நேரம் – 5
“என்னாச்சு பாரதி ஏன் இப்படி கத்துற???”
என்று பரத் கேட்டுக்கொண்டு அந்த புளிய மரத்துக்கு இடையே வரவும் பாரதி தனது கையில் இருந்தது பரத் இடம் காண்பித்தாள்…..
அது பிசுபிசுப்பான ரத்தம் அந்த மரத்தின் மீது ஒட்டிக்கொண்டு இருந்தது அதிகப்படியான ரத்தம் அந்த மரத்தின் மீது ஒட்டி இருந்ததால் பாரதி சிறிதாகவே அந்த புளிய மரத்தின் மீது கை வைத்ததற்கு அதிகப்படியான ரத்தம் அவளது கையின் மீது பட்டுவிட்டது….
பரத்தும் பாரதியின் கையில் இருந்த ரத்தத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவளது கையை பார்த்தவன்,
இந்த புளிய மரத்துல எப்படி இவ்ளோ ரத்தம் வந்துச்சு பாரதி முதல்ல அந்த உன் கையில இருக்க அந்த பிளட்ட வாஷ் பண்ணு !!!!
என்று அவன் தனது கையில் இருந்த கைகுட்டையை எடுத்து பாரதியின் கையை துடைக்க வரவும்,
“இல்ல வேண்டாம் பரத் இதை நானே பார்த்துக்கொள்கிறேன் …”
என்று தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் கையை விட்ட பாரதி அதிலிருந்த ஸ்பான்ஜ் எடுத்து தன்னுடைய இடது கையில் பட்டிருந்த ரத்தத்தை வலது கையை தான் வைத்திருந்த பஞ்சை வைத்து துடைத்து சுத்தம் செய்தால் பிறகு தனது பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய கவலை எடுத்த பாரதி அந்த ஸ்பான்ஜ்களை அதில் போட்டாள்… பிறகு அதை தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்து பத்திரப்படுத்திக் கொண்டாள்….
பிறகு அங்கு பக்கத்தில் வரப்புகளில் மோட்டார் மூலம் ஓடிக்கொண்டிருந்த ஒரு தண்ணீர் தொட்டிக்கு சென்றவள் தனது கைகளை அங்கு கழுவிக்கொண்டு இருந்தாள்…
பரத் பாரதியின் பக்கத்தில் வந்து தன்னிடம் இருந்த சானிடைசரை அவளிடம் கொடுத்து கையை நன்றாக வாசு செய்ய சொன்னால் பாரதியும் தன் கையில் இருந்த ரத்த வாடை நீங்கும் வரை தனது கைகளை கழுவிக்கொண்டு அந்த மரத்துக்கு பக்கத்திலேயே வந்தாள்…..
தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு மாஸ்கை எடுத்து தன்னுடைய முகத்தில் போட்டுக் கொண்ட பாரதி இன்னொரு மாஸ்கை பரத்திடம் கொடுத்தாள்…
பரத்தும் அதை போட்டுக் கொண்டான்…..
இப்போது அந்த புளிய மரத்தில் இருந்த ரத்தக் கறைகளை பார்த்துக் கொண்டிருந்த பாரதி பரத்திடம் இவ்வாறு கேட்டாள்….
“இப்போ இந்த ரத்தம் எப்படி இந்த புளிய மரத்துக்கு வந்துச்சு டூ யூ ஹேவ் எனி கெஸ் பரத் ?????”
“பாரதி எனக்கு தெரிஞ்சு அந்த கொலைகாரன் நந்தினி ஓட அம்மாவை இங்கதான் கொன்னுட்டு பாடிய இழுத்துட்டு போய் எல்லாரும் பாக்கணும்னு என்பதற்காக அப்பாவோட வயலுக்கு போகிற அப்புறம் ஊருக்கு போகிற அந்த வழிக்கு மத்தியில போட்டு இருக்கான்!!!!”
” எனக்கு தெரிஞ்சு இது தான் நடந்திருக்கணும்!!!!
மேபி இது இந்த பிளட் நந்தினி ஓட அம்மா பிளட்டா இருக்கணும்!!! இல்லன்னா அந்த கொலைகாரனோட பிளட்டா இருக்கணும் !!!
எதுக்கோ நானும் கொஞ்சம் சாம்பிள்ஸ் கலெக்ட் பண்ணிக்கிறேன்!!!
