆரம்பித்து இருந்தார்கள்.சிற்பி சபரியின் வீட்டிலேயே இருந்தாள்.சிற்பி பாடல் மற்றும் புடவை மற்றும் நகைகளுக்கான மாடலாகவும் இருந்தாள்.தனக்கான வருமானத்தை தன் அம்மாவிடம் கொடுத்து இருந்தாள்.
இப்போது பெங்களூரில் வசிப்பதால் குடும்பத்தோடு இங்கே வந்து விடுவதற்காக வீடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஒன்றாக ஆல்பம் தயாரித்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி இருப்பதால் இப்பொழுது தான் எல்லோரும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்து இருந்தது.மற்றபடி போனில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
முதலில் சாம்பவி எழுந்து “சங்கீத மேளாவில் நீங்க சேர்த்து இன்றோடு மூன்றாவது வருஷம் ஆரம்பம் ஆகுது அதை செலிபிரேட் பண்ணத் தான் இன்னைக்கு இந்த பங்ஷன் அப்புறம் எல்லோரும் ரொம்ப தாங்ஸ் என்னத் தான் எல்லோருடைய புகழ் உயர்ந்திருந்தாலும் வருஷத்துக்கு ஒரு குழுப் பாடல் சங்கீத மேளா மூலமாக நீங்க ரிலீஸ் பண்ணுறதில் ரொம்ப சந்தோஷம்” என்று அவள் மகிழ்ச்சியாக சொன்னாள்.அதைக்கேட்டு எல்லோரும் ஆமாம் என்பது போல் ஒத்துக் கொண்டனர்.
சாம்பவியும் காந்தனும் ஒரே நிறத்தின் உடையில் வந்து இருந்தார்கள்.அவர்களைப் பார்த்த சஹா சிற்பியிடம் “உ…உங்க ரெண்டுபேருடைய லவ் தான் இரண்டு வருஷத்திற்கு முன்னாடி பெரிசா இருந்துச்சு இப்போ என்ன எல்லாமே காணாமல் போயிடுச்சா?” என்று கேட்டான்.
சிற்பி லேசான புன்னகையுடன் நிரஞ்சனைப் பார்த்தாள்.அவனோ தான் கொண்டு வந்திருந்த பையிலிருந்து ஒரு அழைப்பிதழை எடுத்து மேசையின் நடுவில் வைத்தான்.
சஹா வேகமாக எடுத்துப் படித்து பார்த்தான்.அப்படியே அதிர்ச்சியில் உறைந்து இருவரையும் பார்த்தான்.அது நிரஞ்சன் மற்றும் சிற்பியின் நிச்சயதார்த்தம் அழைப்பிதழ்.சஹா நிற்பதைப் பார்த்து அது என்னவென்று ஆவலாக காந்தனும்,
பார்த்தியும்,
சாம்பவியும் அந்த அழைப்பிதழை வாங்கிப் பார்த்தவர்கள் “இது எப்போ முடிவாச்சு?” என்று கேட்டார்கள்.
சிற்பி சிரித்துக் கொண்டே “நிரஞ்சன் தான் அம்மா,அப்பாகிட்டே ஆறு மாசம் கழிச்சு கல்யாணம் இந்த மாசம் நிச்சயதார்த்தம் முடிவாக சொல்லிட்டாங்க அதனால முடிவாகிடுச்சு,எல்லோரும் வாங்க” என்று சொன்னாள்.
உடனே நிரஞ்சன் “இதுவரைக்கும் தனியா இருந்தது போதும் இனி என் சிற்பியோடு தான்” என்று அவளுடைய கரங்களை தன் கரங்களோடு கோர்த்துச் சொன்னான்.
அதைப் பார்த்து அவனுடைய நண்பர்களும் சாம்பவியும் வாழ்த்து தெரிவித்தனர். நிரஞ்சன் மற்றும் சிற்பியின் வாழ்க்கையில் அவர்களின் நல்ல முடிவை எண்ணி அங்கே எல்லோரின் முகத்திலும் புன்னகை ததும்பி நிறைந்து இருந்தது.
இனி எல்லாம் சுகமே
முற்றும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
1
+1