அப்புறம் போலீஸ இங்க அழைச்சிட்டு வந்து பார்க்க சொல்றேன்….”
என்று சொன்னவன் பாரதியிடம் இருந்து ஸ்பாஞ்ச் மற்றும் ஒரு சிறிய கவரை வாங்கியவன் அதில் அந்த பிளட் சாம்பிள்ஸ் செய் கலெக்ட் செய்து அதில் வைத்துக் கொண்டான் பிறகு பாரதியிடம் இரண்டு ஸ்பான்ஞ்ச்களை தந்து அதை பாதுகாப்பாக வைக்க சொன்னான்…..
“சரி வா பாரதி நம்ம இங்க இருந்து கிளம்பலாம் இங்க நம்ம ரெண்டு பேரும் இந்த இடத்துல இருக்கிறது அந்த அளவுக்கு நல்லதும் இல்ல சேப்டியும் இல்ல !!!!!”
என்று சொல்லி அவளை அழைத்தான் …
ஆனாலும் பாரதி எந்த ரத்தக் கரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் …
பரத் அந்த மரத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த பாரதியை பார்த்து,
அவளின் தோலை தொட்டு உலுக்கிய பின்பு பாரதி சுய நினைவிற்கு வந்தாள் ….
“இப்போ எதுக்கு அந்த மரத்தையே வச்ச கண் வாங்காமல் பாத்துட்டு இருக்க !!!!!”
“அது ஒன்னும் இல்ல உங்க ஊருக்குள்ள போகணும்னா இந்த புளியமரம் இருக்குதுல இந்தப் பக்கமாவா ஊருக்கு போகணும்????”
“இல்லப்பா எங்க அப்பாவோட வயலுக்கு வழியாக ஊருக்கு போக முடியும் அதுதான் நேர்வழியும் கூட அந்த வழியா போனா தான் பத்து நிமிஷத்துல ஊருக்குள்ள போய் சேர முடியும்!!!!
இன்னும் அங்க ரோடு போடல அதனால அது இன்னும் மண் ரோடாவே தான் இருக்கு !!!!!”
“இல்ல இந்த ஊருக்கு போகுறதுக்கு ஒரு வழி மட்டுமே இருக்காது இன்னொரு வழி இருந்திருக்கணும் !!!! ஏன்னா இங்க பாரு பரத்”
என்று சொன்ன பாரதி,
அந்த புளிய மரத்திற்கு பக்கத்தில் இருந்த ஒரு இடத்தில் சிறிது சேறாக இருந்தது …. அதை சுட்டிக் காட்டியவள்
“இப்போ இந்த சேறா இருக்குல்ல இந்த இடத்தை கொஞ்சம் உத்துப் பாரு !!!!”
என்று பாரதி சொல்ல அந்த இடத்தை உற்றுப் பார்த்த பரத்திற்கு அங்கே யாரும் நடந்து சென்றதற்கான கால் தடங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தான்….
பிறகு தன்னுடைய மொபைல் போனை எடுத்து அந்த கால் தடங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டான்…
அதேவேளையில் பாரதியும் தனது மொபைல் போனை எடுத்து அந்த கால் தடங்களை புகைப்படம் எடுத்துக்கொண்டாள்….
“நம்ப இங்கே இவ்வளவு நேரம் இருக்க வேணாம் யாராவது வந்துட்டா ப்ராப்ளம் ஆகிடும் இங்கிருந்து நாம கிளம்பிடலாம் !!!!!”
என்று பாரதி சொல்ல பரத் அதை ஆமோதித்து இருவரும் அங்கிருந்து நடந்து செல்ல தொடங்கினர்….
இப்போ நம்ம அந்த புளிய மரத்துகிட்ட அந்த ரத்த கரைய பார்த்தோமே இப்போ உங்க ஊர்ல ஒரு கொலை நடந்திருக்கே இத பத்தி என்ன நினைக்கிற பரத்,
என்று அவள் கேட்க பரத் தன்னுடைய கணிப்பை சொல்லத் தொடங்கினான்…
“அந்த கொலைகாரன் நந்தினி ஓட அம்மாவை இந்த பக்கம் வர வச்சிருக்கணும் !!!!
இந்த புளிய மரத்துக்கு நேரா நிக்க வச்சியோ இல்ல இந்த புளிய மரத்துக்கு பின்பக்கமா நின்னு தான் அந்த அம்மாவோட மண்டைய அடிச்சு ஒடச்சி இருக்கணும்!!!!!
” சாரி அவங்க கழுத்துக்கு கீழே இருக்க அந்த வலது கார்டுக்கு கீழ இருக்க பகுதில அடிச்சி இருக்கணும் அதுல பிளட் அதிகமா வந்து அந்த புளிய மரத்து மேல பட்டு இருக்கணும் இல்லன்னா இந்த கொலைகாரன் கிட்ட இருந்து தப்பிக்க அந்த சுஜாதா அக்ங அக்கா போராடி இருக்கனும்!!!!!”
” அப்போ அந்த கொலைகாரனோட பிளட் கூட இந்த புளிய மரத்த மேல பட்டு இருக்கலாம் முதல்ல நந்தினி ஓட அம்மா சுஜாதாவோட பிளட் குரூப் என்னன்றத நம்ம கண்டுபிடிக்கணும்”
“நம்ப இல்ல பரத் இதை நீங்க தான் கண்டுபிடிக்கணும்!!!! ஏன்னா அவங்க உங்களுக்கு உங்க அம்மாவுக்கு தெரிஞ்சவங்க அது மட்டும் இல்லாம இந்த ஊர்காரங்க அதனால இந்த விஷயத்தை நீங்கதான் கண்டுபிடிக்கணும் !!!!”
” அப்புறம் இன்னொரு விஷயம் எதுக்கும் உங்க அப்பா கிட்ட நம்ப கிராஸ் பண்ணி வந்தோம்ல அந்த புளிய மரத்துகிட்ட இல்ல அந்த மரத்துக்கு பக்கத்துல ஏதாவது ஒரு குறுக்கு வழி இந்த ஊருக்குள்ள வர்றதுக்கு இருக்கான்னு கேளுங்க !!!!”
“கண்டிப்பா கேட்பேன் ஆமா இப்போ மணி ஒரு மணி ஆகிடுச்சு!!! நீ முதல்ல சாப்பிட்டியா? காலையிலிருந்து என்கூட தான் சுத்திட்டு இருக்க!!! உனக்கு பசிக்கவே இல்லையா???
ஏன் இப்படி பட்டினியா இருந்து உன் உடம்ப வருத்திக்கிற !!!!!”
“போடா டேய் இப்போ இருக்கிற நிலைமைக்கு பசி தான் ஒரு குறை உங்க ஊர்ல முதல் முறையா கொலை நடந்தது அது ஏன் நடந்துச்சு????
” எப்படி நடந்துச்சு அப்படின்னு கண்டுபிடிக்கிற இன்ட்ரஸ்ட் எல்லாம் உனக்கு இல்ல சோறு தான் முக்கியமா !!!உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு ஜாலியா நான் இங்க வந்தேன் பார்த்தா எனக்கு இங்க கேலியா போயிடும் போல இருக்கு !!!!”
“சாமி நீ முதல்ல வீட்டுக்கு போ உங்க அம்மா உன்னை தேடுனாங்கன்னு வச்சுக்க!!!!
அப்புறம் உனக்கு அர்ச்சனை தான் கூட சேர்ந்து உங்க அக்கா லதா அக்காவும் பண்ணுவாங்க உங்க அப்பா அர்ச்சனை பண்ண மாட்டார்னு நினைக்கிறேன் நீ பத்திரமா போப்பா நான் கிளம்புறேன் ….”
“நீ யார் கூட போய் ஸ்டே பண்ணுவ ????”
“உங்க ஊருக்கு பக்கத்துல இருக்க அனகாவூர்ல என் பிரெண்ட் காவியா இருக்கா!!!! அவ வீட்ல போய் ஸ்டே பண்ணிப்பேன்!!! எனக்கு அதுல பிரச்சனை இல்லை நான் சொல்லப்போனால் முதலில் நேத்து அங்கிருந்துதான் இங்கே வந்தேன் !!!!”
“இரு 10தில் என் கூட படிச்சாங்களே அந்த பொண்ண தானே நீ சொல்ற ???”
“ஆமா லக்ஷ்மி காவ்யாவ தான் நான் சொன்னேன் !!!!”
“அது எப்படி என் ஃப்ரெண்ட்ஸ்? என் ஊர்ல இருக்கவங்க இவங்க எல்லாம் உனக்கு தெரியுது!!!!”
“அதுவா நான் செய்யார் கேர்ள்ஸ் ஸ்கூல்ல படிச்சேன்ல அதனால்தான் இவங்க எல்லாரும் உங்களால எனக்கு பிரண்ட்ஸ் ஆனாங்க !!!
அது மட்டும் இல்லாம உங்கள பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு எனக்கு முழு முழுசா ஹெல்ப் பண்ணுது லட்சுமி தானா பாத்துக்கோங்களேன் !!!!!”
“அந்த லக்ஷ்மி வரட்டும் என் கைல சிக்கட்டும் அப்புறம் அவளை வெச்சு செய்றேன் !!!!”
“அவ சும்மா இல்லப்பா சவிதா இன்ஜினியரிங் காலேஜ்ல எம் டெக் படிச்சிட்டு இருக்கா !!!
இன்னைக்கு தான் லீவுக்கு வீட்டுக்கு வரேன்னு சொன்னா !!!! ஆனா அவ காலேஜ் பஸ்ல ஏதோ ப்ராப்ளமா அதனால நாளைக்கு தான் வருவேன்!!! அம்மா கிட்ட சொல்லிட்டேன் நீ வீட்ல வீட்டுக்கு போ அப்படின்னு சொல்லிட்டா நானும் உன்னோட பர்த்டேக்கு முந்தின நா அங்க தான் இருந்தேன் அவங்க அம்மா எவ்வளவு ஸ்வீட் தெரியுமா ????”
என்று அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே செல்வதை முதலில் இருந்த ஒரு உருவம் ஆக்ரோஷத்துடன் முறைத்துக் கொண்டே பார்த்துக் கொண்டே இருந்தது…..
அதை வேளையில் ஊரின் எல்லையை அடைந்த பாரதி,
பரத்திடம் விடைபெற்று கொண்டு லட்சுமி வீட்டிற்கு சென்று விட்டாள்…
பரத் நடந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வேளையில் அங்கு எல்லையில் நந்தினியின் அம்மா உடல் கிடைத்த இடத்தில் வெள்ளை நிறத்தில் மார்க் போடப்பட்டு அங்கு டாக் ஸ்குவாட் வைத்து செக் செய்யப்பட்டு கொண்டிருந்தது அதை பார்த்துக் கொண்டே இருந்தவன் அங்கிருந்து தனது வீட்டிற்கு சென்றான்….
அவனுடைய வீட்டில் அவனது தந்தையுடன் புதிதாக இன்னொரு ஆளும் அந்த வீட்டில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்…
இங்கே பாரதிக்கு லட்சுமி என் வீட்டிற்கு வந்ததும் சில பல தகவல்கள் கிடைத்தது அந்த தகவல்கள் அவளுக்கு அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாக இருந்தது…
அதை சொல்வதற்காக அவள் பரத்திற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்த போது மறுநாள் காலை அதே தொலைபேசியில் பாரதிக்கு பரத்திடம் வந்த அழைப்பில் அவன் சொன்ன செய்தி கேட்டு அதிர்ச்சியின் அளவு அவளுக்கு அதிகரித்தது….
பாரதியிடம் பரத் சொன்ன அந்த விஷயம் என்ன????
பரத்தின் வீட்டிற்கு வந்த அந்த புதிய நபர் யார் ????
அவனின் தந்தை மூலமாக பரத் தெரிந்து கொண்ட விஷயங்கள் என்ன ????
இந்த கேள்விகளுக்கான பதில் இனி வரும் அத்தியாயங்களில்…
தொடர்ந்து வாசியுங்கள்…
கதை பற்றிய அப்டேட்ஸை தெரிந்து கொள்ள என்னுடைய ப்ரொபைல் ஐடியை ஃபாலோ செய்யுங்
கள் இந்த எபிசோடு பிடித்திருந்தால் கமெண்ட் செய்யுங்கள்…
ஹரிணியின் ….
“உண்மை வெளிப்படும் நேரம்…”.
என்னுடைய மற்ற படைப்புகளையும் வாசிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்….
வாசித்ததற்கு நன்றி…
அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்….